யாழ். நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் காணியில் அத்துமீறிக் குடியமர்ந்துள்ள சிங்கள மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அம்மக்கள் அங்கிருந்து வெளியேற நடவடிக்கை எடுக்குமாறு தன்னை ஜனாதிபதி பணித்துள்ளதாக பாரம்பரிய மற்றும், சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றை ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்தும் போது இதனை அவர் தெரிவித்தார். தான் இவ்விடயம் தொடர்பாக அம்மக்களை சந்தித்து கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மாறாக அத்துமீறி குடியேறுவது தடுக்கப்படல் வேண்டும் எனவும், சிங்களவர்களாக இருந்தாலும் தமிழர்களாக இருந்தாலும் அது தவாறான செயல் எனவும் அவர் குறிப்பிட்டாhர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த ஜே.வி.பியினரின் நோக்கம் சரியா பிழையா என்பதற்கப்பால் அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தமை கண்டிக்கப்படவேண்டிய ஒன்று எனவும் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தா குறிப்பிட்டார்.
rohan
ரொம்ப ஈசி, கபிலனாத் வழக்குக்கு முதல் நீதிபதி வீட்டுக்குப் போன குரூப்பை அனுப்பினாப் போச்சு!