இலங்கையில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைகள் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள் ஒழங்கு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இவர்களுக்கான பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, பூசா முகாமிலும் பரீட்சை நிலையம் அமைக்கபட்டுள்ளது. பூசா முகாமிலுள்ள 55 முன்னாள் புலி உறுப்பினர்கள் க.பொ.த பரீடசைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.