ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க தமிழ்க் கட்சிகளின் அரங்கம் முடிவு

Tamil_Arangam_Met_MR_26Oct10வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அப்பகுதி மக்களின் நலன், வாழ்வாதாரம் தொடர்பாக ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குவதாக தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டிலுள்ள சகல மக்களுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவதுடன் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போன்றதொரு திறமையான தலைவர் வேறு எங்கும் கிடையாது எனவும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tamil_Arangam_Met_MR_26Oct10தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியபோதே தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கருத்தை தெரிவித்தனர்.வடக்கு, கிழக்கு பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றத்தின் செயற்பாடுகள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஆராயப்பட்டது. அத்துடன் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் நலன்புரி விடயங்கள் குறித்தும் பேசப்பட்டது.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் எந்தவொரு நபரையும் மீளக்குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்காது என சுட்டிக் காட்டிய ஜனாதிபதி, நிலக்கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றிய பின்னர் ஒழுங்கான முறையில் மக்கள் அவர்களின் இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றார்.

Tamil_Arangam_Met_MR_26Oct10இச்சந்திப்பின்போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முருகேசு சந்திரகுமார் எம்.பி., வீ. ஆனந்த சங்கரி, ரி. சித்தார்த்தன், எஸ். சதானந்தம், ரி. ஸ்ரீதரன், பி. குமார், கே. சிவாஜிலிங்கம், சீ. சந்திரஹாசன், எஸ். பேரின்பநாயகம், கே. சுரேந்திரன், என். குமரகுருபரன், ஏ. ராஜமாணிக்கம், கே. தயாலினி, ஜீ. ராஜ்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • மாயா
    மாயா

    Tamil party leaders along with Chelva’s son meet the President.

    Under the leadership of Ananda Sagaree,representatives of the Tamil political parties met the President at Temple Trees yesterday and had a two hour long discussion to find answers for the political solution for the Tamils’ ethnic issue; the problems faced by the displaced Tamil people due to the war; compensation for the displaced in consequence of the war; and a plan for the settlement of Tamils in the north alongside the families of the Forces.

    16 representatives of political parties including Chandrahasan, the son of former Federal party leader Chelvanayagam, Minister Douglas Devananda, Chandrakumar, Siddharthan, Padmanabha, M.K.Sivajilingam and Kumar Gurubaran participated in this discussion.

    It is reported that the President has agreed at these discussions to appoint a Committee to look into the affairs of the rehabilitation and resettlement as well as regarding those LTTE suspects who have been taken into custody with a view to releasing them or placing them in rehabilitation camps.

    The President has also told regarding the complaints that the distribution of relief to the people in the north and east is not being duly carried out by the Govt. servants, immediate action is going to be taken to remedy the situation, while adding that measures will be taken to implement the 13th amendment in totality.

    This discussion with the President is a sequel to the decision taken by the representatives of the Tamil parties who met at Douglas Devananda’s house on the 23rd.

    M K Sivajilingam of Tamil National vimukthi alliance said, though the discussions with the President threw some light on the issues, there were no encouraging response from the President in regard to resolving the Tamil people’s issues .

    – Lankaenews

    Reply
  • palli
    palli

    அட பாவிகளா இதை ஒரு 30 வருடத்துக்கு முன்பு செய்திருக்கலாமே!!

    Reply
  • Mohamed Shareef Asees
    Mohamed Shareef Asees

    No choice for the TNA.

    Reply
  • sumi
    sumi

    “சிங்கலயோ மோடயோ” என்ற காலம் மாறி, “தெமலயோ மோடயோ” என்றாகிவிட்டது இன்று.

    Reply
  • மாயா
    மாயா

    //அட பாவிகளா இதை ஒரு 30 வருடத்துக்கு முன்பு செய்திருக்கலாமே!! பல்லி//

    அன்றிருந்த இவர்களும் ; இன்றிருக்கும் சுயநல புலிகளும் ஒரே மாதிரிதான்.

    இன்றைய அனுபவம் அன்று இவர்களுக்கு இருந்திருந்தால் இவ்வளவு சனம் செத்திருக்காது. அது இல்லை முக்கியம் ; இன்றைய தமிழீழ வாதம் வந்திருப்பவங்கள் இதே மாதிரி மாறும்போது இப்ப இருக்கிற தமிழினமும் இல்லாமல் இருக்கும். பிறகு தாஜ்மஹால் பார்க்கப் போறது மாதிரி தமிழர் வாழ்ந்த இடங்களை புலத்து தமிழர் பார்க்க போவார்கள். அப்பிடியானால் அப்படி நினைவுச் சின்னங்களும் இருக்குமோ தெரியாது?

    இதை மக்கள் நினைத்தால் சரி?

    Reply
  • விளங்காமுடி
    விளங்காமுடி

    அடப் பாவிகளா! இதைத்தானடா அறுவது வருசத்திற்கு மேலாக, பெரிசு பெரிசாக் கேட்கிறதும், பிறகு சரணாகதி அடையிறதுமா செய்தீர்கள்.

    Reply