தீண்டாமை ஒழிப்புப் போராட்டமும் ஒக்டோபர் எழுச்சியும்: ஒரு போராளியின் பார்வையில் என்ற தலைப்பில் தோழர் சி கா செந்திவேல் அவர்களின் உரையும் கலந்துரையாடலும் கனடா ஸ்காபொறோவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேடகம் – தமிழர் வகைதுறைவள நிலையம் இச்சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றிலும் வட இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சாதியத்திற்கு எதிரான போராட்டங்களிலும் இரண்டறக்கலந்தவர் தோழர் சி. கா. செந்திவேல். 1963ல் தனது இருபதாவது வயதிலேயே கொம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், 1965ம் ஆண்டு முதல் தன்னை கட்சியின் முழுநேர அரசியலில் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் 1989ம் ஆண்டிலிருந்து புதிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு சமூகப் போராளியான இவரின் அனுபவத்தை பகிர்ந்துகொள்ள தேடகம் குழுவினர் அனைவரையும் அழைத்துள்ளனர்.
சி.கா.செந்தில்வேல் எழுதிய நூல்கள் :
1. இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள்
2. புதிய ஐனநாயகமும் போராட்ட மார்க்கமும்
3. சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்.
4. கைலாசபதியும் சமூகப் பங்களிப்பும்.
5. மனிதரும் சமூக வாழ்வும்.
குறிப்பு: 45 வருட இடதுசாரி அரசியல் வரலாற்றையும் போராட்ட வரலாற்றையும் கொண்ட ஒரு சமூகப் போராளியான இவரின் அனுபவம் இன்றைய கால கட்டத்தில் மிக அவசியமானதாகிறது. அந்த வகையில் தோழர் சி. கா. செந்தில்வேல் அவர்களின் இந்நேர்காணல் ஜனவரி 6, 2008ல் தேசம்நெற் இணையத்திற்காகப் பதிவு செய்யப்பட்டது. அதன் pdf இணைப்பு: Senthiveel Interview_Book
நிகழ்வு விபரம்:
Saturday, October 23rd 2010 @4:30P.M
Mid Scarborough Community Centre
(Don Montgomery CRC)
2467 Eglinton Ave East (@Kennedy)
Contact:
thedakam@gmail.com
0014168407335