முல்லைத் தீவு கரையோரப் பகுதிகளிலுள்ள மக்கள் கடந்த இரு தினங்களாக சுனாமி அச்சத்தினால் கண்விழித்திருக்கும் நிலை எற்பட்டது. ‘ஜல்’ புயல் தொடர்பான எச்சரிக்கை வளிமண்டல திணைக்களத்தால் விடுக்கபட்டுக் கொண்டிருந்த வேளை, கடும் காற்று, மழை ஏற்படும் என அம்மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவ்வாறு எதுவும் நிகழாமல் மந்தமான காலநிலையே காணப்பட்டது.
அது 2004ஆம்ஆண்டு சுனாமி ஏற்படுவதற்கு முன்பாக இருந்த காலநிலையை இம்மக்களுக்கு நினைவூட்டியது. அதனால் அண்மையில் மீளக்குடியமர்த்தப்பட்ட முல்லைத்தீவு கரையோர மக்கள் பெரும் அச்சத்துடன் காணப்பட்டனர். இரவில் நித்திரை கொள்ளாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் அவர்கள் பொழுதைக் கழித்தனர்.