எதிர்வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நிறைவடைந்த பின்னர் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறப்போவதாக இலங்கை அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்திய முரளிதரனுக்கு இந்திய சென்னையில் வைத்து நேற்று சனி பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றுகையியேலே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், தனது 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை போதுமானதெனவும், இளைய சமுதாயத்தினருக்கு இடம்கொடுத்து ஓய்வுபெற வேண்டிய காலம் தற்போது வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். உலகக் கிண்ணத்திற்கு முன்னர் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய தொடரில், தான் பங்கேற்கவுள்ளதாகவும், ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங் அணிக்காக தொடர்ந்தும் விளையாடவுள்ளதாகவும் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்