முன்னாள் ஜரிவி ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டார்!

Sundar_Journalistஇவ்வாரம் இலங்கை சென்றிருந்த ஊடகவியலாளர் கார்திகேயன் திருலோகசுந்தர் (சுந்தர்) கொழும்பில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளார். விமான நிலையத்தில் இலங்கைப் புலனாய்ப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர் நேற்று மாலை (நவம்பர் 18 2010) விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

சுந்தர் ஈரிபிசி வானொலியில் பணியாற்றி வந்தவர். அதன்பின் தீபம் தொலைக்காட்சியில் சிறிதுகாலம் பணியாற்றியவர். மார்ச் 19 2008ல் சுந்தரை வேலை நீக்கும் கடிதத்தை தீபம் தொலைக்காட்சி வழங்கியது. இதற்கு முன்னர் தீபம் தொலைக்காட்சிக்கும் சுந்தருக்கும் இடையே குற்றச்சாட்டுகளும் முரண்பாடுகளும் வாக்குவாதமும் ஏற்பட்டு இருந்தமை லண்டன் குரல் இதழ் 23 (மார்ச் – ஏப்ரல் 2008) ல் வெளிவந்திருந்தது.

அதன்பின்னர் சுந்தர் ரிரிஎன் – ஜரிவி தொலைக்காட்சியில் பணியாற்றி இருந்தார். தற்போது ஜிரிவி இன் முக்கிய நிகழச்சித் தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சி வழங்குனராகவும் உள்ள தினேஸ்குமாரும் தீபம் தொலைக்காட்சியில் இருந்தே ரிரிஎன் – ஜிரிவி தொலைக்காட்சிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிரிவி இலும் சுந்தர் நீண்டகாலம் நிலைக்கவில்லை. ஜிரிவி இல் சம்பளம் வழங்கப்படாத காரணத்தினால் சிலர் அத்தொலைக்காட்சியில் இருந்து விலகிய போது சுந்தரும் அதன் காரணமாக வெளியேறினார். அதன் பின்னர் தற்போது வடக்கின் வசந்தத்தில் யாழ்ப்பாணத்தில் ஹொட்டல் கட்டிவருகின்ற ஆணிவேர் படத் தயாரிப்பாளர் திலகராஜாவின் உணவகம் ஒன்றில் முகாமையாளராகக் கடமையாற்றினார்.

இலங்கைக்கு தனது தாயை பார்க்க சென்ற பொழுதே விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். ஜிரிவி இல் பணியாற்றியது தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. இருப்பினும் இவர் நீண்ட காலத்திற்கு முன்னரேயே ஜிரிவி யை விட்டு வெளியேறியதும் மற்றும் அரசுசார்பானவர்கள் மத்தியில் இருந்து வந்த வேண்டுகோள்களை அடுத்தும் இவர் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 Comments

  • மாயா
    மாயா

    இவர் புலிகளில் இருந்து ; புலிக் காசை தூக்கிக் கொண்டு ஓடி வந்தவர். இவரது ஆயுதத்தையும் ஒப்படைக்காமல் ஓடி வந்ததாக புலிகளில் குற்றச் சாட்டு உள்ளது. புலிகள் இலங்கை சென்று திரும்பி வருகிறார்கள் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.

    Reply
  • karuna
    karuna

    அப்ப கருணா அம்மான் பழைய காசுக்கணக்கு கேட்கவே பிடிச்சவர்!

    Reply
  • மாயா
    மாயா

    அனைத்து தமிழ் செய்திகளும் ; இவர் கைதானதாக சொல்கின்றனவே தவிர விடுவிக்கப்பட்டதை சொல்லவேயில்லை. இதுதான் இவர்களது தன்மை.

    Reply
  • ashroffali
    ashroffali

    கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழ் மக்களை இலக்காக் கொண்ட தனிப் புலனாய்வுக்குழுவொன்று முகாமிட்டிருப்பதை நாங்கள் பல தடவைகள் எச்சரித்துள்ளோம். பல ஊடகங்களிலும் அச்செய்திகள் வெளிவந்துள்ளன. அதன் பின்னும் சம்பந்தப்பட்டவர்கள் அதனைக் கவனத்திற் கொள்ளவில்லை அல்லது இன்னும் நாங்கள் சொல்வதை நம்பவில்லை என்பதையே மேற்கண்ட கைது எடுத்துக் காட்டுகின்றது.

    எப்படியிருந்த போதிலும் ஊடகவியலாளர்கள் என்போர் கருத்துச் சுதந்திரம் உடையவர்கள். அந்த வகையில் இந்தச் சம்பவம் குறித்து ஒரு சக ஊடகவியலாளன் என்ற வகையில் நான் என் கண்டனங்களைப் பதிவு செய்து கொள்கின்றேன்.

    Reply
  • thurai
    thurai

    இவரை எப்படி விடுவித்தார்களென்பதை அறிந்து மற்ரும் புலிகழும் இலங்கை போய் தப்பி வருவார்கள். இதனை புலியின் ஊடகங்கள் பரமரகசியமாகவே வைத்திருக்கும்.– துரை

    Reply
  • Pro-LTTE
    Pro-LTTE

    இவர் புலிகளின் அனைத்துலக வானொலி ஜ.பி.சியில் வேலை செய்து வருபவர். இரவு நேரத்தில் புலிகளின் கேணல் தீபனின் உறவினனின் லங்காசிறி இணைய வானொலியில் தனது இயக்க பெயரான நிரோசன் என்ற பெயரில் ஒலிபரப்பு செயப்பவர். இவர் ஒரு போராளி. புலிகளின் பாசறையில் ஆயுத பயற்சி எடுத்தவர். இயக்க பெயர் நிரோசன். இவர் எவ்வாறு உடனடியாக விடுதலையானார்? இவர் எவ்வாறு கைது செய்யப்பார்? இவரை கொழும்புக்கு செல்லுமாறு கூறியது ஆர்? இவர் புலிகளின் ஜி.ரி.வியிலும் வேலை செய்தவர். மாவீரர் நாள் கொண்டாட கொழும்பு ஊடாக இவரை வன்னிக்கு ஜரோப்பிய புலிகள் அனுப்பியதாக தெரியவருகிறது. சரி லங்காசிறி இணையம் தனது புலி முகவரை ஏன் கைது செய்தபிறகும் விடுதலை செய்தபின்பு கைது என்று செய்தி போட்டது? எனக்கு ஒண்டுமா புரியது இல்லை? இவர் எவ்வளவு காலம் கொழும்பில் நிப்பார்? எங்கு நிப்பார்? இவருக்கும் அரசுக்குமான உறவு என்ன? என்ன நிபந்தனையில் விடுதலையானார்? ஏன்ன தகவலின் அடிப்படையில் கைதானார்? ஆர் காட்டி கொடுத்தது? இவர் சிறையிடப்படுவாரா?

    Reply
  • BC
    BC

    //மாயா – இவர் கைதானதாக சொல்கின்றனவே தவிர விடுவிக்கப்பட்டதை சொல்லவேயில்லை. //
    விடுதலை செய்யப்பட்டதை சொல்லாமல் கிக்கில் வைத்திருப்பது தான் லாபமானது. விடுதலை செய்யப்பட்டதை தெரிவிக்கும் தகவல்கள் நாடுகடந்த தழிழீழ அரசுக்கு எதிராக இலங்கை அரசுக்கு துணை போவதாக அமைந்துவிடும் என்று தமிழ் முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //மாயா – இவர் கைதானதாக சொல்கின்றனவே தவிர விடுவிக்கப்பட்டதை சொல்லவேயில்லை. விடுதலை செய்யப்பட்டதை சொல்லாமல் கிக்கில் வைத்திருப்பது தான் லாபமானது….//

    அதே போல கள்ளப்பொம்பிளைக்கதைகளையும் கட்டவிழ்த்துவிட்டதும் ”கிக்கில்” வைத்திருக்க தமிழ் முக்கியஸ்தர்கள் சொல்கிறார்கள் எனவும் கேள்விப்பட்டேன் உண்மையா மாயா?

    Reply
  • மாயா
    மாயா

    சாந்தனுக்கு “கிக்காக” இருக்கிறதா? இல்லாமலா என்ன? அங்கே அப்பாவிகள் சாகும் போது கிக்கில் இருந்தவர்களல்லவா புலத்தில். இவை அனைத்தும் ஒரு வித வெறிதான். உங்களைப் போன்றவர்களுக்கு?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…உங்களைப் போன்றவர்களுக்கு?…//
    அப்போ எனக்கு ‘கிக்’ ஏற்றவா சுவிஸ் கள்ளப்பொம்பிளைக்கதை சொன்னீர்கள். பின்னர் ‘கிக்’ போதும் என்பதனால் தேசம் அவற்ரைத் தணிக்கை செய்ததா? அங்கே சாகிறார்கள் எனும் நீங்கள் கருத்தெளுதும் போது யாரோ ஒருவரின் கள்ளப்பொம்பிளைக் கதைகளில் அக்கறை காட்டினீர்களாக்கும்?

    Reply