அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நான்கு நாள் பயணமாக இன்று மும்பை வந்தார். முதல் முறையாக இந்தியா வரும் ஒபாமாவுக்கு, மும்பை நகர் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் தங்கும் மும்பை தாஜ் ஹோட்டல் மற்றும் அருகே உள்ள கேட் வே ஆப் இந்தியா பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு, வாஷிங்டன் ஆன்ட்ரூஸ் விமானப்படை தளத்திலிருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் தனது மனைவி மிஷெல், இரு மகள்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஒபாமா. இந்தியா புறப்பட்டார் வழியில் ஜெர்மனியில் அவரது விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியது.
இன்று பகல் 1 மணிக்கு மும்பை விமான நிலையம் வந்தடைந்த ஒபாமாவுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையையொட்டி மும்பையில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பயணத்தின்போது இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையிலும், அணு சக்தி்த் துறையிலும் மிக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. 12 பில்லியன் டாலர் அளவுக்கான இந்த ஒப்பந்தங்கள் மூலம் அந்த நாட்டிடமிருந்து இந்தியா போர் விமானங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை வாங்கவுள்ளது. மேலும் அந் நாட்டின் எரிசக்தித் துறை நிறுவனங்கள் இந்தியாவில் அணு உலைகளை அமைக்கவுள்ளன. இதனால் அமெரிக்காவில் புதிதாக 60,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிகிறது.
ஒபாமாவுடன் உயர்மட்ட பிரதிநிதிகள், வெள்ளை மாளிகை அதிகாரிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என சுமார் 3,000 பேர் பல விமானங்களில் வந்துள்ளனர்.
palli
இந்தியாவில் ஓபாமா
இன்பமாய் இந்தியா.
அமெரிக்கா அதிபருக்கு
ஆடம்பர வரவேற்ப்பு
அயல் நாட்டு தமிழரை
அழிப்பதற்கும் ஆதரவு
உலகத்தின் நாட்டாண்மையாய்
உள்ளதோ ஐந்து நாடு
இந்தியா இனி சேரும்
இவர்களது நாட்டாண்மையில்
கோடி பல செலவு செய்து
கோலாகல வரவேற்ப்பு
கோட்டை வரை கம்பளம்
கேடிகளும் பங்கேற்ப்பு
உலகத்து சேரிகளில்
உயர்ந்து நிற்க்குது மும்பாய் சேரி
ஓபாமா வலம் வந்தால்
ஒரு வேளை நகர் ஆகும்
ஒரு வேளை உணவுக்காய்
ஏங்கியோர் நிலை அறியார்
ஓபாமாவின் வருகை கண்டு
டெல்லியிலே கொண்டாட்டம்
பின்லாடன் பிரச்சனையில்
அமெரிக்கா உதவுமாம்
இப்படி சொல்லித்தானே
ஈராக்கும் இருட்டிச்சு
அன்புடன்
பல்லி