யாழ். உரும்பிராய் சந்தியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார். இவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் மினிபஸ் ஒன்றுடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டது.
சபாபதிப்பிள்ளை வீதி, சுன்னாகம் என்ற முகவரியைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன் (வயது 30) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார். இவரோடு மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்த எஸ்.கோபு (வயது30) என்ற இளைஞர் படுகாயமுற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.