வடக்கு வடக்காயும், கிழக்கு கிழக்காயும் இருக்க வட – கிழக்கு பிரிந்தே இருக்க வேண்டியது காலத்தின் தேவை! : இரா வி விஷ்ணு (swiss)

North_East_SLஅண்மைய சில நாட்களாக தமிழ் அரசியல் வாதிகளுக்கும் ஆதரவாலர்கக்கும் மட்டும் மெல்லக்கிடைத்திருக்கும் அவல் (பழசுதான் ) வட-கிழக்கு இணைப்பு. வட-கிழக்கு இணைப்பு என்பது இனப்பிரச்சனை ஆரம்பிக்கப்பட்டபோதே தமிழ் தலைமைகளினால் கையில் எடுக்கப்பட்ட தீர்வு கோரிக்கையில் ஒன்று அல்லது தாயக கோரிக்கை என்பது அறிந்ததே.

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நீடித்த அரசியல், ஆயுத போராட்டம் பல விடையங்களை செய்து முடித்திருக்கிறது, ஒரு சில விடங்களை புரட்டி போட்டிருக்கிறது அரசியல் ரீதியில் மக்களின் மனங்களை பக்குவமடைய செய்திருக்கிறது (புலம்பெயர் தமிழர்?? ) எல்லாவற்றுக்கும் மேலாக போராட்டம் தொடர்பான படிப்பினையை அனுபவ ரீதியில் கற்றுத்தந்திருக்கிறது. இன்னும் சில அரசியல் வாதிகள் கொள்கைரீதியில் தம்மை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை என்பது எம் சமூகத்தின் பாரிய குறை என்பதே உண்மை .

வடக்கும் கிழக்கும் இணைத்திருக்க வேண்டுமா, பிரிந்திருக்க வேண்டுமா, சேர்த்து இயங்குவதா அல்லது நிர்வாக ரீதியில் செர்ந்தியகுவதா பிரிந்தியங்குவதா என்பது வடக்கில் வாழும் தமிழ், முஸ்லீம் மக்களும் அரசியல்வாதிகளும், கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லீம் மக்களும், அரசியல்வாதிகளும் சேர்ந்து விவாதித்து முடிவெடுக்க வேண்டிய விடையம் என்பது யதார்த்தம்.

இப்போதிருக்கின்ற பிரச்சனை என்னவென்றால் வட-கிழக்கு இணைப்பு என்பது பரவலாக வடமாகாணத்தை பிரதிநித்துவ படுத்துகின்ற பல தமிழ் தலைமைகளின் பக்கமிருந்து மட்டுமே இக்கோரிக்கை வருகின்றதே தவிர கிழக்கு தலைமைக்களும் சரி, கிழக்கு மக்களும் சரி இந்த விடையத்தை பெரிதாக கருதுவதாக இல்லை .

கிழக்கு மக்களை பொருத்தவரை விசேடமாக தமிழ் மக்களை பொறுத்தவரை தங்களுக்கென்றொரு சரியான தலைமை கிழக்கை பிரதிநித்துவப்படுத்துவதர்க்கு தேவை என கருதுகின்றனர். அதற்கு சான்றாகவே கிழக்கு மாகாண சபை தேர்தலின் பொது கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் கட்சியை சார்ந்தவர்களுக்கு தமது பரவலான ஆதரவை தெருவித்திருந்தனர் . வடகிழக்கு இணைப்பை வலியுறுத்திய தமிழ் கட்சிக் கூட்டமைப்புக்கு ஒரே ஒரு ஆசனமே கிடைத்திருந்தது. இன்றைய நிலைமையில் வடகிழக்கு இணைப்பு என்பது வெறுமனே அரசியல் வாதிகள் முடிவு செய்ய வேண்டிய விடயமில்லை கிழக்கு மக்களும் கிழக்கு அரசியல் வாதிகளும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விடயம் என்பதை பெரும்பாலும் வடமாகாணத்தை பிரதிநித்துவப்படுத்தும் தமிழ் தலைமைகளும் அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.சிங்கள ஆட்சியாளர்களை போல் கடந்த கால கசப்புனர்வுக்களும், நப்பிக்கைஜீனங்க்களும் தமிழ் தலைமகள் மீதும் இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.
 
வடக்கும், கிழக்கும் பிரிந்திருப்பதென்பது நிர்வாக ரீதியில் இரு மாகாணங்களுக்கு நன்மையே தவிர. அதிகாரங்கள் என்பதே இன்றைய பிரச்சனை இந்த அதிகாரங்களை எவ்வாறு நாம் மத்திய அரசிடம் இருந்து பெற்றுக்கொள்வது என்பதே நாம் இன்றைய சூழ்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய விடயம். தமிழர்களில் அரசியல், ஆயுதபோராட்டத்தில் நியாயம் இருக்கின்றது. இழப்புக்கள் நிறையவே இருக்கிறது அதனை வெறுமனே ஆயுத போராட்டம் என்றளவில் வெற்றி தோல்வி என்று கணக்கேடுத்துவிட முடியாது. தமிழர்களுக்கான பொதுவாக சொல்வதானால் சிறுபான்மையியருக்கான அரசியல் தீர்வு என்பது உடனடியாக பெற்றே ஆகவேண்டிய விடயம் . வட -கிழக்கு தமிழர்களும் ஏனைய சிறுபான்மையினரான முஸ்லீம், மலையக தமிழர்களுடன் சேர்ந்து குரல் கொடுக்கவேண்டிய விடயம். அவற்றை சரியாக செய்தாலே சிறுபான்மையினருக்கான தீர்வென்பது நிரந்தரமான தீர்வொன்றுக்கு வழிகோலுமே தவிர வட- கிழக்கு இணைப்புதான் நிரந்தர தீர்வில் முக்கியமென சொல்லுவதெல்லாம் வெறுமனே தமிழ் தேசியத்தை மட்டும் கட்டிக்காக்க முயலும் கடும்போக்கு தமிழ் அரசியல் வாதிகள் தொடர்தும் தமது வண்டிகளை உருட்டுவதற்க்கும் தமிழர்களை உசுப்பேத்தி தம் பதவிகளை பாதுகத்துகொள்ளவே இன்றைய சூழ்நிலையில் உதவும் .

இலங்கையின் இன்றைய நிலைமை என்பது தமிழர்களின் பிரச்சனைகளை ஒருமித்து குரல் கொடுக்க வேண்டிய காலகட்டம். அந்தவகையில் தமிழ் கட்சிகள் பல ஒன்றிணைந்து ”கட்சிகள் அரங்கம்” நடத்துவது வரவேற்கத்தக்க விடயம். அதிலும் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க, செல்வாக்கற்ற கட்சிகள் அனைத்துமே ஒன்றிணைந்து பேச எத்தனித்திருப்பது வரவேற்கத்தக்க விடயம். இதுவரை தமிழர்களிடைய ஆயுதங்களே செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன. இனியாவது கருத்துக்கள் செல்வாக்கு செலுத்தட்டுமே. தமிழ் தேசிய கூட்டமைப்பும் இவ்வரங்கத்தில் சேர்ந்து செயட்படுவதுபோல் சமீட்சை காட்டியிருப்பது வரவேற்கத்தக்க விடயம். ஒற்றுமை என்பதே இலங்கைத் தமிழர்க்கு விதிவிலக்கு போல் இருந்தது, இனியாவது பதவி மோகத்தை விட்டு வெளிவருவார்களா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

North_East_SLதமிழர்களுக்கான தீர்வென்பது வருங்காலத்தில் இப்போதைய பிரச்சனைகளுக்கான தீர்வாகவும் வருங்காலத்தில் புதிய பிரச்சனைகளை உருவாக்காததாகவும் இருக்க வேண்டும். தீர்வென்பது தமிழ் பேசும் மக்களை மட்டுமின்றி சிங்கள மக்களையும் திருப்திபடுத்துவதாய் இருக்க வேண்டுமென்பது சிங்கள தலைமைகளின் கருத்தாக இருந்து வருகின்றது. அதேபோன்றே தமிழ் தலைமைகளும் வடமாகாண, கிழக்குமாகாண தமிழ், முஸ்லீம் மக்கள் திருப்திப்படுத்த கூடியவாறு தமது தீர்வு யோசனைகளை முன்வைக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் வட-கிழக்கு இணைப்பு என்பது வெறுமனே தமிழர்களின் கையில் இல்லை என்பதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல தமிழ் கட்சி அரங்கத்திலுள்ள அனைத்து கட்சிகளுக்கும் தெரிந்த விடயம். இந்நிலையில் வடக்கும் கிழக்கும் சட்டரீதியாய் பிரிக்கப்பட்டிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தைப் போன்று விரைவில் வட மாகாணசபை தேர்தலும் நடத்தப்படும் நிலையில் இருக்கும் பொது வட- கிழக்கு இணைப்புபற்றி இன்றைய சூழ்நிலையில் பேசுவது சிங்கள மக்களை எமக்கெதிராக திருப்பிவிடக்கூடது.
 
வட – கிழக்கு இணைப்பு பற்றி பேசும் தமிழ் தலைமைகள் ஒன்றில் கவனம் செலுத்தவேண்டும். வட -கிழக்கு இணைப்பென்பது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி தற்காலிகமானதே தவிர கிழக்கு மாகாண மக்கள் விரும்பினாலே தொடர்து இணைந்திருக்க முடியுமென்பது அன்றே மாகாணங்களுக்கிடையில் கசப்புனர்வுவர வாய்புகள் இருக்கலாமென்றே பாதுகாப்புக்காக இந்த விடயம் தெருவிக்க பட்டிருந்தது. தமிழ் தலைமைகளின் மீதுள்ள நம்பிக்கையீனம், பலவீனம், பிரதேசரீதியான கசப்புணர்வுகள் என இன்றைய எமது தமிழ் சமூகத்தின் பலவீனமான நிலையில் இந்தவிடையத்த கையில் எடுத்து வெற்றி காண்பதென்பது கிழக்கு மாகாண தமிழ், முஸ்லீம் மக்கள் கிழக்கு மாகாணம் பிரிந்தே இருக்க வேண்டுமென்பதில் பெரும்பாலானோர் நிலைபாடாக இருக்கும் நிலையில், கிழக்கு மாகாணத்தை பிரதிநித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லீம் தலைமைகள் இணைப்புக்கு இணங்காதவரை சாத்தியமில்லாத விடயமே.

இந்த நிலையில் கிழக்கு மாகாண அரசியல் தலைமைகள் பலமாக உள்ளனவா என்கிற கேள்வி கிழக்குமாகாண மக்களிடையே பரவலாக காணப்படுகின்றன. இன்றைய நிலையில் சந்திரகாந்தன் , முரளிதரன், அரியநேந்திரன், சிவகீதா, துரைரெத்திணம் போன்ற தலைமைகள்தான் அல்லது அவர்களை சார்ந்தவர்கள்தான் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தை பிரதிநித்துவப்படுத்தப் போகின்றனரா? இன்றைய காலகட்டத்தில் இவர்கள் மீது இவர்கள் செயட்பாடுகள் மீதும் சரி பிழைகள் நிச்சயமாக இருக்கின்றன. இந்நிலையில் கிழக்கை பிரதிநிதுத்துவப்படுத்து இவர்களுக்கும் நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. கிழக்குக்கான புதிய பல திறமையான அரசியல் வாதிகளை உருவாக்க வேண்டியதும் இனங்காட்ட வேண்டியதுமான பொறுப்பு கிழக்கு மாகாண அரசியல்வாதிகளுக்கும் கிழக்குமாகாண மக்களுக்கும் இருக்கின்றது. இனி இலங்கையின் எதிகாலமேன்பது மாகாண சபைகளை மையப்படுத்தியதாகவே பொருளாதாரமும், நிர்வாகமும் செயட்படவேண்டி இருக்கும். அந்த நோக்கிலான கருத்துக்களே இலங்கை அரசு பக்கம் இருந்து
வந்து கொண்டிருக்கின்றன. கிழக்காக இருந்தாலும் சரி வடக்காக இருந்தாலும் சரி அவை நிர்வாக ரீதில் பிரிந்தே இன்ருப்பதே இன்றைய நிலையில் சாத்தியமானதாக தோன்றுகிறது. அதே நேரம் நிர்வாக ரீதியில் பிரிந்திருந்தாலும் சிறுபான்மையினர் என்ற ரீதியில் வருங்காலத்தில் வடமாகாண சபையும் கிழக்குமாகாண சபையும் பல விடையங்களில் ஒன்றாக குரல்கொடுக்கவும், இணக்கப்படுகளுடன் பல விடயங்களில் செயற்படவும் வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. அகவே மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களுடனான, இன உறவுகளை மேன்படுத்தகூடியதும், சிறுபான்மையினருக்கு கூடுதல் பாதுகாப்புடன் கூடியதான அதிகாரங்கள், தீர்வுகள் பற்றி பேச ஆரம்பிப்பெதேன்பது இலங்கை அரசிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான தீர்வாக அமையலாம்.
 
அடுத்த வருடம் வடக்கு மாகாணசபை தேர்தல் நடத்தப்படவிருக்கும் நிலையில். புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாடென்ன?, யாரெல்லாம் போட்டியிட போகிறார்கலேன்று பார்க்கலாம். இதில் தற்போதைய அமைச்சர் டக்லஸ் தேவானந்தவா இல்ல சுரேஷ் பிரேமச்சந்திரனா, மாவை செனாதிராஜாவா, (சம்பந்தரையாவை விடுவார்களா?) , முன்னாள் வட – கிழக்கு முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாலா, இல்லை இவர்களையும் தாண்டி கே .பி எனும் குமரன் பத்மாநாதனா வட மாகாணசபையின் முதலமைசராகிராறேன்று பொறுத்திருந்து பார்போம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • மாயா
    மாயா

    வடக்கும் கிழக்கும் பிரிந்தே இருக்க வேண்டும். அதுவே நியாயமானது.

    Reply
  • விளங்காமுடி
    விளங்காமுடி

    ஊடால திருகோணமலையை எடுத்து, வடக்கு, கிழக்கு என்று வகிடெடுத்தால் இன்னும் பிரமாதமாய் இருக்கும். பிரிவினை கேட்பது, இன்னும் இலங்கையில் தடை செய்யப்படவில்லையா?
    குருவாயூரப்பா! மகிந்தவும் டக்ளசும் சேர்ந்திருக்கலாம், பிள்ளையானும் கேபியும் தள்ளி இருக்க வேணுமோ?

    Reply
  • மாயா
    மாயா

    விளங்காமுடி, இது தமிழீழம் போன்ற பிரிவினை அல்ல. மாகாணங்களுக்கான அலகுகள். இலங்கையை விட சிறிய சுவிசில் 27 கன்டோன்கள் (மாவட்டங்கள்) இருக்கின்றன. இதுவும் ஒருவித பிரிவுதான். ஆனால் ஒற்றை ஆட்சிக்குள் தமது பகுதியை தாமே ஆளும் அலகுகள். ஒரு பகுதியின் தேவை போல இன்னொரு பகுதியின் தேவை இருக்காது. எனது பகுதியை எங்கோ உள்ள ஒருவர் ஆளுவதை விட ; நாம் ஆளுவதே சிறப்பு. இதன் பெயர் பிரிவினை அல்ல.

    யாழ்பாணத்தவர்களுக்கோ அல்லது கொழும்பில் உள்ளவர்களுக்கோ மட்டக்களப்பின் தேவை புரியாது. அது போல கொழும்பு மட்டக்களப்பில் உள்ளவர்களுக்கு யாழ்பாணத்தின் தேவை புரியாது. வடக்கு கிழக்கில் வாக்கு வாங்கி விட்டு கொழும்பில் வாழ இப்படியான முறைகளால் முடியாது. எனவே சிறீலங்கா ஏற்கனவே பல முதலமைச்சர்களை கொண்டுள்ளது.

    இதோ:

    Current Chief Ministers
    ——————-
    Central Province
    Hon. Sarath Ekanayake

    Eastern Province
    Hon. Sivanesathurai Chandrakanthan

    North Central Province
    Hon. Berty Premalal Dissanayake

    Northern Province
    Direct rule from Colombo

    North Western Province
    Hon. Athula Wijesinghe

    Sabaragamuwa Province
    Hon. Maheepala Herath

    Southern Province
    Hon. Shan Wijayalal De Silva

    Uva Province
    Hon. Shashindra Rajapaksa

    Western Province
    Hon. Prasanna Ranatunge

    -http://en.wikipedia.org/wiki/Chief_Minister_of_Sri_Lanka

    Reply