உலகின் முதல் தர தேயிலை ஏற்றுமதி நாடான இலங்கை, உலகின் மாபெரும் தேநீர்க் கோப்பைக்கான உலக சாதனையை நேற்றுப் படைத்தது.1000 கலன் வீவா தேநீரைக் கொண்ட மாபெரும் கோப்பை நேற்றுக் காலை 10 மணிக்கு கொழும்பு 05, பி. ஆர். சி. மைதானத்தில் தயாரிக்கப்பட்டு, கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கிளாஸ் கொஸ்மித் லைன் நிறுவனத்தினால் வீவாவின் பிரதான தொனிப்பொருள் பிரசார நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்நிகழ்வு நடாத்தப்பட்டது.இந்தச் சாதனை ஆரம்பம் முதல் இறுதி வரை லண்டன் கின்னஸ் பிரதிநிதிகளால் கண்காணிக்கப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டமைக்கான உறுதிப்படுத்தும் சான்றிதழ் இலங்கை மிஷிறி இன் நுகர்வோர் பிரிவுத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான சச்சி தோமஸிடம் கையளிக்கப்பட்டது.நாங்கள் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினோம். எங்கள் மக்கள் பெரிதும் விரும்பும் பானமான தேநீரைக் கொண்டு ஒரு சாதனையைச் செய்யலாம் என்று நினைத்தோம் என்றார் சச்சி தோமஸ்.
2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் திகதி அமெரிக்க கன்ஸாஸ், போர்ட் ஸ்கொட் சுகாதார நிலையத்தால், மாபெரும் தேநீர்க் கோப்பை தயாரிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. 660 கலன் (3000 லீட்டர்) தேநீரைக் கொண்டதாக அச்சாதனை அமைந்திருந்தது. இச்சாதனை வீவாவினால் நேற்று முறியடிக்கப்பட்டது. வீவாவினால் 1000 கலன் தேநீரைக் கொண்ட கோப்பை நேற்று தயாரிக்கப்பட்டது.
இதற்கான பணிகள் சுமார் 2 மாதங்களுக்கு முன்னரே ஆரம்பமாகி விட்டன. இந்தக் கோப்பை 10 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்டது. 2000 வோல்டேஜ் கொண்ட 6 ஹீட்டர்களால் அது சூடேற்றப்பட்டது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வையடுத்து இம்மாபெரும் தேநீர்க் கோப்பை நகரின் பல பாகங்களுக்கும் மிஷிறிஇன் விற்பனை மற்றும் விநியோகிக்க படையணியின் வாகனத் தொடரணியுடன் எடுத்துச் செல்லப்பட்டது.