இலங்கையில் நாடு முழுவதிலுமுள்ள சிறைக் கைதிகளின் விபரங்களை கணனி மயப்படுத்த புனர்வாழ்வு மற்றும், சிறைச்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி சிறைகளிலிருக்கும் சுமார் 27ஆயிரம் சிறைக்கைதிகள் தொடர்பான சகல தகவல்களும் கணனி மயப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாகப் பதவியேற்றுள்ள புனர்வாழ்வு மற்றும், சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால் இது தெடர்பான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஒரு கைதி சிறைச்சாலைக்கு வந்த நாள் முதல் அவர் விடுதலையாகும் வரையிலான தகவல்கள் அனைத்தும் தற்போது கோப்புகளிலேயே உள்ளன. அவை யாவும் கணனி மயப்படுத்தப்பட்டதும் கணப்பொழுதில் விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.