Wednesday, September 29, 2021

தமிழ்பேசும் மக்கள்: அடையாள இருட்டடிப்பு – இலங்கை முஸ்லீம்கள் சோனகர்.: நிஸ்தார் எஸ் ஆர் எம்

Mohamed S R Nisthar1948ல் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து நீறுபூத்த நெருப்பாய் இருந்து வந்த இன அடக்குமுறையும் அதற்கெதிரான போராட்டமும் 1983இல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இரண்டு தசாப்தங்கள் தாண்டி இன்று இந்த இனப்பிரச்சினைத் தீ அணைந்து போகப் பலரும் பல வழிகளிலும் முன்னின்றுழைப்பது மகிழ்ச்சி தருவதாய் இருந்தாலும் இனப்பிரச்சினையின் உச்சகட்ட காலங்களில் ஆங்காங்கே முளைவிட்ட ஒரு கேள்வி இப்போது மரமாகிக் கிளை பரப்பியுள்ளது. இது பெரு விருட்சமாகி புதிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்காமல் இருக்க தேவைக்கேற்ப அழகாய், அளவாய் கத்தரித்து பராமரித்து வளர்க்கப்பட வேண்டுமா என்ற கேள்வியும் மிகத் தெளிவான குரலில் ஓங்கி ஒலிக்கின்றது.

பல்லின மக்களைக்கொண்ட இலங்கைத் தீவில் இனப்பிரச்சினையைத் தீர்க்க சிங்கள இனத்தின் சார்பில் இலங்கை அரசும் (ஜனாதிபதி நீங்கலாக) தமிழினத்தின் சார்பில் தமிழீழ விடுதலைப்புலிகளும் (வேறு யாரும் சேர்க்கப்படாமல்) பிரதிநிதிகளாகச் செயற்படுவதால் இலங்கையில் இரண்டு இனங்கள் மட்டும் தான் உள்ளன என்பதோ அல்லது வேறு இனங்களுக்கு அரசியலை அடியொட்டியதான பிரச்சினைகள் இல்லை என்பதோ பொருளல்ல. தவிர, போரிட்ட இரண்டு இனங்களும் ஏதோ வொரு தீர்வை அடைந்தால் அது எல்லா இனங்களையும் திருப்திப்படுத்தும் என்ற உத்தரவாதமுமாகாது. ஏனெனில் இலங்கையின் இன்னுமொரு சிறுபான்மையினம் தொடர்பான அதன் அடையாளப் பிரச்சினையில் சில சிக்கல்கள் இருப்பதால் இனப்பிரச்சினை தொடர்பாக அதன் பங்களிப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

“இலங்கை முஸ்லிம்கள்” என்போரே இந்தப் புதிய பிரச்சினையின் கருப்பொருளாகும். 1990இல் நடந்த இரண்டு முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் இந்தப் புதிய பிரச்சினைக்கான தீர்வொன்றின் தேவையை உணர்த்தியது. இதில் 1வது, கிழக்கிலங்கையில் தொழுகை நேரத்தின்போது வயதுபேதமின்றி சிறியோர் முதல் தள்ளாடும் வயதினர்வரை நூற்றுக்கு மேற்பட்டோர் மசூதிக்குள் வைத்து புலிகளால் ஒரே நேரத்தில் காரணமின்றிச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம். 2வது அதே ஆண்டில் யாழ், மன்னார், முல்லைத்தீவு ஆகிய தமிழ் – முஸ்லீம் பூர்வீக பகுதிகளிலிருந்து பலாத்காரமாக ஒரு சில மணிநேரத்தில் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டமை.

மேற்படி இரண்டு சம்பவங்களில் இருந்தும் எழும்பிய புதிய கேள்விகள் இக்கட்டுரையின் அடிப்படைப் பிரச்சினையாகிய “சிறுபான்மையினம்” என்ற பதப்பிரயோகத்தின் சரியான விளக்கமொன்றின் தேவையை உணர்த்தி நிற்கின்றது.

இந்த “முஸ்லிம்களை” விடுதலைப்புலிகள் “தமிழ் பேசும் மக்கள்” என்ற பதப்பிரயோகத்தின் கீழ் அடக்கித் தாம் இனப்பிரச்சினை விவகாரத்தில் “தமிழ் பேசுவோரின்” பிரதிநிதிகள் என்றும், தமிழர்களுக்கும் சிங்களவருக்கும் இடையில் ஏற்படும் தீர்வும் உடன்பாடும் “தமிழ் பேசுவோர் எல்லோருக்குமான தீர்வே” என்ற நிலைப்பாட்டையும் கொண்டுள்ளனர். புலிகளின் இந்த நிலைப்பாட்டிற்கு வலிமை சேர்ப்பது போல் இலண்டனில் மையம் கொண்டுள்ள தமிழ் வானொலிகளும் பத்திரிகைகளும் இலங்கை முஸ்லீம்கள் தொடர்பாக எந்தவித விளக்கமுமின்றி “இஸ்லாமியத் தமிழர்” என்றும் “தமிழ் பேசும் முஸ்லீம்கள்” என்றும் இந்த இனத்தை அடையாளப்படுத்துகின்றனர்.

ஓரு இனம் தொடர்பான மேற்படி அனைத்து பதப்பிரயோகங்களும் அரசியல்ரீதியில் தெளிவை ஏற்படுத்தாதது மாத்திரமின்றி பிற்காலத்தில் புதிய பல பிரச்சினைகளையும் தோற்றுவிக்கக் கூடியதாகவே உள்ளன.

விடுதலைப்புலிகளின் “தமிழ் பேசும் மக்கள்” என்ற பதம் இனபேதமின்றி தமிழ் பேசும் மக்கள் எல்லோரினதும் நலன்களையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதாக அமைந்திருக்க வேண்டும். அப்படியானால் 1990இல் நடந்த துயரச் சம்பவங்களும் இதுபோன்ற சிறிய அளவிலான குரங்கு பாஞ்சான், ஏறாவூர், மூதூர் போன்ற இடங்களில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும், இனித் தொடரப் போகும் சம்பவங்களுக்கும் விடுதலைப்புலிகளின் சார்பில் சராசரி மனிதர்தானும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கங்கள், நியாயங்கள், உத்தரவாதங்கள் எதுவுமே இல்லை.

எனவே “தமிழ்பேசுவோர்” என்ற சொற்பிரயோகம் நடைமுறையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பது மிகத்தெளிவு. மேலும் “தமிழ் பேசுவோரின்” பிரதிநிதிகள் தான் புலிகள் என்றால் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் (SLMC) உடனான ஒப்பந்தம் ஏன் செய்யப்பட்டது? அது எதுகுறித்துச் செய்யப்பட்டது என்ற கேள்விகளுக்கப்பால் அப்படியொரு உடன்படிக்கை தேவையும் இல்லாதது. (ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் தெளிவாகப் பகிரங்கப் படுத்தப்படவில்லை). ஆகவே தமிழரும் முஸ்லீம்களும் அரசியல்ரீதியிலும் வேறுபட்டவர்கள் என்பது மிகத்தெளிவு.

மறுபுறத்தில் பொதுசனத் தொடர்பு சாதனங்கள் கூறும் “இஸ்லாமியத் தமிழர்”, தமிழ் பேசும் முஸ்லீம்கள், என்ற பதப் பிரயோகங்களும், மயக்கம்தரும் பண்புகளையே கொண்டுள்ளன. ஏனெனில் தமிழ் இனத்தில் உள்ளவர்கள் “சைவத் தமிழர்” என்றோ, “கிறிஸ்தவத் தமிழர்” என்றோ மதரீதியில் அடையாளம் காணப்படுவது இல்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சைவர்களும் கிறீஸ்தவர்களும் (அதன் உட்பிரிவினரும்) இனரீதியில் தமிழரென்றே கொள்ளப்படுகின்றனர். தமிழ் பேசும் சைவர், தமிழ் பேசும் கிறிஸ்தவர் என்று யாரும் அழைக்கப்படாத நேரத்தில் தமிழ் பேசும் முஸ்லீம்கள் என்று மாத்திரம் வரையறைக்குட்படுத்தப்பட்டு உள்ளதைக் காணலாம். இதிலிருந்து தமிழ்பேசும் முஸ்லீம்கள் என்போர் இனத்தால் தமிழர் அல்லர் என்பதோடு மாத்திரம் அல்லாமல் சிங்களம் பேசும் முஸ்லீம்கள் என்போரின் இருப்பையும் உறுதி செய்கின்றது. இது ஒருவகையில் சிங்களம் பேசும் கிறிஸ்தவரின் நிலைபோன்றது.

சிங்களம் பேசும் கிறிஸ்தவரை தமிழ் இனம் உள்வாங்க முடியாது. காரணம் அவர்கள் இனத்தால் சிங்களவர். அதேபோல் தமிழ்க் கிறிஸ்தவர் மதத்தால் சிங்களவர் போன்று கிறிஸ்தவராயினும் இனத்தால் தமிழராகவே இருக்கின்றனர். (இது பேசும் மொழியை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது போல் காணப்பட்டாலும் இது முழுக்க முழுக்க சாரும் இனத்தை அடிப்படையாகக் கொண்டது.) எனவே இங்கு சிங்களம் பேசும் முஸ்லீமை எவ்வாறு சிங்களவர் எனக் கருதக் கூடாதோ, கருத முடியாதோ, அதேபோல் தமிழைப் பேசுவதால் மட்டும் தமிழ் பேசும் முஸ்லீம்களை தமிழர் என்று வரையறுத்துவிட முடியாது.

இந்த இடத்தில் கவனிக்கப்படவேண்டிய இன்னுமொரு விடயம், புதிதாகச் சமயம் மாறுவோர், சமயம் மாறி முஸ்லிமாகவரும் தமிழரும், சிங்களவரும் சமயத்தால் முஸ்லீம் என்பவரே தவிர அவர் இனத்தால் இன்னும் தமிழரும் சிங்களவருமே.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணப் பகுதியில் பௌத்தம் செழிப்புற்றிருந்ததை வரலாறு கூறுகின்றது. அப்போது பௌத்தத்தைப் பின்பற்றிய தமிழர் சமயத்தால் பௌத்தர் என்று இனங் காணப்பட்டதால், அவர்களின் இனம் சிங்களம் என்றாகி விடவில்லை. அவர் அன்றும் இன்றும் என்றும் தமிழரே. அதேபோல் சமயத்தால் முஸ்லிமாக இருக்குமொருவர் சைவராகவோ கிறிஸ்தவராகவோ பௌத்தராகவோ சமயத்தை மாற்றிக்கொண்டாரென்றால் அவர் சைவர், கிறிஸ்தவர் அல்லது பௌத்தரே தவிர அவரின் இனஅடையாளம் தமிழர் என்றோ அல்லது சிங்களவரென்றோ மாறிவிடப் போவதில்லை. அப்படியானால் இங்கு எழும் நியாயமான கேள்வி இந்த இலங்கை முஸ்லீம் என்போர் இனரீதியில் யார் என்பதே.

இதற்கான பதில்

இனப்பிரச்சினைக்கான தீர்வுநோக்கி முன்னேறும் இந்த முக்கியமான வரலாற்றுக் கட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நியாயமானதும் அரசியல் ரீதியில் மிக முக்கியமானதுமான (Politically crucial) விடயம் முஸ்லீம்கள் பற்றிய நிலைப்பாடு ஆகும்.

இக்கட்டத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்யப்படும் தவறுகளும் செய்யத் தவறும் விடயங்களும் நாளைய அமைதியான ஒன்றுபட்ட இலங்கையில் அல்லது சிங்களவர் தமிழர் சுயாட்சிப் பிரதேசங்கள் என்ற அமைப்புக்குள் அல்லது ஸ்ரீலங்கா, தமிழீழம் என்ற இரண்டு இறைமையுள்ள நாடுகளில் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்தை தோற்றுவிக்கும்.

இன்று சிங்கள பேரினவாதம் (மறைமுக) தமிழ்ப் பேரினவாதம் என்பவை மாத்திரமல்ல வளர்ந்து வரும் தனி பௌத்த மதவாதமும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. உலகின் முதல் பிக்குகளாட்சி (Theocracy) ஆட்சிக்கான நாடிப்பிடிப்புகளையும் இந்த இடத்தில் மறுப்பதற்கில்லை. (ஆனால் தமிழரிடையே மதவாதம் வெளிப்படுவதற்கான அறிகுறி அரிதிலும் அரிதாகவே காணப்படுகின்றது).

இலங்கை முஸ்லீம்கள் இன அடையாளம் இல்லாமல் மத அடையாளத்திலேயே தமது அரசியலை நடத்த விரும்பினால் பல இனங்கள் வாழும் நாட்டில் மாறுபட்ட சூழலிலுள்ள ஒரு நாட்டில் அதிலும் நாம் சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாய் வாழும் நாட்டில் சர்வதேசங்களின் கவனம் அதிகரித்து வரும் ஒரு நாட்டில் அது நமது இருப்பையே கேள்விக்குறியாக்கிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

உதாரணமாக விடுதலைப் புலிகளின் முஸ்லீம்கள் தொடர்பான நிலைப்பாட்டை நோக்கும் போது அதில் சந்தர்ப்பவாதம் இழையோடுவதை இலகுவாகக் காணலாம். அவர்களில் தமிழ் பேசும் மக்கள் என்ற நிலையை விடுத்து இப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் முஸ்லீம்களை ஒரு கலாச்சாரக் குழுவாக ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

இந்தக் கலாச்சாரக் குழு என்ற சொற் பிரயோகம், தமிழ் பேசும் மக்கள் என்பதை விடவும் குறைவான நிலை. ஒரு மக்கள் கூட்டத்தில் பல வகையான கலாச்சாரங்கள் பின்பற்றப்படலாம். ஒருவன் உணவு உண்ணும் முறையிலிருந்து நாட்டை நிர்வகிக்கும் விடயங்கள் வரை பலவிதமான கலாச்சாரப் போக்குகளை கடைப்பிடிக்கலாம். இனம் என்ற பரந்த பரப்புக்குள் கலாச்சாரம் என்பது ஒரு சிறு பகுதியே. சரி ஒரு பேச்சுக்காக கலாச்சாரக் குழு என்பதை ஏற்றுக் கொண்டாலும் அக் குழுவின் நிலை என்ன, உரிமைகள் என்ன என்பதற்கு இன்னும் விடை கொடுக்கப்படவில்லை.

இதைவிடவும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுபட்டு ஒரு தலைமையின் கீழ் வரவேண்டும் அதன் பிறகு அவர்கள் தனியான குழுவாக (Entity) பேச்சு வார்த்தை மேசைக்கு வரலாமா என்பது பற்றித் தீர்மானிக்கலாம் என்று கூறியது மிகவும் அவதானத்துக்குரியது.

ஆலோசகர் பாலசிங்கத்தின் அரசியல், கூட்டல் கழித்தல் படி ‘இலங்கை முஸ்லீம்கள் பரம்பரை பரம்பரையாக ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்ந்த அரசியல் நடத்தியவர்கள். 1990களில் துடிப்போடு முன்னேறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) அதன் ஸ்தாபக தலைவர் மறைந்த அஷ்ரஃப்பின் திட்டமிட்ட கொலையின்பின் துண்டு துண்டாகி முஸ்லிம்களின் அரசியல் குரல் அஸ்தமிக்க ஆரம்பித்து விட்டது’ என்பதாகும்.

‘இலங்கை முஸ்லிம்கள் தனியான பிரிவினர் எனவே நாட்டின் இனப்பிரச்சினை தொடர்பான சமாதான முன்னெடுப்புகளில் அவர்கள் பங்குகொள்ள வேண்டியது அவசியம். அதை விடுதலைப் புலிகளாகிய நாங்கள் உத்தரவாதப்படுத்துகிறோம். ஆகவே முஸ்லிம்கள் அதற்கான அதிகாரத்தை அவர்கள் விரும்பும் தலைமைக்கு அல்லது கட்சிக்குக் கொடுக்கலாம்’ என்று பாலசிங்கம் கூறி இருந்தால் அதில் சந்தேகிக்க எந்த விடயமும் இல்லை. இதைவிடுத்து முஸ்லிம்கள் முதலில் ஒன்றுபடுங்கள் (ஒன்றுபடமாட்டார்கள் என்பது அவரது எதிர்பார்ப்பு) அப்புறம் மிகுதியைப் பார்க்கலாம் என்பது இனப்பிரச்சினையின் சமாதானத் தீர்வு பேச்சுவார்த்தைகளில் முஸ்லீம்களுக்குத் தனியிடம் இல்லை என்பதற்கான முன் அறிவிப்பாகும்.

இந்த இடத்தில் கலாநிதி சித்தீக்கின் கூற்றொன்றும் சாலப்பொருந்தும். அதாவது முஸ்லிம்களை விட மிக அதிகமாக தமிழர்களே இன்று பிரிந்து காணப்படுகின்றனர். அவர்களின் பிரிவை பத்துக்கும் மேற்பட்டதாக அடையாளங் காணலாம் என்பதாகும். ஆக, இங்கு எத்தனையாக யார் பிரிந்துள்ளனர் என்பது பிரச்சினையல்ல. பேச்சுவார்த்தைக்கு யார் தகுதியான பிரிவினர் என்பதே முக்கியம். அரசதரப்பு, தமிழர்களே முதலில் ஒன்றுபடுங்கள். அப்புறம் மீதியைப் பார்க்கலாம் என்றால், போர் தொடருமே தவிர அருமையான இந்தச் சமாதான ஒப்பந்த சூழல் இன்று இருந்திருக்காது. என்றும் இருக்காது. ஏனெனில், ஜனநாயக ரீதியில் விடுதலைப் புலிகளின் தலைமையின்கீழ், தமிழர் எல்லோரும் ஒன்றுபடுவதென்பது நடக்க முடியாத விடயம்.

இலங்கையில் முஸ்லிம் என்ற சமயவழிப் பதப்பிரயோகம் இலங்கையின் எதிர்கால அரசியலில் அவர்களை ஒரு தேசிய இனத்தின் அந்தஸ்திலிருந்து கீழிறக்கிவிடும். ஆகவே அவர்கள் தமது இனத்தின் பெயரை தூசுதட்ட வேண்டும்.

இலங்கை முஸ்லீம்கள் சமய அடையாளத்தினூடே அரசியலில் செயற்பட விரும்பினால் நாளை சிங்கள இனத்தின் கிறிஸ்தவர்களும் தமிழினத்தின் கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவர்களின் சிறுசிறு சமயப் பிரிவினரும் (Cult), ஏன் முஸ்லீம்களின் உட்பிரிவினரும் கூட தங்கள் இருப்புக்கான சட்ட அங்கீகாரம் கோரலாம். இலங்கையின் இன்றைய கிறிஸ்தவர், சிங்கள பௌத்தர்களின் உன்னிப்பான அவதானிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். சமயரீதியான நெருக்குவாரங்கள் கிறிஸ்தவர்களுக்கு அதிகரிக்கும்போது அதற்கான நிவாரணமாக முஸ்லீம்களுக்கான பிரத்தியேக ஏற்பாட்டை கிறிஸ்தவர்களும் கோரலாம்.

விடுதலைப் புலிகளும் கூட முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளைத் தட்டிக் கழிக்க தமிழ் கிறிஸ்தவர்களைக் காரணம் காட்டி தமதாட்சியில் ஒரு சமயப் பிரிவினருக்கு மாத்திரம் பிரத்தியேக சலுகை தரஇயலாது எனலாம். நிலைமையை தங்களது அடக்குமுறைக்குச் சாதகமாகவும் பயன்படுத்தலாம்.

இதையெல்லாம் விட மிகப் பயங்கரமான விடயம், விடுதலை புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரான வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சேரலாம். அதிலும் விஷேடமாக அமெரிக்காவுடனோ அல்லது இஸ்ரேலுடனோ அல்லது இரண்டு நாடுகளோடும் சேர்ந்து இலங்கை முஸ்லீம்களை இஸ்லாமியப் பயங்கரவாதிகள் என்று பெயரிட்டு மிக இலகுவாக ஓரங்கட்டி விடலாம். இது அதீத கற்பனை அல்ல. ஏகாதிபத்தியவாதிகளினதும் பேரினவாதிகளினதும் கைவந்த கலை. விடுதலைப் போராட்டம், பயங்கரவாதம், நாட்டு நிர்மாணம், உலக ஒழுங்கு, நாகரீக உலகு என்ற பதப்பிரயோகங்கள் அவரவர்களின் நலன் கருதியே பொருள் வழங்கப்படும்.

ஆகவே நாம் நமது இனப்பெயரில் அரசியல் நடத்துவதே அரசியல் சாணக்கியமாகும் (Political manoeuvring). நமது இனத்தின் பெயர் நமது பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் மிகத்தெளிவாகத் தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. சிங்களத்தில் “யோனக்க” என்றும், தமிழில் “சோனகர்” என்றும் ஆங்கிலத்தில் “மூர் (MOOR)” என்றும் எழுதப்பட்டு உள்ளது. இது எமக்கு இழுக்கல்ல. இது ஒரு காரணப் பெயர். எந்த இனமும் தூய்மையான இனமல்ல. அதனால் மாசுபட்டவர் என்ற பொருளல்ல.

நாம் ஒரு கலப்பினம். ஓன்றில் தமிழ்நாட்டில் காயல்பட்டினம், கீழ்க்கரையில் இருந்து வந்த அரபுக் கலப்புடைய தந்தையருக்கும் இலங்கையின் பெரும்பாலும் தமிழ்த் தாய்மாருக்கும் அல்லது நேரடி அரபுத் தந்தையர்களுக்கும் உள்ளுர் தமிழ், சிங்களத் தாய்மார்களுக்கும் அல்லது அரபு கிழக்கு ஐரோப்பியக் கலப்பில் வந்த தந்தை வழியினருக்கும் உள்ளுர் சிங்களத் தமிழ்த் தாய்மாருக்கும் அல்லது மேற்சொன்ன தந்தைவழி வட ஆபிரிக்கக் கலப்பில் தந்தை வழியினருக்கும் உள்ளுர் தமிழ் சிங்களத் தாய்மார்களுக்கும் இடையே ஏற்பட்ட உறவில் அல்லது திருமணப் பந்தத்தின் வழிவந்தவர்கள் இலங்கைச் சோனகர்கள்.

இந்தச் சோனகர் என்போர் இலங்கையில் மாத்திரம் அல்ல, மொரோக்கோ, தமிழ்நாட்டின் சில பகுதிகள் பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களிலும் வாழ்வதால் இலங்கையில் உள்ளோர் இலங்கைச் சோனகர் (Ceylon Moor) என அழைக்கப்படுக்கின்றனர்.

இலங்கைச் சோனகர்களின் இருப்பு, இஸ்லாம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் முன்பு அல்லது அதன் சமகாலத்தில் ஏற்பட்டது என்பது வரலாறு. ஆக, சோனகர் என்பதை இஸ்லாத்துடன் முழுக்க முழுக்கத் தொடர்புபடுத்தி தமிழரில் இருந்தும் சிங்களவரில் இருந்தும் மதமாற்றம் பெற்றோர் எனச் சில இலண்டன் வானொலிகளும் தமிழ்ப் புத்திஜீவிகளும் கூறிவருவது நிரூபிக்கப்பட முடியாத வரலாற்றுப் பிழை. இலங்கைச் சோனகரின் தோற்றமும் வாழ்வும், அதன் மொழி, கலாச்சாரத் தாக்கங்கள், ஐரோப்பியப் படையெடுப்புக் காலங்களில் அந்த இனம் நாட்டுக்கு ஆற்றிய சேவை என்பன எல்லாம் நீண்ட வரலாறு ஆகும்.

ஆக, இலங்கைச் சோனகர் என்போர் தனித்தவொரு இனம். அவர்கள் ஒரு தேசியம் (Nation). அந்தத் தேசியம் தனது விவகாரங்களைத் தானே கவனிக்கும் சுயநிர்ணய உரிமை (Right to Self Determination) அதற்குண்டு. தேவைப்படின், நிபந்தனைகளுடன் கூட்டுச் சேரவும் (இதுதான் விடுதலைபுலிகள் – முஸ்லிம் காங்கிரஸ் வன்னிச் சந்திப்பும் ஒப்பந்தமும் என்றால் பாராட்டப்பட வேண்டியதே) தனியே பிரிந்து செல்லவும் அதற்கு உரிமையுண்டு.

இந்த உரிமையைத்தான் இதுவரை காலமும் இலங்கையின் பேரினவாத அரசுகள் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இலங்கைத் தமிழருக்கு கொடுக்க மறுத்து வந்தனர். இப்போதும் மறுக்க முயல்கின்றனர். சுயநிர்ணய உரிமையை தமிழர் தரப்பு சோனகர்களுக்குத் தரமறுத்தால் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை நியாயமற்றதாகிவிடும். அது அவர்களுடைய போராட்டத்தினை போலியாக்கிவிடும்.

மேலும் ஏதாவது ஒரு இடத்தில் இனசுத்திகரிப்பு (Ethnic Cleancing) என்றால் சற்று நின்று உலக நாடுகள் அப்படியா என்று கேட்கின்றன. அதற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டுமென முன்வருகின்றன. புயல் என்றால் வள்ளம் என்றால் பூகம்பம் என்றால் நோய் என்றால் உதவ முன்வரும் நாடுகள் கூட ஒரு சமயத்தவருக்கு பிரச்சினை என்றால் அடிப்படைவாதிகளாக இருக்க வேண்டும் அல்லது பயங்கரவாதிகளாக இருக்க வேண்டும் என்ற ரீதியில் உதவ முன்வருவதில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மதத்தவருக்கு எதிரானவருக்கு கை கொடுத்து உதவுகின்றன. இதில் உள்நாடு வெளிநாடு என்ற பேதமெல்லாம் கிடையாது.

இவை அனைத்தையும் நாம் கவனத்தில் கொண்டால், உலகின் சமகாலப் போக்குக்கேற்பவே எமது உரிமைகளைப் பெறவும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யவும் முடியும். சமயம் என்ற போர்வைக்குள் எமது அரசியலுக்கு பலம் சேர்க்க முயலலாம். ஆனால் இனம் என்ற வலுவான அடித்தளத்தில் இருந்து நமது கோரிக்கைகள் பிறக்க வேண்டும் என்பது எனது வாதம்.

(தேசம் இதழ் 17 – 2004) & (தேசம் இதழ் 18- 2004 )

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

125 Comments

  • ஆதிவாசி
    ஆதிவாசி

    ஏன் சோனகர்- ஆதிவாசி

    கடந்த தேசம் இதழில் ‘இலங்கை மூஸ்லீம்கள் – சோனகர்’ என்ற தலைப்பில் இன அடையாளம் குறித்து திரு எஸ் ஆர் நிஸ்தார் அவர்களின் கட்டுரையை வாசித்தேன்.

    சோனகர் குறித்த பல்வேறு கருத்துக்கள் உள்ளன. இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் சோனகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால் இந்தியாவில் இஸ்லாமியர்கள் சோனகர் என்று அழைக்கப்படுவதில்லை.

    இஸ்லாமியர் வாழ்க்கையில் வணிகம், கப்பல், கடல் ஆகியவை ஒரு காலத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தது. கடல் வணிகத்தில் பல தரப்பட்ட பணிகள் நடைபெற்றன. இதில் ஒவ்வொரு பணி செய்பவரும் ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கப்பட்டனர். மரக்காயர் என்பதைப் போலவே கப்பல் சேவைக்கான ஒரு பிரிவினர் சோனகர் என்று அழைக்கப்பட்டனர். கப்பலை செலுத்துவதில் இவர்களுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.

    ஆனால் இலங்கையில் முழு இஸ்லாமியர்களும் சோனகர் என்றே குறிப்பிடும் வழக்கத்தைத் தொடர்ந்து வருகிறார்கள். நோட்டியர் தமிழ் அகராதியில் முஸ்லீம்/ இஸ்லாமியர் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. சோனகர் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நோட்டியர் தமிழ் அகராதி 1834ல் அச்சிடப்பட்டு உள்ளது.

    இலங்கையில் அரசு சார்ந்த அனைத்திலும் மூர்ஸ் (Moors) என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. இலங்கையில் இஸ்லாமியரை அழைக்கப் பயன்படுத்தப்படும் மற்றொரு சொல் இது. மூர்ஸ் என்பது வட ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள அரபு இனத்திற்கும், பெர்பர் இனத்திற்கும் இடையில் ஏற்பட்ட கலப்பால் உருவானது.

    ஆனால் தமிழ் பேசும் முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள இலங்கை இஸ்லாமிய சமூகத்திற்கு ஏன் சோனகர் என்று பெயரிட்டு அழைக்கப்பட வேண்டும்? இது ஒரு வரலாற்றுத் திரிபு. இவர்களது இனரீதியிலான தொடர்பு தமிழினத்துடன் இல்லை என்பதை நிறுவுவதற்காகத்தான் இந்தப் பெயர் சூட்டல் என்று பல அறிஞர்கள் கருதுகிறார்கள். தமிழர்களும் தமிழ் பேசும் முஸ்லீம்களும் வரலாற்று ரீதியாக இணைந்துவிடக் கூடாது என்பதற்கான வரலாற்று சூழ்ச்சி இது என்று சந்தேகிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

    ஆதார நூல்கள் :

    தீக்குள் விரலை வைத்தேன் – சி மகேந்திரன்.

    பௌத்த சிங்களவரும், சிறுபான்மையினரும் – ச கீதபொன்கலன்

    தேசம் இதழ் 19 :

    Reply
  • ashroffali
    ashroffali

    உண்மையில் உங்களின் கட்டுரை எனக்குள் பெரும் தெளிவையே தந்தது. நான் கூட இதுவரை சோனகர் என்றழைப்பதற்குப்பதில் முஸ்லிம் அல்லது இஸ்லாம் என்றழைப்பதனையே விரும்பியிருந்தேன். இப்போது தான் தெரிகின்றது அதன் தாற்பர்யம்..

    உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டது போன்று இஸ்லாத்துக்கு முந்திய காலத்தில் கூட இலங்கையில் அரபிகளின் பிரசன்னம் இருக்கவே செய்தது. பாவா ஆதம் மலை எனப்படும் சமனல கந்தவைத் தரிசிப்பதற்கும் வர்த்தகத்துக்காகவும் வந்த அவர்களில் சிலர் இலங்கையின் அழகில் மயங்கி இங்கேயே தங்கி விட்டதற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன. ஒரு காலத்தில் அராபிய ஜமுக்காளம் தான் அனுராதபுர கால மன்னர் மாளிகை மற்றும் பெளத்த கோயில்களில் பயன்படுத்தப்பட்டிருந்தது என்று தலதா மாளிகையின் முன்னைய தியவதன நிலமே நிரஞ்சன் விஜேரத்தின ஒரு தடவை என்னிடம் தெரிவித்திருந்தார். இலங்கையின் பாரம்பரிய வெளிநாட்டுத் தொடர்புகள் பற்றி அவர் அக்காலத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டு நூலாக வெளியிடும் முயற்சியில் இருந்தார். அனுராதபுர யுகத்தின் ஆரம்ப காலங்களில் அராபிய நாணயங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் மகாவம்சத்துக்கு முந்திய தீபவம்சத்தில் காணப்படுகின்றன. தீப வம்சத்தின் ஒரு பகுதி மாத்திரம் தற்போதைக்கு தலதா மாளிகை தியவதன நிலமே அலுவலகத்தில் இருக்கின்றது. அதன் ஒரு பிரதி நகல் எடுக்கப்பட்டு சுவடிக்கூடம் மற்றும் தொல் பொருள் திணைக்களம் என்பவற்றில் பாதுகாக்கப்படுகின்றது.

    தவிரவும் அநுராதபுர அரசர்கால வரலாறுகளை ஆராயப் போன நிரஞ்சன் விஜேரத்தினவின் இளைய மகன் இன்றைக்கு ஒரு முஸ்லிமாக மாறி விட்டார். தற்போதைய நிலையில் மிக அழகாக தீபவம்சம் மற்றும் சலலிகிணி சந்தேசய என்பவற்றில் முஸ்லிம்களின் வரலாறுகள் தொடர்பான விடயங்களைப் பற்றி விசேட உரைகள் நிகழ்த்துகின்றார். அவரும் கூட அது தொடர்பான நூலொன்றை வெளியிட ஆவலுடன் இருப்பதாக அறிந்தேன்.

    இலங்கையின் ஹம்பாந்தோட்டை என்பது ஆரம்பத்தில் அரேபியர் வந்திறங்கிய துறைமுகம் என்பதை இன்றைய சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஒரு தடவை திஸ்ஸ மகாராமையில் பொதுக் கூட்டம் ஒன்றில் வைத்து ஏற்றுக் கொண்டிருந்தார்.அன்றைய அனுராதபுர மன்னர்களில் ஒருவர் சோழ ஆக்கிரமிப்பால் பதவியை இழந்து தெற்கில் ஒளித்துக் கொண்டிருந்த போது படையெடுப்புக்குத் தேவையான குதிரைகள் மற்றும் ஏனைய உபகரணங்களை அவருடைய அராபிய நண்பர்கள் கொண்டு வந்து கரையிறக்கிய இடம் தான் ஹம்பாந்தோட்டை என்பதாக மாகம்பத்துவையின் பிரதான சங்கநாயக்க தேரர் (பெயர் ஞாபகமில்லை) ஒரு தடவை ஜனாதிபதியின் மெதமுலனை இல்லத்தில் வைத்து என்னிடம் தெரிவித்துள்ளார். அது தொடர்பான பல வரலாற்றுத் தகவல்கள் அந்தப் பகுதிகளில் இருந்த விகாரைகளில் இருந்ததாகவும் ஆனால் 1915ம் ஆண்டின் கலவரத்தின் போது அவை அழிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    தியவத நிலமே…பசில் ராஜபக்சா…தேரர் போன்றவர்கள் இவ்வளவு விடயங்கள் சொல்லி இருக்கின்றனர். இவற்றை ஊடகப்பணிப்பாளர் மற்றும் ஊடக தர்மத்தை மதிப்பவர் என்றவகையில் அப்போது வெளியிட்டீர்களா? அவ்வாறு வெளியிட்டிருந்தால் அது ஜனாதிபதியின் ஊடகத்துறை இணையத்தில் எங்கே இருக்கிறது அல்லது தினகரன் டெய்லி நியூஸ்களில் எபபோது வந்தது என ஆவணப்படுத்த முடியுமா? எதிர்காலச் சந்ததியினருக்கு உதவும்!

    Reply
  • ashroffali
    ashroffali

    சமல் ராஜபக்ஷ…பசில் ராஜபக்ஷ அல்ல.. நண்பரே..
    நீங்கள் சொல்வதுபோன்று அவற்றை நான் ஊடகங்களுக்கு கொடுத்திருந்தால் அதனை நான் திரித்து வெளியிட்டதாக நீங்கள் அதற்கும் குறைகண்டிருப்பீர்கள்..என்ன செய்வது.. நாங்கள் எதைச் சொன்னாலும் குற்றம்… குறை காண்பது உங்கள் இயல்பாயிற்றே…

    அரபிகள் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு வந்து போன காரணத்தினால் தான் அதற்கு காரணப் பெயராக ஹம்பாந்தோட்டை என்று பெயரிடப்பட்டது. சிங்களத்தில் முஸ்லிம்களை ஹம்பன் மினிஸ்சு என்றழைக்கும் வழக்கமும் உண்டு. அதாவது அராபியர் தலையைச் சுற்றி வளையம் போன்று அணிந்திருப்பதை ஹம்பன் என்று குறிப்பிடுவர்.

    ஹம்பாந்தோட்டைக்கு அராபியர் வந்து போன காலத்தில் அப்பகுதிக்கு வியாபார விடயமாக தமிழர்களும் வந்து போகத் தொடங்கினார்கள். அதன் காரணமாகத் தான் ஹம்பாந்தோட்டை போகும் வழியில் கதிர்காமக் கந்தன் ஆலயம் உருவானது. அதாவது அன்றைய காட்டுப் பாதையால் வர்த்தக விடயங்களுக்குச் செல்லும்போது கதிர்காமக் கந்தனை நினைத்தே பயணத்தைத் தொடர்ந்ததாக ஒரு ஐதீகம் உண்டு. அத்துடன் அங்கே முஸ்லிம் வணக்கத்தலம் உருவானதும் அப்படித்தான்.

    அது மட்டுமல்ல.. ஹம்பாந்தோட்டை இன்றைக்கும் சோனகர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நகரம் தான். அங்கே மலே கொலனி மற்றும் சிப்பிக்குளம் போகஹயாய என ஏராளம் முஸ்லிம் கிராமங்கள் தான் இருக்கின்றன.. தற்போதைய நிலையில் ஹம்பாந்தோட்டையில் சுமார் இருபதினாயிரம் முஸ்லிம் குடும்பங்கள் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    அது மட்டுமல்ல.. ஹம்பாந்தோட்டை மலே பள்ளிவாசல் கி.பி. 7ம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த ஒரு முஸ்லிம் துறவியின் அடக்கத்தலத்தையும் கொண்டுள்ளது.

    ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் நளகம.. யக்கஸ்முல்லை.. கிரிந்தை.. என பல பாரம்பரிய முஸ்லிம் கிராமங்கள் ஹம்பாந்தோட்டை நகருக்கு வெளியே காணப்படுகின்றன. அவற்றின் வரலாறும் தொன்மை வாய்ந்தது.

    புத்தளத்தில் கரையிறங்கிய முஸ்லிம் வர்த்தகர்கள் குருநாகலை ஊடாக கண்டி வரை சென்ற பாதை தான் பத்து என்ற பெயரில் கிராமங்கள் அமைந்திருக்கும் பிரதேசமாகும். மடிகே மிதியாலை அதில் பிரபலமான ஒரு இடம். இன்றைக்கும் அந்தப் பிரதேச மக்கள் அதையெல்லாம் நினைவு கூரத்தான் செய்கின்றார்கள்…

    அவ்வளவு ஏன்… புத்தளம் நாகவில்லு பிரதேசத்தில் தான் அன்றைய கண்டி மன்னர்கள் பட்டாபிசேகம் செய்த பின் கடலில் நீராடும் இடம் இருந்தது. பட்டத்து யானையில் வந்து குளித்த பின்பே அவர்கள் கிரீடம் தரித்தார்கள்.அப்படி வந்த ஒரு மன்னன் எதிரிகள் கையில் சிக்கியபோது அங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் அவனைப் பாதுகாத்ததற்கான அரச வாள் உட்பட இன்னும் பல பெறுமதியான பொருட்களை அவன் முஸ்லிம்களுக்குப் பரிசளித்திருந்தான். அவை இன்றும் அங்குள்ள பள்ளிவாயிலில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.

    இப்படியாக இலங்கையில் சோனகர் வருகை மிக நீண்ட காலமாக பதியப்பட்ட வரலாறுதான். சகோதரர் நிஸ்தார் மற்றும் மதிப்பிற்குரிய சோதிலிங்கம் என்போர் சுட்டிக்காட்டியதைப் போல அக்கால முஸ்லிம்கள் தங்களை சோனகர்கள் என்றழைத்துக் கொள்வதில் தான் நாட்டம் கொண்டிருந்தார்கள். எங்களில் ஒரு சிலர் போன்று மதத்தின் பேரால் அல்ல..

    கண்டி மன்னர்கள் காலத்தில் நடைபெற்ற எட்டு தேவாலயங்களின் பெரஹரா நிகழ்வுகளின்போது கண்டி மீரா மக்காம் பள்ளிவாயலும் மன்னர்களின் கெளரவத்தைப் பெற்றுள்ளது. அது மட்டுமன்றி அக்காலத்தில் சோனகர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட ஒரு வஸ்திரம் தான் தலதா மாளிகையின் தந்தம் பாதுகாக்கப்படும் பகுதியை மறைத்திருந்தது. அதனை இன்றும் கூட தலதா மாளிகை பற்றிய வரலாற்றுக் குறிப்புகளில் காண முடியும்.

    எனவே ஆதாரங்களைத் தேட முற்பட்டால் ஆயிரம் ஆதாரங்களைக் கொண்டு வரலாம்… ஆனால் அவற்றை விட இலங்கை சகல மக்களுக்கும் வாழ்விட உரிமை கொண்ட நாடு என்ற மனோபாவம் இருந்தால் எந்தவித ஆதாரங்களும் தேவைப்படாது. கருத்து வேறுபாடுகளுக்கும் இடமிருக்காது.. அதனைத்தான் நாம் அனைவரும் வலியுறுத்த வேண்டும். அது தான் நமது இலக்காக இருக்க வேண்டும்.

    Reply
  • Ajith
    Ajith

    “இரண்டு தசாப்தங்கள் தாண்டி இன்று இந்த இனப்பிரச்சினைத் தீ அணைந்து போகப் பலரும் பல வழிகளிலும் முன்னின்றுழைப்பது மகிழ்ச்சி தருவதாய் இருந்தாலும்” – நிஸ்தார்

    யார் யார் பலவழிகளிலும் முன் நின்று உழைகிரர்ர்கள் என்று கூறினால் மிக நன்றாக இருக்கும். இனப் பிரச்சினை என்பது இங்கில்லை என்று கூறி சிங்கள குடியேற்றம், சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பு அடக்குமுறை தான் நடைபெறுகிறதே ஒழிய என்ன விதத்தில் சிங்கள அரசும் சிங்கள மக்களும் முன்னின்று உழைகிரர்கள் என்று தெளிவாக்கினால் நல்லாய் இருக்குமே.
    From 1950s to 80’s Sri Lankan Tamils faced riots orchestrated by the majority Sinhalese leaders and sponsored by the government. It was a pity throughout this period ruling leaders of the country was only bent on teaching lessons to the Tamils, but they were not the least interested in treating the Tamils as citizens of the country. – கே. த ராஜசின்காம்
    “இலங்கை முஸ்லிம்கள்” என்போரே இந்தப் புதிய பிரச்சினையின் கருப்பொருளாகும். 1990இல் நடந்த இரண்டு முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் இந்தப் புதிய பிரச்சினைக்கான தீர்வொன்றின் தேவையை உணர்த்தியது.” – நிஸ்தார்
    1990இல் நடந்த இரண்டு முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் பற்றி கூறும் நீங்கள் 1915இல் நடந்த சம்பவங்கள் பற்றியோ மௌனம் சாதிப்தின் மர்மம் என்ன?
    Anagarika Dharmapala wrote months after the riot, “What the German is to the Britisher, the Mohammedan is to Sinhalese.In January 1976, in Sinhala-Muslims riots in Puttalam, a Mosque at Pottuvil (Quela Mosque) was completely destroyed and 18 Muslims who assembled in another Mosque were shot dead by the Police in Puttalam.

    In 1982, from 30 July to 4 August, Sinhala-Muslim riots broke out in Galle and then spread to Kandy, Mawanella and others parts, including Colombo. In November 2002, Sinhala-Muslim riots took place in Chillaw. A group of Singhalese burnt down many houses belonging to Muslims and several people were severely injured in this incident. A Muslim refugee camp in Puttalam was also attacked and 75 Muslim families were forced to seek shelter in the nearby Mosque.

    Reply
  • நந்தா
    நந்தா

    ஹம்பன் அல்லது சம்பான் என்பது ஒரு படகின் பெயர். யாழ்ப்பானத்திலிருந்து போர்த்துகீசர்கள் யானைகளை கோவாவுக்குக் கொண்டு செல்ல அந்த “சம்பான்” கப்பல்களை உபயோகித்துள்ளனர்.

    இஸ்லாத்துக்கு முந்திய அறெபியர்களின் வரலாறுகளுக்கு முஸ்லிமாகிப் போனவர்கள் உரிமை கொண்டாட முடியுமா?

    காலியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் தமிழ், சம்ஸ்கிருதம், சீனம் மாத்திரம் பொறிக்கப்பட்டுள்ளதின் காரணம் என்ன? அரபு மொழியில் கல்வெட்டுக்கள் எதனையும் இலங்கயில் காணவில்லையே!

    தவிர பண்டைய தமிழ், கேரள வர்த்தக போக்கு வரத்துக்களை அலி இப்பொழுது “முஸ்லிம்” ஆக்க முயற்சிக்கிறார்.

    புத்தளத்துக்கு முஸ்லிம்கள் வந்துள்ளதாக எழுதும் அவர் அந்த முஸ்லிம்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று சொல்லக் காணோம். அரேபியா என்று கதை விடாமல் இருந்தால் நல்லது! இந்த அலி இப்பொழுது ஸ்தாபிக்க முற்படுவது என்னவென்றால் சிங்களவர்களுடன் முஸ்லிம்கள் நெருக்கமானவர்கள் என்பதும் தமிழர்கள் விசேடமாக இந்துக்களுக்கு எதுவித சம்பந்தமும் இல்லையென்பதுதான். அது ஒரு பாகிஸ்தான் சின்ட்ரோம்!

    கடைசியில் கதிர்காமத்துக்கும் “அள்ளி” வைக்கப் புறப்பட்டிருக்கிறார்.

    செல்வச்சன்னிதியிலிருந்து கிழக்குக் கரையோரமாக கதிர்காமம் வரை எத்தனை முருகன் கோவில்கள் உள்ளன என்பதும் இந்துக்கள் வடக்கிலிருந்து கதிர்காமத்துக்குக் கால்நடையாக யாத்திரை போவது பற்றியும் அலிக்குத் தெரியாமல் இருக்கிறது.

    செல்வச்சன்னிதியிலும், கதிர்காமத்திலும் ஒரே விதமாக வாயைக் கட்டி பூசை செய்வதின் வரலாறு புரியாமல் இருப்பதற்கு தற்போதைய அரசியல் காரணமாக அமைந்துள்ளது.

    எனவே இந்துக்களும், பவுத்தர்களும் இந்த மொழிப் பிரச்சனையை பெரிதாக்காமல் வரலாற்று ரீதியாக உண்மைகளை அணுகினால் நிரந்தர சமாதானத்துக்கு வழியுண்டு!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…நீங்கள் சொல்வதுபோன்று அவற்றை நான் ஊடகங்களுக்கு கொடுத்திருந்தால் அதனை நான் திரித்து வெளியிட்டதாக நீங்கள் அதற்கும் குறைகண்டிருப்பீர்கள்…//

    எப்படி நீங்கள் ஊகிப்பீர்கள்? நான் அவ்வாறு சொல்லுமிடத்து உங்களை ஆங்களுடன் மறுங்ரன்கள் எனத்தான் சொல்கிறேனே? உங்களின் வங்காலை மாட்டின் குடும்பக் “கதைக்கு ” ஏதாவது ஆதாரம் உண்டா? ராணுவம் கொன்றுவிட்டது அது உலகேங்கும் பரவிவிட்டது. ஈ.பி.டி.பியை அல்லது ராணுவத்தைக் காப்பாறி ஆக வேண்டும். நீங்கள் சென்று நன்றாக அலுவல் பார்த்தீர்கள்.

    சமல் ராஜபக்சா சொன்னார் என நீங்கள் வெளியிடுமிடத்து அதனை நான் மறுத்துக் கேட்டால் மக்கள் சேவகர்களாக தம்மை மணிக்கொருதடவை சொல்லிக்கொள்ளும் சமல் ராஜபக்சா வந்து வெளியில் சொல்லவேண்டியதுதானே?

    அதுசரி அதன்னெ எல்லோரும் உங்களிடம் வந்து சொல்கிறார்கள். முஸ்லிம்களின் உதவிகள் பற்றி (கம்பளம், குதிரை…) முஸ்லிம்மக்களுக்கு நேரடியாகச் சொல்ல ஏன் அவ்ர்களுக்குத் தயக்கம்? காரனம் இருக்குமே அஷ்ரஃப் அலி அவர்களே!

    Reply
  • Mohamed Shareef Asees
    Mohamed Shareef Asees

    Frustation + Agration = Violence
    Please stop, all these arguments and try to find a solution according to each ethnic group.

    Reply
  • ashroffali
    ashroffali

    //ஹம்பன் அல்லது சம்பான் என்பது ஒரு படகின் பெயர். யாழ்ப்பானத்திலிருந்து போர்த்துகீசர்கள் யானைகளை கோவாவுக்குக் கொண்டு செல்ல அந்த “சம்பான்” கப்பல்களை உபயோகித்துள்ளனர்.//

    ஆமாம் நந்தா.. பேராசிரியர் நளின் செனவிரத்தின இலங்கை தொடர்பான தனது கட்டுரையொன்றில் அப்படியும் குறிப்பிட்டிருந்தார்.அந்தக் காலத்தில் முஸ்லிம்கள் யானை வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்ததாகவும் ஹம்பான் கப்பல்களை அவர்கள் உபயோகித்த காரணத்தினால் தான் ஹம்பன் மினிஸ்சு என்று அழைக்கப்படுவதாகவும் அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் இலங்கையின் மிகக் கடும்போக்குடைய சிங்களவர்களில் அவரும் ஒருவர் என்ற காரணத்தினால் அவரது கருத்தை நான் மேற்கோள் காட்டவில்லை. உங்கள் பின்னூட்டம் அதைத் தெளிவுபடுத்தி விட்டது. நன்றி நந்தா.. ஆக முஸ்லிம்களை சிங்களவர்கள் ஹம்பன் மினிஸ்சு என்றழைப்பதற்கான சரியான காரணமாக ஹம்பான் கப்பல்களை அவர்கள் உபயோகித்ததுதான் சரியான காரணமாக இருந்திருக்க வேண்டும்.

    கிழக்கிலங்கையில் ஒரு காலத்தில் யானைகளைப் பழக்கப்படுத்தும் பணிக்கர்கள் எனப்படும் முஸ்லிம்கள் நிறைந்திருந்தார்கள். தலதா மாளிகையின் பெரும் சொத்தாக கருதப்படும் கொம்பன் யானையான ராஜா கூட ஏறாவூரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பணிக்கரால் அன்பளிப்புச் செய்யப்பட்டதுதான். ராஜா கொம்பன் யானையுடன் அவர் நிற்கும் காட்சி இலங்கையின் முன்னைய ஆயிரம் ரூபா தாளில் இருந்தது. அவரது பெயர் எனக்கு ஞாபகமில்லை.

    //இஸ்லாத்துக்கு முந்திய அறெபியர்களின் வரலாறுகளுக்கு முஸ்லிமாகிப் போனவர்கள் உரிமை கொண்டாட முடியுமா?//

    நந்தா.. அவர்கள் தான் இலங்கைக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தியவர்கள். அவார்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் தான் நாங்கள் இன்று முஸ்லிம்களாக இருக்கின்றோம். இலங்கைச் சோனகரின் மூதாதையர் அவர்கள் தான். விஜயன் கூட இலங்கைக்கு வரும்போது பெளத்தன் அல்ல. தேவநம்பியதீசன் காலத்தில் தான் இலங்கையில் பெளத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்காக இலங்கைச் சிங்களவர்கள் விஜயனின் வாரிசுகள் இல்லையென்று யாரும் மறுக்க முடியுமா..? அது போலத் தான் இலங்கை முஸ்லிம்களும் அராபியர்களின் வாரிசுகள் தான். ஆனால் பெரும்பாலானவர்கள் கலப்பின வரிசுகளாகத் தான் உள்ளனர். அதற்காக அராபியரின் வரலாறுக்கு உரிமை கொண்டாட முடியாது என்பது விதண்டாவாதம். எந்த இனமும் கலப்பினம் தான்..

    //செல்வச்சன்னிதியிலிருந்து கிழக்குக் கரையோரமாக கதிர்காமம் வரை எத்தனை முருகன் கோவில்கள் உள்ளன என்பதும் இந்துக்கள் வடக்கிலிருந்து கதிர்காமத்துக்குக் கால்நடையாக யாத்திரை போவது பற்றியும் அலிக்குத் தெரியாமல் இருக்கிறது.செல்வச்சன்னிதியிலும்இ கதிர்காமத்திலும் ஒரே விதமாக வாயைக் கட்டி பூசை செய்வதின் வரலாறு புரியாமல் இருப்பதற்கு தற்போதைய அரசியல் காரணமாக அமைந்துள்ளது.//

    அதைத்தான் நான் தெளிவாக சொல்லியிருக்கின்றேனே நந்தா.. வடக்கின் வர்த்தகர்கள் வந்து போன வழித்தடம் தான் அது.. வடக்கில் காணப்படும் சமய ஆசாரங்கள் தெற்கில் பின்பற்றப்படுவதற்கும் அதுதான் காரணம். அன்றைய காலகட்டத்தில் வடக்கின் உற்பத்திகள் ஹம்பாந்தோட்டைத்துறைமுகத்திற்கு எடுத்து வரப்பட்டது பெரும்பாலும் தமிழ் வர்த்தகர்கள் மூலமாகத்தான். அங்கிருந்து தான் அராபியர்கள் அதனைப் பெற்றுச் சென்றிருப்பார்கள். அதன் பின் தான் நாடு முழுவதும் வர்த்தம் விரிவடைந்திருக்கும்…

    //அரபு மொழியில் கல்வெட்டுக்கள் எதனையும் இலங்கயில் காணவில்லையே!//

    வர்த்த நோக்கத்திற்காக அரபியர்களும் அவர்கள் வழி வந்த சோனகர்களும் தமிழ் மொழியைத் தான் தங்கள் தொடர்பாடலுக்கு உபயோகப்படுத்தினார்கள். அதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கும் நந்தா.. ஏனெனில் இலங்கையில் அரபி தெரிந்தவர்கள் பெரும்பாலும் அதனைப் பயன்படுத்தியதில்லை. இன்றும் கூட அது தான் நிலை.

    Reply
  • நந்தா
    நந்தா

    முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மரிக்கார் இலங்கை முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கும் அரேபியர்களுக்கும் பிறந்தவர்கள் என்றது எதற்காக?

    இந்த அலி, அதுவும் தகவல் தொடர்பில், ஈடுபட்டிருந்த அலிக்கு அது எதற்காக என்பது தெரியாமலிருக்கக் காரணமில்லை!

    ஆயினும் உதைக்கின்ற விஷயம் எதுவென்றால் சிங்களவர்களும், அரேபியர்களும் கலந்து தமிழ் பேசும் முஸ்லிம்கள் எப்படி உருவானார்கள் என்பதே ஆகும்.

    இந்த முஸ்லிம்கள் எதற்காக பொய் கதைகளைப் பரப்பி தாங்கள் “தமிழ்” இல்லை என்று மோசடி செய்கிறார்கள்?

    அலியிடம் இதற்குப் பதில் வராது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. முஸ்லிம்கள் இப்படிக் கதைகளைப் பரப்புவதினால் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில் பெரும் இடைவெளியை உண்டு பண்ணி லாபம் காண முற்படுகிறார்கள்!

    அதனைத்தான் அள்ளிவைப்பு, கொள்ளிவைப்பு என்று தமிழர்கள் சிலேடையாகக் குறிப்பிடுவார்கள்!

    Reply
  • நந்தா
    நந்தா

    சிங்களவர்கள் “ஹம்பக்” மினிசு என்றுதான் கூடுதலாக அழைக்கிறார்கள். அதன் அர்த்தம் எல்லோருக்கும் புரியும்!

    பணிக்கர்கள் என்பவர்கள் மலையாளிகள். அவர்கள் யானை பிடித்தல் மட்டுமின்றி படை வீரர்களாகவும் இலங்கை அரசர்களிடம் வேலை செய்த வரலாறு உண்டு.

    முஸ்லிம்கள் எந்தக் காலத்திலும் “பணிக்கர்” என்ற பெயருடன் இருந்தது கிடையாது. மதம் மாறியவுடன் “இந்துப்” பணிக்கருக்கு அரேபிய பெயரே இடப்படும். முஸ்லிமாக மாறும் பொழுது இந்துவாக இருந்த காலத்து வேலுப்பிள்ள என்பதையும் சேர்த்து இப்ராகிம் வேலுப்பிள்ளை என்று யாரும் பெயர் மாற்றி மதம் மாறியதாகத் தெரியவில்லை.

    ஆயினும் கிழக்கிலங்கயைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் கேரளத்தவர்கள். சில வேளைகளில் அப்படியான ஒரு “பணிக்கர்” இந்த யானை பிடித்த கதையை “முஸ்லிம்” ஆக மாற்றுவது திருகுதாளத்தின் உச்சக் கட்டம்!

    இலங்கை முஸ்லிம்கள் கேரளத்தை சேர்ந்த “மாப்பிளா” முஸ்லிம்கள் பரம்பரை என்று கூறினால்நம்பக் கூடியது. ஏனென்றால் அவர்கள் அரபு- கேரள கலப்பு முஸ்லிம்கள்.

    பிரபல மலையாள நடிகர் மம்முட்டி(மகம்மது குட்டி), மலையாள எழுத்தாளர் வைக்கம் பஷீர் போன்றவர்கள் அந்த “மாப்பிளா” முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்

    Reply
  • karu
    karu

    நாம் ஒரு கலப்பினம். ஓன்றில் தமிழ்நாட்டில் காயல்பட்டினம்இ கீழ்க்கரையில் இருந்து வந்த அரபுக் கலப்புடைய தந்தையருக்கும் இலங்கையின் பெரும்பாலும் தமிழ்த் தாய்மாருக்கும் அல்லது நேரடி அரபுத் தந்தையர்களுக்கும் உள்ளுர் தமிழ்இ சிங்களத் தாய்மார்களுக்கும் அல்லது அரபு கிழக்கு ஐரோப்பியக் கலப்பில் வந்த தந்தை வழியினருக்கும் உள்ளுர் சிங்களத் தமிழ்த் தாய்மாருக்கும் அல்லது மேற்சொன்ன தந்தைவழி வட ஆபிரிக்கக் கலப்பில் தந்தை வழியினருக்கும் உள்ளுர் தமிழ் சிங்களத் தாய்மார்களுக்கும் இடையே ஏற்பட்ட உறவில் அல்லது திருமணப் பந்தத்தின் வழிவந்தவர்கள் இலங்கைச் சோனகர்கள்.// nisthar

    ஆம். நீங்கள் கலப்பின விருத்தியில் வந்தவர்கள். வந்த இடத்தில் குடியேறியவர்கள்.
    karu jaffna

    Reply
  • thomas
    thomas

    I realy like what mr nistar was said.i agreed his point of view.

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் Karu,
    நாங்கள் கலப்பின விருத்தியில் வந்தவர்கள் அதை நீங்களும் ஏற்றுக் கொள்கிறிர்கள். அதே நேரத்தில் வந்த இடத்தில் குடியேரியவர்கள் என்கின்றிர்கள். ஒரு பாதி தானே வெளியில் இருந்து வந்தவர்கள் என்கின்றோம், மற்றப் பாதி இங்கே இருந்தவர் என்கின்றோம். அப்படியானால் நான் சொல்லும் தமிழ் தாய்மார், சிங்களத் தாய்மார்ரெல்லாம் வெளியில் இருந்து வந்தவர் என்கின்றிர்கள். நல்லது அப்படியானால் நீங்கள் வெளியே இருந்து வந்தாலும் பூர்வீகம் என்பீர்கள் அதுவும் இல்லாமல் அதேபோல் வேறு யாரும் வந்தால் உரிமையற்ற நாடோடி என்பீர்கள்.

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் நந்தா, முஸ்லிமாக சமயம் மாறும் போது ஏன் அறபு பெயர் வைக்கவேண்டும்?
    இஸ்லாம் கூறுகிறது, மனிதர்களே உங்கள் பிள்ளைகளுக்கு அழகிய பெயர்களை வையுங்கள் என்பதாகும். அழகிய பெயர் எல்லா மொழியிலும் இருக்கும் அல்லவா? என் பெற்றோருக்கு என் பெயர் அழகாய் தெரிந்துள்ளது. ஆனால் நிஸ்த்தார் என்ற என் இயற்பெயர் அறபு மொழிக்கு தெரியாத ஒன்று.
    வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆங்கில பேராசிரியர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவர் இன்னும் தன் “பிலிப்” என்ற பெயரை மாற்றவில்லை. “இக்ரா” என்ற இஸ்லாமிய அமைப்பு ஒன்று யூ.கே யில் செயல்படுகிறது அதில் முக்கியமான செயற்பாட்டாளர்கள் இரண்டு ஆங்கிலேயர் அவர்கள் இன்னும் தம் குடும்பப் பெயரான “கிறீன்”, “காப்பென்டர்” என்ற பெயர்களிலேயே இஸ்லாமிய பிரச்சாரம் செய்கின்றனர். அமெரிகாவின் பிரதித்திபெற்ற மனித உரிமைகள் ஆர்வளர் “மல்கம் X” தான் இறக்கும் வரை அதே பேரிலேயே அறியப்பட்டார். மேலும் லூயிஸ்
    (F)பாராக் கான் என்பவர் “லூயிஸ்”சாகவே இருக்கிறார்.

    ஆதம், மூஸா, ஈஸா, தாவூத், இல்யாஸ், இஸாக், ஆ(H) ருன், ஸக்கரியா, பாவா, மாக்கார் அல்லது மரைக்கார், தம்பி,நெய்னா இப்படி ஆயிரமாயிரம் பெயர்கள் எல்லாம் எப்போது அறபு மொழியாக்கப்பட்டது நந்தா?.

    Reply
  • BC
    BC

    மிஸ்டர் தோமஸ்சுக்கு அப்படி விரும்பும்படி என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. ஆங்கில தாய்மாருக்கும் பிரான்ஸ்காரருக்கும் பிறந்தவர்கள் ஆங்கிலம் பேசி ஆங்கிலேயராகவே இருக்கிறார்கள். பிரான்ஸ் தாய்மாருக்கும் ஆங்கிலேயருக்கும் பிறந்தவர்கள் பிரான்ஸ் மொழி பேசி பிரான்ஸ்காரர்களாகவே இருக்கிறார்கள். இப்படி பலர். இவர்கள் தாங்கள் ஒரு தனி இனம் என்று ஒரு பெயர் வைத்து அடையாளபடுத்தவில்லை.

    Reply
  • நந்தா
    நந்தா

    பணிக்கர் பிரச்சனையில் முஸ்லிம் பணிக்கர்கள் கிடையாது. இருந்தால் கூறுங்கள் பார்க்கலாம்!

    அமெரிக்கவிலும் ஐரோப்பாவிலும் உள்ள உதாரணங்கள் யாருக்குத் தேவை? இலங்கயிலும், இந்தியாவிலும் என்னநடக்கிறது என்பதுதான் பிரச்சனை!

    அமெரிக்காவில் பேசுவது போல சவுதி அரேபியாவில் பேசினால் தனது தலை எப்பொழுதோ வெட்டப்பட்டிருக்கும் என்றும் லூயிஸ் பரக்கான் பேசியுள்ளதையும் நினைப்பது நல்லது.

    தவிர இந்த இலங்கை முஸ்லிம்கள் “மதம்” மாறி முஸ்லிம்களாக மாறியவர்கள் பற்றி மூச்சு விடாத காரணம் என்ன? அந்த “அரபு” கனெக்ஷன்” செத்துவிடும் என்ற பயமா?

    போகிற போக்கைப் பார்த்தால் விரைவில் இந்த முஸ்லிம்கள் “தமிழர்கள்” முஸ்லிம்களுக்குப் பின்னர்தான் இலங்கைக்கு வந்தவர்கள் என்று “கதை” பண்ண போகிறார்கள்!

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் நந்தா,

    இலங்கையை பற்றி கதைக்கும் போது ஏன் அமெரிக்கா என்கிறிர்கள், அதேநேரம் இலங்கையிலும் இந்தியாவிலும் என்ன நடக்கின்றது என்பது தான் பிரச்சினை என்கிறிர்கள். அப்படியானால் ஏன் இங்கு இந்தியா? இதைவிட என்ன நல்ல உதாரணம் இருக்கிறது உங்கள் இழுத்தடிப்புகளுக்கு. நீங்கள் விரும்பும் போது அமெரிகாவென்ன, முழு உலகத்தையும் உங்கள் காலடியில் போட்டு கசக்கி பிழிவிர்கள். வேறு யாரும் ஒரு உதாரணத்துகென்றாலும் எதையுமே பேசமுடியாது. நல்ல நியாயம்.

    மேற்சொன்ன ஆதாம் முதல் நெய்னா(ர்) வரை இலங்கையில் உலாவும் பெயர்கள். என் ஊரில் சின்ன தம்பி, முத்து மீரா,நாச்சியா(ர்), செல்லத்தம்பி, பணிக்கர் என்பதெல்லாம் சாதாரணமாக உலாவிய பெயர்கள் இதில் எங்கே கட்டாய பெயர் தினிப்பு தெரிகிறது, உங்களூக்கே வெளிச்சம்.

    மேலும் நந்தா,முஸ்லிம்கள் இலங்கைக்கு வந்தது தமிழரின் பின்தான். ஆனால் இலங்கையில் சோனகரின் இருப்பு தமிழருக்கு மிக
    வும் முந்தியதான வரலாறும் உள்ளது. ஆனால் அது ஆய்வுக்குற்படுத்தப் படவேண்டியுள்ளது. கொஞ்சம் பொறுமைகாருங்கள்.

    அன்புடன் சாந்தன்,

    ஏதோ எல்லாம் தெரியும் என்கின்றிர்கள், இந்த பின் கதவு தெரியாமல் போனதின் மர்மம் என்ன? உங்கள் நண்பர் வேறு இலங்கை பற்றி கதைக்கும் போது அமெரிக்கா ஏன் என்கிறார். ஆகவே உங்களைப் பார்த்து கைபர் பாஸ் ஏன் என்று கேட்பதாக இல்லையா?
    ஆனால் எமக்கொன்றும் அதில் பிரச்சினை இல்லை சம்பந்தம் இருந்தால் மாத்திரம் எதையும் எதனுடனும் கதைக்கலாம்.

    Reply
  • ashroffali
    ashroffali

    //முன்னாள் சபாநாயகர் பாக்கீர் மரிக்கார் இலங்கை முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கும் அரேபியர்களுக்கும் பிறந்தவர்கள் என்றது எதற்காக?//நந்தா..
    அன்றைய பார்பரீன் எனப்பட்ட பேருவளையில் கரையிறங்கிய அரபிய வர்த்தகர்கள் அந்தப்பிரதேசத்தில் அன்றைக்கு வாழ்ந்த சிங்களப் பெண்களைத் தான் மணந்திருந்தார்கள். அதுதான் அவர் அப்படிக் கூறியிருப்பார். தவிரவும் அன்றைய இலங்கை மன்னர்களில் பலரும் சோனக வர்த்தகர்கள் மற்றும் மருத்துவர்களின் சேவைகளில் திருப்தி கண்டு பல சிங்களப் பெண்களை மணமுடித்து வைத்ததாக வரலாறும் இருக்கின்றது.

    //ஆயினும் உதைக்கின்ற விஷயம் எதுவென்றால் சிங்களவர்களும், அரேபியர்களும் கலந்து தமிழ் பேசும் முஸ்லிம்கள் எப்படி உருவானார்கள் என்பதே ஆகும்.// அதற்கான பதிலை பல தடவைகள் தந்து விட்டேன்.

    // முஸ்லிம்கள் இப்படிக் கதைகளைப் பரப்புவதினால் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில் பெரும் இடைவெளியை உண்டு பண்ணி லாபம் காண முற்படுகிறார்கள்!// லாபம் காண முற்படவில்லை நந்தா இரு சமூகத்துக்கும் இடையில் பாலமாகச் செயற்பட்டனர். செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை.

    //பணிக்கர்கள் என்பவர்கள் மலையாளிகள். அவர்கள் யானை பிடித்தல் மட்டுமின்றி படை வீரர்களாகவும் இலங்கை அரசர்களிடம் வேலை செய்த வரலாறு உண்டு. முஸ்லிம்கள் எந்தக் காலத்திலும் “பணிக்கர்” என்ற பெயருடன் இருந்தது கிடையாது. மதம் மாறியவுடன் “இந்துப்” பணிக்கருக்கு அரேபிய பெயரே இடப்படும்// இதற்கு சகோதரர் நிஸ்தார் ஏற்கெனவே பதில் கொடுத்து விட்டார். ஆயிரம் ரூபா நாணயத்தாளின் யானை விவகாரம் நீங்கள் இலங்கை மத்திய வங்கியுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

    //இலங்கை முஸ்லிம்கள் கேரளத்தை சேர்ந்த “மாப்பிளா” முஸ்லிம்கள் பரம்பரை என்று கூறினால் நம்பக் கூடியது. ஏனென்றால் அவர்கள் அரபு- கேரள கலப்பு முஸ்லிம்கள்.// இப்படிச் சொல்லும் நீங்கள் தான் அதற்கு முன் இப்படியும் சொல்லியிருக்கின்றீர்கள்.

    //ஆயினும் கிழக்கிலங்கயைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் கேரளத்தவர்கள். சில வேளைகளில் அப்படியான ஒரு “பணிக்கர்” இந்த யானை பிடித்த கதையை “முஸ்லிம்” ஆக மாற்றுவது திருகுதாளத்தின் உச்சக் கட்டம்!// . தான் என்ன சொல்கின்றோம் என்பதே நந்தாவுக்கு ஞாபகமில்லை..

    //ஆம். நீங்கள் கலப்பின விருத்தியில் வந்தவர்கள். வந்த இடத்தில் குடியேறியவர்கள்.//
    இலங்கையில் இருக்கும் எல்லோரும் கலப்பினம் தான் கரு.. அன்றைய மன்னர்கள் தமிழ் நாட்டில் இருந்து பெண் எடுத்ததும்.. சிங்களவர் தமிழ்ப் பெண்களை மணந்ததும் வரலாற்றின் நெடுகிலும் காண முடிகின்றது. அதன் வழி வந்த சிங்களவர் மற்றும் தமிழர் கலப்பினம். அந்த இரண்டு இனத்திலும் மணமுடித்த வந்த சோனகரும் கலப்பினம் தான். ஆனால் அனைவரும் ஓரினம். அதுதான் மனித இனம்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //…..அன்புடன் சாந்தன், ஏதோ எல்லாம் தெரியும் என்கின்றிர்கள், இந்த பின் கதவு தெரியாமல் போனதின் மர்மம் என்ன? ..// nisthar

    நீங்களே கட்டுரை ஆசிரியர். நீங்கள் எழுதிய பின்கதாவ்ல் வரவில்லை போன்ற கருத்துகளும் உங்களுடையது. கேட்டால், உமக்கு எல்லாம் தெரியும் என்னிடம் ஏன் கேள்வி எனப் பதில், அப்பப்பா தேசத்தில் கட்டுரை எழுத இப்படியும் தகுதி வேண்டுமா?

    //…உங்கள் நண்பர் வேறு இலங்கை பற்றி கதைக்கும் போது அமெரிக்கா ஏன் என்கிறார…//
    இங்கே கட்டுரை உங்களுடையது. கருத்து எனது. அதற்குப்பதில் அளிக்க வேண்டியது உங்கள் கடமை. மற்றவர்களை எல்லாம் எனது தலையில் ‘நண்பர்’ பட்டம் அளித்து கட்ட வேண்டாம்!

    //…ஆனால் எமக்கொன்றும் அதில் பிரச்சினை இல்லை சம்பந்தம் இருந்தால் மாத்திரம் எதையும் எதனுடனும் கதைக்கலாம்…..//
    நீங்கள் தானே பின்கதவு, சொந்தசனம் போன்ற கதைகளை விட்டது. இல்லையா? இல்லை எனில் நீங்கள் பதில் அளிக்கத் தேவையில்லயே?

    Reply
  • நந்தா
    நந்தா

    நிஸ்தார்:
    இவ்வளவு நாளும் இலங்கை முஸ்லிம்களுக்கும் தமிழுக்கும் அல்லது இந்துக்களுக்கும் அல்லது மலையாளிகளுக்கும் சம்பந்தமே இல்லை என்று சாதித்தவர்கள் இன்று சின்னத்தம்பீ நைனா(ர்), நாச்சியார் எல்லாம் யார் என்று கேள்க்கிறீர்கள். அரேபியர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பிறந்த பரம்பரைகளுக்கு பணிக்கர் அல்லது நாச்சியார் என்ற பெயர்கள் எப்படி வந்தன?

    தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தமே கிடையாது என்று சாதித்து கடைசியில் உண்மை புரிந்து அதனை தெரிவித்தமைக்கு பாராட்டுக்கள்.
    ஆயினும் அப்புகாமி என்ற பெயரில் முஸ்லிம்கள் எப்படி இல்லாமல் போனார்கள்? இந்த முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து வந்தார்கள் என்று உண்மைகளை சொல்லக் கஷ்டப்படுவது புரிகிறது.

    யவனர் என்பவர்கள் கிரேக்கர்கள். அரபிகள் அல்ல. எனவே சோனக அல்லது ஜோனக என்ற “யவன” திரிபை முஸ்லிம்கள் அதுவும் இலங்கை முஸ்லிம்கள் பாவிப்பதே பெரிய “அடையாளத் திருட்டு” என்பதை படிப்பவர்கள் புரிந்து கொள்வது நல்லது.

    “மாப்பிளா” முஸ்லிம்களைப் பற்றி வாய் திறக்காமல் அரேபியா கதைகள் கதைத்து தமிழைப் பேசிக்கொண்டு தமிழர் அல்ல என்று சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றுவது சில வேளைகளில் “குரானில்” சொல்லப்பட்டுள்ளதோ தெரியவில்லை.

    அஷ்ரொப் அலி:
    உங்களின் கதைகள் “லங்கா புவத்” கதைகள். எனவே பதில் தேவையற்றது!

    சில வேளைகளில் இந்திய இந்து வரலாறுகளுடன் தங்களைச் சம்பந்தப்படுத்துவது இஸ்லாமிய போதனைகளின்படி “ஹராம்”(பாவம்) என்று நினைத்து ஒடி ஒளித்து பொய்களை சொல்லி இஸ்லாத்துக்கு புண்ணியம் செய்கிறார்கள்.

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் நந்தா, பலமுறை சொல்லியுள்ளேன். உங்களுக்கு ஒரு விடயம் தெரியாவிட்டால் அப்படி ஒரு விடயமே இல்லை என்று சாதிக்காதீர்கள்

    கலே பண்டார முதல் முதலிகே அஸன் லெப்பே என்ற சோனகர் வைத்துள்ள சிங்கள பெயர்கள் எல்லாம் எப்படி தமிழ் பெயர்கள் என்று தீர்மானித்தீர்கள்? போற போக்கை பார்த்தால் எல்லாம் தமிழ், எங்கும் தமிழ், எதிலும் தமிழ், இனி உலக மொழியே தமிழாகத்தான் இருக்க வேண்டும் என்று வாதாடுவீர்களோ? எல்லாம் காலம்தான்.

    Reply
  • ashroffali
    ashroffali

    முஸ்லிம்கள் தமிழ் மக்களுடன் தொடர்பற்றவர்கள் இல்லை என்று அடிக்கடி நந்தா மற்றும் குசும்பு போன்றவர்கள் தான் வாதிடுகின்றார்கள். அதன் பின் இல்லை தொடர்புடையவார்கள் தான் என்பார்கள். அடிக்கடி தங்கள் கருத்துக்களுடனேயே முரண்பட்டுக் கொள்வார்கள். உதாரணத்துக்கு கீழே நந்தா சொன்ன இரண்டு விடயங்களை தருகின்றேன்.

    //சோனகர் என்பது “யவனர்” என்பதன் திரிபு! கேரளாவில் இன்றும் ஒரு “ஜோனகப் பாலம்” என்று ஒரு இடம் உள்ளது.// இதன் மூலம் இலங்கைச் சோனகர் என்போர் இந்தியாவின் கேரள மற்றும் மலையாளிகள் என்று அவர் நிரூபிக்க முயல்கின்றார். அதற்கான இன்னொரு ஆதாரம் இது.

    //இலங்கை முஸ்லிம்கள் கேரளத்தை சேர்ந்த “மாப்பிளா” முஸ்லிம்கள் பரம்பரை என்று கூறினால்நம்பக் கூடியது. ஏனென்றால் அவர்கள் அரபு- கேரள கலப்பு முஸ்லிம்கள்.// இப்படியெல்லாம் வாதிடும் நந்தா அதன் பின் இப்படி அந்தர்பல்டி அடித்து தனக்குத் தானே முரண்படுவதுதான் நகைப்புக்கிடமானது.

    //யவனர் என்பவர்கள் கிரேக்கர்கள். அரபிகள் அல்ல. எனவே சோனக அல்லது ஜோனக என்ற “யவன” திரிபை முஸ்லிம்கள் அதுவும் இலங்கை முஸ்லிம்கள் பாவிப்பதே பெரிய “அடையாளத் திருட்டு” என்பதை படிப்பவர்கள் புரிந்து கொள்வது நல்லது.//

    //அஷ்ரொப் அலி: உங்களின் கதைகள் “லங்கா புவத்” கதைகள். எனவே பதில் தேவையற்றது//
    நந்தா.. உங்களிடம் உண்மையிருந்தால் அஷ்ரப் அலீ லங்காபுவத் கதைகளை எழுதினாலும் அதனை மறுத்துரைக்க வேண்டும். அல்லது உண்மையை ஒத்துக்கொள்ள விட வேண்டும்.

    அடுத்தது நந்தா.. நாம் அனைவரும் அடுத்தவர் இனம் பற்றி மட்டம் தட்டி நாம் தான் பெரியவர் என்று நிரூபிக்கப் புறப்பட்டால் நமக்கு இருப்பதும் பறிபோய் விடும். அதற்குப் பதிலாக நாம் ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுத்து அந்நியோன்ய விட்டுக் கொடுப்புடன் வாழ்வதே நம் எல்லோருக்கும் நன்மை பயக்கும். இல்லையா நண்பர்களே…?

    அதையும் தாண்டி நாம் ஒவ்வோரு இனத்தினதும் வரலாற்றைத் தோண்டப் போனால் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகும். அது நம் காலத்தை வீணடிப்பதாகத் தான் இருக்கும்.

    இலங்கை சிங்களவர் தமிழர் சோனகர் ஆகிய மூன்று இனங்களுக்கும் மற்றும் ஏனையவர்களுக்கும் உரியது. நாம் அனைவரும் சமமான உரிமை கொண்டவர்கள் என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு வர வேண்டும். அதன் மூலமாகத் தான் நாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கே அர்த்தம் கிடைக்கும்.

    Reply
  • நந்தா
    நந்தா

    நிஸ்தாரும், அலியும் முஸ்லிம்கள் “தனியினம்” என்று மாதக் கணக்கில் கதையெழுதினார்கள். இப்பொழுது ஒரு சறுக்கல். முஸ்லிம்கள் தமிழர்கள் அல்ல என்பதை நிலைநிறுத்த செய்த பிரயத்தனங்கள் அதிகம்.

    அவற்றை ‘சரி” என்றும் “தமிழ்” என்று வரும் கோட்டாக்களில் தலை வைக்கக் கூடாது என்று நான் கூறியதை இவர்கள் கண்டித்தனர். ஆயினும் இவர்கள் தமிழர் பிரச்சனைகளில் தமிழர்களாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்று சொல்லக் காணோம்.

    தேசம்னெற்றில் “தாங்க முடியாத” உண்மைகளால் முஸ்லிம்கள் தமிழர்கள் என்று மெதுவாக ஒப்புக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். முஸ்லிம்கள் தமிழர்கள் என்பதும் தமிழ்- சிங்களப் பிரச்சனைகளில் அல்லது “அரசியல் தீர்வு” என்பதில் எந்தப்பக்கம் சாய்வார்கள் என்பதையும் படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

    அரசியல்தீர்வு என்பது விரைவில் வரப்போகும் யதார்த்தமான உண்மை. அதன் மூலம் தமிழர்களுக்கு “ஏதாவது” கிடைக்கக்கூடாது என்பதில் அக்கறையாக உள்ளவர்கள் சிங்களவர் என்பதைவிட இந்த தமிழ் பேசும் முஸ்லிம்கள் என்பதை தமிழர்கள் உணர்வது நல்லது.

    தமிழ் சிங்கள பேச்சுக்களில் முஸ்லிம்கள் எந்த தரப்பிலும் தலையிடுவது தவிர்க்கப்பட வேண்டும்! இவர்கள் இப்பொழுது “அரபு” கதைகளைக் கழட்டி சுருட்டுகிறார்கள். எனது கருத்தை “தங்களின்” கருத்து என்று வேறு புரட்டுகிறார்கள்.

    இந்த இரு முஸ்லிம்களும் ஜோனக்ப்பாலம் பற்றியோ மாப்பிளா முஸ்லிம்கள் பற்றியோ எங்கும் எழுதியது கிடையாது. நான் எழுதிய பின்னர் “ஆகா” அதுதானே நானும் சொன்னேன் என்கிறார்கள்!

    “சோனக” என்பது கிரேக்கர்(யவனர்) பற்றிய சொல் என்பதும் அதனை எகற்காக இலங்கை முஸ்லிம்கள் “திருட்டு” செய்துள்ளனர் என்பதற்கும் இந்த முஸ்லிம்களிடமிருந்து பதிலைக் காணோம்! “கலே பண்டார முதல் முதலிகே அஸன் லெப்பே” பற்றி விபரம் தருவார்களா? உறுதி செய்து கொள்ளத்தான்.

    Reply
  • ashroffali
    ashroffali

    //“சோனக” என்பது கிரேக்கர்(யவனர்) பற்றிய சொல் என்பதும்//

    முதலில் இந்திய வரலாற்றை நன்றாகப் படியுங்கள். யவனர் என்பது யாரைக் குறிக்கும் என்பதற்குத் தெளிவான விளக்கம் கிடைக்கும்.

    யவனர்கள் என்றால் ஆப்கானிஸ்தான் ஈரான் மத்திய ஆசியா (உ-ம்: துர்க்மினிஸ்தான் ..)நாட்டவர்கள் என்று பல இந்திய இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன “குடக்கர்” என்பது மேற்குத் திசையினர் என்று பொருள். கிரேக்கர்கள் உள்ளிட்டவர்களை அழைக்க அது தான் பயன்பட்டது.

    ஆயினும் சங்ககாலத்தில் கிரேக்கர் ரோமானியர் எகிப்தியர் பாரசீகர் அராபியர் ஆகிய அனைவரையும் ‘யவனர்’ என அழைக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் இருந்துள்ளது. ஆனால் ஏனையவர்கள் நீண்ட காலத் தொடர்புகளையும் பரம்பரைத் தொடர்புகளையும் கொண்டிராத காரணத்தால் பின் வந்த காலங்களில் யவனர் என்பது இஸ்லாமியரைக் குறிக்கும் பொதுச் சொல்லாக மாறிவிட்டது. அதுவே மருவி சோனகர் என்று அழைக்கப்படுகின்றது என்று நினைக்கின்றேன்.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    இந்திய பிராந்தியத்தில் உள்ள அத்தனை குடும்பங்களும் பெருவாரியாக இரண்டு பிரதான பிரிவுகளைக் கொண்டுள்ளன அதில் மிகவும் பெரிய பிரிவான திராவிட இனக்குழுக்களின் பரம்பரையினரே இன்றுள்ள பெரும்பான்மையினரான இந்திய பிராந்தியத்தினர் இவர்களில் ஆரியக் கலப்பின் பல தொடர்புகள் இருந்துள்ளதையும் இன்று திட்டவட்டமாக மரபணுப்பரிசோதனை நிரூபித்து விட்டது.(1)

    இன்று இலங்கையில் இருக்கும் இனக்குழுமங்கள் அனைத்துமே இந்த திராவிடக் குடும்பமே தவிர வேறு அல்ல இவர்களில் மரபணுவில் பல்வேறுபட்ட கலப்புக்கள் இருப்பதும் உண்மை. மனித குலம் பொதுவான இன அடையாளத்தை பொதுவான பொதுக் குணாதிசயங்களைக் கொண்ட ஒரு இனமாக உருமாறும் ஒரு நோக்கை நோக்கியே இந்த மனித இனத்தின் வரலாறும் நடைபோடுகின்றது. இதில் அதன் ஒரு கட்டத்தில் இருந்து கொண்டே நாம் எமது மனித இனம் எப்படியான மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது என்பதை எம்மையும் அறியாமலே இருக்கிறோம். இந்த பெரிய பூமிப்பந்தில் வாழும் நாம் எமது பூமி சுழல்வதை உணரமுடியாதுள்ளது போன்றதே இந்த மனிதகுலமும் ஒரு பொதுவான இனத்தை இன அடையாளத்தை ஏன் பொதுவான மொழி அடையாளத்தை நோக்கி இயங்குகின்றதை புரியமுடியால் திண்டாடுகின்றோம். (2)

    இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் சோனகர்கள் அல்லது இஸ்லாமியர்கள் இவர்கள் இலங்கையில் சிங்கள தமிழர்கள் ஒரு பத்து பரம்பரையினர் என்றாலும் இஸ்லாமியர்கள் ஒரு ஜந்து பரம்பரையினர் என்றாலும் வாழ்ந்து விட்டனர் இவர்கள் இந்த இந்த சோனகர்கள் இஸலாமியர்கள் இலங்கையின் பரம்பரையினர் என்ற அடையாளத்தை எப்போதோ பெற்றுவிட்டனர் என்பதை நாம் ஏற்றுக்கொள்வோம் இவர்களின் ஒவ்வோரு இனமும் தமக்கென ஒரு அடையாளத்தையாவது தனித்துவமாக கொண்டுள்ளனர்.(3)

    இன்று தமிழர்கள் சிங்களவர்கள் என்ற அடையாளத்தை திட்டவட்டமாகவும் அரசியல் ரீதியாகவும் உருவாக்கம் பெற்றுள்ளது ஆனால் இந்த முஸ்லீம்கள் தனியான இனம் என்ற கருத்தில் பலர் பலவாறாகவும் கருத்துக்களை பலகாலமாக முன்வைத்தே வந்துள்ளனர். இதில் உள்ள முக்கிய விடயம் என்னவென்றால் அந்த சோனகர்கள் அல்லது முஸ்லீம்கள் தம்மை தமது மத அடையாளங்களுடன் தம்மை ஒரு இனமாக கருதி தம்மை ஒரு இனமாக பகிரங்கப்படுத்தினர். அதை நாம் இதர இனத்தவர்கள் ஏற்றுக்கொள்வதே சரியான வழி அல்லது இயற்கையானது இதில் இனிமேலும் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அப்படி ஒரு மாற்றம் வரவேண்டுமானால் அது அந்த சோனக இனத்தால் தாம் தமிழர்கள்தான், தமது மதம்தான் வேறானது அது அந்த அடையாளம் முக்கியத்துவமானது அல்ல என்ற வாதம் அவர்களிடமிருந்து எழுந்து அது மாறினால் ஒழிய வேறு வழியால் இனிமேல் வரமுடியாது. அப்படியாக உலக வரலாற்றில் ஒரு இனமாக தம்மை அடையாளப்படுத்தியவர்கள் அதை கைவிட்ட வரலாறு நான் கேள்விப்படவில்லை.(4)

    சோனகர்கள் ஒரு தனிஇனமாக இருந்ததாலேயே அவர்களை தனியாக அடையாளப்படுத்தி அவர்களை புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றினர், சோனகர்கள்(இஸ்லாமியர்களை) ஒரு இனமாக அங்கீகரிப்பதற்கு இது ஒரு காரணம் போதுமானது, ஆனால் மட்டக்களப்பிலோ கண்டியிலோ இப்படி யாரும் முஸ்லீம்களை வேறாக பிரித்து நடாத்தவில்லையே என்ற வாதம் எழாமல் இல்லை.(5)

    முஸ்லீம்கள் இன்று தமிழை மட்டும்தான் பேசும் இனமாகவும் பாரக்க முடியாத நிலை உருவாகியுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் இன்று சிங்கள பிரதேசங்களில் சிங்கள மொழிமூல வாழ்க்கையில் அமைதியாக வாழக்கூடிய சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளதையும் அவதானிக்கலாம். ஆனால் தமிழர்கள் தமிழ் மொழியை மட்டும் அடையாளமாக கொண்டவர்கள் தமிழ் மொழியை அடிப்படையாக கொண்ட இனமாகவே இருக்க முடியும் இது தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் திட்டவட்டமான முடிவாகவே உள்ளதையும் மறந்துவிடக்கூடாது.(6)

    இஸ்லாமியர்களை தமிழர்களுடன் இணைத்து ஓர் (இனமாக்கும்) இனமாக உருவாக்கும் முயற்சியில் யாரும் இறங்கியதில்லை அதைவிடுத்து அவர்களை எம்மில் ஒரு இனம் என்று வற்புறுத்துவது எந்த வகையிலும் நியாயம் இல்லை! இயற்கைக்கு எதிரானதும் கூட. நாம் மனிதர்கள் எமது அடையாளங்களைக் கொண்ட தேசியங்கள் தாம் வாழும் நாட்டில் பெரும்பான்மை என்றதும் சிறுபான்மையினரின் சுயாதிபத்தியத்தை அங்கீகரிப்பதில்லை அவற்றுக்கு மாறாக அவர்கள் மீது வற்புறுத்தலே செய்வது சாதாரணமாக உள்ளது. இதில் புலிகளும் இதையே செய்தனர், இந்த இஸ்லாமியர்களை தமிழ் பேசும் மக்கள் என்ற அடையாளத்தினுள் கொண்டுவரும் முயற்சியில் பல இஸ்லாமியர்களும் சேர்ந்து எடுத்த பல முயற்சிகள் ஆரம்ப முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது (இதற்கு நல்ல உதாரணம் த.வி.கூ அமிர்தலிங்கம் ஈழமாணவர் பொதுமன்றத்தால் அடிக்கடி பிரயோகிக்கப்பட்டு வந்த தமிழ்பேசும் மக்கள் என்ற பதத்தை பல தடவைகள் எதிர்திருந்தார். பல பொதுக்கூட்டங்களில் எதிர்த்தும் பேசியிருந்தார்) பின்னர் இவைகள் யாவும் புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டு விட்டது.(7)

    இந்த சோனகர்கள் தனி இனம் என்பதை ஏற்க முடியாதவர்கள் சோனகர்களை தமிழ் இனமாக உருவாக்கும் அந்த பாரிய கடமைகளில் இருந்து தவறி விட்டார்கள். அதையும் விட அந்த சோனக இனத்தை அல்லது இஸ்லாமியர்களை தம்மைவிட வேறு ஒருவராக தமிழர்களும் சிங்களவர்களும் தம்மிடையே கருதியும் அதற்கான வேறுபாடுகளையும் காட்டியே கடந்த பல பரம்பரையினர்கள் நடந்து கொண்டுள்ளனர். இந்த வேறுபாடான நடத்தையும் சோனகர்களை அல்லது இஸ்லாமியர்களை ஒரு இனமாக பிரகடனம்செய்ய போதுமானது ஆனால் அதைவிட பல காரணங்கள் உண்டு சோனகர்களை தனி இனமாக பிரகடனம் செய்வதற்கு. அதில் ஒன்று உத்தியோக பூர்வமாக இலங்கையில் முஸ்லீம்களில் பெரும்பான்மையினரை சோனகர்கள் என்றே பிறப்புப்பதிவு செய்து வந்துள்ளோம்.(8)

    இரண்டாவது இவர்கள் தனித்துவமான மதஅடையாளத்தை கொண்டவர்கள், மதஅடையாளமே இவர்களின் மிகவும் பிரதானமான அடையாளமாகவும் இன்று தொனிப்பொருளாகவும் உருவாக்கப்பட்டும் இதன் பின்னால் மதத்தின் பெயரால் அழைக்கும் அடையாளமும் (முஸ்லிம்கள்) இருக்கின்றது.(9)

    இனிமேல் இந்த மதமும் மதத்தின் குணாதிசயங்களும் கூட விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படும். மதங்களின் பெயரால் நடைபெறும் அத்தனை நடவடிக்கைகளும், தவறுகளும் கண்ணுக்கு எண்ணை விட்டே அவதானிக்கப்படும் இதன்போது இந்த மதவாதிகள் எம்மதத்தின்மீது கரிபூசாதீர்கள் என்றும் எமது மதம் புனிதமானது என்றும் சத்தம்போடுவது அர்த்தமற்றதாகும். இங்கே இதர இனத்தவர்களால் இந்த மதம் பற்றிய பேச்சுக்கள் (விமர்சிக்கப்படுவதை) இந்த இஸ்லாமிய சமூகமும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இதற்காக இந்த இஸ்லாமிய இனத்தவர்கள் தம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும், இனிமேல் ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்றாகிவிட்டது. அதில் முக்கியமாக இன அடையாளம் மத அடையாளத்துடன் பிணைந்து கொண்டதால் மதம் மீதான விமர்சனங்கள் எழுந்தே தீரும். அன்று இவர்கள் சல்மான் ரூஷ்டி மீது நடைபெறும் நடவடிக்கைகள் போல் பதில்களை முன்வைக்கும்போது இவை உள்நாட்டு யுத்தத்தில் முடிவடையக்கூடும். இன்று உலகில் பல்வேறுபட்ட சமூகங்களில் இஸ்லாம் முக்கிய கருப்பொருளாகவும் அவை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் உள்ளதையும் உலகின் பல நாடுகளின் அரசியல் உள்விவகாரங்களின் கொள்கை வகுப்புக்களின் பொருளாகவும் உள்ளதையும் அவதானித்துக்கொண்டும் தம்மை உலகின் விமர்சன களத்தில் இலங்கை முஸ்லீம்களும் அதற்குரிய பக்குவத்துடன் சந்திக்க வேண்டி நேரிடும் இவற்றை இலங்கைதீவிலும் நாம் சந்திக்கும் காலம் தூரத்தில் இல்லை என்றே தெரிகிறது.(10)

    இலங்கை முஸ்லீம்களின் வரலாற்றில் மதத்தின் அடையாளங்கள் தவறானவைகள் என்றும் மதங்கள் பிற்போக்குத்தனமானது என்ற உண்மை எழுந்தே தீரும் இதில் மிக அண்மைக் காலங்களிலிருந்தே இஸ்லாமியத்தின் நடவடிக்கைகள் பல சர்வதேசங்களால் முற்போக்கு வட்டாரங்களால் பல கண்டனங்களுக்கு உள்ளாக்கப்படுதல் ஆரம்பித்துள்ளது இதில் தலிபான் நடைமுறைகள் சரியா நடைமுறைகள் முன்னிற்கின்றன!(11)

    அண்மையில் ஜேர்மனி அதிபர்களில் ஒருவர் (பெண்மணி) கருத்து ஜேர்மனியில் பல் கலாச்சார மக்களைக்கொண்ட சமூகத்தை உருவாக்க முடியாது என்பதன் அடிப்பொருளாக ஜேர்மனியில் உள்ள இஸ்லாமியர்களையே அடிப்டையாக வைத்து இந்த கருத்து முன்வைக்கப்பட்டதை அவதானிக்கலாம் இங்கே இஸ்லாமியர்கள் பல்தேசிய பல்கலாச்சார அடையாளங்களுக்குள் வரமாட்டாதவர்கள் என்பதை பல்வேறு உலக நாடுகளின் கருத்துகளாக வெளிவிடுவதையும் அதேவேளை இஸ்லாமியர்கள் இதன்பால் கருத்துக்களை மறுதலித்தும், சிலவேளை எதிர்புணர்வுடனும் செயற்படுவதையும் உதாரணமாக லண்டனில் பொப்பி மலரின் எரிப்புகளில் பல இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் செயற்பாடுகள் பல பத்திரிகைகளில் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுடன் வெளிவந்திருந்ததையும் அவதானிக்கலாம், இதைவிட ரைம்ஸ் போன்ற பல சஞ்சிகைகளில் தொடர்ச்சியாக வெளிவரும் செய்திகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு முக்கியத்துவம் பெறுவதையும் அவதானிக்கலாம், இவைகள் இஸ்லாமியர்களை தமது மதத்தின் மீதான மாற்றங்களை கொண்டவர வற்புறுத்துவதாகவே தெரிகின்றது. இதற்கான பதிலாக இவை இஸ்லாத்தின் தவறு அல்ல என்றும் இவைகள் பாரம்பரியமாக உள்ள தவறுகள் என்றும் இவை திருத்திக் கொள்ளப்பட்ட முடியும் என்றும் கருத்துக்களை எழுப்பி இஸ்லாம் இவற்றிக் கூடாகவும் தன்னை நிமிர்த்திக் கொள்கின்றதை அவதானிக்கலாம்.(12)

    என்றுமே உலகில் உள்ள மக்களில் பலர் தம்மை வேறு இனமாகவும் வேறு மதமாகவும் வேறு பால் உணர்வுள்ளவர்களாகவும் மாற்றிக்கொள்வது சாதாரணமானது இது இவர்களின் அறிவியல் (அறிவு கொண்டவர்கள் – அறிவு இல்லாதவர்கள்) காரணங்கள் பற்றியதாகும். இதில் இவர்கள் இஸ்லாம் மட்டுமல்ல இஸ்லாத்தைவிட இன்று உலகில் மக்கள் தாமாகவே தெரிவுசெய்யும் மதமாக இருப்பதில் பெளத்தமே முதலாவதாக உள்ளது, அதனை அடுத்து வைஸ்ணவமாகும் ஆனால் இஸ்லாமியர்களின் மதமாற்றங்கள் இஸ்லாமிய அமைப்புக்கள் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இவற்றை பெரிதாக பறை சாற்றுவதால் உலகில் இஸ்லாத்துக்கு மட்டுமே மதமாதற்றம் நடைபெறுவதாக கூறி புளகாங்கிதம் அடைவதையும் கண்டுகொள்ளக் கூடியதாக உள்ளது.(13)

    அதேபோன்று இன்று உலகில் பல நாடுகளில் இஸ்லாம் பயங்கரவாத மதம் என்றும் அதற்கு மதிப்பளிக்க மறுப்பு தெரிவிக்கும் பலநடவடிக்கைகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. உதாரணமாக இன்றும் லண்டன் உயர்தர பாடசாலைகளில் பர்தா அணியும் இஸ்லாமிய பெண்களை ஒதுக்கிப்பேசும் பெருந்தொகையான மற்றைய சிறுவர்கள் நல்ல உதாரணமாகும், இவை லண்டனில் இந்த குழந்தைகளின் பெற்றோரின் குணாதிசயங்களின் வெளிப்பாடாகவே உள்ளதை அவதானிக்கலாம், இப்படி உடை உடுக்க கற்றுக்கொடுக்கும் பெற்றோர்கள் இந்த பிள்ளைகளுக்கு பாடசாலைகளில் இப்படி நடப்பதை அறியமுடியாத அறிவு குறைந்தவர்களாகவும் இஸ்லாமிய புத்தகத்திற்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களாகவுமே இருக்க முடியும் என நம்பலாம்.(14)

    இந்த விடயங்களில் இருந்து இஸ்லாமியர்கள் தாமாகவே வெளிவர வேண்டிய காலத்தின் கட்டாயத்தினுள் இருக்கிறார்கள், இஸ்லாமியர்கள் இந்த மாதிரியான தன்மைகளிலிருந்து தம்மை வெளியேற்றி புதிய முறையிலான அணுகுமுறைகளை கையாள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டும் உள்ளனர். இதன்காரணமாக புதிய இஸ்லாமிய பரம்பரையினர் (இளம் சந்ததியினர்) இதற்கான போராட்டங்களை தமது இஸ்லாமிய நாடுகள் அமைப்புக்கள் இஸ்லாமிய அதிகாரங்களை குவித்திருக்கும் வர்க்கங்களிடம் போராட்டங்களையும் நடாத்தி தாமாகவே புதிய செயல் வடிவம் கொடுக்கும் பல பணிகளையும் அவதானிக்கலாம்.(15)

    இது அறிவியல் உலகம் இவர்கள் மீது தனது பார்வையினை செலுத்தியுள்ளதையே எடுத்துக்காட்டுகின்றது. அறிவியல் உலகம் இந்த தவறான அடையாளங்களிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்தியே தீரும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.(16)

    இதன்பால் வெளியிடப்படும் கருத்துக்களில் பல இந்திய பிராந்தியத்தில் இஸ்லாமிய வரலாறுகளை பலரும் குறிப்பாக இஸ்லாமியர்களால் இஸ்லாத்துக்காக இஸ்லாமிய புத்தகத்துக்காக மாற்றிப்பேசியும் இதற்காக நிறுவல்களை தரவும் முயற்சிக்கிறார்கள் இதிலும் இவர்கள் தாமாகவே திருந்திக் கொள்ள வேண்டிய நிலையை அறிவியல் சமூகம் உணர்த்தியே தீரும்.(17)

    மதங்களின் வரலாறு முட்டாள்தனமானது மதங்கள் பயத்தினால் உருவானது. மதங்களே என்றும் மனித குலத்தின் ஜக்கியப்பாட்டுக்கு இடையூறாக இருந்துள்ளது ஆனால் கால அட்டவணையில் இந்த மதங்கள் நான் முன்பு குறிப்பிட்டது போன்று 100 மீற்றர் நீளமாள அளவு கோலில் 2 சென்றி மீற்றர் காலத்திலேயே இந்த மதங்களின் அடையாளங்கள் மக்கள் மீது பல விதமான நெருடல்களை கொண்டுவந்துள்ளது இதில் இறுதிக்காலத்தில் உலகிற்கு வந்த இஸ்லாம் இதன் ஒட்டுமொத்த கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளது, இதற்கு சற்று முன்பாக உலகிற்கு வந்த கிறிஸ்தவம் இப்படியான கட்டுப்பாடுகள் அடக்குமுறைகளை அமுல்ப்படுத்தி இறுதியில் தோல்வியுற்று ஜனநாயகத்துடன் சமரசம் செய்து கொண்டு இன்று இயங்குகின்றது, இதேபோன்று கிறிஸ்தவத்துக்கு முன்பு பல நூறு தசாப்தங்களுக்கு முன்பு வந்த பெளத்தம் அதற்கு முன்பு இருந்த சமயங்களின் அடிப்படைவாதங்களையும் சாதீய வெறிகளையும் மூட நம்பிக்கைகளையும் தவறுகளையும் அடக்குமுறைகளையும் மாற்றம் காணவே முற்பட்டது, இதில் பெளத்தம் ஒன்று மட்டுமே கடவுள் என்ற போலியை மக்களுக்கு சரியாக எடுத்துரைத்தது.(18)

    ஆயினும் இன்றைய நவீனகாலத்திலும் இந்த மதபிற்போக்குதனங்களை பயன்படுத்துபவர்களால் இந்த மதங்களில் பல தம்மை ஸ்தாபனமயப்படுத்தி ஜனநாயகத்துடன் போட்டியிட்டு மக்களை மடையர்களாக்கி மனிதகுலத்தின் முன்னோக்கிய நகர்வை பின்தள்ளவே செய்கின்றன.(19)

    மதங்களின் வரலாறுகளை எடுத்து கூறும் பல நண்பர்கள் காலத்தை சரியாக கூறாமலே அந்த மதங்களின் காலங்களை ஆதிகாலம் முன்னயகாலம் என்று அழைப்பதன் மூலம் கடந்தகாலத்தில் எல்லா மதங்களும் இனங்களும் மொழிகளும் ஏதோ ஒரு இரு வருடங்களின் இடைவெளியில் நடைபெற்றது போன்ற தோரணையில் சொல்லி மதம் பரப்பும் போதனைகள் போன்று சொல்லிலிட்டு போகிறார்கள்.(20)

    இதில் இலங்கையில் முஸ்லீம்களுக்காக வரலாறுகளை எழுதிய பலரிடம் இந்தப்போக்கு உள்ளதை அவதானிக்கலாம் இந்து பெளத்தங்களின் வரலாறு நீண்ட பல வரலாற்றுகளை கொண்டது என்பதையோ, இந்து மதங்கள் பெருமளவு தம்மிடையே பல மாற்றங்களையும் பிரச்சினைகளையும் கண்டது என்பதையோ, அரபு இஸ்லாமியர்களின் காலங்களுக்கு முன்பு இவைகளில் பல சமயங்கள் ஒன்றாகவே கீழைத்தேய சமயங்கள் இருந்தனவென்பதையோ எழுதாமல் மழுப்பலுடன் இஸ்லாத்திற்கு உரமூட்டி எழுதும் தன்மையினையும் பார்க்கலாம். இது மனிதர்களை தமது அறிவியல் ஊட்டத்திலிருந்து வெளியே போகவிடாது வைத்திருக்கும் அயோக்கியதனமேயாகும் இப்படியான போக்குகளில் புத்தர் மிகவும் முற்போக்கானவர் என்பதை இன்றைய உலகம் கண்டு கொண்டுள்ளதே அவரது போதனைகள் பற்றி பாரிய அறிவியலில் நாட்டம் கொள்ள காரணமாக உள்ளது.(21)

    இலங்கையில் கிறீஸ்தவர்களும் கத்தோலிக்கர்களும் இந்துக்களும் பெளத்தர்களும் தம்மை மத அடையாளங்களுக்குள் உள்ளாக்காமல் தம்மை மொழிவாரியான அடையாளத்திற்கு உள்ளாக்கியதில் அவர்களின் அறிவியல் யதார்த்தப்போக்கில் அவர்கள் கொண்ட முற்போக்கு பாத்திரத்தை போற்றிட தவறிவிடக்கூடாது.(22)

    இலங்கையில் சோனகர்கள் இதர இனத்தவர்களால் வேறுபடுத்தியும் தாம்கொண்ட பல்வேறு இனக் கலப்பின் அடையாளங்களில் குழம்பி மதம் பற்றிய அடையாளத்தையே கொள்ள வேண்டிய சூழ்நிலைகளுக்குள் தள்ளப்பட்டுள்ளதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.(23)

    இஸ்லாமியர்கள் தம்மை ஒரு இனமாக அடையாளப்படுத்தி தனித்தவத்தை பேணுவதற்கான பல முயற்சிகள் இந்திய பிராந்தியத்திலும் உலகின் பல நாடுகளிலும் தோல்வியுற்றுள்ளதையும் அவதானிக்க வேண்டும் இதில் பாக்கிஸ்தான் இன்றும் சர்வதேச ஆய்வாளர்களின் முன்னால் உள்ள நல்ல உதாரணம் இஸ்லாமிய நாடு என்று தம்மை அடையாளப்படுத்தியும் தம்மிடையேயான வேறுபாடுகளை நீக்கிக்கொள்ள முடியாதவர்களாகவே இருக்கின்றது. இஸ்லாம் இந்த விடயத்திலும் தோல்வியினையே கண்டுள்ளதையும் காணலாம். மிக அண்மைய வரலாறுகளில் இஸ்லாமியர்கள் இஸ்லாமியர்களை அழித்தவரலாறு மிகவும் கொடூரமானது. இதற்கான காரணங்களை ஆராய்ந்தால் இது மக்களின் பொருளாதாரத்தை அடிப்படையாகவே கொண்டுள்ளதையும் அதற்கான முரண்பாடுகளை தீர்த்துக்கொள்வதில் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதில் உள்ள இடர்பாடுகளேயாகும் இந்த பிரச்சினைகளை தீர்க்கமுடியாத கட்டத்தில் இஸ்லாத்தை அல்லது இதர மதத்தவர்கள் தமது மதத்தை முன்கொண்டுவந்தும் கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றுகிறது என்றே தெரிகிறது.(24)

    இதில் இஸ்லாம் தான் தனது இஸ்லாத்தினுள்ளே பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு உண்டு என்று கூறிக்கொள்ளும் அதேவேளை, இஸ்லாமிய நாடுகளிலிருந்து பொருளாதார சமூகப்பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியாமல் வெளியேறும் மக்களின் தொகைக்கு இந்த மதங்களின் தீர்வில் நம்பிக்கை இல்லை என்பதை புரிந்து கொள்ள தவறுகிறார்கள். இன்றைய உலக நாடுகளில் பல இஸ்லாமிய நாடுகளில் உள்ள எண்ணைவளமும் அதன் பெறுமதியும் இஸ்லாத்தை ஒரு வலுவுள்ள மததாக இஸ்லாமியர்களால் சித்தரிக்க முடிகின்றதையும் எண்ணை வளமில்லாத நாடுகளில் இவை தாழ்ந்து இருப்பதையும் பார்க்கும்போது பொருளாதாரமே இஸ்லாமிய சமூகத்தினதும் பிரச்சினையே என்பதை உணரமுடியும்.(25)

    இலங்கையில் உள்ள சோனக இனம் தனது மொழி அடையாளத்தில் தொடர்ந்தும் உருவாகி வரும் நெருக்கடிகள், இந்த இனத்தை தமக்கான மொழி உருவாக்கம் என்ற தேடலையும், அதில் சோனகர்கள் அரபு மொழியை தமது தாய் மொழியாக உருவாக்கும் நிலைகளும் உருவாகலாம். இதற்கான பின்புல தயாரிப்புக்களில் சிலர் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக உள்ளது. இதனால் ஏற்படவிருக்கும் பின்விளைவுகளையும் பொறுப்புக்களையும் இவர்கள் ஏற்றுக்கொள்ளவும் தயாராக வேண்டும்.(26)

    புதிய சந்ததிகளும் வளர்ந்து வரும் விஞ்ஞான சமூகமும் புதிய வழிவகைகளை காணும்.(27)

    காலியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் தமிழ், சமஸ்கிருதம், சீனம் மாத்திரம் பொறிக்கப்பட்டுள்ளதின் காரணம் என்ன? அரபு மொழியில் கல்வெட்டுக்கள் எதுவும் இலங்கையில் காணவில்லை – இது அரபு மொழியின் காலம் இஸ்லாமிய காலத்திற்கு முன்பாக இருந்த போதிலும் அரபு மொழியை ஒரு முக்கிய ஆட்சி மொழியாக பாவிக்க முடியாதிருந்ததிற்கான காரணம் அக்காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தமிழ் மொழியே தான். அன்றைய அரபு வணிகர்கள் தமிழை படிப்பதில் ஆர்வம்காட்ட வேண்டியிருந்ததும் தமது வணிகத்தை இலகுவாக்கவேதான் இதன் காரணமாகவே தான் பல அரபு வழிவந்தவர்கள் அவர்களது பரம்பரையினர் தமிழை தமது மொழியாக்கினர். அதைவிட அரபு மொழி மட்டுமே இந்த வணிகர்களின் மொழியாக இருக்கவும் இல்லை இவர்களில் பலர் பாரசீகம் போன்ற வேறு பல மத்திய கிழக்கு நாடுகளின் மொழிபேசுபவர்களுமே வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர் இஸ்லாத்தின் பரம்பலுக்கு பின்னரே அரபு மொழி இந்த அளவு ஆதிக்கத்தை பெற்றுக்கொண்டது ஆகவே தான் ஆரம்பகாலத்தில் அரபு மொழியில் அரபுக்காரன் கூட கல்லை கொண்டுவரவில்லை அவர்கள் வணிகம் செய்ய பொருளீட்டவே தான் வந்தார்கள் மொழி பரப்பவோ மதம் பரப்பவோ வரவில்லையே.(28)

    இலங்கையில் சோனகரின் இருப்பு தமிழருக்கு மிகவும் முந்தியதான வரலாறும் உள்ளது என சிலர் கருத்துக்கொள்கிறார்கள் இது தவறு இப்படியான வாதம் சில எழுத்தாளர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதேயாகும். இலங்கையில் தென்இந்திய தமிழர்கள் இல்லாமல் வரலாறு காணமுடியாது.(29)

    இப்படியான கைங்கரியத்தை பல எழுத்தாளர்களாலே ஏற்பட்டது தமிழ் மொழி முக்கிய மொழியாக இந்திய உப கண்டத்தின் பல நாடுகளிலும் இருந்துள்ளதும் இதை மறைக்க பலர் பல பிராயச்சித்தங்கள் செய்தும் பலனில்லாமல் போய்விட்டது. தமிழ்மொழியுடன் சைவமும் இணைந்தே வளர்ச்சி கண்டிருந்ததை வரலாற்றுடன் ஒப்புவிக்க முடியும் பின்னர் சைவத்திலிருந்து தமிழர்கள் பெளத்தத்தை தழுவி இருந்த காலத்தில் தமிழ் பெளத்த காவியங்களையும் படைத்திருந்ததையும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தமிழர்களே பெளத்தத்தை கொண்டு சென்றனர் என்பதையும் (அவரின் பெயர் நைனார் ஆகும் இப்பெயர் ஒரு இஸ்லாமியப்பெயர் என்று இன்று சிலர் வாதிடலாம்(தவறு) ) இதனாலேயே இன்றும் யப்பானிய மொழியில் தமிழ் சொற்பதங்களின் கலப்புள்ளதை காணலாம். இந்த கேரளத்து பெயர் கொண்டவர் காஞ்சிபுரத்தில் பெளத்த பீடத்தின் தலைமையில் இருந்தவர் அன்று கேரளத்தில் தமிழ் மொழியே பேசப்பட்டது என பலர் கூற கேள்விப்பட்டுள்ளேன்.(30)

    மொழியின் பரம்பலுடன் காலமாற்றங்களையும் இணைத்துப் பார்க்காமல் மொழியின் சொற்களை கொண்டு இது இஸ்லாமிய சொல் என பலர் இங்கே வாதிடுவதை காணலாம்(தவறு)(31)

    பெளத்தத்தின் பின்னர் தமிழர்களை மீண்டும் சைவர்களாக்கியோர் நாயன்மார்களேயாகும் (நைனாவின் திரிபா?) இது கிறீஸ்துவுக்கு முன்பு 3ம் கிறீஸ்துவுக்கு பின் 3ம் நூற்றாண்டுகளிலாகும்.(32)

    இஸ்லாத்துக்கு முந்திய காலத்தில் கூட இலங்கையில் அரபிகளின் பிரசன்னம் இருக்கவே செய்தது. பாபா ஆதம் மலை எனப்படும் சமனல கந்தவைத் தரிசிப்பதற்கும் வர்த்தகத்துக்காகவும் வந்த அவர்களில் சிலர் இலங்கையின் அழகில் மயங்கி இங்கேயே தங்கி விட்டதற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன. (இது வேறு காலம் 1) இந்தக்காலத்தில் இந்திய பிராந்தியத்திற்கு வந்த அரேபியர்களும் இந்தியாவில் உள்ள சிந்தனை முறைகள் போன்றே இயக்கையான தெய்வங்களை வணங்கியவர்கள் இவர்களின் தமிழர்கள் போன்றவற்றுடன் பல உடன்பாடுகளை கண்டிருந்திருக்க முடியும்.(33)

    ஒரு காலத்தில் அராபிய ஜமுக்காளம் தான் அனுராதபுர கால மன்னர் மாளிகை மற்றும் பெளத்த கோயில்களில் பயன்படுத்தப்பட்டிருந்தது. (இது வேறு காலம் 2- இவையிரண்டையும் ஒன்றாக எழுதுவதால் இங்கே ஒரே காலம் அல்லது அயல் அயல் காலம் என கருத இடமளிப்பது தவறாகும்)இவை மிகவும் பின்னைய காலங்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவும்.(34)

    கால அட்டவணை தேடவும் அரபு மொழி உருவாக பல நூறு வருடங்களுக்கு முன்பே அரேபியர்கள் தமிழில் வியாபாரம் செய்கிறார்கள் காரணம் தமிழர்கள் இவர்களுக்கு முன்பே இவர்களிடம் தேடி சென்றவர்கள் இவர்களுக்கு மொழி கலாச்சாரங்கள் கற்ப்பித்தவர்கள் இந்தியாவே உலகின் கலாச்சாரத் தொட்டிலாக இருந்துள்ளது.(35)

    Reply
  • BC
    BC

    சோதிலிங்கத்திடமிருந்து மீண்டும் ஒரு அருமையான கட்டுரை.
    அண்மையில் ஜேர்மனி அதிபர் அஞ்யெலா மார்கிள் ஜேர்மனியில் பல் கலாச்சார மக்களைக்கொண்ட சமூகத்தை உருவாக்க முடியாது என்று ஜேர்மனியில் உள்ள இஸ்லாமியர்களை குறிப்பிட்டதை அறிவேன். இஸ்லாமியர்களின் கட்டுப்பாடற்ற மக்கள் தொகை பெருக்கம், மசூதிகளை எல்லா இடங்களிலும் கட்டுவது, பர்த்தா போடவிரும்பாத தங்கள் வீட்டு பெண்களை தந்தை, சகோதரன் துன்புறுத்துவது இப்படியான பிற்போக்குகளை இறுக்க பிடித்து கொண்டிருப்போருடன் சேர்ந்து வாழ்வது (பல் கலாச்சார மக்களைக்கொண்ட சமூகம்) தோல்வியில் முடிந்ததை தான் அவர் குறிப்பிட்டார். இதை தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மாற்றி ஜேர்மனியில் உள்ள ஜேர்மன் மக்கள் பெருந் தொகையாக இஸ்லாமின் சிறப்பை உணர்ந்து இஸ்லாம் மதத்துக்கு மாறுகிறார்கள், ஜேர்மன் அதிபர் கவலை என்று தமிழில் செய்தி வெளியிட்டு வழக்கம் போல குதுகலித்தார்களாம்.

    Reply
  • நந்தா
    நந்தா

    ‘சோனகர்” என்பதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தேசம்நெற் பிரசுரிக்கும் இந்த கட்டுரையில் இந்திய முஸ்லிம்கள் தங்களை சோனகர் என்று அழைக்காமல் இருப்பது பற்றிய தகவல்களைக் காணவில்லை.

    மேற்கிலிருந்து வந்தவர்கள் எல்லோரும் யவனர்கள் அல்ல. கிரேக்கர்கள் மாத்திரமே யவனர்கள் என்று தென் இந்தியாவில் அழைக்கப் பட்டிருக்கிறார்கள். கிரேக்கர்களுடன் வந்த அரபிகளே பின்னர் தங்கள் நாட்டைவிட வளமான இந்தியாவில் காலூன்றினார்கள். அரேபியாவின் பாலைவனத்து சித்தாந்தங்கள் அந்தநாள்க்களில் மதமாகவுமில்லை, கலாச்சாரமாகவுமில்லை.

    தற்போது கிரேக்கர்களுடன் எதுவித சம்பந்தமுமில்லாத தமிழ் பேசும் இலங்கை முஸ்லிம்கள் தங்களை “சோனகர்” அல்லது “யவனர்கள்” என்று வேறுபடுத்துவதன் நோக்கம் என்ன?

    அரசியல்..நிலத்தின் மீதான உரிமை.. என்பனவே அதற்கான காரணிகள்.

    சிங்களவர்களும், தமிழர்களும் வரலாறு தெரியாத காலம் தொட்டு இலங்கையில் வாழ்கிறார்கள். இந்த உண்மையை இல்லையென்று சொல்ல எடுக்கும் பிரயத்தனங்களில் இந்த இஸ்லாமியர்கள் சிங்கள இனவாதிகளுக்கு “ஆமா” போடுகிறார்கள். இடையில் வந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் இவர்களுக்கு முன் பல ஆயிரம் வருடங்கள் காலமாக வாழும் இலங்கைத் தமிழர்களை தங்களுக்குப் பின்னர் வந்தவர்கள் என்று சிங்கள இனவாதிகளுடன் ஒத்தூத புறப்பட்டிருக்கிறார்கள்.

    ஜமுக்காளக் கதைகள் தமாஷானவை. காஷ்மீரத்துக் கம்பளங்களை இப்பொழுது அரேபியக் கம்பளங்கள் ஆக்குகிறார்கள்.

    காஷ்மீரி என்பது ஒரு போலாந்து வார்த்தை. கிழக்கு ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கு வர்த்தகர்களாகவும் ஆடு மாடு மேப்பவர்களாகவும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வந்து நிரந்தரமாகியுள்ளனர். சில வேளைகளில் இவர்களின் வரவைத்தான் “ஆரிய” படையெடுப்பு என்று இந்தியாவில் குறிப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். கஷ்மீரி என்றால் என்ன அர்த்தம் என்று அக்கறையுள்ளவர்கள் போலந்துகாரர்களிடமோ அல்லது போலாந்து தூதரகத்திடமோ விசாரிக்கலாம்!

    நேரு என்ற பெயர் இன்றும் போலந்தில் உண்டு.

    பாரசீகர்களின் நிலங்களில் வளம் அரேபியாவை விட அதிகமாக பழைய காலங்களில் இருந்துள்ளன. அவர்களின் மரபணுக்கள் கிழக்கு ஐரோப்பியர்களுக்கு நெருக்கமானவை.

    தென்னிலங்கயில் உள்ளவர்கள் இன்று சிங்களவர்கள். ஆனால் அவர்கள் சண்டை பிடிக்கும்போது “தூத்துக்குடிக்குப்” போய்விடு என்று திட்டுவது சர்வ சாதாரணம்.

    கரவா என்ற சாதியினர் தமிழ் கரையார் என்பதற்கு சான்றுகள் அதிகம். மொழி மாற்றம்நடக்க பெரிய கால இடைவெளி தேவையில்லை. இலங்கையின் வட மேல் மாகாணம், மேல் மாகாணம், தென் மாகாணம் ஆகிய இடங்களில் சுத்தமான தமிழ் பெயர்களுடைய
    ஊர்களை இன்றும் காணலாம்.

    அரேபியர்கள் வர முடியுமென்றால் பக்கத்திலிருக்கும் தென் இந்தயர்கள் இலங்கைக்கு வர முடியாதா?

    மொழிப் பிரச்சனையின் வரலாற்றுக் காரணிகளை ஆராய்ந்தால் அது தற்போதைய கண்டுபிடிப்பு என்பதே உண்மை. ஆயினும் இலங்கை முஸ்லிம்கள் தங்களை எதியோப்பியர் என்றும் அழைத்துக் கொள்ளட்டும். தங்களுக்கென்று தனிப்பாடசாலைகள் வரை போய்விட்ட அவர்கள் தனியாகவே இருந்து கொள்ளட்டும்.

    அரசியல் நிலம் தமிழ் என்று வரும் பொழுது “தமிழர்கள்” என்று தங்களை அடையாளப்படுத்துபவர்களின் தலையில் முஸ்லிம்கள் கைவைப்பதை யாரும் அனுமதிக்கக் கூடாது. முஸ்லிம்களுக்கு தமிழ் என்றாலும் பங்கு வேண்டும், இஸ்லாமியர் என்றும் பங்கு வேண்டும் என்று கோருகிறார்கள்.

    தமிழ் – சிங்கள அரசியலில் இந்த முஸ்லிம்கள் தலையிடுவதை எப்படி அனுமதிப்பது. இவர்களுக்கு தமிழும் சிங்களமும் பிரச்சனை அல்ல என்று சொல்லிக் கொண்டு தமிழரின் பிரச்சனைகளை தமிழர்களிடம் விட்டு விடுவது மானநாகரீகமுள்ள முஸ்லிம்கள் செய்ய வேண்டிய வேலை!

    ஜெயபாலன்: கேரளாவில் கம்யூனிஸ்ட் முதலமைச்சராக ஒரு ஈ.கே.நாயனார் என்பர் இருந்துள்ளார்.

    Reply
  • Henry
    Henry

    தமிழர்கள் என்பது வேறு. முஸ்லிம்கள் என்பது வேறு. முஸ்லிம்கள் தமிழ் மொழியை பேசினாலும் தமிழர்கள் என்று சொல்வதை விரும்புவது இல்லை. தமிழர்களும் அவர்களை தமிழர்கள் என்று சொல்வது இல்லை.

    தமிழராகிய எம்மை வேறு எந்த இனமாவது, நாம் விரும்பாத அடைமொழிகளில் அழைத்தால் பொறுத்துக்கொள்வோமா? அதேபோல், முஸ்லிம்களும் தம்மை முஸ்லிம்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். இதில் என்ன தவறு காண முடியும்? அவர்கள் மொழியைவிட தங்களது மதத்தை அடையாளப்படுத்தவே விரும்புவர்.

    தமிழர் போராட்டத்தை, முஸ்லிம்கள் என்றுமே எதிர்த்ததில்லை ஆரம்பத்தில். புலிகள் எப்போது அவர்களை கொன்று குவிக்க ஆரம்பித்தார்களோ, அன்றிலிருந்து அவர்களின் திசையும் மாறிவிட்டது. பழையதை கிளறுவதில் பயன் இல்லை.

    தமிழரை போல, முஸ்லிம்களுக்கும் பிரச்சனை இருக்கிறது. அவர்களுக்கென்று அரசியல் கட்சி இருக்கின்றது. மேலும் ஆளும்கட்சியிலும் எதிர்க்கட்சிகளிலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இருக்கின்றனர். முஸ்லிம்களுக்கும் நிலப் பிரச்சனை இருக்கின்றது. சிறுபான்மையிலும் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு, நம் தமிழர்களைப்போல ஏகப்பட்ட பிரச்சனைகள், ஆதங்கங்கள்.

    தமிழர்களின் அரசியலில் முஸ்லிம்கள் எப்போது கைவைத்தார்கள்? தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வரும்போது, நீதியாக முஸ்லிம்களுக்கும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தப்பல்ல. இது தமிழ்-சிங்கள அரசியல் அல்ல. ஒடுக்கப்பட்ட தமிழ், முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சனை.

    முஸ்லிம்களின் பிரச்சனைகளைத் தவிர்த்து, நம் தமிழர் பிரச்சனைகளை மட்டுமே தூக்கிபிடித்ததினால், ஒற்றுமையற்ற இரு சமூகங்களும் தற்போது வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கின்றனர்.

    எரிமலையின்மேல் இருந்துகொண்டு, இரு சமூகங்களும் தங்களது வம்ச பரம்பரைகளைப்பற்றி, விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். ரொம்ப முக்கியமான விடயம்! சிலர் ஒரு படி மேல் போய், முஸ்லிம்களுக்கெதிராக உலகில் நடக்கும் நிகழ்வுகளை அடுக்கிக் கொண்டிருக்கின்றனர்.

    Reply
  • நந்தா
    நந்தா

    முஸ்லிம்கள் தங்களுக்கு “தமிழ்” பிரச்சனை கிடையாது என்றுதான் சிங்களத் தலமைகளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்த்தான் தமிழர்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று தனிப்பாடசாலைகள் வரை பெற்று எப்பொழுதோ “தனியாகப்” போய்விட்டனர்.

    சிங்களவர்களிடம் தங்களுக்கும் தமிழருக்கும் சம்பந்தமில்லை என்றும், தமிழர்களிடம் தாங்களும் தமிழர்கள் என்றும் சொல்லும் முஸ்லிம்களை என்ன செய்ய வேண்டும்?

    முஸ்லிம்கள் யாரால் ஒடுக்கப்படிருக்கிறார்கள்?

    இப்பொழுது நடப்பது “மொழிப்பிரச்சனை”. மதப் பிரச்சனை அல்ல. மதம் மூலம் தங்களை அடையாளம் காட்டும் முஸ்லிம்கள் தங்களுக்கும் “தமிழ் பிரச்சனைக்கும்” சம்பந்தமில்லை என்றுதானே எப்பொழுதொ பிரிவினை கோரிவிட்டனர்.

    இந்த நிலையில் அவர்கள் “தமிழ்” என்று எதற்காக மூக்கை நுழைக்கிறார்கள்?

    Reply
  • thurai
    thurai

    //இந்த நிலையில் அவர்கள் “தமிழ்” என்று எதற்காக மூக்கை நுழைக்கிறார்கள்?//நந்தா
    சமஸ்கிருதம் பேசும் இந்துக்குருவை தலைவணங்குவோர் தமிழ் மொழியைப்பற்ரியும் தமிழர்களைப் பற்ரி பேசி உருமை கொண்டாடுவதைப் பார்க்கும் போது, முஸ்லிம்கள் பரவாயில்லை.– துரை

    Reply
  • BC
    BC

    //தமிழர்கள் என்பது வேறு. முஸ்லிம்கள் என்பது வேறு.//
    இது உண்மை தான்.தமிழர்கள் என்பது இனத்தை குறிக்கும். முஸ்லிம்கள் என்பது மதத்தை குறிக்கும். சைவர்கள் மாதிரி.

    Reply
  • நந்தா
    நந்தா

    துரை: தமிழர்கள் இந்து என்று எதையும் கேட்கவில்லை என்பது தெரியவில்லையோ?

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் நந்தா,
    வழமைபோல் எமது இலங்கை பிரச்சினையுடன் “கஷ்மீர்” ரை கலக்கிறிர்கள். நமது அடிப்படை பிரச்சினையில் இருந்து விலகாமல் வாதிப்பது நன்று. இன்று கஷ்மீர் பற்றி கதைக்க வெளிக்கிட்டால், விடயத்தை திசை திருப்புகிறோம் என்று நிங்களே எங்களில் குற்றமும் காண்பிர்கள்.

    நாங்கள் தமிழர் விடயத்தில் தலை போடுவதில்லை, மூக்கை நுளைப்பதில்லை. அதேபோல் நிங்களும் நடவுங்கள் என்றுதான் கேற்கின்றோம். அரசியல், நிலம் என்று வரும் போதுதான் தமிழ் அரசியல் அதில் எம்மை இழுக்க முயற்சிக்கிறது. அது த.தே.மு யாகட்டும் நாடு கடந்த தமிழீழ அரசாகட்டும் அனாவசியமாக என்மை தமிழர் என்று லாபம் பெறும்வரை கூறி அதன் பிறகு நிங்கள் இஸ்லாமிய தமிழர் அது இது என்று கூறி கலைத்துவிடுவிர்கள். அது இனியும் நடக்காமல் இருக்கவே ஒருவரை ஒருவர் அவரவர் தனித்துவங்களை மதித்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் எதிர்கால அமைதியான வாழ்க்கைக்கு வழிசமையுங்கள் என்றுதான் கேற்கின்றோம். புலி பயங்கர வாதிகளாவது தமை எதிர்த்தோரை மாத்திரம் துரோகிகள் என்றார்கள். ஆனால் நீங்களோ முஸ்லிம், இஸ்லாம், சோனகர், அறேபியா, பாக்கிஸ்தான் என்று எந்த வார்த்தையை கண்டாலும் எரிமலை போல் குமுறுகிறிர்கள். ஏன் இந்த குழப்பம். ஹென்றி சொல்வதுபோல் உங்களிடம் எதிர்பார்ப்பது முன்மாதிரியை. இது இல்லாதபோது. உங்களின் வாதங்கள் வெறும் விதண்டாவாதங்களே.

    எந்த நேரத்திலும் நாம் பாக்கிஸ்தானை துணைக்கு இழுக்கவில்லை. இருப்பினும் உங்கள் பின்னுட்டங்களில் அடிக்கடி காணும் குற்றச்சாட்டு நாம் பாக்கிஸ்தானை எதோ எமது முன்மாதிரியாகக் கொள்கிறோம் என்பதே. அப்படியானாலும் சர்தாரியின் பாக்கிஸ்தான் அரசாங்கத்தை சொல்கிறிர்களா, அதன் உளவு படை ஐ.எஸ்.எஸ் சை சொல்கிறிர்களா அல்லது அந்நாட்டின் தளபான்களை சொல்கிறிர்களா, அல்லது சமய, சமுக ஸ்தாபனமான இஸ்லாமி-அல்-ஜமாஅத் தை சொல்கிறிர்களா அல்லது வசிரிஸ்தான் பிரிவினைவாதிகளை சொல்கிறிர்களா , லக்சே-தொய்பா பயங்கரவாதிகளை அல்லது வேறு ஏதாவது சொல்ல முனைகின்றிர்களா?

    ஒன்றை மாத்திரம் புரிந்துகொள்ள முயற்சியுங்கள். நாம் தனி இனம், சோனக இனம், எமக்கு ஒரு பிரதேசம் இருந்தது. நாம் இலங்கையின் ஒரு தேசிய இனம். அதற்கு தமிழர்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் உண்டு. அதை அனுபவிக்க உங்கள் சம்மதம் எமக்கெதற்கு.

    Reply
  • Mohan
    Mohan

    /இது உண்மை தான். தமிழர்கள் என்பது இனத்தை குறிக்கும். முஸ்லிம்கள் என்பது மதத்தை குறிக்கும். சைவர்கள் மாதிரி /பீசி
    அப்படியாயின் இஸ்லாம்/ முஸ்லீம் /சோனகர் /சியா /சுன்ணி என்பதற்கான விளக்கஙள் என்ன??

    Reply
  • மாயா
    மாயா

    நீங்களெல்லாம் எப்போது மனிதர்களாவீர்களென்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்?

    Reply
  • palli
    palli

    ://அப்போ இவ்வளவுகாலமும் என்னத்தை விட்டு பேசுகிறீர்கள்?//
    இதனாலேயே நான் இப்போது சில கட்டுரையில் வாதம் செய்ய வருவதில்லை;

    Reply
  • thurai
    thurai

    //துரை: தமிழர்கள் இந்து என்று எதையும் கேட்கவில்லை என்பது தெரியவில்லையோ?//நந்தா

    தெரியுமே, ராசபக்சவுடன் இருக்கும்போது இலங்கையர், கருணாநிதியோடு இருக்கும்போது தமிழர், வட இந்தியரோடு பேசும்போது இந்துக்கள். முஸ்லிம்களாக மட்டும் மாறமுடியவிலை.– துரை

    Reply
  • vanavil
    vanavil

    //நீங்களெல்லாம் எப்போது மனிதர்களாவீர்களென்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்?//

    உண்மைதான். இங்கே வாதிடுவோர்கள் இந்துக்களாக/ முஸ்லிம்களாக/ கிறிஸ்தவர்களாக தெரிகிறார்களே அல்லாமல் மனிதர்களாக தெரியவில்லை.

    Reply
  • BC
    BC

    //vanavil – இங்கே வாதிடுவோர்கள் இந்துக்களாக முஸ்லிம்களாக கிறிஸ்தவர்களாக தெரிகிறார்களே அல்லாமல் மனிதர்களாக தெரியவில்லை. //
    முதலில் இங்கே சோதிலிங்கம் குறிப்பிட்ட “மதங்களின் வரலாறு முட்டாள்தனமானது மதங்கள் பயத்தினால் உருவானது. மதங்களே என்றும் மனித குலத்தின் ஜக்கியப்பாட்டுக்கு இடையூறாக இருந்துள்ளது” என்ற சிறந்த உண்மையை புரிந்து கொள்ளவும்.
    மத அடிபடைவாதத்தை எதிர்பது மனிதன் என்ற புள்ளியை தொடுவதற்க்கு மிக அவசியமானது.
    இங்கு இந்து மதத்தை விமர்சித்தால் எல்லோரும் சேர்ந்து கும்மியடிக்க தயார். முற்போக்காளர் என்ற பெயரும் கிடைக்கும். ஆனால் உலகத்திற்கே தெரியும் ஒரு மதஅடிபடைவாதத்தை விமர்சிப்பது பிடிக்காத விடயம்.

    //அப்படியாயின் இஸ்லாம்/ முஸ்லீம் /சோனகர் /சியா /சுன்ணி என்பதற்கான விளக்கஙள் என்ன//
    சோனகர் என்பது ஒரு இனம் என்பது தேசம்நெற்றின் மூலம் அறிந்து கொண்டேன். அந்த இனத்தின் முக்கிய பிரச்சனையே தாங்கள் தமிழ் பேசுகிறோம் என்பது தான்.
    இஸ்லாம், முஸ்லீம் ஒரு மதத்தின் பெயர்கள். சியா, சுன்ணி அவர்களின் மதத்தில் உள்ள பிரிவுகள் ஈராக்கில் கடைசியாக நடந்த குண்டு வெடிப்பு படுகொலைகள் எல்லாம் இந்த பிரிவுகள் ஒருவருக்கு எதிராக ஒருவர் செய்தவையே.

    Reply
  • Henry
    Henry

    ///முதலில் இங்கே சோதிலிங்கம் குறிப்பிட்ட “மதங்களின் வரலாறு முட்டாள்தனமானது மதங்கள் பயத்தினால் உருவானது. மதங்களே என்றும் மனித குலத்தின் ஜக்கியப்பாட்டுக்கு இடையூறாக இருந்துள்ளது” என்ற சிறந்த உண்மையை புரிந்து கொள்ளவும்.
    மத அடிபடைவாதத்தை எதிர்பது மனிதன் என்ற புள்ளியை தொடுவதற்க்கு மிக அவசியமானது.
    இங்கு இந்து மதத்தை விமர்சித்தால் எல்லோரும் சேர்ந்து கும்மியடிக்க தயார். முற்போக்காளர் என்ற பெயரும் கிடைக்கும். ஆனால் உலகத்திற்கே தெரியும் ஒரு மதஅடிபடைவாதத்தை விமர்சிப்பது பிடிக்காத விடயம்.///BC

    இங்கு சோதிலிங்கம் என்னும் சகோதரர், மிக நீண்ட கருத்துக்களை மதங்களுக்கு எதிராகவும் குறிப்பாக இஸ்லாத்திற்கு எதிராகவும் தவறாக எழுதியுள்ளார்.

    மதங்கள் ஒருநாளும் மனித குலத்தின் ஐக்கியப்பாட்டுக்கு எதிரானதல்ல.

    மதங்கள் முட்டாள்தனம் எனக்கூறிக்கொண்டு, மனிதநேயம், பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு, மதங்களை நம்புபவர்களைவிட எந்தளவு மனிதநேயத்திற்கு மாற்றமாக உலகளாவிய அளவில் நடக்கின்றனர் என்பதை அவர்களின் நடவடிக்கைகள் மூலம் யாரும் அறிந்துகொள்ளலாம். இது விரிவாக நோக்கற்பாலது.

    மத அடிப்படைவாதம் என்னும் சொல் மேற்கத்தியவாதிகளினால் பொதுவாக எல்லா மதத்தினரையும் நாடி சூடப்பட்டு, ஈற்றில் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு மட்டும் பொருத்தமானது என்று மீடியாக்களால் மட்டுமல்ல, ஆங்கில அகராதியிலும் வரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    ஒரு மதத்தைச் சார்ந்தவர், அந்த மத விழுமியங்களின்படி தம் வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறாரோ, அவர் மத அடிப்படைவாதியாகி விடுகின்றார்.

    இப்படிப்பட்டவர்களை எதிர்ப்பதால், மனிதன் என்ற புள்ளியை தொடலாமாம். உலகில் மதங்களை நம்புபவர்கள் தான் அதிகமாக இருக்கின்றார்கள். இவர்கள் மனிதன் என்ற புள்ளியை தொட்டுக் கொண்டிருக்கவில்லையா?

    இஸ்லாத்தை விமர்சிப்பது ஒரு பிடிக்காத விடயம்??? சிரிப்புத்தான் வருகிறது. இன்று உலகில் எந்த ஊடகத்துறையை எடுத்துக்கொண்டாலும் இஸ்லாத்தை விமர்சித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இது நமக்கு பழக்கப்பட்ட சமாச்சாரம்.

    Reply
  • நந்தா
    நந்தா

    முஸ்லிம்கள் தனியினம் என்றுதானே தனியப் போய்விட்டீர்கள். பின்னர் எதற்காக தற்போது நடக்கும் தமிழ் பிரச்சனைகளில் “தனித்தரப்பு”, இந்தியா வழங்கும் வீடுகளில் பங்கு என்று திரிகிறீர்கள்?

    தமிழர்கள் என்று இன்று அடையாளப்படுத்துபவர்கள் இந்து என்றோ கத்தோலிக்கன் என்றொ அடையாளப்படுத்துவதில்லை. ஆயினும் பாதிரிகள் தமிழ் ஈழம் என்று புகுந்தது வேறுநோக்கங்களுக்காக.

    தமிழர்களின் பிரச்சனைகளில் தமிழர் என்று தங்களை அடையாளப்படுத்துபவர்கள் பங்கு பற்றட்டும். முஸ்லிம்கள் தங்கள் பிரச்சனைகளை பதவியில் இருக்கும் சிங்களத் தலைமைகளிடம் பேசுங்கள்.

    முஸ்லிம்களும் தமிழ் பேசுபவர்களே என்ற அடிப்படையில் தமிழர்கள், ஜெயபாலன் உட்பட, பலர் தமிழ் பிரச்சனைகளில் முஸ்லிம்களையும் சேர்த்துக் கொள்ளுகிறார்கள்.

    யதார்த்தத்தில் முஸ்லிம்கள் எப்பொழுதோ “பாகிஸ்தான்” எடுத்து தமிழருக்கும், தமிழுக்கும் சம்பந்தமில்லை என்று போய்விட்டனர். இல்லை என்று சொல்லுகிறீர்களா?

    தமிழரின் அரசியல் தீர்வு என்பதில் முஸ்லிம்கள் தலையிடுவது எந்த தர்மநியாயத்தின் அடிப்படையில்? தமிழரின் மொழிப் பிரச்சனையை தமிழர்களும் சிங்களவர்களும் பேசித் தீர்த்துக் கொள்ளட்டும்.

    வேலியில் போகிற ஓணானை எடுத்து மடியில் கட்டிய கதையாக முஸ்லிம்களை ஏன் தமிழ் பிரச்சனைக்குள் இழுத்து தமிழருக்கு வம்பு பண்ண வேண்டும்?

    இலங்கை அரசியலில் “மதம்” என்பதற்கு மிகப் பெரிய அங்கீகாரம் கொடுத்து அதன் அடிப்படையில் பாடசாலைகள் முதல் பலவற்றைப் பிரித்து விட்டவர்கள் முஸ்லிம்கள்.

    இந்த முஸ்லிம்களின் தலையீட்டினால் தமிழருக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை. இவர்களின் தலையீட்டினால் “தீர்வு” என்பதே கேள்விக் குறியாகிவிடும்!

    Reply
  • நந்தா
    நந்தா

    //தெரியுமே, ராசபக்சவுடன் இருக்கும்போது இலங்கையர், கருணாநிதியோடு இருக்கும்போது தமிழர், வட இந்தியரோடு பேசும்போது இந்துக்கள். முஸ்லிம்களாக மட்டும் மாறமுடியவிலை.– துரை//
    மேற்படி விளையாட்டுக்கள் அனைத்தும் உங்கள் பாதிரிகளினதும் புலிகளினதும் விளையாட்டு. சிவாஜிலிங்கம் அதனைத்தான் செய்தார்.

    முஸ்லிம்களாக மாற வேண்டுமா? இதென்ன புது வம்பு? அப்போ உங்கள் பிரச்சனை இந்துக்களை ஒழித்துக் கட்டுவது என்பதுதான். அதுதானே வத்திக்கனினதும் நோக்கம்!

    வியாபாரத்துக்கு வந்ததாக சொல்லும் முஸ்லிம்கள் இப்பொழுது தங்களுக்கு ஒரு “பிரதேசம்” இருந்தது என்றும் கதை கட்டியாகி விட்டது.

    அதாவது தமிழனுக்கு எந்தப் பிரதெசமும் கிடையாது என்பதை முஸ்லிம்கள் சிங்களவரோடு சேர்ந்து ஒத்தூதிக் கடைசியில் தங்களுக்கு ஒரு பிரதேசம் இருந்தது எங்கிறார்கள். இதெப்படி இருக்கு?

    முன்னரும் நான் குறிப்பிட்டிருக்கிறேன். தமிழர்களுக்கு சிங்களவரைவிட “மிகப் பெரிய” தொல்லை கொடுக்க திரிபவர்கள் இந்த முஸ்லிம்கள் என்பதுதான்.

    விரைவில் நிஸ்தாரும் முஸ்லிகளும் இலங்கை முஸ்லிம்களுக்கும், சிங்களவருக்கும் மாத்திரம் சொந்தமானது என்று அறிவித்து அசத்தப் போகிறார்கள்!

    //தமிழர்களின் அரசியலில் முஸ்லிம்கள் எப்போது கைவைத்தார்கள்? தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வரும்போது, நீதியாக முஸ்லிம்களுக்கும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தப்பல்ல. இது தமிழ்-சிங்கள அரசியல் அல்ல. ஒடுக்கப்பட்ட தமிழ், முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சனை.//Henry

    தமிழர் அல்ல என்று அடித்துக் கூறும் முஸ்லிம்களுக்கு தமிழரின் “தீர்வில்” என்ன பங்கு கொடுக்க இவர் திரிகிறார்?

    Reply
  • Henry
    Henry

    //தமிழர் அல்ல என்று அடித்துக் கூறும் முஸ்லிம்களுக்கு தமிழரின் “தீர்வில்” என்ன பங்கு கொடுக்க இவர் திரிகிறார்//
    முதலில் இது தமிழர் பிரச்சனை என்று மட்டும் பார்ப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். தமிழ்பேசும் முஸ்லிம்களை, அவர்களும் தமிழர்கள் என்று சொல்லி, அரசியல் இலாபம் அடைந்தபின் எத்தனை தடவை அவர்களை வேண்டாவெறுப்பாக விலக்கி வைத்துள்ளார்கள் நமது தமிழ்த் தலைமைகள்.

    இப்போது நமது தமிழ் தலைமைகள் இதை உணர்ந்து உள்ளனர். தீர்வு என்று வரும்போது, எல்லாருக்கும் நீதியாக கிடைக்க வேண்டும் என்பதே நம் தமிழரின் உறுதியான நிலைப்பாடு, நந்தாவைத் தவிர்த்து.

    //முன்னரும் நான் குறிப்பிட்டிருக்கிறேன். தமிழர்களுக்கு சிங்களவரைவிட “மிகப் பெரிய” தொல்லை கொடுக்க திரிபவர்கள் இந்த முஸ்லிம்கள் என்பதுதான்.// நந்தா, உங்களைப் போன்றவர்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, ஒற்றுமையோடு வாழ முற்படும் எல்லா மதத்தவர்களுக்கும் பெரும் தொல்லைதான்.

    /தமிழரின் மொழிப் பிரச்சனையை தமிழர்களும் சிங்களவர்களும் பேசித் தீர்த்துக் கொள்ளட்டும்// தமிழருக்கும் சிங்களவருக்கும் மொழிப்பிரச்சனையா இருக்கிறது நம் நாட்டில்?

    Reply
  • Henry
    Henry

    ///தமிழர்களின் பிரச்சனைகளில் தமிழர் என்று தங்களை அடையாளப்படுத்துபவர்கள் பங்கு பற்றட்டும். முஸ்லிம்கள் தங்கள் பிரச்சனைகளை பதவியில் இருக்கும் சிங்களத் தலைமைகளிடம் பேசுங்கள்.//

    தமிழர் பிரச்சனை மட்டும் இருப்பதை தவிருங்கள். வட, கிழக்கில் தமிழ், முஸ்லிம்கள் மட்டும் வாழ்வதில்லை. இப்போது சிங்கள மக்களும் சரிசமமாக வாழ்கின்றனர். அதனால், அரசாங்கம் ஒருபோதும் அங்கு வாழும் சிங்கள மக்களின் உரிமைகளைப் புறந்தள்ளிவிட்டு, தமிழ், முஸ்லிம்களுக்கிருக்கும் பிரச்சனைகளை மட்டும் தீர்க்கப் போவதில்லை.

    அரசாங்கம் எல்லா இன, மதங்களையும் கலந்தாலோசித்துவிட்டுத்தான் ஒரு தீர்வொன்றைத்தரும்.

    நந்தா, நீங்கள் ஒன்று செய்யுங்கள். வட, கிழக்கில் வாழும் முஸ்லிம், சிங்கள மக்களின் பிரச்சனைகளை விவாதிக்க தேவையில்லை. தமிழரின் பிரச்சனைகளை மட்டும் தீருங்கள் என்று, ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுங்கள். அவரே சொல்லிவிட்டார், தீர்வு என்பது திடீர் நூடில்ஸ் அல்ல என்று!

    Reply
  • thurai
    thurai

    //மேற்படி விளையாட்டுக்கள் அனைத்தும் உங்கள் பாதிரிகளினதும் புலிகளினதும் விளையாட்டு. சிவாஜிலிங்கம் அதனைத்தான் செய்தார்//நந்தா
    பாதிரிகளினதும், புலிகளினதும் பெற்ரோர் யாவரும் இந்துக்களே/தமிழர்களேயாகும். அல்லாவிடில் புலி எதிர்ப்பாள்ர்கள் மட்டும் தமிழர்களா? கிறிஸ்தவர்கள் புலிகளை எதிர்க்கக் கூடாதா?

    //முஸ்லிம்களாக மாற வேண்டுமா? இதென்ன புது வம்பு? அப்போ உங்கள் பிரச்சனை இந்துக்களை ஒழித்துக் கட்டுவது என்பதுதான். அதுதானே வத்திக்கனினதும் நோக்கம்// தமிழர்களின் இந்து மதம் தமிழர்களிற்கு செய்த நன்மைகள் என்ன? முஸ்லிம் மதம் செய்த தீமைகளென்ன?

    //வியாபாரத்துக்கு வந்ததாக சொல்லும் முஸ்லிம்கள் இப்பொழுது தங்களுக்கு ஒரு “பிரதேசம்” இருந்தது என்றும் கதை கட்டியாகி விட்டது// ஈழத்தமிழகதியாக உலகமெங்கும் குடியேறி, இந்துக்குருக்களிற்கு கோவில்கட்டி வேலை கொடுக்கும் தமிழர்களை விட, இலங்கையில் வியாபாரத்திற்கு வந்து தமிழினைப் பேசும் முஸ்லிகள் எவ்வளவோ மேல்.– துரை

    Reply
  • நந்தா
    நந்தா

    முஸ்லிம்கள் தங்களுக்குத் “தமிழ்” பிரச்சனை எதுவும், அதாவது “மொழி” பிரச்சனை எதுவும் இல்லை என்று தனியாகப் போய்விட்டவர்கள். அதனை இல்லை என்று எவராவது சொல்லுகிறீர்களா?

    அரசின் தீர்வு என்பது முஸ்லிம் அல்லது இந்து அல்லது பவுத்த என்ற அடிப்படையில் வரபோவது அல்ல.

    இன்று இந்தத் தீர்வு என்பது கண்டிப்பாக “இந்திய” அரசின் ஆலோசனை அல்லது அங்கீகாரத்துடன்நடை முறையாக்கப்படும் என்பதும் தமிழ் மக்களின் மொழி சார்ந்த அரசியலின் அடிப்படையிலேயே தீர்வு அமையும் என்பதும் தெரிந்துள்ள விஷயம்.

    இன்று இலங்கையில் “முஸ்லிம்கள்” தேசிய இனம் என்று குரலெழுப்பி அங்கீகாரம் பெற முஸ்லிம்கள் முயற்சிப்பதும் அதற்கு இந்தியா, இலங்கை, தமிழர்கள், சிங்களவர் செவி சாய்க்க வேண்டும் என்று கோருவதும் கோமாளித்தனமானது.

    மொழிப் பிரச்சனையில் மதம் புகுந்து எதனையும் சாதிக்க முடியாது.

    வட கிழக்கில் இருப்பவர்களின் பிரச்சனைகள் தீர்ப்பது என்பது தமிழ் பற்றியது அல்ல. அரசு எதனை செய்ய உத்தேசித்துள்ளது என்பது இதுவரை யாருக்கும் தெரியாதநிலயில் “தமிழ்” பிரச்சனைக்கான தீர்வில் “முஸ்லிம்கள்” தங்களை தமிழர்கள் என்று ஒப்புக் கொண்ட பின்னரே அவர்களுக்கும் அதில் பங்களிக்கும் வாய்ப்புக் கிடைக்கும். தவிர “முஸ்லிம்” என்று இலங்கை சட்டப் புத்தகத்தில் எழுதி வைக்க முடியாது.

    Reply
  • நந்தா
    நந்தா

    துரையின் பிரச்சனை என்ன? இந்துக்கள் ஒழிய வேண்டும் அல்லது வத்திக்கானின் ஆட்சி இலங்கையில் வர வேண்டும் என்பதுதான் என்று புரிகிறது.
    அது நடக்காது!

    Reply
  • Henry
    Henry

    //இன்று இந்தத் தீர்வு என்பது கண்டிப்பாக “இந்திய” அரசின் ஆலோசனை அல்லது அங்கீகாரத்துடன்நடை முறையாக்கப்படும் என்பதும் தமிழ் மக்களின் மொழி சார்ந்த அரசியலின் அடிப்படையிலேயே தீர்வு அமையும் என்பதும் தெரிந்துள்ள விஷயம்.// nantha

    இவர் சொல்வதுபோல் ஒருநாளும் நடக்கப்போவது இல்லை. அப்படியே இந்தியாவின் அழுத்தத்திற்கு நடந்தாலும், நடைமுறையில் நடப்பதற்கு சிங்கள மக்கள் இடங்கொடுக்க மாட்டார்கள். வெகுவிரைவில் செத்துவிடும். அப்படியே சிங்கள மக்கள் இடங்கொடுத்தாலும், ஆளுவது, தலைமைப் பதவிகளில் இருப்பது சிங்கள மக்களாகத்தான் இருப்பார்கள். பாதுகாப்பு முழுவதும் சிங்கள மக்களிடம் இருக்கும். இப்படிப்பட்ட தீர்வுதான் கிடைக்கும்.
    இப்பொழுது நடந்துகொண்டிருப்பது அதுதான். இது தொடரும்.

    நாளடைவில் வட, கிழக்கில் சிங்கள மக்கள் பூராக பரவி இருப்பர். வட, கிழக்கில் குடியேறியுள்ள சிங்கள மக்களும் தமது உரிமைகளை சிறிதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தமிழ், முஸ்லிம்களுக்கு சலுகைகளைத் தந்து, தீர்வையே மறக்கடிப்பர். அந்த சலுகைகளை பெறுவதற்கு தமிழ், முஸ்லிம்கள் அடித்துக்கொண்டு சாவார்கள். தமிழ் மொழிக்கு அச்சமயம் மதிப்பிருக்காது. இதுதான் நடக்கும்.

    Reply
  • Abdul
    Abdul

    நந்தாவின் பின்னோட்டங்களைப் படிக்கத் துவங்கிய காலத்திலிருந்து நந்தா நன்கு வாசிப்பறிவுள்ள ஒருவர் என்றுதான் நினைத்திருந்தேன்.ஆனால் இப்போதுதான் விளங்குகின்றது நந்தா தான் சார்ந்த இனம் அல்லாத எந்த ஒரு இனத்தையும் நேர்மனப்பாங்குடன் பார்க்க விரும்பாத அல்லது மறுக்கின்ற ஒரு சாமானியன். ஏனைய சமய சமூகங்களுக் கெதிராக எங்கெல்லாம் கருத்துக்கள் உள்ளனவோ அவற்றைத் தேடி நேசித்து வாசிக்கும் ஒருவர்.உதாரணமாக நந்தாவின் பின்னோட்டங்களில் சில…

    //ஆயினும் கிழக்கிலங்கயைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் கேரளத்தவர்கள். சில வேளைகளில் அப்படியான ஒரு “பணிக்கர்” இந்த யானை பிடித்த கதையை “முஸ்லிம்” ஆக மாற்றுவது திருகுதாளத்தின் உச்சக் கட்டம்!//
    //பணிக்கர் பிரச்சனையில் முஸ்லிம் பணிக்கர்கள் கிடையாது. இருந்தால் கூறுங்கள் பார்க்கலாம்// நந்தா

    நந்தா. தலதா மாளிகைக்கு வழங்கப்பட்ட ராஜா என்ற பெயரிடப்பட்ட கொம்பன் யானை ஏறாவூரைச் சேர்ந்த இப்றாஹிம் பனிக்கர் என்பவரால்தன் வழங்கப்பட்டது.தலதா மாளிகைப் பக்கம் போனால் அங்கு அந்த யானைக்குச் சிலை செய்து அதனருகே அவ் யானையின் வரலாறு பற்றி செப்புத் தகடு பொறித்திருக்கின்றார்கள்.அவசியம் வாசித்துப் பாருங்கள்.அது உங்களை வெளியுலகத்துக்கு கொண்டு வர ஒரு வேளை உதவி செய்யலாம்.
    //காஷ்மீரி என்பது ஒரு போலாந்து வார்த்தை. கிழக்கு ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கு வர்த்தகர்களாகவும் ஆடு மாடு மேப்பவர்களாகவும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வந்து நிரந்தரமாகியுள்ளனர். சில வேளைகளில் இவர்களின் வரவைத்தான் “ஆரிய” படையெடுப்பு என்று இந்தியாவில் குறிப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.// நந்தா

    நீஙகள் நினைக்கலாம் அதுதான் உண்மை என்று நீங்கள் அடம்பிடிக்கக் கூடாது.”வால்காவிலிருந்து வைகை வரை” இது ஒரு சரித்திர நாவல். அவசியம் வாசியுங்கள். உங்கள் கருத்து சரிதானா என்பதை நீங்களே தீர்மானிக்கலாம்.

    //வட கிழக்கில் இருப்பவர்களின் பிரச்சனைகள் தீர்ப்பது என்பது தமிழ் பற்றியது அல்ல. அரசு எதனை செய்ய உத்தேசித்துள்ளது என்பது இதுவரை யாருக்கும் தெரியாதநிலயில் “தமிழ்” பிரச்சனைக்கான தீர்வில் “முஸ்லிம்கள்” தங்களை தமிழர்கள் என்று ஒப்புக் கொண்ட பின்னரே அவர்களுக்கும் அதில் பங்களிக்கும் வாய்ப்புக் கிடைக்கும். தவிர “முஸ்லிம்” என்று இலங்கை சட்டப் புத்தகத்தில் எழுதி வைக்க முடியாது//நந்தா

    நந்தா நீங்கள் இன்னும் 83களில்தான் நிற்கின்றீர்கள். உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமோ இந்திய வெளியுறவு அமைச்சர் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பை சந்தித்து விட்டுப் போயுள்ளார். ஆனால் த.தே.கூ ஐ சந்திக்கவில்லை. அது ஏன் தெரியுமோ? இதற்கு விடை நான் கூறப்போவதில்லை.உங்கள் மூளைக்கும் கொஞ்சம் வேலை கொடுத்துப் பாருங்கள்.

    Reply
  • thavam
    thavam

    முஸ்லீம்கள் தமக்கு உள்ள பிரச்சினைகள் என்ன என்று எப்பசரி சொன்னார்களா? அதற்காக போராடினார்களா? நீங்கள் என்னடா என்றால் அவர்களும் இனம் என்று சொல்லுவதைப் பார்த்தால் கத்தோலிக்கர்களும் முஸ்லீம்களைபபொலவே தம்மை மிகவும் கடினமாக ஒரு மதப்போக்கில் வாழ்கிறார்கள் அவர்களும் ஒரு இனமாக்க வேண்டும் நீங்கள் நீலைமைகளை சிக்கலாக்குகிறீர்கள் இலங்கையில்’ மொழி அடிப்படையிலேயே தான் பிரச்சினை மத அடிப்படையில் பிரச்சிகனகள் இல்லை என்றாவது இஸ்லாமியர்களுக்கு மதம் காரணமாக பிரச்சினைகள் எழுந்தனவா இல்லையே? தமிழ் மொழி காரணமாக பிரச்சினைகள் எழுந்ததாலேயே தான் தமிழ்ர்கள் போராடினார்கள் முஸ்லீம்கள் பார்த்துக்கொண்டு மட்டும் இருக்கவில்லை அரசுடன் சேர்ந்து தமிழர்களை கொன்றார்கள் எஸ்டிஎப் அன்று இவர்கள் அரசுக்கு சொல்லியிருக்கலாமே தம்மை தமிழர்களுக்கு எதிராக பாவிக்க வேண்டாம் என்று எல்லாம் சந்தர்ப்பம் பாரத்துகொண்டிருக்கும் கெட்ட குணாம்சம்.

    Reply
  • BC
    BC

    மதங்கள் மனித குலத்தின் ஒற்றுமையை சிதைப்பது என்பது கண் முன்னால் காணும் உண்மைகள் முழுவதுமே மதவாதத்தால் பாதிக்கபட்டிருப்பவர்களால் உண்மையை பார்க்க முடியாது.முஸ்லிம் மதத்தின் பிரிவுகளே சியா, சுன்ணி ஒருவருக்கொருவர் வெடிகுண்டு வைத்து குழந்தைகளும் பெண்களும் உட்பட எவ்வளவு தங்கள் மதத்தவரையே கொல்கின்றனர். மற்றும் காயமுற்று ஊனமடைவோர் ஏராளம்.
    சோதிலிங்கத்தின் சிறந்த கருத்துக்களை உங்களால் விளங்கி கொள்ள முடியாது தான்.
    //ஒரு மதத்தைச் சார்ந்தவர், அந்த மத விழுமியங்களின்படி தம் வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறாரோ, அவர் மத அடிப்படைவாதியாகி விடுகின்றார். //
    உண்மை தான். முஸ்லிம் மதம் தவிர்ந்த மற்றைய மதத்தோர் யதார்த்தத்தை உணர்ந்து அதற்கேற்றால் போல் ஓரளவு மாறுகிறார்கள். முஸ்லிம் மதத்தவர்கள் ஆயிரம் வருடத்துக்கு முன்பு தங்கள் புத்தகம் கூறியபடி அப்படியே நடக்க வேண்டும் என்று மத அடிப்படைவாதிகளாக நிற்கின்றனர். அதனால் தான் முஸ்லிம் மதத்தை பின்பற்றுவோர் உலகத்துக்கு பிரச்சனைக்கு உரியவர்களாக இருக்கிறார்கள்.எனக்கு தெரிந்த சில முஸ்லிம்கள் அன்பாக பழகுவார்கள் அதற்க்கு காரணம் அவர்கள் முஸ்லிம் மதத்தை பற்றி அலட்டி கொள்வதில்லை. பிறப்பால் முஸ்லிம் மதம். முஸ்லிம் அல்லாத சுதந்திர நாட்டில் இருப்பதால் அவர்களால் சுதந்திரமாகவும் இருக்க முடிகிறது.
    AFP November 29
    TWO Afghans accused of converting to Christianity, including a Red Cross employee, could face the death penalty, a prosecuting lawyer has warned.
    Musa Sayed, 45, and Ahmad Shah, 50, are being detained in the Afghan capital awaiting trial, the prosecutor in charge of western Kabul, Din Mohammad Quraishi, told AFP.

    “They are accused of conversion to another religion, which is considered a crime under Islamic law. If proved, they face the death penalty or life imprisonment,” Mr Quraishi said.

    Reply
  • மாயா
    மாயா

    எமது நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் ; அனைத்து உரிமைகளும் இருக்க வேண்டுமா அல்லது ஒரு இனத்துக்கு மட்டும் உரிமை இருக்க வேண்டுமா? இதற்கு ஒரு முடிவுக்கு வாருங்கள்.

    சிலருக்கு புலி அழிய வேண்டும். சிலருக்கு சோனகர்கள் அழிய வேண்டும். சிலருக்கு கிறிஸ்தவர்கள் அழிய வேண்டும். சிலருக்கு சிங்களவர் அழிய வேண்டும். சிலருக்கு தமிழர் அழிய வேண்டும் என ஏகப்பட்ட எண்ணங்கள். என்னைப் பொறுத்தவரை இவர்கள் முதலில் அழிய வேண்டும்.

    எந்த ஒரு நாட்டிலும் ஒரு இனம் மட்டும் அல்லது ஒரு மதம் மட்டும் இல்லை. இலங்கை வாழ் அனைவருக்கும் ; அனைத்து உரிமைகளும் இருக்க வேண்டும். அதற்காக எண்ணாதவர்கள் மனிதர்களே இல்லை.

    தமிழர் நாடு முழுவதும் பரவி வாழும் போது சிங்களவர் பரவி வாழ்வதில் தவறில்லை. அதை ஏற்றுக் கொள்ளாவிடில் அது கடுமையாக திணிக்கப்படும். அதை மாற்ற எவராலும் முடியாது. சிங்களவர்கள் தமிழைக் கற்கிறார்கள். தமிழர் சிங்களத்தை கற்கிறார்கள். எனவே மொழி ஒரு பிரச்சனையாக எதிர்காலத்தில் இருக்காது. யாரும் எதிர்காலத்தில் அடித்துக் கொண்டு சாகவும் மாட்டார்கள்.

    Reply
  • thurai
    thurai

    //துரையின் பிரச்சனை என்ன? இந்துக்கள் ஒழிய வேண்டும் அல்லது வத்திக்கானின் ஆட்சி இலங்கையில் வர வேண்டும் என்பதுதான் என்று புரிகிறது. அது நடக்காது!//நந்தா
    வத்திக்கானில் பிறந்த எவரும் நல்லூரில் போய் அங்க பிரதட்சை செய்ததாக நான் இன்னமும் அறியவில்லை. ஆனால் நல்லூரில் அங்கபிரதட்சனம் செய்தவர்கள் அல்ல்லூயாவாக உலகமெங்கும் மாறிவருகின்றனர். இந்துக்களை ஒழிக்க முடியாது. வட இந்தியரகள் இந்து சமய அடிப்படையில் அரசியல் பலம் கொண்டு தென் இந்தியத்தமிழரையும், இலங்கைத் தமிழரையும் தமது காலுக்குள் நசுக்கியே வைத்துள்ளனர்.– துரை

    Reply
  • Tharmu
    Tharmu

    //தமிழர்களின் அரசியலில் முஸ்லிம்கள் எப்போது கைவைத்தார்கள்? தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வரும்போதுஇ நீதியாக முஸ்லிம்களுக்கும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தப்பல்ல. இது தமிழ்-சிங்கள அரசியல் அல்ல. ஒடுக்கப்பட்ட தமிழ்இ முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சனை//.கென்றி

    இவற்றுக்காக முஸ்லீம்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் தமிழர்களுக்கு எதிராக அரச இராணுவத்துடன் சேர்ந்து இயங்கினார்கள் இதுதமிழ் மக்கள் மனதில் ஆணி அடித்தாயிற்று.

    Reply
  • thurai
    thurai

    //இவற்றுக்காக முஸ்லீம்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் தமிழர்களுக்கு எதிராக அரச இராணுவத்துடன் சேர்ந்து இயங்கினார்கள் இதுதமிழ் மக்கள் மனதில் ஆணி அடித்தாயிற்று.//தர்மு

    முஸ்லிம்கள் யாவரும், சிங்களவர் யாவரும் தமிழர்களிற்கு எதிராக செயற்படவில்லை. இதற்காக முஸ்லிம்கள் அனைவரையும் ,சிங்களவர் அனைவரையும் குற்ரம் சுமத்தினால் புலிகள் ரஜீவைக் கொன்றதற்காக இலங்கைத் தமிழர் அனைவரையும் இந்தியர்கள் பழிவாங்குவதையும்
    ஏற்ருக் கொள்வோமா?– துரை

    Reply
  • mahintha
    mahintha

    கடந்த காலத்தில் இனவெறி புலிவடிவெடுத்திருந்து கால்பங்கு மக்களை சொந்தநாட்டில்லிருந்து துரத்தியது. இப்பொழுது மதவெறி பிடித்து முழுத் தமிழரையும் நாட்டை விட்டு துரத்தப் போகிறது. இதுவே பி.சி- நந்தா எழுத்துக்கள் முன்னறிவிக்கினறன.

    இன மத வெறியர்களே எம்மை சந்தித்துள்ள அரசியல் சவால்கள். நல்லதொரு ஈழத்தமிழன் வடக்கில் இருந்து முஸ்லீம் மக்கள் துரத்தப்பட்டதையே எண்ணியே கவலைப் படுவான். இன்றைய நிலயில் இருபது வருட துன்பவாழ்வுக்கு இடையில் வருவதை எண்ணி புது வாழ்வை தொடங்குவது பற்றி அக்கறை படுவான் மகிழ்ச்சியடைவான். நீங்களோ களியாட்டம் போடுகிறீர்கள். போடுங்கள். உங்களுக்கு நல்ல சேதிகளோ அடையாளங்களோ கிடைக்கப்போவதில்லை.

    Reply
  • haran
    haran

    //நந்தா நீங்கள் இன்னும் 83களில்தான் நிற்கின்றீர்கள். உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமோ இந்திய வெளியுறவு அமைச்சர் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பை சந்தித்து விட்டுப் போயுள்ளார். ஆனால் த.தே.கூ ஐ சந்திக்கவில்லை. அது ஏன் தெரியுமோ? இதற்கு விடை நான் கூறப்போவதில்லை.உங்கள் மூளைக்கும் கொஞ்சம் வேலை கொடுத்துப் பாருங்கள்//abdul

    உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்க் கட்சிகளின் அரங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சந்தித்து பேச இருந்த போதிலும் இந்தச் சந்திப்புக்கள் இறுதி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டமையினாலேயே இந்தச் சந்திப்புக்கள் இரத்துச் செய்யப்பட்டதாக குறித்த கட்சிகளுக்கு இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. telo news.

    Reply
  • Henry
    Henry

    //அரசு எதனை செய்ய உத்தேசித்துள்ளது என்பது இதுவரை யாருக்கும் தெரியாதநிலயில் “தமிழ்” பிரச்சனைக்கான தீர்வில் “முஸ்லிம்கள்” தங்களை தமிழர்கள் என்று ஒப்புக் கொண்ட பின்னரே அவர்களுக்கும் அதில் பங்களிக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.//

    இலங்கை அரசு, பெரும்பான்மை சிங்கள மக்கள், தமிழ் அரசியல் தலைமைகள் போன்றவை, தமிழர்கள்போல் முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம், மத கலாச்சாரத்தைக் கொண்டவர்கள் என்று எப்போதோ ஏற்றுக்கொண்டு விட்டார்கள். மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாததைப்பற்றி முஸ்லிம்கள் கவலைப்படத் தேவையில்லை. எந்தத் தீர்வும் தேசிய இனங்களான தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர் அபிலாஷைகளின் அடிப்படையிலேயே நடைபெறும். அதை நம் ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

    Reply
  • நந்தா
    நந்தா

    ஒரு சிலர் வேறு வேறு பெயர்களில் எனக்குப் பதில் தருகிறார்கள். பணிக்கர்கள் யானை பிடிக்க அனுரதபுரி மன்னர்கள் காலத்திலேயே வன்னிக்கு வந்து விட்டனர். வவுனியா மாவட்டத்தில் உள்ள பணிக்கன் குளம், பணிக்கன்நீராவி என்ற ஊர்களும், வன்னியில் இன்றும் ஆடப்படும் வேலு பணிக்கன் கதைகளும் அதற்குச் சான்று.

    ஆனால் இந்த முஸ்லிம் பணிக்கன் கதை கண்டிப்பாகக் கட்டுக் கதை. கண்டியில் சிலை வைத்து செப்புத் தகட்டில் எழுதியதும் இப்பொழுதுதான். முஸ்லிம்கள் யானை பிடித்ததாக வரலாறுகள் எதுவும் கிடையாது. மொத்தத்தில் யாரோ ஒரு பணிக்கன் பிடித்த யானைக்கு முஸ்லிம் உரிமை கோரியுள்ளார். முஸ்லிம்கள் இப்பொழுது தமிழர்களுக்கு முன்னரே இலங்கைக்கு வந்து விட்டதாக கதயளக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளனர்.

    இந்த விஷயத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் வரலாறுகளை ஆராய்வதை விட வத்திக்கானுக்குப் பின்னால் போய்நின்றால் காரியம் சாதிக்கலாம் என்று எண்ணுகிறார்கள். முஸ்லிம்களுக்கு இன்று தமிழரை விட அரசுடன்நெருக்கம் உண்டு என்பதினால் அவர்கள் இப்பொழுது சவாரி செய்யப் புறப்பட்டிருப்பது தமிழர்களின் தலையில் என்பது மாத்திரமல்ல, தமிழர்களின் வரலாறின் மீதும் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    புலிகளின் 30 வருட அராஜகத்தினால் தமிழர்களின் சொத்துக்கள் மாத்திரமல்ல, அவர்களின் வரலாற்றையும் முஸ்லிம்கள் திருடுவதற்கு வாய்ப்பையும் உண்டாக்கியுள்ளனர்.இந்திய வெளியுறவு அமைச்சர் முஸ்லிம்களை சந்தித்தார் என்று செய்தி வந்துள்ளது. என்ன பேசினார் என்று எதையும் காணோம்! அது பற்றி கண்டிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் தகவல்களை வெளியிடும் என்று நான் நம்பவில்லை.

    இன்று தமிழர்களை ஓரம் கட்ட நினைப்பவர்கள் முஸ்லிம்கள் என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. 30 வருட புலி விளையாட்டு அதற்கு தாராளமாக இடம் கொடுத்துள்ளது. அதென்ன மாயா “இந்துக்களை ஒழிக்க” அலைபவர்கள் பற்றி மவுனம்?

    துரையின் கருத்துப்படி தென் இந்தியர்கள் வட இந்தியர்களின் கீழ் இருக்கிறார்களாம். இப்படித்தானே பாதிரிகளும் தமிழர்களை சிங்களவர் அடக்குகிறார்கள் என்று கதயளந்தார்கள். புலிகளின் “சாணக்கியர்கள்” என்ற பாதிரிகள் இன்று இராஜபஷவின் குசினியினூடு எதாவது கிடைக்குமா என்று திரிவது “தமிழ்” மீது கொண்ட பற்றா அல்லது சில்லறை கிடைக்கும் என்ற நம்பிக்கையா? ஆயினும் ஒன்று மட்டும் தெளிவு. அரசுடனான தமிழர்களின் நெருக்கம் முஸ்லிம்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

    முஸ்லிம் என்றால் மத வெறி இல்லையாம். ஆனால் இந்து என்றால் மத வெறியாம்.

    Reply
  • Benedict
    Benedict

    இதன்பிறகு யாழ்ப்பாணத்து கிறிஸ்தவர் யாவரும் கிறிஸ்தவர் என்றே அழைக்கப்பட வேண்டும். தமிழர் என்று சொல்லக் கூடாது. தீர்வு கிடைத்தபின், யாழ்ப்பாணத்து இந்துக்கள் எம்மையும் எமது பாதிரிமார்களையும் இழிவுபடுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். நியாயமான கிறிஸ்தவ சனம் யாழ்ப்பாணத்தில் இருக்குது. அதனால் தீர்வுக்கு நாம் ஆதரவு தெரிவிக்கக் கூடாது. இந்துக்களின்கீழ் கிறிஸ்தவர்கள் இருப்பதைவிட, சிங்கள மக்களின்கீழ் இருப்பதுதான் நமக்கு நல்லது.

    Reply
  • BC
    BC

    Benedict கோரிக்கை நியாயமானது. குறிப்பாக மத ஒற்றுமையில் பற்றுதி கொண்ட கருத்தாளர் மகிந்தாவும், மற்றவர்களும் ஆதரவு தெரிவிக்க கடமைபட்டவர்கள். ஒரு மதத்துக்கு மட்டுமே எப்போதும் முன் உரிமை கொடுப்பதும் அதை தான் ஒற்றுமை என்பதும் நியாயம் அல்ல.

    Reply
  • பல்லி
    பல்லி

    மதம் கொண்ட வார்த்தையின்றி
    மதம் பற்றி பேசுங்கள்
    மனிதத்தை தொலைத்து விட்டு
    மதம் ஒன்றை தேடாதீர்கள்

    மதத்துக்கு நிறம் இல்லை
    மதம் அனைத்தும் சொல்லுகிறது
    மதகலவரம் தொடர்வதால்
    மதத்தின் நிறம் சிவப்பு போலும்

    மனிதநேயம் இருக்க வேண்டும்
    மன்னிக்க தெரிய வேண்டும்
    மக்கள் ஒன்றாய் விழிக்க வேண்டும்
    மதங்கள் இங்கே தூங்க வேண்டும்

    மதங்கள் மோதும் போது
    மக்கள் வாழ்வு சிதைகிறது
    மதம் பிடித்த சிலராலே
    மதமென்னும் பிரிவினைகள்

    மனிதனிடம் சிரிப்பு இருக்க
    மதங்களுக்குள் வெறுப்பு எதற்கு
    மதம் விட்டு பேசுங்கள்
    மனம் விட்டும் பேசுங்கள்

    நட்புடன் பல்லி;

    Reply
  • விளங்காமுடி
    விளங்காமுடி

    //…….. உங்களுக்கு நல்ல சேதிகளோ அடையாளங்களோ கிடைக்கப்போவதில்லை.//
    mahintha on November 29, 2010 10:08 pm

    மகிந்த என்னும் பேருக்குள் பதுங்கிக் கொள்ளும் மனிதனே!

    உம் எழுத்துகள் உம்மை யாரென்று காட்டி நிற்கிறது.

    இனவெறியும், மதவெறியும் எப்படி மறைமுகமாக வெளிவரும் என்பதை யோசிக்க வைக்கிறது.

    Reply
  • நந்தா
    நந்தா

    பெனடிக்ட்:
    உங்கள் கிறிஸ்தவர்கள் 500 வருடங்களாக இலங்கயில் இந்துக்களின்/பவுத்தர்களின் தலையில் இருந்து இறுதியில் தமிழ் என்று முள்ளிவாய்க்கால் வரை போயாயிற்று.

    நீங்கள் சிங்களவர்களொடு இருந்தால் என்ன, இந்துக்களோடு இருந்தால் என்ன! உங்களுடைய வெள்ளை எசமானர்கள் இனி வரப்போவதில்லை என்பது மட்டும் புரிந்தால் சரி!

    Reply
  • thurai
    thurai

    //முஸ்லிம் என்றால் மத வெறி இல்லையாம். ஆனால் இந்து என்றால் மத வெறியாம்.//நந்தா
    முஸ்லிம்கள் முஸ்லிம்களாக உலக்முழுவதும் ஒன்றாகுகின்றர்கள். ஆனால் இந்துக்கள் என்று சொல்லும் தமிழர் யாவரும் ஒரு வீட்டிலோ அல்லது ஒரு ஊரிலோ ஒன்றாக இருக்கமாட்டார்கள்.

    //நீங்கள் சிங்களவர்களொடு இருந்தால் என்ன, இந்துக்களோடு இருந்தால் என்ன! உங்களுடைய வெள்ளை எசமானர்கள் இனி வரப்போவதில்லை என்பது மட்டும் புரிந்தால் சரி!//நந்தா
    வெள்ளை எசமான்கள் வரமாட்டார்கள் இலங்கைக்கு. ஆனால் வெள்ளை எசமான்கள் வாழும் நாடுகளிலும் முஸ்லிம்களின் நாடுகளிலும் தான் இந்துக்கள் அகதிகளாகவும், பணம் சேர்க்கலாமென்றும் படையெடுத்து போய் வாழ்வை அமைக்கின்றனர். அது மட்டுமல்ல ம்மனையும்,சிவனையும்
    அங்கெல்லாம் அமர்த்தி புலிகளின் பணப்பை நிரம்பியதுபோல் அர்ச்சகர்களின் பைகழும் பணத்தால் நிரம்புகின்றன்.

    நான் சமயப்பாகுபாட்டினையும் ஒரு சமயத்தை அவமதிபதையும் விரும்புவதில்லை. இந்து பெருமைபாடும் நந்தா முதலில் இந்துக்களின் பண பலமிக்க நாடுகளில் இலங்கை இந்துக்களை குடியேறிவாழ வழ்காட்டிவிட்டு இந்துக்களின் புகழைப்பாடி, மற்ர சம்யங்கழுடன் விவாதித்தால் நாகரீகமான் செயலாக இருக்கும். அல்லாவிடில் தாய் ஊரெல்லாம் பிச்சையெடுக்க மகன் உலகிற்கு அன்னதான்ம் செய்வதுபோல்தான் நந்தாவின் இந்து புகழ்பாடல் அமையும்.

    //துரையின் கருத்துப்படி தென் இந்தியர்கள் வட இந்தியர்களின் கீழ் இருக்கிறார்களாம். இப்படித்தானே பாதிரிகளும் தமிழர்களை சிங்களவர் அடக்குகிறார்கள் என்று கதயளந்தார்கள்.//நந்தா
    உலகிலுள்ள தமிழர்கள் அனைவரிற்கும் மேலுள்ள விடயம் தெரியும். தெனிந்தியத் தமிழர்களினதும், வடக்கு, கிழக்கு தமிழர்களினதும் தங்களைத் தாங்களே ஆழும் உருமை பறிபோனதென்பது. இது சரித்திர ரீதியாக நடந்த உண்மை. இதனை பாதிரிகளின் கதையென்று கூறுவது தவறு- துரை

    Reply
  • நந்தா
    நந்தா

    ஐயருக்கு மட்டுமல்ல புலம் பெயர் பாதிரிகளில் பலரும் இன்று குடும்பஸ்தர்கள். அவர்களுடைய பைகள் என்ன காய்ந்தா போய்விட்டது?

    Reply
  • zuhaira mohamed
    zuhaira mohamed

    Sonagar moors mean tamil speaking Srilankan muslims. other country tamil speaking muslims are tamils

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    Hi, Suhaira Mohamed.

    It seems you’re mistaken. “Sonagar” is a Tamil word of the English word “Moors”, which has been used to call the mix-race of Arabs and non-Arabs. The English word “Moors” derived from the Latin word “Moura”.

    What about Singhala speaking “Sonagar”, aren’t they Sri Lankan Muslim? And a “Sonagar” is not necessarly be a Muslim. But Sri Lankan “Sonagar” are predominantly Muslaims.

    In the meantime we should not deny the fact that there is a Tamil element in Sri Lankan and Tamil Nadu “Sonagar” ethnicity. Also there is a Singhala element in Sri Lankan “Sonagar”. However that does not and should not mean the “Sonagar” of Sri Lanka either Tamil or Singhalese or both.

    Moreover, the Morocco “Moors” and the Philippines “Moors” haven’t got anything to do with Tamil. I do not know how they are called in their local/native languages.

    Regardless of what language you speak your are a “Sonagar” woman and proud to be what you are. Check your birth certificate for your ethnic identity and come back with your response, if what I say is not true.

    Reply
  • vino
    vino

    Oxford Union cancels address by Sri Lanka president over security concernsThreat of mass protests by Tamil activists against Mahinda Rajapaska
    guardian uk

    Reply
  • BC
    BC

    //முஸ்லிம்களின் நாடுகளிலும் தான் இந்துக்கள் அகதிகளாகவும், பணம் சேர்க்கலாமென்றும் படையெடுத்து போய் வாழ்வை அமைக்கின்றனர். //
    எந்த முஸ்லிம் நாடுகளுக்கும் இந்துக்கள் மட்டுமல்ல வேற்று மதத்தோரும் அகதியாக போவது கிடையாது. வறுமை கொடுமை காரணமாக வேலை செய்ய முஸ்லிம் நாடுகளுக்கு சென்று ஆணி அடியும்,துன்புறத்தல்களும் வாங்கி கொண்டு வருகிறார்கள். துபாயில் மிக உயரமான கட்டடம் கட்டும் தொழிலாளர்களை (முஸ்லிம் தொழிலாளிகள் உட்பட) என்ன கேவலமான நிலையில் துபாய் வைத்திருக்கின்றது என்பதை பல ரிவியில் காட்டினார்கள். துபாய் முஸ்லிம் நாடு என்றபடியால் தமிழ் மார்க்ஸியவாதிகள் மவுனம் காத்தார்கள்.
    //அது மட்டுமல்ல அம்மனையும்,சிவனையும் அங்கெல்லாம் அமர்த்தி//
    முஸ்லிம் நாடுகளில் அம்மனையும் சிவனையும் வைத்தால் தலையை சீவிவிடுவார்கள்.

    Reply
  • Henry
    Henry

    ///எந்த முஸ்லிம் நாடுகளுக்கும் இந்துக்கள் மட்டுமல்ல வேற்று மதத்தோரும் அகதியாக போவது கிடையாது.///

    இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் இலங்கையைச் சேர்ந்த அகதிகள் இருக்கின்றனர். புரூணை என்னும் நாட்டில் பிற நாட்டு மதத்தவர்கள் அகதிகளாக இருக்கின்றனர். ஆபிரிக்க முஸ்லிம் நாடுகளில் இலங்கை அகதிகள் இருக்கின்றனர். பிற மதத்து அகதிகள் அளவுக்கதிகமாகவும் இருக்கின்றனர். எகிப்தில் சூடான் நாட்டு மக்கள் அகதிகளாக இருக்கின்றனர். பாகிஸ்தானில் அகதிகள் இருக்கின்றனர். ஏன் சவூதி அரேபியாவிலும் எதியோப்பியவைச் சேர்ந்த பிற மத மக்கள், நீண்ட காலமாக சட்டரீதியற்ற முறையில் வாழ்கின்றனர்.

    லிபியாவிலும் அயல் நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்கள், அகதிகளாக உள்ளனர். பொதுவாக அகதிகள் இல்லாத இடமே இல்லை. எந்த மதத்தைச் சார்ந்த அகதியாக இருந்தாலும், வளமான நாட்டை நோக்கித்தான் போவான். ஆனால் ஒன்று. முஸ்லிம் நாடுகளில் கொடுக்கப்படும் உதவித்தொகை மிகவும் குறைவு. ஐரோப்பிய நாடுகளில் உதவித்தொகை அதிகம். தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள்கூட, ஒழுங்காக பராமரிக்கப்படுவதில்லை.

    ஈரானில் இலட்சக்கணக்கான பிற நாட்டு அகதிகள் இருக்கின்றனர்.

    அகதிகள் என்றால், பொருளாதார அகதி மட்டுமல்ல. பலதரப்பட்ட அகதிகளும் இருக்கின்றனர்.

    //முஸ்லிம் நாடுகளில் அம்மனையும் சிவனையும் வைத்தால் தலையை சீவிவிடுவார்கள்//
    ஈரானில் அம்மனையும் சிவனையும் வைத்து வழிபடக்கூடிய இந்துக்கள் இருக்கின்றனர். அவர்களுக்கென்று கோயிலும் இருக்கின்றது.ஆப்கானிஸ்தானிலும் இந்துக்கள் இருக்கின்றனர். ஏகப்பட்ட கோயில்களும் உண்டு. இந்தோனேசியா, மலேசிய, புரூணை, ஆபிரிக்க முஸ்லிம் நாடுகளில் இந்துக்கள் நிறைய இருக்கின்றனர். எக்கச்சக்கமான கோயில்களும் உண்டு. எகிப்தில் இந்துக்கோயில் இருக்கிறது. ஏமனில் இந்துக் கோயில் இருக்கிறது. இங்கெல்லாம் யாரும் தலை சீவப்படுவதில்லை. சவூதியில் இல்லை.

    //துபாயில் மிக உயரமான கட்டடம் கட்டும் தொழிலாளர்களை (முஸ்லிம் தொழிலாளிகள் உட்பட) என்ன கேவலமான நிலையில் துபாய் வைத்திருக்கின்றது என்பதை பல ரிவியில் காட்டினார்கள்.//
    துபாயில் அதிகமாக வெளிநாட்டு கம்பனிகள்தான் கட்டடங் கட்டுவதற்கு ஒப்பந்தம் செய்கின்றார்கள். ஐரோப்பிய நாடுகள், சீனா, இந்தியா போன்ற நாடுகளின் கம்பனிகள்தான் தொழிலாளர்களையும் ஏழ்மையான நாடுகளிலிருந்து தருவிக்கின்றனர். சம்பளமும் மிகவும் குறைவு. அந்த வெளிநாட்டு கம்பனிகளும் அவர்களை கசக்கிப் பிழிகின்றன. அந்த நாட்டு தொழில் அமைச்சு அவ்வப்போது நடவடிக்கை எடுக்காமலும் இல்லை. ஆனால், திருப்திகரமாக இல்லை.

    //துபாய் முஸ்லிம் நாடு என்றபடியால் தமிழ் மார்க்ஸியவாதிகள் மவுனம் காத்தார்கள்.//
    மாக்சிசவாதிகள் எங்குதான் மௌனம் கலைத்தார்கள்? அஞ்சு சதத்திற்கும் பயன் இல்லாதவர்கள். இவர்களுக்கு அங்கு மட்டுமல்ல, உள்ளூரிலும் ஒன்றும் கிழிக்க முடியாது. இணையத்தளங்களில் கிறுக்குவதற்குத்தான் லாயக்கு.

    Reply
  • zuhaira mohamed
    zuhaira mohamed

    hi nisthar, a race comes with colour or language not with religion. i m asking you what is our race? muslim is not a race. there was not sinhala muslims in srilanka. now we have. same like, tamil muslims in srilanka are moors. srilankan muslims are, moors,(sonagar) malay, memon (baai) i know moors living in other country too. there is a book name call SONAGAR VARALARU published by sonagar islamiya kalachara nilayam.

    Reply
  • நந்தா
    நந்தா

    கென்றி என்பவர் மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற நினைப்பில் அள்ளி விடுகிறார். இவர் கென்றியா அல்லது இப்ராகிமா என்பது தெரியவில்லை.

    ஈரானில் எங்கு இந்துக் கோவில் இருக்கிறது என்று சொல்லுவாரா? சவுதி அரேபியாவில் முஸ்லிம் அதுவும் பணக்கார முஸ்லிம் தவிர வேறு எவனும் அகதியாக முடியாது. அதனால்த்தான் இலங்கை முஸ்லிம்கள் சிங்களவன் அடிக்கிறான் என்று கனடாவில் அகதிகளாகியிருக்கிறார்கள். சவுதியில் இடி அமின் அகதியாக இருந்து செத்தது தெரியும்.

    ஆப்கானிஸ்தானில் இந்துக்கள் அல்லது இந்துக் கோவில் என்பது புதிய செய்தி. பாமியானில் இருந்த 2000 ஆண்டு பழமை வாய்ந்த புத்தர் சிலைகளையே தலிபான் குண்டு வைத்து தகர்த்து ஆண்டுகள் பல கடந்து விட்டன.

    கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் பிழைக்க வந்து இறுதியில் கொள்ளையில் இறங்கியதுதான் வரலாறு. அது மாத்திரமல்ல இந்துக் கோவில்களை அழித்து கொள்ளையிட்டு ஓடியவர்கள். இன்னமும் கொள்ளைக்கும் கொலைக்கும் அலந்து கொண்டிருப்பவர்கள். இப்பொழுது அவர்களின் மதத்துக்கு மாறியவர்கள் துள்ளி ஆடுகின்றனர். புலிகளோடு பாதிரிகள் கும்மியடித்த வரலாறு சமீபத்தில் முடிந்துள்ளது.

    வழக்கம் போல நிஸ்தார் “சோனகர்” என்பதற்கு ஒரு “திருடிய” விளக்கம் கொடுக்கிறார்.

    Reply
  • Benedict
    Benedict

    சிறீலங்காவில் சிங்களம் பேசும் கிறிஸ்தவர்கள் நியாயமாக இருக்குது. இவர்கள் இராணுவத்திலும் கணிசமான அளவில் இருக்கின்றனர்.

    புலிகளிலும் கிறிஸ்தவர்கள் நிறைய இருக்கின்றனர். இவர்கள் முந்தி அடிபடும்போது, எத்தனை கிறிஸ்தவர்கள் இருபக்கத்திலும் இறந்திருப்பார்கள். சிங்களம் பேசும் நமது சகோதர கிறிஸ்தவனை தமிழ் பேசும் கிறிஸ்தவன் கொன்றிருப்பான். எத்தனை தமிழ் பேசும் கிறிஸ்தவர்களை சிங்களம் பேசும் கிறிஸ்தவர்கள் கொன்றிருப்பார்கள்.

    சிங்களம் பேசும் கிறிஸ்தவர்களாவது, நாட்டிற்காக சேவை செய்தவர்கள். தமிழ் கிறிஸ்தவர்கள் ஈழத்திற்காக பலிக்கடாக்கப்பட்டவர்கள். தமிழ் பேசும் கிறிஸ்தவர்களுக்கு கண்டிப்பாக ஈழம் தேவைப்பட்டதா? தேவையானதா? இந்துக்களுக்கு தேவைஎன்றால் அவர்கள்தான் போராடி இருக்க வேண்டும்.

    முந்தி ஒரு பாதிரி சொன்னார். முதலில் நான் ஒரு தமிழன். அதன்பின்தான் கிறிஸ்தவன். எந்தளவு கீழே போய்விட்டார் அந்தப் பாதிரியார். முள்ளிவாய்க்காலில் இருந்த தமிழ் பாதிரியார்களுக்கு, என்ன நடந்தது என்று, இப்பொழுது சிங்களம் பேசும் பாதிரியார் கேள்வி எழுப்பியுள்ளனர். இது கிறிஸ்தவர் என்று ஒற்றுமையாவதற்கு நல்ல அறிகுறி.

    வெறுமனே, தமிழர் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவர், தமிழர் என்னும் மாயையிலிருந்து மாறினாலே ஒழிய, கிறிஸ்தவர்களுக்கு விமோசனம் கிடைக்காது.

    இந்துக்கள் என்போர் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கின்றனர். அவர்களுக்குள் ஆயிரம் சாதிகள். மேட்டுநிலை இந்துக்களுக்கு, கிறிஸ்தவர், முஸ்லிம்களை அரவணைத்துக்கொண்டு தமிழர் நாமம் போட்டு, நாட்டைப் பிரிக்க விழைகின்றனர். முஸ்லிம்களோ ஒரு காலமும் தமிழர் என்ற பதத்தில் வருவதில்லை.

    ஆகவே, நாமும் தமிழர் என்னும் நாமத்தில் அடங்காமல், சிங்களம் பேசும் கிறிஸ்தவர்களோடு சேர்ந்து, நமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.

    எனவே, தமிழ், பிரச்சனை என்று பார்க்காமல், தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ பிரச்சனை என்று பேச முன்வரவேண்டும்.

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    Hi Zuhaira,
    Colour and physical structure of people, languages and etc. are indeed a few elements of difining a race. But a race is not difined only by the above. There’re other elements too. I never claimed and won’t claim that religion is one of the difining elements as far as race is concerned.

    I’m not saying there are “Singhalese Muslims” either, as I refused to accept ourselves as “Tamil Muslims”. Howevee I do accept that Sri Lankan Muslims speak either Tamil or Singhalese as their mother tongue in Sri Lanka.

    The whole argument here is about our ethnic identity, not religious or language. The Saivars(part of Hindus) and part of Sri Lanka’s Christian(mostly Catholics) have their Tamil Identity as distinct ethnic or racial group, so do the Bhuddists and part of Christian in tha name of Singhalese. But the Muslims( exclusive of Malays, Boora, Mermoon etc)have not been addressed by their right ethnic name. Why is it? We should not be fooled by Tamils or Singhalease by their statement that we have not got any ethnic identity because we do not have one and we are not deserved to have one. If you accept this concocted idea then you lose your grip in Sri Lanka politically very soon.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    /கென்றி என்பவர் மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற நினைப்பில் அள்ளி விடுகிறார்/ இதைத்தான் சொல்கிறது புளுகு என்று.
    கென்றி இந்தோநேசிய முழுமையான ஒரு இந்து நாடாகவே இருந்து.

    //பல்லி
    மதம் கொண்ட வார்த்தையின்றி
    மதம் பற்றி பேசுங்கள்
    மனிதத்தை தொலைத்து விட்டு
    மதம் ஒன்றை தேடாதீர்கள்

    மதத்துக்கு நிறம் இல்லை/

    ஐயோ பல்லி இதை யாருக்கு சொல்கிறீர்கள்

    /இதன்பிறகு யாழ்ப்பாணத்து கிறிஸ்தவர் யாவரும் கிறிஸ்தவர் என்றே அழைக்கப்பட வேண்டும். தமிழர் என்று சொல்லக் கூடாது. தீர்வு கிடைத்தபின், யாழ்ப்பாணத்து இந்துக்கள் எம்மையும் எமது பாதிரிமார்களையும் இழிவுபடுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். நியாயமான கிறிஸ்தவ சனம் யாழ்ப்பாணத்தில் இருக்குது. அதனால் தீர்வுக்கு நாம் ஆதரவு தெரிவிக்கக் கூடாது. இந்துக்களின்கீழ் கிறிஸ்தவர்கள் இருப்பதைவிட, சிங்கள மக்களின்கீழ் இருப்பதுதான் நமக்கு நல்லது./ பெனடிக்த்.
    கிறிஸ்தவப்பெயரில் எழுதும் ஒரு இஸ்லாமியன் போல் இருக்கிறது. கொழுவி விட்டுக் கூத்துப்பார்க்கும் வேலையைத் தொடங்கி விட்டார். இனம் மதம் சார்ந்தது இல்லை என்று நிஸ்தாரே சொல்லிவிட்டார். உமக்கும் நண்பர்களாக இருக்கலாம் கேட்டுப்பாருங்கள்

    Reply
  • Anonymous
    Anonymous

    என்னுடன் வேல செய்ற இரான்காரர்களிடம் கேட்டுப்பாத்தன் இரானில் இந்துகோயில் இருக்குதா என்று. இந்துக்கள் இருக்கிறார்களாம். கோயிலும் இருக்காம். சந்தேகம் தீர இருந்தாலும் விக்கிபிடியாவைத் தட்டிப் பார்த்தன். உண்மைதான். கென்றி சொன்னது உண்மைதான்.

    Reply
  • நந்தா
    நந்தா

    கிறிஸ்தவர்கள் தங்களைத் தமிழர் என்று சொல்லத் கொடங்கியதே 1956 க்குப் பின்னர்தான். இந்துக்களைத்தான் தமிழர் என்று அவர்களும் கூறிக் கொண்டிருந்தனர்.

    தற்பொழுது இந்தக் கிறிஸ்தவர்களின் “சாயம்” வெழுத்துள்ளது. படிப்பவர்களுக்குப் பாதிரிகளின் “தமிழ்” கோஷம் தமிழுக்கும் அல்ல ஈழத்துக்கும் அல்ல என்பதை புரிந்து கொள்வது நல்லது.

    இந்துக்கள் “குறைந்த” எண்ணிக்கையிலேயே இருக்கிறார்களாம். எந்த ஊரில்?

    Reply
  • மாயா
    மாயா

    //Mahmud reached the southern coast of Kathiawar along the Arabian Sea, where he sacked the city of Somnath and destroyed its famous *Hindu temple to Shiva* (whose mystical idol was apparently levitated by magnetic forces). //

    -http://picasaweb.google.com/lh/photo/CFsecYBWEdAyxxVFIHyXHg

    Reply
  • BC
    BC

    இந்தோநேசிய முழுமையான ஒரு இந்து நாடாகவே இருந்து.

    இப்போ பாலி(Bali) தீவு மட்டுமே மிஞ்சி தப்பியிருக்கிறது.
    அவுஸ்ரேலியா தனது நாட்டுக்கு வரும் தமிழர் உட்பட அகதிகளை மறித்து அங்கேயே வைத்திருக்கும் படி இந்தோநேசியாவுடன் ஒரு ஒப்பத்தமே செய்துள்ளது. அதற்க்கு அவுஸ்ரேலியா பணம் இந்தோநேசியாவுக்கு கொடுக்கிறது. சமீபகாலமாக தமிழர்களை வெளிநாட்டுக்கு கொண்டுவரும் ஏஜென்சிகள் ஆபிரிக்க நாடுகளுக்கு முதலில் கொண்டு போய் மாதக்கணக்கில் வைத்திருந்து தான் (அனுப்பும் விடயங்கள் சரிவரும் மட்டும்) ஜனநாயக நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். சிலர் விடயம் சரிவராமல் இலங்கைக்கே திரும்பி போய்யுள்ளார்கள். ஆபிரிக்க நாடுகளே சாப்பட்டுக்கே தள்ளாடுது, அதில் முஸ்லிம் ஆபிரிக்க நாடுகளின் நிலை சொல்ல தேவையில்லை. தமிழர்கள் அங்கே போகும் நோக்கம் வேறு.

    Reply
  • நந்தா
    நந்தா

    ஈரானில் வருடக் கணக்கில் இருந்தவன். எங்கே இந்துக் கோவில் என்பதைச் சொல்லுவீர்களா? ஷா மன்னன் காலத்தில் மதப் பிரச்சனை இருக்கவில்லை. ஆனால் தற்போது?

    Reply
  • sugan
    sugan

    இந்துசமயம் 6000 வருடங்களாகவும் தமிழ்மொழி இதே காலத்தில் அல்லது இதற்கு முன்பாகவும் இருந்துள்ளது.

    கிறீஸ்துவுக்கு (2200 வருடங்களுக்கு) முன்பே யாழ்ப்பாணத்தில் சைவர்கள் பெளத்தர்களாக மாற்றப்பட்டு பின்பு மீண்டும் சைவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

    பெளத்தம் 4000 வருடங்களுக்கு முந்தியது (கடவுள் இல்லை)

    இஸ்லாம் 800 வருடங்கள் முன்பு வந்த இளமையான மதமாகும்.

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் சுகன்,

    அதனால் என்ன சொல்ல வருகிறிர்கள்?

    Reply
  • BC
    BC

    சுகன், இந்துசமயம் பழையது என்பதையும் முஸ்லிம் மதம் கடைசியாக வந்தது என்பதையும் அறிவேன் .ஆனால் எப்போது இவை வந்தவை என்ற விபரம் எனக்கு தெரியாது. தெரியபடுத்திய தங்களுக்கு எனது நன்றிகள்.
    எனக்கு தெரியவரை இந்த கடைசியாக மதம் மாறுபவர்களே எந்த மதமானாலும் பிரச்சனையை கொண்டு வருபவர்கள். அரபுகாரனோடு பழக முடிகிறது. ஆனால் முஸ்லிம் மதத்திற்க்கு மாறிய தமிழ் பேசுபவனுடன் பழக முடியவில்லை. இயக்கங்களில் புதிதாக வந்தவர்கள் நல்லா சண்டிதனம் காட்டுவார்கள்.

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் பி.சி,
    நீங்கள் சொல்லும் அந்த அறபுக்காரன் முஸ்லிமாக இருந்தால் அவனும் கடைசியாக மதம் மாறிய பரம்பரைதான்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    //….சந்தேகம் தீர இருந்தாலும் விக்கிபிடியாவைத் தட்டிப் பார்த்தன். உண்மைதான். கென்றி சொன்னது உண்மைதான்…..//

    அனானி நானும் அறிய ஆவலாயுள்ளேன். அந்த விக்கிப்பீடியா லிங்கை தயைசெய்து இன்கே இடுங்கள்!

    Reply
  • இப்னு ஹஸன்
    இப்னு ஹஸன்

    முதல் நாகரிகம் இந்த ஆசியப் பிராந்தியத்திலிருந்தே நகர்கிறது. ஆப்ரஹாமின் அல்லது மொசபத்தேமிய நாகரிகம் முதல் நாகரிகமாக இருக்க முடியாது. அதற்கு முந்தியும் ஒரு நாகரிகம் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் ஆப்ரஹாம் இஸ்லாமிய சிந்தனையில் ஆதமுக்குப் பிறகு வரும் ஒரு தூதர்தான். அதற்கிடையிலும் நிறைய தூதர்கள் இருக்கிறார்கள். நூஹுக்குப் பிறகு வரும் ஒரு தூதர்தான் அவர். அப்படியானால் நூஹ் வரையான சமூகம் எங்கு வாழ்ந்தது என்றொரு கேள்வி இருக்கிறது……………..IDREES.LK

    Reply
  • sugan
    sugan

    //முதல் நாகரிகம் இந்த ஆசியப் பிராந்தியத்திலிருந்தே நகர்கிறது// என்பது சரியானதே திடமான முடிவு

    //ஆப்ரஹாமின் அல்லது மொசபத்தேமிய நாகரிகம் முதல் நாகரிகமாக இருக்க முடியாது// ஆப்ரஹாமின் என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை இது இஸ்லாமிய திரிபுவாதிகளால் உருவாக்கப்பட்டது திடமான ஆய்வின் முடிவு

    //அதற்கு முந்தியும் ஒரு நாகரிகம் இருந்திருக்க வேண்டும்//மொசபத்தேமிய நாகரிகத்துக்கு முன்பு இருந்த நாகரீகம் பற்றிய எந்த தகவல்களும் இல்லை இதற்கு சமாந்தரமாக நாகரீக வளர்ச்சிகள் இருந்துள்ளது அதற்கு முன்பு இருந்தாக திரிபுவாதிகளின் புதிய நிறுவல்களே

    //ஏனென்றால் ஆப்ரஹாம் இஸ்லாமிய சிந்தனையில் ஆதமுக்குப் பிறகு வரும் ஒரு தூதர்தான். அதற்கிடையிலும் நிறைய தூதர்கள் இருக்கிறார்கள். நூஹுக்குப் பிறகு வரும் ஒரு தூதர்தான் அவர்//

    இவற்றிக்கும் 980 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நாகரீகங்கள் சமயங்கள் மொழிகளுக்கும் தொடர்பு இல்லை என்பதை அறிந்து கொள்ளவும்.

    இது சமஸ்கிருத மொழிக்கு(எழுத்துக்கள் அற்றது தமிழ் மொழிக்கு பின்னர் இந்தியாவில் ஆரியர் வருகைக்கு முன்பாக இருந்த தமிழ் மொழயிலிருந்து பிறந்த கிளை இந்தியில் உள்ள 80சதவிகித சொற்கள் தமிழின் பிறழ்வாகும் இஸ்லாமிய வருகையின் பின்னர் இந்தி மொழியின் 90சதவிகித மொழிக்க அரபு மொழி எழுத்துக்களை கொடுத்து உருது உருவாக்கிவிட்டு இன்று உருதிலிருந்தே சமஸ்கிருதம் உருவானது என்றும் உருது மொழி அரபிலிருந்தே உருவானது என்றும் நடாத்தப்படும் திரிபுகள் போன்றதேயாகும்.

    (இந்திக்காரர்கள் நன்றாக உருது மொழியை விளங்கிக் கொள்கிறார்கள்)

    Reply
  • Henry
    Henry

    Mr Ibnu Hassan, //முதல் நாகரிகம் இந்த ஆசியப் பிராந்தியத்திலிருந்தே நகர்கிறது.//
    இது தப்பான கருத்து. முதல் நாகரிகம் எந்த இடத்தில் தோன்றியது என்று, யாராலும் வரையறுத்துக் கூறமுடியாது.

    Mr Sugan, /உருதிலிருந்தே சமஸ்கிருதம் உருவானது என்றும் உருது மொழி அரபிலிருந்தே உருவானது என்றும் நடாத்தப்படும் திரிபுகள் போன்றதேயாகும்.//
    உருதுவிலிருந்து சமஸ்கிருதம் உருவானது என்று யாரும் திரிவு படுத்த அவசியமில்லை. சமஸ்கிருத மொழி உருதுவிற்கு முற்பட்டது. உருது மொழி தோன்றியது 400 முதல் 500 வருட காலப் பகுதியுடையது.

    //ஆப்ரஹாமின் அல்லது மொசபத்தேமிய நாகரிகம் முதல் நாகரிகமாக இருக்க முடியாது. ஆப்ரஹாமின் என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை இது இஸ்லாமிய திரிபுவாதிகளால் உருவாக்கப்பட்டது திடமான ஆய்வின் முடிவு//
    எந்த இஸ்லாமியரும் முதல் நாகரிகம் மொசப்பத்தேமிய நாகரிகம் என்று சொன்னதில்லை. அப்படி சொல்லியிருந்தால், அவர்களின் ஆய்வுகளில் ஏற்பட்ட தவறுதான் காரணம். நமக்குத் தெரிந்தவரை, பல சரித்திர ஆராய்ச்சியாளர்களின் முடிவுகளின்படி, மொசப்பத்தேமிய நாகரிகம் பழமையானது என எல்லாரும் ஏற்றுக்கொள்கின்றார்கள்.

    //இவற்றிக்கும் 980 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நாகரீகங்கள் சமயங்கள் மொழிகளுக்கும் தொடர்பு இல்லை என்பதை அறிந்து கொள்ளவும்.//
    முதல் மனிதர் ஆதாம் என்பவர், இறைவனால் படைக்கப்பட்ட காலத்திலிருந்து, மொழி, சமயம் உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்பதே இஸ்லாமிய, கிறிஸ்தவ, யூத மதங்களின் உறுதியான நிலைப்பாடு.

    //இது சமஸ்கிருத மொழிக்கு(எழுத்துக்கள் அற்றது தமிழ் மொழிக்கு பின்னர் இந்தியாவில் ஆரியர் வருகைக்கு முன்பாக இருந்த தமிழ் மொழயிலிருந்து பிறந்த கிளை இந்தியில் உள்ள 80சதவிகித சொற்கள் தமிழின் பிறழ்வாகும்.//
    மொழி என்பது, மனிதன் பிறருடன் தொடர்பு கொள்வதற்கு உதவும் ஒரு சாதனம். அவ்வளவுதான்! ஹிந்தி மொழியின் 80 சதவிகித சொற்கள் தமிழின் பிறழ்வு எனக் கூறுவது, ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. தமிழில் உள்ள சொற்கள் ஹிந்தியில் இருக்கலாம். 8௦ சதவிகித சொற்கள் இருந்தால், ஹிந்தி மொழியை யாரும் உரையாடும்போது, எமக்கு ஓரளவாவது விளங்கக்கூடியதாக இருக்கும்! ஆனால், விளங்குவதற்கு கஷ்டமாக உள்ளது.

    சேரன், சோழ, பாண்டிய மன்னர்களில் சேர மன்னன் தற்போது உள்ள கேரளா நாட்டைத்தான் ஆட்சி செய்தான். அவன் பேசியது தமிழ். கேரளா மக்கள் பேசியதும் தமிழ். நாளடைவில் தமிழ் மருவி மலையாளமாக மாறிவிட்டது என்று சொல்கின்றார்கள். எந்தளவு உண்மை என்று எனக்குத் தெரியாது.

    Reply
  • Henry
    Henry

    //இந்துசமயம் 6000 வருடங்களாகவும் தமிழ்மொழி இதே காலத்தில் அல்லது இதற்கு முன்பாகவும் இருந்துள்ளது.//இந்து மதத்திற்கு தோற்றுவாய் இல்லை என்று, சொல்கின்றனர். ஆனால், இந்து மத வேத கிரந்தங்களின்படி, இந்து மதம் என்பது 3500 இலிருந்து 4000 ஆண்டுகளுக்கு உட்பட்டது என்று இந்து மத ஆய்வாளர்களும் பல மத ஆய்வு விற்பன்னர்களும் தற்போது உடன்படுகின்றனர்.

    //பெளத்தம் 4000 வருடங்களுக்கு முந்தியது (கடவுள் இல்லை)// பௌத்தம் 2500 இற்கும் 3000 இற்கும் இடைப்பட்டது. பௌத்தம் கடவுள் இல்லை என்றும் சொல்வதில்லை. பௌத்தம் கடவுள் இருப்பது என்றும் சொல்வதில்லை.

    Reply
  • இப்னு ஹஸன்
    இப்னு ஹஸன்

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே உலகு என்று திருக்குறள் கூறுகின்றது. இக்குறளின் கருத்து எங்கிருந்து வந்தது ‘அல்லமா ஆதமு அஸ்மாஅக் குல்லஹா’ ஆதமுக்கு பகவான் என்பது ஒரு பெயர் ஆதம் என்ற மனிதனுக்கு அல்லாஹ் எழுத்துக்களை (அகர முதல்களை) கற்றுக் கொடுத்தான். ஆதம் என்ற சொற்பிரயோகம் அறபு மொழி அல்ல. அது புதிய மொழி சொற் சுருக்கமும் பொருட்செறிவும் கொண்ட புதிய மொழி எனவே தமிழ் அல்லது சோனக மொழிதான் மிகப்பழைய மொழியாக இருக்கிறது. இந்த மொழியில் உள்ள கருத்து 6ம் நூற்றாண்டில் இறங்கிய அல்குர்ஆனின் கருத்துக்களோடு எப்படி ஒத்துப்போவது? யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற சிந்தனை எல்லா விசுவாசிகளும் சகோதரர்களே உலக மக்கள் எல்லோரும் ஒரு உம்மத்தே போன்ற அல்குர்ஆன் வசனத்தோடு ஒத்துச் செல்கிறது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற ஏகத்துவ சிந்தனை இந்துமதத்தில் எவ்வாறு வரமுடியும். எனவே ஒரு இறைத்தொடர்பு இறைவெளிப்பாடு இப்பிராந்தியத்தில் இருக்க வேண்டும் எனவே இந்த பிராந்தியத்திற்கும் இந்த நாட்டிற்கும் நாங்கள் அந்நியர்கள் அல்ல….IDREES.LK

    Reply
  • Henry
    Henry

    Mr Ibunu Hassan,/ஆதம் என்ற சொற்பிரயோகம் அறபு மொழி அல்ல. அது புதிய மொழி சொற் சுருக்கமும் பொருட்செறிவும் கொண்ட புதிய மொழி எனவே தமிழ் அல்லது சோனக மொழிதான் மிகப்பழைய மொழியாக இருக்கிறது.//

    அரபு மொழியின் தோற்றுவாய் 4500 முதல் 5000 வருடங்கள் வரை. இப்ராஹீம் என்னும் இறைதூதர் பேசியது அரபு அல்ல. இப்ராஹீம் என்னும் பெயரும் அரபு வார்த்தை அல்ல

    தமிழ் மொழி தொன்மையானது அல்ல. சோனகர் இனத்தின் மொழியான சோனக மொழிகூட, தொன்மையானது அல்ல. எந்த மனிதரும் தம் இனத்தினதும் மொழியையும் உயர்வாகவே பேசுவர். அது அவர்களின் உரிமை. ஆனால், பிற இனங்களின் மொழியை தாழ்மைப் படுத்துவது, ஆரோக்கியமானதல்ல. காலத்திற்குக் காலம் நாகரிகங்களும் இனங்களும் அழிந்தன என்று அல்குர்ஆன் கூறுகிறது.

    நாம் தற்போது பேசும் தமிழ் மொழி, இன்னும் ஆயிரக்கணக்கான வருடங்களின்பின் இருக்குமோ இல்லையோ அல்லது வேறு மொழியாக மருவி இருக்குமோ தெரியாது.

    Reply
  • நந்தா
    நந்தா

    மொத்தத்தில் தமிழர், இந்துக்கள் என்பவர்களுக்கு ஒன்றும் கிடையாது என்பதுதான் முந்தநாள் மதம் மாறிய முஸ்லிம்கலின் கண்டு பிடிப்பு!

    “சோனக மொழி” என்று ஒன்று இருக்குதாம்! அதென்ன?

    உம்மா வாப்பா சூத்தோட இருக்காங்களா?

    அம்மா அப்பா சுகத்தோடு இருக்கிறார்களா? என்ற தமிழை மேற்படி “புரட்டினால்” அது சோனக மொழியாம்!

    சோனகர் என்பதே ஒரு திருட்டு அடையாளம். இப்போ அதுக்கு ஒரு மொழி வேறு இருக்குதாம்.

    ஜோனக, ஜவன, யவன என்பவை கிரேக்கர்களைக் குறிப்பிடும் சொற்கள். அந்த தமிழ் பிரயோகத்தை இலங்கை முஸ்லிம்கள் எதற்காக திருடி தங்களை “சோனகர்” என்று வெக்கம் கெட்டு அழைக்கிறார்களோ தெரியவில்லை.

    கிறிஸ்தவர்கள் “திருக்குறள்” பைபிளைப் பார்த்து எழுதப்பட்டது என்று ஒரு புரட்டு புரட்டியிருக்கிறார்கள். இப்பொழுது சோனகர் அது குரான் என்று இன்னொரு கரடி விடப் புறப்படுகிறார்கள்.

    இங்கு இந்த முஸ்லிம் கிறிஸ்தவர்கள் சாதிக்க விழைவது என்னவென்றால் “இந்துக்களுக்கு” ஒன்றும் கிடையாது என்பதுதான்.

    பாலவனத்தில் பரதேசிகளாக திரிந்து கொள்ளை, கொலை மாத்திரமே வாழ்வாதாரமாக கொண்டு திரியும் கும்பல்கள் இந்தியாவின் செழிப்பைக் கண்டு கொள்ளையிட வந்து இறுதியில் இந்துக்களுக்கு “ஒன்றுமே” இல்லை யென்று இப்போது கதையளக்கப் புறப்பட்டிருக்கிறார்கள்.

    இவ்வளவும் அளக்கும் இந்த முஸ்லிம்கள் “காபிர்களைக்” கொன்று அவனுடைய பெண்களைக் கற்பழித்து சொத்துக்களைக் கொள்ளையிட வேண்டும் என்றும் தங்களுடைய குரானிலும் ஷ்ரியாவிலும் எப்படி வந்தது என்று கண்டு பிடித்தால் கூறினால் படிப்பவர்களுக்கு தமாஷாக இருக்கும்!

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் சுகன், ஹென்றி,
    சுகன், உங்கள் கணக்கு மிகப் பிழை. இந்து சித்தாந்தம், எகிப்தின் நைல்நதி கரை நாகரிகத்தின் பின் தோன்றியது. ஆகவே அதற்கு ஒரு தொடக்ககாலம் இருக்கிறது. கிறிஸ்தவம் தோன்றி இன்றுடன் 2010 வருடம், 12 மாதம், 5 நாட்கள். இஸ்லாம் தோன்றி இன்றுடன் 1431 ஆண்டுகள்.

    ஹென்றி, மொசொபோட்டோமிய நாகரிகத்தின் முன் “சுமேரிய” நாகரிகம் என்று இருந்ததே. மேலும் இபுராஹீம் ஒரு முஸ்லிம் என்று குர்-ஆன் கூட சொல்லவில்லை. குர்-ஆன் படி அவர் கிறிஸ்தவரும் அல்லர் முஸ்லிமும் அல்லர். அவர் ஏகத்துவ கொள்கையை ஏற்று நேர் வழி நடந்தவர். அவரின் பெயர் இபுராஹிமும் அல்ல. அவரின் பிறப்பு முதல் அப்றாம் (ஆப்ரம்) என்றே அழைக்கப்பட்டார். அவருடைய இறைவனின் கட்டளைப்படி ஆப்பிரஹாம் என்று மாற்றிக் கொண்டார். இபுராஹீம் என்பது நிச்சயமாக அறபுப் பெயரே. மேலும் மனித இருப்பு ஆதம் என்ற மனிதனுடன் தொடங்குகிறது. அது அடம்ஸ் பிக்கில்-ஆடம்’ச் Pஎஅக் (பாவாத மலை, அல்லது சமனல கந்த), இது இலங்கையும் இந்தியாவும் ஒன்றாக இருந்த காலத்தில் நிகழ்ந்தது. அவர் பேசிய மொழி எழு மொழி. அதன் திரிபே தமிழ். அம்மாவை மாற்றி உம்மா என்றும் அப்பாவை மாற்றி வாப்பா என்றும் முஸ்லிம்கள் பேசி அது தமிழ் அல்ல என்று கூறுவதாக நந்தா சொல்கிறார். அது அப்படியல்ல. உதாரணமாக ஏசு நாதர் பேசிய மொழி அரேமிய மொழி. இதில் அவர் கடவுளை குறிப்பிடும் வார்த்தை “அப்பா”(ஆப்ப )என்பதாகும்.

    நந்தா, தமிழர்களுக்கு தமிழ் என்ற மொழி உண்டே. சைவர்களின் மொழியும் அதுவே. ஆனால் வைணவர்களின் மொழி சமஸ்கிரதம், ஆனால் இப்போது அதிகம் ஹிந்தி பேசுகின்றனர். இப்படி இருக்க முஸ்லிம்கள் எப்போது சொன்னார் தமிழர்களுக்கு மொழி இல்லை என்று?

    Reply
  • sugan
    sugan

    நிஸ்தார் உங்கள் கருத்துக்கள் தவறானவை.

    Reply
  • நந்தா
    நந்தா

    “எலு” என்பது தென் இந்திய மற்றும் சிங்களம் ஆகியவற்றின் மூதாதை மொழியாகும். இனி இந்த எலு மொழியையும் அரேபிய பாலைவனத்து மனிதர்கள் பேசினார்கள் என்பது இன்னொரு சரடு விடல் ஆகும்.

    அடம்ஸ்பீக் என்று ஆங்கிலேயர்கள் சொன்னதை வைத்து நிஸ்தார் பாலைவனத்து ஆதமை இலங்கையாளாக்கி தமாஷ் பண்ணுகிறார்.

    இந்து மதத்தின் பிரதான பிரிவுகளாக சைவம், சாக்தம், வைஷ்ணவம் என்பன உள்ளன. அதில் மொழிப் பிரச்சனை எதுவும் கிடையாது.

    நிஸ்தார் எங்கு வைஷ்ணவர்களின் மொழி சமஸ்கிருதம் என்று கண்டு பிடித்துள்ளார் என்பது தெரியவில்லை. சைவர்கள் வங்காளத்திலும் இருக்கிறார்கள் என்பதெல்லாம் இவர்களுக்குப் புரியாது.தெரியாது!

    காபிர்களைப் பற்றிக் கேட்டால் ஓடி ஒளிபவர்கள் “இந்து” மதம் பற்றி கப்ஸா விட்டு யாரை ஏமாற்றுகிறார்கள்?

    Reply
  • Henry
    Henry

    Mr Nisthar, //ஹென்றி, மொசொபோட்டோமிய நாகரிகத்தின் முன் “சுமேரிய” நாகரிகம் என்று இருந்ததே.//
    சுட்டிக்காட்டியதற்கு நன்றி!

    சுமேரிய நாகரிகமாக இருந்தாலும், முதல் நாகரிகம் எனக் கொள்வது, சரியன்று. பல சமூகங்கள் அழிக்கப்பட்டன என்று பல்வேறு இடங்களில் அல்குர்ஆன் எடுத்தியம்புகிறது. இது விரிவாக பார்க்கப்பட வேண்டியது. அந்த அடிப்படையில், எந்த இனமும் எந்த மொழியும் எந்த நாகரிகங்களும் எந்த சமூகங்களும் நிரந்தரமாக உலகத்தில் வாழ்ந்ததில்லை. உலகம் படைக்கப்பட்ட காலத்திலிருந்து, காலத்திற்குக் காலம் இனம், மொழி, நாகரிகங்கள் மாற்றமடைந்துள்ளன.

    //இபுராஹீம் என்பது நிச்சயமாக அறபுப் பெயரே//
    இப்ராஹீம் என்பது அரபுப் பெயர் அல்ல. இப்ராஹீம் என்னும் தூதர், பேசிய மொழியில் வழங்கி வந்த ஒரு பெயர். அரபு மொழியில் தேர்ச்சி பெற்ற ஆசான்களின்மூலம் நான் இதை அறிந்துகொண்டேன். அது பிழையாயின், தெளிவாக்குங்கள்!

    //மேலும் இபுராஹீம் ஒரு முஸ்லிம் என்று குர்-ஆன் கூட சொல்லவில்லை. குர்-ஆன் படி அவர் கிறிஸ்தவரும் அல்லர் முஸ்லிமும் அல்லர். அவர் ஏகத்துவ கொள்கையை ஏற்று நேர் வழி நடந்தவர்.//
    முஸ்லிம் என்றால், இறைகட்டளைகளை ஏற்று, முற்றிலும் இறைவனுக்கு அடிபணிந்து கட்டுப்பட்டு நடப்பவர் என்று அர்த்தம். அந்த அடிப்படையில், ஆதாம் என்னும் தூதர்முதல் இறுதித் தூதர்வரையும் அவர்களை ஏற்று, இறைவனுக்கு அடிபணிபவர்கள் அனைவரும் முஸ்லிம்களே!

    //மேலும் மனித இருப்பு ஆதம் என்ற மனிதனுடன் தொடங்குகிறது. அது அடம்ஸ் பிக்கில்-ஆடம்’ச் Pஎஅக் (பாவாத மலை, அல்லது சமனல கந்த), இது இலங்கையும் இந்தியாவும் ஒன்றாக இருந்த காலத்தில் நிகழ்ந்தது. அவர் பேசிய மொழி எழு மொழி. அதன் திரிபே தமிழ்.//
    மறைந்த இஸ்லாமிய பன்னூலாசிரியர் அப்துர்ரஹீம் அவர்களின் நூல் ஒன்றில், ஆதாம் என்னும் தூதர், முதன் முதல் பேசிய மொழி தமிழ் என்றும், உலகத்தில் முதன் முதல் பேசப்பட்ட மொழி தமிழ் என்றும் எழுதியதை, நான் சிறு வயதில் வாசித்திருக்கிறேன்.

    நிச்சயமாக நாம் தற்போது பேசும் தமிழில், முதல் மனிதர் பேசியிருக்க மாட்டார் என்பது என் நிலைப்பாடு.

    ஊகத்தின் அடிப்படையிலும் தெளிவில்லாமல் சந்தேகத்தின் அடிப்படையிலும் நம்பி, செயல்படுவது, முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு முரண், என்பது தாங்கள் அறிந்ததே!

    Reply
  • இப்னு ஹஸன்
    இப்னு ஹஸன்

    இலங்கைக்கான உண்மையான வரலாறு அல்லது இலங்கையின் வரலாறு அல்லது வரலாற்றில் இலங்கையின் தொன்மை பற்றி இதுவரை எந்த ஆய்வுகளும் உருப்படியாகச் செய்யப்படவில்லை. எழுதப்பட்டுள்ள எல்லா வரலாறுகளும் இனத்துவ வரலாறுகளே. ஒவ்வொரு இனமும் தங்களுக்குள் இருக்கின்ற இனத்துவ மேலாதிக்கங்களை நிறுவிக்கொள்வதற்காக எழுதப்பட்ட வரலாறுகளே இலங்கை வரலாறாக பேசப்படுகின்றது. இதற்கு ஒரு படி நாம் மேலே சென்று ஆராய்வோமாக இருந்தால் நம் நாட்டை தரிசிக்க வந்த அல்லது நம் நாட்டை காலனித்துவத்திற்குட்படுத்திய மேலை நாட்டு வெள்ளைக்கார ஐயாமார் பயனக்குரிப்புகளாக அவர் தம் நாட்டவருக்கு அல்லது அக்கால வாசகர்களுக்கு எழுதிய அதிசய வீதியில் பவணி வருகின்ற போது வெள்ளைக்கார ஐயமார் கண்டுகளித்த காட்சிகளைத்தான் சுதந்திரத்திற்கு பிந்திய நமது இன்றைய பேராசிரியர்கள் அவ்வாங்கில நூல்களைக் கற்று அதிலுள்ள பயனக்குறிப்புக்களைக் கொண்டு வரலாற்று நூல் என்றும் ஆய்வென்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் பேராதனை பல்கலைக்கழகத்தில் முதுமானி மாணவர்களுக்கு சமூகவியல் பாடம் நடத்தும் ஒரு பேராசிரியர் சிங்கள சமூகவியல் தற்போது என்ன நிலையிலிருக்கிறது என்பதற்கு ஒரு கள ஆய்வில் கிடைத்த செய்தியை மாணவர்களுக்கு சொல்லிச்சிரித்த ஞாபகம் எனக்கு வருகிறது. அதாவது கண்டியில் உடுநுவரைப் பகுதியில் எம்பக்க தேவாலயத்திற்கு அருகில் வாழும் சிங்கள மக்கள் தமது வீடுகளில் புலக்கடைப் பகுதியில் புத்தர் மற்றும் வரலாற்று நாயகர்களின் மகான்களின் சிலைகளைச் செய்து புதைத்து அதில் குடும்பதிலுள்ள அனைவரும் மாறி மாறி மூத்திரமடிக்கிறார்கள். மூத்திரம் அடிப்பவர்களின் வயது நிலைக்கேற்ப அச்சிலைகளின் தொன்மையிலும் மாற்றம் ஏற்படுகின்றதாம். இச்சிலைகளை இலங்கையை ஆய்வு செய்யவரும் ஆய்வாளர்களுக்கு அல்லது வெள்ளைக்கார சு்ற்றுழாப் பயணிகளுக்கு விற்பனை செய்கிறார்கள் என்ற செய்திதான் சிங்கள சமூகத்தில் தற்போதைய சமூக மனோநிலையாகும். தீகவாப்பியிலும் அதுதான் நடக்கிறது. காரைநகர், நைனார் தீவு, ஆணைக்கோட்டை பகுதிகளிலும் சிங்கள ஆட்சியும் பௌத்த ஆதிக்கமும் இருந்ததாக கட்டமைக்க முயல்கிறார்கள். தமிழர்கள் பௌத்தம் வளர்த்த கதையை திருவேங்கடா சாமியும் கொழும்பில் பேராசிரியர் சிவத்தம்பியும்தான் இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

    முள்ளிவாய்க்கால் பிராந்தியத்தில் ஒருபிடி மண்ணைக்கூட எடுக்க முடியாத அளவுக்கு காவல் போட்டிருக்கும் நிலையில் இனியொரு பிரபாகரனோ முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒரு அஷ்ரபோ அரைநூற்றாண்டுக்கோ அல்லது ஒரு நூற்றாண்டுக்கோ வரலாம் என்று நம்பமுடியாமல் இருக்கிறது. இன்று இலங்கையில் ஆகக்கூடிய ராணுவப் பலம் யார்கையிலிருக்கிறது? ஆக்கூடிய ஊடகப்பலம், ஆகக்கூடிய அரசியல்பலம் யார் கையிலிருக்கிறது? சிறுபான்மையின் கையிலிருக்கும் கொஞ்சநெஞ்ச பொருளாதாரப் பலத்தையும் பிடுங்கிக் கொள்வதற்காக வேண்டி பெரும் பிரயத்தனமே இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எதிர்கட்சி அழிந்துவிட்டது. பண்டாரநாயக்க குடும்பம் சுவடே தெரியாமலாக்கும் முயற்சியில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. பாரோ மன்னருக்கெதிரான மோஸஸ் சிறுபான்மைச் சமூகத்திலிருந்து இப்போதைய நிலையில் வருவது சாத்தியமில்லை. வந்த மேஸஸும் இப்போது ஜெயிலில்தான் இருக்கிறார். இனியொரு மாற்றுக்கருத்துள்ளவர் பெரும்பான்மைச் சமூகத்திற்குள்ளிருந்துதான் வருவது சாத்தியம். சிறுபான்மை பெரும்பான்மைச் சமூகத்திலிருக்கும் சிறுபான்மையை ஆதரிக்கும் மாற்றுக் கருத்துள்ள நல்ல தலைவர்களை சார்ந்து இயங்குவதனூடாகத்தான் தமது இருப்பையும் வாழ்வாதாரத்தையும் பண்பாட்டையும் காத்துக் கொள்ள முடியும். முற்பது வருடத்திற்கு எந்த மக்களும் பொறுமையாக யுத்தத்தை சகித்துக் கொண்டிருப்பார்கள்? நான் மேலே குறிப்பிட்ட பகைப்புலனிலிருந்து நமது வரலாற்றை நமது அரசியலை நாம் தேசியவாதங்களை மறுவாசிப்புச் செய்து அதிலிருந்து புதிய இலங்கைக்குக் தேவையான விடயங்களை அவற்றிலிருந்து எடுத்துக் கொண்டு முன்னகர்வதுதான் புத்திசாலித்தனமானது. பழைய பதாகைகளை சுலோகங்களை நம்பிக்கொண்டு நாம் போக முடியாது. இது நாம் வருங்கால சிறுபான்மை தலைமுறையினருக்கு செய்யும் மாபெரும் வரலாற்றுத் துரவமாகும். டீ.எஸ் உம் ஜே.ஆரும் செல்வநாயகமும் அமிர்தலிங்கமும் அல்லது ஐம்பது வருடங்களுக்கு முந்திய நமது அரசியல்தலைவர்கள் மற்றத் தலைவர்கள் செய்த தவருக்கு நாம் என்ன செய்வது! அவர்கள் செய்த எல்லாத் தவறுகளையும் இன்றைய தலைமுறை ஏன் பொறுப்பேற்க வேண்டும். எனவே எமது கடந்தகால சிந்தனைகள், செயற்பாடுகளை மாற்றங்களைக் கொண்டுவந்தாலேயொழிய சிறுபான்மையினர் எல்லோரும் சேர்ந்து அழியவேண்டியதுதான். நமது தேசம்பற்றிய கருத்தை நாம் போய் ஐரோப்பியனுக்குச் சொன்ன அளவுக்கு அருகிலிருந்த சிங்களவன்களில் நல்லவனுகள் ஐம்பது பேருக்குச் சொல்லிருந்தாலும் ஐம்பது போருக்கு ஒரு சிங்களப் பத்திரிகை நமது உத்தேச ஈழத்தைப் பற்றி கதைத்திருந்தாலும் இப்படியொரு சோகம், ஒரு தோல்வி ஏற்பட்டிருக்காது என்பதுதான் என்னுடைய கருத்தாகும். வடமாகாண முஸ்லி்ம்கள் தமிழ்கிருஸ்தவர்கள் போல் தமிழ்முஸ்லி்ம் என்றால் ஏன் வெளியேற்ற வேண்டும். தமிழ் பேசும் மக்களுக்கான பேராட்டம் என்றால் இந்துக்கள் அல்லது சைவர்களுக்கான போராட்டம் மட்டும்தானா? போராளிகளின் பாசிசப்போக்குகளுக்கெதிராக அவ்வப்போது வெகுஜனப் போராட்டங்களை நடாத்திய தமிழ் மக்கள் ஏன் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போதோ பள்ளிவாயல்களுக்குள் படுகொலை செய்யப்பட்ட போதோ ஏன் குரல் எழுப்பவில்லை? நேர்காணல்களின் போது பேச்சுவார்த்தை மேசைகளில் மழுப்பலான பதில்களைத்தான் தமிழ்தலைவர்களிடம் காணக்கூடியதாக இருந்தது.

    இந்த இடத்திலிருந்துதான் சிறுபான்மை சமூகங்களிலிருந்தே புதிய தலைமுறையினர் வித்தியாசமாக தனது வரலாற்றை தமது அரசியல் அடையாளத்தை பன்பாடு பற்றிய தேடலை துவக்கியுள்ளனர். உங்களைப்போன்ற அடிப்படைவாதிகள் (மத அடிப்படைவாதத்தைச் சொல்லவில்லை) தேசியவாதிகள் முற்பது நாற்பது வருடங்களுக்கு முந்திய அதே வாசிப்பிலும் ஒரே முறையான சிந்திப்பிலும் இருக்கிறீர்கள் என்பது இந்த உரையாடலில் இருந்து எனக்குப் புரிகிறது.

    Reply
  • நந்தா
    நந்தா

    சமனலய என்றால் சிங்களத்தில் வண்ணத்துப் பூச்சி.சலபம் என்றால் பழம் தமிழிலும், மலயாளத்திலும் அதே பூச்சிதான்.

    கடவுளுக்கு உருவமில்லை என்று சொல்லுவதும் அரேபிய முகமதுவின் படத்தை கார்ட்டூனாக எழுதியதை கண்டு குதித்ததும் இதே முஸ்லிம்கள்தான். அப்படியிருக்க அந்த மலையில் இருப்பது “கடவுளின்” காலடி என்று கதையளக்கிறார்களா?

    இந்த முஸ்லிம்கள் மதம் மாறிய தமிழ், மலையாளப் பரம்பரைகள். இவர்களின் கருத்துப்படி “மற்றையவர்களின்” சரித்திரம் எல்லாம் அழிக்கப்பட வேண்டியவை. அதனைச் செய்துள்ளனர். அதனையே தேசம்நெற்றிலும் செய்ய தங்கள் புரட்டுக்களை எடுத்து விடுகிறார்கள்.

    Reply
  • சுகன்
    சுகன்

    எந்த இனமும் எந்த மொழியும் எந்த நாகரிகங்களும் எந்த சமூகங்களும் நிரந்தரமாக உலகத்தில் வாழ்ந்ததில்லை என்று சொன்ன குர்ரான் ஏன் மதங்களும் மாறும் என்பதை சொல்வில்லை?

    /இபுராஹீம் ஒரு முஸ்லிம் என்று குர்-ஆன் கூட சொல்லவில்லை. குர்-ஆன் படி அவர் கிறிஸ்தவரும் அல்லர் முஸ்லிமும் அல்லர். அவர் ஏகத்துவ கொள்கையை ஏற்று நேர் வழி நடந்தவர் /இதன்படி குர்ரானுக்கு முன்பு வேறு ஒரு மதம் இருந்ததிற்கான ஆதாரமாக இதை கொள்ளலாம்

    முஸ்லிம் என்றால் இறைகட்டளைகளை ஏற்று முற்றிலும் இறைவனுக்கு அடிபணிந்து கட்டுப்பட்டு நடப்பவர் என்று அர்த்தம். அந்த அடிப்படையில் ஆதாம் என்னும் தூதர்முதல் இறுதித் தூதர்வரையும் அவர்களை ஏற்று இறைவனுக்கு அடிபணிபவர்கள் அனைவரும் முஸ்லிம்களே!//அப்படியாயின் இவர்களுக்கு மாற்று கருத்து என்று ஒன்று உண்டு என்பது தெரியாதா? எதையும் தீர ஆராய வேண்டுமானால் குர்ரானையும் கேள்விக்கு உட்படுத்தியே ஆக வேண்டும் அல்லவா? கடவுளையும் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் அல்லவா? இது அடிப்படைவாதம் இதனால்தான் உலகிற்க்கு ஆபத்து எனக்கொள்ளலாம்

    /ஊகத்தின் அடிப்படையிலும் தெளிவில்லாமல் சந்தேகத்தின் அடிப்படையிலும் நம்பி செயல்படுவது முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு முரண் என்பது தாங்கள் அறிந்ததே!// கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வாதிட்டு சரியான கருத்தை அறிந்து கொள்ள முயல்பவரை இஸ்லாம் தடுப்பதாகவே இந்த கருத்து அமைந்துள்ளது இது ஆபத்தான அடிப்படைவாதமாகும்.

    கென்றி இப்படியாகவா உங்கள் கிறீஸ்தவம் இருக்கிறது என்பதை எழுதுங்கள்

    Reply
  • maruthu
    maruthu

    இப்னு ஹஸனுக்கு பதில்

    இலங்கையின் வரலாறு என்பது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பல எழுத்தாளர்களால் எழுதப்பட்டு விட்ட வரலாறு, அது தமிழர்களே இன்றுள்ள சிங்களவர்களும் என்ற வரலாறு, ஆனால் உங்களைப் போன்றவர்கள் இலங்கைத்தீவுக்குள்ளேயே மட்டும் இருந்து, இஸ்லாம் என்ற புத்தகத்திற்க்கு வெளியே வராமல் உலகத்தை இஸ்லாமிய அடிப்படைவாத்திலிருந்துதான் பார்க்கிறிர்கள். இது தான் நீங்கள் விடும் முதலாவது தவறாகும்.

    ஈழத்தமிழர் இயக்கங்கள் தவறு விடும்போது ஏன் நீங்கள் பொங்கி எழுவில்லை. நீங்களும் தமிழ்பேசும் முஸ்லீம்கள் எமக்கு போராட்டத்தில் இணைய உரிமையுண்டு என அதைவிடுத்து தமிழ் மொழியில் அடிப்படையிலான அமைப்பை கட்டுவதற்கு பதிலாக இஸ்லாமிய அடிப்படையிலான கட்சியை ஏன்? தோற்றுவித்தீர்கள்? நீங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்பதையும் நீங்கள் இந்த நாட்டை ஆபத்தான ஒரு கட்டத்திக்கு இட்டு செல்கிறீர்கள் எனவும் தெரிவித்தீர்கள.

    கிழக்கு தமிழர்களின் காணிகளை அஸ்ரப் பலாத்தகாரமாக பறித்து, தமிழ் பிரதேங்களை இஸ்லாமிய பெயர் சூட்டியதையும் மறந்து, மூதூரில் படுகொலை செய்ததையும் மறந்து, இங்கு தமிழரை- எம்மை திருத்த எண்டமாதிரி கதை விட வேண்டாம். இன்றும் இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் அடிபட நீங்கள் பார்த்துக் கொண்டுதானே இருந்தீர்கள். இன்று ஏதோ பெரிய போராட்டம் நடத்தியவர்கள் போன்று ஆரம்பித்து விட்டீர்கள். உங்களுக்கும் போராட்டத்தில் பங்கு வேணும் என்று கேட்க உங்கள் உரிமைக்காக நீங்கள் செய்த போராட்டம் தான் என்ன?
    புலி முஸ்லீகளுக்கு எதிராக நடந்துகொண்ட போது ஏன் நீங்கள் அப்பாவி தமிழர்களை சிங்கள இராணுவத்துடன் கூட்டுச்சேர்ந்து வரிசையில் வரச்சொல்லி கூப்பிட்டு கொலை செய்தீர்கள். புத்த கோயிலுக்குள் ஏன் தமிழ் பெண்களை கற்பழித்தீர்கள். உங்கள் இஸ்லாமிய குணாம்சததில் மாற்றம் வருமா? அல்லது பாக்கிஸ்தான் போன்று இன்று ஒரு இந்துவைக்கூட வாழவிடாமல் வெளியேற்றியதை பின்பற்றப் போகிறீர்களா?

    தந்தை செல்வா அமிர் பற்றிய விமர்சனங்களும் தவறுகளும் பற்றி எமது பார்வைகள் உண்டு. உங்கள் அஸ்ரப் பற்றிய உங்கள் பார்வையில் என்று எப்போ எதிர்த்திருக்கிறீர்கள்?

    எல்லாவற்றையும் மறந்து விடுங்கள் ஆனால் முஸ்லிம்களின் கொலைகளை மட்டும் மறந்து விடாதீர்கள் என்ற கள்ளத்தனமானபேச்சு எப்படியிருக்கிறது. இன்று தமிழர்கள் போராடி இன்று தமது உரிமைக்காக போராடிய சமூகம் என்ற நிலையில் உள்ளபோது நீங்கள் விலகியே இருங்கள். தமிழர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவரிகளிடம் விடுங்கள் நீங்கள் உங்கள் போராட்டத்தை தொடருங்கள் உங்கள் உரிமைக்காக.

    தமிழர்கள் பேச்சுவார்த்தை மேடையில் தமிழ் பேசும் மக்களுக்காகவே பேசுவார்கள் முஸ்லிகளுக்காக அல்ல என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். இலங்கையில் இரண்டு மொழிபேசும் மக்களே உள்ளனர் ஒன்று சிங்களம் மற்றது தமிழ் இதைவிட வேறு அடையாளங்கள் தேவையில்லை. இஸ்லாமியம் ஆபத்தான அடிப்படைவாதம், பொது அரசியலில் கலக்ககூடாது. இஸ்லாம் உங்களுக்கு அடையாளம் என்றால் சிங்களவர்களும் தமிழ் பெளத்தர்களும் சேர்ந்து தமக்கும் பெளத்த அடையாளத்தை கேட்கலாம் கிறிஸ்தவர்களுக்கும் தனி உரிமையுண்டாகிறது பல ஆயிரம் நூற்றாண்டாக வாழ்ந்த இந்துக்களும் முழு உரிமையும் என்றாகிவிடுகின்றது.

    இலங்கை இரண்டு மொழியை விட வேறுஎதுவும் முதன்மைப்படுத்தக் கூடாது.

    Reply
  • நந்தா
    நந்தா

    வீக்கிலீக்ஸ், இலங்கையில் பாகிஸ்தானைத் தளமாக கொண்டு இயங்கும் லஸ்கர்-இ-தொய்பா அமைப்பு காலூன்றி உள்ளதாக தெரிவித்துள்ளது.

    சந்திரனில் அமெரிக்கர்கள் காலடி வைத்ததையே “பொய்” என்றுதான் முஸ்லிம்கள் சொல்லுகிறார்கள். அப்படியிருக்க இலங்கை இந்திய வரலாறுகளை நம்பவா போகிறார்கள்? ஆயினும் இந்த முஸ்லிம்கள் தமிழை எப்படி பேச முடிந்தது என்பது பற்றி மவுனம் காட்டுவதிலிருந்து இவர்கள் இங்கு பேசும் வரலாறுகள் அனைத்தும் புரட்டு என்பதையும் அவை தங்களின் அரேபிய முகமதுவின் கதைகளை அனுசரிக்க வேண்டும் என்பதும் புலனாகிறது.

    இவர்கள் மத்தின் பெயரால் “தனி இனம்” என்று குரல் எழுப்புவதினால் இவர்களின் மதம் கண்டிப்பாக விமர்சனத்துகுட்பட வேண்டும்!

    Reply
  • Henry
    Henry

    //நீங்கள் உங்கள் போராட்டத்தை தொடருங்கள் உங்கள் உரிமைக்காக.
    தமிழர்கள் பேச்சுவார்த்தை மேடையில் தமிழ் பேசும் மக்களுக்காகவே பேசுவார்கள் முஸ்லிகளுக்காக அல்ல என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்//
    தங்கள் கருத்துக்கு நன்றி. மேற்படி காரனங்களினால்தான், முஸ்லிம்கள் தனியே பிரிந்து தம் உரிமைகளை தனித்துவமான முறையில் உரிமை கேட்கிறார்கள்.

    Reply
  • maruthu
    maruthu

    //முஸ்லிம்கள் தனியே பிரிந்து தம் உரிமைகளை தனித்துவமான முறையில் உரிமை கேட்கிறார்கள்//கென்றி

    எங்கே உங்கட உரிமை கேட்கிறீங்க மற்றவன்டய தட்டிப்பறிக்கவெல்லோ பார்க்கிறீங்க

    Reply
  • Henry
    Henry

    //முஸ்லிம்கள் தனியே பிரிந்து தம் உரிமைகளை தனித்துவமான முறையில் உரிமை கேட்கிறார்கள்//கென்றி

    //எங்கே உங்கட உரிமை கேட்கிறீங்க மற்றவன்டய தட்டிப்பறிக்கவெல்லோ பார்க்கிறீங்க// maruthu

    இப்படித்தான் அவர்களும் நினைக்கிறார்கள்.

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் சுகன்,

    நீங்கள் அனேகமாக எமது அடிப்படை விடயத்தை விட்டு விலகிச் சொல்கிறிர்கள் என்று நினைக்கிறேன். தலைப்பைப் பாருங்கள் “சோனகர்” என்ற இனத்தைப் பற்றி கதைக்கிறது. நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ இஸ்லாம் என்ற மததைப்பற்றி இடைகிடை கதைத்ததால் நாமும் பதில் சொல்லவேண்டி ஏற்பட்டது. ஆனால் அது இப்போது திசை மாறி சொல்வதால் இந்த “சோனகர்” இனத்துடன் சம்பந்தமாக மாத்திரம் கருத்து பகிர்ந்தால் நன்மை பயக்கும் அல்லவா? உதாரணமாக பாருங்கள் நந்தா சம்பந்தம் இல்லாமல் விக்கிபீடியா விடயத்தை கொண்டுவருகிறார். இலங்கையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளாம். அப்படியென்றாலும் இலங்கையில் ஒரு அரசாங்கம் உள்ளது. அதற்கு ஏற்கனவே ஜே.வி.பி பயங்கரவாதம், தமிழ் பயங்கரவாதம் என்பவைகளை வெற்றிகொண்ட அனுபவம் உண்டு. ஆகவே அதை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் அல்லவா? எனவே இங்கே கருத்துச் சொல்வோரின் வேலை தலைப்பிற்கேற்ப அது சரியென்றோ, பிழையென்றோ நிறுவுவதே அல்லாமல், புது புது பொய் பிரசாரங்களை அறிமுகப் படுத்துவதாக இருக்கக் கூடாது. அல்லாவிட்டால் பாக்கிற்கு விலை கேற்க வட்டுக்கோட்டைக்கு வழி சொன்னது போல் ஆகிவிடும் அல்லவா? ஆனாலும் இஸ்லாம் பற்றி நீங்கள் விமர்சிப்பது உங்கள் உரிமை. அதை சரியான தலைபின் கீழ் சரியான நேரத்தில் செய்யுங்கள் என்பதே என் வேண்டுகோள்.

    Reply
  • Henry
    Henry

    Mr Sugan,/ /எந்த இனமும் எந்த மொழியும் எந்த நாகரிகங்களும் எந்த சமூகங்களும் நிரந்தரமாக உலகத்தில் வாழ்ந்ததில்லை என்று சொன்ன குர்ரான் ஏன் மதங்களும் மாறும் என்பதை சொல்வில்லை?// முஸ்லிம்களின் உறுதியான விசுவாசத்தின்படி, குர்ஆன் இறுதி வேதம். அது ஒருபோதும் மாறாது. ஒருபோதும் அழியாது. குர் ஆனை இறைவனே பாதுகாப்பான் என்று உறுதிமொழி குர் ஆனில் இருக்கிறது.

    //இதன்படி குர்ரானுக்கு முன்பு வேறு ஒரு மதம் இருந்ததிற்கான ஆதாரமாக இதை கொள்ளலாம்//
    ஒரு மதமல்ல, பல வேதங்கள், கொள்கைகள், பல தெய்வ வழிபாடுகள் இருந்தன என்று குர் ஆனே சாட்சி சொல்கிறது.

    //அப்படியாயின் இவர்களுக்கு மாற்று கருத்து என்று ஒன்று உண்டு என்பது தெரியாதா? எதையும் தீர ஆராய வேண்டுமானால் குர்ரானையும் கேள்விக்கு உட்படுத்தியே ஆக வேண்டும் அல்லவா? கடவுளையும் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் அல்லவா?//குர் ஆனே சவால் விடுகின்றது அதை தீர ஆராயுமாறு. எல்லா இடங்களிலும் கடவுளை கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். விவாதங்களும் நடக்கின்றன. முஸ்லிம்களினால் கூட நடத்தப்படுகின்றன.

    /கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வாதிட்டு சரியான கருத்தை அறிந்து கொள்ள முயல்பவரை இஸ்லாம் தடுப்பதாகவே இந்த கருத்து அமைந்துள்ளது// எழுந்தமான தீர்மானங்கள், வறட்டு வாதங்கள், ஊகத்தின் அடிப்படையிலான அறிவியல் முடிவுகள், சந்தேகத்திற்கு உள்பட்ட கருத்துகள் போன்றவைகளை வாதிடுவதால், பயன் இல்லை.

    உறுதிப்படுத்தப்பட்ட அறிவியல் உண்மைகள், ஆராய்ச்சிகள், சிந்தனைகளுக்கு இஸ்லாத்தில் தாராளமாக இடமிருக்கிறது. மேலும், அழகிய முறையிலும் விவேகத்துடனும் விவாதம் செய்யுங்கள் என்று குர் ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது. சந்தேகங்களைப் பின்பற்றுவதற்கும் தடை இருக்கிறது.

    Reply
  • நந்தா
    நந்தா

    குரானைப் பற்றியும், அரேபிய முகம்மது பற்றியும் கேள்வி எழுப்புபவர்களின் தலையை கொய்துவிடும்படி இஸ்லாம் கேள்க்கிறது. நடைமுறையிலும் அதுவே உண்மை. அப்படியிருக்க இந்த கென்றி என்ன சொல்கிறார்?

    காபிர்களைப் பற்றி கேட்டால் ஒளியும் நிஸ்தார் இப்பொழுது பாகிஸ்தான் பயங்கரவாதிகளை அரசு கவனித்துக் கொள்ளும் என்று சொல்லுவது பெருத்த பொய் ஒன்றை மறைக்க முயல்வதாகவே தோன்றுகிறது.

    வீக்கி லீக்ஸ் மாத்திரமல்ல இந்திய பதுகாப்புத் துறையும் சில காலங்களுக்கு முன்னர் இலங்கை அரசை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பற்றி எச்சரித்திருந்தது. பாகிஸ்தானிடம் பணம் பெற்று எவனாவது இலங்கயில் அல்லது தென் இந்தியாவில் குண்டு வைத்தால் இலங்கை முஸ்லிம்கள் “அல்லாகு அக்பர்” என்று கோஷம் இடப் போகிறார்கள்.

    பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள இந்திய ரூபா நோட்டுக்களுடன் இலங்கை முஸ்லிம்கள் பிடிபட்டது ஒரு சிறு துளி என்பதை அறிந்து கொண்டால் நல்லது. யாழ்ப்பாணத்தில் இனி குண்டு வெடித்தால் அது புலி என்று நம்ப முடியாது!

    சோனக என்பது எப்படி வந்தது என்பதை புரட்ட முயற்சி செய்தது மாத்திரமின்றி அந்த சொல்லின் வரலாறு பற்றி எதையும் கூறாது மவுனம் சாதிக்கும் இலங்கை முஸ்லிம்கள்தான் இலங்கையில் அடுத்த “தொல்லை” தருபவர்கள் என்பது தெளிவாகிறது!

    Reply
  • maruthu
    maruthu

    //இப்படித்தான் அவர்களும் நினைக்கிறார்கள்//
    முஸ்லீம்கள் எப்போ போராடினார்கள் உரிமைக்காக?
    முஸ்லீம்கள் ஆய்வு செய்வார்கள் என்றால் கடவுள் எங்கே இருக்கிறார் என்று உங்கள் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது

    Reply
  • Faizan
    Faizan

    தென்இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட தமிழ்நாடு, கேரளாவை தளமாக பயன்படுத்த ஹலஸ்கர்-இ-தொய்பா’ முயற்சி

    தென்இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபடுவதற்காக, லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் தமிழ்நாடு மற்றும் கேரளாவை தளமாக பயன்படுத்த முயன்ற தகவலை விக்கி லீக் இணைய தளம் வெளியிட்டுள்ளது. விக்கி லீக் என்ற இணைய தளம், அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தூதரகங்கள் பரிமாறிக்கொண்ட ரகசிய தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளது. அதில் இந்தியா தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

    கடந்த 2009-ம் ஆண்டு ஜுன் மாதம் 19-ந்தேதி அமெரிக்க வெளியுறவுதுறை வெளியிட்ட ரகசிய தகவல் ஒன்றில் பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்பட்டுவரும் லஸ்கர்-இ-தொய்பா இயக்கம், தமிழகம் மற்றும் கேரளாவில் தளம் அமைக்க முயன்ற தகவலும் அதில் இடம் பெற்றுள்ளது.

    இலங்கையில் அந்த இயக்கத்தின் மையம் ஒன்று செயல்பட தொடங்கிவிட்டதாகவும் தென் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக தமிழ்நாடு மற்றும் கேரளாவை தளமாக பயன்படுத்திக்கொள்ள அந்த இயக்கம் முயன்று வருவதாகவும் அந்த தகவலில் இடம் பெற்றுள்ளது.

    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் தனது பயங்கரவாத செயல்பாட்டை விரிவுபடுத்த முயன்ற தகவலையும் விக்கி லீக் அம்பலப்படுத்தி உள்ளது. விக்கி லீக்கின் இந்த தகவல்களை அமெரிக்க அரசு உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    விக்கி லீக்கின் அந்த தகவலில், மேலும் இடம் பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாள நாடுகளில் உள்ள இயக்க உறுப்பினர்களின் ஆதரவுடன் தென்இந்தியாவில் ஷாபிக் கபா ஜி என்ற தளபதி மூலம் 2 குழுக்களை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இந்த தகவல்கள் உடனடியாக இந்தியாவுக்கு அதுபற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் தென் இந்தியாவில் தாக்குதலுக்காக அவர்கள் தேர்வு செய்த இடங்கள் பற்றிய விவரங்கள் அதில் இல்லை.

    தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்துவதற்கான தகவல்களை திரட்டவும் தளபதி காபா முயற்சிகளை மேற்கொண்டார்.

    நரேந்திரமோடியை கொல்ல சதி

    குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடியை படுகொலை செய்யும் திட்டத்தை அரங்கேற்றவும் அவர் திட்டமிட்டு இருந்தார். லஸ்கர் இயக்கத்தின் இந்தியாவை சேர்ந்த உறுப்பினர் ஹுசேன், சமீர் என்ற கூட்டாளியுடன் இணைந்து இதுபோன்ற சதித்திட்டங்களை தீட்டி உள்ளனர்.மேற்கண்ட விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

    ஹவிக்கி லீக்’ வெளியிட்ட தகவல்- நன்றி தேனீ

    Reply
  • sugan
    sugan

    தேசம்நெற்றில் கருத்து எழுதும் அஸ்ரப்அலி, ஹலஸ்கர்-இ-தொய்பா பற்றி செய்திகளை ஏற்கனவே இலங்கையில் வெளியிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளதே. இவர்கள் இலங்கையில் என்ன நோக்கத்திற்காக இந்த பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்பதை விடயம் தெரிந்த அஸ்ரப்அலி இது பற்றி இங்கு வந்து கருத்து எழுதுவாரா?

    பயங்கரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது? ஏன் இப்படி செய்கிறார்கள்

    Reply
  • hari
    hari

    இஸ்லாமிய ஷரியா சட்டம் உறுதியானது ஆனால் இரக்கமுடையதென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
    //சவுதி அரேபியாவில் தனது பராமரிப்பில் இருந்த குழந்தையைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிஷானா நஃபீக்கின் தண்டனையை சவுதி மன்னர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    ரிஷானாவின் தண்டனை ரத்துச் செய்யப்பட்டு அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்ததை அடடுத்தே இந்த தண்டனையை தற்காலிகமாக இடை நிறுத்த சவுதி மன்னர் ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலவாழ்வு அமைச்சர் டிலான் பெரேரா நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

    இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் ரிஷானாவின் தண்டனையை ரத்துச் செய்யும் அதிகாரம் சவுதி மன்னருக்குக் கிடையாது என்றும் இறந்த குழந்தையின் பெற்றோர் இணங்கும் பட்சத்திலேயே தண்டனைக்கான இரத்தப்பணம் வழங்கப்பட்டு ரிஷானாவுக்கு மன்னிப்பு வழங்கப்பட முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

    தேவைப்படும் பட்சத்தில் அந்த ரத்தப்பணம் எனப்படுகின்றஇ கொலைக்கு மன்னிப்பு வழங்கப்படுவதற்காக அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைப் பணத்தை வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

    இதற்கிடையே இந்த மரணதண்டனை இடைநிறுத்தம் குறித்த செய்தியைக் கேட்டு ரிஷானாவின் தாய் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.//-பிபிசி

    Reply
  • Kusumpu
    Kusumpu

    நந்தா-/தேசம்னெற்றில் “தாங்க முடியாத” உண்மைகளால் முஸ்லிம்கள் தமிழர்கள் என்று மெதுவாக ஒப்புக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். முஸ்லிம்கள் தமிழர்கள் என்பதும் தமிழ்- சிங்களப் பிரச்சனைகளில் அல்லது “அரசியல் தீர்வு” என்பதில் எந்தப்பக்கம் சாய்வார்கள் என்பதையும் படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்/ ஐயோ நந்தா இவர்களை தனியவிடுவதே மேல் எம்முடன் வேண்டாம். இவர்கள் தங்கள் இனத்துடனும் சேர்ந்து இருக்கமாட்டார்கள் பிற இனத்துடனும் சேர்நது இருக்க மாட்டார்கள்.

    சுகன்- /பயங்கரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது? ஏன் இப்படி செய்கிறார்கள்/ அசரப் சொல்லமாட்டார். இஸ்லாமே பலாற்காரமும் பயங்கரவாதமும் நிறைந்தது. இதற்கு எப்படி தொடர்பு என்று விளக்குவது. இது விளங்குமா? தூர இருந்தால் தானே தொடர்பு பற்றிப் கதைப்பதற்கு. இதுவே இது இதுவே அது. பிறந்த குழந்தையில் தொடங்குகிறது பலாற்காரமும் பயங்கரவாதமும் தொடங்குகிறது.

    /இஸ்லாமிய ஷரியா சட்டம் உறுதியானது ஆனால் இரக்கமுடையதென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது./
    சரியாச்சட்டம் கையை எடுக்கும்: காலை எடுக்கும்; தலையையும் எடுக்கும்; நடுரோட்டில் பெண்களைக் கல் எறிந்து கொல்லம். இது இரக்கமுள்ளதாம். இரக்கம் என்றால் என்ன என்று தெரியுமா? முக்கியமாக ஒரு இஸ்லாமியனுக்குத் தெரியுமா என்பதான் எனது கேள்வி. யாரோ எங்கோ எழுதிவைத்து கற்காலச் சட்டங்களை மாற்றாமல் கற்காலத்திலேயே வாழும் மனிதர்களிடம் இரக்கம் அன்பு பாசம் நேசம் என்பவற்றை எப்படி எதிர்பார்க்க முடியும். அன்பரே! தேசம் வாசகர்களே! அன்று சிறைகள் தண்டனை நிறைவேற்றும் ஸ்தலங்களாகவே இருந்தது. இன்றைய மனிதநாகரீகம் வளர்ந்த (இஸ்லாம் தவிர்ந்த) உலகின் சிறை என்பது துஸ்டர்களைத் திருத்தி அனுப்பும் பள்ளிகளாகவே இருக்கின்றன. இது எப்படி உங்களுக்குப் புரியப்போகிறது;

    கென்றி! /முஸ்லிம்களின் உறுதியான விசுவாசத்தின்படிஇ குர்ஆன் இறுதி வேதம்./ வேதம் என்பது ஒரு இந்துச் சொல்லு. அதுவும் இந்துக்களின் புனிதமொழியில் இருந்து வந்தது. கூறான் வேதமாம்.

    நந்தா-கடவுளுக்கு உருவமில்லை என்று சொல்லுவதும் அரேபிய முகமதுவின் படத்தை கார்ட்டூனாக எழுதியதை கண்டு குதித்ததும் இதே முஸ்லிம்கள்தான்/ இதைவிட இன்னுமொரு குதியல் பங்களாதேசத்தின் ஒரு காட்டூண் வரையும் கலைஞர் பாட்டன் பூனையை முகமது என்று எழுதிவிட்டார் என்பதற்காக ஊருலகம் குதித்த குதியல் தெரியுமா? இவர் இன்று ஐரோப்பவில் அகதியாகச் தஞ்சம் கேட்டுள்ளார். ஏன் ஒரு சோனகர்களின் அல்லது ஒரு இஸ்லாமிய நாட்டில் கேட்க வேண்டியது தானே.

    Reply
  • indiani
    indiani

    There is a another news in BBC too-Please read:

    7 December 2010 Last updated at 17:39 :BBC world

    Varanasi bombing: Child dies in Indian holy city attack The blast hit those attending the sunset Ganga aarti prayer ceremony A one-year-old girl has been killed and at least 34 people have been injured by a bomb explosion in the northern Indian holy city of Varanasi, officials say.

    The small, improvised device was hidden in a milk canister at a bathing point on the banks of the River Ganges near the Vishwanath temple, police said. The injured included Hindu worshippers attending an evening prayer ceremony.

    “The blast is an attempt to weaken our resolve by the evil forces of terrorism, in which the terrorists will not succeed” :Manmohan Singh-Indian Prime Minister
    The explosion occurred at about 1830 (1300 GMT), and struck those attending the Ganga aarti prayer ceremony at the Shitla ghat – one of the many stone staircases which lead down to the Ganges.

    The United News of India news agency said the powerful explosion shook nearby buildings and knocked over iron railings around the Vishwanath temple. Stone walls up to 60m (200ft) away were damaged. One witness told India TV that some people were hit by metal shrapnel. Blood-soaked debris was left scattered along the embankment.

    “This is a clear-cut indication that terrorist outfits in [Uttar Pradesh] are once again active,” he told the Times Now TV channel. “It appears as if the police have also been lax.” The BBC’s Chris Morris in Delhi says the only good news for the authorities is that the device used in Tuesday’s incident – although deadly – was not particularly powerful.

    An Islamist militant group, the Indian Mujahideen, has sent an email saying it was behind the explosion. It speaks of revenge for the destruction by Hindu extremists on 6 December 1992 of the 16th Century Babri mosque in the northern Uttar Pradesh town of Ayodhya.

    Varanasi is the religious capital of Hinduism and is usually packed with Indian pilgrims and foreign tourists.

    Hindus believe that if a person is cremated in Varanasi, or the ashes of the dead are scattered in the river and last rites offered, the deceased will achieve release from sufferings of the cycle of birth and death. The Ganga aarti, which takes place daily at sunrise and sunset on the Shitla, Dashashwamedh and Prayag ghats, is attended by 2,000 to 3,000 people, many of whom are foreigners.

    In 2006, 15 people were killed and dozens injured when bombs exploded at the Sankot Mochan temple and the main railway station.

    Reply
  • BC
    BC

    இலங்கை, தமிழ்நாடு, கேரளாவில் இனத்தை பின் தள்ளி மதத்தை முன்னிலைபடுத்தும் அளவுக்கு தீவிர மத அடிப்படைவாதிகள் நிறைந்து இருக்கிறார்கள். லஸ்கர்-இ-தொய்பா அதை பயன்படுத்த விரும்புகிறது.
    இந்தியானி தெரிவித்த செய்தி மனிதர்களுக்கெதிராக மதம் செய்த பயங்கரவாதம்.

    Reply
  • தாயுமானவர்
    தாயுமானவர்

    “ஏற்றத்தாழ்வுகளோடு மனிதர்களைப் படைக்கிறார் கடவுள்’ என்கிறது ரிக்வேதம். இது எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்றும் சொல்கிறது வேதம். அதுமட்டுமல்ல, சிலர் காலில் பிறந்தார்களாம். சிலர் தலையில் பிறந்தார்களாம். சிலர் பிறக்கவேயில்லையாம்! ஆகவே மதத்தின் பெயரால், ஆன்மிகத்தின் பெயரால் கடவுளே ஒரு பெரிய ஒடுக்குமுறையை கடைப்பிடிக்கிறார்.
    புருஷசுத்தம் என்பது சமமற்ற தன்மை எனும்போது, அது எப்படியெல்லாம் இந்து மதத்தோடு பொருந்திப் போகிறது என்பது மிகவும் முக்கியம்.

    இந்து மதத்தில் உள்ளவற்றைப் பாருங்கள். கொலை செய்யும் தெய்வங்களெல்லாம்கூட இருக்கின்றன. தெய்வீகம் என்று சொல்லப்படக்கூடிய இடத்திலிருந்து வரும் நேர்மறையான அன்பைக்கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒழுக்கத்தை அறிவுறுத்துபவையாக அவை மாறும்போது – நான் இந்த இந்து தெய்வங்களைவிட புத்தர், ஏசு, நபிகள் ஆகியோர் அறிவுறுத்திய ஒழுக்கங்களையே பரிந்துரைப்பேன். நிச்சயமாக பிரம்மன், இந்திரன், ராமன், கிருஷ்ணன் ஆகியோர் செய்த கொலைகள், பாலியல் வன்முறைகள், திருட்டுத்தனங்கள் ஆகியவற்றை அல்ல. நான் வாத்சாயனாரின் காமசூத்திரத்தை பரிந்துரைக்க மாட்டேன். 64 வகைகளில் பாலியல் தொழிலாளியுடன் பாலுறவு கொள்வது எப்படி என்பதை விளக்கும் இவைகளை கற்றுக் கொடுத்தால், எய்ட்ஸ்தான் பரவும். ஆண் – பெண் உறவு நிலைமைகள் ஏசு கூறியதைப் போல இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். புத்தரைப் பொருத்தவரை, இந்த விஷயத்தில் அவருடைய கருத்து என்னவாக இருந்தது என்பது குறித்து போதுமான தகவல்கள் இல்லை. ஆனால், ஏசு என்ன சொல்கிறார் என்றால், “கடவுள் கணவனையும் மனைவியையும் சரிபாதியாக ஓருடலில் படைத்தார்’ என்கிறார். இதில் ஒரு நீதி இருக்கிறது. அதனால்தான் அய்ரோப்பாவிலும், அமெரிக்காவிலும் தங்கள் துணையை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறையுள்ளது.

    நாம் நம் மக்களின் மனங்களிலிருந்து பார்ப்பனியத்தை களைந்தெறிய வேண்டி இருக்கிறது. பார்ப்பனியத்தைவிட, இந்து மதத்தையே தூக்கியெறிய வேண்டியிருக்கிறது. நம் நாட்டை இந்து மதத்திலிருந்து விடுவிக்க வேண்டும். இதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இந்தியா ஒரு கிறித்துவ நாடாகவோ, பவுத்த நாடாகவோ, இஸ்லாமிய நாடாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். எனக்குக் கவலையில்லை. ஆனால், அது ஓர் இந்து நாடாக மட்டும் இருக்கக் கூடாது என்பதே முக்கியமானது. ஏனெனில், இந்து மதம் அறிவியலுக்கெதிரானது. மனித இனத்திற்கெதிரானது. உற்பத்திக்கெதிரானது.

    பேராசிரியர் காஞ்ச அய்லய்யா அவர்களின் பேட்டியிலிருந்து – KEETRU

    Reply
  • தாயுமானவர்
    தாயுமானவர்

    ///இவர்களை தனியவிடுவதே மேல் எம்முடன் வேண்டாம். இவர்கள் தங்கள் இனத்துடனும் சேர்ந்து இருக்கமாட்டார்கள் பிற இனத்துடனும் சேர்நது இருக்க மாட்டார்கள்///

    என்னமோ நமது தமிழினம், முஸ்லிம் இனத்தை மடியில் கட்டிக்கொண்டு அவதிப்படுவதுபோல் காட்டிக்கொள்கின்றனர். எப்பவோ சிங்கள இனத்தையும் முஸ்லிம் இனத்தையும் வடக்கிலிருந்து அடித்து துரத்தியது தமிழினம். அந்த பிரதிபலனை நாம் இப்போது அனுபவிக்கிறோம். நமது தமிழினத்திற்கு உள்ளேயே சிறிதளவுகூட ஒற்றுமையில்லை. பிறரை எதிரியாகவே பார்த்து பழக்கப்பட்டது நமது தமிழினம். பிற இனங்களை எள்ளி நகையாடுவது நமது தமிழினத்தின் பண்பாடு??? தமிழினம் எங்கே செல்கிறது? காலம் பதில் சொல்லும்.

    Reply
  • நந்தா
    நந்தா

    இந்துக்களுக்கு எதிரானவர்கள் “கொலைகள்” பற்றிப் புலம்புவது வேடிக்கை. இந்து மதம் சொத்துக்காக கொலை கொள்ளைநடத்து என்று கேள்க்கவில்லை. ஆனால் இஸ்லாம், கிறிஸ்தவம் என்பன பெண்ணுக்கும், பொருளுக்கும் கொள்ளை, கொலை என்பனவற்றை நடத்தும்படி சொல்லுகிறது.

    முஸ்லிம், கிறிஸ்தவ படையெடுப்புக்கள் இந்தியாவை நோக்கி ஏன் வந்தன என்பதைப் பற்றி இந்த இந்து விரோதிகள் வாய் திறபதில்லை. காஞ்ச அய்லய்யா நுனிப்புல் மேய்ந்துவிட்டு கிறிஸ்தவக் கும்பல்களுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது பரிதாபம். அவருக்கு இந்து மதத்திலுள்ள அர்த்தனாரி தத்துவம் தெரியமல் போனது எப்படி?

    கடவுளர்களில் ஆணும் பெண்ணும் இருக்கும் இந்து சமயத்தில் ஆண்-பெண் சமத்துவம் உள்ளதை புரியாமல் கதைகிறார். பாலைவனத்து முகம்மது பெண்களுக்கு ஒட்டகத்தின் மதிப்பை விட கீழான மதிப்பைக் கொடுப்பது அல்லது பட்டியில் மாடுகளை அடைத்து வைப்பது போல வைத்து ஒரு ஆண் “பிள்ளை” கொடுக்கும் பணி சிறப்பானது என்று கூறும் இந்த பித்தளை சித்தாந்தம் யாருக்குத் தேவை?

    கொள்ளையடிக்க வந்த கிறிஸ்தவ, முஸ்லிம் கும்பல்களின் உபத்திரவங்கள் இன்னமும் தீர்ந்த பாடில்லை. தனது மதம் சாராதவனைக் கொலை செய்ய வேண்டும் என்று கோரும் இஸ்லாம், கிறிஸ்தவம் என்பனவே ஒழிக்கப்பட வேண்டிய சமயங்கள்!

    இந்து மதம் மனிதர்களை “சமனற்றவர்கள்” என்று சொல்லுகிறது என்று கூறும் இவர் யதார்த்த வாழ்வில் அதுநிஜம் என்பதைப் புரியாமல் போனது எப்படி?

    மனிதர்களை அடிமைகளாக்குவதை இஸ்லாம், கிறிஸ்தவம் என்பன ஆதரிக்கின்றன. அதுவே அவர்களின் வரலாறு. இந்த விஷயம் இந்த தெலுங்கு காஞ்ச அய்லய்யாவுக்கு தெரியாதொ?

    “உடலுறவு” என்பது பெண்ணைத் திருப்ப்திப் படுத்தும் ஒரு செயல்பாடு என்பது இந்துக்கள் அறிந்த உண்மை. இஸ்லாமும், கிறிச்தவமும் பெண்கள் “ஜடங்கள்” என்றே சொல்லிக் கொண்டு வருகின்றன. அதனால்த்தானோ என்னவோ இன்று மேற்குலகில் “காமசூத்திரம்” என்பது சகல வெள்ளையர்களுக்கும் தெரிந்துள்ளது.

    “பாலியல் தொழிலாளியுடன்” என்று சொல்லுவது படு பொய். பாலுறவு என்பதில் ஒரு ஆணின் வீரம் என்பது பெண்ணை சந்தோஷப்படுத்துவது என்பது புரியாதா? பெண் என்பது குட்டி போடும் மிருகம் என்று வரையறுக்கும் இஸ்லாம், கிறிஸ்தவம் என்பன யாருக்குமே உதவாது!

    Reply
  • BC
    BC

    கடைந்தெடுத்த பிற்போக்குதனத்தின் மொத்த உருவமான முஸ்லிம் மத நாடாக இந்தியா இருக்கட்டும். ஆனால் இந்து அது ஓர் இந்து நாடாக மட்டும் இருக்கக் கூடாது என்பதே முக்கியமானது.//
    இதுவல்லவா முற்போக்கு. சுதந்திரமாக இந்தியவில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கும் சேர்த்து ஆப்பு.

    Reply
  • linga
    linga

    Dubai one among the seven kingdoms in United Arab Emirates, an Arab and Muslim country, is well known for its religious tolerance. A large portion of migrant workers from India and Sri Lanka to UAE practice Hinduism. There is a Hindu Temple Complex at the Bur Dubai creek near the Dubai Museum which caters to the needs of Hindus. The temple complex houses the Lord Shiva and Krishna Temples.

    There is a large queue during weekends and holidays at the small temple complex. Devotees have to wait for long period to get darshan. The shrines are dedicated to Lord Krishna and Lord Shiva.

    The Hindu Temple Complex at the Bur Dubai creek is the single temple in UAE for thousands of Hindus in Dubai, Abu Dhabi, Sharjah, Ajman, Umm Al Quwain, Fujairah and Ras Al-Khaimah – the seven kingdoms which form United Arab Emirates.

    Interestingly, the temple sits next to a Mosque in the busy Bur Dubai area.

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் தாயுமானவர்,
    இனம் என்ற தலைப்பில் மதம் பற்றி கதைப்போர் கூட்டத்தில் சேர்ந்தயையிட்டு சற்று கவலை. இருப்பினும் உங்கள் பார்வை சிலருக்கு தெளிவை ஏற்படுதியிருக்க வேண்டும். ஆனால் நாம் என்ன செய்யமுடியும். சட்டியில் உள்ளது தானே அகப்பையில் வரும்.

    இஸ்லாம் கொலை, கொலை என்று அழைவதாக கூக்குரல் இட்டோர் இன்று கிறிஸ்தவமும் கொலை, கொள்ளைக்கு தூண்டுவதாக கூறுகிறார்கள். முஸ்லிம் என்றவகையில் இஸ்லாத்திலும், தனிப்பட்ட ஆவலின் நிமித்தம் கிறிஸ்தவதிலும் சற்று பரிச்சயம் உண்டு. ஆனால் இந்த இரண்டு மதங்களும் கொலையையும், கொள்ளையையும் அந்த சமயத்தவருக்கு கட்டாயமாக்கியதாக கதைஅளக்கப்படும் விதமாக அப்படி ஒன்றும் இல்லை என்பதை நீங்கள் தெட்டத் தெளிவாக அறிந்திருப்பீர்கள் என் நம்புகிறேன். ஆகயால் இவர்கள் பற்றி நாம் ஒன்றும் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

    மேலும் இவர்கள் இந்த கிறிஸ்தவ நாடுகளில் தானே இருக்கிறார்கள்? அப்படியானால் இவர்கள் எந்த கிறிஸ்தவரை பற்றி கதைக்கிறார்கள்? அல்லது எந்த கிறிஸ்தவ பிரிவை அல்லது எந்த இனத்தின், உதாரணமாக இலங்கையில் சிங்கள கிறிஸ்தவரையா அல்லது தமிழ் கிஸ்தவரையா இவர்கள் குறி வைக்கிறார்கள்? அல்லது ஒட்டு மொத்தமாக இலங்கை கிறிஸ்தவர்கள் கொலை, கொள்ளைகாரர்கள் என்றால், இந்த உத்தம தமிழ் இனத்தில் இருந்து கிறிஸ்தவம் என்ற சமயத்தை பின்பற்றுவதற்காக தமிழ் கிறிஸ்தவர்கள் துரத்தியடிக்கப் படப்போகிறார்களா? அப்படியானால் இவர்கள் சொல்லும் மனிதம் அது, இதுவெல்லாம் இப்போது இல்லையா? இருக்கின்றது என்றால், இஸ்லாத்தை விடுங்கள், இந்த கிறிஸ்தவர்களுக் எதிரான போக்கையும் மனிதத்துக்குள் அடக்கப் பார்க்கிறார்களா? தாயுமானவர் உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? எனக்கொன்றால் ஒன்றுமாய் புரியவில்லை.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    தாயுமானவர்/என்னமோ நமது தமிழினம், முஸ்லிம் இனத்தை மடியில் கட்டிக்கொண்டு அவதிப்படுவதுபோல் காட்டிக்கொள்கின்றனர்/ கிட்ட இருந்தே பட்டது போதாது என்று மடிக்குள்ளா?

    தாயுமானவரே- இருக்கு வேதத்தின் தாங்கள் கூறிய எதையுமே காணோம். அதர்வனத்திலும் கீதையில் பகவான் கிருஸ்ணனும் சொல்கிறார்கள். காலத்தின் தேவை அறிந்த நான் பிறப்பேன் என்று. இருக்கு வேதம் இயற்கையைப் பற்றியும் இயற்கை வணக்கங்கள் பற்றியுமே அதிகமாகப் பேசுகிறது. இருக்கு வேதம் என்றும் கூறவில்லை இது எக்காலத்துக்கும் பொருந்தும் என்று. இதனுடைய காலக் கருத்தியல் தொடர்ச்சியே யசுர் வேதம். இங்கேதான் கடவுள்கள் பற்றிப் பேசப்படுகின்றன.

    தாயுமானவர் கருத்து வேடிக்கைக்குரியது. உங்களது பரிந்துரை யாருக்குத் தேவை. உலகம் சமனற்றது என்பதை வேதங்கள் கூறின. இதுவே இயங்கு சக்தியின் தத்துவமும். சமனுள்ளதில் அசைவு இருக்காது. சமனற்ற தன்மையுடன் சமநிலைப்படுவதுதான் இந்துமதம்.

    நீங்கள் காமசூத்திரம் படிக்கமாட்டீர்கள் கற்பழிப்பீர்களோ? காமசூத்திரத்தான் எயிட் பரவுமாம். காமசூத்திரம் என்பது ஒரு சூத்திரமே தவிர கண்ட நிண்ட இடமெல்லாம் கட்டிப்பிடி என்று சொல்லவில்லை. காமசூத்திரம் சரியாகத் தெரிந்திருந்தால் இஸ்லாமியர் தம்பெண்களை தலையைச் சுத்தி விட்டிருக்க மாட்டார்கள். திருப்தி அடைந்த மனிதன் சுயமானவன்.

    Reply
  • நந்தா
    நந்தா

    எதிர்பார்த்த பதில்தான் நிஸ்தாரிடமிருந்து வந்திருக்கிறது. கிறிஸ்தவர்களின் நாடு என்றுநிஸ்தார் குறிப்பிடும் நாடுகள் எவை என்பது தெரியவில்லை. சில வேளைகளில் முஸ்லிம்கள் குண்டு வைக்கும் நாடுகள் என்றுதான் நினைக்கிறேன்.

    கனடிய அரசியல்வாதிகள் யாரும் கனடாவை கிறீஸ்தவ நாடு என்று இது வரயில் சொன்னது கிடையாது. சில வேளை நிஸ்தார் சிலநாடுகளை கிறிஸ்தவர்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கிறாரோ என்பது தெரியவில்லை.

    வெள்ளைக் கிறிஸ்தவர்கள் மதத்தை கை விடத் தொடங்கி பல காலம் ஆகிவிட்டது. ஆனால் நம்ம கிறிஸ்தவர்கள் தாங்கள்தான் “சுத்தமான” கிறிஸ்தவர்கள் என்று அலைகிறார்கள். போர்த்துக்கீசர் காலத்து துவேஷங்களை இன்றும் காவுகிறார்கள்.

    முஸ்லிம்களின் கதையோ சொல்லத் தேவையில்லை.

    மீண்டும் அதே கேள்விதான். இலங்கயில் இஸ்லாமில் சொல்லப்படும் காபிர்கள் யார்? காபிர்களை கொல்ல வேண்டுமா அல்லது கொஞச வேண்டுமா என்று இஸ்லாம் சொல்லுகிறது?

    Reply
  • mohamed nisthar
    mohamed nisthar

    அன்புடன் நந்தா,
    8.12டில் “எதிர்பார்த்த பதில்தான் நிஸ்த்தாரிடம் இருந்து வந்திருக்கிறது” என்று ஆரம்பித்து உங்கள் நிலைபாட்டை ஏற்றுக் கொண்டதற்கு நன்றிகள் பல. அதாவது நாங்கள் இனம் பற்றிக் கதைக்க நீங்கள் தேவையில்லாமல் மதம் பற்றி கதைப்பதையும், இதுவரை இஸ்லாத்தை கொலை, கொள்ளைகார மதமாக காட்டிய நீங்கள் இப்போது கிறிஸ்தவத்தையும் அதற்குள் ஏனோ இழுத்து, எந்த கிறிஸ்தவரைப் பற்றி கதைக்கின்றிர்கள் என்று தெரியாமல் நீங்கள் தடுமாறுவதை சரியாக இனம் காண்பேன் என நீங்கள் நினைத்தைப் போல் நடந்து விட்டது என்ற விடயம்.

    நான் தரப்போகும் கிறிஸ்தவ நாட்டுக்கான வரைவிலக்கணத்தின் மூலம் எப்படி “சோனகர்” என்ற கட்டுரை விடயத்தின் சரி, பிழையை நிர்னயிக்கப் போகிறீர்கள்?

    மேலும் “காபிர்” என்றால் யார் என்று 10க்கும் மேல் பட்ட முறை இதே தேசம்நெற்றில் சொல்லியாகிவிட்டது. அதில் இலங்கை காபிருக்கும், பாக்கிஸ்தானிய காபிருக்கும், பாலைவனத்து காபிருக்கும், கனேடிய காபிருக்கும், பபுவா நிவ்கினி காபிருக்கும் வித்தியாசம் இல்லை.

    ஆனால் காபிரை கொலை செய்யென்று குர்-ஆன் கூறவில்லை.உங்கள் பொலிடிகள் இஸ்லாம் இணையத்தளம் என்ன சொல்கிறது என்று தெரியாது.
    நந்தா இப்படி அவதிப்படாமல், அவசரப்படாமல், மற்ற இனம், மதம் மேல் ஆத்திரப்படாமல் உங்கள் நிலைப்பட்டை சுறுக்கமாகவோ அல்லது விபரமாகவோ எழுதுவீர்களானால் யாவரும் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் அல்லவா? இதைவிடுத்து, கேர்ணல் பொன்சேகா கணடாவில் கதைத்தமாதிரி சிறுபான்மையினர் வாய்பொத்தி இருக்கவேண்டும் என்றதையும் விட மோசமான முறையில் “சோனவர்” வெளியேற வேண்டும் என்றால் நடக்கக் கூடிய விடயமா? அல்லது இஸ்லாம் ஒழிக, கிறிஸ்தவம் ஒழிக என்றால் அல்லது சைவம் வாழ்க, தமிழர் மட்டும் வாழ்க என்றால் நீங்கள் துவேசியாக அல்லவா பார்க்கப்படுவீர்கள்.

    Reply