நான்கு மணித்தியால பொருட்கள் போக்குவரத்து சேவையொன்றை நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்த தபால் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. இதன் பரீட்சார்த்த நடவடிக்கைகள் தற்பொழுது குருநாகல், அநுராதபுரம், கண்டி, காலி ஆகிய இடங்களில் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், இதன் முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இச்சேவை மூலம் தபால் திணைக்களத்தினூடாக பரிமாற்றம் செய்யப்படும் பொருட்கள் நான்கு மணித்தியாலங்களுக்குள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து நீர்கொழும்பு, பாணந்துறை, கம்பஹா, மல்வானை, பியகம மற்றும் நிட்டம்புவ போன்ற பிரதேசங்களில் இத்திட்டம் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டம் வெற்றியளித்தால் எதிர்காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களுக்கும் இச்சேவை விஸ்தரிக்கப்படும். மிகவும் குறைந்த சாதாரண கட்டணத்தில் இச்சேவையை பொதுமக்கள் அனுபவிக்க முடியுமென தபால் திணைக்கள உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.