வடக்கு மாகாண சபையை யாழ்ப்பாணத்தில் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது திருகோணமலையில் இயங்கும் மாகாண சபையைக் கிளிநொச்சிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்கமைய மாகாண சபையின் சில திணைக்களங்கள் கிளிநொச்சிக்கு மாற்றப்பட்டிருந்த போதும் அனைத்து திணைக்களங்களையும் அவற்றின் அலுவலகங்களையும் கிளிநொச்சியில் இயங்கச் செய்வதற்குரிய போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் வடக்கு மாகாண சபையைக் கிளிநொச்சியில் இயங்க வைப்பதில் சிக்கலான நிலை தோன்றியது.
வடக்கின் தலைநகராக மாங்குளம் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும் அங்கு மாகாண சபையை இயங்க வைப்பதற்குரிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நீண்டகாலம் செல்லுமென்பதாலும் வடக்கு மாகாண சபைக்கு அடுத்த வருட முற்பகுதியில் தேர்தலை நடத்த அரசு உத்தேசித்துள்ளதால் தேர்தலின் பின் தொடர்ந்தும் மாகாண சபையைத் திருகோணமலையில் இயங்கவைக்க முடியாதென்பதாலும் தற்போதைக்கு மாகாண சபையை யாழ்ப்பாணத்தில் இயங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை வட்டாரங்கள் தெரிவித்தன.
Ajith
The colonisation should start from Jaffna. Govt has already have done preparations in Jaffna. They have sent Sinhala employees already. Jaffna library under their control. Miltary is there to protect Sinhala colonisation
மாயா
//Jaffna library under their control – Ajith//
Ajith அவர்களுடைய கருத்தை பார்த்ததும்; நான் பெங்களுரில் இருந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. யாழ் கோட்டைக்குள்ளிருந்த இராணுவத்தை விரட்டி விட்டு ( அங்கே அனைத்து இயக்கங்களும் சேர்ந்து தாக்குதல்களை தொடுத்தன. உதவின என்பது வேறு கதை) புலிக் கொடியை ஏற்றி விட்டதான செய்தி இந்தியாவில் பரவிய போது பெங்களுர் தமிழர்கள் வெடி கொழுத்தி வீதி முழுதும் தமிழீழம் கிடைச்சுட்டு என்று கத்தி மகிழ்ந்தார்கள். அவர்களைப் பார்க்க எனக்கு பாவமாக இருந்தது. இருந்தாலும் அவர்களது உணர்வை என்னால் மதிக்காமல் இருக்க முடியவில்லை.
சினிமா பார்த்து அதையே உண்மையாக நம்பும் அந்த மக்கள் ; அரச படங்களில் போருக்கு பின்னர் ஒரு படையணி அந்த நாட்டுக் கொடியை நாட்டும் போது அந்த நாடு தமக்கு சொந்தமானதாக காட்டப்படுவது போன்ற நம்பிக்கையே அந்த மக்களிடம் இருந்தது.( Rajiv Gandhi கொலைக்குப் பின் அவர்கள் மாறி விட்டனர் என்பது அடுத்த கதை)
Ajith அவர்களின் “Jaffna library under their control” என்ற வரிகளை கண்டதும் அந்த நிகழ்வு வந்து போனது. அவர்கள் பாவம். நம்ம ஆட்களுமா?
Ajith ஒரு வக்கீல் என நினைக்கிறேன். தப்பு தப்பாய் எழுதிக் கொண்டேயிருக்கிறார்.