தோழர்களே, எமது சர்வதேச கிளைகளின் மாநாட்டிற்காக நீங்கள் பிரான்சின் தலைநகர் பாரிசில் கூடியிருப்பதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். சமூக தார்மீக நெறிமுறைகளுக்காக போராடுபவர்களை உலகின் எந்த தீய சக்திகளாலும் அழித்துவிட முடியாது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. கடந்து வந்த கால் நூற்றாண்டுக்கு மேலான எமது பாதையில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இழப்புக்களையும் துன்பங்களையும் சந்தித்து வந்திருக்கின்றோம்.
இப்படியும் நடக்குமா என கற்பனை செய்ய முடியாதவற்றை எல்லாம் நாம் அனுபவித்திருக்கிறோம் பார்த்திருக்கிறோம். நாமும் எமது தாயகத்தின் மக்களும் இழப்புக்கள் போக எஞ்சி நிற்கிறோம்.
இக்கட்டத்தில் முக்கியமான தவிர்க்க முடியாத கேள்வி ஒன்று எழுகின்றது. நாம் எமது சமூக இலக்குகளை அடைந்திருக்கின்றோமா? எமது சமூக வாழ்வு சமூகத்தில் ஜனநாயக மயப்பட்டிருக்கின்றதா? சமூக ஏணிப்படிகளில் அடித்தட்டில் வாழும் மக்களின் சமூக வாழ்வில் மேம்பாடு ஏற்பட்டிருக்கிறதா? சமூக தளைகள் அறுந்திருக்கிறதா? அல்லது சிறிதளவேனும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா?
இங்கு யதார்த்தமாகவும் உண்மையாகவும் அப்படி எதுவும் நிகழ்ந்து விடவில்லை என்றே பதிலளிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் எமது போராட்டத்தின் ஆரம்ப நிலையிலேயே பாசிசத்தின் நிழல் கவிந்து அது எமது சமூகத்தினுள் ஊடறுத்து போராட்டத்தின் சகல தார்மீக நெறி முறைகளையும் அழித்தொழித்து ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்டக் காரர்களையும் தலைவர்களையும் கல்வியாளர்களையும் துவம்சம் செய்ததோடு எமது இரண்டு தலைமுறையினரில் கணிசமானோரை இராணுவ மயப்படுத்தியும், இராணுவ மனோபாவத்திற்கு உள்ளாக்கியும் சமூகக் கருவூலங்களான கலாச்சார பொருளாதார விழுமியங்கள் எல்லாவற்றையும் நிர்மூலம் செய்தது. சிந்திப்பதை நிறுத்திவிடுமாறு சமூகத்தை நிர்ப்பந்தித்தது. தனக்கு அடி பணந்து நிற்குமாறு தொழுதேற்றுமாறு அது அச்சுறுத்தியது தமக்கு எதிரானவர்கள் அல்லது அவ்வாறென தாம் சந்தேகப்படுபவர்கள் எல்லோரையும் மரணப்பொறிக்குள் வீழ்த்தியது.
திட்டவட்டமாக 1980 களின் நடுப்பகுதியில் குரூர முகம் காட்டிய பாசிசம் 2009 நடுப்பகுதியில் பலத்த ஆரவாரத்துடன் வீழ்ச்சியுற்றது.
அதற்குப்பிந்திய சூழலில் நாம் பேசுவதற்கும் கலந்துரையாடுவதற்குமான சூழல் உருவாகியிருக்கின்றது என்பது உண்மையே அது தாயகத்திலும் புலம்பெயர் தளத்திலும் உண்மையே.
ஆனால் தமிழ் மக்களுக்கும் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தேசிய இனங்களுக்கும் உரிமைகளை அங்கீகரிப்பதில் கடுமையான நிலை உருவாகியுள்ளது. 1980 களில் இருந்ததை விட நிலைமை கடுமையாகியுள்ளது. இத்தகைய சிக்கலான இக்கட்டான நிலைக்கு தமிழ் மக்களை இட்டு வந்தது எம்மத்தியில் இருந்த பாசிசமே என்பதை நீங்கள் அறிவீர்கள்.
தமிழர்களுக்கு எதையும் வழங்கத் தேவையில்லை பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டது என்றவாறு இலங்கையின் இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளை சேர்ந்தவர்களும் சொல்ல முற்படுகின்றார்கள்.
தமிழர்களின் பிரச்சினை பயங்கரவாததத்திற்கு முற்பட்டது 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலவுவது என்பதை உணர்ந்தும் உணராதவர்கள் போல் இவர்கள் நடக்க முற்படுகின்றார்கள். சிங்கள மக்கள் மத்தியில் 2009 வெற்றியின் பெருமித உணர்வுகள் பரவலாக இருந்தாலும் அவர்கள் இன்று தாம் அனுபவிக்கும் ஜனநாயக உரிமைகளும் காவுகொள்ளப்பட்டு விடுமோ என அச்சமுறுகின்றார்கள் இலங்கையில் இன சமூகங்களின் பிரச்சினைக்கு ஜனநாயக ரீதியாக தீர்வு காணாத வரை இலங்கையின் பெரும்பான்மை இன மக்களும் ஜனநாயக உரிமைகளை அனுபவிக்க முடியாதென்பதே நிஜம்.
தென்னிலங்கையில் முற்போக்கு அரசியலும் பலவீனமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. கெடுபிடி யுத்தத்திற்கு பின்னரான உலகம் 1990இருந்து தீவிர மாற்றமடைந்து வந்திருக்கிறது. அது தென்னாசியாவையும் பாதித்தது.
இந்தியா, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் சாரம்சத்தை அதன் அதிகாரப் பரவலாக்கத்திட்டத்தை நடைமுறையில் முழுமையாக சாத்தியமாக்குமாறு இலங்கையிடம் பல தடைவை நயந்து கேட்டிருக்கிறது. இலங்கையின் பல்லினத்தன்மையை உறுதிப்படுத்துமாறு கேட்டிருக்கிறது. நட்பான அயல்நாடு என்ற வகையில் பல்வேறு தடைவைகள் இலங்கையின் தலைவர்களிடம் பல தடைவைகள் இதனை வலியுறுத்தி வந்திருக்கிறது.
ஆனால் இந்த விடயம் எதிர்நிலையிலேயே பயணப்பட்டிருக்கிறது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. முறையாக இணைப்பதற்கு மனசாரச்செயற்படுவதற்கு இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளுக்கும் மனமொருப்படவில்லை.
இந்தியாவின் அனுசரணையுடனான அதிகாரப்பரவலாக்கத்திட்டம் சந்திரிக்காவின் சமஸ்டி ஒஸ்லோவின் கூட்டாச்சி மகிந்தவின் அனைத்துக்கட்சிக்கூட்டம் எல்லாமே கடந்து போய் விட்டன தற்போதும் வடக்கு கிழக்கின் இரண்டு மாகாணங்களுக்கும் பொருள் பொதிந்த அதிகாரப்பகிர்விற்காக உணர்ச்சிவேசப்படாமல் நிதானமாக செயற்படவேண்டியிருக்கிறது.
யுத்தத்தின் இறுதியில் பணயம் வைக்கப்பட்டு பின்னர் பிரலயமாக இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் முட்கம்பி வேலிகளைத் தாண்டி வன்னியில் நிகழ்கிறது. ஆனால் அவர்களின் வாழ்க்கையினை உறுதியான அடித்தளத்தில் நிர்மாணிப்பதற்கு உள்ளகக்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
உயிரிழப்பு, ஊனமற்ற நிலை பொருளாதார இழப்பு பேதலித்த மனமென வன்னியில் மக்களின் இழப்புக்கள் பிரமாண்டமானவை. இவர்களின் தேவைகளை நிவர்த்திக்க ஊழலற்ற மனிதப்பண்புடனான அர்ப்பணிப்புத்தேவை இந்தியா மற்றும் ஐநா ஸ்தாபனங்கள் உலக நாடுகள் கணிசமான அளவில் உதவிகளை வழங்கிவருகின்றன.
அகதிகளான மக்களின் வாழ்வை மேம்படுத்தவும் வடக்கு கிழக்கை மீள் கட்டியெழுப்பவும் சர்வதேச சமூகம் உதவி வழங்க முன்வந்திருக்கிறது. இவற்றை வினைத்திறனுடன் கையாழ்வதற்கான தமிழர் பங்குபற்றலுடனான அரசமுறைமையொன்று இன்னும் இங்கு ஸ்தாபிக்கப்படவில்லை.
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையுமே நாங்கள் நழுவவிட்டுள்ளோம். தமிழர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் தீர்க்க தரிசனமற்ற அரசியலே இதற்கு காரணம் என்றால் மிகையல்ல. ஆனால் இந்த திரும்பத்திரும்ப நிகழ்த்தப்பட்டு வருகின்ற வரலாற்றுப்பிழைக்கு முடிவு கட்டவேண்டும் அப்போதுதான் பன்முகத்தன்மை வாய்ந்ததும் சமத்துவமானதும், ஐக்கியமானதுமான வாழ்வொன்றை இங்கு கட்டியெழுப்ப முடியும்.
எமது மக்கள் இழந்த இழப்புக்களுக்கும் சந்தித்தத்த பேரழிவுகளுக்கும் ஈடாக தீர்வொன்று எட்டப்படவேண்டும். எத்தனை அவமானங்கள் இழிவுகள் உதாசீனம், மரணங்கள் மத்தியில் நாம் வாழ்ந்திருக்கிறோம். இது இலங்கையில் வாழும் தோழர்களுக்கு மாத்திரமல்ல புலம்பெயர்ந்து வாழும் தோழர்களுக்கும் பொருந்தும்.
எமது மக்களின் சார்பில் எம்மை ஸ்தாபிப்பதற்கு பாரதப்போரில் அவிமன்யு சிக்கியது போல் ஒரு சக்கர வியூகத்தினுள் அல்லவா நாம் சிக்கியிருந்தோம் இறுதியாக அது எமது மக்களுக்கும் நேர்ந்தது.
இவற்றையெல்லாம் தாண்டி பேரழிவுகளுக்குப் பின்னால் எஞ்சியிருப்பவை எமது கொள்கைளும், கனவுகளும், இலட்சியங்களும்தான். சமகாலச சூழ்நிலைக்கு ஏற்ப இவற்றை வென்றெடுப்பதற்காக நாம் இயங்க வேண்டியிருக்கிறது, செயற்பட வேண்டியிருக்கிறது,
இன்று எமது ஸ்தாபனம் என்பது உலகளாவியதாக அமைந்திருக்கிறது. எமது பிரச்சினைகள் எம்மை அவ்வாறு ஆக்கியிருக்கிறது தாயகத்திலுள்ள தோழர்கள் மக்களை ஊக்கப்படுத்துவத்தில், தென்பூட்டுவதில் புலம்பெயர் தளத்திலுள்ள தோழர்கள் நண்பர்கள் ஆதரவாழர்கள் வழங்கிய பங்களிப்பை உரிமையுடனும் நன்றியுடனும் நினைவுகூர கடமைப்பட்டவர்கள்.
புலம்பெயர்த்தளத்தில் இயங்கிய மாற்று ஊடகங்கள் வழங்கிய பங்களிப்பு வானொலி, இணையங்கள் இங்கு வழங்கிய பங்களிப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. புலம்பெயர்த் தளத்தில் செயற்பட்ட தோழர்களின் அர்ப்பணம், நேர்மை தாயகத்திலுள்ளவர்கள் பற்றிய அவர்களின் உள்உணர்வு என்பன இங்கு எமக்கு பல நண்பர்களை உருவாக்கி தந்திருக்கிறது.
நாம் எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் இலங்கையினை அரசியல் அரங்கை ஜனநாயகப்படுத்துவதற்கும் சமூக அபிவிருத்திப் பணிகளை ஆக்கபூர்வமாக முன்னெடுப்பதற்கும் எமது நியாயமான அரசியல் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்கும் பரந்த அளவிலான ஐக்கியம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.
பாரிய அளவில் வெகுஜனங்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. 1980களின் முற்பகுதியில் அல்லது 70களில் வேலை செய்தமை போன்ற முறைகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது. ஆனால் அப்போதிருந்த அரசியல் சமூக சவால்கள் தற்போது உள்ளதுடன் ஒப்பிடுகையில் தலைகீழ் வித்தியாசமானவை. ஓரளவு எளிமையானவை எனவே புதிய நிலவரங்களுக்கு ஏற்ப புதிய வெளிச்சத்தில் நாங்கள் பணியாற்ற வேண்டியிருக்கிறது.
சர்வதேச அளவில் எங்களைப் போன்று மனித குலத்தில் நல்வாழ்விற்காக போராடும் சக்திகளுடன் கரங்கோர்த்து செயற்படும் அந்த இயல்பை என்றைக்கும் நாம் கைவிட்டுவிடக்கூடாது.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் அடையாளமே எமது அடையாளம் நாம் அவர்களைப் பிரதிபலிப்பவர்கள் மாத்திரமல்ல அந்த மக்களின் விடிவிற்காக செயற்படுவர்கள் என்பதை எப்போதும் மறந்துவிடக்கூடாது.
பாரிஸ் மாநாடு நடைபெறும் காலம் முக்கியத்துவம் வாய்ந்தது.
பாரிஸ் மாநாட்டின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தி. ஸ்ரீதரன்
இராவணன்
பாரசில் பரபரப்பு – பாரிஸ் ஈழநாடு சிவகுரு பாலசந்திரன் பிரான்சுக்கு வருகை தந்த வரதராஜப் பெருமாளுடன் ரகசிய சந்திப்பு பாரிஸ் ஈழநாடு சிவகுரு பாலசந்திரன் பிரான்சுக்கு வருகை தந்த வரதராஜப் பெருமாளுடன் ரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பலஆண்டுகளாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடும் பிரச்சாரங்களை பாரிசில் மேற்கொண்ட பாலசந்திரன் கடந்த மூன்று ஆண்டுகளாக விடுதலைப் புலிகளில் அறிவிக்காதா பேச்சளராக புலிகளுக்க வாக்களாத்து வாங்கி வருகின்றமை பலத்த சந்தேகங்களை பலர் மத்தியில் ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது வரதர் அணியை சந்தித்த விடயம் அம்பலமாகியுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக புலிகளினால் துரோகிக் குழுவென அறிவிக்கப்பட்ட குகநாதன் குழுவில் இருந்தவர் பாலசந்திரன் என்பது ஊர் அறிந்த உண்மை. குகநாதனுடன் இருந்த காலங்களில் டக்ளஸ் தேவானந்தாவுடன் ரகசிய தொடர்புகளை சிவகுரு பாலசந்திரன் அவர்கள் பேணிவந்தவர் என்பது பின்னாட்களில் தெரிவந்தது.
குகநாதனுடன் குழுவுடன் அன்று சேர்ந்தியங்கிய காலங்களில் இன்றைய ரீ ஆர் ரி தமிழ்ஒளியின் அறிவிப்பாளர் ரங்கன் அல்லது தர்சன் இவர்களின் ரகசிய தொடர்பிகளை நன்கறிந்ததோடு அதற்கான ஆதாரங்களையும் வைத்திருக்கின்றார்.
குகநாதன் மற்றும் சிவகுரு பாலசந்திரன் அவர்கள் டக்ளஸ் மற்றும் சிறிலங்கா புலனாய்வு பிரிவினருடன் இடையில் இருந்த மின்னஞ்சல் தொடர்பாடல் தொடர்பிலான ஆவணங்கள் ரங்கனுடன் உள்ளன.
ஏற்கனவே பல தடவை ரங்கன் இதனை வெளிப்படுத்தியும் உள்ளார்.
இந்நிலையிலேயே சிவகுரு பாலசந்திரன் � வரதர் அணி சந்திப்பு ரகசியமாக இடம்பெற்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் நாடு கடந்த அரசுக்கான பொதுக்கூட்டத்தில் பங்கெடுப்பதாக வாக்குறுதி கொடுத்து விட்டு இறுதி நேரத்தில் அதில் கலந்து கொள்ளாமல் வரதருடன் சந்தித்துள்ளதாக அறியமுடிகின்றது.
இதற்கான ஆதர போட்டோக்களும் இணையத் தளங்களில் அம்பலமாகியுள்ளது.
குகநாதனுடன் இருந்த காலத்தில் டக்ளசுடன் இருந்த தொடர்பை மீளப்புதுப்பித்துக் கொண்ட பாலசந்திரன் சமீபத்தில் டக்ளசின் உதவியுடன் யாழ் தீவகப்பகுதியில் மீன்பிடிப்பண்னை ஒன்றை உருவாக்குவற்கு முயற்சி எடுத்துள்ளதாக அவரே பல இடங்களில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இதற்கு லாசப்பல் பகுதியில் உள்ள சில வர்தகர்களிடம் முதலீட்டையும் கோரியிருக்கின்றார்.
இதன் தொடர்சியாகவே பாலசந்திரன் வரதர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நாடு கடந்த அரசில் பிரதிநிதி மக்களவையில் பிரதிநிதி என்று தன்னை ஒரு தேசியவாதியாக காட்டிவரும் பாலசந்திரனின் உண்மையான முகம் மீண்டும் வெளுத்து வருகின்றது.
இவரை பொது வேலைத்திடங்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இதற்கு பதில் கூற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு
28 Oct 2010
merci manithan.com
aathav
புலிகள் எல்லாம் பலவிதம்! அதில் ஓவ்வொன்றும் ஒருவிதம்! கே.பி. தேசியவாதியென்றால் பாலச்சந்திரன் தேசியவாதியில்லையோ? இவர் கொஞசநாளா தான் புலியென்று தன்ரை ஈழநாட்டையும்-லாச்சப்பலையும் படுத்தினபாடு! இப்போ இவர்களின் தாகம் “பணஈழத் தாயகம்”
Jeyarajah
பாலச்சந்திரன் வரதராஜப்பெருமாளை சந்தித்ததென்று இப்போ எழுதும் இணையங்கள் இதே பாலச்சந்திரன் எழுதிய கட்டுரைகளை ஆய்வுக்கட்டுரையாகவும் போட்டு இடம் நிரப்பி இருந்தார்கள். இப்போ எழுதி என்ன பிரயோசனம். இவர் மட்டுமல்ல இப்படி எத்தனையோ பேர். ஊடகவியலாளர்கள் குறைந்தபட்சமாவது உண்மை செய்திகளை வெளிக்கொணர வேண்டும். பரபரபப்பிற்க செய்திகள் எழுதி கடைசியில் பாலச்சந்திரன் நிலை வரக்கூடாது. இதே நிலைமை இலங்கையிலும் உள்ளது. உதாரணத்திற்கு யாழ் நூலகத்தில் நடந்த சர்ச்சைக்குரிய விடயத்திற்கு முன்னுரிமை கொடுத்த பத்திரிகைகள் அது சம்பந்தமாக நடந்த விளக்க நிலைமைகள் சம்பந்தமாக இதுவரை எழுதவில்லை. ரிபிசி கலந்துரையாடலில் வரதராஜப்பெருமாள் பதிலளிக்க இடையில்வந்த புலி தூசணம் சொல்லிவிட்டு ஓடியது. இந்தப் பண்புகளே தெரியாதவர்கள் முதலில் பொதுவான பத்திரிகை வானொலி இணையங்களில் நாகரீகமாவது நடந்து கொள்ள பழக வேண்டும்.
தாமிரா மீனாஷி
பொது நூலகத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் பற்றிய விளக்க நிலைமைகள் தொடர்பான செய்திகளை அறிய விரும்புகிறேன்.. பதிவிட்ட நண்பர் ஜெயராஜா உதவ வேண்டும்.
மாயா
//பொது நூலகத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் பற்றிய விளக்க நிலைமைகள் தொடர்பான செய்திகளை அறிய விரும்புகிறேன். – தாமிரா மீனாஷி//
கடந்த 23ம் திகதி 36 பஸ் வண்டிகளில் யாழ் நகரைச் சுற்றிப் பார்க்கவென ஒரு குழுவினர் சென்றுள்ளனர். அச் சமயம் யாழ் வைத்தியர்களது சம்மேளனம், அமர்வொன்றுக்காக நுhலகத்தை 2 நாட்களுக்கு ஒதுக்கியுள்ளது. அந்த இரு நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை எவரும் உள்ளே செல்லலாகாது என 3 மொழிகளிலும் அறிவிப்பு ஒன்றும் வெளியில் வைக்கப்பட்டிருந்துள்ளது. இதனால் கொழும்பிலிருந்து வந்தவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளே செல்ல வேண்டாம் என தடுத்துள்ளனர். இதனால் வாக்குவாதப்பட்ட நிலையில் கொழும்பிலிருந்து வந்திருந்த குழுவினர் , பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்த போதிலும் , அவர்களை சட்டை செய்யாது தாம் அதிபர் காரியாலயத்தில் இருந்து வந்தாக சொல்லி விட்டு , உள்ளே அத்து மீறிப் பிரவேசித்து , உள்ளே இருந்த புத்தகங்களை விழ்த்தி , உள்ளே இருந்தவர்களோடு அடாவடித்தனமாக நடந்தும் கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வு உடனடியாக அதிபர் காரியாலயத்துக்கு தெரிய வந்ததாகவும் , உடனடியாக அச் சம்பவம் தொடர்பில் அரசு சார்பாக வருத்தம் தெரிவிக்கும்படி ஈபீடீபீ தலைவருக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
மேலும் தற்காலீகமாக வெளியில் இருந்து வரும் எவரையும் நுhலகத்துக்குள் செல்ல அனுமதிக்க வேண்டாம் என அதிபர் மாளிகையிலிருந்து கட்டளை ஒன்று அறிவிக்கப்பட்டு, இராணுவம் நுhலகத்துக்கு பாதுகாப்பு கொடுக்கும் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
சிங்களத்தில் அச் செய்தி:
-http://www.lankaenews.com/Sinhala/news.php?id=15130
தாமிரா மீனாஷி
மிக்க நன்றி மாயா..!
பொதுசன நூலகக் கேட்போர் கூடம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே வேறு..ஆனால் இன்று அது அரசியல் கூட்டங்களுக்கும் ஏனைய வரவேற்பு நிகழ்வுகளுக்கும் பயன்படுத்தப் படுவதில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்.. ஒவ்வொரு அமைச்சரும் விஜயம் செய்யும் போதும் நூலகச் சுற்றாடல் அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப் படுத்தப்பட்டு அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்படும் நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். மருத்துவர் சம்மேளன கூட்டத்திற்காக நூலகத்தை மூடுவது தவறில்லையா? இன்ன பிற கூட்டங்களுக்காகவும் நூலகம் வாசகர் பாவனைக்கு தற்காலிகமாக மூடப்படும் முறை தவிர்க்கப் பட்டு நூலகத்தின் நிர்வாகப் பொறுப்புக்கள் அனைத்தும் நூலகரின் கைகளில் ஒப்படைக்கப் படுவதே சிறந்த வழி-நூலகத்தின் பயனை மக்கள் பெறுவதற்கு..
Jeyarajah
நண்பர் தாமிராவுக்கு
எதிர்காலத்தில் இவ்வாறான சூழ்நிலை ஏற்படாதவாறு நாம் நடவடிக்கை எடுப்போம். யாழ் நூலகத்தில் இடம்பெற்ற பகிரங்க கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.- EPDP news 29/10/10
linga
Dear Commentors,
Most of your comments are not related to the titile/contents of the topic !!!!!!!!