தமிழ் மொழியின் சுடுகாட்டில் தமிழ்க் கலாச்சார வீரநடைபோடும் ஆங்கிலத்தின் அடிமைகள். : யூட் ரட்ணசிங்கம்

Convocation_UoJ1956ம் ஆண்டு பண்டாரநாயக்கா தனிச் சிங்களச் சட்டத்தை கொண்டு வந்தபோது அது தமிழ் மொழியை இரண்டாம் தர மொழியாக தள்ளிவிடுகிறது என்று கோஷமிட்டு ஆக்ரோஷமான அரசியலை முன்னெடுத்தார்கள் அன்றைய தமிழ் அரசியல் வாதிகள்.

அவர்களின் அன்றைய அகிம்சைப் போராட்டமே இறுதியில் ஆயுதப் போராட்டத்துக்கு வழி அமைத்தது.

தமிழீழ ஆயுதப் போராட்டத்தின் பல தொடக்கப் புள்ளிகளில் மிக முக்கியமான புள்ளிகளில் ஒன்றுதான் யாழ்ப்பாணப்  பல்கலைக் கழகம்.

விடுதலைப்போர் நடைபெற்ற நாடுகளிலெல்லாம் அந்த போராட்டங்களின் பின்புலத்தில் அந்தந்த நாட்டு பல்கலைக் கழகங்கள் பங்கு பற்றிய வரலாற்றுத் தொடர்ச்சியில் யாழ்ப்பாண பல்கலைக் கழகமும் ஒன்று.

இது கல்விசார் வரலாற்றுத் தொடர்ச்சியை மட்டுமல்ல தமிழ் ஆயுதப் போராட்ட வரலாற்றையும் வடுக்களையும் கடந்த மே 18 வரை காவி நின்றது.

குறிப்பாக தமிழுக்காக உயிர் கொடுக்க வேண்டும் என்ற இளைஞர்களை உசுப்பேத்தும்  அரசியல் உருவாக்கத்தின் ஒரு புள்ளியும் கூட இந்த யாழ் பல்கலைக்கழகம்.

Convocation_UoJஇந்த யாழ் பல்கலைக்கழகத்தின் 26வது பட்டமளிப்பு விழா அண்மையில் நடந்ததான செய்தியும் புகைப்படங்களும்  அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தன.

அந்த புகைப்படங்களைப் பார்த்த போது வீணடிக்கப்பட்ட அந்த உயிர்களான முத்துக்குமாரும் முருகதாசும் என் கண்முன்னேவந்து போனார்கள்.

இரண்டு இலட்சம் அப்பாவி உயிர்களை காவுகொண்ட அந்த கொடூரமான போரின் துவக்கப் புள்ளிகளில் ஒன்றான இந்த யாழ் பல்கலைக் கழகம் தனது 26வது பட்டமளிப்பு விழாவில் தமிழிலும் எழுதுவதற்கு தயங்குகிறது.

ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதோ அதில் புலமை பெறுவதோ தவறில்லை. ஆங்கிலம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மொழி என்பதும் அனைவரும் அறிவர். பல்கலைக் கழகங்களில் அம்மொழியின் அவசியம் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல மிக அவசியமானதும் கூட.

ஆனால் தன் தாய் மொழியை பேசுவதும் பயன்படுத்துவதும் தரம் கெட்ட செயல் என்று கருதும் ஒரேயொரு இனம் அது ஈழத் தமிழினமாகத்தான் இருக்க முடியும்.

குறிப்பாக தமிழர்களின் துறைசார் அறிவுஜீவிகள் என்று கருதக்கூடியவர்களே தாய்மொழியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்கிறார்கள். இவர்கள்தான்  தமிழினத்தின் மூளைகளாம்.

அண்மையில் இலண்டனில் தமிழர் தகவல் நடுவத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தமிழர்களின் எதிர்காலம் பற்றிய ஓர் கருத்தரங்கிற்கு ஈழத்திலிருந்து ஓய்வுபெற்ற 4 துறைசார் அறிவுஜீவிகள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

ஆங்கிலமே அங்கு ஆட்சி மொழியாக இருந்தது. வந்தவர்களோ ஈழத்தமிழர்கள். ஆங்கிலத்தில் விளாசித்தள்ளினார்கள்.

அம்பாறை மாவட்ட MP பியசேன அளித்த செவ்வியில் தமிழ்த்  தேசியக்  கூட்டமைப்பு கூடுகின்ற போது ஆங்கிலத்தில் பேசி ஓர் முடிவுக்கு வந்துவிடுவார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

சுயமாக நமக்கென்று எதுவுமே இல்லாத காரணத்தால் அயல்நாட்டிலிருந்து அபகரித்துக்கொண்ட அடையாளங்களும் கலாச்சாரமும் வரலாறுகளும்தான் இன்றுவரை நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கின்ற தெய்வங்கள்.

அரச ஆட்சி தொட்டு பின் வந்த அந்நிய ஆட்சி வரை அடிமை வாழ்வு. இந்த அடிமைத் தனத்திலே சுகம் கண்ட இனங்களில் ஈழத் தமிழ் இனமும் ஒன்று. அந்த அடிமை வாழ்விலிருந்து மீளமுடியாது மிச்ச சொச்சங்களையும் காவி வருகிறது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

18வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது அம்பாறை மாவட்ட TNA MP  பியசேன அரசிற்கு ஆதரவாக வாக்களித்தார்.

இலண்டனில் இருந்து இயங்கும் GTV தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிறேம்  சிவகுரு பியசேன அரசிற்கு ஆதரவாக வாக்களித்த சம்பவத்தை ஒரு மரபணுப் பிரச்சனை என்று கண்டு பிடித்திருந்தார்.

தமிழ் மொழியை பயன்படுத்த தயங்குகின்ற ஈழத் தமிழர்களுக்கும் ஏதும் மரபணுப் பிரச்சனை இருக்குமோ?

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 Comments

  • karuna
    karuna

    அண்ணா ஆங்கில மெழியுடன் கூட்டுக்கலவி செய்த தமிழினம் குறைந்த பட்சம் சிங்கள மொழியுடன் தன் புணர்ச்சி செய்திருந்தால் லட்சக்கணக்கான இந்த உயிர்களை காப்பாற்றியிருக்கலாமோ என்னவோ! இப்போ புலம் பெயர் தமிழர்கள் ஆங்கில மோகத்தால் புலம் பெயர்ந்த மண்ணை விட்டு லண்டன் நோக்கிய பயனிக்கின்றனர்! லண்டனில் உள்ள தமழிரோ ஜேரம்ன பிரெஞ் லத்தீன் மொழிகளை தம் செல்வங்களுக்கு திணிக்கிறார்கள்! ஆனால் சிங்களம் என்றால் வேப்பெண்ணை கசப்பு!

    Reply
  • solomon.arulampalam
    solomon.arulampalam

    tamilan.orunaalum thirunthamaaddaankal…

    Reply
  • BC
    BC

    GTV தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிறேம் சிவகுரு சொன்னது பியசேன அரசிற்கு ஆதரவாக வாக்களித்தது ஒரு மரபணுப் பிரச்சனை.ஆனபடியால் தமிழ் மொழியை பயன்படுத்த தயங்குகின்ற ஈழத் தமிழர்களுக்கும் ஏதும் மரபணுப் பிரச்சனை இருக்குமோ? யூட் ரட்ணசிங்கம், மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.
    தேசம்நெற் போட்ட முதலாவது படம் தமிழ்க் கலாச்சாரகாவலர் என்று சொல்லிகொள்வோரின் உண்மையான படம்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….அண்ணா ஆங்கில மெழியுடன் கூட்டுக்கலவி செய்த தமிழினம் குறைந்த பட்சம் சிங்கள மொழியுடன் தன் புணர்ச்சி செய்திருந்தால்…..//

    கருணா, கூட்டுக்கலவி, புணர்ச்சி என பல சொல்லாடல்களின் கதை விடுகிறீர்கள். முதலில் கட்டாய சிங்கல மொழிச்சட்டம் என்பது புணர்ச்சியோ அல்லது கூட்டுக்கலவியோ அல்ல மாறாக வன்புணர்ச்சி அல்லது இன்னும் சொல்லபோனால் கற்பழிப்பு!

    //….GTV தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிறேம் சிவகுரு சொன்னது பியசேன அரசிற்கு ஆதரவாக வாக்களித்தது ஒரு மரபணுப் பிரச்சனை.ஆனபடியால் தமிழ் மொழியை பயன்படுத்த தயங்குகின்ற ஈழத் தமிழர்களுக்கும் ஏதும் மரபணுப் பிரச்சனை இருக்குமோ?…/

    GTV தொகுப்பாளரின் சொற்கள் உங்களுக்கு எப்போதிருந்து வேத வாக்கானது?

    Reply
  • நந்தா
    நந்தா

    இந்த “மரபணு”ப் பிரச்சனையை நோக்கினால் யாழ்ப்பாணிகள் பலருக்கு “தமிழோடு” சம்பந்தம் இல்லை. 500 வருட “வெள்ளையர்களின்” ஆட்சியில் நிறம் மாறாத பூக்கள் ஒரு சிலரே!

    போதாக்குறைக்கு போர்க்துக்கீஸர் காலத்தில் மிளகாய், புகையிலை விவாசாயத்துக்கு ஆபிரிக்காவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்ட “கறுப்பர்கள்” யாரும் திரும்பிப் போகவில்லை என்பதும் அவர்களின் அடையாளங்களும் இப்பொளுது தாராளமாக யாழ் மண்ணில் மாத்திரமின்றி இலங்கை முழுவதும் காணக் கூடியதாக உள்ளது.

    போர்த்துக்கீசருக்கும், யாழ் மன்னனுக்கும் எழுதப்பட்ட உடன்படிக்கை போர்த்திக்கீச மொழியிலும், சிங்களத்திலும் மாத்திரம் எழுதப்பட்டுள்ள காரணத்தை யாழ்ப்பாணிகள் இது வரையில் “ஒளித்து” வைத்து தமிழ் பாரம்பரியம் என்று கப்ஸா விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.2000 வருட பாரம்பரியத் தமிழை யாழ் மன்னன் ஏன் பாவிக்கவில்லை என்பதற்கு தற்போதுள்ள தமிழ் “சூரர்கள்” என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார்கள்?

    இந்த தமிழ் என்று இன்று “வியாபாரம்” செய்பவர்களுக்கு உண்மை, வரலாறு என்பனவற்றை விட “பணம்” பண்ணுவது முக்கியமாக உள்ளது. அதற்காக தமிழை எதற்கு வம்புக்கிழுக்க வேண்டும் என்பது புரியவில்லை!

    Reply
  • john
    john

    கருணா லண்டனில் படிக்கிற பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாக பிரெஞ்ச் டொச் ஸ்பானிஸ் மன்றெயின் ஹிந்தி உருது என்று படிப்பிக்கிறாங்கள். முதல்மொழியாக ஆங்கிலத்தையும் இரண்டாம் மொழியாக மேற்சொன்ன மொழிகளில் ஒன்றைப் படிக்கும் எமது தமிழ்ப் பிள்ளைகள் பலருக்கு வீடுகளில் தமிழ்மொழிதான் திணிக்கப்படுவதை நான் கண்டிருக்கிறேன்.

    Reply
  • நந்தா
    நந்தா

    இப்பொழுது தமிழும் அரச கரும மொழி. அனால் நம்ம தமிழ் பாரம்பரியங்கள் தமிழில் வேலை செய்வதை அகெளரவமாக கருதுகிறார்களாம்.

    சட்டத்தரணிகளை கொண்ட சம்பந்தன் கட்சி இதுவரையில் இலங்கை நீதிமன்றங்களில் தமிழில் பேச மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள்.

    தமிழையும் அரச கரும மொழியாக்கிய இராஜிவ் காந்திக்குநன்றிக் கடனாக புலிகள் பெரும்புதூரில் அவரை பீஸ் பீஸாக்கினார்கள்.

    1956 ஆம் ஆண்டின் அரச கரும மொழிச் சட்டம் தமிழ் மொழி பெயர்ப்பும் அரச கரும கடிதங்களில் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறது. ஆனால் அதனை அமுலாக்கு என்பதற்குப் பதிலாக, சிங்களத்தைநிறுத்தி ஆங்கிலத்தை கொண்டு வா என்றுதான் எங்கள் தமிழ் செல்வனாயகங்கள் சூரனாடினார்கள்.

    அதன் மூலம் தமிழைக் கற்பழிக்கும் வேலையை தமிழர்கள்தான் முன்னெடுத்தனர்/முன்னெடுக்கிறார்கள்!

    Reply
  • charlie
    charlie

    /சுயமாக நமக்கென்று எதுவுமே இல்லாத காரணத்தால் அயல்நாட்டிலிருந்து அபகரித்துக்கொண்ட அடையாளங்களும் கலாச்சாரமும் வரலாறுகளும்தான் இன்றுவரை நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கின்ற தெய்வங்கள்.// யுட் ரட்ணசிங்கம் …../இதில்சுயமாக நமக்கென்று எதுவுமே இல்லாத காரணத்தால் /….என்று என்னத்தைக்கூற வருகிறீர்கள் எனப் புரியவில்லை.

    Reply
  • Ajith
    Ajith

    இன்று தமிழரில் சிலருக்கு தமிழர் சின்ஹலவருடன் சம உரிமை, சம அந்தஸ்து கேட்பது நாம் சின்ஹல தேசத்துக்கு செய்கின்ற துரோகம் என்பது போல் படுகிறது.
    “ஆங்கில மெழியுடன் கூட்டுக்கலவி செய்த தமிழினம் குறைந்த பட்சம் சிங்கள மொழியுடன் தன் புணர்ச்சி செய்திருந்தால் லட்சக்கணக்கான இந்த உயிர்களை காப்பாற்றியிருக்கலாமோ என்னவோ” _ கருணா
    கருணாவின் கூற்றை மிக அவதானமாக பார்க்கின்றபோது என்ன சொல்ல வருகிறார் என்பது புரிகிறது. தமிழினம் குறைந்த பட்சம் சின்ஹல மொழியுடன் தன் புணர்ச்சி (integration ,intercource ) அதாவது தமிழர்கள் முற்றாக சின்ஹல இனமாக மாறியிருந்தால் சின்ஹல இனத்தால் படுகொலை செயபட்ட லட்சக்கணக்கான உயிர்களை காப்பற்றியிருக்கலாம். இன்னொரு விதமாக கூறுவதயிருந்தால் மீதியுள்ள தமிழர்கள் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் சின்ஹல இனமாக மாற வேண்டும் என்பதே. ஆங்கிலேய ஆட்சியில் தமிழர்கள் மட்டுமல்ல சின்ஹலவர், முஸ்லிம்கள் எல்லோரும் ஆங்கிலத்தில் தான் கற்றார்கள். பண்டரைனயகே, த.ச. செனனயகே, ஜ.ர. ஜெயவர்டென, சந்திரிகா, ராஜபக்சே எல்லோரும் ஆங்கிலத்தில் மட்டுமல்ல வெளிநாடுகளில் கற்றவர்கள். ஆங்கிலேயனை வெளியேறு என்ற பொது சின்ஹலவர் தமிழர் ஒன்றாகத் தான் போராடினர். சின்ஹலம் மட்டும் என்பதற்கும் எல்லோரும் தமிழும் சின்ஹலமும் படிக்கவேண்டும் என்பதுதான் புணர்ச்சியெ ஒழிய தமிழர் சின்ஹலம் படிக்க வேண்டும் என்று கட்டயபடுதல் அடிமைபடுதல் என்பது புரியாதவர்கள் அடிமைகளே.
    “ஆனால் சிங்களம் என்றால் வேப்பெண்ணை கசப்பு!” _ கருணா
    தமிழரில் பெரும்பன்மையருக்கு சின்ஹலத்தில் அறிவு உண்டு. ஆனால் சின்ஹலரில் ஒரு ச்லருக்கும் தமிழ் தெர்யாது. அவர்களுக்கு தமிழ் வேப்பெண்ணை கசப்பு, தமிழர் கசாப்புக்கடை மாடுகள்.
    ஒட்டுமொத்தத்தில் இவர்களின் வாதம் இல்லங்கை முழுவதும் சின்ஹல இனம் மட்டும் இருக்கவேண்டும் இல்லையேல் சின்ஹல இனம் தமிழரை வெட்டி கொள்வது நியாயம்

    Reply
  • danu
    danu

    இங்கு மொழி மொழி என்று தமிழர்கள் எவ்வளவு தான் கஸ்டப்பட்டாலும் மொழியை உள்வாங்கவது என்பது ஒவ்வொருவரினதும் அவரவர் தனது அடையாளங்களை எப்படி வைத்திருக்க விரும்புகிறார் என்பதுமாகும். ரட்ணசிங்கம் தனத மத அடையாளத்தை மாற்றிக்கொள் விரும்பினார் அதனால் அவரடைய மகன் யூட் என்ற பெருடன் விளங்குகிறார் இதற்காக நாம் யாரை கடிந்து கொள் முடியும் இப்படித்தான் இந்த மொழி விவகாரமும் தமக்கு விரும்பியபடி அவர்கள் தெரிவு செய்கிறார்கள் அவர்களுக்கு உரிமையுண்டு இந்த தெரிவை தனியாகவும் கூட்டாகவும் செய்யவும் உரிமையுண்டு இதனால்தான் இனம்கூட உருவாகின்றது ஒரு இனம் வேறு ஒரு இனக்குழுமமாக இருந்திருந்திருக்க வாய்ப்பு உண்டல்லவா!

    ஆகவே மொழி மதம் என்பது ஒருவகையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடையாளமே தவிர இது தான் சரியான ஒரு அடையாளம் என்றுவிட முடியாது.

    உலகத்தின் பொதுவான அடையாளமாக மனிதன் பொதுமனிதப்பண்புகள் பொது மனித நடத்தைகள் மிகமுக்கியமானவையாகவே எனக்கு தெரிகிறது இப்படியும் சிலர் சிந்திக்கலாம் இப்படி சிந்திப்பவர்கள் ஆங்கிலத்தில் கதைத்தால் என்ன சிங்களத்தில் கதைத்தால் என்ன கூட்டத்தில் தமிழர்கள் என்று தம்மை அடையாளப்படுத்தும் ஒரு இனக் குழுமத்தின் விவகாரத்தில் தான் ஈடுபடுகிறோம் என்ற எண்ணப்பாட்டுடன் கூட்டங்களில் ஆங்கிலத்தில் பேசுகிறார்களோ என்று யோசிக்கிறேன்.

    நான் முஸ்லீம்கள் என்று அடையாளப்படுத்தும்போது அவர்கள் தம்மை இஸ்லாம் மதத்தவர்கள் என்ற அடிப்படையில் தம்மை முஸ்லீம்கள் என்கிறார்கள் ஆனால் நான் அவர்களை> அவர்கள் தம்மை முஸ்லீம்கள் என்பதை ஏற்றுக்கொண்டு> அவர்களின் மதத்தை ஏற்றுக்கொள்ளாமலுமே (மதம் பிற்போக்குதனமானது)அவர்களை முஸ்லீம்கள் என்பதை அங்கீகரிக்கிறேன்.

    ஆனால் ஆனால் தனது பிள்ளைக்கு தமிழ் படிப்பிக்க முன்வராமல் மற்றவர்களின் பிள்ளைக்கு தமிழ் படிப்பிக்க முயல்பவர்களை நீங்கள் சாடினால் அது சரியானதாகும்.

    மொழி மதம் சாதி பிரதேசம் இன்று எமக்கு இன்றய வாழ்வுக்குளத்தில் இருப்பதால் அதனுடன் அடிபட வேண்டியுள்ளது

    Reply
  • நந்தா
    நந்தா

    90% தமிழர்கள் உத்தியோகத்துக்கு சிங்களப்பப்குதிகளுக்கே இன்றும் செல்ல வேண்டியுள்ளது. இந்த அரச உத்தியோகம் பற்றிய விபரங்கள் புரியாமல் அஜித் கதைப்பது அறியாமை மாத்திரமல்ல, வெறும் வரட்டு வாதமும் ஆகும்!

    Reply
  • thuai
    thuai

    அன்பின் அஜீத்,
    தமிழரின் இன்றையநிலைமைக்கு காரணம் யார் என்பதையும், அதனை எவ்வாறு எதிர்காலத்தில் தடுக்கலாம் என்பதனையுமே எல்லோரும் சிந்திக்கவேண்டும்.சிங்களவரை மட்டும் எமக்கு எதிரியாகக் காட்டி விவாதிப்பதன் மூலம் தமிழரிற்குள் வாழும் தமிழரின் எதிரிகளிற்கு நாங்களே பாதுகாப்புக் கொடுக்கின்றோம்.

    புலிகளைப்பயஙக்ரவாதிகள் என்று உலகம் தீர்மானித்ததன் அர்த்தம் தமிழருக்குள்ளே பயங்கரவாதிகள் வாழ்கின்றார்களென்பதேயாகும். இவர்கள் புலிகளிடம் புலிகளின் பெயரால் உலகில் வாழ்பவர்கள். இவர்களை தமிழினம் அடையாளம் காணும்வரை தமிழர் சிங்களவரை பகைமையக்குவது மேலும் தமிழர்களை அழிவிற்கே கொண்டு செல்லும்.— துரை

    Reply
  • Ajith
    Ajith

    90% தமிழர்கள் உத்தியோகத்துக்கு சிங்களப்பப்குதிகளுக்கே இன்றும் செல்ல வேண்டியுள்ளது. இந்த அரச உத்தியோகம் பற்றிய விபரங்கள் புரியாமல் அஜித் கதைப்பது அறியாமை மாத்திரமல்ல, வெறும் வரட்டு வாதமும் ஆகும்! – Nantha

    நந்தா,
    நீங்கள் சொல்வது நூறுக்கு நூறு உண்மை. ஏன் தமிழர்கள் அங்கு செல்ல வேண்டும் என்று தான் கேட்கிறேன்? Colombo இலங்கை தீவின் தலைநகரம். இந்த தலைநகரம் யாழ்ப்பாணத்தில் இருந்தால் ஏன் நாம் அங்கெ செல்கின்றோம். ஏன் பாஸ்போர்ட் எடுக்க சின்ஹலப் பகுதிக்கு செல்கிறீர்கள் என்று கேட்காமல் விட்டீர்கள்?
    ஏன் நூறுக்கு நூறு வீதம் சின்ஹல இராணுவம் யாழ்ப்பாணத்தில் இன்றும் இருக்கிறது. ஏன் இங்கு தமிழ் இராணுவம் இல்லை. இதுவும் புரிய உங்களால் முடியவில்லையா? எமக்கு என்று ஒரு ஆட்சி இருந்தால் நீங்கள் இந்த கேள்வியை கேட்பது நியாயம். விதண்டாவாதம் கதைப்பது விவேகம் அல்ல. ஆயிரத்து முனூரம் ஆண்டில் எதனை வீதம் தமிழர் சின்ஹலப் பகுதிக்கு வேலை தேடி சென்றார்கள் என்ற புள்ளி விபரம் தெரிந்தால் சொலுங்கள்.

    Reply
  • மாயா
    மாயா

    // நந்தா- 90% தமிழர்கள் உத்தியோகத்துக்கு சிங்களப்பப்குதிகளுக்கே இன்றும் செல்ல வேண்டியுள்ளது. இந்த அரச உத்தியோகம் பற்றிய விபரங்கள் புரியாமல் அஜித் கதைப்பது அறியாமை மாத்திரமல்ல, வெறும் வரட்டு வாதமும் ஆகும்!//

    நந்தாவின் இந்தக் கருத்துகளோடு யாரும் உடன்படத் தேவையில்லை. இதுவே உண்மை. நான் நேற்று சுவிசில் வாழும் ஒரு சிங்களவரை சந்தித்தேன். அச்சு அசல் யாழ்பாணத் தமிழில் கதைத்தார். அவர் யாழ்பாணத்தில் பிறந்து ; யாழ் சிங்கள வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். அவருக்கு இப்போது வயது 45 – 50 இருக்கலாம். நான் அவரிடம் கேட்ட கேள்வி ” யாழ்பாணத்தில் இருந்த சிங்கள வித்தியாலயத்தில் எத்தனை பேர் உங்கள் காலத்தில் படித்தார்கள்?” என்பதே.

    அவர் தந்த பதில் “500 க்கு அதிகமான மாணவர்கள் இருந்தார்கள்” என்பதே.

    ஒரு குடும்பத்தில் 2 அல்லது 3 பிள்ளைகள் இருந்தாலும் ; எத்தனை குடும்பம் யாழ்பாணத்தில் இருந்தன என்பதை உணரலாம். சிலரது கருத்துகள் முரண்பட்டதாக இல்லை; ஆனால் மாற்ற முடியாத கருத்துகளாக வைத்துக் கொண்டுள்ளார்கள்.

    கடந்த வாரம் புலிகளுக்கு ஆதரவான ஒரு பெரியவரை சந்தித்தேன். அவர் இந்தியா போய் இருக்கலாம் என்ற எண்ணத்தில் போய் மீண்டும் சுவிசுக்கு திரும்பி வந்தவர். அங்கே உள்ள நுளம்பு கடியால் தன்னால் அங்கு வாழ முடியாது என்றார். இலங்கைக்கு போய் வாழலாம். இப்போது புலிகளில் இருந்தவர்களே வந்து போகிறார்கள். அங்கே வாழத் தொடங்கியுள்ளார்கள் என்றேன்.

    “எங்களுக்கு கீழ வேலை செய்த சிங்களவருக்கு கீழ் நாங்கள் போய் வாழ்வதா?” என கேள்வி கேட்டார். அவர் கடந்த காலங்களில் நல்ல உயர் தொழிலில் இருந்தவர். இவருக்கு கீழ் அநேக சிங்களவர்கள் பணியாற்றியுள்ளார்கள். தமிழ் – சிங்களம் – ஆங்கிலத்தில் நல்ல புலமை. அவரது எண்ணங்கள் இவை.

    எனக்கு பக்கத்தில் இருந்த தமிழ் நண்பர் அவர் எமை விட்டு அகன்ற பின்னர் சொன்னார் ” ஐயாவுக்கு ஊரில் நல்ல வசதி. அங்க போய் நிம்மதியாக இருக்கலாம். இவர்கள் அந்தக் காலத்தில எங்களையும் மதிச்சவர்கள் இல்லை. ” என்றார்.

    பலர் சமூகம் என்பதை விட தனிப்பட்ட கோப தாபங்களுக்காக அரசியல் செய்வோர். செய்பவர்கள். இவர்களை மாற்ற முயல்வது விரயம்.

    Reply
  • Cheap Siththanantha
    Cheap Siththanantha

    நந்தா

    “போர்த்துக்கீசருக்கும், யாழ் மன்னனுக்கும் எழுதப்பட்ட உடன்படிக்கை போர்த்திக்கீச மொழியிலும், சிங்களத்திலும் மாத்திரம் எழுதப்பட்டுள்ள காரணத்தை யாழ்ப்பாணிகள் இது வரையில் “ஒளித்து” வைத்து தமிழ் பாரம்பரியம் என்று கப்ஸா விட்டுக் கொண்டிருக்கிறார்கள்”.

    This is a news to me. Could you further enlighten me on this agreement.

    Reply
  • நந்தா
    நந்தா

    சித்தானந்தன்:
    நீங்கள் ஐரோப்பாவில் வாழ்பவராயின் லிஸ்பனுக்கு ஒருநடை போய் அங்குள்ள புராதன வரலாற்று காப்பகத்தில் அந்த தகவலைப் பார்வையிடலாம்.

    Reply
  • நந்தா
    நந்தா

    யாழ்ப்பாணத்தில் 10ஆம் வகுப்பு படிக்கும் பொழுதே “டாக்டர் எஞினியர்” கனவுகள் வாழப் பழகுகிறார்கள். பொலிஸ் வேலைக்கோ இராணுவத்துக்கோ விண்ணப்பிக்க மாட்டார்கள். குறைந்த பட்சம் கொழும்பில் ஒரு “கிளாக்” உத்தியோகம் மாத்திரமே யாழ்ப்பாணியின் லட்சியம். லஞ்சம் கொடுத்து ஒரு வாத்தி வேலையாவது பிடிப்பார்களே ஒழிய இராணுவத்துக்கு அல்லது பொலிஸ் வேலைக்குப் போக மாட்டார்கள்.

    இந்த மனநிலையில் உள்ள யாழ்ப்பாணிகளுக்கு தமிழ் இராணுவம் அல்லது தமிழ் பொலிஸ் எஙிருந்து வரப்போகிறது?

    Reply
  • Ajith
    Ajith

    டாக்டர், Engineer ஆக வர கனவு காண்பதில் என்ன தவறு உள்ளது. காலத்தின் தேவை, கேள்வி/வழங்கல் தான் ஒரு பொருளின் விலையையும் மதிப்பையும் தீர்மாநிபவை. இவைதான் சிந்திக்க தெரிந்த மனிதனின் rational behaviour
    தமிழர்களுக்கு சின்ஹல இராணுவத்திடம் இருந்தும் சின்ஹல இனவெரியலர்களிடம் இருந்து பாதுகாப்புக்கு தேவை ஏற்படாததால் தான் போராளிகள் தோன்றினார்கள்.

    சின்ஹலவனிற்காக தமிழர்கள் செய்வதெல்லாம் பிழை என்று விதண்டாவாதம் செய்வதும சின்ஹலவன் செய்கின்ற கொடுமைகளுக்கெல்லாம் வக்காலத்து வாங்குவது அழகல்ல. தமிழர்களிடம் குறைபடுகளுண்டு. அந்தக் குறைபாடுகளை தீர்க்க வேண்டும். அதற்காக தமிழ் இனத்தியே ஒட்டு மொத்தமாக அழிக்க/அடிமைகளாக வேண்டுமின்றே திட்டம் போட்டு நடத்தும் சின்ஹல இனவெறியை நியாயபடுத்துவது வெட்க கேடானதும் மனிதாப மானதுதான?

    Reply
  • நந்தா
    நந்தா

    கனவு காண்பதில் தப்பில்லை. கண்ட கனவு பலிக்கவில்லை என்று மற்றவர்கள்தான் அதற்கு காரணம் என்று கூப்பாடு போட்டு கொலை கொள்ளை வரை போவதுதான் தப்பு.

    தமிழ் சூரர்களின் 1960 சத்தியாகிரகத்தின் பின்னர்தான் யாழ் மக்கள் பலர் ஆமியை கண்டனர். பிரபாகரனின் குண்டு வெடிப்புடன் இராணுவத்தை வீட்டுக்குள் கண்டோம்!

    இதுவரையில் பாதுகாப்புப் படைகளில் தமிழர்கள் சேர வேண்டும் என்று தமிழ் தலைமைகள் சொன்னது கிடையாது. பொலிஸ், முப்படைகள் என்பதில் சேர்வதை விட கள்ளக்கடத்தல் கெளரவமானது என்று கருதும் சமூகம் நாகரிமடைய காலம் செல்லும்!

    Reply
  • chandran .raja
    chandran .raja

    நந்தா இந்த “கள்ளக்கடத்தல்” உச்சரிப்புக்களை கைவிடவேண்டும். தூத்துக்குடியில் இருந்து இனவாத அரசு செத்தல்மிளகாயை இறுக்குமதி செய்து விற்பனை செய்தால் கள்ளக்கடத்தல் இல்லை. வல்வெட்டித்துறையார் வள்ளத்தில் கொண்டு வந்து விற்றால் அது கள்ளக்கடத்தல்.

    கடந்த அறுபது வருடங்களிலும் சிங்களஅரசு (தமிழ்அரசியல் தலைவர்களும் கூடத்தான்) மக்களுக்களுக்கு நேர்மையாக நடந்து கொண்டவர்கள் அல்ல) இப்படியான கோலங்களில் மக்களின் உணர்வுகள் எவ்வகையிலும் பிரதிபலிக்கலாம்?. ஆகவே கள்ளக்கடத்தல்காரர்கள் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தை தூண்டிவிட்டார்கள் என்பதில் எந்த ஆதாரமும் இல்லை.

    போராட்டங்களின் விதிமுறைகளில் பல வழிகள் இருப்பது போல ஈழத்தமிழ்மக்களின் போராட்ட வரலாற்றிலும் பலவழிமுறைகள் இருந்தன.அது குட்டி முதாலித்தவ வர்க்கத்திடம் சிக்கி சீரளிந்தது தான் வரலாறு.

    பொதுவுடமை கம்யூனிசம் கோட்பாடுகள் இலங்கை-இந்தியா மட்டும் சீரளிந்து போனதல்ல. உலகவரலாற்றின் பிரதிபலிப்பே அதிலும் தோற்றம் கண்டது. இனியென்ன? இதன் மறுபிரதி பலிப்பைக் காண்பதற்கு வருடங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனது கணிப்ப்பின் படி பன்னிரண்டு-பதினெட்டு மாதங்களே ஆகலாம். அதுவரை……!.
    நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது. இலங்கை தொழிலாளி வர்கக்கட்சியின் சீரளிவே தமிழ்மக்களின் ஆயுதப்போராட்டமாக உருவெடுத்தது. அதில் கள்ளக்கடத்தல்காரரின் பங்குகள் கணிசமான இடத்தை வகித்தன. போராடியவர்கள் எல்லாலோரும் கள்ளக்கடத்தல் சிந்தனைக்கு உட்பட்வர்கள் அல்ல.
    (பின்குறிப்பு. தேசம்நெற்றில் வரும் வாசகர்களை விட உங்களில் கூடிய மரியாதையை வழங்குபவன்.எதையும் புரிந்துகொள்வது மக்களின் பெயரில் இருக்குமென்று நம்புகிறேன். நான் மக்கள் என்று சொல்லுவது உலகப்பாட்டாளி மக்களைத்தான்)

    Reply
  • BC
    BC

    //“கள்ளக்கடத்தல்” உச்சரிப்புக்களை கைவிடவேண்டும்.
    பொதுவுடமை கம்யூனிசம் கோட்பாடுகள் இலங்கை-இந்தியா மட்டும் சீரளிந்து போனதல்ல. உலகவரலாற்றின் பிரதிபலிப்பே அதிலும் தோற்றம் கண்டது. இனியென்ன? இதன் மறுபிரதி பலிப்பைக் காண்பதற்கு வருடங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனது கணிப்ப்பின் படி பன்னிரண்டு-பதினெட்டு மாதங்களே ஆகலாம்.//
    இதை சிறிது விளங்கபடுத்தினால் நல்லது.

    Reply
  • Ajith
    Ajith

    கனவு காண்பதில் தப்பில்லை. கண்ட கனவு பலிக்கவில்லை என்று மற்றவர்கள்தான் அதற்கு காரணம் என்று கூப்பாடு போட்டு கொலை கொள்ளை வரை போவதுதான் தப்பு.
    திரு நந்தா அவர்களே, நீங்கள் தான் கனவு காண்பது தவறு என்டீர்கள். பின் தலை குத்தனம் அடிகிறீர்கள்.

    /தமிழ் சூரர்களின் 1960 சத்தியாகிரகத்தின் பின்னர்தான் யாழ் மக்கள் பலர் ஆமியை கண்டனர். பிரபாகரனின் குண்டு வெடிப்புடன் இராணுவத்தை வீட்டுக்குள் கண்டோம்!//

    சதியகிரகத்திற்கு ஏன் ஆமி வரவேண்டும். ஆகவே சின்ஹல மட்டும் சட்டம் நியாயமானது என்கிறீர்கள். சின்ஹல அரசு செய்வதை தமிழர்கள் கேட்டால் தவறு என்கிறீர்கள். ஆயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்வது சின்ஹல மக்களின் உரிமை என்கிறீர்கள். Colombo இல் 58 இல் பெட்ரோல் ஊற்றி துடி துடிக்க பச்சை பாலகர்களை கொன்றது நியாயம் என்கிறீர்கள்.

    பிரபாகரன் குண்டு வைத்ததால் இராணுவத்தை வீடுக்குள் கண்டோம். வியவீர குண்டு வைத்த போது ஏன் Colombo இல் சின்ஹல மக்களை இழுத்து பெட்ரோல் கொளுத்தி எரிக்கவில்லை.

    யாழ் பாணியை திட்டுகிறீர்களே நீங்கள் எங்கே பிறந்தீர்கள். வளர்ந்தீர்கள் என்ன செய்தீர்கள் என்பதை சொன்னால் நல்ல இருக்குமே. இன்று உங்கள் சின்ஹல இனத்தை விட்டு நாடு கடந்து அடிமையாக வாழ்கிறீர்கள்.

    Reply
  • நந்தா
    நந்தா

    தமிழர்களுக்கு பொலிசாரை தமிழ்நாட்டிலிருந்து கொண்டு வர முடியாது. அஜித்துக்கு தமிழரின் “கனவுகள்” முக்கியமானவை. கனவுகள் பொய் என்பது புரியாமல் இருக்கும் இவர் நிஜங்களைக் காண்பது கஷ்டம்.

    தவிர விஜயவீரவின் “வீரவிளையாட்டினால்” ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் கொல்லப்பட்ட விஷயம் தெரியவில்லைப் போலிருக்கிறது. பெற்றோல் மாத்திரமல்ல உயிருடன் டயர் போட்டும் ஆயிரக்கணக்கான சிங்கள இளம் சந்ததிகள் கொல்லப்பட்டனர்.

    “சிங்களம் மட்டும்” என்று ஒரு சட்டமும் கிடையாது. இந்த வார்த்தைப் பிரயோகம் செல்வனாயகம் போன்றவர்களால் பாவிக்கப்பட்டது.

    புலிகளைக் கொல்வது வரவேற்கத்தக்கது. தமிழின் பெயரால் தமிழ் பேசுபவர்களைக் கொல்ல புலிகளுக்கோ அல்லது வேறு எந்தக் கும்பலுக்கும் உரிமை கிடையாது.

    யு என் பி காலத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டால் அது “சிங்களம்” என்று குரலிடும் தமிழர்கள் அதே யு என் பி க்கு இன்றும் சாமரம் வீசுகிறார்கள். பொன்செகாவுக்கு வாக்களிக்கிறார்கள். இந்த “காதல்” விவகாரம் தமிழரின் நன்மைக்கு என்று யாருக்கு காது குத்துகிறார்கள்?

    தமிழ் என்று புறப்படும் அரசியல் வாதிகளுக்கு முதலில்நாலூ தமிழனாவது கொல்லப்பட வேண்டும் என்பதுதான் ஆசை. அதற்கு எந்த விதமான மோசடியும் செய்ய தயாராக உள்ள தமிழர்கள் வெறும் கொலைகாரர்களே!

    தமிழ் பகுதிகளில் உள்ள கச்சேரிகளுக்கு முன்னால்த்தான் சத்தியாக்கிரகம் என்று தமிழர்களின் அன்றாட வாழ்வுகளை முடக்கியவர்களை துரத்த இராணுவம் வராமல் சல்வேசன் ஆமியா வரும்?

    திருனெல்வேலி சந்தியில் பெற்றொல் ஊற்றி மட்டுனகர் தமிழ் வாலிபர்களை கொழுத்திய காட்சி இன்றும் மனதில் உண்டு. கிட்டு கும்பல் அந்த தமிழர்களுக்கு இந்த பூலோகத்திலிருந்தே “விடுதலை” கொடுத்தவன்.

    தமிழ் என்று புறப்பட்டவர்கள் தமிழர்களைக் கொன்றதையும் கொள்ளையடித்ததையும் அஜித் சரி என்று சொல்லுகிறார். இந்த தமிழ் சூரர்களின் தமிழர் கொலைகளை ஒப்பிடும் பொழுது 58 ஒர் தூசி!

    Reply
  • நந்தா
    நந்தா

    சந்திரன் கள்ளக்கடத்தல் தமிழ் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்துள்ள விஷயம்.

    தூத்துகுடி மிளகாய் இறக்குமதியையும் வல்வெட்டித்துறை மிளகாய் கடத்தலையும் ஒன்று படுத்தும் சந்திரன் மார்க்சிசம் என்று எதற்கு கூறுகிறார் என்று தெரியவில்லை.

    சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசு மிளகாய் இறக்குமதி செய்யாமல் யாழ் விவசாயிகளை ஊக்குவித்தது. யு என் பி அரசு யாழ் விவசாயிகளை பட்டினியாக்கவும் மிளகாய் விலையை குறைக்கவும் மிளகாயை இறக்குமதி செய்தது. விவசாயிகளின் வயிற்றிலடிக்க வல்வெட்டித்துறைக் கள்ளக் கடத்தல் கோஷ்டிகளும் மிளகாயை கடத்தினார்கள்.

    வடபகுதி விவசாயிகளை கள்ளக்கடத்தல் பாதித்த விஷயத்தை அறியாமல் சந்திரன் பேசும் வேதாந்தம் நகைப்புக்குரியது.

    Reply