குறிக் காட்டுவான் – நெடுந்தீவு மக்களுக்கான புதிய படகுச் சேவை ஒன்றை ஈடுபடுத்துவதற்காக கொழும்புத் துறைமுக டொக்யாட்டில் படகு ஒன்று நிர்மாணிக்கப்படம்டு வருவதாகவும், சுமார் எட்டு இலட்சம் ரூபா செலவில் இது நிர்மாணிக்கப்படுவதாகவும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும், சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளையடுத்தே இப்படகு உருவாக்கப்பட்டு வருவதாகவும் வெகு விரைவில் இப்படகு சேவையிலீடுபடுத்தப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.