யாழ். பல்கலைக்கழகத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர் நேற்று புதன்கிழமை யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை உலகின் முதற்தரப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உயர்த்தவுள்ளதாக அவர் தெரிவித்தார். மாணவர்களுக்கு இரு விசாலமான விடுதிகள் விரைவில் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் யாழ்.பல்கலைக்கழகத்தின் அழகியல், கலைத்துறையினை தனியொரு பீடமாக்க திட்டமிட்டுள்ளதாகவம், பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் மாணவர்கள சிறந்த அங்கில அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆங்கில மொழிக் கல்வியை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டள்ளது எனவும் அத்துடன் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்தல், பல்தேசிய ஆளுமை மிக்கதான கற்கை நெறிகளை அறிமுகப்படுத்தல் என பல்வேறு திட்டங்கள் குறித்தும் அவர் தெரிவித்தார். பல்கலைக்கழக பரீட்சை முறையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.