யாழ்ப் பாணத்தில் வெடிபொருட்கள் அகற்றும் பணியிலீடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நேற்று தவறுதலாக இடம்பெற்ற வெடிவிபத்தில் படுகாயமடைந்தார். நேற்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. யாழ்.பொன்னாலை பாண்டவெட்டை என்ற இடத்தில் மிதிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இவ்விபத்து ஏற்பட்டது.
கண்ணிவெடியகற்றும் நிறுவனமான ‘ஹலோ ட்றஸட்’ நிறுவனத்தில் பணியாற்றும் குருநகரைச் சேர்ந்த நிசாந்தன் எட்மன் பீரிஸ் என்ற 22 வயது இளைஞரே படுகாயமடைந்தவராவார். இவர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
கண்ணிவெடியகற்றும் நிறுவனமான ‘ஹலோ டறஸ்ட்’ இல் போரினாலும் வறுமை நிலையினாலும் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளே அதிகளவில் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.