போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் முதற்கட்டமாக ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இந்த ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்திய வீடமைப்பு மற்றும், வறுமை ஒழிப்பு அமைச்சின் நிர்வாக்தின் கீழ் இயங்கும் இந்துஸ்தான் பிறீபப் என்ற நிறுவனமும் இலங்கை அரசாங்கமும் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.