இன்று இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன உடன் சந்திப்பு.

Wikramabahu Karunaratnaலண்டன் வந்துள்ள இலங்கையின் இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண உடனான சந்திப்பு நவம்பர் 28 2010ல் வோல்தம்ஸ்ரோவில் இடம்பெற உள்ளது. இச்சந்திப்பை தேசம், ASATiC என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. மே 18 2009ற்குப் பின்னான அரசியல் நிலைமைகள் இடதுசாரி முன்னணி தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்துவந்த போதும் தொடர்ச்சியாக தமிழ் தேசியத் தலைமைகளால் நிராகரிக்கப்பட்டு வந்தமை இடதுசாரி முன்னணியின் எதிர்காலச் செயற்பாடுகள் பற்றி இச்சந்திப்பில் கலந்துரையாடப்படும்.

நடந்து முடிந்த இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் விக்கிரமபாகு கருணாரட்ன தலைமையிலான இடதுசாரி முன்னணியை ஆதரிக்குமாறு மே 18 இயக்கம் மற்றும் முற்போக்கு சக்திகள் கேட்டுக்கொண்டிருந்தன. (இடதுசாரி முன்னணித் தோழர் விக்கிரமபாகுவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு!) இது தொடர்பாக இடதுசாரி முன்னணியுடன் இணைந்துகொண்ட எம் கெ சிவாஜிலிங்கம் உடனான சந்திப்பினையும் தேசம்நெற் ஏற்பாடு செய்திருந்தது. (ஜனாதிபதி வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கம் இலண்டன் வந்தடைந்தார்! இன்று கிழக்கு லண்டனில் பொதுக்கூட்டம்!! – கேள்விநேரம்)

ஆயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் லண்டன் கூட்டாளிகளும் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை ஆதரித்து இருந்தனர். தங்கள் அரசியல் முடிவுகள் மண்கவ்விய நிலையில் முதற்தடவையாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரிஎப் இடதுசாரி முன்னணித் தலைவருடனான வெளிப்படையான சந்திப்பை Nov 25 2010 ஏற்பாடு செய்திருந்தது. (கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன லண்டனில் மக்களுடன் சந்திப்பு – பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடு)

தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப் பலமாக இருந்த காலகட்டத்தில் விக்கிரமபாகு கருணாரட்ணவை வன்னிக்கு அழைத்து மாவீரர் நாளில் உரையாற்ற வைப்பதன் மூலம் தமிழ் – சிங்கள மக்களிடையே அரசியல் ரிதியான புரிந்தணர்வுக்கு அது வழியேற்படுத்தும் என்பதையும் தேசம் சஞ்சிகைகயில் சுட்டிக்காட்டி இருந்தோம். ஆனால் முள்ளிவாய்க்கால் வரை பொறுத்திருந்து ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் கூட அரசியல் ஞானம் பெறாமல் கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரத்திற்கு புறப்பட்டு உள்ளது தமிழ் தேசியம்.

வோல்தம்ஸ்ரோவில் இடம்பெறும் சந்திப்பில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை தொடர்பில் இடதுசாரி முன்னணியின் நிலைப்பாடு எதிர்காலத்தில் தமிழ் அமைப்புகளுடன் எவ்வாறான ஒரு உறவை இடதுசாரி முன்னணி வளர்த்துக்கொள்ளும் என்பன போன்ற விடயங்களுக்கு இச்சந்திப்பில் விளக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்சந்திப்பில் கலந்து கொள்ள முடியாதவர்கள் தங்களுக்குள்ள கேள்விகளை இங்கு பதிவிடும் பட்சத்தில் அவற்றை விக்கிரமபாகு கருணாரட்னவின் முன் வைக்கமுடியும்.

நிகழ்வு விபரம்:

இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன உடனான கலந்துரையாடல்

November 28, 2010 @ 19:30

 Lord Broke Hall, Shernhall St, Walthamstow, London, E17 3EY

 Joint Invitation: ThesamNet & ASATiC

 T Jeyabalan (07800 596 786), T Sothilingam (07846 322 369)

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • oruvan
    oruvan

    “ஆயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் லண்டன் கூட்டாளிகளும் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை ஆதரித்து”

    இது தொடர் கதைதான். ஏனெனில் எமது தலைவர்களுக்கு எப்பவுமே சொந்த காலில் நின்று பழக்கம் இல்லை. முன்பு J.R பின் இந்தியா, சந்திரிகா, பிராபாகரன், சரத் பொன்சேக்கா, ……

    Reply
  • kovai
    kovai

    இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்னவிடம் எனது கேள்வி?

    கடந்த அறுபதிற்கு மேலான ஆண்டுகளாக, சிங்கள இடதுசாரித் தலைவர்கள் பவுத்த சிங்கள பேரினவாதத்தின் பெருமித வளர்ச்சிக்கு முண்டு கொடுத்தார்கள். மாறாக தமிழ் இடதுசாரித்தலைவர்கள் தமிழ்த் தேசியவாதத்தை சிதைத்தது மட்டுமல்ல, பேரினவாத அடக்குமுறையை மறுதலித்தார்கள்.
    இந்தப் பரிணாம வளர்ச்சியில் இடதுசாரியம், மீண்டும் இரு இனங்களையுமிணைக்கவிடாது. இந்த நிலையில் சீன, இந்திய இரும்புப்பாதங்களின் சுவடுகள், இலங்கையில் தோன்றிவிட்டன. அதனால் மக்களை நேசிப்பவர்கள், இந்த இரு நாடுகளில் ஏதாவது ஒன்றின் உதவியுடன்(அரசியலை, ஆயுதத்தை இழந்த இனத்தின் இறுதி எதிர்பார்ப்பும் இதுதான்) அதிரடி ஆட்சி மாற்றம் செய்யப்படுவதும், சுயநிர்ணய உரிமை அடங்கிய அரசியலமைப்பு மாற்றியமைப்புமே இன்றைய நடைமுறைச் சாத்தியமான எதிர்பார்ப்பு.
    இவ்வாறான செயற்பாடு பற்றிய உங்களது பார்வை என்ன?

    Reply