ஒக்ஸ்போர்ட் மாணவர் ஒன்றியத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்ள இருந்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டது!

MR_PresidentOfSLஒக்ஸ்போர்ட் மாணவர் ஒன்றியத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொண்டு உரையாற்ற இருந்த நிகழ்வு பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டதாக ஒக்ஸ்போர்ட் யூனியன் சொசைட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை பாதித்துள்ள காரணத்தினால் இந்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முழுமையான அறிக்கையும் ஜனாதிபதியின் செயலாளரின் அறிக்கையும் கீழே:

Statement from The Oxford Union on the visit of President Rajapaksa:

Earlier this year, The Oxford Union invited the current President of Sri Lanka, Mahinda Rajapaksa, to address our members at a date convenient to him. The Union has a policy of inviting a broad range of prominent politicians and heads of state from around the world and the invitation to Mr. Rajapaksa was made within the context of this policy.

Since the invitation was first accepted by Mr. Rajapaksa, the Union has consulted extensively with Thames Valley Police as well as the Sri Lankan High Commission in London on security arrangements for the President’s visit. Due to security concerns surrounding Mr. Rajapaksa’s visit which have recently been brought to our attention by the police, the Union has regretfully found that the talk is no longer practicable and has had to cancel his address.

This decision was not taken lightly and the Union deeply regrets the cancellation. The Union has a long tradition of hosting prominent speakers and upholding the principles of free speech. However, due to the sheer scale of the expected protests, we do not feel that the talk can reasonably and safely go ahead as planned.

The Union holds a politically neutral stance with regards to speakers and the decision was not made in relation to any aspect of Mr. Rajapaksa’s political position, the policies of his administration or any allegations against his government. As the President of Sri Lanka for the last five years, the Union felt that Mr. Rajapaksa would provide a unique insight into the political climate of the region in his speech. The Union wishes to apologise to our members for this unfortunate cancellation.

Oxford Union Society
Alistair Walker
Press Officer

Statement issued by Mr Lalith Weeratunga, Secretary to the President of Sri Lanka:

For security reasons the speech by His Excellency President Rajapaksa of Sri Lanka at the Oxford Union, the home of free speech, has been cancelled. This is a decision that has been made unilaterally by the Oxford Union, reportedly as a result of pressure applied by pro-LTTE activists.

His Excellency said:

“I am very sorry this has had to be cancelled but I will continue to seek venues in the UK and elsewhere where I can talk about my future vision for Sri Lanka.”

His Excellency went on to say:

“I will also continue in my efforts to unite all the people of our country whether they live in Sri Lanka or overseas.

As a united country we have a great future.

If we allow divisions to dominate we will not realise our true potential.

We have had thirty years of division and conflict. We must now secure peace and harmony for all Sri Lankans.”

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

24 Comments

 • xavier
  xavier

  i am deeply disapointed the event was bieng canceled i like to hear from him more

  Reply
 • maya
  maya

  இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஸ அவர்களது ஒக்ஸ்பேர்ட் பல்கலைக் கழக உரை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை அலெக்ஸ்டெயா வோக்கர் “பெல்பொடடேன்ஜர்” எனப்படும் நிறுவனத்தின் ஊடாக மின் அஞ்சலில் அனுப்பி வைத்துள்ளார்.

  கடந்த யுத்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான ஒரு ஒளி நாடாவை செனல் 4 தொலைக் காட்சி ஒளிபரப்பிய நிலையில் ; புலிகளுக்கு ஆதரவான தமிழர்களும், சரத் பொண்சேகாவுக்கு ஆதரவான சிங்களவர்களும் இணைந்த பாரிய ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க லண்டன் நகர சபை அனுமதியளித்திருப்பதன் காரணமாக, ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஸ அவர்களது ஒக்ஸ்பேர்ட் பல்கலைக் கழக உரை தவிர்க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

  இருந்த போதிலும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸ் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடைபெற்றுள்ளதாக அறிய வருகிறது.

  Reply
 • Babu
  Babu

  யுஎன்பி இடதுசாரி ஜேவிபி இவர்களுடன் புலம்பெயர் தமிழர்களும் சேர்ந்து ஒன்றாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இறங்கவிருந்ததாலேயே இது சாத்தியப்பட்டது. இப்படியென்றாலும் இருஇனமும் ஒன்றுசேர்வதை வரவேற்கும் அதேநேரம் இதேஇணைவு தமிழருக்கு ஒரு தீர்வை வழங்க சேர்ந்து அழுத்தம் கொடுக்குமா??

  Reply
 • Thalaphathy
  Thalaphathy

  புலிகளின் தலைவர் வே. பி யினாலும், அவரது கடைசி மாவீரர்தின உரையில் “யதார்த்தவாதி” என அவரால் வர்ணிக்கப்பட்ட இலங்கையின் சனாதிபதி “மகிந்த ராஜபக்ச”வின் யதார்த்தத்தை உலகின் தலைசிறந்த பல்கழைக்கழகத்தினூடாக கேட்கமுடியாமல் போனது இலங்கைத்தமிழர்களின் துரதிஸ்டமே!
  புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், இலங்கையில் தமது சமூகம் வாழுவதற்காக என்றுமே போராடவில்லை, மாறாக தமது சமூகத்தின் அழிவில் தாங்கள் இங்கு இலாபமடைவதையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு தெருக்களில் இறங்கினார்கள். இது தொடரும் வரை உங்கள் உடன்பிறப்புக்கள் இலங்கையில் கெளரவமாக வாழமுடியாது நண்பர்களே!

  Reply
 • Saleem
  Saleem

  இது புலிகளின் ஆதரவுக்குழுக்களால் வெற்றி என்று சொல்லுங்கோ அங்கே போய் புலிக்கு, இன்னமும் உயிர் இருக்கிற புலிக்கு அடிவிழப்போகுது

  புலிகள் மட்டுமல்ல இடதுசாரிகளும் இணைந்தே இந்த வெற்றியினை எடுத்தது என்றெல்லாம் கருத்து போடுவியள். ஆனால் மகிந்தா இங்க ஏதோ ஜனநாயகம் இருக்குது எண்டு வந்திட்டார்போல கிடக்கு. இங்கே ஜஸ்விழுது, உப்பு போட காசில்லை. பள்ளிக்கூடத்தில பிள்ளைகளுக்கு உதவி செய்ய காசில்லை. ஆஸ்பத்திரயில மருந்து கொடுக்க காசில்லை என்று அழுகிற அரசாங்கத்தால் மகிந்தாவுக்கு எதிரா நிக்கிற யுஎன்பி ஜேவிபியிட்டை இருந்து மகிந்தாவை பாதுகாக்க பொலீசுக்கு கொடுக்க காசு இல்லை. சிலவேளை மகிந்தா 10 மில்லியன் தாரன் பாதுகாப்பைபோடு எண்டால் பிரிட்டன் பொலிசும் பாதுகாப்பை போட்டிருக்கும். மகிந்தா முந்தி வந்து போன மாதிரித்தான் இருந்திருக்கம். மகிந்தாவுக்க டிப்ஸ் யாரும் கொடுங்கோ உடனேயே மகிந்தா ஒக்ஸ்போட்டில் பேசலாம். மகிந்தா ஜனநாயக நாட்டில நிக்கிறதா நினைச்சிட்டார் போல!

  எல்லாம் காகம் இருக்க பிலாக்காய் விழுந்தமாதிரித்தான்

  Reply
 • விளங்காமுடி
  விளங்காமுடி

  ஜோர்ச் வில்லியை, மகிந்தவின் முன் பேச வைத்த அமெரிக்காவும்;
  பேச அழைத்த பின், பேச்சுரிமையை மறுதலிக்கும் பிரித்தானியாவும்;
  தமிழர்களைப் பகடைக்காய்களாக்கி, சீனாவிற்கெதிராய், மகிந்தவுடன் வியாபாரம் செய்யப் போகிறார்கள்.
  எடுப்பார் கைப்பிள்ளையாய்,எவ்வளவு காலம், நாம் இன்னும் வாழ்விழந்து நிற்கப் போகிறோம்?

  Reply
 • london boy
  london boy

  இங்கே தமிழர்கள் பாவிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மையானது. விளங்காமுடி உங்களின் எதிர்பார்ப்புடன் உடன்படுவேன். எப்போதும் முதலாளித்துவ அரசுகள் இப்படி சிறுபான்மையினரை பகடைக்காய்களாக பாவிப்பவர்கள். நாம் சிறுபான்மையினர் யாருடன் எந்த முகாமுடன் என்றெல்லாம் யோசிக்காமல் பாவிக்கப்படுபவர்களே தான். இலங்கையில் யுஎன்பியும் ஜேவிபியும் கூட எமது தமிழர்களின் பிரச்சினைகளை பாவித்து தாம் பதவிக்கு வரவே முயற்சிக்கிறார்கள் என்பது உண்மை.

  இந்தியாவும் கூட எம்மை ஒருமுறை பாவித்துவிட்டது மேலும் ஒருதடவை எம்மை பாவிக்கவே பார்க்கிறது. கிருஸ்ணா இலங்கை வரும்போது தமிழர் பிரச்சினகள் பற்றி எதுவும் பேசாமல் ஏதோ எல்லாம் பேசிவிட்டு…

  ஆனால் அரசியல் நிலைப்பாடுகள் எதுவும் பாதிக்காத கூட்டம் புலிகள். புலிகளின் ஆதரவாளர்களுக்கு கிடைத்த அதிஸ்டம் இது. உலகில் 3வது படையான இந்தியாவை அடித்து கலைத்தோம் என்று சொன்னமாதிரி தாங்களே மகிந்தாவையும் தடுத்தோம் பிரிட்டன் பயந்துவிட்டது என்று சொல்லி மீண்டும் உண்டியல்கள் தமிழர்கள் வீடு தேடி வரவுள்ளது.

  Reply
 • vanavil
  vanavil

  ஒரு காலத்தில் இலங்கையை மிரட்டி வைக்க ; இந்தியா தமிழ் போராளிகளைப் பாவித்தது. அதே விதமான ஒரு அணுகுமுறையை மேற்கத்திய நாடுகள் ; புலம் பெயர் தமிழரைப் பாவித்து இலங்கையை அடக்க முற்படுகிறது போலத் தெரிகிறது.

  இது ஒரு வகையில் நன்கு திட்டமிட்ட ஒரு செயல். இல்லாவிடில் இரண்டாவது உரையொன்றுக்காக மகிந்தவை அழைத்து ; இப்படியான தர்ம சங்கடத்துக்குள் பிரிட்டன் மாட்ட வைத்திருக்காது. உலகத்துக்கே புலனாய்வு தகவல்களை வழங்கும் நாடுகள் ; இங்கே புலனாய்வுகளை மேற் கொள்ளவில்லையா எனும் கேள்வி எழுகிறது.

  என்ன இருந்தாலும் மகிந்த குப்புற விழுந்து விட்டார் என சிங்கள இடதுசாரி பத்திரிகைகள் தலையங்கம் தீட்டியுள்ளன. சமயம் பார்த்து சனல் 4க்குக்கு ஒளிப்பதிவுகள் கிடைத்துள்ளன. முன்னர் இல்லாத தெளிவுடன். இவை சரத் பொண்சேகாவின் ஆதரவு இராணுவத்தினரே வழங்கியுள்ளார்கள் என தெரிய வருகிறது. குற்றவாளிகளை அடையாளம் காட்டும் விதத்தில் படங்களும் ; ஒலியும் வருகிறது. இவற்றை பொய்யானவை என மறுதலிக்க முடியாது. இதைவிட முக்கியமானவை வரலாம் என ஊகங்கள் சொல்கின்றன. பல சிங்கள ஊடகவியலாளர்கள் மகிந்தவுடன் கோபத்தில் இருந்தார்கள். அவற்றை தீர்த்துக் கொண்டுள்ளார்கள்.

  மகிந்த ; தீர்வுத் திட்டத்தை தாமதப்படுத்தி இழுத்தடிக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு என்னவாகும் என்பதே அடுத்த கேள்வி?
  தாயக தமிழருக்கு விடிவு கிடைக்குமா? இல்லை விவகாரமாக இருக்குமா?

  புலிகளை ஒழிக்க உதவிய நாடுகள் ; தமிழர் உரிமைகள் கிடைக்க உதவ வேண்டும்.

  யார் குத்தினாலும் ; அரிசியானால் சரி.

  Reply
 • vanavil
  vanavil

  (December 02, Colombo, Sri Lanka Guardian) The BBC announced that Mahinda’s visit to the UK was unofficial and has been organised by the Sri Lanka High Commission in London. The UK government has finally been drawn into providing unwilling security to him in the face of ferocious objections to his visit by London’s Sri Lanka community.

  Reply
 • Nathan
  Nathan

  மகிந்தாவின் பேச்சு ரத்து செய்யப்பட்டதும் பிரித்தானிய ஊடகங்களால் அவர் அவமானப்படுத்தப்பட்டதும் தமிழர்களினதோ இடதுசாரிகளினதோ வெற்றியாக சித்தரிக்க சிலர் முற்படுகின்றனர். இந்த நிகழ்வுகள்மூலம் இலங்கையின் போர்குற்றம் தொடர்பாக மீண்டுமொருமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனலாம். தொடர்ச்சியான இந்த அழுத்தங்களால் மகிந்தவை தண்டிக்கமுடியாமல் போனாலும் கூட இவற்றில் இருந்து தப்ப மகிந்த கூடிய சீக்கிரம் ஒரு தீர்வுத்திட்டத்தையாவது அமுல்ப்படுத்த முயலக்கூடும்.

  சிலர் கருத்துரைத்த மாதிரி அகத்தில் உறவுகள் சாக புலத்தில் நடக்கும் கூத்தல்ல இது. ஏனெனில் இங்கிருக்கும் பலரது குடும்ப உறவுகள் இன்னமும் அங்கேயே உள்ளனர். இப்படியான தொடர் அளுத்தங்களே தீர்வை துரிதமாக்கும். மகிந்தரின் முதல் 6 ஆண்டுகள் திஸ்ஸவிதாரணவின் APRC இல் முடிந்து போக மீதி 6 ஆண்டு காலம் எனது மனதில் ஒரு திட்டம் இருக்கு என தனது ஆட்சியில் ஆரோக்கியமாக எதுவும் செய்யப்பேவதில்லை. மகிந்தர் தானே விரும்பினாலும் அவருடன் கூட்டணியிலிருக்கும் விமல் வீரவன்சவோ மேதனந்த தேரரோ (ஹெல உருமைய) அல்லது அவரது உடன்பிறப்பு கோத்தாவோ விடப்போவதில்லை.

  எம்மை மேற்கு பகடைகளாக பாவிப்பதை நானும் உணர்கிறேன். செய்மதி மூலம் புல்லையும் படமெடுக்கும் அமரிக்காவிடம் இல்லாத ஆதாரமா சனல் 4 இடம் உள்ளது? அவர்கள் அந்த பிரம்மாஸ்வரத்தை தங்களின் தேவை கருதியே பயன்படுத்துவர். ஆனால் தொடர் சட்ட அழுத்தங்கள் புலம்பெயர் தமிழரின் வாக்கு வங்கி பொருளாதார பலம் என்பன ஏதோ ஒரு வகையில் மேற்கை எமக்கு சார்பானதாக மாற்றும்.

  Reply
 • விளங்காமுடி
  விளங்காமுடி

  திட்டமிட்ட இனப்படுகொலையைக்கு நீதியும், தமிழருக்கான உடனடித் தீர்வுத் திட்டத்தை நிறைவேற்றும்படி உலக நாடுகளை அழுத்தம் பிரயோகிக்கும் வகையில், ஒரு புதிய அமைப்பின் தேவை புலம் பெயர் மக்களுக்கு மிக அவசியம். இதன் தேவை பூர்த்தி செய்யப்படின் பின் அமைப்பைக் கலைத்து விடவேண்டும். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  Reply
 • ப்பிரசன்னா
  ப்பிரசன்னா

  இந்த உலகமே தமது முதுகுகளில் ஆயிரம் அழுக்குமூட்டைகளை சுமந்துகொண்டுதான் இருக்கிறது! இதில் இலங்கை அரசும் அடங்கும். இப்பொழுது நடந்து கொண்டிருப்பது ஓர் ‘ஒத்திகையே’! டிசம்பர் யேர்மன் சுற்றுச்சூழல் மாநாடு முடியட்டும், வடக்குத் – தெற்கு கொரியாப் பிரச்சனையும், இந்த இலங்கை தெற்காசியாவின் – மகிந்தா – (இலண்டன்) பிரச்சனையும் ‘சப்’பென்று போகிவிடும்.

  2025 ஆண்டுக்கான மேற்குலகத்தின் வேலைத்திட்டத்தை, தென்கிழக்கு ஆசியா, எப்படி ஆடப்போகிறது என்பதை அடுத்த புதுவருடத்தில் நாம் கண்டும் கொள்ளலாம். இப்பொழுது வடகொரியாவை சீனா கையாள நினைப்பது, அமெரிக்கா எதிர்பார்த்திருக்காத புதிய விளையாட்டு!, தெரிந்தும் இலண்டனுக்கு வந்த மகிந்தா, உள்நாட்டில் மேற்குலகத்துக்கு ‘செக்’ வைக்கும் ஆட்டத்திலேயே தெடர்ந்தும் ஆடி வருகிறார்…. ப்பிரசன்னா

  Reply
 • ஜெயா
  ஜெயா

  ஜரோப்பிய சமூகத்தில் நாம் எவ்வளவு அழுத்தங்கள் கொடுத்தாலும் இந்தியாவை மீறி பிரச்சினைகள் தீர்க்கப்படாது இது எல்லாவற்றிலும் பார்க்க எமது பிரச்சினைகளை இலங்கையராகிய நாங்களே எங்களுக்குள் தீர்வு காண்பது மேல் முள்ளிவாய்க்கால் என்று இப்போ உலகம் முழுவதம் போர்க்கொடி தூக்குகிறோம் ஆனால் 1987லேயே இந்தியா வந்திருக்காவிட்டால் அப்பேவே இதே முள்ளிவாய்க்கால் நடந்திருக்கும் இன்றய நிலையில் ஏதோ அந்த மக்கள் குண்டு வெடிப்பில்லை கிபீர் இல்லை நின்மதியாக வாழ்ந்தால் போதும் என்ற நிலையில் இருக்கும்போது அபிவிருத்தி சம்பந்தமாக பல முன்னேற்றம் பல தனியார் நிறுவனங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும்போது 200 தமிழர்கள் கூக்குரல் இடுவதால் எதனை சாதிக்கப்போகிறோம் இந்தப் படுகொலைகள் யார் செய்தாலும் தண்டனைக்குள்ளானவர்களே மீதி இருப்போரையும் அந்த நிலைக்கு கொண்டு செல்லக் கூடாது வெளிநாட்டில் இருக்கிற இலங்கைத்தமிழ் பேசும் மக்களால் தான் இலங்கைப்பிரச்சினை தீர்க்கப்படுமா?

  Reply
 • மாயா
  மாயா

  //ஒரு புதிய அமைப்பின் தேவை புலம் பெயர் மக்களுக்கு மிக அவசியம். இதன் தேவை பூர்த்தி செய்யப்படின் பின் அமைப்பைக் கலைத்து விடவேண்டும்.//
  எத்தனை அமைப்பு வந்து விட்டது. உலகம் தாங்காது சாமி? இப்ப இருக்கிற அமைப்புகளின் தேவைக்கு பலியாக அங்குள்ள சனம் போதாது.

  இதை ஒருக்கா கேளுங்கோ? -http://www.yarl.com/node/1718 ஓரளவு தெளிவு வரும். நாட்டில் உள்ள பிள்ளைகளை கெடுக்கிறதே புலம் பெயர் உறவுகள் என்று ஒரு குற்றச் சாட்டு வருகிறது. கேளுங்கள். அதே போல வெளிநாட்டுத் தமிழர் நடக்கிறதையும் நாத்துவார்கள் என்பது மாயாவின் ஆய்வு. அங்குள்ளவர்களிடம் விட்டு விடுங்கள். தங்கள் குழந்தைகளை தாங்களே பார்ப்பது போல ; அஙகுள்ள அரசியலை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும்.

  Reply
 • Mohamed Shareef Asees
  Mohamed Shareef Asees

  Tamil Diaspora all over the world has been putting the Tamil people into danger in Sri Lanka.

  Reply
 • Sivathas
  Sivathas

  Demonstration with tiger flags??? These people never going to learn or change from the past.

  Tiger’s falls propaganda let to last stage of massacre in Vanni.

  “Lord forgives tigers, for they know not what they do”.

  Reply
 • Ajith
  Ajith

  Tamil Diaspora all over the world has been putting the Tamil people into danger in Sri Lanka.-Mohamed Shareef Asees

  Mr Mohamed,
  Can you please elaborate on the above statement?
  Do you think Sinhalese are more dangerous people?
  Do you think the Rajapakse is a very cruel dictator?
  Who is going to put tamils in danger within Sri Lanka?
  Sinhalese also protest against Rajapakse government? Why it is not danger to Sinhalese?
  The So called video’s shown in Channel 4 has orginated from Sinhalese, not from diaspora tamils. Then why should tamils in Sri Lanka be penalised? The reality is that Sinhalese are the enemies of Rajapakse, not diaspora tamils. Diaspora tamils just protest democratically against human rights violation of Sri Lanka against Sri Lankan citizens.

  Reply
 • thurai
  thurai

  அஜீத் அன்பரே, தமிழ்க் காக்கிரஸ், தமிழரசுக்கட்சி, தமிழர் கூட்டணி, தமிழீழ விடுதலைப்புலிகள்.

  மேலுள்ள எல்லாம் தமிழ் மொழியின் பெயரால் வாழ்ந்த அமைப்புகள். இவைகள் தமிழர்களின் சமூக, பொருளாதார அபிவிருத்திகளில் ஏதாவது ஈடுபட்டனவா? அல்லது தமிழர்கள் பெயரால் வாழ்க்கை நடத்தியவர்களா? இவர்களின் வளர்சியே தமிழரின் முள்ளிவாய்க்கால் அழிவிற்கு வழிவகுத்தன என்பதை இன்னமும் அறியவில்லையா? அல்லது ஏற்க மறுக்கின்றீரா? இவர்கள் இலங்கையில் வாழ்ந்து தமிழரின் அழிவில் வாழ்வை நடத்தியவர்கள்.

  இதேபோல் இப்போ புலம் பெயர்நாடுகளில் வாழும் இவர்களின் வழிவந்தோர் புலத்துத் தமிழரின் பலத்தில் தங்கள் தலைகளை வெளியில்காட்டி
  ஈழத்தமிழர்களிற்கு வழிகாட்ட, உருமை பெற்றுக் கொடுக்க பாதுகாக்க என புலி கொடியை மீண்டும் ஏந்துகின்றார்கள். உங்கள் புலிக்கொடிக்கு சிங்கள அரசு பயப்படுமா? சிங்களவரை பயப்படுத்தமுடியுமா? ஆயுதத்தால் யாரையாவ்து நிரந்தரமாக அடக்கி,மிரட்டி வாழல்லாம் என்று நம்புகின்றீரா? புலிக்கொடியை நம்பிய தமிழர்களிற்கு வெள்ளைகொடியைக் காட்டி தப்பிய புலிகளை மறந்துவிட்டீரா?

  விளையாட்டுகளில் கூட டிவன்ஸ்(பாதுகாப்பு) முக்கியம் நீங்கள் தமிழர்களை வைத்து விளையாடும் விளையாட்டில் தமிழரின் பாதுகாப்பை மறந்துவிடுகின்றீர்களே. தமிழரைத் தமிழன் ஆழ்வதற்கு தமிழரின் உயிரைக் கொடுப்பதை மேலாக எண்ணுகின்றீரா? துரை

  Reply
 • மாயா
  மாயா

  எதிர்வரும் 7ம் திகதி தொடக்கம் 3 நாள் சிறீலங்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவிருந்த பிரித்தானிய வெளிநாட்டமைச்சர் அலிஸ்டெயார் பெர்ட்டி தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். அவரது பிரயாண காலத்தில் யாழ்நகருக்கும் வந்து நிலைமைகளை அறிய இருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Reply
 • Ajith
  Ajith

  துரை அவர்களே,
  நான் முஹமீத் அவர்கள் கூறிய கருது குறித்து கேள்வி எழிப்பி இருந்தேன். ஆனால் அதனுடன் தொடர்பற்ற விடயங்களை, சொல்கிறீர்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதே எனக்கு விளங்கவில்லை. நான் நீங்கள் சொன்ன மூன்று தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தி ஜனநாய வழியில் தெரிவான அரசியல் நிறுவனங்களை பற்றியோ அல்லது தமிழ் மக்களின் ஒட்டு மொத்த விடுதலைக்க போராடிய விடுதலைபுலிகளை பற்றியோ எதுவுமே கூறவில்லை. அவர்கள் தமிழ் மக்களின் தெரிவு. இத்தனை அழிவுகளிற்கு பின்பும் மக்கள் அவர்களை தானே தெரிவு செய்தார்கள். அதற்கு நாம் என்ன செய முடியும் நீங்கள் என்ன செய முடியும். தமிழ் மக்களின் அழிவை செய்தது சிங்கள மக்களால் தெரிவு செய்த சிங்கள அரசும் சிங்கள இராணுவமும் சிங்கள மக்களும் தான். நீங்கள் கூறுவதை பார்க்கும் போது நீங்கள் கூறிய நாலு அமைப்புகளையும் தவிர மற்றைய சிங்கள தமிழ் அமைப்புகள் எல்லாம் தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியல் வளர்ச்சிக்க தானே படுபடுகிறீர்கள். முல்லிவய்களுக்கு முன்னும் பின்னும் அழிவுகள் தானே நடக்கிறது. இன்னும் தொடரும் என்று தானே மகாமீத் சொல்கிறார். நாம் கெடல் என்ன கேளவிடல் என்ன எமக்கு சிங்களம் தருவது அழிவுதான்.

  Reply
 • thurai
  thurai

  அஜீத் அவர்களே, அன்னியர் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த தமிழ், சிங்கள பரம்பரையே இலங்கையின் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றது. சிங்கள தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்யும் அரசியல் தலைவர்கள் தமிழரில் எத்தனை பெயர் சிங்களவரில் எத்தனை பெயர் சொல்வீர்களா? பிரச்சினையை உருவாக்கி அதனால் தங்கள் வாழ்வை நடத்துபவர்கள் தொடக்கிய பிரச்சினையை தீர விடமாட்டார்கள்.

  தமிழர் ,சிங்களவரிடையே புதிய தலைமுறையில் தலைமைகள் மாற வேண்டும். மக்களின் மனங்கள் மாறவேண்டும். இதுவே இன்றைய தேவை-துரை

  Reply
 • Ajith
  Ajith

  தமிழர் ,சிங்களவரிடையே புதிய தலைமுறையில் தலைமைகள் மாற வேண்டும். மக்களின் மனங்கள் மாறவேண்டும். இதுவே இன்றைய தேவை-துரை/
  சிங்கள தேசத்தின் தலைமைகளும் மாறாது, மனங்களும் மாறாது.

  Reply
 • thurai
  thurai

  //சிங்கள தேசத்தின் தலைமைகளும் மாறாது, மனங்களும் மாறாது.//அஜீத்
  தமிழகத்தில் கருணாநிதி சாகும்வரை அதிகார கதிரையில். ஈழத்தில் தமிழரசு, காங்கிரஸ், கூட்டணி தலைமுறையும், பரம்பரையும் இவைகளை விட சிங்களவர் சற்று மேலானவர்கள்தான்.-துரை

  Reply
 • மாயா
  மாயா

  புலத்து புலிப்படையின் போராட்டத்தின் விளைவு ; மகிந்த – சந்திரிகா சந்திக்கும் நிலை வரை மாறியுள்ளது நல்ல மாற்றம்தான்?
  -ttp://www.lankaenews.com/Sinhala/files/2113MR&Chandrika_Sirima_ceramony_J.jpg

  Reply