புலிகளின் ‘சீறோ வன்பேஸ்’ வதை முகாம் கண்டுபிடிப்பு

புலிகளால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட 26 படை வீரர்களது எலும்புக் கூடுகள் நேற்று தோண்டி எடுக்கப்பட்டதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தடுப்புக் காவலிலுள்ள முன்னாள் புலி உறுப்பினரொருவர் வழங்கிய தகவலையடுத்து, முல்லைத்தீவு, பரந்தன் வீதியில் 9 கி. மீ. தூரத்தில் வல்லிபுரம் என்ற இடத்தில் (காட்டுப் பகுதியில்) இந்தப் புதை குழி தோண்டப்பட்டுள்ளது. இந்தப் புதை குழியைத் தோண்டுவதற்கென 100 பேர் கொண்ட குழுவொன்று அங்கு சென்றிருந்தது. மேற்படி காட்டுப்பகுதியில் புலிகளின் ‘சீறோ வன்பேஸ்’ என்ற பெயரில் வதை முகாமொன்று செயற்பட்டு வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

புலிகளுக்கு எதிரானவர்களையும், பிடிக்கப்படும் படை வீரர்களையும் இந்த முகாமுக்குக் கொண்டு சென்று சித்திரவதை செய்து கொல்வதற்கே இந்த முகாம் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது அங்கு நடத்தப்பட்ட தேடுதல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இராணுவம், கடற்படை வீரர்களின் எலும்புக் கூடுகளே நேற்றும் நேற்று முன்தினமும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரி மேலும் கூறினார்.

புலிகளால் பிடித்துச் செல்லப்பட்ட ஐ. பி. ஜெயரட்ணமும் இங்கு தான் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. எடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளை கொழும்புக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

10 Comments

 • மாயா
  மாயா

  மக்கள் புலிகளை ஆதரித்தார்கள் என்றால் ; இப்படியான வதை முகாம்களை புலிகள் ஏன் உருவாக்கினார்கள்?

  எத்தனை பேரை புலிகள் சித்திரவதை செய்து கொன்றிருப்பார்கள்?

  இவர்களை எந்தக் கோட்டில் ஏற்றி விசாரிப்பது?

  சர்வதேச நீதி மன்றத்துக்கு இவர்களை யாரும் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபடவில்லையா?

  மகிந்த மட்டுமல்ல > புலிகளும் இன்னும் ஏகப்பட்ட அமைப்புகளும் மணித உரிமை மீறல்களை செய்திருக்கிறதே?

  Reply
 • Ram
  Ram

  //மக்கள் புலிகளை ஆதரித்தார்கள் என்றால் ; இப்படியான வதை முகாம்களை புலிகள் ஏன் உருவாக்கினார்கள்?//

  அது சிங்கள படைகளுக்கும், காட்டிக்கொடுத்து இனவழிப்பிற்கு துணை போபவர்களுக்காக.

  Reply
 • BC
  BC

  தன் இனத்தை தானே அழிப்பதற்கு தன் இனத்தை சேர்ந்தோர் வாய் கூட திறக்க முடியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக புலிகள் இப்படியான வதை முகாம்களை உருவாக்கினார்கள்.

  Reply
 • நந்தா
  நந்தா

  //மக்கள் புலிகளை ஆதரித்தார்கள் என்றால் ; இப்படியான வதை முகாம்களை புலிகள் ஏன் உருவாக்கினார்கள்?//
  அது சிங்கள படைகளுக்கும், காட்டிக்கொடுத்து இனவழிப்பிற்கு துணை போபவர்களுக்காக//

  ஆமா அப்படிக் காட்டிக் கொடுக்க புலிகளிடம் அணுகுண்டு ரகசியமா இருந்தது?

  தமிழருக்கு விடுதலை என்று பம்மாத்துக் காட்டி தமிழர்களிடம் கொள்ளையடித்து, கொலை செயத கும்பல்களை தமிழன் “கேள்வி” கேட்டால் அது காட்டிக் கொடுப்போ? இதுவரயில் அப்படி கொல்லப்பட்ட தமிழர்கள் எதனைக் “காடிக்கொடுத்தார்கள்” என்று இவர் திருவாய் மலர்ந்தால் நல்லது

  Reply
 • மாயா
  மாயா

  //ஆமா அப்படிக் காட்டிக் கொடுக்க புலிகளிடம் அணுகுண்டு ரகசியமா இருந்தது?//

  குண்டுகளே இல்லாமல் செயின் புளொக்களில் படம் காட்டிய ஹீரோயிசத்தை மக்கள் புரிந்து கொள்ள முள்ளிவாக்கால் வரை ஓட வேண்டி இருந்தது. கடைசியில் மக்கள்தான் குண்டுகளானார்கள். பாவம். இவனுகளுகளுக்கிட்ட ஒரு மண்ணும் இல்லை என்று திரும்பி ஓட பார்த்த மக்களை சுடத்தான் இருந்த குண்டுகளை பாவித்தார்கள். கடைசியில் சீலையை கிழித்து வெள்ளைக் கொடியோடு வந்து செத்து தொலைஞ்சதுதான் மிச்சம்.

  வாய் திறந்த மக்களை சுடு சட்டியில் போட்டு எரித்திருக்கிறார்களே? நாய் சங்கிலிகளில் கட்டி நாயைப் போல் நடத்தியிருக்கிறார்கள்? இதைவிட அரச முகாம்கள் எவ்வளவோ மேல். நீ என்ன செய்வாயோ > அது உனக்கும் வரும்.

  Reply
 • karuna
  karuna

  விடுதலைப் புலிகளின் சித்திரவதை முகாம் எனக் கூறப் படும் ‘விக்டர் பேஸ்’ இல் இருந்து 26 பேரின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 16 இனம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பரந்தன் பிரதான வீதியில் 28 கிலோமீற்றர் தொலைவில், 9 கிலோமீற்றர் தூரத்திலுள்ள காட்டுப்பகுதியிலுள்ள விக்டர் 1 முகாமில் இச்சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். இப்படையினர் 16.01.2009 ஆம் திகதி கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக மேற்படி சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார். புலிகளின் பிரதிப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் ரட்ணம் மாஸ்டரினால் நடத்தப்பட்ட விக்டர் பேஸ்-1 முகாமில் 8 இராணுவத்தினரும் 18 கடற்படையினரும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு மீட்கப்பட்ட எலும்புகளும் சாம்பலும் 24 சாக்குகளில் சேகரிக்கப்பட்டன.

  Reply
 • kovai
  kovai

  எலும்புக் கூடுகளை வைத்து, யாருடையவை எனக் துப்புத்துலக்கும் அதிதிறமை இலங்கை அரசாங்கத்திடம் இருப்பது பற்றி, நோபல் பரிசமைப்பிற்கு தெரியப்படுத்துங்கள்.
  சிங்கள ஊடகம் மூலமான பிரச்சாரச் செய்திகளை மட்டும் நம்பி நிகழ்த்துகிற ஆய்வுகள், அதிமேதாவித்தனங்கள் யாருக்குச் சேவை செய்ய எனவும் வெளிப்படுத்துங்கள்.

  Reply
 • thenupriyan
  thenupriyan

  சிங்கள இராணுவத்தின் வதைமுகாம்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையா. அதைப் பற்றியும் எழுதுங்கள்.

  Reply
 • வண்ணன்
  வண்ணன்

  கோவை நீங்கள் இதை யாழ் களம் போன்ற தளங்களில் கொட்டுங்கள். தலைவர் வருவார் என ஈழமுரசு சொன்னால் அதை மட்டும் நம்பும் உங்கள் போன்றவர்கள் தற்போத பிரபாயிசபோபியா என்ற வியாதியில் பீடிக்கப்பட்டுள்ளீரகள்.

  Reply
 • BC
  BC

  வண்ணன், இன்னும் ஒரு கதை இருக்கிறது பிரபாகரனின் பிறந்தநாளுக்கு அடுத்த நாள் 27.11 சர்தாரி இலங்கை வருகிறார். ஏனென்றால் இலங்கையின் பேரழிவிற்காம்.

  Reply