இலங்கையில் சுமார் 60,000 பேர் வரை பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக அண்மையில் சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழக சமூக விஞ்ஞான விரிவுரையாளர் நடத்திய ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. இதில் 21500 பேர் முழுநேரத் தொழிலாகக் பால்வினைத் தொழிலை கொண்டிருக்கின்றனர். இவ்வறிக்கையின்படி சிறுவர்கள் 5449 பேர் வரை இத் தொழிலில் ஈடுபடுத்தி இருப்பதாக கூறப்படுகின்றது.
சுமார் 60,000 பேர் வரை பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக அண்மையில் சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழக சமூக விஞ்ஞான விரிவுரையாளர் நடத்திய ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. இதில் 21500 பேர் முழுநேரத் தொழிலாகக் பால்வினைத் தொழிலை கொண்டிருக்கின்றனர். இவ்வறிக்கையின்படி சிறுவர்கள் 5449 பேர் வரை இத் தொழிலில் ஈடுபடுத்தி இருப்பதாக கூறப்படுகின்றது.
பால்வினை தொழில் என்பது இன்று நேற்று உருவாகியதல்ல மிகப்பழமையான தொழில் என்றும் இந்தியாவில் அக்காலத்தில் பாலியல் தொழிலுக்கென கணிகையர் என்றொரு குலமே இருந்ததாகவும் கோயில்களில் கூட தேவதாசிகள் என்ற தனிக்குலத்தினர் இப்பணியை இறைபணியாக மேற்கொள்ள நியமிக்கப்பட்டிருந்தனர் என்றும் அரபு நாடுகளில் அக்காலத்தில் பெண்கள் அடிமைகளாக சந்தைகளில் விற்கப்பட்டதாகவும், பண்டைய கிரேக்கர்களும் மத்திய ஜப்பானியர்களும் இந்தியர்களும் கணவன்மார் இறந்ததும் அல்லது திருமண வயது பிந்தியதும் பிரபுக்கள் மட்டத்தில் பாலியல் தொழிலைச் செய்யும் நிர்ப்பந்ததுக்கு உள்ளாhனர்கள் என்று வரலாறுகள் கூறுகின்றன.
தீபா மேத்தாவின் வோட்டர் திரைப்படத்தில் கூட காசியில் பால்வினைத்தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப்படும் கணவனையிழந்த பெண்களின் அவல வாழ்க்கையை கதைப்பொருளாக அமைந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கையை பொறுத்த மட்டில் இத்தொழில் தற்போது செய்யப்பட்டதொன்று ஆனால் சிங்கப்பூர் தாய்லாந்து பாங்கொக் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் இந்தியாவின் சில பகுதிகளிலும் பால்வினைத் தொழில் தொழிலாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இத்தொழில் தடைசெய்யப்பட்டிருந்தாலும் அனுமதிக்கபட்டது போன்றே இத்தொழில் நடைபெற்று வருகின்றது. கொழும்பில் தொடங்கி கரையோரப் பகுதிகளான கதிர்காமம் வரையிலும் இத்தொழில் வியாபித்திருக்கிறது. அதுமட்டுமன்றி கிராமங்களில் மிக இரகசியமாகவும் இந்தத் தொழிலை செய்து வருகின்றார்கள். ஆனால் இலங்கையில் சட்டரீதியாக அனுமதிக்கப்படாவிட்டாலும் சர்வதேச ரீதியாக இலங்கை இத்தொழிலுக்கு பேர் போன இடமாகத்தான் விளங்குகிறது. நெதர்லாந்திலிருந்து வரும் SPARTACUS என்ற சஞ்சிகை இலங்கை ஒரு பாலியல் தொழிலுக்கான தளம் என்று எழுதியுள்ளது. சிறுவர்களை இத்தொழிலில் ஈடுபடுத்தும் நாடுகளில் முக்கியநாடாக இலங்கை உள்ளதாகவும் அச்சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. கொழும்பு நகருக்குள் சுமார் 63 பால்வினை தொழில் விடுதிகள் இயங்குவதாகவும் இவற்றுள் 30 க்கும் மேலான இடங்களில் பகிரங்கமாகவே நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இங்கு பிரச்சினை என்னவென்றால் இத்தொழிலை நடத்துபவர்கள் சட்டத்தரணிகளாகவும் பொலிஸ் உத்தியோகத்திலிருப்பவர்களுமே இத்தொழிலை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. களனியில் ஒரு பால்வினைத் தொழிலை ஆரம்பித்து நடத்துபவர் சட்டத்தரணி ஒருவர் என அறிய வருகிறன்றது.
அங்கு தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு 8000 தொடக்கம் 18000 ரூபா வரை வழங்கப்படுவதாகவும் அதே போல் நுகேகொடையில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இத்தொழிலை நடத்தி வருகின்றமை பற்றியும் இவ் ஆய்வில் சுட்டிக்காட்டபட்டுள்ளது. இப்படி சட்டம் யார் கையில் இருக்கிறதோ அவர்களே இத்தொழிலின் உரிமையாளர்கள். இவர்களுக்கு அரசாங்கத்தின் அணுசரணையுடன் தான் இத்தொழிலை செய்வதாகவும் அறிய வருகிறது.
இத்தொழிலில் ஆண்களும் ஈடுபடுவதாக தகவல்கள் கூறுகின்றன. இலங்கையில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி 3230 ஆண்கள் பால்வினைத்தொழிலில் ஈடுபடுவதாகவும் இவர்கள் பெரிய புள்ளிகளுடனேயே அதிகமாய் தொடர்பு வைத்திருக்கிறார்கள் எனவும் ஆய்வின் படி தெரியவருகிறது.
அத்துடன் யுத்தம் முடிவடைந்த நிலையில் யுத்தத்தாலத்தில் கணவனையிழந்து தொழில் வாய்ப்பு இல்லாதவர்களை தொழில் எடுத்து தருவதாக கூறி அழைத்து வந்து பால்வினத்தொழில் ஈடுபடுத்துகிறார்கள் என்றும் சிலர் இராணுவத்தின் உதவியுடன் கணவனையிழந்த பெண்களை வலுக்கட்டாயமாக இத்தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் பல புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இவ் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. அதனால் இத்தொழில் சட்ட விரோதமாக நடத்தப்படுவதால் பல குற்றச் செயல்களுக்கு வழிகாட்டியாக அமையக் கூடும் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ள அதே வேளை பால்வினைத் தொழிலை (பாலியல் தொழில்) சட்டரீதியாக்கினால் பல பிரச்சினைகள் தீரும் என்ற நோக்கில் வெளிநாடுகளில் சட்டரீதியாக்கியுள்ளதைப் போல் இலங்கையிலும் செய்தால் இத்தொழிலில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் அப் பெண்கள் பாதிப்படைவது கொஞ்சம் என்றாலும் குறையலாம் என்று அவ் ஆய்வில் சுட்டடிக்காட்டப்பட்டுள்ளது.
நன்றி: ஊடறு
Kusumpu
அது என்ன பால்வினைத் தொழில்? வினை என்பதே செயல் செய்கை தொழில் என்று பொருள்படும்போது பால்தொழில் தொழில் என்று ஒரு அர்த்தம் கெட்ட பதத்தையல்ல தருகிறது. பாலியல் தொழில் என்பதே சரியானது. என்னவோ தமிழை அழிக்கறிது என்று திட்டம் போட்டு விட்டீர்கள். இனி எப்படித்தான் எழுதினால் என்ன என்கிறீர்களா?
பாலியல் தொழில் என்பது காமரீதியான அனைத்து செயல்பட்டையும் உள்ளடக்கிய தொழில் பற்றிக் கூறுவதாகும்.
palli
குசும்பு இனி நாமும் வல்லரசுதான் என சொல்லவேண்டியதுதான், அப்படித்தானே ஜயா அடிக்கடி உலகத்துக்கு சவால் விடுகிறார்,
மாயா
ஆண்களை எல்லாம் காவு கொண்டு விட்டாச்சி. இப்ப ஒரு பக்கம் வயித்து பசி. அடுத்த பக்கம் உடல் பசி. இதுக்குள்ள தங்கட ஆசைகளை தீர்க்கிற ஒரு கும்பலும் சேர்ந்தா இதுமாதிரி நடக்கிறதை ஆராலும் தடுக்க இயலாது. இராணுவ பகுதிக்கு போன பெண்களை மானபங்கப்படுத்துறாங்கள். வல்லுறவில் ஈடுபடுத்துறாங்கள் என்ற சொல்லி ; அதைச் செய்யாதவங்களுக்கே பட்டம் கொடுத்து பழி போட்டார்கள். இந்த பழிகளும் ; சொல்லச் சொன்ன பொய்களும் பழகிப் போன பிறகு ; இப்படி நடப்பதும் பழகிப் போய்விடும். பட்டம் கொடுத்தவர்களும் ; புருடா கட்டுக் கதைகளை சொல்ல சொன்னவர்களும் இவற்றுக்கான பொறுப்புகளை ஏற்க வேணும். இது பெண்களின் தவறல்ல? காடையர்களின் தவறு.