தற்பாலினர் வெறுப்புக்கு (Homophobia) எதிரான கருத்துரைப்பும் கலந்துரையாடலும்

Homophobia_Erase_the_HateGay / Lesbian / Trans_gender ற்கு எதிரான பல்வேறு வகையான கருத்துக்கள் இயல்பாக்கப்படுவதும் (Normalizing Discourses), அவர்களது தெரிவுசார் உரிமைகள் மறுக்கப்படுவதும், சமூகத்தின் அங்கத்தவர்களாக அவர்களது இருப்பு தொடர்ந்தும் ஒடுக்கப்படுவதும் தமிழ்ச்சமூகத்தில் நீண்டகாலமாக நிலவிவருகிறது. பரவலான இக்காழ்ப்புணர்வுக்கு எதிராக எமது எதிர்க்குரல்களைப் பதிவு செய்தல் அவசியமாகின்ற இந்தவேளையில்….

பொது ஊடகங்கள் சிலவும் இக்காழ்ப்புணர்வு முழுத் தமிழ்ச் சமூகத்தின் நிலைப்பாடு என்ற பிரமையை ஏற்படுத்த முயல்கின்றன. ஊடகங்கள் தம் விழுமியங்களைத் தவறுவதைச் சுட்டிக்காட்டவும், எமது தன்னிலையை சுயவிமர்சனம் செய்யவும், விளிம்புநிலையாக்கம் (Process of Marginalization) குறித்தான விவாதங்களை மேற்கொள்ளவும்….

நாங்களும் நீங்களுமாய் ஓர் உரையாடலுக்கான பொதுக்களத்தில் சந்திப்போம்

Where: Scarborough Civic Centre
150 Borough Road
(McCowan & Ellesmere)

When: Friday, November 19, 2010
At 6.00 PM

Friends Aganinst Homophobia
416 725 4862 / 647 829 9230/ 416 841 6810
email: friendsagainsthomophobia@gmail.com

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • meerabharathy
    meerabharathy

    to read more about it….
    I am a Tamil Queer
    CTBC வானொலி விளம்பரம், அதன் பின்பான சர்ச்சைகளை முன்வைத்து
    -http://www.kiruthikan.com/

    …மூன்றாம் பாலினர் பற்றிய சில வாசிப்புகள், உயிர்மை மற்றும் கருத்துக் கந்தசாமிகள் – அருண்மொழிவர்மன்
    -http://solvathellamunmai.blogspot.com/2010/07/blog-post.html

    நேர்காணல் – “சினேகிதன்கள்” மற்றும் நான் – கறுப்பி
    -http://www.penniyam.com/2010/10/blog-post_11.html

    More sex, Gender, and sexual orientation Identities- A Reality
    -http://awakeningawareness.blogspot.com/

    காமம், பாலுறவுகள், சமூகம் மற்றும் குழந்தைகளும், வாலிப வயதினரும் – ஒரு பார்வை
    -http://meerabharathy.wordpress.com/

    குழந்தைகள் அனுபவிக்கும் வறுமை கல்வியின்மை மற்றும் சுய பால் (sex) மற்றும் மனித பால் தன்மை (gender) அடையாளங்கள்; போன்ற பிரச்சனைகளும் இக் குழந்தைகளில் உளவியல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. இவ்வாறான அனுபவங்களை நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் அனுபவித்திருப்போம். இதை யாரும் மறுக்கமுடியாது. ஏனனில் நாம் வாழுவது ;ஆணாதிக்க இருபால் உறவின் மேலாதிக்கம் (patriarchal heteronormative hegemony) நிலவுகின்ற ஒரு சமூகம்.

    இந்த சமூகத்தில் காமம் பாலியல் மற்றும் அது தொடர்பான அறிவுகளும்; மற்றும் சாதாரண அல்லது பேராசிரியர் ஸ்டேரிலிங் (Anne Fausto-Sterling) குறிப்பிடும் பொதுவான சமூகத்திற்கு (normative society) அப்பாற்பட்ட பால்> பால் தன்மை மற்றும் பாலியலுறவு அடையாளங்களை (identites) கொண்ட பிற மனிதர்களும் (hem. mem, trans, gays, lesbians, and bisexuals) என அனைத்தும் அடக்கப்படுகின்றன. இந்த மனிதர்கள் சாதாரண சமூகத்திற்கு (normative society) ஏற்றவாறு நெறிப்படுத்தப்பட்டு பொதுவான அடையாளங்களான ஆண் (man) பெண் (woman) ஆண்மை (masculine) பெண்மை (feminine) என்பன இரு துருவங்களாகக் கட்டமைக்கப்பட்டு (constructed) அமுல்படுத்தப்பட்டு வழிநடாத்தப்படுகின்றனர். உண்மையில் பெரும்பாலன மனிதர்கள் சமூகம் கட்டமைத்தவாறு இரு துருவங்களாக இல்லை (not polar opposite). மாறாக இந்த எதிர் துருவங்களுக்கு இடைப்பட்ட தொடர்ச்சியின் (continuum) பல இடங்களில் இருக்கின்றனர் என யூடித் பட்லர் (Judith Buttler) போன்ற பல பெண்ணியவாதிகள் வாதிடுகின்றார்கள். ஆனால் இந்த சமூகமானது மனிதர்களின் பாலியலுறவானது இரு துருவங்களிலும் இருக்கின்ற ஆணுக்கும் பெண்ணிற்கும் இடையில் மட்டுமே நடைபெறுகின்ற (heteronormative) ஒரு உறவாகவும்; அதுவே இயற்கையானது என்றும் மேலதிகமாகவும் ஒன்றைக் கட்டமைக்கின்றது. இதன் மூலம் மனிதர்களின் விருப்பங்கள் ஆசைகள் கூட ஒழுங்கமைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன. அதேவேளை இத் துருவங்களிக்கிடையில் இருக்கின்ற மனிதர்களை இத் துருவங்களை நோக்கி நகர்த்துகின்றனர் அல்லது அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டு புறக்கணித்து அடக்கப்படுகின்றனர் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக கணிக்கப்பட்டு இல்லாத ஒரு நோய்க்கு வைத்தியம் பார்க்கின்றனர். இவற்றையெல்லாம் மேற்கொள்வதற்கு பூக்கோ (foucault) கூறுவது போல் பல்வேறு ஆணாதிக்க சமூக நிறுவனங்களான குடும்பம், பாடசாலை, சமயங்கள், இராணுவம், மற்றும் சிறைச்சாலைகள் மூலமாக நிறைவேற்றுகின்றன. இதனால்தான் பெண்ணியவாதிகள் ஆணாதிக்க சமூகத்தைக் கட்டிக்காப்பதில் ஒருதார இருபாலுறவு (monogamous heteronormative relationship) மிக முக்கியமான பங்கை வகிக்கின்றது எனக் கூறுகின்றனர். உதாரணமாக எழுத்தாளர் இளங்கோ (DSe) தனது வலைப்பதிவில் சுமார் 660 000 அமெரிக்க இராணுவத்தினர் தமது பாலியல் தன்மைகளை மறைத்து வாழ்கின்றனர் என குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. அதாவது ஜனநாயகம் மற்றும் பாலியல் சுதந்திரம் ஒப்பிட்டளவில் இருப்பதாகக் கூறப்படும் வட அமெரிக்காவிலையே இப்படியான நிலைமை எனின் பிற நாடுகளின் நிலைமைகளை உணர்ந்து கொள்ளலாம்.
    to read the rest

    Reply