நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் சிங்கள குடும்பங்கள் குடியேறி கொட்டில்களை அமைத்துள்ள நிலையில், மிகுதியாகவுள்ள காணிகளில் யாழ்ப்பாண மக்கள் சென்று கைப்பற்றியுள்ளனர்.
நாவற்குழியிலுள்ள குறித்த காணியில் கடந்த 10ஆம் திகதி இரவோடிரவாக யாழ்.புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த 70 சிங்களக் குடும்பங்கள் குடியேறி கொட்டில்களையும் அமைத்துள்ள நிலையில் நேற்று சனிக்கிழமை சாவகச்சேரி மற்றும் குருநகர் பகுதி மக்கள் சென்று எஞ்சிய நிலப்பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வேளையில் சிறிது பற்றம் நிலவிய போதும் சிங்கள மக்கள் பிடித்து வைத்திருக்கும் நிலங்களைத் தவிர்த்து ஏனைய இடங்களை தமிழ்மக்கள் பிடித்துக்கொண்டனர்.
தற்போது 50 வரையிலான கொட்டில்களை சிங்களக் குடும்பங்கள் அமைத்துள்ளன. ஆனால், 50 இற்கும் மேற்பட்ட கொட்டில்களை தமிழ்மக்கள் அமைத்துளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Hira
வன்னியிலிருந்தும் வாழ இடம் இல்லாத தமிழர்கள் வந்து தமக்கு விரும்பிய இடங்களில் இதுபோன்று குடியேறிக்கொள்ள வேண்டும் இவர்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் உதவிகள் புரிய வேண்டும்
Rohan
//வன்னியிலிருந்தும் வாழ இடம் இல்லாத தமிழர்கள் வந்து தமக்கு விரும்பிய இடங்களில் இதுபோன்று குடியேறிக்கொள்ள வேண்டும் இவர்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் உதவிகள் புரிய வேண்டும்// அடாத்தாக, you mean?