புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக வன்னியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த படையினரால் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரிட்டன் பயணத்தின் போது புலம்பெயர்ந்த தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் காரணமாக லண்டனில் ஜனாதிபதி உரையாற்றவிருந்த நிகழ்வு இரத்தானதைக் கண்டித்து கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள மக்கள் படையினரின் நெறிப்படுத்தலில் ஆர்பாட்ட நடவடிக்கை ஒன்றை நேற்று சனிக்கிழமை மேற்கொண்டனர்.

மக்கள் படையினரால் அழைத்து வரப்பட்டு அவர்களின் கைகளில் ஜனாதிபதிக்கு ஆதரவான சுலோக அட்டைகள் வழங்கப்பட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. குறிப்பட்ட அளவு மக்கள் மட்டுமே கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • karu
    karu

    இந்த ஆரப்பாட்டம் ஈபிடிபியினரால் ஒழுங்கு செய்யப்பட்டதேயன்றி இராணுவத்தினரால் அல்ல இந்த ஆர்ப்பாட்டம் யாழில் செய்ப்பட்டடிருந்தால் பாரியதாகவும் பல இடர்பாடுகளையும் உருவாக்கியிருக்கும் இதை ஈபிடிபியினர் யாழிலும் செய்ய உத்தேசித்துள்ள போதிலும் யாழில் பெரும்பான்மையானவர்கள் புலிகள் மீது அதிருப்தியுள்ளவர்கள் என்ற கோட்பாட்டிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை யாழில் தவிர்த்திருந்தனர்.-karu jaffna

    Reply
  • hari
    hari

    ” ஈபிடிபியினர் யாழிலும் செய்ய உத்தேசித்துள்ள போதிலும் யாழில் பெரும்பான்மையானவர்கள் புலிகள் மீது அதிருப்தியுள்ளவர்கள் என்ற கோட்பாட்டிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை யாழில் தவிர்த்திருந்தனர்”
    இப்படியும் ஒரு லோஜிக்கா? பின்னிட்டிங்கkaru jaffna

    Reply
  • karu
    karu

    யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான மக்கள் வசதியாக இருக்கிறாhகள். புலிகளில் இருந்தவர்கள் ஒளித்து திரிகிறார்கள். வன்னியில் இதே நிலைதான் ஆனால் அந்த மக்கள் சாப்பாட்டுக்கு அரசினை நம்பி இன்னமும் வாழ வேண்டியிருக்கிறது. வெளிநாட்டில இருக்கிற புலிப் புண்ணாக்குகளுக்கு இது புரியாது. கரி அவர்களே வாடகைக்கு உணர்ச்சி வசப்படக்கூடாது புலியோட நிண்டால் பணக்காரனாகலாம் நல்ல வியாபாரம்.

    Reply
  • BC
    BC

    //karu – யாழில் பெரும்பான்மையானவர்கள் புலிகள் மீது அதிருப்தியுள்ளவர்கள்.//
    இதே மாதிரி தான் எனது உறவினரும் கூறினார். நல்ல ஆரோக்கியமான தெளிவு. எப்படியெல்லாம்,எவ்வளவு காலம் துன்பபட்டு தெளிவடைய வேண்டியிருக்கிறது!

    Reply
  • hari
    hari

    யாழில் அங்கஜனின் கை ஓங்குகிறதா! கிளிநொந்சியில் ஈபிடிபியால் வெறும் 500 பேரையே திரட்டி ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிந்தது. ஆனால் எம்பி பதவி கூட இல்லாத அங்கஜன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை திரட்டி ஆர்ப்பாட்டத்தை நடத்தியுன்னார்.
    /ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் லண்டன் விஜயத்தின்போது புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கண்டித்தும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று காலை யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடி இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்./ வீரகேசரி

    Reply