நடிகர் எஸ்.எஸ். சந்திரன் காலமானார்

4ssc.jpgதென்னிந்திய திரைப்பட நடிகர் எஸ். எஸ். சந்திரன் (வயது 69) நேற்று மாரடைப்பால் காலமானார். 700 க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்புக் கூட்டத்தில் பங்கு பற்றிய இவர், தனியார் விடுதி ஒன்றில் ஓய்வு எடுக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

அ.தி.மு.க. பேச்சாளரான இவர் பொதுக் கூட்டத்தில் கண்டன உரையாற்றிவிட்டு, வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு மன்னார்குடியில் உள்ள பூரணா தனியார் விடுதியில் தங்கினார். நள்ளிரவு 1 மணி அளவில், எஸ். எஸ். சந்திரனின் உதவியாளர், மாத்திரை கொடுப்பதற்காக அவரை எழுப்பியுள்ளார்.

அப்போது அசைவற்று இருந்த எஸ். எஸ். சந்திரனை கண்டு அதிர்ச்சி அடைந்த உதவியாளர், கட்சி நிர்வாகி களுக்கு தெரி வித்துள்ளார். உடனடியாக மருத்துவர்களை அழைக்க முயன்றுள்ளனர். பின்னர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை யில் எஸ். எஸ். சந்திரனை அனுமதித்துள்ளனர். அங்கு எஸ். எஸ. சந்திரனை பரிசோதித்த மருத்தவர்கள், ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்த அதிமுகவினர் மன்னார்குடியில் கூடினர். உடனடியாக அவரது காரிலேயே, அவரது உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • palli
    palli

    எஸ் எஸ் சந்திரன் மறைவுக்கு பல்லி குடும்ப கண்ணீர் துளிகள்,
    அவரது ஆத்மா சாந்தியடை வேண்டுவோம்;

    Reply
  • மாயா
    மாயா

    சந்திரன் அவர்களது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.

    இலங்கை தமிழர் இன்னல்களுக்காக வீதியில் இறங்கி உண்ணாவிரதம் இருந்து போராடிய கலைஞர்களில் இவர் முதன்மையானவர். 1985ல் இவர் ஏனைய பிரபலங்களை இணைத்துக் கொண்டு இலங்கை தமிழர் இன்னல்களுக்காக குரல் கொடுத்தார்.

    அவரது உடல்:
    -http://www.youtube.com/watch?v=RtIgRhANnVA

    அவர் நடித்த காட்சி:

    -http://www.youtube.com/watch?v=4l6HeuaF2xg

    -http://www.dailymotion.com/video/x6svw5_goundamanis-tiff-with-ss-chandran

    Reply
  • para
    para

    மறைந்த மனிதரை அவமரியாதைசெய்வது நல்ல பண்பல்ல.
    இருந்தாலும் எஸ்.எஸ. சசந்திரன் என்னும்போது அவரது ‘வல்கர்’ பகிடிகளும்> நாகரீகமற்ற அரசியல் பேச்சுகளுமே நினைவுக்கு வருகின்றன..

    கலைஞன் என்றவகையில் அவருக்கும் எனது அஞ்சலிகள்.

    Reply