வட மாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாண மக்களுக்கும் தென்னிந்தியாவிலுள்ள மக்களுக்கும் உள்ள உறவு தொடர்பாக தெரியாவிட்டால் இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான உறவு பூரணமடையாது என யாழ்ப்பாணத்தில் வைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா குறிப்பிட்டுள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத்தூதரகத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல நூற்றாண்டு காலமாக இந்தியாவின் வரலாறு கலாசாரம், சமயம், வர்த்தகம் போன்றவற்றுடன் தொடர்புபட்டே இருந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியத் துணைத்தூதரகத்தை யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிப்பதற்கு இதுவே பொருத்தமான காரணம் எனவும் அவர் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை யாழப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இந்திய அரசின் உதவியுடனான நூறு உழவு இயந்திரங்களையும் வழங்கி வைத்தார்.
._._._._._.
யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம் இன்று திறப்பு- 27 Nov 2010
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத் துணைத் தூதரகத்தை இன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கிறார். இன்று காலை யாழ்ப்பாணம் செல்லும் அவர், விவசாயிகளுக்கு 500 டிராக்டர் வண்டிகளைக் கையளிப்பதுடன், யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் துணைத் தூதரகத்தை திறந்து வைக்கவுள்ளார்.
அதன் பின்னர் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படவிருக்கும் 50,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் முதற் கட்டமான 1,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தை அரியாலையில் அங்குரார்ப்பணம் செய்யவுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து மதவாச்சி செல்லும் இந்திய வெளிவிவகார வட பகுதிக்கான புகையிரதப் பாதை அமைக்கும் திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இத்திட்டம் மூன்று கட்டங்களாக அமைக்கப்படவுள்ளன. மதவாச்சியிலிருந்து மடு வரையும், மடுவிலிருந்து தலை மன்னார் வரையிலும், ஓமந்தையிலிருந்து பளை வரையிலுமாக அமைக்கப்படவுள்ளன.
நந்தா
தமிழர்கள் நன்றி காட்டுவார்களா அல்லது இந்திய “விஸ்தரிப்பு” என்று எதிர்ப்பாட்டு பாடுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
எனினும் இந்தியாவுக்கும்- தமிழருக்கும் உள்ள உறவின் புராதன விளக்கத்தை முதன் முதலாக இந்தியாவின் சக்தி வாய்ந்த ஒரு அமைச்சர் கூறியிருப்பதை வரவேற்று விளங்கிக் கொள்ள வேண்டும்! அது எதிர்கால சந்ததிகளுக்கு நல்ல பயஙளையே கொடுக்கும்!
BC
தமிழர்கள் நன்றி காட்டுவார்களா
புலம் பெயர்ந்த (புலி)தமிழர் இந்திய அமைச்சர் வந்ததால் மகிந்தா இலங்கையை இந்தியாவுக்கு விற்றுவிட்டார் என்பார்கள். சீன அமைச்சர் வந்தால் இலங்கையை சீனாவுக்கு விற்றுவிட்டார் என்பார்கள். இலங்கை இறையாண்மையை இழந்துவிடும் என்ற கவலை அவர்களுக்கு. சிறிலங்கா தாய் நாட்டின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள்.
thenupriyan
யாழ்ப்பாணம் பல நூற்றாண்டு காலமாக இந்தியாவின் வரலாறு கலாசாரம் சமயம் வர்த்தகம் போன்றவற்றுடன் தொடர்புபட்டே இருந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியத் துணைத்தூதரகத்தை யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிப்பதற்கு இதுவே பொருத்தமான காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
நல்ல விடயம். அம்பாந்தோட்டையில் இந்தியத் துணைத்தூதரகத்தைத் திறப்பதற்கு என்ன காரணம்? எல்லாமே சீனாவின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்காவே.
santhanam
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியா இராணுவ பயிற்சி வழங்கியது மிகப் பெரிய தவறு ஆகும் என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான Jaswant Singh தெரிவித்து உள்ளார்.
அவர் புதுடில்லியில் இடம்பெற்ற செயலமர்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் இந்தியா செய்த அத்தவறினால்தான் தமிழர்கள் இன்றும் துன்பத்தில் உழல்கின்றார்கள் என்றார்
அஜீவன்
//நல்ல விடயம். அம்பாந்தோட்டையில் இந்தியத் துணைத்தூதரகத்தைத் திறப்பதற்கு என்ன காரணம்? எல்லாமே சீனாவின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்காவே. – //
தமிழருக்கு இந்த அவலத்தில் இருந்து மீள உதவிகள் தேவை. அவற்றை இந்தியா ஏதோ ஒரு வகையில் வழங்க முற்படும் போது அதையும் தடுப்பவர்கள் தமிழர்கள்தான்.
தமிழருக்கு எவரும் உதவுவதில்லை என் ஒரு புறத்தில் கோசமிடுகிறார்கள். உதவப் போவோருக்கும் எதிராக நடவடிக்கைகள் மற்றும் எதிர் கோசங்களை இடுகிறார்கள். பொதுவாக இந்தியாவுக்கு , தமிழ் நாட்டில் இருந்து கிளம்பும் கோசங்கள் பொதுவாகவே தலையிடியாக இருப்பதுண்டு. தமிழ்நாட்டு கோசங்களை இந்தியாவால் கணக்கிலெடுக்காமல் இருக்க முடியாது. எனவே இலங்கை அரசுக்கான உதவிகளை இந்திய அரசு மட்டுமல்ல ; தமிழ் மக்கள் மீது அனுதாபம் கொண்டுள்ளவர்களாலும் செய்ய முடியாது உள்ளது. அவற்றை நாம் கண்கூடாக பார்த்தே வருகிறோம். அதற்கு முக்கிய காரணம் தமிழர்களே.
உதாரணத்துக்கு அசின் ஏதோ நல்ல நோக்கத்தோடு சிலருக்கு கண் சிகிச்சைக்கு உதவப் போக , அதற்கு எதிராக எழுந்த கோசம் அங்கே நடந்த சில தவறுகளை சுட்டிக் காட்டி பலரது கண்களைக் குருடாக்கி விட்டார் என ஒரு பக்கமும் , இனவாத சிங்கள அரசுக்கு உறுதுணையாகிறார் என மறுபுறமும் குற்றசாட்டுகளை வைத்து , அவரது சினிமா வாழ்வுக்கு சில தடைகளை புலிகளை ஆதரிப்போர் கொண்டு வந்தார்கள். அசின் கண் வைத்தியரல்ல , அவர் சிகிச்சைக்கு பணம்தானே கொடுத்திருப்பார் என யாரும் சிந்திக்கவேயில்லை? புலிகளை துவேசிக்கும் நாம், புலிகளுக்கு பணம் கொடுத்தவர்களை துவேசிக்க வேண்டும். அந்த அப்பாவிகளது சாவுக்கு உதவிய அனைவரும் குற்றவாளிகளே. அதை உணர்வார்களா?
இதே போன்ற பிரச்சனைகள் இலங்கை தமிழருக்கு உதவ எண்ணும் பலருக்கும் , இந்திய அரசுக்கும் இருக்கிறது. இந்த உதவிகளை யாருக்கு செய்கிறார்கள் என நாம் சிந்திப்பதே இல்லை? இப்படியான ஒரு சில உதவிகளையாவது நாம் நன்றிக் கடனோடாவது அங்கீகரித்தால் மட்டுமே , அடுத்தவருக்கும் உதவ வேண்டும் எனும் மனப்பாங்கு ஏற்படும். அதைவிடுத்து ஆரம்பத்திலேயே தடுத்தால் , அதை பார்த்து நமக்கு ஏன் பிரச்சனை என்று உதவ எண்ணியவர்களும் உதவாமல் இருந்து விடுவார்கள். இவை யதார்த்தமானவை. இதனால் பாதிக்கப்படுவோர் அந்த அப்பாவிகளே தவிர வேறு யாருமல்ல.
உலக ராஜதந்திரிகள் வரும் போதெல்லாம் , சிலர் விடுவிக்கப்படுவதும் , சில முன்னேற்றங்கள் நடப்பதும் உண்டு. இவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள முனைய வேண்டுமே தவிர , இன்னல்களில் வாழும் மக்களுக்கு தொடர் இன்னல்களை ஏற்படுத்த முனையக்கூடாது. அதுவேதான் தொடர்கிறது. யாராவது செத்தால்தான் நாம் அதை வைத்து பிழைப்பு நடத்தலாம் என்ற மனோபாவம் இன்னும் தொடர்கிறது. இதைத்தான் மரணத்தில் வாழ்வது, அதாவது அடுத்தவர் மரணத்தில் நாம் வாழ்வது என நினைக்கிறார்கள் போலும்.
போதை கேடானது எனத் தெரிந்தும் , போதை அடிக்காமல் வாழ முடியாது எனும் நிலையில் நம்மில் இன்னும் சிலர் இருந்து , அரசியல் நடத்த முற்படுகிறார்கள்.
சீனாவிடமோ , பாகிஸ்தானிடமோ இந்த கோசம் செல்லாது. அவர்களுக்கு தொப்புள் கொடி உறவு பிரச்சனையில்லை. அதை சிறீலங்கா பயன்படுத்துகிறது. அது இந்தியாவுக்கு தலலையிடி , இந்தியா ஒன்று உதவ வேண்டும் அல்லது உதவுவோரை உதவ விட வேண்டும்.
இலங்கையின் புணரமைப்பு என்பது யுத்தப் பகுதிக்கு மட்டுமல்ல. இலங்கையின் அனைத்துப் பகுதிக்கும்தான். பாதையே இல்லாத சிங்களக் கிராமங்கள் , மின்சாரமே இல்லாத இடங்கள் எத்தனையோ சிங்களப் பகுதிகளில் உண்டு. போரில் இறந்த இராணுவ வீரர்களது உடல்களை நீர் நிலைகளைத் தாண்டிக் கொண்டு செல்ல , தோளில் சுமந்த நிலைகளை ஊடகங்கள் கொண்டு வந்ததுண்டு.
நாட்டைக் காக்க போருக்குச் சென்று இறந்தவனின் உடலை, அவன் வீட்டுக்கு கொண்டு செல்ல , ஒரு பாலம் இல்லாத கிராமங்கள் சிங்களப் பகுதிகளில் உண்டு. எனவே தமிழ் பகுதிக்கு மட்டுமல்ல சிங்களப் பகுதிக்கும் சமமான உதவிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதுவே எவரையும் தாக்காது.
இதை உணர அதிகம் தூரம் செல்ல வேண்டியதில்லை. நம் வீட்டையே இதற்கு உதாரணமாக்கிக் கொள்ளலாம். 3 குழந்தைகள் இருந்து ஒரு குழந்தைக்கு முக்கியத்துவம் அளித்தால் அடுத்த குழந்தைகளை அது பாதிக்கும். அதுவே பிரச்சனையாகி விடும்.
நாம் எவ்வளவுதான் நல்லா இருந்தாலும் , அடுத்தவன் வீட்டை எட்டிப் பார்க்காமல் இருப்பதில்லை. அரசுகளும் நாடுகளும் இதற்கும் விதி விலக்கல்ல. எல்லாமே சீனாவின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்காக என்பதைவிட, அனைத்து நாட்டுத் தூதரங்களின் முக்கிய பணி அதுதான்.
thenupriyan
சிஙகள அரசியல் நுகர்வு அரசியல் ஆகும். நெத்தலிக் கருவாடும் பாணும் பருப்பும் இருந்தால் போதும். இலங்கை சுதந்தரமடைந்த காலப்பகுதியிலிருந்து சாதாரண சிங்கள மக்களின் அரசியல் உரிமைகள் இவற்றுக்குளளேயே மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. 90களின் பின்னர் இது மாற்றமடைந்து தமிழர்கள் மீதான இராணுவ வெற்றியே சிங்கள மக்களின் அரசியல் உரிமையாக ஆட்சியாளர்களினால் மாற்றப்பட்டது. அதன் அறுவடையை மகிந்தா கடந்த இரண்டு தேர்தல்களிலும் பெற்றுக்கொண்டார். ஆனால் தற்போது இராணுவ வெற்றி மாயைகள் மறைந்து மீண்டும் நுகர்வு அரசியலை நோக்கி சிங்கள மக்கள் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ் மக்கள் என்றுமே உரிமை சார்ந்த அரசியல் பக்கமே இருந்து வந்துள்ளார்கள். ஆனால் அவர்களின் அரசியலை நுகர்வுப் பக்கம் திருப்புவதற்கான நடவடிக்கைகளே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒரு வடிவமே இந்திய உதவிகள். யாழப்பாண இளைஞர்கள் ஒரே நாளில் தமிழ் நாட்டிற்கு வந்து படம் பார்த்துவிட்டுச் செல்லலாம் என்ற இந்திய வெளியுறவு அமைச்சரின் அழைப்பும் இதனையே வெளிப்படுத்துகின்றது.
மாயா
இன்று சிங்களப் பத்திரிகையில் வந்திருக்கும் படத்துடனான செய்தி. மேலே உள்ள அஜீவன் கருத்து உண்மை என்று சொல்கிறது. சிங்களப் பகுதியில் இறந்த ஒருவரது மரண ஊர்வலம் : -http://www.lankadeepa.lk/2010/11/29/front_news/03.htm
நந்தா
//நல்ல விடயம். அம்பாந்தோட்டையில் இந்தியத் துணைத்தூதரகத்தைத் திறப்பதற்கு என்ன காரணம்? எல்லாமே சீனாவின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்காவே.//
தென்னிலங்கை தென் இந்தியா தவிர வேறு யாருடன் தொடர்பு வைத்திருந்தார்கள்?
ஐரோப்பியர்களின் வருகையுடன் அடிபட்டுப் போன இலங்கை இந்திய முக்கியமாக தென்னிந்திய உறவுகள் புதுப்பிக்கப்படும்நோக்கமாகவே அம்பாந்தோட்டையிலும் இந்திய துணைத் தூதரகம் என்பது புரியாமல் “சீனா” என்று கரடிகளை விடுவது அறியாத்தனமே!
மாயா
//சிஙகள அரசியல் நுகர்வு அரசியல் ஆகும். நெத்தலிக் கருவாடும் பாணும் பருப்பும் இருந்தால் போதும். இலங்கை சுதந்தரமடைந்த காலப்பகுதியிலிருந்து சாதாரண சிங்கள மக்களின் அரசியல் உரிமைகள் இவற்றுக்குளளேயே மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.//
நெத்தலிக் கருவாட்டு மூளை ; யாழ்பாணத்தானின் பனங் கொட்டையும் ; தோசை வடை இட்லியை மிஞ்சி அரசியல் செய்கிறான். சிங்கள இராணுவ யுத்தத்தை விடுங்கள் : தமிழர்கள் ஏன் இறந்தவர்களை காட்டி பணம் புடுங்குகிறார்கள்? தாங்களும் இந்த ஆயுதக் கலாச்சார நம்பிக்கைகள் சரி வராது என்று சொல்லிப் பொட்டு ; அரசியல் மூலம் போராட வேண்டும் என்று களம் இறங்க வேண்டியதுதானே?
அதுக்கேன் வருவார் ; வாறார் ; வந்திடுறார் என்று ஏமாத்த வேணும்? இந்த ஆயதக் கலாச்சாரத்தால் இனம் அழிந்ததைத் தவிர வேறு ஏதாவது நன்மை கிடைத்ததுண்டா? அடுத்தது முடிந்தவர்களால் வெளிநாடுகளில் வாழ முடிகிறது. வேறு என்ன நடந்திருக்கிறது?
Sothilingam T
எல்லாமே பொருளாதார முதலீட்டிலும் அதன் மூலம் இந்திய பிராந்தியத்தின் பொருளாதார மேம்பாட்டிக்கமான முதலாவது அத்திவாரமே இந்த இரு இந்திய தூதரகமும். கொழும்பை அடுத்து இலங்கையின் இரண்டாவது பெரிய நகரம் அமைக்கப்படவிருப்பது அப்பாந்தோட்டையில் என்பதையும் யாழ்ப்பாணம் மேலும் ஒரு நகர அபிவிருத்தித் திட்டதிற்காகவே எல்லா ஆயத்த வேலைகளும் நடைபெறுகின்றன
சிங்கள மக்களுக்கு கூறும் செய்தியாக நான் அறிந்தது யாழ்ப்பாணத்தை பார்க்க வேண்டும் என்றால் இன்றே பார்த்து விடுங்கள் இனிமேல் பார்க்க முடியாது என்பது?
இந்தியா தனது இலங்கையுடனான பாரம்பரிய நீண்ட தொடர்புகள் பற்றி பேசும்போது இந்தியாவும் சீனாவினுடைய பாரம்பரிய மிக நீண்ட உறவுகள் பற்றியும் பல இடங்களிலுமே குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவும் சீனாவும் மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் தம்மிடையேயான உறவுகளை பலப்படுத்திக்கொண்டே இயங்குகின்றனர் என்று எனக்கு தெரிகிறது. நேற்றைய விக்கிரமபாகுவின் கருத்தில் இருந்தும் இதை அவதானித்தேன். (இந்தியாவுக்கு ஜநாவில் பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்புரிமை பெறுவதில் சீனாவும் அக்கறையாக இருக்கிறது)
முதலாளித்துவ நாடுகள் தமது பல உச்ச முதலாளித்துவ பொருளாதார நிலைகளை அடைந்துவிட்டனர் ஆனால் இந்தியா சீனா இதை நோக்கியே வளர்ந்து கொண்டிருக்கின்றன.
1997லிருந்து கூறப்பட்டது போன்ற பொருளாதார அபிவிருத்தி வேலைகளை இந்தியா இலங்கையிலும் செய்ய ஆரம்பித்துள்ளது. இதில் முக்கியமானது தென்கிழக்கு ஆசியநாடுகளை தரைமார்க்கமாக இணைக்கும் பணியில் தனது பங்கு வேலையின் ஒரு பகுதியே இந்தியாவுடன் இலங்கையின் ரயில்/தரை மார்க்கமான பாதைத் தொடர்புகளுக்கான வடபகுதி ரயில் பாதை இணைப்பாகும்.
அம்பாந்தோட்டையிலிருந்து இந்தியாவுக்கு ரயில்பாதை அமைத்து நாம் இனிமேல் தமிழரில் இருந்து இந்திய பிராந்திய பிரஜைகள் என்று கூறும் காலம் தூரத்திலில்லை.
BC
அஜீவனின் சரியான கருத்துக்கள்.
யாழ்பாணத்தில் இருக்கும் யாரோஒரு சகோதரம்- இமெயில் தமிழில் அனுப்பியது. அதில் அசின் தமிழர்கள் கண்களைக் குருடாக்கிவிட்ட அநீதியை பாருங்கள் என்று இருந்தது. தனிப்பட்ட முறையில் கண் சந்திர சிகிச்சை செய்வோருக்கே சந்திர சிகிச்சை வெற்றியழிக்காமல் இருந்துள்ளது. அப்படியிருக்க உதவி செய்ய போன அசினை இப்படி அவதூறு செய்வது கொடுமை.
//நெத்தலிக் கருவாடும் பாணும் பருப்பும் இருந்தால் போதும். //
எங்களுக்கு இடியப்பமும் சம்பலும் இருந்தால் போதும்.
ஆனால் புலியை இன்னும் இருக்கவிட்டிருந்தால் இடியப்பம், சம்பல் வாசனையை காற்றில் மிதக்கவிட்டே தமிழர்கள் வயிற்றை நிரப்புவார்கள்.
நந்தா
சோதிலிங்கம் சொல்லும் கருத்துக்களுக்கு கண்டிப்பாக நம்பிக்கை தெரிகிறது.
இலங்கயும் இந்தியாவும் பரங்கியர் வருகைக்கு முன்னிருந்த வர்த்தக, கலாச்சார உறவுகலைப் புதுப்பிக்க வேண்டும்!
//தமிழர்கள் ஏன் இறந்தவர்களை காட்டி பணம் புடுங்குகிறார்கள்?/ /
தமிழ்நாட்டில் அனாதைப் பிணங்களை காட்டி சில்லறை சேர்ப்பது ஒரு பாரம்பரியம். அதனை தமிழர்கள் விடுவார்களா?