லண்டனில் இருந்து இலங்கை திரும்பிய கலாநிதி விக்கிரமபாகு மீது தாக்குதல்!

Wikramabahu Karunaratnaநவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும் இடதுசாரி முன்னணியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன இன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டு உள்ளார். விமான நிலையத்தின் அதிகாரிகள் பொலிஸார் முன்னிலையில் கலாநிதி விக்கிரமபாகுவைத் தாக்கியதாக ஒரு செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. கலாநிதி விக்கிரமபாகுவை வரவேற்பதற்காக கட்சி ஆதரவாளர்களும் மனித உரிமைவாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் மனித உரிமைவாதிகளும் சட்டத்தரணிகளும் கூடி இருந்ததாகவும் அவர்களுக்கு முன்னிலையிலேயே சீருடை அணிந்த அதிகாரிகள் கலாநிதி விக்கிரமபாகுவைத் தாக்கியதாகவும் அச்செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

அண்மையில் லண்டன் வந்திருந்த கலாநிதி விக்கிரமபாகு லண்டனில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்விலும் உரையாற்ற அழைக்கப்பட்டு இருந்தார். மேலும் லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் கலாநிதி விக்கிரமபாகு கலந்துகொண்டு இலங்கை அரசுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். நடந்து முடிந்த வன்னி யுத்தத்தில் 100,000 பேர்வரை மரணமடைந்ததாகவும் கலாநிதி விக்கிரமபாகு தெரிவித்து இருந்தார்.

விமானநிலையத்திற்கு வெளியே கலாநிதி விக்கிரமபாகு வரவும் ஒரு டசின் வரையான சீருடை அணிந்த விமானநிலைய அதிகாரிகள் விக்கிரமபாகுவைச் சூழ்ந்து ‘துரோகி’ என முழக்கமிட்டு உள்ளனர். ‘மகிந்தவால் இணைக்கப்பட்ட நாட்டை, துரோகி பிரிக்கப் பார்க்கிறாய்!” என சீருடை அணிந்த விமான நிலைய அதிகாரிகள் முழங்கி உள்ளனர். மேலும் கலாநிதி விக்கிரமபாகு வானில் ஏறி அவ்விடத்தை நீங்கும்வரை இவர்கள் கோசம் எழுப்பி உள்ளனர்.

கலாநிதி விக்கிரமபாகுவின் வருகை பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற எம்ரிவி ஊடகவியலாளர் பிரேம் லால் லங்கா ஈ-நியூஸ் ஊடகவியலாளர் சாந்த விஜயசூரிய ஆகியோரும் தாக்கப்பட்டதாக அச்செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

டிசம்பர் 02ல் ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஜனாதிபதி ராஜபக்ச உரையாற்ற இருந்ததற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு கலாநிதி விக்கிரமபாகுவும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தனவும் முக்கிய காரணமாக இருந்ததாக அரச தரப்பில் தற்போது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ள நிலையில் இத்தாக்குதல் இடம்பெற்று உள்ளது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக லண்டனில் உள்ள லங்கா சாசமாஜக் கட்சி உறுப்பினருடன் தொடர்பு கொண்ட போது கலாநிதி விக்கிரமபாகு மீது எவ்வித தாக்குதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஆனால் அவரைக் காண வந்திருந்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். சிருடை அணிந்த விமான நிலைய அதிகாரிகள் சிலர் ‘துரோகி’ என்றும் ‘நாட்டைப் பிரிக்க வந்த துரோகி’ என்ற வகையிலும் கோசங்களை எழுப்பியதாகவும் தெரிவித்தார். கோசங்களை எழுப்பியவர்கள் கலாநிதி விக்கிரமபாகுவை ஏற்றிச் செல்ல வந்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இத்தாக்குதலினால் வாகனம் மிக மோசமாக சேதமடைந்து உள்ளது.

நவம்பர் 28ல் கலாநிதி விக்கிரமபாகு தேசம்நெற் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். (இன்று இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன உடன் சந்திப்பு.) நீண்டகாலமாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்து வருகின்ற கலாநிதி விக்கிரமபாகு சென்ற கூட்டத்திலும் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுத்து இருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு உடன் தொடர்புகொள்ள முயற்சிக்கப்பட்ட போதும் உடன் தொடர்புகொள்ள முடியவில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

108 Comments

 • kovai
  kovai

  தமிழினவழிப்பு செய்த சிங்கள பவுத்த பேரினவாதம், தற்போது சிங்கள இன ‘சுத்திகரிப்பு’ செய்வதன் வெளிப்பாடுகள்தான் டாக்டர் ஜெயலத், டாக்டர் விக்கிரமபாகு மீதான தாக்குதல்கள். மகாவம்ச சிந்தனைதான் மகிந்த வழியென்பது அறிந்துகொள்ளல், பகீரதப் பிரயத்தனமாகப் பலருக்கு இன்னமும் இருக்கிறது.

  Reply
 • T Sothilingam
  T Sothilingam

  அதிகார வர்க்கத்தினர் தமது பதவி என்றும் தமது அதிகாரங்கள் என்று வரும்போது தமிழர்கள் சிங்களவர்கள் என்று பார்ப்பதில்லை இது பல ஆண்டுகளுக்கு முன்பே சோசலிஸ்ட்டுக்கள் திட்டவட்டமாக தெரியப்படுத்தி விட்டனர். இது எப்போதும் சரி தமிழர் சிங்களவர் என்று பார்ப்பதில்லை. தாம் தமது அதிகாரம் தமது சுரண்டல் என்பதே நோக்கம், இந்த நோக்கத்திற்காக தமிழரை சிங்களவருக்கு எதிராகவும் சிங்களவரை தமிழருக்கு எதிராகவும் இந்த அதிகார வர்க்கம் பாவித்துக் கொண்டே இருக்கிறது இது வரலாறு. இது இன்னமும் நடைபெறும் இனிமேல் இன்னும் மோசமாகவும் நடைபெறும்.

  இப்படியான நடத்தைகளை சில அரசியல்வாதிகள் தெரிந்து தமது நலனில் இருந்து செய்வார்கள் சில அரசியல்வாதிகள் தெரியாமலே தமது நலனிலிருந்தும் செய்வது வழமை ஆனால் எல்லாமே தமது சுய நலனில் இருந்து தான் நடைபெறுகின்றது என்பதே அடிப்படை

  அரசியல்வாதிகள் மக்களின் நலனிலிருந்நு என்ன விடயத்தை செய்கிறார்கள் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகிறார்கள். இவற்றிக்கு உதவியாக தமது அரச யந்திரங்களை ஊடகங்களை இராணுவத்தை பயன்படுத்துகிறார்கள் இதற்கும் மேலாகபோய் மதவாதிகளின் காலில் விழுந்தும் அவர்களின் சுய நலன்களை திருப்திப்படுத்தியும் பின்னர் வந்து தமது எதிரியார் என்று அடையாளம் கண்டு அடிக்கிறார்கள்.

  இதையே அரசுகள் செய்கின்றன இதையே பின்பற்றி போராளிகள் என்று கூறுபவர்களும் செய்தனர் புலிகள் தமிழரரைு கொலை செய்ததிற்க்கும் அரசு தமிழரை கொலை செய்ததிற்க்கும் என்ன வேறுபாடு உண்டு

  ஒரு வேறுபாடு வேறு வேறு மொழி பேசும் அதிகார் வர்க்கத்தினர் இவர்களின் குணாதிசயங்களில் ஒன்றானவர்களே! ஆனால் தாக்கப்படுவது தொழிலாளிகள் விவசாயிகள் வாழ்க்ககையின் கீழ் தரத்தில் உள்ளோர்.

  நாட்டில் ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அது அந்த நேரம் தமிழருக்கு எதிராக பாவிக்கப்படும். அப்போ சிங்கள மக்கள் இந்த சட்டம் தமிழருக்கு நல்ல பாடம் படிப்பிக்கவே என்று இருந்தார்கள். இன்று அதே சட்டம் சிங்கள் மக்களுக்கு எதிராக பாவிக்கப்படுகின்றது இன்றும் இந்த சிங்கள் மக்கள் அன்று தாம் விட்ட தவறு என்ன என்று விளங்கிக் கொள்ள முடியாமலே உள்ளனர். (இந்த கருத்துப்பட TELO தங்கத்துரை நீதிமன்றில் பேசியிருந்தார்)

  இந்த சமூகவியலை எப்படி மனிதர்களுக்கு புரியவைப்பது. இந்த சமூகவியலை மக்கள் புரிந்து கொள்ளும் வரைக்கும் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருப்பர். இந்த புரிதலை புரியாமல் தடுப்பதில் மதங்கள் சமயங்கள் பாரிய பங்கினை வகிக்கின்றன.

  Reply
 • நந்தா
  நந்தா

  அமிர்தலிஙம், ஆலாலசுந்தரம், யோகேஸ்வரன், பத்மனாபா,நீலன் ஆகியவர்களையும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை புலிகள் கொன்றதும் பவுத்த சிங்கள பேரினவாதம் என்று கதையளக்கிறார்கள்.

  மார்க்ஸிசம் பேசுபவர்கள் புலிகளுக்கும், தமிழ் ஈழத்துக்கும் எந்த மார்க்ஸிச சித்தாந்த அடிப்படையில் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது இன்னமும் தெரியவில்லை.

  Reply
 • மாயா
  மாயா

  விக்கிரமபாகு தன் அரசியல் வாழ்வை நாசமாக்கிக் கொண்டார். இவர் தமிழருக்காக குரல் கொடுத்து வந்தார். ஆனால் புலிகளோ; இவருக்கு ஆதரவழிக்காமல் புலிகளை அழித்த சரத் பொண்சேகாவுக்கு வாக்களிக்க சொன்னார்கள். அந்த அளவு நன்றியுள்ளவர்கள்.

  யாருக்காக பேசுகிறோம் என்பது முக்கியமல்ல ; யார் மேடையில் நின்று பேசுகிறோம் என்பதே முக்கியம். சிங்களவர் மேடையில் நின்று தமிழருக்காக இவர் குரல் கொடுத்திருக்கலாம்? அல்லது பொது மேடையொன்றில் நின்று தமிழருக்காக குரல் கொடுத்திருக்கலாம்? அல்லது அனைத்து பாட்டாளி மக்களுக்காக குரல் கொடுத்திருக்கலாம்?ஆனால்??

  Reply
 • thenupiriyan
  thenupiriyan

  கலாநிதி விக்கிரமபாகு கருணரட்னாவின் கருத்துச் சுதந்திரத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டிப்பதற்கு பேராசிரியர் இரட்ணஜீவன் கூல் முன்வருவாரா?

  Reply
 • Prof Soman
  Prof Soman

  விக்கிரமபாகு தாககப்பட்டது கண்டிக்கப்படவேண்டியதுதான். சந்தேகமில்லை. அதே நேரத்தில் விக்கிரமபாகு பிராணிகளின் ஆதரவு கூட்டத்தில் பேசியதும் தவறு. அதுவும் கண்டிக்கப்படவேண்டும். தமிழ் மக்களைப்பற்றித் தெரியாமல் காலை விடுகிறார். கவலைப் படுவார்.

  Reply
 • thenupiriyan
  thenupiriyan

  கருத்துச் சுதந்திரம் என்று பார்த்தால் ஒருவர் எங்கும் தனக்குச் சரி என்று தெரிந்த கருத்தைக் கூறுவதற்கு உரிமை உண்டு. அதளை எவரும் தடுக்கமுடியாது. எனவே கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண புலிகளின் ஆதரவுக் கூட்டத்தில் பேசியதை கண்டிப்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை. நீங்கள் விரும்புகின்ற கூட்டத்தில் உங்களுக்கு விருப்பமான கருத்துக்களைத்தான் எவரும் பேசவேண்டும் என்ற கூறுவது கருத்துச் சுதந்திரம் அல்ல. நான் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்ற காலத்தில் பொறியிற்துறை விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணாவை நன்கு அறிவேன். அன்றிலிருந்து இன்று வரை பதவிக்காகத தனது கொள்கையைக் கைவிடாத ஒரேயொரு சிங்களகத்தலைவர் அவர் மட்டுமே. அக் கூட்டத்தில் அவர் கூறிய கருத்துக்களை விமர்சிப்பதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. மாறாக அவர் பேசியதைக் கண்டிக்கமுடியாது. அவர் பேசிய விடயத்தைத் தாராளமாக நாகரிகமாக ஆக்கபூர்வமாக விமர்சியுங்கள்.

  Reply
 • thurai
  thurai

  //தமிழினவழிப்பு செய்த சிங்கள பவுத்த பேரினவாதம்//கோவை
  தமிழினவ்ழிப்பு செய்பவர்களிற்கு தமிழ் மக்களை பலி கொடுப்போரை முதலில் இனமறிந்து கொள்ளப்பழகுங்கள்.-துரை

  Reply
 • நந்தா
  நந்தா

  பிரபாகரன் செத்துத் தொலைந்ததை இன்னமும் எழுத வக்கில்லாத வெளினாட்டுத் தமிழர்கள் “கருத்துச் சுதந்திரம்” என்று யாருக்குக் காது குத்துகிறார்கள்?

  கோபாலசாமி, தாமரை போன்ற புலிக் கூலிகள் இன்னமும் பிரபாகரன் வருவார் என்று கதையளக்கிறார்கள்.

  ஊரை, உலகத்தை ஏமாற்றிப் பிழைக்க கருத்துச் சுதந்திரம் என்பது பலியாக்கப்படுகிறது. தமிழர்கள் புண்ணாக்குகள் என்பது இப்பொழுது தெட்டத் தெளிவான விஷயம்.

  கருணாரத்ன புலி மேடையில் சதிராடுவதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பது அபத்தமான கருத்து. மார்க்ஸிசத்தில் நம்பிக்கை உள்ள எவனும் புலி மேடை ஏற மாட்டான்.

  Reply
 • kovai
  kovai

  சோஷலிச சிந்தனை தேசிய இனப்பிரச்சனையுடன் பின்னிப்பிணைந்தது என அறியாதவர்கள் இனவழிப்பின் சர்வதேச வரைவிலக்கணம் என்னவென புரியாதவர்கள் சிதறுகதை சொல்கிறார்கள். இதுவரை நடந்த இனவழிப்பை “சிங்களக் காடையர்கள்” செய்ததாகக் கதை விட்டவர்கள், தற்போது மகாவம்சத்தை தூய்மைப்படுத்த, மக்களை வழி நடத்தும் பாராளுமன்றிலையும்(பா.உ.கள்), மனித உறவுகளைப் பரிமாற்றம் செய்யும் பாலமாக விளங்கும் விமான நிலையத்தையும் (சீருடை அணிந்த விமான நிலைய அதிகாரிகள்) தாக்குதல் களமாக மாற்றுபவர்களை “சிங்கள மோடையர்கள்” எனத் தப்பித்துக்கொள்ளலாம். வாருங்கள், போதைதரு போதிமர நிழலில் வாளேந்தியோர் செயல்களை இரசித்துக் கொள்ளுவோம்.

  Reply
 • நந்தா
  நந்தா

  சுய நிர்ணைய உரிமை, தேசிய இனங்கள் என்ற சொற்கள் மாக்சிசத்தை ஏற்றுக் கொண்டவர்களின் பிரச்சனை. மார்க்சிசத்தை எதிர்க்கும் தமிழ் கும்பல்களுக்கு இந்த சொற்தொடர்களை உபயோகிக்க எந்த அருகதையும் கிடையாது.

  கணக்குப் பார்த்தால் பிரபாகரன் கும்பல் கொன்ற தமிழர்களின் எண்ணிக்கைதான் அதிகம். இன அழிப்பு என்பது சிங்களவர்களை விட புலிகள் கன கச்சிதமாக நிறைவேற்றிய விஷயம்.

  மார்க்சிசம் வரையறுக்கும் சுயநிணைய உரிமைக் கோட்பாட்டை மார்க்சிசத்தின் எதிரிகளான கத்தொலிக்க பாதிரிகளும் தூக்கித் திரிவது படு கேவலம். அந்த பாதிரிகளுக்குப் பின்னால் மந்தைகள் போல அலைந்து தமிழர்களிடம் மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல்கள் “சுயநிர்ணைய உரிமை” என்று கூறி யாரை ஏமாற்றுகிறார்கள்?

  மகாவம்சம் என்பது சிங்களவன் எழுதிய வரலாறு அல்ல. மகாவம்சத்தை எழுதிய பிக்கு மகானாமா ஒரு பல்லவ அரச குடும்பத்து அங்கத்தவர் என்பதும் சீகிரி காசியப்ப மன்னனின் தாய் மாமன் என்பதும் தெரியாதவர்கள் “பாதிரிகளின்” கதைகளைக் கேட்டு துள்ளுவது பரிதாபம்.

  Reply
 • மாயா
  மாயா

  பிரபாகரனது சொல்லை கேட்காமல் எனது வாக்குரிமையை பாவிப்பது எனது கடமை எனச் சொல்லிவிட்டு ரணிலுக்கு வாக்குப் போட்டவரது கையை புலிகள் வெட்டியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இவர்கள் ஜனநாயகம் குறித்து பேசும் போது சிரிப்புதான் வருகிறது?

  தாமரை மாவீரர் நிகழ்வுக்கு வந்திருந்த போது அவரை யாரோ பின் தொடர சுவிசின் காவல் துறை பாதுகாப்பு வழங்கியதாம் இல்லை ; பின்னாலேயே திரிந்தார்களாம் என்று இந்திய புழுகு சஞ்சிகைக்கு பேட்டியளித்துள்ளார். அவரோடு நின்றது போலீசில்லையாம் ; புலிகள் காசு கொடுத்து வாடகைக்கு அமர்த்திய செக்குரிட்டி சேவிசின் உத்தியோகத்தர்களாம். புலிகள் நல்லா தாமரையை அவிச்சிருக்கிறாங்கள். இல்லையென்றால் தாமரை நல்லாவே பொய் சொல்கிறாள். புலியென்றால் புளுகர்கள் என்று மாற்றலாம். பணம் கறக்க எந்தப் பொய்யும் சொல்வார்கள்.

  Reply
 • BC
  BC

  மாயா, பொய்யை எழுதி வியாபாரம் செய்ய விகடன் குருப் இருக்கும் போது புலியும் தாமரையும் கதை எழுத வேண்டியது தானே. செக்குரிட்டி ஆட்களை தாமரைக்கு பாதுகாப்புக்கு வைத்து செலவழித்த காசை துயர்துடைக்க வாரீர் என்று அழைக்கும் நவேந்திரனிடம் கொடுத்திருக்கலாம்.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //….யாருக்காக பேசுகிறோம் என்பது முக்கியமல்ல ; யார் மேடையில் நின்று பேசுகிறோம் என்பதே முக்கியம்….//
  ஆஹா..அருமையான கருத்து!

  //… சிங்களவர் மேடையில் நின்று தமிழருக்காக இவர் குரல் கொடுத்திருக்கலாம்்…//
  சிங்களவர் மேடை கொடுப்பார்களா? ஸ்ரீலங்காவில் எப்போதுமே தமிழர்களுக்காக இவர் குரல் கொடுத்தது வரலாறு !

  //…அல்லது பொது மேடையொன்றில் நின்று தமிழருக்காக குரல் கொடுத்திருக்கலாம்? அல்லது அனைத்து பாட்டாளி மக்களுக்காக குரல் கொடுத்திருக்கலாம்?ஆனால்??..// விக்கிரமபாகுவைப்பற்றி அறிந்துதான் பேசுகிறீர்களா மாயா?

  //…புலியென்றால் புளுகர்கள் என்று மாற்றலாம். பணம் கறக்க எந்தப் பொய்யும் சொல்வார்கள்…//
  இங்கே பிரச்சினை தாமரை, புலி அல்ல மாறாக கலாநிதி விக்கிரமபாஹு கருணாரத்தினாவின் (ஆதரவாளர்களின்) மீதான சீருடை அணிந்தோரின் தாக்குதல்களே? மாயா நீங்கள் அதனை ஆதரிக்கிறீர்களா? தயவு செய்து புலிகள் முன்னர் அப்படிச் செய்தனர் இப்படிச் செய்தனர் என வேண்டாம். உங்களின் ஜனநாயகம், மாற்றுக்கருத்து, கருத்துச்சுதந்திரம் எவ்வளவு ஆழம் என உங்கள் கருத்துகள் காட்டி நிற்கின்றன.

  Reply
 • மாயா
  மாயா

  சாந்தன் ; கொலைகாரனோட நின்று கொண்டு காந்தீயம் பேச முடியாது. மாபியாவோடு நின்று கொண்டு மன்னிப்பு குறித்து பேச முடியாது. புலிகளின் மேடையில் நின்று கொண்டு ஜனநாயகம் குறித்து எப்படிப் பேசுவது?

  அவரை சீருடை அணிந்தோர் தாக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் சரத் குணரத்னவின் ஆதரவாளர்களே தாக்கியுள்ளார்கள். இதை விக்கிரமபாகு அவர்களும் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் கண்டும் காணமல் இருந்திருக்கிறார்கள். நான் புலிகள் மேல் அல்லது புலி ஆதரவாளர்கள் மேல் கருணை காட்ட மாட்டேன். காரணம் புலிகளுக்கு அது என்னவென்று தெரியாது.

  பாம்புக்கு பால் வார்க்காதே என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதை அவர்கள் சும்மா சொல்லவில்லை. சுவிசில் புலி வால்களது கருத்து வீடீயோவில் வந்திருக்கிறது. சிங்களவர்கள் எங்கு வந்தாலும் அடித்துத் துரத்துவோம் என்று கொக்கரிக்கிறார்கள். என்ன தைரியம். என்ன முட்டாள்தனம். சுவிசில் தற்போதைய சட்டம் தெரியுமா? கிரிமினல்களை திருப்பி அனுப்பும் சட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குடியுரிமை பெற்றவர்களானாலும். அது பலருக்கு நடந்திருக்கிறது. இப்படிக் கதைக்கும் நீங்கள் ஜனநாயகம் குறித்து கதைக்கிறீர்கள்?

  பாவம் ; என்று தங்க இடம் கொடுத்த எத்தனையோ சிங்களவர்கள் ; புலிக்கு உதவிதாக சிறையில் இருக்கிறார்கள். அப்பாவிகள் போல் நடித்து ; அவர் வீடுகளில் தங்கி குண்டு வைத்து அல்லது தற்கொலைத் தாக்குதல் ஒன்றை செய்த பிறகு ; அகப்பட்டது தங்க இடம் கொடுத்த அப்பாவிகள்.

  தமிழ் பகுதிகளில் குண்டுகளை வைத்து விட்டு ஓடினீர்களே ; அந்த பகுதி மக்கள் அரச படைகளால் கைதாகி அல்லது சித்திரவதைக்கு உள்ளாகி கொல்லப்பட்டார்களே ; அங்கே புலிகள் ஜனநாயகம் காத்தார்களா?

  கெட்டவன் சகவாசம் வேண்டாம் எனச் சொல்கிறோம். கெட்டவனோடு சேர்ந்து பேசித் திரிந்தால் அடி வாங்குவாய் என்பது தெரிந்துதான். இனி இலங்கையில் மட்டுமல்ல எங்குமே புலிப் புராணம் சரிவராது. நீங்க அடிச்சீங்க. அதை பச்சை மட்டை அடி என்றீங்க. அப்ப உங்க ஜனநாயகம் எங்கே இருந்தது? ஆட்களை கொன்றீங்க. அப்போ உங்க ஜனநாயகம் எங்கே போனது?

  நீலன் திருச்செல்வம் தமிழருக்காக ஒரு தீர்வை எழுதியதற்காகத்தானே கொன்றீங்க. அப்ப உங்க ஜனநாயகம் எங்கே போனது? பல்லுப் போன பிறகு நான் அசைவமில்ல . சைவமென சொல்ல முயல்றீங்களா?

  சிங்களவர் மேடை கொடுப்பார்களா என்று கேட்கிறீர்களே? அவர் மேடை போட்டு பேசியதெல்லாம் தமிழ் மேடையா? வீதிக்கு வந்து விக்கிரமபாகு தமிழருக்காக பேசிய பொது எவரும் அடிக்கவில்லையே? புலி மேடையில் ஏறியதுதானே தவறாகிப் போய் அடி வாங்கும் அளவுக்கு போனது. லண்டன் வந்து பல கருத்தரங்குகளில் தான் பங்கு பற்றியதாக சொல்கிறார். அதையெல்லாம் யாரும் தவறாக எண்ணவில்லை.

  விக்கிரமபாகு தமிழருக்கா வீதிகளில் இறங்கினார். கோசமாவது போட்டார். சரி ; புலிகளை அழித்த சரத்துக்கு ஏன் வாக்களிக்க புலிகள் சொன்னார்கள். இதுமாதிரியான ஜனநாயகவாதிகளை எங்கயும் பார்க்க முடியாது. மகிந்தவே பிரபாகரனை ஓட விடுவோம் என்றதுக்கு ; இல்லை அவனது செத்த உடலை பார்க்காமல் தூங்க மாட்டேன் என்ற சரத்துக்கு நீங்கள் ஆதரவளித்தது எந்த ஜனநாயக அடிப்படையில்.

  ரத்த ஆறு ஓட வேண்டும் என நினைக்கும் மிருகங்களோடு தொடர்பு கொள்ளும் அனைவரும் மிருகங்களே. அங்குள்ள மக்கள் எந்த அச்சமுமில்லாமல் இப்போதுதான் இருக்கிறது. அது நீடிக்கட்டும். செத்தவர்கள் செத்தவர்களாகவே இருக்கட்டும். இருப்பவர்கள் நிம்மதியாக வாழட்டும். இதுதான் எனது ஜனநாயகம்.

  Reply
 • kovai
  kovai

  நந்தா! சுய நிர்ணைய உரிமை, தேசிய இனங்கள் என்ற சொற்கள் சர்வதேச உறவாடலுக்கானது. மாக்சிஸ்ட்களால் முன்னுரிமைப் படுத்தப்பட்டது.

  ஒன்றுமொன்றும் இரண்டு என சொல்லிக்கொள்கிற கணக்கல்ல இனவழிப்பு, என்பதை சர்வதேச அங்கீகாரம் பெற்ற வரைவிலக்கணம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

  //மகாவம்சம் என்பது சிங்களவன் “எழுதிய” வரலாறு அல்ல. மகாவம்சத்தை “எழுதிய” பிக்கு மகானாமா ஒரு பல்லவ அரச குடும்பத்து அங்கத்தவர் என்பதும் சீகிரி காசியப்ப மன்னனின் தாய் மாமன் என்பதும்…// தொகுக்கபட்ட வரலாற்றுப் பாடல்களை, ஒருவர் “எழுதியதாகக்” குறித்த உங்கள் ஆய்வின் மூலத்தை பகிரங்கப்படுத்தினால், நீங்கள் நினைத்துக்கொள்கிற “மகாவம்சக் கதையை” எல்லோரும் அறிந்து கொள்ளலாம்.

  Reply
 • ஜெயா
  ஜெயா

  விக்கிரமபாகு மீது தாக்குதல் நடந்திருந்தால் அதுவும் குற்றமே. மகிந்தாவை பேச விடாததும் குற்றமே. கூலை துணைவேந்தராக வரவிடாமல் தடுத்தால் அதுவும் குற்றமே. இருபது பேருக்கு முன்னால் சிங்களவன் வந்தால் அடிப்பம் என்பதும் குற்றமே. மாக்கஸிசம் கதைத்து புலிக்கு பின்னால்போவதும் குற்றமே மாவிர் நாள் அன்று பணம் சம்பாதிப்பதும் குற்றமே மதம் மதம் என்று கதைத்து இனத்தை பிரிப்பதும் குற்றமே இனியும் தொடர்ந்து காசுக்காக இந்திய பத்திரகைகள் போய் எழுதும் செய்தியும் குற்றமே இனியும் தொடர்ந்து இணையங்களில் தமிழர்களை ஏமாற்றுவோம் என்றால் அதுவும் குற்றமே சாதாரண போராளி சயனைட் கடிக்க உயர்வான புலி சரணடைந்தால் அதுவும் குற்றமே மொத்தத்தில் எல்லாமே குற்றமே.-ஜெயா பிரான்ஸ்

  Reply
 • நந்தா
  நந்தா

  இன அழிப்பு என்பது நாஸிகள் செய்தார்கள். தற்போது வத்திக்கானில் போப்பாக இருப்பவனும் ஒரு நாஸி. புலிகளின் பிதாமகர்களாக கத்தோலிக்க பாதிரிகள் எப்படி வந்தனர் என்பதும் புலிகள் எப்படி கொலை கொள்ளைகளை செய்தார்கள் என்பதும் பலரும் அறிந்துள்ள உண்மை.

  இன அழிப்புச் செய்ய புலிகளுக்கு லைசென்ஸ் கொடுத்தது யார்?

  //நந்தா! சுய நிர்ணைய உரிமை, தேசிய இனங்கள் என்ற சொற்கள் சர்வதேச உறவாடலுக்கானது. மாக்சிஸ்ட்களால் முன்னுரிமைப் படுத்தப்பட்டது. //
  மார்க்சிஸ்டுகள் தவிர இந்த சொல் பிரயோகம் யாரும் கொள்கையளவில் செய்வது கிடையாது. “ஜனனாயகம்” என்று கூப்பாடு போடும் எந்த தலைவரும் இந்த வார்த்தைகளை உச்சரிப்பதே கிடையாது.

  சர்வதேச உறவாடலுக்கு பாவிக்கிறார்களா? தமாஷாயிருக்கிறது.
  மார்க்சிச அடிப்படையில் அமைந்த நாடுகளில்தான் இந்த அரசியல் மூலம் இனக்களுக்கிடையிலான பிரச்சனைகள் அணுகப்படுகிறன.பிரிடிஷ்காரனோ அமெரிக்கனோ இந்த வார்த்தைகளைப் பாவித்ததாக சரித்திரமே கிடையாது.

  சீகிரி காசியப்ப மன்னனின் தாய்வழி எது என்று தேடிப் படிக்கவும்.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //….சாந்தன் ; கொலைகாரனோட நின்று கொண்டு காந்தீயம் பேச முடியாது. மாபியாவோடு நின்று கொண்டு மன்னிப்பு குறித்து பேச முடியாது. புலிகளின் மேடையில் நின்று கொண்டு ஜனநாயகம் குறித்து எப்படிப் பேசுவது? …//
  மாயா அதைப்பற்றி வேறொரு தளத்தில் விவாதிப்போம். எனது கேள்வியைத் தெளிவாகக் கேட்கவில்லை என நீங்கள் கருதினால். இதோ மீண்டும்…

  ஸ்ரீலங்காப்பிரஜையான கலாநிதி.விக்கிரமபாகு தாக்கப்பட்டதில் உங்களுக்கு உடன்பாடா இல்லையா? உடன்படுவதாயிருந்தால் ஆம் என்று ஒரு சொல்லி பதில் சொல்லாமல் இப்படி சுத்தி வளைத்துப் பேசுவதில் இருந்தி தெரிகிறது நீங்கள் இருதலைக்கொள்ளி எறும்பு நிலைக்கு வந்துள்ளீர்கள் என.

  மேலும் சுவிசில் உள்ல சட்டம் தனது கடமையைச் செய்யும் அதைப்பற்றி நீங்கள் ஏன் ஆதங்கம் கொள்கிறீர்கள். நியாயமாகப் பார்த்தால் சமூக அக்கறை கொண்ட நீங்கள் இவ்வீடியோவை சுவிச் சமஷ்டிப் பொலிசாருக்கு அனுப்பிவைக்கலாமே. அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். அதுபற்றிய கவலை வேண்டாம் உங்களுக்கு.

  அத்துடன் எனது ஜனநாயக குவாலிபிக்கேசன் பற்றி நீங்களே சொல்கிறீர்கள், பரவாயில்லை. எனது கருத்தெல்லாம் எல்லாம் எனது ஜனநாயக குவாலிபிக்கேசனைக் கேள்விகேட்பவர்களின் ஜனநாயக் பேச்சுச்சுதந்திர குவாலிபிக்கேசன் என்னவிட ஒன்றும் திறமில்லை என்பதுதான்.

  சட்டவிரோத ‘புலி மேடையில்’ ஏறுவது குற்ரம் எனில் ஏன் அவர்மீது ஜனநாயக சிறீலங்கா அரசு தனது சட்டவிதிகளின் கீழ் வழக்குத்தாக்கல் செய்யவில்லை. ஒரு பாராளுமன்றத்தின் உறுப்பினரின் ‘ஆதரவாளர்கள்’ சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் போது சட்டத்தை நிலைநுறுத்தவேண்டிய ‘சீருடை அணிந்தவர்கள்’ நீங்கள் சொல்வது போல் ‘கண்டும் காணாமல்’ இருக்கவேண்டுமா? அதுவா இவ்வளவு நாளும் நீங்கள் ‘பயங்கரவாத’ புலிகளுக்கு எதிராகத் தூக்கிப்பிடித்து கொண்டாடிய ஜனநாயகம். ஆம் என்றால் சொல்லிவிட்டுப்போங்கள் எனக்கொன்றும் கவலை இல்லை. சந்தோசமே!

  நிற்க, ”புலிகள் மேல் அல்லது புலி ஆதரவாளர்கள் மேல் கருணை காட்ட மாட்டேன்” என ஸ்ரேற்மன்ற் விடும் நீங்கள் தானே அமெரிக்க புலிஆதரவு பெண்மணி ஒருவரை உங்களுடன் தங்கவைத்து உங்குள்ள பெரிய புலிகளிடம் அழைத்துச் சென்றது? இல்லையா மாயா?

  Reply
 • Mohamed Shareef Asees
  Mohamed Shareef Asees

  Dr. Vickramabahu Karunarathna is a pro LTTE.

  Reply
 • மாயா
  மாயா

  /”புலிகள் மேல் அல்லது புலி ஆதரவாளர்கள் மேல் கருணை காட்ட மாட்டேன்” என ஸ்ரேற்மன்ற் விடும் நீங்கள் தானே அமெரிக்க புலிஆதரவு பெண்மணி ஒருவரை உங்களுடன் தங்கவைத்து உங்குள்ள பெரிய புலிகளிடம் அழைத்துச் சென்றது? இல்லையா மாயா?//

  நாம் பலரை சந்திக்கலாம். சந்திக்க முன் அவர் புலியா; சாதாரணமானவரா என்பது தெரியாது. எம்மிடம் வந்த பின் இப்படி ஒருவரை சந்திக்க வேண்டும் என்றால் அங்கே போக வேண்டாம் என எவரையும் தடுக்க முடியாது. அது எனது தேவையுமில்லை. என்னோடு அவர் தங்கவில்லை. அவர் விடுதியில் தங்கியிருந்தார். அவரும் சாதாரணமாக தமிழர்கள் அனைவரும் புலிகள் என்ற நிலையில் என்னிடம் பல தகவல்களைச் சொன்னார். தற்போது அவர் இலங்கை இராணுவத்தில் ஒருவரை மணமுடித்து இலங்கையில் வாழ்கிறார். அன்று அவர் புலிகளுக்கு உதவி செய்தார். இன்று அரசுக்கு சார்பாக இருக்கிறார். அவரின் மன மாற்றமா அல்லது அமெரிக்க ஊடுருவலா தெரியாது. அவர் பல தகவல்களை அரசுக்கு வழங்கியுள்ளார்.

  விக்கிரமபாகு கருணாரத்ண ஒரு இடதுசாரி. அவர் மீது நன்மதிப்பு கொண்டிருந்தேன். அவர் ஒரு முட்டாள் அல்ல. அறிஞர் / கலாநிதி / இடதுசாரி / இனவாதமற்றவர் ………… இப்படி நல்ல விடயங்களை தொடர்ந்து கொண்டே போகலாம். ஆனால் அவர் தோழர்களே என்று யார் மேடையில் இருந்து பேசுகிறார். புலிகளுக்கு தோழமை குறித்து என்ன தெரியும்? அமெரிக்க சார்பு நிலையோடு இலங்கையை அழித்தவர்கள் புலிகள்? அவர்களோடு பேசுவதில் தவறில்லை. அவர்களுக்கு ஆதரவாக மேடையேறுவது தவறு? அவர் மகிந்தவின் பாசிச ஆட்சியை அழித்தொழிக்க யாரை அழைத்தார்? புலிகளை அல்லவா? புலிகளின் பாசிசத்தை ஏன் இவர் மறந்தார்? புலிகள் செய்ததைத்தானே ; மகிந்த இன்று செய்கிறார். இது அனைவருக்கும் தெரிகிறது.
  -http://www.youtube.com/watch?v=PD3HfL83FQg&feature=player_embedded

  ஒரே ஒரு வித்தியாசம். அன்று தினசரி செத்தார்கள். இன்று சாவுகள் அருகியுள்ளன. இன்னும் முகாமுக்குள் சாவுகள் நிகழுகின்றன என நினைக்கிறேன். ஒருவன் தப்பினான் என செய்தி வந்தால் ; அவன் செத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவனை அரசு வேறொரு வகையில் பாவிக்க நினைக்கிறது. அன்று பிரபாகரன் தமிழருக்கு வாயே திறக்க விடவில்லை. இன்று மகிந்த சிங்களவருக்கு வாய் திறக்க ஒரு லிமிட்டோடு விட்டுள்ளார். இது போலவாவது தமிழருக்கு அன்று இருக்கவில்லை.

  எனவே ஸ்ரீலங்காப்பிரஜையான கலாநிதி.விக்கிரமபாகு தாக்கப்பட்டதில் உங்களுக்கு உடன்பாடா இல்லையா? என ஆம் / இல்லை என்று சொல்லச் சொல்கிறீர்கள். நீங்கள் கேட்பது உங்களுக்கே தப்பானதாகத் தெரியவில்லை. துப்பாக்கியை கொடுத்து சுடுவியா? சுடமாட்டியா? என்பது போல இருக்கிறது உங்கள் கேள்வி. நான் எதற்கு ? ஏன்? என வாதிடுவதில் என்ன தவறு?

  நீங்கள் ஆம் / இல்லையென்று ஒரே வரியில் பதில் கொடுத்தவர்கள். அதனால்தான் தமிழர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டார்கள். தலைவருக்கு எல்லாம் தெரியும் என்று முள்ளிவாய்கால் வரை போய் திரும்பி ஓடிவர்களாச்சே?

  விக்கிரமபாகு தன் தவறை உணர ஒரு நிகழ்வு நடந்துள்ளது. மகிந்தவுக்கே சிங்களவர்கள் கத்தினார்கள். புலிகளின் அட்டகாசத்தால் ; இலங்கை மக்கள் துன்பப் பட்டிருக்கிறார்கள். அந்த சிங்களவர்கள் தமிழரை வெறுக்கவில்லை. புலிகளைத்தான் வெறுக்கிறார்கள். இல்லாதொழிக்கப்பட்ட பயங்கரவாதத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு சிங்களவர் முயன்றால் ; நிச்சயம் அந்த மக்களால் தாக்கப்படுவது என்பதை தடுக்க முடியாது.

  விக்கிரமபாகுவை தாக்க முற்பட்டவர்கள் அல்லது தாக்கியவர்கள் விமான நிலையத்தில் வேலை செய்வோர். அடுத்து வாகன ஓட்டுனர்கள். அரசுகளோடு பேசிய குற்றத்துக்காக துரோகி என போட்டுத் தள்ளிய புலிகள் ; விக்கிரமபாகுவுக்கு அடிக்கப் போனதற்கு உடன்பாடா இல்லையா என்று கேட்கிறீர்கள்?

  நான் கேட்கிறேன். உங்கள் கேள்வியையே திருப்பிக் கேட்கிறேன்.

  அமிர்தலிங்கம் தொடக்கம் தமிழ் புத்தி ஜீவிகள் தொடக்கம் ; இந்திய பிரமர் ராஜீவ் காந்தி போன்றோரை கொன்றதில் உங்களுக்கு உடன்பாடா இல்லையா? உடன்படுவதாயிருந்தால் ஆம் / இல்லை என்று ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்?

  Reply
 • thurai
  thurai

  //மேலும் சுவிசில் உள்ல சட்டம் தனது கடமையைச் செய்யும் அதைப்பற்றி நீங்கள் ஏன் ஆதங்கம் கொள்கிறீர்கள். நியாயமாகப் பார்த்தால் சமூக அக்கறை கொண்ட நீங்கள் இவ்வீடியோவை சுவிச் சமஷ்டிப் பொலிசாருக்கு அனுப்பிவைக்கலாமே. அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். அதுபற்றிய கவலை வேண்டாம் உங்களுக்கு//சாந்தன்

  இங்கு மாயா குறிப்பிட்டது சுவிஸ் தமிழர்களின் நடத்தை பற்ரியது. இதனால் பாதிக்கப்படுவது சுவிஸ் தமிழர்மட்டுமல்ல உலகில் வாழ்தமிழர் அனைவருமே. தமிழரில் அக்க்றை கொண்டு சிங்கள அரசாங்கத்தையும், புலி எதிர்ப்பாளர்களையுமே தாக்குவதில் மட்டுமே உங்கள் கவன்ம் இருப்பதேனோ?

  தலைவரிற்கு எல்லாம் தெரியுமென்பதுபோல் சுவிஸ்வாழ் தமிழர்களிற்கும் எல்லாம் தெரியுமென்று கருதுகின்றீகளா? அப்போ தலைவர் ஈழத்தமிழர்களிற்குக் முள்ளிவாய்க்கால் காட்டிவிட்டு மறைந்தது போல் சுவிஸ் வாழ் புலிகளின் புத்தி ஜீவிகழும் சுவிஸ் வாழ் தமிழர்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்பி வைக்க உதவியாக இருப்பார்களா?-துரை

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //….இதனால் பாதிக்கப்படுவது சுவிஸ் தமிழர்மட்டுமல்ல உலகில் வாழ்தமிழர் அனைவருமே….//
  ஏன் சுவிஸ் பொலிசும் ஸ்ரீலங்கா பொலிஸ் மாதிரி “கண்டும் காணாமல் “ இருப்பார்கள் என நினைக்கிரீர்களா? அல்லது சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ச்ப்போட்டர்கள் எயர்போட்டில் வைத்து அடிப்பார்கள் என நினைக்கிறீர்களா? நல்ல ஜோக்!

  //…தமிழரில் அக்கறை கொண்டு சிங்கள அரசாங்கத்தையும், புலி எதிர்ப்பாளர்களையுமே தாக்குவதில் மட்டுமே உங்கள் கவனம் இருப்பதேன..//
  கருணாரத்தினா தமிழரில் அக்கறை இல்லாதவரா?

  Reply
 • நந்தா
  நந்தா

  புலிகள் தமிழர்களைக் கட்டி வைத்து மட்டையடியிலிருந்து மண்டையில் போடுதல் வரை பகிரங்கமாக செய்ததை “புலிகளின் ஆட்சியில்”நீதி” செழிக்கிறது என்று கை தட்டியவர்கள் இன்று திடீரென்று விக்கிரமாபாகு கருணாரத்தினவுக்கு நாலு போட்டதை “ஐயகோ” இது தகுமா, தருமமா என்கிறார்கள்?

  புலிகள் செய்த கேவலங்களோடு ஒப்பிடும் பொழுது இந்தநிகழ்வு ஒரு தூசிதான்.

  இதனை விமர்சிக்கும் புலி ஆதரவுகள் முதலில் புலிகள் தமிழர்களை கொலை செய்ததை பிழை அல்லது காட்டு மிராண்டித்தனம் என்று ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்றை பிரசுரித்துவிட்டு பின்னர் விக்கிரமபாகுவிற்கு நீதி கோரலாம்!

  Reply
 • thurai
  thurai

  //ஏன் சுவிஸ் பொலிசும் ஸ்ரீலங்கா பொலிஸ் மாதிரி “கண்டும் காணாமல் “ இருப்பார்கள் என நினைக்கிரீர்களா//சாந்தன்
  புலிகள் இலங்கை இராணுவத்திடம் கற்ர பாடங்களைவிட குறைவாகத்தான் சுவிஸில் பொலிசாரிடம் புலிகள் கற்றுள்ளார்கள். இதனால்தான் இன்னமும் புலியின்வால் சுவிஸில் ஆடுகின்றதென்பது தெரியவில்லையா?

  //கருணாரத்தினா தமிழரில் அக்கறை இல்லாதவரா?//சாந்தன்
  அடேங்கப்பா!! தமிழானாகப் பிறந்து தமிழரில் அக்கறையுள்ளவர்கள் புலியை எதிர்த்தால் அவன் துரோகி.

  சிங்களவனாகப் பிறந்து தமிழரில் அக்கறையுள்ளவராக வாழலாம், புலியையும் எதிர்க்கலாம். ஆனால் தமிழனாகப் பிறந்தால் தமிழரில் அக்கறையில்லாவிடினும் புலியை எதிர்க்கப்படாது. என்ன தத்துவம்- துரை

  Reply
 • மாயா
  மாயா

  //ஏன் சுவிஸ் பொலிசும் ஸ்ரீலங்கா பொலிஸ் மாதிரி “கண்டும் காணாமல் “ இருப்பார்கள் என நினைக்கிரீர்களா? அல்லது சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ச்ப்போட்டர்கள் எயர்போட்டில் வைத்து அடிப்பார்கள் என நினைக்கிறீர்களா? நல்ல ஜோக்! – சாந்தன் //

  சாந்தன் ; உங்களுக்கு ஒரு நல்ல ஜோக் சொல்லட்டா. சுவிசில் சீட்டுப் பிரச்சனைகளின் போது ஏகப்பட்ட அடிபாடுகள். அந்த நாட்களில் சீட்டு பிடிப்பது என்றால் என்ன என்று சுவிஸ் பொலீசுக்கு தெரியாது. அனைத்து தமிழருக்கும் சுவிஸ் மொழிகளும் தெரியாது. இங்கே புலிகளின் தலைவர் தற்போதைய கனடா முரளி. சீட்டு பிரச்சனைக்காக போலீஸ் நிலையத்துக்கு போவோருக்கு மொழி பெயர்ப்பாளராக போவோர் புலிகள்தான். இவர்கள் ஒன்று சொல்ல ; அதை இவர்களிடமும் ; போலீசிடமும் மாற்றிச் சொல்லி ; இந்த பிரச்சனைகளை முரளியிடம் சொல்லட்டாம் என போலீஸ் சொல்லுது என மொழி பெயர்ப்பாளர் சொல்லி ; முரளிக்கு; பொலிஸ் பவர் குடுத்திருக்கு என்று கதை பரப்பினார்கள்.

  சீட்டுக்காரரிடம் புலி முரளி கொமிசன் அடித்து பஞ்சாயத்து பண்ணினார். கடைசியில் சுவிஸ் பொலிஸ் ; முரளியை தூக்கி உள்ளே போட்டது. அதுக்கு பிறகு சனம் தலையை சொறிந்தது.

  புலிகள் காசு வாங்கப் போய் அடாவடித்தனங்கள் செய்ததுண்டு. அதை யாரும் புகார் செய்வதில்லை என போலீஸ் சொல்லும் ; கண்டதையும் சொல்லாத தமிழர்கள். புகார் அல்லது சாட்சி இல்லாமல் சுவிசின் போலீசாலும் ஒன்றும் பண்ண முடியாது.

  அது சரி இதுக்கு பதிலை காணோமே? அமிர்தலிங்கம் தொடக்கம் தமிழ் புத்தி ஜீவிகள் தொடக்கம் ; இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி போன்றோரை கொன்றதில் உங்களுக்கு உடன்பாடா இல்லையா? உடன்படுவதாயிருந்தால் ஆம் / இல்லை என்று ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்?

  விக்ரமபாகு தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் : http://www.lankaenews.com/Sinhala/files/2148Katunayaka_Thugger_J.jpg

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //புலிகள் இலங்கை இராணுவத்திடம் கற்ர பாடங்களைவிட குறைவாகத்தான் சுவிஸில் பொலிசாரிடம் புலிகள் கற்றுள்ளார்கள். இதனால்தான் இன்னமும் புலியின்வால் சுவிஸில் ஆடுகின்றதென்பது தெரியவில்லையா?..//
  அது புலிகளுக்கும் சுவிஸ் பொலிசுக்கும் உள்ல பிரச்சினை. அதில் நீங்கள் ஏன் இங்கிலாந்தில் நிகழ்ந்த கருணாரத்தினாவின் நிகழ்வையும் ஸ்ரீலங்காவில் அதுதொடர்பாக ஸ்ரீலங்காப்பிரஜை ஒருவருக்கு விழுந்த அடியையும் முடிச்சுப்போடுகிறீர்கள்?

  //…., புலியையும் எதிர்க்கலாம். ஆனால் தமிழனாகப் பிறந்தால் தமிழரில் அக்கறையில்லாவிடினும் புலியை எதிர்க்கப்படாது. என்ன தத்துவம்- துரை….//
  இங்கு யாரும் தத்துவம் சொல்லவில்லை. மாறாக ஜனநாயகப் ‘பிரியர்கள்’ களின் கருத்தையே கேட்கிறேன். ஆனால் அவர்கள் சுவிஸ்பொலிஸ், சீட்டு, வட்டி என ஊர்வலம் வருகிறார்கள். இதில் எனது ஜனநாயக குவாலிபிக்கேசன் பற்றி சேட்டிபிக்கேற் வேறு கொடுக்கிறார்கள். இவர்களே ஜனநாயகத்தையோ, மனித உரிமையையோ, யார் மீறினாலும் கேள்வி கேட்போம் என இவ்வளவு நாளும் கதை விட்டது. இப்போ என்னடா என்றால் நான் கேட்கமாட்டேன் ஏனென்றால் நீ முன்னர் கேட்கவில்லை என கதை விடுகிறார்கள். வாழ்க ஜனநாயகப்பண்பு!

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //…இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி போன்றோரை கொன்றதில் உங்களுக்கு உடன்பாடா இல்லையா? உடன்படுவதாயிருந்தால் ஆம் / இல்லை என்று ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்?..//

  இந்தக் கருத்துகள் பற்ரி விவாதம் செய்து செய்து களைத்துவிட்டேன். என்னை பயங்கரவாதப்புலி, மனிடாபிமானமற்ற புலி, ஜனநாயகவிரோதப்புலி என சேட்டிபிக்கேற் கொடுத்து விட்டீர்களே! அவ்வாறான் புலியிடம் வந்து சரி பிழை இப்போது கேட்கலாமா? எனக்கு பட்டம் கொடுத்துவிட்டு எங்கே உன் ஆராய்ச்சிக்கட்டுரை எனக் கேட்பது போலுள்ளது உங்கள் கேள்வி. ஆகவே என்னை விடுங்கள்.
  இங்கே விவாதம் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தினவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள்/ஆதரவாளர்கள் அடி போட்டபோது ஜனநாயகக் காவலர்களான ஸ்ரீலங்கா அரசின் சீருடை அணிந்த காவலர்கள் ‘கண்டும் காணாமல்’ இருந்தது பற்றியதே!
  இவ்விடயம் பற்றி உங்கள் கருத்தெல்லாம் நீங்கள் மேலே கூறியதுபோல “யாருக்காக பேசுகிறோம் என்பது முக்கியமல்ல ; யார் மேடையில் நின்று பேசுகிறோம் என்பதே முக்கியம் “, இதெல்லாம் ஒரு தூசி, ஜனநாயகக் காவலர்கள் அடிக்கவில்லை அரச எம்பியின் ‘ஆதரவாலர்களே’ அடிபோட்டார்கள் எனும் பாணியில் இருந்தால் நான் குற்றவாளியே! புரியும் என நினைக்கிறேன்!

  Reply
 • hari
  hari

  //ஏன் சுவிஸ் பொலிசும் ஸ்ரீலங்கா பொலிஸ் மாதிரி “கண்டும் காணாமல் “ இருப்பார்கள் என நினைக்கிரீர்களா?/சாந்தன்
  அப்படியிருந்திட்டால் முறைப்பாட்டாளர் முறைப்பாட்டை கையளிக்கும் போது ஒரு போட்டோ எடுத்து அதோடை ஒரு தூள் பறக்கும் அறிக்கையெல்லாம் விட்டிருப்பாரே. சுவிஸ் காவல்துறையெல்லோ முறைப்பாட்டை வாங்கோவதோடை முறைப்பாட்டாளரின் நதி மூலம் ரிசி மூலம் கிளற வெளிக்கிடும். கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்படும் வெளிநாட்டவர்கள் தாய் நாட்டிற்கெல்லோ திருப்பி அனுப்பபடுவார் என்ற சட்டம் வேறை வருகுதாம். இது சொந்த செலவில் சூனியம் வைத்த கதையாகவொல்லோ போய்விடும். இதனால் மக்ஸிமம் தேசம் நெற்றில் பின்னூட்டமிட்டு திருப்திபட வேண்டியதுதான்.

  Reply
 • thurai
  thurai

  //அது புலிகளுக்கும் சுவிஸ் பொலிசுக்கும் உள்ல பிரச்சினை. அதில் நீங்கள் ஏன் இங்கிலாந்தில் நிகழ்ந்த கருணாரத்தினாவின் நிகழ்வையும் ஸ்ரீலங்காவில் அதுதொடர்பாக ஸ்ரீலங்காப்பிரஜை ஒருவருக்கு விழுந்த அடியையும் முடிச்சுப்போடுகிறீர்கள்?//சாந்தன்

  இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்காக உலகமுழுவதும் புலிக்கொடி பிடித்து தமிழரை அழிப்பதை முதலில் எப்ப நீங்கள் நிறுத்துவீர்களென்று சொல்வீர்களா. வருமானத்திற்கென்றால் உலக்முழ்வதையும் சேர்த்து தமிழரை புலிக்கொடியின் கீழ் மட்டும் ஒன்றாக்கி முடிச்சு போடலாமா?-துரை

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  ///…வருமானத்திற்கென்றால் உலக்முழ்வதையும் சேர்த்து தமிழரை புலிக்கொடியின் கீழ் மட்டும் ஒன்றாக்கி முடிச்சு போடலாமா?-துரை…//
  முடிச்சுப்போட்டது நானல்ல மாறாக நீங்களே துரை அவர்களே!
  புலிக்கொடியால் தமிழர் எல்லொருக்கும் சுவிஸ்பொலிஸ் அடிக்கப்போகிறான், கப்பலேத்தப் போகிறான் எனச் சொன்னது யார்? நானா அல்லது நீங்களா? யாரோ ஒருவன் புலிக்கொடியுடன் சொன்ன கருத்தால் ஒட்டுமொத்த தமிழனுக்கே சிக்கல். புலிக்குட்டத்தில் பேசிய சிங்களவனுக்கும் அதனால்தான் அடி…என எப்போதெல்லாம் புலிக்கதை வருகிறதோ அப்போதெல்லாம் ஒட்டுமொத்த தமிழனையும் ‘முடிச்சு’ போடும் வேலையை புலிசெய்யாத அளவுக்கு செய்தது நானல்ல. தேவை எனின் உங்கள் கருத்துகள் அனைத்தையும் ஒருமுறை படித்துப்பாருங்கள் துரை!

  Reply
 • thurai
  thurai

  //முடிச்சுப்போட்டது நானல்ல மாறாக நீங்களே துரை அவர்களே!//சாந்தன்
  அப்போ தமிழரென்றால் புலிகள், புலிகளென்றால் தமிழரென்பதை யார் எங்கு கப்பலேற்ரி விட்டார்களென்பதை விளக்குவீர்களா? துரை

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //…அப்போ தமிழரென்றால் புலிகள், புலிகளென்றால் தமிழரென்பதை யார் எங்கு கப்பலேற்ரி விட்டார்களென்பதை …//
  அதுபுலியின் குணம் அதை விடுங்கள். புலி அப்படித்தான் சொல்லும். அதை ஏன் நீங்கள் வழிமொழிகிறீர்கள். நீங்கள் தானே மாற்றுக்கருத்தாலர்கள். அவ்வாறில்லை எனபோராட வேண்டியதுதானே? அதே நேரம் இதற்கான பதிலை எனது முதல் பின்னூட்டத்திலேயே சொல்லி இருக்கிறேன் கவனிக்கவில்லையா?

  “…எப்போதெல்லாம் புலிக்கதை வருகிறதோ அப்போதெல்லாம் ஒட்டுமொத்த தமிழனையும் ‘முடிச்சு’ போடும் வேலையை புலிசெய்யாத அளவுக்கு செய்தது நானல்ல. …”

  Reply
 • thurai
  thurai

  //முடிச்சு’ போடும் வேலையை புலிசெய்யாத அளவுக்கு செய்தது நானல்ல//சாந்தன்
  கதையைப் பார்த்தால் புலியுமில்லை, புலியெதிர்ப்புமில்லை ஆகிவிட்டது. எல்லாம் தலைவர் கழுத்திலை கட்டிருந்த வெறும் சயனைட் இல்லாத
  குப்பிகள்தான். துரை

  Reply
 • தேசம்நெற்
  தேசம்நெற்

  சில பின்னோட்டங்கள் தவறுதலாக அழிக்கப்பட்டுவிட்டது. தயவுசெய்து மீளப் பதிவிடவும். தவறுக்கு வருந்துகின்றோம்.- தேசம்நெற்

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  ///……thurai on December 10, 2010 8:31 pm
  புலிகளின் தமிழீழ விடுதலைப்போராட்டம் இன்னமும் முடியவில்லை. முடியப்போவதும் இல்லை. காரணம் தமிழர்களிற்கும் போரை நடத்திய புலிகளிற்கும் எந்த தொடர்பும் இருக்கவில்லை..///

  //….thurai on December 10, 2010 8:45 pm
  கதையைப் பார்த்தால் புலியுமில்லை, புலியெதிர்ப்புமில்லை ஆகிவிட்டது. எல்லாம் …///

  முடியவும் இல்லை முடியப்போவதும் இல்லை என உறுதியாகச் சொன்னீர்கள் பின்னர் 15 நிமிடங்களுக்குள் தலைகீழான முடிவை எடுத்துள்ளீர்கள். அதிலாவது உறுதியாக நிர்பீர்களா? இல்லை பழையபடி……

  Reply
 • thurai
  thurai

  முதலில் நான் கருத்தில் கொண்டு எழுதியது தமிழர் மீது அக்கறையற்ர பணம் திருடிகளின் போராட்டம். இரண்டாவது எழுதியது புலிகளிற்குச் சார்பாக எழுதுவோர் சந்தர்ப்பம் ஏற்படும் போது புலி வேறு நான் வேறு என கூறுவோரிற்காகவே.துரை

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //….புலிகளின் தமிழீழ விடுதலைப்போராட்டம் இன்னமும் முடியவில்லை. முடியப்போவதும் இல்லை. காரணம் தமிழர்களிற்கும் போரை நடத்திய புலிகளிற்கும் எந்த தொடர்பும் இருக்கவில்லை..///

  தமிழருக்கும் புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை எனில் இனிமேல் “புலிகளால்” ஒட்டுமொத்த தமிழருக்கும் சிக்கல் என கதை விடாதீர்கள்.
  புலிகள் ஏதாவது செய்தால் தமிழருக்கு சார்பாக போராடுங்கள். அதைவிட்டு ஐயையோ…மானம் போகுது….கல்லலேத்தப்போகிறான் சுவிஸ்காரன்….எனௌம் பாணியில் கருத்தெழுதாதீர்கள்.
  //…. இரண்டாவது எழுதியது புலிகளிற்குச் சார்பாக எழுதுவோர் சந்தர்ப்பம் ஏற்படும் போது புலி வேறு நான் வேறு என கூறுவோரிற்காகவே.துரை
  …//

  அப்போ புலிஎதிர்ப்பாளராக இங்கே கருத்தெழுதுவோர் புலிஆதரவாளர்களா? அப்பாடா லொஜிக்!

  Reply
 • thurai
  thurai

  //தமிழருக்கும் புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை எனில் இனிமேல் “புலிகளால்” ஒட்டுமொத்த தமிழருக்கும் சிக்கல் என கதை விடாதீர்கள்.புலிகள் ஏதாவது செய்தால் தமிழருக்கு சார்பாக போராடுங்கள்//சாந்தன்

  புலிகளால் தமிழினத்திற்கே அழிவு நடந்துவிட்டது சிக்கல் என்பது சிறிய விடயம். இனிமேல் போராட என்ன இருக்கின்றது? ஈழத் தமிழரை நிம்மதியாக வாழ விட்டாலே போதும். நாடு கடந்த தமிழீழம் யாருடையது? உலகத்தமிழர் பேரவை யாருடையது? பிழைப்புக்கு வழிபார்க்கும்
  புலிகழுடையதா? அல்லது ஈழத்தமிழருடைய்தா?

  புலம்பெயர் பாடசாலைப் பிள்ளைகளை புலிகளின் வீதி மறியல், வீதியில் சுனாமிக்கு உண்டியல் குலுக்கல் போராட்டங்களிற்கு போகாமல் தடுப்பதே தமிழர்களின் முதல்கடமை.

  //அப்போ புலிஎதிர்ப்பாளராக இங்கே கருத்தெழுதுவோர் புலிஆதரவாளர்களா? அப்பாடா லொஜிக்!//சாந்தண்
  தேசம் வாசகர்களிற்குத் தெரியும் யார் இங்கு புலி எதிர்ப்பாளர் யார் ஆதரவாளர்களென்பது. -துரை

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //… சிக்கல் என்பது சிறிய விடயம். இனிமேல் போராட என்ன இருக்கின்றது?…//நீங்கள் சொன்ன ‘சிக்கல்’ இல் இருந்து வெளியேற போராடுங்கள். உங்களுக்கு சிக்கல் சிறிய விடயமாக இருக்கலாம்!

  //…ஈழத் தமிழரை நிம்மதியாக வாழ விட்டாலே போதும….// அதனை ஸ்ரீலங்கா ராணுவம் அடாவடித்தனமாகக் கைப்பற்றிய காணிகளில் சிங்களவரைக் குடியேற்றுவதால் நடத்தலாமா? (இதனை சாதி ஒழிப்பு என்கின்ற பெயரில் ஆதரித்தவர் நீங்கள்- அதுவும் தமிழரிடையே உள்ள சாதி ஒழிப்புக்கு அல்ல)

  //…நாடு கடந்த தமிழீழம் யாருடையது? உலகத்தமிழர் பேரவை யாருடையது? பிழைப்புக்கு வழிபார்க்கும் புலிகழுடையதா? அல்லது ஈழத்தமிழருடைய்தா?…// பிழைபுக்கு வழிபார்க்கும் கூட்டத்தினுடையது என்றால் இன்னும் ஏன் அதனை சாதகமாகப் பாவித்து ஈழத்தமிழரின் தீர்ப்பை இழுத்தடிக்க வேண்டும். தீர்ப்பைக்கொடுத்தால் பிழைப்புக்கூட்டம் இல்லாமல் போகும் அல்லவா?

  //…புலம்பெயர் பாடசாலைப் பிள்ளைகளை புலிகளின் வீதி மறியல், வீதியில் சுனாமிக்கு உண்டியல் குலுக்கல் போராட்டங்களிற்கு போகாமல் தடுப்பதே தமிழர்களின் முதல்கடமை./….. . அதென்ன தமிழர்களின் கடமை? உங்கள் கடமை அல்லவா? அப்போ அடுத்த தடவை தேசம்நெற்ரில் கருத்தெழுதுவதிலிம் பார்க்க இவர்களைத் தடுத்து நிறுத்த ஆவன செய்யுங்கள்.

  Reply
 • thurai
  thurai

  //நீங்கள் சொன்ன ‘சிக்கல்’ இல் இருந்து வெளியேற போராடுங்கள்//சாந்தன்
  வாழ்வே போராட்டம் அதற்காக வீதியில் நின்று ஊரை அழைத்து கூக்குரல் போடுவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. இலங்கைப் பிரச்சினையும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டே தீர்வைக் காணவேண்டும்

  //அதனை ஸ்ரீலங்கா ராணுவம் அடாவடித்தனமாகக் கைப்பற்றிய காணிகளில் சிங்களவரைக் குடியேற்றுவதால் நடத்தலாமா//சாந்தன்
  அந்தக்காணிகுரிய தமிழர்கள் தனிப்பட்ட முறையில் வழக்குத்தாக்கல் செய்யலாம். அதற்காக உருத்திரக்குமார் தலைமையில் நாடுகடந்த அரசாங்கம் தேவையா?

  //பிழைபுக்கு வழிபார்க்கும் கூட்டத்தினுடையது என்றால் இன்னும் ஏன் அதனை சாதகமாகப் பாவித்து ஈழத்தமிழரின் தீர்ப்பை இழுத்தடிக்க வேண்டும்//சாந்தன்
  தமிழரின் ந்ல்வாழ்வில் அக்கறை கொண்ட தமிழ்த்தலைவர்கள் யாராவது ஒருவரைக் காட்டுங்கள் முதலில். அதன்பின் தமிழரின் உருமை பற்ரிப் பேசுவோம்.

  //அதென்ன தமிழர்களின் கடமை? உங்கள் கடமை அல்லவா?//சாந்தன்
  தமிழர்களென்றால் புலி, புலியென்றால் தமிழர். தனியாக என்னைத் தனியப்படுத்தி துரோகியாக்குவது புலிகளின் கை வந்த செயல்தான்.- துரை

  Reply
 • thenupiriyan
  thenupiriyan

  //அதனை ஸ்ரீலங்கா ராணுவம் அடாவடித்தனமாகக் கைப்பற்றிய காணிகளில் சிங்களவரைக் குடியேற்றுவதால் நடத்தலாமா//சாந்தன்
  அந்தக்காணிகுரிய தமிழர்கள் தனிப்பட்ட முறையில் வழக்குத்தாக்கல் செய்யலாம். அதற்காக உருத்திரக்குமார் தலைமையில் நாடுகடந்த அரசாங்கம் தேவையா?

  வழக்குப் போடலாம். தீர்ப்பு அவருடைய பேரப்பிள்ளையின் காலத்தில்தான் வெளிவரும்.

  //தமிழரின் ந்ல்வாழ்வில் அக்கறை கொண்ட தமிழ்த்தலைவர்கள் யாராவது ஒருவரைக் காட்டுங்கள் முதலில். அதன்பின் தமிழரின் உரிமை பற்றிப் பேசுவோம்//
  யாருமே இல்லை என்பதற்காக தமிழர்கள் உரிமைகளை இழந்து அடங்கி மெளனமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களா? நீங்கள் இங்கு வந்து நல்ல தலைவராக இருந்து காட்டுங்கள்.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //….அந்தக்காணிகுரிய தமிழர்கள் தனிப்பட்ட முறையில் வழக்குத்தாக்கல் செய்யலாம்.//…
  மேலே உள்ள பின்னூட்டம் போல தீர்ப்பு பேரப்பிள்ளைகளின் காலத்திலாவது வந்தால் பரவாயில்லை. வரவே வராது என்பதுதான் உண்மை. அதனை ஈழத்தில் உள்ள சிறுபிள்ளையும் அறியும். துரை அறியாததேனோ?
  //…அதற்காக உருத்திரக்குமார் தலைமையில் நாடுகடந்த அரசாங்கம் தேவையா?….// நிச்சயமாக சொந்த சறிலங்காப் பிரஜையான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணாவுக்கு அரச எம்பிக்களின் ஆதரவாளர்கள் அடிபோட்டபோது கண்டும் காணாமல் இருந்த சீருடை அதிகாரிகள் உள்ள அரசு போதும்!

  Reply
 • தோஸ்து
  தோஸ்து

  அஜீவன்
  நண்பரே உரிமை என்ற விடயத்தில் வரையறை உறுதிப்பாடு என்ற நிலையே எடுக்கப்படும் விட்டுக் கொடுப்புகளும் கிடைத்ததை பெற்று முன்னேறும் மனமும் என்ற வழுவழுப்பான நிலை எடுக்கப்படுகதில்லை. வழுவழுப்பான நிலை மூலம் கிடைப்பது சலுகையே தவிர உரிமை அல்ல. ஈழத்தமிழர் கேட்பது உரிமை என்ற அடிப்படையை உணர்ந்து கொள்ளுங்கள்.
  நீங்கள் சுவீஸில்தானே இருக்கிறீர்கள் உங்கு கிராமஅரசோ மாநிலஅரசோ தமது இறைமைக்குட்பட்ட மக்களின் உரிமைகளை பேணுவதற்கு நீங்கள் சொல்கின்ற”விட்டுக் கொடுப்புகளும் நம்பிக்கைகளும் மனம் விட்டு பேசும் தன்மையும் கிடைத்ததை பெற்று முன்னேறும் மனமும்” என்ற வழுவழுப்பான வழியை பின்பற்றுகின்றதா இல்லை அரசியல்யாப்பில் அரசியல் சட்டத்திலுள்ள உள்ளவற்றை கொடு என்று வரையறையாக பேசுகின்றதா! அதைவிட மக்கள் ஒரு விடயத்தில் இல்லை அரசியல் சட்டத்தில் அதிருப்திபடும் போது சுவீஸில் மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்புதானே நடத்தப்படுகிறது “விட்டுக் கொடுப்புகளும் நம்பிக்கைகளும் மனம் விட்டு பேசும் தன்மையும் கிடைத்ததை பெற்று முன்னேறும் மனமும்” என்ற போதனைகள் அல்லவே. ஏன் நண்பரே சுவீஸில் வாழ்ந்து கொண்டும் ஈழத்தமிழரின் உரிமை போராட்டத்தை குறுகிய பார்வையுடன் நோக்குகிறீர்கள்.

  Reply
 • அஜீவன்
  அஜீவன்

  //ஏன் நண்பரே சுவீஸில் வாழ்ந்து கொண்டும் ஈழத்தமிழரின் உரிமை போராட்டத்தை குறுகிய பார்வையுடன் நோக்குகிறீர்கள். – தோஸ்து//
  சுவிசின் பின்னணி தங்களுக்கு தெரியுமோ தெரியாது ? இதை பாருங்கள். கருத்தெடுப்பு வாக்கெடுப்பு இப்போதுதான் நடைபெறுகிறது. அன்றைய நிலவரம் வேறு…… இங்கே சில தெளிவுகள் கிடைக்கலாம்.
  -http://www.youtube.com/user/ajeevan#p/u/18/uoXc5htkiio
  -http://www.youtube.com/watch?v=o57zH540uNo

  Reply
 • BC
  BC

  //அஜீவன் – எந்த ஒரு தமிழ் இயக்கமும் நம்பிய தமிழர்களை ஏமாற்றியே உள்ளது.
  இருந்ததையும் அழித்தார்களே தவிர ஆக்கவில்லை. //
  அப்பட்டமான உண்மை. இனிமேல் புலிகளை ஆதரிப்பது என்பது பிரபாகரன் வைத்திருந்த பொய் குப்பி அல்ல அப்பாவிகள் கடித்த மாதிரி உண்மையான குப்பி கடிப்பது போல். 2005 ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் தங்களுக்கு விரும்பியவருக்கு வாக்களிக்கும் உரிமையை தடுத்த புலிகள் இப்போ சுவிஸ் வாக்கெடுப்பு பற்றி எல்லாம் கதைக்கிறார்கள். நீதி, நியாயம், மனிதவுரிமை என்று அவர்களுக்கு சம்பந்தம் இல்லாத விடயங்களை எல்லாம் கதைக்கிறார்கள்!!

  Reply
 • thurai
  thurai

  //மேலே உள்ள பின்னூட்டம் போல தீர்ப்பு பேரப்பிள்ளைகளின் காலத்திலாவது வந்தால் பரவாயில்லை. வரவே வராது என்பதுதான் உண்மை. அதனை ஈழத்தில் உள்ள சிறுபிள்ளையும் அறியும். துரை அறியாததேனோ?//சாந்தன்
  சாள்ஸ் அன்ரனி தலைவரின் மகன் இருந்திருந்தால் இன்னமும் 30 வருடத்திற்கு புலிகளின் பிழைப்பு பிரபாவின் பேரப்பிள்ளை காலத்திற்கும் நீடித்திருக்காதா?

  //நிச்சயமாக சொந்த சறிலங்காப் பிரஜையான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணாவுக்கு அரச எம்பிக்களின் ஆதரவாளர்கள் அடிபோட்டபோது கண்டும் காணாமல் இருந்த சீருடை அதிகாரிகள் உள்ள அரசு போதும்!//சாந்தன்
  சகோதர கொலைகள் செய்த தமிழீழ விடுதலைகளை விட அடி மட்டும்தானே பரவாயில்லையே. – துரை

  Reply
 • thurai
  thurai

  //யாருமே இல்லை என்பதற்காக தமிழர்கள் உரிமைகளை இழந்து அடங்கி மெளனமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்களா? நீங்கள் இங்கு வந்து நல்ல தலைவராக இருந்து காட்டுங்கள்//தேனுபிரியான்
  அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டியது அடக்கப்பட்ட, உருமைகள் மறுக்கப்பட்ட மக்களேயாகும். தமிழ் மொழிக்குத்தான் உரிமை கேட்டுப்போராட்டம். தமிழ்மக்களின் அழிவில். மக்களின்நலன் கருதிய போராட்டம் பற்ரி தமிழர் அரிச்சுவடியே திறந்து பார்க்கவில்லை.-துரை

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //…அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டியது அடக்கப்பட்ட, உருமைகள் மறுக்கப்பட்ட மக்களேயாகும்….//

  நல்ல வசதியான கொள்கை! உரிமை மறுக்கப்பட்ட மக்களை குரல் கொடுங்கள் எனக்கேட்பது நல்ல நியாயம். இப்படிப்பார்த்தால் ஆப்கானிஸ்தானில், வியட்நாமில், பாலஸ்தீனத்தில் அமெரிகாவின் செயல்களையும் ரஷ்யாவின் செயல்கலையும் எதிர்த்து அந்த மக்கள் தான் குரல் கொடுக்க வேண்டும் என்பது நியாயமா? அப்போ ஏன் ஒரு ஐ.நா? ஏன் மனித உரிமை ஆனையம்? உரிமை மறுத்தல் என்பதில் எதிர்த்துக்க்குரல் கொடுக்கும் உரிமையும் அடங்குகிறது. அது சரி துரை , உரிமை மறுக்கப்பட்ட மக்கள் அகதியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அதைப்பற்ரி குரல் கொடுக்க உரிமை உண்டா இல்லையா? இல்லை எனில் புலிகளால் கொல்லப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்கும் உரிமையை வெளிநாட்டில் இருக்கும் அவர்கள் உறவினர்களுக்கும் இல்லை என்கின்றீர்களா?

  Reply
 • thenupiriyan
  thenupiriyan

  //அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டியது அடக்கப்பட்ட உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களேயாகும்.// துரை

  அந்த மக்கள் யார்? எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டும் அல்லவா? அடக்கப்பட்ட உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள் கூட்டத்திலிருந்து ஒருவர்தான் முதலில் குரல் கொடுப்பார். அதன் பின் மக்கள் அவர் பின்னால் திரள்வர். அதுதான் உலகவரலாறு. மாசேதுங் கார்ல்மார்க்ஸ் லெனின் போன்றோர் மட்டும்தான் அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்களா? இவர்களோடு இணைந்து கோடிக்கணக்கான மக்களும் குரல் கொடுத்திருப்பார்கள்தானே. மாசேதுங்கின் நீண்ட பயணத்தின்போது அவர் மட்டும் தனியே சென்றாரா? அவரோடு இணைந்து கோடிக்கணக்கான மக்கள் சென்றவர்கள்தானே. ஏன் அவர்களின் பெயர்கள் வெளியால் வரவில்லை.
  எனவே ஒரு தலைவன் தேவை. அடர்ந்த இருளை அகற்றுவதற்கு ஒரு தீக்குச்சி தேவை. அந்தத் தீக்குச்சியாகத் தன்னை எரித்துக் கொள்ளப்போவது யார்?
  துரை அவர்களே நீங்கள் ஏன் இதற்கு முன்வரக்கூடாது? கடந்தகாலத் தமிழ்த் தலைமைகள் செய்த தவறுகளை எல்லாம் நல்லமுறையில் சுட்டடிக்காட்டுகின்றீர்கள். தற்போதைய நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலகத் தமிழர் பேரவை போன்றவை செய்கின்ற தவறுகளையும் நல்லமுறையில் சுட்டிக்காட்டுகின்றீர்கள். என்ன செய்யக்கூடாது என்று நன்கு தெரிந்த உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்றும் நன்கு தெரிருந்திருக்கும். எனவே அடக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க – ஒரு தீக்குச்சியாக மாற – நீங்கள் ஏன் முன்வரக்கூடாது? தமிழர் அரிச்சுவடியைத் திறந்து வைக்க முன்வாருங்கள்.

  ஒருவேளை அடக்கப்பட்ட மக்கள் கூட்டத்தில் நீங்கள் இல்லையா? சுதந்திரமாக வாழ்கின்றீர்களா? அவ்வாறாயின் நீங்கள் ஒதுங்குங்கள். அடக்கப்பட்ட மக்கள் தங்களுக்குச் சரியானது என்று எது தெரிகின்றதோ அதைச்செய்யட்டும். அதை ஏன் நீங்கள் விமர்சிக்கின்றீர்கள். நீங்கள் புலிகளின் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டவராய் இருக்கலாம். புலிகளை எதிர்ப்பதுதான் உங்கள் வாழ்வின் இலட்சியமாயும் இருக்கலாம். மற்றவர்கள் பணத்திற்காக தமிழ் மக்களின் வாழ்வோடு விளையாடுகின்றார்கள் என்றால் நீங்கள் ஏன் உங்கள் சுயநலத்திற்காக – உங்களின் தனிப்பட்ட கோபதாபங்களுக்காகத் தமிழ்மக்களின் வாழ்வோடு விளையாடுகின்றீர்கள். 1977 1983 இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு சிங்கள மண்ணில் வேலைசெய்தது போதும் என்று அரசாங்க வேலையைத் துறந்து கடந்த 37 வருடங்களாக தாய்மண்ணில் அடக்கப்பட்ட மக்களோடு மக்களாய் வாழுகின்ற ஒருவன் நான்.

  Reply
 • தோஸ்து
  தோஸ்து

  அஜீவன்!சுவிசின் பின்னணி தங்களுக்கு தெரியுமோ தெரியாது ? என்று ஆரம்பித்த நீங்கள் படம்பார்த்து தெளிவுறுச் சொல்லி இரு யூ ரியூப் இணைப்பு கொடுத்தீர்கள் முதல் இணைப்பில் தமிழ்நாட்டை வாழ்த்திப்பாடிய பின்னனிபாடலுக்கு இளம் பெண்களின் குழு நடனத்தை சிறப்பாக ஒருங்கிணைத்துள்ளீர்கள். ஜேர்மன் மொழியில் சிறு முன்னுரை நிகழ்வின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. நிகழ்வின் முடிவில் பார்வையாளர்கள் தமது பாரட்டை கரவொலி மூலம் வெளிப்படுத்தினர். உங்கள் கலைமுயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.
  இரண்டாம் இணைப்பு கிடைக்குதில்லை.அதனால் என்னால் உங்கள் கருத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை.எனவே தயவு செய்து உங்கள் கருத்தை தெளிவாக பின்னூட்டமிடுங்கள்.
  // 2005 ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் தங்களுக்கு விரும்பியவருக்கு வாக்களிக்கும் உரிமையை தடுத்த புலிகள் இப்போ சுவிஸ் வாக்கெடுப்பு பற்றி எல்லாம் கதைக்கிறார்கள். நீதி நியாயம் மனிதவுரிமை கதைக்கிறார்கள் //
  ஒரு தேர்தலை புறக்கணி என கோருவது ஜனநாயக முறைக்குட் பட்டதுதானே. அதிலென்ன தப்பு. அமெரிக்காவின் நிலைபாட்டை ஆதரிப்பதன் மூலம் ஒருவர் அமெரிக்கர் ஆகி விட முடியாது. தனது நிலைபாட்டை ஆதரித்தவர் என்பதற்காக அமெரிக்கா அவரை தனது குடிமகனாக ஏற்று கொண்டுவிடாது. இதே வாதம்தான் என்னை புலி என அழைப்பதற்கும். சரி உங்கள் சந்தோசத்திற்காக என்னை புலியென வைப்போம். ஓரு குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டவருக்கே தனது கருத்தை கூற தன் சார்பில் சட்டப்படி வாதாட உரிமையிருக்கும் போது ஒரு புலிக்கு கருத்து சுதந்திரமில்லையா!

  Reply
 • மாயா
  மாயா

  BC //2005 ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் தங்களுக்கு விரும்பியவருக்கு வாக்களிக்கும் உரிமையை தடுத்த புலிகள் இப்போ சுவிஸ் வாக்கெடுப்பு பற்றி எல்லாம் கதைக்கிறார்கள். நீதி, நியாயம், மனிதவுரிமை என்று அவர்களுக்கு சம்பந்தம் இல்லாத விடயங்களை எல்லாம் கதைக்கிறார்கள்!!//
  புலிகளால் எதைச் செய்ய முடியுமோ அதை அவர்கள் நியாயப்படுத்த முனைவார்கள். தோஸ்து; அதைத்தான் எழுதுகிறார். அன்று தேர்தலில் வாக்களிக்க தடுத்தவர்கள் இன்று புலத்தில் வாக்குச் சாவடிகளுக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்கள். நாட்டில் அராசகம் செய்தவர்கள் இன்று சனநாயகம் குறித்து கதைக்கிறார்கள். படுகொலைகளை தயக்கமின்றிச் செய்தவர்கள் ; இன்று படுகொலைகளுக்கு நியாயம் தேடுகிறார்கள். அவர்கள் செய்தால் எல்லாம் சரி. அடுத்தவன் செய்தால் அனைத்தும் தப்பு.
  அடுத்தவனுக்கு சாப்பிடவும் ; குடிக்கவும் மட்டும் வாய் திறக்க வழி செய்தவர்கள். சர்வ சன வாக்கெடுப்பு குறித்து பேசுவது விந்தையிலும் விந்தை.ஒரு படு முட்டாளின் சொல்லை தேவ வாக்காக எடுத்ததாக சொல்லிக் கொண்டதால் முழு இனத்தின் பாதி அழிவுக்கு அந்த முட்டாள் (நந்திக்) கடலில் தள்ளி விட்டு ; தானும் செத்துப் போனான்.

  கிடைத்த வண்டியில் ஏறாமல் ; தனக்கான விசேட வண்டிக்காக காத்திருந்ததில் வந்தது என்னவோ பிரேத வண்டிதான்.

  யாழ்பாணத்தானுக்கு இப்படி அடி விழும் என நினைத்திருந்தால் யாழ்பாணத்தான் ஒரு நாளும் இந்தப் போராட்டத்தில் ஆரம்பத்தில் இறங்கியே இருந்திருக்க மாட்டான். ஏதாவது பிரச்சனை வந்தால் இந்தியா (தொப்புள் கொடி உறவு) பார்த்துக் கொண்டு இருக்காது. அடி விழுந்தால் யாழ்பாணத்துக்கு விழாது. அடி விழுந்தால்; மலைநாட்டு தேயிலை தோட்டக்காரனுகளுக்கும் ; கொழும்பு தமிழர்களுக்கும் ; அனுராதபுரம் போன்ற போர்டர் தமிழர்களுக்கும்தான் விழும். நமக்கு ஒன்றும் நடக்காது என நினைத்தே அனைத்தையும் செய்தான். அப்படித்தான் பகிரங்கமாக யாழ்பாண தமிழன் கதைத்தான். அதன் பிரதிபலிப்புதான் யாழ் நுhலக தாக்குதல்.

  இன்று அவனே சுப்பர் பவர். முன்னர் தமிழர் பெயரளவில் மைனோரிட்டி . இன்று மையப்பிட்டி. தரப்படுத்தலை வைத்து போராட்டம் தொடங்கினாங்களாம். யாழ்பாணத்தானுக்கு யுனி கிடைக்காததால்தானே? தரப்படுத்தல்தானே மலையக ; வன்னி ; மட்டக்களப்பு மக்களை யுனிக்கு போகச் செய்தது? அங்கயும் வந்து யாழ்பாணத்தான்தானே வன்னி அடையாளத்தோடு யுனிவர்சிட்டிக்கு போனான். நடந்தது தமிழருக்கான போராட்டம் அல்ல. யாழ்பாணத்துக்காரனுக்கான போராட்டம். அதிகமாக அழிந்தது என்னவோ அடுத்த பகுதி அப்பாவிகள்.

  முகாமுக்குள் சரணடைந்தவர்கள் இன்று பரீட்சை எழுதுகிறார்கள்:
  -http://www.lankadeepa.lk/2010/12/13/images/ex-tigers-g-ce-ol-romesh-01jpg.jpg
  -http://www.lankadeepa.lk/2010/12/13/images/ex-tigers-gce-ol-03.jpg

  Reply
 • தோஸ்து
  தோஸ்து

  //யாழ்பாணத்தானுக்கு இப்படி அடி விழும் என நினைத்திருந்தால் யாழ்பாணத்தான் ஒரு நாளும் இந்தப் போராட்டத்தில் ஆரம்பத்தில் இறங்கியே இருந்திருக்க மாட்டான்//மாயா
  போராட்ட குணமென்பது ஈழத்தமிழனின் பரம்பரை குணம். அதை உங்கள் வசதிக்கு “யாழ்பாணத்தான்” என்ற வரையறைக்குள் அடக்கலாம். பெனர்ன்டோபிள்ளை தன் பெயரை பெனர்ன்டோபுள்ளையாக்கி நீர்கொழும்பு முதல் புத்தளம்வரை சிங்கள தேசியத்திற்குள் கரைந்து போன உப்போ சீனியோஅல்ல. உணர்வுள்ள மனிதர்கள்தான் ஈழத்தமிழன்.
  ஈழத்தமிழனுக்கு விழுந்த அடியை சொல்லித்தான் நீர்கொழும்பு சிலாபம் புத்தளத்து மக்கள் அகதி என்று ஐரோப்பா அமெரிக்கா அவுஸ்திரேலியாவென்று வாழ்ந்து கொண்டு “யாழ்பாணத்தான்” என்று துவேசம் கதையுங்கோ.

  Reply
 • thurai
  thurai

  //உணர்வுள்ள மனிதர்கள்தான் ஈழத்தமிழன்.
  ஈழத்தமிழனுக்கு விழுந்த அடியை சொல்லித்தான் நீர்கொழும்பு சிலாபம் புத்தளத்து மக்கள் அகதி என்று ஐரோப்பா அமெரிக்கா அவுஸ்திரேலியாவென்று வாழ்ந்து கொண்டு “யாழ்பாணத்தான்” என்று துவேசம் கதையுங்கோ.//தோஸ்து

  புலம்பெயர் நாடுகளில் அகதிகளாக விண்ணப்பிக்கும்போது ஈழத்தமிழன்

  விமானத்தில் இலங்கை போகும்போது சிறிலங்கன்

  கட்டுநாயக்காவில் இறங்கியவுடன் நான் வடக்கு, நீ கிழக்கு.

  கொழும்பில் தமிழரைக்கண்டால் தோட்டக்காடா, இலங்கைத் தமிழரா?

  யாழ்ப்பாணத்தில் இறங்கியவுடன் எந்த ஊர்

  ஊரில் போய் இறங்கியவுடன் எந்த சமூகம், எந்த சாதி.

  எத்தனை உண்ர்வுடன் உள்ளது எங்கள் தமிழினம்.

  துரை

  Reply
 • thurai
  thurai

  //உரிமை மறுக்கப்பட்ட மக்கள் அகதியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அதைப்பற்ரி குரல் கொடுக்க உரிமை உண்டா இல்லையா? //சாந்தன்
  பிறந்த மண்ணை நம்பி, பிறந்த மண்ணில் வாழ்வோரே தமக்கு என்ன உருமை உண்டு இலை என்பதை அறிவார். 30 லட்சம் கொடுத்து அகதியாக வந்து வாழ விரும்புவோர். ஒருநேர சோற்றுக்கு வழிதேடுவோரின் வாழ்வோடு விளையாடுவதுதான் உருமைப் போராட்டமா?

  //இல்லை எனில் புலிகளால் கொல்லப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்கும் உரிமையை வெளிநாட்டில் இருக்கும் அவர்கள் உறவினர்களுக்கும் இல்லை என்கின்றீர்களா?//சாந்தன்
  முன்பு புலிகளால் கொல்லப்பட்டவர்கள் யாவரும் துரோகிகள். இப்போ புலி இல்லை என்று சொன்னவுடன் புலிகளிற்கு எதிராக குரல் கொடுப்பதா? துரை

  Reply
 • thurai
  thurai

  //1977 1983 இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு சிங்கள மண்ணில் வேலைசெய்தது போதும் என்று அரசாங்க வேலையைத் துறந்து கடந்த 37 வருடங்களாக தாய்மண்ணில் அடக்கப்பட்ட மக்களோடு மக்களாய் வாழுகின்ற ஒருவன் நான்.//தேனுபிரியன்

  கலவரங்களின் போது உயிர்தப்பியவன் நான். கலவரங்களை வரிசைப்படுத்தும் நீங்கள் ஏன் மீண்டும் ஓர் பேரழிவைச் சந்தித்தீர்கள் அதுவும் தமிழரின் மண்ணில்? தமிழரின் அழிவிற்கு தமிழரே காரணமாக இருந்தனர் இருக்கின்றனர். அவர்களை முதலில் கணடறியுங்கள்.- துரை

  Reply
 • மாயா
  மாயா

  // ஈழத்தமிழனுக்கு விழுந்த அடியை சொல்லித்தான் நீர்கொழும்பு சிலாபம் புத்தளத்து மக்கள் அகதி என்று ஐரோப்பா அமெரிக்கா அவுஸ்திரேலியாவென்று வாழ்ந்து கொண்டு “யாழ்பாணத்தான்” என்று துவேசம் கதையுங்கோ.//

  உண்மைகளை சொன்னால் பொத்துக் கொண்டு வருகுது. யாழ்பாணத்துக்கு வெளியே இருந்தவனுக்கு அடி வாங்கிக் கொடுத்தது யாழ்பாணத்து தமிழன்தான். நிம்மதியாய் இருந்தவனை நாட்டை விட்டு ஓட வைத்த பெருமை உங்களையே சாரும். இன்று உலகத்தில் மட்டுமல்ல ; இலங்கை முழுதும் தமிழனை அகதியாக்கியதும் உங்களையே சாரும். இது பெரிய சாதனையல்ல.

  Reply
 • thenupiriyan
  thenupiriyan

  //புலிகளால் எதைச் செய்ய முடியுமோ அதை அவர்கள் நியாயப்படுத்த முனைவார்கள். தோஸ்து; அதைத்தான் எழுதுகிறார். அன்று தேர்தலில் வாக்களிக்க தடுத்தவர்கள் இன்று புலத்தில் வாக்குச் சாவடிகளுக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்கள்.// மாயா
  புலிகள் மட்டும் அல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதைத்தான் செய்கின்றது. 1982ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் பகிஸ்கரிக்க வேண்டும் என அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி கேட்டது. அதே கூட்டணி – கூட்டமைப்பு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும்படி கேட்டது.

  ஜனநாயகமுறையில் – தேர்தல் முறையில் நம்பிக்கையற்றுத்தான் டக்ளஸ் தேவானந்தா லெபனான் பயிற்சி பெற்ற ஆயுதம் தாங்கிப் போராடினார். பின்னர் அவரே தேர்தலில் போட்டியிட்டு அமைச்சருமானார். இவையெல்லாம் முரண்பாடாக மாயாவிற்குத் தெரியவில்லையா.

  //நாட்டில் அராசகம் செய்தவர்கள் இன்று சனநாயகம் குறித்து கதைக்கிறார்கள். படுகொலைகளை தயக்கமின்றிச் செய்தவர்கள் ; இன்று படுகொலைகளுக்கு நியாயம் தேடுகிறார்கள். அவர்கள் செய்தால் எல்லாம் சரி. அடுத்தவன் செய்தால் அனைத்தும் தப்பு// மாயா சிறிலங்கா அரசாங்கம் படுகொலைகளை செய்யவில்லையா. அவர்கள் சனநாயகம் பேசவில்லையா. கண்டிப்பதென்றால் இதனையும் கண்டியுங்கள்.

  //தரப்படுத்தலை வைத்து போராட்டம் தொடங்கினாங்களாம். யாழ்பாணத்தானுக்கு யுனி கிடைக்காததால்தானே? // மாயா
  தரப்படுத்தல் என்பதற்கு முன்னரே பல பிரச்சனைகள் தமிழ் மக்களுக்கு இருந்தன. முக்கியமாக சிங்களக் குடியேற்றம். இதன்தாக்கம் கிழக்கு மாகாணத்திலேயே இருந்தது. ஆனால் இதன் தாக்கத்தை இளைஞர்கள் உணரவில்லை. அரசியல்வாதிகள் மட்டும் அவ்வப்போது கூறிக் கொண்டிருந்தார்கள்.
  ஆனால் தரப்படுத்தலின் தாக்கம் போராடும் உணர்வைக் கொண்ட இளைஞர்களால் பெரிதும் உணரப்பட்டது. விடுதலைப் பேராட்டம் ஆரம்பிப்பதற்கு இது உடனடிக் காரணமே ஒழிய இதுமட்டும் அல்ல. தரப்படுத்தல் மட்டும் தான் தமிழ் மக்களின் பிரச்சனை என்றால் இன்று தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது. வன்னி மட்டக்களப்பு என்பவற்றிற்கு மட்டுமல்ல யாழ்பாணத்திற்கும் தரப்படுத்தல் வேண்டும். இன்று தரப்படுத்தல் இருப்பதனால்தான் யாழப்பாண மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லக்கூடியதாக உள்ளது.

  2009ம் ஆண்டுப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் அனுமதிக்கான ஆகக் குறைந்த புள்ளி கொழும்பு மாவட்டத்திற்கு 1.9671 காலி மாவட்டத்திற்கு 1.9248 மாத்தறை மாவட்டத்திற்கு 1.9656 அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு 1.9686 ஆனால் யாழ்ப்பாணத்திற்கு 1.7434.

  இதன்படி 1.91 புள்ளி எடுத்த சிஙகள மாணவன் பல்கலைக்கழம் செல்ல முடியாது. ஆனால் 1.74 புள்ளி எடுத்த யாழப்பாணத்து மாணவன் பல்கலைக் கழகம் செல்லலாம். எனவே தரப்படுத்தல் தமிழ் மாணவர்களுக்குத் தேவை. எனவே தரப்படுத்தலை அரசாங்கம் நிறுத்துமேயானால் அதற்கு எதிராக போராட்டம் நடாத்தவேண்டியநிலையிலேயே தமிழ் மாணவர்கள் உள்ளனர்

  தரப்படுத்தல் அல்ல தமிழ் மக்களின் பிரச்சனை. புலிகள் மீது வெறுப்பு கோபம் – யாழ்ப்பாணத்தான் மீது வெறுப்பு கோபம் மாயாவிற்கு இருக்கின்றது என்பது புலனாகின்றது. அது மாயாவின் தனிப்பட்ட விடயம். ஆனால் அதற்காக தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள். உங்கள் கருத்தின்படி பார்த்தால் புலிகள் இல்லை என்றால் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமே ஆரம்பித்திருக்க மாட்டாது – புலிகளின் அழிவோடு தமிழ் மக்களின் விடுதலை வேட்கையும் அழிந்துவிட்டது என்ற முடிவுகள் வந்துவிடும். இது தவறானது.

  Reply
 • மாயா
  மாயா

  //புலிகளின் அழிவோடு தமிழ் மக்களின் விடுதலை வேட்கையும் அழிந்துவிட்டது என்ற முடிவுகள் வந்துவிடும். இது தவறானது. – thenupiriyan //

  அன்று தேர்தலை பகிஸ்கரி என்று சொன்னவர்கள் மீண்டும் வாக்களி என்றால் வாக்களிக்க வேண்டும். டக்ளஸ் தேவானந்தா போராளியாக இருந்தாலும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் மிக குறைவு. எப்போதோ உண்மைகளை பேசத் தொடங்கிவிட்டார். அவரையும் துரோகி என போட்டுத் தள்ளத்தானே திரிந்தீர்கள்?

  எல்லாம் முடிந்த பிறகு நீங்களும் அரசியலுக்கு வர முயற்சியா? அது உங்கள் எழுத்துகளில் தெரிகிறதே?

  சிறீலங்கா அரசு ; அவர்களுக்கு எதிராக இருந்த தமிழரை கொன்றது. இது நாம் எதிர்பார்த்தது. நீங்கள் ; உங்களுக்கு ஆதரவான தமிழரை அல்லவா கொன்றீர்கள்? எதிரியின் குண்டுக்கும் ; நண்பனின் குண்டுக்கும் வித்தியாசமும் வேதனையும் வேறு? அவன் எதிரி. நீ நண்பன். உன் குண்டுதானே எம் மார்பில் அதிகம் பாய்ந்தது?

  வேற்று இயக்கங்களை விடுங்கள். கருணா ஆதரவு போராளிகளை என்ன செய்தீர்கள்? எப்படிக் கொன்றீர்கள்? மாத்தையாவின் ஆதரவாளர்களை என்ன செய்தீர்கள்? எப்படிக் கொன்றீர்கள்? மறந்து விட்டீர்களா?

  எதிரியிடமிருந்து காத்துக் கொள்வது இலகு. நம் உறவுகளே கொல்லத் தேடியபோது எங்கே போவது? இதுவே மனதை தாக்கியது? அதை நீங்கள் உணர மாட்டீர்கள்?

  தரப்படுத்தல் விளங்காத போது அதை வைத்து அரசியல் நடத்தினீர்கள். இன்று அதை உணர்ந்த போது அதை இல்லாமல் செய்வதற்கு எதிராக போராடுவதாக கதைக்கிறீர்கள்? வெளிநாடுகளில் வாழ்வோருக்கு பிழைப்பு நடத்த விடுதலை என்ற பெயரில் ஏதாவது போராட்டங்கள் தேவைப்படலாம்.

  அங்கே வாழும் மக்களுக்கு தாங்கள் வாழ ஒரு மர நிழலும் ; பசியாற ஒரு நேர உணவும் ; தூங்க நிம்தியும் இருந்தால் போதும். இதைத் தவிர வேறு எதையும் அவர்கள் கேட்கவில்லை. இதுவே உண்மை. அவர்களுக்கு மகிந்த இருந்தால் என்ன? பிரபாகரன் இருந்தால் என்ன? டக்ளஸ் இருந்தால் என்ன? ரணில் இருந்தால் என்ன?

  எது சரி ; எது தவறு என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் அந்த மக்கள். அதிகமான புலிகளை பிடித்துக் கொடுத்தவர்கள் அந்த மக்கள்தான் என்றால் அவர்களுக்கு யாரிடமிருந்து விடுதலை வேண்டும் என்பதை எம்மால் உணர முடியும்?அனைத்து தமிழரும் அரச படைகளால் சாகடிக்கப்படவில்லை.

  கடந்த காலங்களில் ; புலிகளிடம் சரணடைந்தவர்களில் எத்தனை பேர் தப்பினர்? படைகளிடம் சரணடைந்தவர்களில் எத்தனை பேர் தப்பினர்? இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை யாரும் சொல்ல வேண்டியதில்லை. அனைவருக்கு தெரிந்ததே.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //உரிமை மறுக்கப்பட்ட மக்கள் அகதியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அதைப்பற்ரி குரல் கொடுக்க உரிமை உண்டா இல்லையா? //சாந்தன்
  இங்கே நான் கேட்ட கேள்வியை புரிந்து கொண்டு பதில் தரவும். அதாவது அகதியாக வந்தவனுக்கு போராட உரிமை உண்டா இல்லையா? நன்றாக உண்டு வாழும் பாலஸ்தீனியனுக்கு உண்வு இல்லாமல் வாடும் மக்களுக்காக போராடும் உரிமை உண்டா இல்லையா? உண்டாயின் அதே உரிமை ஏன் ஈழத்தமிழ் அகதிக்கு இல்லை?

  //இல்லை எனில் புலிகளால் கொல்லப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்கும் உரிமையை வெளிநாட்டில் இருக்கும் அவர்கள் உறவினர்களுக்கும் இல்லை என்கின்றீர்களா?//சாந்தன்
  முன்பு புலிகளால் கொல்லப்பட்டவர்கள் யாவரும் துரோகிகள். இப்போ புலி இல்லை என்று சொன்னவுடன் புலிகளிற்கு எதிராக குரல் கொடுப்பதா? துரை..//
  எனது கேள்வி புலிஎதிர்ப்பாளருக்கு அவ்வுரிமை இல்லையா என்பதே? நான் புலி ஆதரவாளர்கலைப்பற்றிச் சொல்லவில்லை!

  Reply
 • thuai
  thuai

  //இங்கே நான் கேட்ட கேள்வியை புரிந்து கொண்டு பதில் தரவும்//சாந்தன்
  அகதியாக வந்தோரிற்கு உருமைக்காக போராட உருமையுண்டு. ஈழத்தமிழர் அந்ததந்த நாட்டு குடியுருமைக்காக அந்தந்த நாட்டு மொழிகளைப் கற்கும்போதும் அவர்களின் மொழிப்பற்று எங்கே? தேயிலைத் தோட்டத்தொழிலாளரும் தமிழர்தான், இராமேஸ்வரத்தில் முகாம்களில் இருப்போரும் தமிழர்தான். மேல்நாடுகளில் அகதியென வந்து சேர்வோரும் தமிழர்தான். எதற்கு பணம் உள்ள நாடுகளில் மட்டும் உருமைக்கு குரல்? புலிக்கொடி? பண வசூலுக்காகவா? அல்லது மக்களின் அக்கறையிலா?
  //எனது கேள்வி புலிஎதிர்ப்பாளருக்கு அவ்வுரிமை இல்லையா என்பதே?//சாந்தன்
  இந்தக்கேள்விக்கு புலம்பெயர் நாடுகளில் கம்பி எண்ணும் புலியின் முகவர்கள் தான் பதில் தரவேண்டும்.-துரை

  Reply
 • நந்தா
  நந்தா

  மாயாவின் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். அவர் கூறும் “யாழ்ப்பாணத்தான்” கதைகள் உண்மையானவை. தரப்படுத்தல் முதலில் வந்தது என்னுடைய அட்வான்ஸ்ட் லெவல் மாணவர்களுக்குத்தான். தரப்படுத்தலுக்கெதிராக யாழ்ப்பாணத்தில் மாத்திரமே கூச்சல் எழுந்தது. மற்றைய தமிழ் மாவட்டங்களில் அந்த சத்தமே எழவில்லை.

  தரப்படுத்தலுக்கெதிராக நடத்தப்பட்ட ஊர்வலத்தில் அன்று மகாஜனக் கல்லூரியில் இருந்து மூன்றே மூன்று மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. நான், மகேந்திர ரத்தினம், தெய்வேந்திரன் ஆகியோர் பாடசாலைக்கு இருந்தோம். எங்களைத் துரோகிகள் என்று சந்ததியார் உட்பட பலர் எங்களை நோக்கி சத்தமிட்டனர். அவர்களுக்குநான் சொன்ன பதில் “தரப்படுத்தலினால் பொருளாதரத்தில் பின் தங்கியுள்ள வன்னி, திருமலை, மட்டுனகர் மாணவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்பதுதான்.

  ஒருசில பலகலைக் கழக இடங்களை யாழ்ப்பாணத்துக்கு வெளியே இருக்கும் தமிழர்களின் நன்மை கருதி ஆதரிக்க அல்லது தங்களின் இழப்புக்களைத் தியாகம் செய்ய முடியாத யாழ்ப்பாணிகள் ஆயுதப் போராட்டம் என்று தொடங்கியது யாருக்காக?

  இந்த தரப்படுத்தலில் 100 அல்லது 200 யாழ்ப்பாணிகள் பல்கலைக்கழகம் போக முடியாது என்பதை “தமிழ் பிரச்சனை” என்று அளந்து யாரைப் பலி கொடுத்தனர் என்பதை இன்று வரலாறு சொல்லும்.

  இந்த யாழ்ப்பாணத்தான் மென்டாலிட்டி எல்லா இயக்கங்களிலும் தாராளமாக வேரூன்றியிருந்தது.

  தமிழ் ஈழம் என்று கத்திய யாழ்ப்பாணிகள் போராட்டம் தொடங்கி “குண்டுகள்” விழத் தொடங்கியவுடன் என்ன செய்தார்கள்? தங்களுடைய உறவுகளைப் போர் முனைக்கு அனுப்புவதற்குப் பதிலாக ஜேர்மனிக்கும் மற்றும் நாடுகளுக்கும் அனுப்பத் தொடங்கினார்கள்.

  அதாவது கொள்ளி எடுத்துக் கொடுத்துவிட்டு எரியும் கூரையில் கிடுகு பிடுங்கினார்கள். மக்கள் ஆதரவு என்பது கிடையாத போராட்டம் என்பது குண்டுகள் விழத் தொடங்கிய சிலநாட்களிலேயே தெரிந்து போனது.

  வெளினாடுகள் வந்த யாழ்ப்பாணிகள் என்ன செய்தார்கள்? அங்கும் அதே புரட்டுக்களின் மூலம் தமிழர்களிடம் கொள்ளையடித்தனர். யாழ்ப்பாணிகளின் வரலாற்றை நோக்கும் போது போர்த்துகீசரோடும் ஒல்லாந்தர்களோடும் வந்து யாழ் மண்ணில் கொள்ளையிட்டவர்களின் பரம்பரைகள்தான் இன்று “பாரம்பரிய” பூமி என்று அளக்கிறார்கள்.

  இவர்களுக்கு முன்னரே புத்தளம், சிலாபம் பகுதிகளில் தமிழர்கள் வாழுகிறார்கள். அவர்களை இந்த யாழ்ப்பாணிகள் மதிப்பது கிடையாது. ஏனென்றால் யாழ்ப்பாணிகளின் எசமானர்களான வெள்ளையர்களும் பாதிரிகளும் என்ரென்றும் இருப்பார்கள் என்று நம்பினார்கள்.

  அதனால்த்தான் இந்த யாழ்ப்பாணிகளிடம் கடைந்தெடுத்த “அடிமை” விசுவாசம் இன்றும் நிலவுகிறது. அதனை முதலாக்குவதன் மூலம் வெள்ளையர்கள் இன்னமும் இலங்கையை தங்கள் காலடியில் வைத்துக் கொள்ளலாம் என்று கனவு காணுகிறார்கள்.

  யாழ்ப்பாணிகளும் வெள்ளையர் காலத்து சலுகைகள் கிடைக்கும் என்று வெள்ளையர்களுக்கு வக்காலத்து வாங்கிறார்கள். இவர்களின் பிரச்சனை “கூலிப்” பிரச்சனைதான். மண்ணை நேசிக்கிறொம் என்பதை விட மண்ணை யாருக்கு விற்றுக் காசாக்கலாம் என்று இன்னமும் அலகிறார்கள். தமிழ் என்று இவர்கள் முழங்குவது தமிழரை விற்றுக் காசாக்கத்தான் என்பதை இன்றும் நம்புகிறேன்!

  யாழ்ப்பாணத்தான் பிரச்சனைகள் “தமிழர்” பிரச்சனைகள் என்று குதிக்கத் தேவையில்லை.

  குறிப்பு: என்னுடைய பரம்பரைகள் நல்லூரில் ஆயிரம் வருடங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்டவர்கள்.

  Reply
 • நந்தா
  நந்தா

  தேனுப்பிரியன்:
  குடியேற்றங்கள் யு என் பி அரசினால் மேற் கொள்ளப்பட்டன. கிளினொச்சிக்கு தீவுப் பகுதி மக்களைக் கொண்டு சென்று குடியேற்றம் செய்ததும் அதெ திட்டங்களின் கிழ்த்தான் என்பதை தெரிந்து கொள்வது நல்லது.

  ஆனால் யு என் பி க்கு எப்பொழுதும் தமிழ் கட்சிகள் முட்டுக் கொடுக்கின்றன. அது ஏன்? யு என் பி யும் தமிழ் கட்சிகளும் வெள்ளையர்களின் அடிமைகள் என்ற காரணத்தினாலா?

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //… யு என் பி யும் தமிழ் கட்சிகளும் வெள்ளையர்களின் அடிமைகள் என்ற காரணத்தினாலா?..//
  தமிழில் தேசியகீதம் பாடியபோது வெறுத்து வெளியேறிய ஸ்ரீமா அம்மையாரைக் கொண்ட கட்சி என்பதாலாக இருக்கலாம்! நான் சொல்லவில்லை இதனை மஹிந்தாவே அமைச்சரவைக் கூட்டத்தில் சொல்லி இருக்கிறார்.

  //..அகதியாக வந்தோரிற்கு உருமைக்காக போராட உருமையுண்டு. ஈழத்தமிழர் அந்ததந்த நாட்டு குடியுருமைக்காக அந்தந்த நாட்டு மொழிகளைப் கற்கும்போதும் அவர்களின் மொழிப்பற்று எங்கே?…//
  அந்தந்த நாட்டு மொழிகளை அவர்கள் கற்கவேண்டும். காரணம் அந்த மொழிகள் அவர்கள் மேல் திணிக்கப்படவில்லை மற்றும் அவர்கள் வந்து குடியேறிய நாடுகள் அவை. ஆனால் ஸ்ரீலங்கா அப்படி அல்லவே. சிங்களம் வலிந்து திணிக்கப்படுகிறது. மேலும் அது நான் பிறந்த நாடு. நீங்கள் ஸ்ரீலங்காவின் வந்தேறு குடிகள் என உங்களை நினைத்துக் கொண்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது!

  //..தேயிலைத் தோட்டத்தொழிலாளரும் தமிழர்தான், இராமேஸ்வரத்தில் முகாம்களில் இருப்போரும் தமிழர்தான். மேல்நாடுகளில் அகதியென வந்து சேர்வோரும் தமிழர்தான். எதற்கு பணம் உள்ள நாடுகளில் மட்டும் உருமைக்கு குரல்? …//
  நீ ஏன் உரிமைக்குரல் கொடுக்கவில்லை என அந்தந்த நாட்டில் உள்லவனைத்தான் கேட்கவேண்டும். அவன் கேட்கவில்லை என்றால் நானும் பேசாமல் இருக்க வேண்டுமா? நல்ல லொஜிக்! மேலும் தேயிலைத்தோட்டம், ராமேஸ்வரம் அகதி முகாம் இரண்டும் ஸ்ரீலங்கா போலத்தான். பாரதி சொன்னது போல் “இம்மென்றால் வனவாசம் ஏன் என்றால் சிறைவாசம்”. அறியாதது போல் பேசுகிறீர்களே?

  //எனது கேள்வி புலிஎதிர்ப்பாளருக்கு அவ்வுரிமை இல்லையா என்பதே?//சாந்தன்
  இந்தக்கேள்விக்கு புலம்பெயர் நாடுகளில் கம்பி எண்ணும் புலியின் முகவர்கள் தான் பதில் தரவேண்டும்.-துரை//
  ஏன் உங்களுக்கு இருக்கும் உரிமையை அவர்களிடம் தாரை வார்க்கிறீர்கள்? அதுவும் கம்பிக்குள் இருப்போருக்கு!

  Reply
 • thenupiriyan
  thenupiriyan

  தரப்படுத்தல் ஆரம்பிப்பதற்கு முதல் வருடத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கத் தெரிவானவன் நான். அன்றிலிருந்து இன்றுவரை தாய்மண்ணிலேயே தொடர்ந்து வாழ்பவன். போராட்டத்தில் ஈடுபட்டவன். எந்தவொரு இயக்கத்தையும் தனித்து நேசித்தவன் அல்ல. விடுதலைப் போராட்டத்தை மட்டும் நேசித்தவன். இந்திய இராணுவத்தின் சிறை மண்டையன் குழு சுரேஸ் பிரேமச்சந்திரனின் சிறை டக்ளஸ தோவானந்தாவின் சிறை மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சிறைகள் என எல்லாத் துன்பங்களையும் அனுபவித்தவன். போராட்டத்தை ஆதரித்தது என்ற ஒரே காரணத்திற்காக நான் எனது மனைவி பிள்கைள் எனக் குடும்பத்தோடு சிறையிருந்த அனுபவமும் உண்டு. வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து பெறுவதற்கு அனைத்துத் தகுதிகளும் ஆவணங்களும் இருந்தும் தாய் மண்ணை விட்டுச் செல்வதில்லை என்ற வைராக்கியத்தோடு இங்கு குடும்பத்தோடு இருக்கின்றோம். நானும் யாழப்பாணத்தைச் சேர்ந்தவன்தான்.

  இங்கு பிரதேச வாதம் பேசாதீர்கள். ஏதோ யாழ்ப்பாணத்தவர்கள் மட்டும்தான் வெளிநாடுகள் சென்றவர்கள். மற்ற அனைவரும் இங்கேயே இருக்கின்றார்கள் என்பதுபோலத்தான் எல்லோரும் எழுதுகின்றீர்கள். உயிர்ப் பயம் என்பது யாழப்பாணத்தவர்களுக்கு மட்டும் உரியதல்ல. மனிதர்களுக்கே உரியது.

  // இந்த யாழ்ப்பாணிகளிடம் கடைந்தெடுத்த “அடிமை” விசுவாசம் இன்றும் நிலவுகிறது//
  இது யாழ்ப்பாணத்தவரின் பண்பல்ல. தமிழனின் பண்பு. சேர் பொன் இராமநாதன் காலம் தொடக்கம் இதுதான் நடக்கின்றது. இதனால்தான் அன்று பிரித்தானிய அரசாங்கம் தமிழர்களை அதிகளவில் அரசாங்க சேவையில் அமர்த்தியது. தங்களை யார் ஆள்கின்றார்களோ அவர்களுக்கு அடிமை விசுவாசமாக இருப்பது தமிழர்களின் ஒட்டுமொத்தப் பண்பு.

  //டக்ளஸ் தேவானந்தா போராளியாக இருந்தாலும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் மிக குறைவு. எப்போதோ உண்மைகளை பேசத் தொடங்கிவிட்டார்// மாயா
  எல்லோராலும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற உண்மையை ஏற்றுக்கொள்கின்றீர்கள். யார் நிறையச் செய்தது யார் குறையச் செய்தது என்பதுதான் இங்கு பிரச்சனை. எனவே ஏசுநாதர் கூறியது போல முதலாவது கல்லை எறிவதற்கு இங்கு யாருக்குமே தகுதி இல்லை. எப்போதோ உண்மைகளை பேசத் தொடங்கிவிட்டார் என்பதன்மூலம் முன்னர் அவர் பொய் கூறியிருக்கின்றார் என்பது தெரிகின்றது.

  ஒரு விடயத்திற்கு மட்டும் எனக்கு விளக்கம் தாருங்கள். நீங்கள் போராட்டத்தை ஆரம்பித்தபோது அதனை ஆதரிக்காத மக்களை எல்லாம் அன்று துரோகிகள் என்று திட்டினீர்கள். போராளிகளை அரசாங்கத்திற்குக் காட்டிக் கொடுத்தவர்களுக்குத் தண்டணை வழங்கினீர்கள்.

  பின்னர் நீங்கள் போராட்டத்தைக் கைவிட்டு அரசாங்கத்தோடு இணைந்து செயற்படும்போது போராட்டத்தை ஆதரிப்பவர்களைத் துரோகிகள் என்றீர்கள். போராளிகளை அரசாங்கத்திற்குக் காட்டிக் கொடுக்காதவர்களுக்கு தண்டணை வழங்கினீர்கள். இது என்ன நியாயம்?

  1987க்கு முன்னர் அனைத்து இயக்கங்களும் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டவர்களுக்குத் தண்டணை வழங்கினார்கள். போராட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்டவர்களுக்கு அரசாங்கம் தண்டணை வழங்கியது.

  1987க்குப் பின்னர் புலிகளுக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு ஏனைய இயக்கங்களும் ஏனைய இயக்கங்களுக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு புலிகளும் தண்டணை வழங்கினார்கள். ஒருவகையில் பார்த்தால் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய மக்கள் தண்டிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

  ஆனால் அன்று அரசாங்கத்தின் பக்கமும் சாராமல் பேராட்டத்தின் பக்கமும் சாராமல் தானுண்டு தன்னுடைய குடும்பம் உண்டு என்று சுயநலத்தோடு இருந்தவர்கள்தான் அன்றும் இன்றும் யாராலும் பாதிப்பிற்குள்ளாகாமல் நிம்மதியாக வாழ்கின்றனர். இவர்கள் தான் புத்திசாலிகள். இப்போராட்டத்தை ஆதரித்த அனைவருமே முட்டாள்கள்.

  // குடியேற்றங்கள் யு என் பி அரசினால் மேற் கொள்ளப்பட்டன. கிளினொச்சிக்கு தீவுப் பகுதி மக்களைக் கொண்டு சென்று குடியேற்றம் செய்ததும் அதெ திட்டங்களின் கிழ்த்தான் என்பதை தெரிந்து கொள்வது நல்லது.// நந்தா
  தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ் மக்களை குடியமர்த்துவதனால் அப் பிரதேசத்தின் இன விகிதாசாரம் மாற்றமடையப் போவதில்லை. சிஙகளப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு குடியேற்றத்திட்டத்திலாவது தமிழ்ப் பிரதேசத்திலிருந்து மக்களை அழைத்துச் சென்று குடியமர்த்தியதற்கு ஒரு உதாரணத்தை உங்களால் காட்டமுடியமா? ஆனால் தமிழ் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத்திட்டங்களில் தென்னிலங்கையிலிருந்து சிங்கள மக்களை குடியமர்த்தியதன்மூலம் தமிழ்ப் பிரதேசங்களின் இனவிகிதாசாரத்தை மாற்றியமைத்த வரலாறு உங்களுக்குத் தெரியும்தானே.

  //ஆனால் யு என் பி க்கு எப்பொழுதும் தமிழ் கட்சிகள் முட்டுக் கொடுக்கின்றன. அது ஏன்? // நந்தா
  இந்த நாட்டில் வெளிப்படையாக இனவாதத்தைப் பேசிய முதலாவது கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சியாகும். தான் பதவிக்கு வந்தால் 24 மணி நேரத்தில் தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வருவேன் என்று கூறி அதனைச் செய்தும் காட்டியவர் பண்டாரநாயக்கா. மேலும் முதலாவது தமிழர் சிங்களவர் இனக்கலவரம் நடைபெற்றதும் (1958) இவ் ஆட்சிக்காலத்திலேயே. எனவே இரகசியமாக சதித்திட்டங்களைச் செய்து தமிழர்களின் இருப்பை அழித்த யு என் பி ஒரு பக்கம் அதனை வெளிப்படையாகவே செய்த சுதந்திரக்கட்சி ஒரு பக்கம். தமிழ் மக்களின் தெரிவு யார்?

  Reply
 • மாயா
  மாயா

  //தங்களை யார் ஆள்கின்றார்களோ அவர்களுக்கு அடிமை விசுவாசமாக இருப்பது தமிழர்களின் ஒட்டுமொத்தப் பண்பு.//
  புலத்திலும் இதுதான் நடக்கிறது. பிறகேன் ஆயுதப் போராட்டம்? அழிவுக்கா?

  //எப்போதோ உண்மைகளை பேசத் தொடங்கிவிட்டார் என்பதன்மூலம் முன்னர் அவர் பொய் கூறியிருக்கின்றார் என்பது தெரிகின்றது.// தவறு என்று தெரிந்தும் அதைத் தொடர்ந்து செய்பவன் நல்லவனா? அதைத் திருத்திக் கொள்பவன் நல்லவனா? நான் டக்ளசின் ஆள் இல்லை. ஆனாலும் ஒன்று மட்டும் தெரியும். டக்ளசை இளம் வயதில் இயக்கத்துக்குள் இழுத்தவர் லண்டனில் இருந்து வந்த ரத்னசபாபதி. அவரே டக்ளசை லெபனான் பயிற்சிக்காக அனுப்பினார்.

  இனவாதத்தை பற்றி பேசியது யு.என்.பீதான். அதை முந்திக் கொண்டு வெளியே பேசியவர் பண்டா. அதனால் யுஎன்பீ பேச வேண்டியது தாமதமானது. எல்லோரும் ஒன்றுதான். அதை அறியாத தமிழர் யுஎன்பீயை தூக்கி வைத்துக் கொண்டாடினர். நானும்தான்.

  போட்டுத் தள்ளுவதற்கே போராட்டம் உறுதுணையானது. எதையாவது சாதித்தது உண்டா? எதையாவது வாங்கித் தந்தது உண்டா? ஆம் என்றால் தொடரலாம். இல்லையென்றால் ஏன் தொடர வேண்டும்? மக்களுக்கு மரண சாசனம் எழுதவா?

  புலத்துக்கு வந்தவன் கோப்பை கழுவினாலும் ; படித்து வேலை செய்தாலும் நிம்மதியாக தூங்குகிறான். அங்கு போராடிவனுக்கோ ; அங்கே வாழ்பவனுக்கோ தூக்கமுமில்லை. நிம்மதியும் இல்லை. வாழ்வும் இல்லை. தினமும் மரணத்துக்காக காத்திருக்கிறான். இதுதான் போராட்டம் தந்த கொடை. புலத்தில் அந்த மக்களை வைத்து வியாபாரம் செய்வோர் அதிகம். அவர்களது பொழுது போக்கே எவனாவது மண்டையை போட்டால் ; அதை வைத்து பேசலாம் ; காசு புடுங்கலாம் என்பதே. கொடுப்பவன் ஏமாளி . புடுங்குபவன் புத்திசாலி.

  சிறீலங்கா எமது நாடு இல்லை என்று சொன்னவன் ; இன்று சிறீலங்கா தேசிய கீதத்தை தமிழில் பாட வேண்டும் என அடிபடுகிறான். அந்த நாடே உனது இல்லையென்றால் அவன் சிங்களத்தில் பாடினால் என்ன? உருதுவில் பாடினால் என்ன? நீ பாடாமல் இருக்க வேண்டியதுதானே?

  1970களில் என்று நினைக்கிறேன். எல்லா தியெட்டர்களிலும் ஆரம்பத்தில் தேசிய கொடியோடு தேசிய கீதம் திரையில் வரும். அதிகமானோர் எழுந்து நிற்பதேயில்லை. பிறகு அதை நிறுத்தினார்கள். அதற்காக எவனாவது போராட்டமா நடத்தினான். இலங்கையில் அநேகமானோருக்கு தேசிய கீத வரிகளே தெரியாது. அந்த அளவு தேசப் பற்று. அரசியல்வாதிகளுக்கு பிரச்சனையே தவிர சாதாரண மக்களுக்கு பிரச்சனையே இல்லை. சிங்களவரும் தமிழரும் பிரச்சனையே இல்லாமல் சும்மா இருக்கிறார்கள். லண்டனில் மகிந்தவுக்கு எதிர்த்ததுக்காக இரண்டு சிங்கள அரசியல்வாதிகளைத்தான் தாக்கினார்கள். எந்த தமிழனையும் தாக்கவில்லை. நாடு ரொம்ப மாறிப் போச்சு.

  கொஞ்ச நாளில கொழும்புக்குள்ள ஆட்டோ ஓட்ட தடையாம். சேரி போன்ற சிலம் ஏரியாக்களை அகற்றப் போறாங்களாம்……… இப்படி இன்னொரு பிசாசு தலை காட்டப் போகுது. அடுத்த டோக் அதுவாதான் இருக்கும்.

  Reply
 • நந்தா
  நந்தா

  தமிழ் பிரதேசங்கள், சிங்களப் பிரதேசங்கள் என்பது பெரும் மோசடி. எந்த அடிப்படையில் இந்த பிரதேசங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன?

  1944 ஆம் அண்டு சிங்களம் மட்டும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசகரும மொழியாக்கப்பட வேண்டும் என்பது மறந்து போனது எப்படி? அதற்கு “தமிழும்” என்று சேர்த்து பிரேரணையத் திருத்தியது மட்டுனகர் உறுப்பினர் தம்பிமுத்து என்பதும் “யாழ்ப்பாணிகள்” மவுனம் காத்த வரலாறுகள் எப்படித் தெரியாமல் போனது?

  ஜே.ஆர். ஜெயவர்த்த்னவின் கண்டி யாத்திரை பற்றித் தெரியவில்லையா? அதுவே 1958 கலவரத்துக்கு முதலில் வித்திட்டது. அது மாத்திரமல்ல 1956 ஆம் ஆண்டுத் தேர்தலில் யு என் பி யும் தனிச் சிங்களம் என்றுதான் போட்டியிட்டனர்.

  பதவியா குடியேற்றத்தில் முதலில் குடியமர்த்தப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதும் தெரியாமல் குடியேற்றக் கதைகளை சொல்லி என்ன பயன்?
  மலையக மக்களின் குடியுரிமையை யு என்பி பறித்தது என்று கட்சி தொடங்கிய செல்வனாயகம் அந்த மலையக மக்களுக்கு என்ன செய்தார்? பின்னர் அதே செல்வனாயகம் 1965 இல் அதே யு என்பி யுடன் சேர்ந்து என்ன சாதித்தவர்?

  செல்வனாயகத்தின் கட்சி யாழ் மக்களை குடியேற்றங்களுக்குப் போகும்படி எந்தக் காலத்திலும் கோரியது கிடையாது. செல்வனாயகத்தின் உறவினர்கள் லண்டனில்த்தான் குடியேறினார்கள்.

  ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் குடியேற்றங்கள் நடைபெறவில்லை என்பதை ஒரு பொழுதும் இந்த தமிழ் சூரர்கள் சொன்னது கிடையாது. இறுதியாக அதே ஜே.ஆர். ஜெயவர்த்தன காலத்தில் 1983 கலவரம்நடந்தது. அதன் பின்னரும் அல்லது இன்றும் தமிழர்கள் யுஎன்பி யுடன் வாலில் தொங்குவதை எப்படி நியாயம் என்று கருத வேண்டும்?

  Reply
 • Kathir
  Kathir

  Dear Comrades, Mr.Vickramabhaku Karunaretna is a pro imperialist stooge and a supporter of the Mafia and Criminal LTTE or Tamil Tiger.He is never ever condemned the massacre of Comrade Annamalai who is the leader of the NSSP of the Jaffana branch .I hope that it is good enough to understand his pro-imperialist political stand and his pro LTTE political stand.
  He is also one of the enemy of the people of Srilanka.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  /….தமிழ் பிரதேசங்கள், சிங்களப் பிரதேசங்கள் என்பது பெரும் மோசடி. எந்த அடிப்படையில் இந்த பிரதேசங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன?…./
  1958 இல் இருந்து இனக்கலவரங்கள் நடைபெறும் போது தமிழர்களை கப்பலில் எங்கே அனுப்பிவைப்பார்கள், ஆயுதப்போராட்டம் நடைபெறும் போது எங்கெங்கே வானில் இருந்து குண்டு வீசுவார்கள் போன்ற அடிப்படையில் இருக்குமோ நந்தா?

  Reply
 • thenupiriyan
  thenupiriyan

  //தமிழ் பிரதேசங்கள், சிங்களப் பிரதேசங்கள் என்பது பெரும் மோசடி. எந்த அடிப்படையில் இந்த பிரதேசங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன?// நந்தா
  தென்னிலங்கையில் இனக் கலவரங்கள் நடைபெற்றபோது தமிழ் மக்களை அரசாங்கமே கப்பலேற்றி வடக்குக்கு அனுப்பிவைத்தது எந்த அடிப்படையில்?
  கொழும்பில் லொட்ஜில் இருந்த தமிழ் மக்களை இரவோடிரவாக இரவுடையோடு பஸ்களில் ஏற்றி வவுனியாவில் கொண்டுவந்து இறக்கிவிட்டது எந்த அடிப்படையில்?

  //1944 ஆம் அண்டு சிங்களம் மட்டும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசகரும மொழியாக்கப்பட வேண்டும் என்பது மறந்து போனது எப்படி// நந்தா
  ஜே ஆர் சொன்னார். பண்டா செய்தார். சொல்லிலும் பார்க்க செயல்தானே தாக்கம் கூடியது.

  Reply
 • thurai
  thurai

  //அந்தந்த நாட்டு மொழிகளை அவர்கள் கற்கவேண்டும். காரணம் அந்த மொழிகள் அவர்கள் மேல் திணிக்கப்படவில்லை மற்றும் அவர்கள் வந்து குடியேறிய நாடுகள் அவை. //சாந்தன்
  60 வயதுப் பாட்டியும் புலம்பெயர் நாடுகளில் கட்டாய மொழிப்பயிற்சிக்கு போவது தெரியாதா? இலங்கைய்லிருந்து சில வெளிநாடு வருவோரும் அந்த நாட்டுப்பாசைத் தேர்ச்சி அடைய வேண்டும். இதேபோல் பல ஆண்டுகளிர்கு முன் வவுனியாவிற்கு அப்பால் செல்லும் தமிழர்கள் சிஙகளம் கற்க வேண்டும என சட்டமிருந்திருந்தால் இப்போ நிலமை வேறு.

  ஆங்கிலேயர் இலங்கைத்தமிழர்களின் தனி ஆட்சியை ஒழித்தவர்களாயினும், காலிவரை தமிழரிற்கும் சொந்தமாக்கிவிட்டே சென்றுள்ளனர். இதனை சரிவர பாவிக்கத்தெரியாத இனமே தனிநாடு கேட்டு தன் இனத்தையே அழித்த ஈழத்தமிழினம். — துரை

  Reply
 • thurai
  thurai

  //மேலும் தேயிலைத்தோட்டம், ராமேஸ்வரம் அகதி முகாம் இரண்டும் ஸ்ரீலங்கா போலத்தான். பாரதி சொன்னது போல் “இம்மென்றால் வனவாசம் ஏன் என்றால் சிறைவாசம்”. அறியாதது போல் பேசுகிறீர்களே?//சாந்தன்

  அப்போ, சீமான், வைகோ, நெடுமாறன் எங்கிருந்து குரல் கொடுக்கின்றாரகள். அவர்களிற்கு அவர்களின் தொப்புக் கொடிகள் புலம்பெயர் நாடுகளில் புலிக்கொடி தூக்கி பணம் கொடுக்கும் எசமான்மார்தானா? தேயிலைத் தோட்டத்து தொழிலாலர் தமிழரில்லையா? அவர்களிற்கு பிரச்சினைகள் இல்லயா?

  //ஏன் உங்களுக்கு இருக்கும் உரிமையை அவர்களிடம் தாரை வார்க்கிறீர்கள்? அதுவும் கம்பிக்குள் இருப்போருக்கு//சாந்தன்
  கம்பிக்குள் தாங்களாகவா சென்றார்கள் புலம்பெயர் தமிழ்ரால்தான் என்பதை இன்னமும் அறியவில்லயா? அல்லது புலி எதிர்ப்பாளர் வேறு புலம்பெயர் தமிழர் வேறா?– துரை

  Reply
 • நந்தா
  நந்தா

  பண்டாவின் மொழிக் கொள்கைதான் தங்களுடையதும் என்று யுஎன்பி சொல்லித் தேர்தலில் தோற்றுப் போனது. அதுசரி 1965-1970 காலத்தில் “தமிழ் பிரச்சனை” அல்லது மொழிப் பிரச்சனை எங்கே போனது?

  பிரேமதாசவுடன் கொண்டாடும் பொழுது பிரபாகரன் இந்த “தமிழ் பிரச்சனைக்கு” முடிவு கட்டாமல் போன காரணம் என்ன? பிரபாகரன் அப்பொழுது தமிழர்களுக்கு முடிவு கட்டுவது, இந்தியாவுக்கு எப்படி மூக்கை உடைப்பது என்று அலந்தது கொண்டிருந்தான்.

  யுஎன்பி யுடன் கொண்டாடும் பொழுது தமிழ் பிரச்சனை காணாமல் போகும் மர்மம் என்ன?

  வெள்ளவத்தையை என்ன பண்ணப் போகிறீர்கள்? மலையகத் தமிழர்களை “கண்டுக்க” வேண்டாம் என சொல்லுகிறீர்களா? கலவரங்களின் அடிப்படையில் பிரதேசங்களா? அது சரி! உங்கள் கருத்துப்படி பார்த்தாலும், பிறந்த ஊரை விட்டு எதற்காக அடுத்தவனின் ஊரில் வயிறு கழுவ வேண்டும்? தனினாடு கேள்க்கும் பலமே “என்னுடைய ஊரில் எல்லாம் இருக்கிறது” என்பதுதானே அர்த்தம். அப்படி எல்லாம் இருந்த யாழ்ப்பாணிகள் எதற்காக யாழ்தேவி ஏறி சிங்களவர்கள் இருக்கும் ஊர்களுக்குப் போக வேண்டும்?

  சுழிபுரத்தில் குண்டு விழ ஜேர்மனிக்கு வந்து அகதி என்று கதயளந்தவன் புங்குடுதீவார். அதுவே பெரிய மோசடி. சிலவேளகளில் வெள்ளையர்களின் ஊர்களுக்கு குடும்பம், சாதி அனைத்தும் வரும் வரையில் “தமிழீழப் போராட்டம்” தொடருமோ?

  Reply
 • thurai
  thurai

  அன்பின் தேனுப்பிரியன்,
  தங்களின் பின்னோட்டங்களிலிருந்து தங்களைப் பற்ரி அறிந்து கொண்டேன். உங்களின் நிலைப்பாடு போற்ரத்தக்கது. காலங்களின் மாற்ரமும் சூழ்நிலகளின் மாற்ரமும் தமிழ் மக்களின் தலை விதியை மாற்ரிக்கொண்டிருக்கினற்னவே தவிர தமிழரின் மாற்ரங்கள் அல்ல. தமிழர்கள் தங்களைத் தாங்களே திருத்தாவிட்டால் யாராவது வந்து திருத்துவார்கள். இதுவே இன்று தமிழர்களிற்கு நடந்துவிட்டது.

  யாராவது விடுதலை பெற்றுத்தருவார்கள் நாம் அனுபவிப்போம் என்று இருந்ததாலேயே இந்த நிலைமை. தமிழர்களின் இந்த மனநிலை சிங்கள அரசு தமிழர்களை ஏமாற்ரியதை விட தமிழர்களை தமிழர்களே ஏமாற்ர வழிவகுத்துவிட்டது. இலங்கைத் தமிழர்களிடம் தேவை ஓற்றுமை. இது அரசியலில் மட்டுமல்ல அனறாட வாழ்வினிலும் தேவை.

  சிஙளவர்களை பகைவராக்கி செய்யும் அரசியல் தமிழரிடம் அகற்ரப்ப்ட வேண்டும். இதேபோல் சிங்கள மக்களிடம் தமிழர்கலைப் பகைவராக்கி சுயநல அரசியல் புரிவது தவிர்க்கப்படவேண்டும்.

  பல விடயங்களை இலங்கையில் வாழும் மக்க்களே செயற்படுத்த வேண்டும். சண்டையை யாராவது தலையிட்டு நிறுத்தலாம், ஆனால் சமாதனத்தை அவர்களே தாமாகவே உருவாக்க வேண்டும். சமாதானமாக வாழ்ந்து கொண்டே பிரச்சினகளைத் தீர்க்க வேண்டுமே தவிர பகைமைகளை வளர்ப்பதன் மூலம் எங்களை நாங்களே அழித்து விடுவோம்.– துரை

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //….60 வயதுப் பாட்டியும் புலம்பெயர் நாடுகளில் கட்டாய மொழிப்பயிற்சிக்கு போவது தெரியாதா?…//
  என்ன சொல்கிறீர்கள்? கட்டாய மொழிப்பயிற்சியா? துரை அவர்களே வீட்டில் தனியாக இருக்கும்போது ஏதாவது நடந்தால் பொலிசுக்குச் சொல்ல அம்புலன்ஸ்சுக்கு கூப்பிட போன்றவற்றுக்கு தேவையான இரண்டு வசனம் பத்துச் சொல்லு படியுங்கோ கட்டாயம் எனச் சொன்னதை எல்லாம் கடடாய மொழிப்பயிற்சி என ‘சிங்களம் மட்டும்’ உடன் ஒப்பிடுகிறீர்களே?
  சிற்ரிசென்சிப் கேள்விகள் 10க்கு நாட்டின் அரசியலமைப்பு, ஆட்சிமுறை, சரித்திரம் பற்றி 10 வசனம் தெரிந்திருக்க வேண்டியதனை எல்லாம் ‘சிங்களம் தேர்ச்சி பெற்றால்தான் சொந்த (சகோதர) பிரஜைகளுக்கே வேலை வாய்ப்பு எனச் சொல்லும் அரசுடன் ஒப்பிடிகிறீர்களே? இதுதான் விவாதம் செய்யும் அழகா?

  //…இலங்கைய்லிருந்து சில வெளிநாடு வருவோரும் அந்த நாட்டுப்பாசைத் தேர்ச்சி அடைய வேண்டும். இதேபோல் பல ஆண்டுகளிர்கு முன் வவுனியாவிற்கு அப்பால் செல்லும் தமிழர்கள் சிஙகளம் கற்க வேண்டும என சட்டமிருந்திருந்தால் இப்போ நிலமை வேறு….// அதேபோல வவுனியாவுக்கு இப்பால் வரும் சிங்களவர்கள் தமிழில் தேர்ச்சிபெற வேண்டும் என்கின்ற நிலை இருந்தாலும் நன்றாக இருந்திருக்கும். சிங்கள ‘ஸ்ரீ’ யை விட்டுவிட்டீர்களே?

  //…ஆங்கிலேயர் இலங்கைத்தமிழர்களின் தனி ஆட்சியை ஒழித்தவர்களாயினும், காலிவரை தமிழரிற்கும் சொந்தமாக்கிவிட்டே சென்றுள்ளனர். இதனை சரிவர பாவிக்கத்தெரியாத இனமே தனிநாடு கேட்டு தன் இனத்தையே அழித்த ஈழத்தமிழினம். — துரை…// ஆஹா ….இப்படி எல்லாம் கூட ஆகியூ பண்ணலாமா?

  //மேலும் தேயிலைத்தோட்டம், ராமேஸ்வரம் அகதி முகாம் இரண்டும் ஸ்ரீலங்கா போலத்தான். பாரதி சொன்னது போல் “இம்மென்றால் வனவாசம் ஏன் என்றால் சிறைவாசம்”. அறியாதது போல் பேசுகிறீர்களே?//சாந்தன்
  //…அப்போ, சீமான், வைகோ, நெடுமாறன் எங்கிருந்து குரல் கொடுக்கின்றாரகள்….//அவர்கள் தேயிலைத்தோட்டத்திலோ அன்றி ராமேஸ்வரம் அகதி முகாமிலோ இருந்து போராடவில்லை. துரை நீங்கள் பதில் சொல்லுமுன்னர் கேள்வியை படிக்கவே மாட்டீர்களா?

  ///.. தேயிலைத் தோட்டத்து தொழிலாலர் தமிழரில்லையா? அவர்களிற்கு பிரச்சினைகள் இல்லயா? …//
  அவர்களும் தமிழர்களே, அவர்களுக்கும் பிரச்சினைகள் உண்டு. அதற்காக ஆவது நீங்கள் போராடுங்கள். இங்கே வந்து யாழ்ப்பாணி, புலி என வெறும் வசனங்கள் விடாமல் அவர்களின் பிரச்சினைகளை எதிர்த்துப்போராடுங்கள். உங்களுக்கு எனது தாராள ஆதரவு உண்டு. அதை விடுத்து எல்லாம் புலியால் வந்தது எனும் பாணி பதில்கள் தேவை இல்லை!

  //ஏன் உங்களுக்கு இருக்கும் உரிமையை அவர்களிடம் தாரை வார்க்கிறீர்கள்? அதுவும் கம்பிக்குள் இருப்போருக்கு//சாந்தன்
  கம்பிக்குள் தாங்களாகவா சென்றார்கள் புலம்பெயர் தமிழ்ரால்தான் என்பதை இன்னமும் அறியவில்லயா? அல்லது புலி எதிர்ப்பாளர் வேறு புலம்பெயர் தமிழர் வேறா?– துரை
  திரும்பவும் சொல்கிறேன் துரை எனது கெள்வி ஏன் அவர்கள் போனார்கள் என்பதல்ல. நீங்கள் ஏன் கம்பிக்குள் இருக்கும் அவர்களிடம் உங்கள் உரிமையை தாரை வார்க்கிறீர்கள் எனவே. தயவு செய்து கேள்விகளை படித்து விட்டு பதில் தாருங்கள். உங்களின் தொடர்பற்ற வாதங்களுக்கு பதில் எழுத்யே எனது நேரம் விரயமாகிறது! நன்றி!

  Reply
 • rohan
  rohan

  //ஆங்கிலேயர் இலங்கைத்தமிழர்களின் தனி ஆட்சியை ஒழித்தவர்களாயினும், காலிவரை தமிழரிற்கும் சொந்தமாக்கிவிட்டே சென்றுள்ளனர். இதனை சரிவர பாவிக்கத்தெரியாத இனமே தனிநாடு கேட்டு தன் இனத்தையே அழித்த ஈழத்தமிழினம். — துரை//

  அரச பலமோ அடியாள் பலமோ இல்லாது விலை கொடுத்து – தேவையானால் கையூட்டும் கொடுத்து – தாமாக வளர்ந்தவர்கள் அவர்கள்.
  58இல் தனிநாடு கேட்டா அடி வாங்கினோம்? தனிநாடு கேட்டார்கள் என்றா 1977இல் அடித்தனர்?
  சரிவரப் பாவிப்பது எப்படி என்று கொஞ்சம் சொல்வீர்களா துரை?

  Reply
 • நந்தா
  நந்தா

  ‘ஸ்ரீ’ என்பதை செல்வனாயகம் கூட்டம் சிங்களம் என்று எதிர்ப்பதை விட அது இந்துக்களுக்கும் பவுத்தர்களுக்கும் ஒரு “மதிப்புக்குரிய” சொல் என்பதே காரணம். பின்னர் அதே ‘ஸ்ரீ’ போட்ட வாகனங்களில் அந்த ‘ஸ்ரீ’ எதிர்ப்பாளர்கள் தாராளமாக பவனிவந்தனர்.

  Reply
 • மாயா
  மாயா

  //நந்தா – ‘ஸ்ரீ’ என்பதை செல்வனாயகம் கூட்டம் சிங்களம் என்று எதிர்ப்பதை விட அது இந்துக்களுக்கும் பவுத்தர்களுக்கும் ஒரு “மதிப்புக்குரிய” சொல் என்பதே காரணம். பின்னர் அதே ‘ஸ்ரீ’ போட்ட வாகனங்களில் அந்த ‘ஸ்ரீ’ எதிர்ப்பாளர்கள் தாராளமாக பவனிவந்தனர்.//

  நந்தா ; எங்கட ஆக்களை சிறீமான் என்ற போது கோபம் வரவில்லை சிறீ என்ற போது மட்டும் கோபம் வந்ததாம்.
  சிறீ ஜவகர்லால் நேரு என்றெல்லாம் கெளரவப்படுத்தினார்கள். தமிழ் அரசியல்வாதிகள் எதையாவது சொல்லி வாக்கு பெற குண்டக்க மண்டக்க வேலை செய்தார்களே தவிர ; தமது சமூகம் உருப்பட எதையும் செய்யவில்லை.

  அவன் சட்டத்தை கொண்டு வந்தான். நீங்கள் தார் பீப்பாய்களோடு திரிந்து ; தார் பூசித் திரிந்தீர்கள். அதை பேசித் தீர்த்து இருக்கலாம். இது ஒரு வகை சண்டித்தனம். இதெல்லாம் காந்தீய வழியில்லையே?

  சிறிமாவுக்கு கோபம் என்றால் மிளகாய் காசில் யாழ்பாணத்தான் பணக்காரனாக விட்டிருக்க மாட்டார். இந்தியாவிலிருந்து மிளகாய் கொண்டு வந்திருப்பார்.

  //ஜே ஆர் சொன்னார். பண்டா செய்தார். சொல்லிலும் பார்க்க செயல்தானே தாக்கம் கூடியது.//
  எண்ணங்கள்தான் ; செயல் வடிவமாகிறது. குற்றம் செய்தவனை விட குற்றத்தை செய்யத் தூண்டிவனே தண்டிக்கப்பட வேண்டியவன். பிரபாகரன் கட்டளை இட்டதோடு சரி. கொலைகளை செய்தது புலிப் படைதானே? எனவே பிரபாகரன் காந்தி மாதிரி ஒரு மாகான்? இல்லை செல்வா குற்றமற்றவர்?

  //தென்னிலங்கையில் இனக் கலவரங்கள் நடைபெற்றபோது தமிழ் மக்களை அரசாங்கமே கப்பலேற்றி வடக்குக்கு அனுப்பிவைத்தது எந்த அடிப்படையில்? //
  அன்று அப்படிச் செய்யாதிருந்தால் ; அந்த மக்களுக்கு பாதுகாப்பு இருந்திருக்காது என நினைத்தார்கள். அதன் பின்னர் வட – கிழக்கு போர் காலங்களில் அதிகமானவர்கள் தமது பாதுகாப்புக்காக கொழும்பு நோக்கித்தானே வந்தனர். குடியேறினர். இப்போதுதானே திரும்பிச் சென்றனர்.

  /கொழும்பில் லொட்ஜில் இருந்த தமிழ் மக்களை இரவோடிரவாக இரவுடையோடு பஸ்களில் ஏற்றி வவுனியாவில் கொண்டுவந்து இறக்கிவிட்டது எந்த அடிப்படையில்? /
  கொழும்பு லொட்ஜில் தங்கி குண்டுகளை வெடிக்க வைக்கத் திட்டம் தீட்டினால் அவன் சும்மா இருப்பானா? இதை தடுக்க வீதியில் இறங்கியவர்கள் சிங்களவர்கள்தான் அதிகம். சிங்களவர்கள் வீதிக்கு இறங்கி இரண்டு நாளுக்கு பிறகுதான் தமிழ் கட்சிகள் வாயே திறந்தன. அதை யாரும் மறந்திருக்க மாட்டீர்களென நினைக்கிறேன். மனோ கணேசன் மட்டுமே வீதிக்கு வந்தார். மற்றவர்கள் புலிகளின் பேச்சைக் கேட்டு இது நல்ல சந்தர்ப்பம் என்று சொன்னார்கள். இப்போது தமக்கும் புலிகளுக்கும் தொடர்பே இல்லை என்கிறார்கள்.

  Reply
 • rohan
  rohan

  மாயா // எனவே பிரபாகரன் காந்தி மாதிரி ஒரு மாகான்?//
  தேசம் அனுமதிக்காது என்பதால் காந்தி பற்றி அதிகம் தர்க்கிக்க முடியாது என்று தோன்றுகிறது. காந்தி ஒரு மகான் என்று சொல்ல வருகிறீர்களா? இந்தத் தலைப்பில் ஒரு அடிப்படை விவாதத்துக்காவது தயாராக இருக்கிறீர்களா?

  //கொழும்பு லொட்ஜில் தங்கி குண்டுகளை வெடிக்க வைக்கத் திட்டம் தீட்டினால் அவன் சும்மா இருப்பானா? // இதற்கு ஏதும் சான்றுகள் உள்ளனவா? ஓரிருவர் செய்யக்கூடும் என்ற சந்தேகம் இருந்திருந்தால் ‘பூவும் பிஞ்சும் முத்தலுமாக’ அத்தனை லொட்ஜ் தமிழர்களும் தமிழர் தாயகப் பிரதேசங்களில் வீசி விடப்படுவது சரி தான் என்கிறீர்களா?

  //சிங்களவர்கள் வீதிக்கு இறங்கி இரண்டு நாளுக்கு பிறகுதான் தமிழ் கட்சிகள் வாயே திறந்தன.// கட்சிகள்??

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //…‘ஸ்ரீ’ என்பதை செல்வனாயகம் கூட்டம் சிங்களம் என்று எதிர்ப்பதை விட அது இந்துக்களுக்கும் பவுத்தர்களுக்கும் ஒரு “மதிப்புக்குரிய” சொல் என்பதே காரணம். பின்னர் அதே ‘ஸ்ரீ’ போட்ட வாகனங்களில் அந்த ‘ஸ்ரீ’ எதிர்ப்பாளர்கள் தாராளமாக பவனிவந்தனர்…//
  அருமையான கண்டுபிடிப்பு! இந்த ‘ஸ்ரீ’ யை தமிழிலும் எழுதும்படி கேட்டுத்தான் போராட்டமே நடந்தது. அது தெரியாதா. மேலும் இந்த ஸ்ரீ (SRI) பின்னர் ஷ்ரீ I(SHRI)என பிரேமதாசா காலத்தில் மலையாள மாந்திரீகரின் சொல்படி விளையாடியது எல்லாம் தனிக்கதை!

  Reply
 • நந்தா
  நந்தா

  சிங்களத்தில் ‘ஸ்ரீ’ போட்டால் என்ன உங்கடை குடை சாய்ந்து விடுமோ? யு என் பி யிடம் மண்டியிட்டநேரம் அதை செல்வனாயகம் சரி செய்யாமல் விட்ட காரணம் என்ன?

  யு என் பி யுடன் சேரும் பொழுது மாத்திரம் “தமிழ்” பிரச்சனைக்கு “பென்ஷன்” கொடுத்து விடுவீர்கள்!

  Reply
 • மாயா
  மாயா

  //சிங்களவர்கள் வீதிக்கு இறங்கி இரண்டு நாளுக்கு பிறகுதான் தமிழ் கட்சிகள் வாயே திறந்தன.//
  // கட்சிகள்?? //

  நவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும் இடதுசாரி முன்னணியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன ; இவ்வளவு தமிழ் கட்சிகளும் ; தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தமிழர்களால் தேர்வு செய்யப்பட்டு வந்தவர்கள். இந்த அப்பாவிகளை கொழும்பை விட்டுத் துரத்த வாகனங்களை கொண்டு வந்து நிறுத்திய போது ; அதற்கு முன்னால் நின்று தடுக்க ஒருவராவது வரவில்லையே என வேதனைப்பட்டு அறிக்கை விட்டதோடு நில்லாமல் வீதிக்கு இறங்கினார்.

  யுஎன்பியும் ; இடதுசாரிகளும் கொழும்பு வீதிகளுக்கு வந்தது மட்டுமல்ல; வவுனியாவுக்கும் அவர்களை தடுத்து நிறுத்தியதுமல்லாமல் ; திருப்பி கொழும்புக்கு கொண்டு வந்தது வரலாறு.

  தமிழ் கட்சிகளிடம் பேசிய போது சொன்னார்கள். இப்படி ஒரு நிலையை உருவாக்கவே புலிகள் கொழும்பில் தாக்குதல்கள் செய்கிறார்கள். 1983 போல் ஒரு இனக் கலவரம் மூண்டால்தான் தமிழீழம் கிடைக்க உலகம் அங்கீகரிக்கும். அதை சிங்களம் செய்யத் தொடங்கிவிட்டது. அடுத்தது இங்க இருக்கிற தமிழருக்கு அடிதான் என்றார்கள்.

  அப்போ உங்களுக்கு அடி விழாதா? என்று கேட்ட போது ” எங்களுக்கு அரச பாதுகாப்பு இருக்கிறது. தமிழீழமும் வேணும் ; சனம் சாகவும் படாது என்றால் தமிழீழம் எப்படிக் கிடைக்கும் ? ” என்று திருப்பி கேள்வி கேட்டார்கள்.

  அதைத்தான் நிறவேற்றி விட்டு அரசாங்கம் தூதுவிடும் வரை கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கிறது தமிழ் கட்சிகள். இவற்றை யாரும் மறந்து விடலாகாது.

  Reply
 • நந்தா
  நந்தா

  மாயா:
  ஆக மொத்தமாக தமிழன் உதை வாங்குவது என்பதுதான் தமிழ் போராட்டம். அதனை வைத்து வெளினாடுகளுக்கு ஓட்டம் பிடிப்பது இன்னொரு வியாபாரம். வெள்னாடுகளுக்கு வந்தவுடன் தமிழ், விடுதலை என்று தறுதலைகளாக சில்லறை சுருட்டி கார், வீடுவாசல் வாங்குவது இன்னொரு வியாபாரம்.

  Reply
 • thenupiriyan
  thenupiriyan

  //பதவியா குடியேற்றத்தில் முதலில் குடியமர்த்தப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதும் தெரியாமல் குடியேற்றக் கதைகளை சொல்லி என்ன பயன்//
  //சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் குடியேற்றங்கள் நடைபெறவில்லை// நந்தா

  உங்களுக்கு புலிகள் மீது தீராத வெறுப்பு இருக்கலாம். அது உங்களுடைய தனிப்பட்ட விடயம். ஆனால் அதற்காக தமிழர்களின் வரலாற்றைத் திரிவுபடுத்தாதீர்கள். எதையும் ஆதாரத்தோடு கூறுங்கள். பதவியாக் குடியேற்றத் திட்டத்தில் முதலில் குடியமர்த்தப்பட்ட தமிழர்கள் தற்போது எங்கே?
  ஒரு வேளை புலிகள் அவர்களை அங்கிருந்து அடித்துத் துரத்திவிட்டார்களோ. பதவியா குடியேற்றத்தில் முதலில் குடியமர்த்தப்பட்டவர்கள் தமிழர்கள். சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் குடியேற்றங்கள் நடைபெறவில்லை. இவற்றிற்கு உங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றதா? இந்த விடயங்கள் தொடர்பாக விவாதிப்பதற்கு நான் தயாராக உள்ளேன். உங்கள் பதிலை எதிர்பார்க்கின்றேன்.

  Reply
 • மாயா
  மாயா

  நந்தா ; கரும்புச் சாறு விற்று சீவனம் நடத்துபவனுக்கு கரும்பு தும்பாகும் அவலத்தை பற்றி என்ன கவலை. அவனுக்கு பை நிறைகிறதா என்பதுதானே அவனது கவலை.

  இன்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் வசனங்களை பாராளுமன்றத்தில் பேசுகிறார்கள். அன்று இவர்கள் பள்ளிகளில் பேசி புலிகளின் பிள்ளை பிடிகாரர்களாக இருந்தார்கள். இன்று பாஉ என்ற அங்கீகாரத்தோடு அவர்களுக்கு பாதுகாப்புக்காக போலீசார் இருக்கிறார்கள். வரும் போதும் போலீசின் பாதுகாப்பு. போகும் போதும் போலீசின் பாதுகாப்பு. வீட்டுக்கு முன்னும் போலீசின் பாதுகாப்பு.

  பாவம் ; ரோட்டில் எதுவும் தெரியாமல் ; அழும் பிள்ளைக்கு பால் வாங்கப் போறவனும் ; சாகப் போகும் நோயாளிக்கு மருந்து வாங்க பாமசிக்கு ஓடுபவனும் விபரமே தெரியாமல் அடி வாங்குறான். சாகிறான். இதுதான் தமிழனின் போராட்டம்.

  உண்மைகளைச் சொன்னால் துரோகிகள் அல்லது புலனாய்வாளர்கள். புண்ணாக்குகள் எல்லாம் தேசத்தின் சொத்துக்கள்?

  Reply
 • thurai
  thurai

  / /இந்த விடயங்கள் தொடர்பாக விவாதிப்பதற்கு நான் தயாராக உள்ளேன். உங்கள் பதிலை எதிர்பார்க்கின்றேன்.//தேனுப்பிரியன்
  தமிழருக்குள் ஏற்பட்ட தமிழரிற்கு உதவாத விவாதங்கழும் போட்டிகழுமே தமிழரை இந்த நிலைமைக்குத் தள்ளியுள்ளது. புலம் பெயர் நாடுகளிலிருந்து கருதுக்கள் எழுதுவோரிற்கும் பிறந்தநாட்டில் இருப்போரிற்கும் வேறுபாடுகள் பல உண்டு.

  நாடு என்பதே அங்கு வாழ்பவனிற்குத்தான் உரியது. அவனிற்கே உருமை பற்றி பேச அருகதையுண்டு. மக்களை காப்பாற்ரி வாழவைக்கும் அரசியல்தான் தற்போதைக்கு உகந்தது. மக்களை பலி கொடுத்து புலம் பெயர் தமிழர் வாழ்ந்ததே தவிர வேறொன்றுமில்லை.

  புலம் பெயர் நாட்டில் இன்னுமொரு தமிழரைப் பலி கொடுத்து பணம் தேடும் கூட்டம் வராமல் தடுப்பதே எம்மால் செய்ய முடியும். நாட்டில் வாழ்வோர் அழிவுகள் வராமல் காக்க வேண்டும். ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடவேண்டும். இதுவே இன்றைய தேவை-துரை

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  //.. மனோ கணேசன் மட்டுமே வீதிக்கு வந்தார். …//
  ஆம் அவரின் சேவை பாராட்டுதலுக்குரியது. அதனால் அவருக்கு அமெரிகா கனடா போன்ற நாடுகளுன் விருதுகளும் வழங்கப்பட்டன. அப்பொதெல்லாம் அவரை புலியிடம் காசுவாங்கியவர் என புலிஎதிர்ப்புக்கோஷ்டி எழுதியதை எல்லாம் மறக்கவும் இல்லை.

  Reply
 • மாயா
  மாயா

  //அப்பொதெல்லாம் அவரை புலியிடம் காசுவாங்கியவர் என புலிஎதிர்ப்புக்கோஷ்டி எழுதியதை எல்லாம் மறக்கவும் இல்லை. – சாந்தன் //

  சாந்தன் ; இங்கே மனோவின் செயல்தான் முக்கியமே தவிர அடுத்தவர் என்ன பேசுகிறார்கள். எப்படி ஏசுகிறார்கள் என்பதல்ல. வடக்கு – கிழக்கு மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் போனவர்கள் அந்த நேரம் ஏன் மெளனமாக வீடுகளுக்குள் முடங்கினார்கள் என்பதே கேள்வி?

  மனோ ; மலையகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு வாக்களித்தோர் கொழும்பு தமிழர். புலிகளிடம் காசு வாங்கியவர் என்று மட்டுமல்ல பிரபாகரனது நீச்சல் தடாகத்தில் பிரபாகரனோடு சேர்ந்து குளித்தார் என்ற கதையையும் சொன்னார்கள். நான் கேட்டது வடக்கு கிழக்கு மக்களது வாக்குகளை பெற்ற பா.உறுப்பினர்கள் ஏன் மெளனமாக இருந்தார்கள் என்பதே? ஏன் என்று சொல்லுங்கள் சாந்தன்?

  Reply
 • நந்தா
  நந்தா

  தேனுப்பிரியன்:
  பதவியாவில் குடியேற்றம் யு என் பி காலத்தில் நடந்த விஷயம். யு என் பி ஆசாமிகளிடம் அல்லது திருமலைக் கச்சேரியில் அந்த விபரஙளைப் பார்வையிடலாம் அல்லது தேடலாம்.

  சிறிமாவோ காலத்தில்நடந்த குடியேற்றம் பற்றி உங்களுடைய தகவல்களை (நீங்கள் கேள்க்கும் ஆதாரத்துடன்) சொல்லுங்கள்!

  யாழ் பல்கலைக் கழகம் அமைக்கபட்டது சிறிமாவோ வினால் என்பதையே இருட்டடிப்பு செய்து கொண்டிருக்கும் யாழ்ப்பாணிகள் இந்தக் குடியேற்றங்கள் பற்றியெல்லாம் கப்சாதான் விடுவார்கள்!

  Reply
 • நந்தா
  நந்தா

  மாயா:/ யாழ்ப்பாணிகளின் பிரச்சனையே “உத்தியோகம்” பிடிப்பதுதான். பாறாளுமன்ற கதிரைகளும் அப்படித்தான். சம்பளம், கொழும்புச் சீவியம் என்று வந்தவுடன் அதனைப் பாதுகாக்க எந்தக் குத்துக் கரணமும் அடிப்பார்கள். அதுதான் “தமிழ் போராட்டம்” அல்லது “தமிழ் பிரச்சனை”./

  1970 தேர்தலில் தோற்றுத் தொப்பியிட்ட அமிர்தலிங்கத்துக்குக் கை கொடுத்தது “தரப்படுத்தல்”. அதனை வைத்து தமிழ் வாலிபர்களை உசுப்பேத்தி துரையப்பா கொலை வரை போன அமிர்தலிங்கம் பின்னர் எதிர்கட்சி தலைவராகியவுடன் முதலில் செய்த அட்வைஸ் “மாணவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது” என்பதுதான்.

  ஆனால் அந்த தமிழ் வாலிபர்களைத் தப்பான வழிக்குத் திசை திருப்பி விட்டதைப் பற்றி கவலை கொள்ளாத அமிர்தலிங்கம் 1983 கலவரத்தின் பின்னரே முதலுக்கே வந்த மோசத்தை உணர்ந்தார். அமிர்தலிங்கம் வளர்த்த கடாக்கள் “வெளிநாட்டு” கூலிப்படைகளினால் தத்தெடுக்கப்பட்டதுடன் அதே கடாக்கள் அவர் மார்பின் மீதே பாய்ந்தன.

  Reply
 • thenupiriyan
  thenupiriyan

  //நாடு என்பதே அங்கு வாழ்பவனிற்குத்தான் உரியது. அவனிற்கே உருமை பற்றி பேச அருகதையுண்டு.//
  //பல விடயங்களை இலங்கையில் வாழும் மக்க்களே செயற்படுத்த வேண்டும்//
  அன்பின் துரை உங்கள் அன்பிற்கும் அறிவுரைக்கும் நன்றி.

  நாட்டில் வாழ்வோரே எல்லாவற்றையும் தீர்மானிக்கவேண்டும் பொறுப்பை எங்கள்மீது சுமத்திவிட்டடீர்கள். ஆனால் நடைமுறையில் இந்த மண்ணில் நடைபெறுகின்ற விடயங்களில் எல்லாம் தலையிடுகின்றீர்களே. உதாரணமாக யாழப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யார் வரவேண்டும் என்பது எங்களுடைய பிரச்சனை.நீங்கள் அதைத் தீர்மானிக்கமுடியாது தானே.ஆனால் நீங்களோ உங்களுக்கு விருப்பமான ஒருவர் பதவிக்கு வரவேண்டும் என்பதற்கான ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள். சத்தியசீலன் ஞானகுமாரன் போன்றோருக்கு எதிராக நாங்கள் பிரச்சாரம் செய்ததால்தான் வசந்தி அரசரட்னத்திற்குக் கூடுதலான வாக்குகள் விழுந்தன என்றும் எழுதுகின்றீர்கள். பல்கலைக்கழகத்திற்குள் அரசியல் வரக்கூடாது என்றும் கூறிவிட்டு அமைச்சர் டக்ளஸ் இதில் தலையிடவேண்டும் என்று அவரை அழைக்கின்றீர்கள். எல்லாம் முரண்பாடாக இருக்கின்றதே.

  ஒரு பல்கலைகழகத்தின் துணைவேந்தரை தெரிவு செய்வதற்குக்கூட எங்களுக்கு அருகதை இல்லை என்று நினைத்து நீங்கள் ஆலோசனை கூறுகின்றீர்கள். பின்னர் நாட்டில் உள்ளவர்கள்தான் தமக்கு என்ன தேவை என்பதைத் தீர்மானிக்கவேண்டும் என்றும் கூறுகின்றீர்கள். எது உண்மை?

  //தமிழரிற்கு உதவாத விவாதங்கழும் போட்டிகழுமே தமிழரை இந்த நிலைமைக்குத் தள்ளியுள்ளது. //
  நான் திரு. நந்தா அவர்களை விவாதத்திற்கு அழைத்தது பொழுதுபோக்கிற்கு அல்ல. குடியேற்றங்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை அவர் கூறியுள்ளார்.அதற்கு சரியான விளக்கமளிக்காவிட்டால் வாசகர்கள் அவர் கூறியதே சரியென எண்ணத்தொடங்கிவிடுவர். எனவே ஆதாரங்களுடன் விளக்கமளிக்கும்படி கேட்டேன்.

  Reply
 • rohan
  rohan

  //இந்த விடயங்கள் தொடர்பாக விவாதிப்பதற்கு நான் தயாராக உள்ளேன். உங்கள் பதிலை திர்பார்க்கின்றேன்.//தேனுப்பிரியன்
  /தமிழருக்குள் ஏற்பட்ட தமிழரிற்கு உதவாத விவாதங்கழும் போட்டிகழுமே தமிழரை இந்த நிலைமைக்குத் தள்ளியுள்ளது. புலம் பெயர் நாடுகளிலிருந்து கருதுக்கள் எழுதுவோரிற்கும் பிறந்தநாட்டில் இருப்போரிற்கும் வேறுபாடுகள் பல உண்டு./
  துரை.

  தேனுப்பிரியன் கேட்டதில் என்ன தப்பு இருக்கிறது? நந்தா போகிற போக்கில் தகவல்களை உருவாக்கி விட்டுப் போவார் – அந்த(பொய்த்) தகவல்கள் தெரியாமல் இருப்பதற்காக மற்றவர்களை நையாண்டியும் செய்வார். வன்னியில் சுதந்திரக் கட்சி கட்டிய பாடசாலைகளின் எண்னிக்கை தொடர்பாக அவர் ‘கட்டிய’ புள்ளி விபரங்களை தேசம் வாசகர்கள் மறந்திருக்க மாட்டாரகள்.

  துரையின் பதில் கருத்து வேடிக்கையாக இருக்கிறது. தமிழருக்குள் ஏற்பட்ட உதவாத விவாதங்களும் போட்டிகளுமே தமிழரை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது? என்ன சொல்ல வருகிறீர்கள்? எல்லா விதமான கருத்துப் பரிமாற்றங்களும் வரவேற்கப் பட வேண்டியவையே. கற்பில் சிறந்தவர் கண்ணகியா மாதவியா வகையறாக்கள் கூட அளவுடன் இருப்பதில் எனக்குச் சம்மதம் தான்.

  “புலம் பெயர் நாடுகளிலிருந்து கருதுக்கள் எழுதுவோரிற்கும் பிறந்தநாட்டில் இருப்போரிற்கும் வேறுபாடுகள் பல உண்டு” என்பதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன என்று சொல்ல முடியுமா?

  Reply
 • thurai
  thurai

  //புலம் பெயர் நாடுகளிலிருந்து கருதுக்கள் எழுதுவோரிற்கும் பிறந்தநாட்டில் இருப்போரிற்கும் வேறுபாடுகள் பல உண்டு” என்பதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன என்று சொல்ல முடியுமா//றோகன்
  புலம்பெயர்நாட்டில் வாழும் தமிழர்களிற்கு வாழும்நாடுகள் வாழ வழிகாட்டுகின்றன. இலங்கையில் நாட்டுக்கு வழிகாட்ட வேண்டியவர்களாக தமிழர் உள்ளனர், மாற வேண்டியவர்கள், பாடுபட கடமைப்பட்டவ்ர்கள். புலம்பெயர் தமிழர் இணையத்தள அரசியலும், விடுதலையும்தான். உருப்படியான செயல்களில் எத்தனை இணயத்தளங்கள் செயற்படுகின்றன? துரை

  Reply
 • thenupiriyan
  thenupiriyan

  //பதவியாவில் குடியேற்றம் யு என் பி காலத்தில் நடந்த விஷயம்// நந்தா
  1957ம் ஆண்டு பதவியாக் குடியேற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 1956ம் ஆண்டுத் தேர்தலில் பண்டாரநாயக்கா பதவிக்கு வந்ததை நந்தா அறியமாட்டாரோ?
  திருகோணமலை மாவட்டத்தின் வடபகுதியினை சிங்கள மயப்படுத்தும் நோக்கத்துடன் 1957ம் ஆண்டு பதவியாக் குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பதிவில் குளம் என்ற பாரம்பரிய தமிழ்ப் பிரதேசம் பதவியா எனப் பெயர் மாற்றப் பட்டு சிங்களக் குடியேற்றத்திற்கு உட்படுத்தப்பட் டது. பதவியாக்குளம் திருகோணமலை மாவட்டத்தின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ளது. நிர்வாகரீதியாக அநுராதபுர மாவட் டத்திற்கு உட்பட்டிருந்த போதிலும் இக் குளத்திலிருந்து நீர்ப்பாசன வசதி களைப் பெறும் நிலங்களின் பெரும்பகுதி திருகோணமலை மாவட்டத்தின் வடபகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  1957ம் ஆண்டு செப்ரம்பர் அக்டோபர் மாதங்களில்முதல் தொகுதி யாக 634 குடும்பங்கள் பதவியாக் குடியேற்றத்திட்டத்தில் குடியமர்த்தப்பட் டனர். இவர்களில் 434 குடும்பங்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்ப்பட்டவர்களாவர். 1958ம் ஆண்டு பதவியா குடியேற்றத்திட்டத்தின் 6ம்இ 7ம் பகுதிகளில் 92 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டனர். இவ்வாண்டில் இடம் பெற்ற இனக்கலவரம் காரணமாக மிகுதி இடங்களில் குடியேற்ற முடிய வில்லை. மேலும் 69 குடும்பங்கள் இவ்வாண்டு பதவியா குடியேற்றத் திட்டத்தின் 8ம் பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். இவர்கள் இனக் கலவரம் காரணமாக வடக்கிலிருந்து வெளியேறியவர்களாவர். அதாவது இனக் கலவரம் காரணமாக வடக்கிலிருந்து வெளியேறிய சிங்களக் குடும்பங்கள் இங்கு குடியமர்த்தப்பட்டனர். ( நந்தா இவர்களைதத்தான் தமிழர்கள் என்று அழைக்கின்றாரோ)

  இங்கு குடியமர்த்தப்பட்டவர்களில் 40 சதவீதத்தினர் 1957 – 1960 காலப்பகுதியிலும் மிகுதி 60 சதவீதத்தினர் 1961 – 1965 காலப்பகுதியிலும் இங்கு குடியமர்த்தப்பட்டவர்களாவர்.

  மேலே கூறப்பட்ட காலப்பகுதிகள் எல்லாம் சிறிமாவின் ஆட்சிக்காலம் என்பது எல்லோரும் அறிந்ததே.

  திருகோணமலை மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் கட்டுக்குளம்பற்று காரியதிகாரிப் பிரிவில் உள்ள முதலிக்குளம்இ மொறவேவ எனப் பெயர் மாற்றப்பட்டு 1958ம் ஆண்டு மொறவேவ குடியேற்றத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. 1958ம் ஆண்டு இக்குடியேற்றத்திட்டத்தில் 121 குடும்பங்கள் குடிய மர்த்தப்பட்டனர். இக்குடும்பங்களுக்கு 363 ஏக்கர் நெல் வயல்களும் 242 ஏக்கர் மேட்டு நிலமும் வழங்கப்பட்டது. 1959ம் ஆண்டு இக்குடியேற்றத் திட்டத்தில் 285 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டனர். இக் குடும்பங்களுக்கு 855 ஏக்கர் நெல் வயல் களும் 570 ஏக்கர் மேட்டு நிலமும் வழங்கப்பட்டது. 1960 – 1961 காலப்பகுதியில் 328 குடும்பங்களும் 1961 – 1962 காலப்பகுதியில் 224 குடும்பங்களும் இக்குடியேற்றத் திட்டத்தில் குடியமர்த்தப்பட்டனர். 1978ம் ஆண்டின் முடிவில் மொறவேவ குடியேற்றத்திட்டத்தில் 1569 குடும்பங் கள் குடியமர்த்தப்பட்டிருந்தனர். இவர்களுக்கு 4141 ஏக்கர் நெல் வயலும் 1562 ஏக்கர் மேட்டு நிலமுமாக மொத்தம் 5703 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டிருந்தது.
  1921ம் ஆண்டு இப்பிரதேசத்தில் 28தமிழர்களும் 6 முஸ்லீம்களும் 8 சிங்களவர்களும் வாழ்ந்தனர். 1981ம் ஆண்டுக்குடிசன மதிப்பீட்டின்போது இங்கு 2812 தமிழர்களும் 341 முஸ்லீம்களும் 3225 சிங்களவர்களும் வாழ்ந்தனர். 1921 – 1981 காலப்பகுதியில் தமிழர்களின் தொகை முஸ்லீம்களின் தொகை என்பன முறையே 9942 சதவீதத்தினாலும் 5583 சதவீதத்தினாலும் மட்டுமே அதிகரித்திருக்க சிங்களவர்களின் தொகை 40213 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. இதன்விளவாக இப்பிரதேசத்தின் மொத்த சனத்தொகையில் தமிழர்களின் பங்கு 67 சதவீதத்திலிருந்து 44 சதவீதமாகவும் முஸ்லீம்களின் பங்கு 14 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்தது. அதேநேரத்தில் சிங்கவர்களின் பங்கு 19 சதவீதத்திலிருந்து 51 சதவீதமாக அதிகரித்தது. இதன் விளைவாக இப்பிரதேசத்தின் பெரும்பான்மையினமாக சிங்களவர்கள் மாறினர்.

  ஓன்றுமே நடக்கவில்லை என்று நந்தா கூறிய சிறிமாவின் ஆட்சிக்காலத்தில்தான் இவையெல்லாம் நடந்தது.

  1950 -1958 காலப்பகுதியில் கல்லோயாக் குடியேற்றத் திட்டத்தில் குடியமர்த்தப்பட்ட சிங்கள விவசாயக் குடும்பங்களின் வாரிசுகளுக்கு காணி வழங்குவதற்கான ஒரு குடியேற்றத்திட்டம் மகாக்கண்டிய குடியேற்றத்திட்டமாகும். 1950களில் கல்லோயாத் திட்டத்தின்கீழ் காணிகளைப் பெற்ற சிங்களப் பெற்றோர்கள் 1970 களில் அக் காணிகளை தமது பிள்ளைகள் அனைவருக்கும் பங்கிட்டு வழங்கக்கூடியதாக இருக்கவில்லை. ஏனவே கல்லோயாக் குடியேற்றத்திட்டத்தில் காணியற்ற சிங்கள இளைஞர்களின் தொகை அதிகரிக்கலாயிற்று. இவர்களில் திருமணமான சிங்கள இளைஞர்கள் பொருளாதார வாய்ப்புக்களைத் தேடி கல்லோயாப் பிரதேசத்திலிருந்து வெளியேறி தமது சொந்தப் பிரதேங்களுக்குச் செல்ல முற்பட்டனர். இவ்வாறு வெளியேறுபவர்களைத் தடுத்து கல்லோயாப் பிரதேசத்தில் அவர்களை நிரந்தரமாகக் குடியமர்த்த வேண்டும் என்பதற்காகவே 1971ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மகாக்கண்டிய இளைஞர் குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

  ஓன்றுமே நடக்கவில்லை என்று நந்தா கூறிய சிறிமாவின் ஆட்சிக்காலத்தில்தான் இதுவும் நடந்தது.

  இங்கு தரப்பட்டுள்ள தகவல்களும் தரவுகளும் நான் கட்டிய கதைகளும் அல்ல. சொந்தப் புள்ளிவிபரங்களும் அல்ல. காணிஆணையாளரின் நிர்வாக அறிக்கைளிலிருந்தும் குடிசன மதிப்பீட்டு அறிக்கைகளிலிருந்தும் பெறப்பட்டதாகும்.

  நந்தா அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்றால் எந்தெந்த ஆண்டு அறிக்கைகளில் எந்தெந்தப் பக்கங்களில் இவை உள்ளன என்பதை அனுப்பத் தயாராக உள்ளேன்.

  மேலும் இவற்றை நான் எழுதுவதன் மூலம் யு.என்.பிக்கு வக்காலத்து வாங்குகின்றேன் என்ற எண்ணவேண்டாம். குடியேற்றயுகத்தை ஆரம்பித்து வைத்தது யு.என்.பி. பின்னர் வந்த அனைத்து அரசாங்கங்களும் அதனை முழுவீச்சில் தொடர்ந்து செயற்படுத்தின. மேலும் குடியேற்றத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டகாலத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி என ஒன்று இருக்கவில்லை என்பதும் பண்டாரநாயக்கா யு.என்.பி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

  எனவே தமிழர்களுக்கு அழிவை ஏற்படுத்தியதில் இரண்டு கட்சிகளுமே ஒன்றுக்குகொன்று சளைத்தல்ல. ( இந்த இடத்தில் புலிகளை இழுத்து அவர்கள்தான் மிகக்கூடுதலான அழிவை ஏற்படுத்தியவர்கள் என்றெல்லாம் கூறவேண்டாம். அவ்விடயம் இதனோடு தொடர்பற்றது. இங்கு தரப்பட்ட விடயங்கள் அனைத்தும் புலிகள் தோன்றுவதற்கு முன்னர் நடைபெற்றவை)

  என்னைப் பொறுத்தவரையில் இரண்டு கட்சிகளுமே எரிகின்ற கொள்ளிகள்தான். இதில் எதைத் தெரிந்தெடுத்து முதுகு சொரிந்தாலும் சொரிபவர்களுக்குத்தான் பாதிப்பு.

  Reply
 • தோஸ்து
  தோஸ்து

  //தனினாடு கேள்க்கும் பலமே “என்னுடைய ஊரில் எல்லாம் இருக்கிறது” என்பதுதானே அர்த்தம். அப்படி எல்லாம் இருந்த யாழ்ப்பாணிகள் எதற்காக யாழ்தேவி ஏறி சிங்களவர்கள் இருக்கும் ஊர்களுக்குப் போக வேண்டும்?
  சுழிபுரத்தில் குண்டு விழ ஜேர்மனிக்கு வந்து அகதி என்று கதயளந்தவன் புங்குடுதீவார். அதுவே பெரிய மோசடி. //
  “என்னுடைய ஊரில் எல்லாம் இருக்கிறது” என்று சொல்லிக்கொள்கிற மாதிரி உலகபந்தில் ஒரு ஊரை இல்லை நாட்டை சொல்லுங்கள் பார்க்கலாம்.
  “புங்குடுதீவார்” என்று நீங்கள் சொல்லும் மக்கள்தான் சிங்களபகுதிகளில் பெருவாரியாக சிறு வியாபாரம் செய்தனர். ஒவ்வொரு முறையும் கலவரமென்ற(?) என்ற பெயரில் தமிழின அழிப்பு நடக்கும் போதும் நேரடியாக பாதிக்கப்பட்டது அந்தமக்கள்தான். சுழிபுரத்தில் குண்டு விழுந்தது 1986ல். சிலோன் குடியுரிமையை மறுத்து தமிழனை நாடனற்றவனாக மாற்றி அகதியாக்கியது 1949 லே தொடங்கிவிட்டது.
  பண்டா. கொல்வின் ஆர் டீ சில்வா. சிறிமா அம்மையாரின் ஆருயிர் நண்பர்களே கனடாவிற்கு அகதியானபோது.”புங்குடுதீவார்” ஜேர்மனிக்கு வந்து அகதியாக இருக்க 100க்கு 1000வீதம் உரிமை மற்றும் காரணங்களிருக்கு.
  “யாழ்ப்பாணிகள்” “புங்குடுதீவார்” என விளிக்கும் உங்களிடம் ஒரு கேள்வி!
  கனடாவின் சட்டங்கள் ஒழுங்கு விழும்மியங்களை மதித்து வாழும் கண்ணியமான நற்பிரசையென சொல்லி கொள்ளும் நீங்கள்.
  1)சிறிலங்கா தேசத்தையும் மதிப்பதாக சொல்லிக்கொண்டு. சிறிலங்கா அரசியல்யாப்பில் மிகத்தெளிவாக உள்ள இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஒரு “சிறிலங்கா தேசீயஇனம்” என்பதை ஏற்று கொள்ளாததுடன் உதாசீனம் வேறை செய்கிறீங்கள். அதாவது சிறிலங்கா அரசியல்யாப்பை உதாசீனம் செய்கிறீங்கள்.
  2)முஸ்லிம் நாடுகளில் அந் நாட்டு மக்களால் நாடளமன்றங்களால் ஏற்று கொள்ளப்பட்ட “சரியாத்” சட்டத்தின் பிரகாரம் நீதி மன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்பை காட்டுமிராண்டிதனமென சாடும் நீங்கள். அதேசமயம் எந்தநீதிமன்றம் முன் நிறுத்தப்படாது நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்படாது சரணடைந்த போராளிகளின் படுகொலைகளை மரணதண்டணை என்கிறீர்கள். மரணதண்டணைக்கும் இனபடுகொலைக்கும் வித்தியாசம் புரியவில்லையா!அல்லது மனிதவுரிமை சட்டங்களை உதாசீனபடுத்துகிறீர்களா!
  3)கனடாவின் அரசியல்யாப்பில் பிரித்தானிய இராணி 2 வது எலிசபெத்தை கனடாவின் கெளரவமான முதல் பிரசையாக ஏற்றுகொள்ளப்பட்டதை தெளிவாக தெரிந்துள்ள நீங்கள். இராணி 2 வது எலிசபெத்தின் சொந்த இராட்சியமாக இன்றுமிருக்கும் ஐக்கிய இராட்சியத்தை தூசித்து பின்னூட்டமிடுகிறீர்கள்.
  உங்களுக்கு இயல்பாகவே சொந்த இனத்தையும் சக தமிழனின் ஊர் மற்றும் பிரதேசத்தையும். ஒரு நாட்டின் அரசியல்யாப்பை சட்டங்களை நீதிமன்றங்களை மற்றும் மனிதவுரிமை சட்டங்களை கணம் பண்ணும் கெளரவிக்கும் கண்ணியம் கிடையாது.

  Reply
 • thurai
  thurai

  //புங்குடுதீவார்” என்று நீங்கள் சொல்லும் மக்கள்தான் சிங்களபகுதிகளில் பெருவாரியாக சிறு வியாபாரம் செய்தனர். ஒவ்வொரு முறையும் கலவரமென்ற(?) என்ற பெயரில் தமிழின அழிப்பு நடக்கும் போதும் நேரடியாக பாதிக்கப்பட்டது அந்தமக்கள்தான்.//
  //புங்குடுதீவார்” ஜேர்மனிக்கு வந்து அகதியாக இருக்க 100க்கு 1000வீதம் உரிமை மற்றும் காரணங்களிருக்கு.//தோஸ்து

  முஸ்லிம்கழும், புங்குடுதீவாருமே வியாபாரத்தில் முன்நிற்பவர்கள். கொழும்பில் அடி விழுந்தால் யாழ்ப்பாணம் போய் வியாபாரம் செய்யலாம். யாழ்பபாணத்திலும் இராணுவம் அடித்தால் புங்குடுதீவிற்கே போகலாம். ஜேர்மனிக்கு வருவதை நியாயப்படுத்துவது தாய் மண்ணிலும் பார்க்க வியாபாரமும், பணமுமே இங்கு முன்னிலைப்படுத்தப்படுகிறது.

  முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் பிறந்த வளர்ந்த இடத்திலிருந்தே விரட்டப்பட்டவர்கள். பார்க்கப்போனால் இவர்களே தமிழரிலும் பார்க்க அகதிகள் அந்தஸ்துக்கு அருகதையானவ்ர்கள். இன்று திரும்பவும் யாழ்ப்பாணத்தை நோக்கி செல்கின்றார்கள். யாழ்-தமிழர்களல்ல.

  எனவே உருமை, விடுதலை பற்ரி பேசுவோர் தங்களிற்குள்ள தகைமைகளை முதலில் மற்ரவர்கழுடன் எடைபோட்டு பார்க்கவும்.– துரை

  Reply
 • thurai
  thurai

  அன்பின் தேனுப்பிரியன்,
  நான் இலங்கையில் வாழும் ஒவ்வொருவரின் கருத்தையும் மதிப்பவன். அங்கு வாழும் மக்களிற்கு சாதி, மத, இன பேதமின்றி மதிப்புக்கொடுப்பவன். அங்குள்ளவர்களின் பிரச்சினைகளை அவர்களே பேசித்தீர்க்க வேண்டும். நான் பொதுவான கருத்துக்களையே எழுதுகின்றவன். புலம்பெயர் நாட்டிலிருந்து கொண்டு இலங்கையின் விடயங்களில் தலையிட்டு விளையாடுபவர்களையே எதிர்ப்பவன். அதுமட்டுமல்ல புலம்பெயர் நாட்டிலுள்ளவரின் பலத்தோடு இலங்கையில் வளரும் அரசியல் ஆபத்தானதுதான்.

  இங்கு தொடங்கிய விடயத்திற்கு அப்பால் தேவையற்ர விவாதங்கள் தொடர்வதையும் இதுவரை அறிந்திருப்பீர். சிங்களவர்களின் குடியேற்ரம் பற்ரிக்கதைக்கும் நாம் தமிழர்கள் தெற்கில் போய் குடியேறுவதைப் தடுக்க ஏதாவது நடவடிக்கை எடுத்தோமா? அல்லது வன்னியில் போய்குடியேற முயற்சித்தோமா? புலம்பெயர் தமிழர் காணிகள் வாங்கும் போது கொழும்பில் அல்லது நகரங்களை தேடியே வாங்கினார்கள். முதலில் எம்மண்ணை விரும்பும் மக்களாக மாறவேண்டும். அப்போதுதான் எங்களிற்கு உருமை பற்ரி பேச தகைமையுண்டு. –துரை

  Reply
 • thenupiriyan
  thenupiriyan

  அன்பின் துரை நீங்கள் எழுதியதில் முதற்பந்தியை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன்.

  //சிங்களவர்களின் குடியேற்ரம் பற்ரிக்கதைக்கும் நாம் தமிழர்கள் தெற்கில் போய் குடியேறுவதைப் தடுக்க ஏதாவது நடவடிக்கை எடுத்தோமா? //

  இந்த விடயத்தில் எல்லோருமே தெளிவில்லாமல் இருக்கின்றீர்கள்.ஒரு நாட்டில் வாழும் எந்தவொரு இனமும் எந்தவொரு பிரதேசத்திலும் வாழ்வதற்கு உரிமை உண்டு. இதனை யாரும் தடுக்கமுடியாது. நான் கொழும்பில் வாழ முடியுமென்றால் கொழும்பில் உள்ள ஒருவர் யாழப்பாணத்தில் வாழ்வதற்குத் தடை விதிக்கமுடியாது. யாழ்ப்பாணத் தமிழர்கள் கொழும்பில் வாழ்ந்துகொண்டு சிங்களவர்கள் யாழப்பாணத்தில் வாழமுடியாது என்று கூறமுடியாது.

  மக்கள் எங்கும்போய் குடியேறலாம் அது பிரச்சனை அல்ல.ஆனால் அரச ஆதரவுடனான திட்டமிட்ட குடியேற்றங்கள் ஒரு இனத்திற்குச் சார்பாக மேற்கொள்ளப்படுதல் தவறு. கொழும்பில் ஒரு தமிழன் அல்லது ஒரு முஸ்லீமாவது அரச ஆதரவுடன் குடியேற்றப்பட்டதற்கு உதாரணம் காட்டுவீர்களா? கொழும்பிலோ அல்லது வேறுபிரதேசங்களிலோ (வடக்கிற்குக் கிழக்கிற்கு வெளியே)அரச காணி தமிழ் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு குடியமர்த்தப்படடிருக்கின்றார்களா?

  வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் காணிகளையும் ஏனைய வாழவாதாரங்களையும் வழங்கி தென்னிலங்கையிலிருந்து சிங்கள மக்களை அழைத்துச் சென்று குடியமர்த்தியமை யாவரும் அறிந்த உண்மை. இதுவும் தமிழர்கள் கொழும்பில் வாழ்வதும் ஒன்று என்று கருதுகின்றீர்களா?

  அண்மைக்கால உதாரணம் யாழ் புகையிரத நிலையத்தில் வந்திறங்கிய சிங்களக் குடும்பங்கள். 30 வருடங்களுக்கு முன்பு இங்கு வாழந்தாகக் கூறி மீண்டும் வாழ வந்திருக்கின்றர்கள். இது தவறல்ல. அந்த சம்பவம் ஒரு நாடகம் மாதிரி அரங்கேற்றப்பட்டதுதான் சந்தேகத்தைத் தருகின்றது. யாழ் புகையிரத நிலையம் ஒரு பாழடைந்த கட்டடிம். எந்தவொரு வசதியும் அங்கு கிடையாது. இவாகள் வருவதற்க இரண்டு நாட்களுக்கு முன்னர் இப் புகையிரத நிலையத்தில் மலசலகூட வசதிகள் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது எவ்வாறு நடந்தது? இதே புகையிரத நிலையம் தான் முன்னர் யாழப்பாண மக்கள் கொழும்பிற்குச் செல்வதற்கான் அனுமதி பெறும் இடமாக இருந்தது. காலையில் 6 மணிக்கு டோக்கன் பெறுவதற்கு முதல் நாள் இரவே மக்கள் வந்து காத்திருப்பார்கள்.அப்போதெல்லாம் அம்மக்களுக்கு இவ்வாறான வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. ஆனால் இப்போது சிங்கள மக்களின் வருகைக்காக முன்கூட்டியே வசதிகள் எல்லாம் செய்து கொடுக்கப்படுகின்றது.

  இவ்வாறு வந்தவர்கள் இரண்டு நாட்களில் யாழ் அரசாங்க மருத்துவ மனைக்குச் சென்று தங்களுக்கு வேலை தரவேண்டும் என்று கேட்டிருக்கின்றார்கள். கொழும்பிற்குச் செல்லும் தமிழர்களும் கொழும்பு வைத்திய சாலைக்குச் சென்று வேலை கேட்கமுடியுமா?

  இவர்கள் வந்து சில நாட்களின் பின் மீள்குடியேற்ற அமைச்சர் வந்து பார்வையிட்டு தேவையான வசதிகளைச் செய்து தருவதாக உத்தரவாதமளிக்கின்றார். இவர்களைப் போலவே புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களும் குடியேறுவதற்கு வந்துள்ளனர். ஆனால் அவர்களைப் பார்வையிடுவதற்கும் உதவிகள் செய்வதற்கும் இன்று வரை எந்தவொரு அமைச்சரும் வரவில்லையே. ஏன் இந்தப் பாகுபாடு?

  திடீரென்று பார்த்தால் ஒரு நாள் இரவோடிரவாக நாவற்குழியிலுள்ள வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் இவர்கள் குடியேறுகின்றனர். குடிசைகள் அமைப்பதற்கான மரங்கள் கிடுகுகள் என்பவற்றையும் உணவுகளையும் ஜாதிக கெல உறுமய வழங்கின்றது. 30 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய இவர்களுக்கு நாவற்குழியில் அரச காணி உள்ளது என்ற விடயம் எவ்வாறு தெரிந்தது? தென்னிலங்கையில் உள்ள அரசகாணியில் தமிழ் மக்கள் இங்கிருந்து சென்று குடியேற அரசாங்கம் அனுமதிக்குமா?

  நாவற்குழி குடியேற்றம் தொடர்பான எதிர்ப்புக்களை அடக்குவதற்கு அரசாங்கம் ஒரு தந்திரத்தைக் கையாண்டது. ஜனாதிபதி இவர்களை வெளியேற்றுமாறு எனக்கு உத்தரவிட்டிருக்கின்றார் என்ற அமைச்சர் டக்ளஸின் அறிவிப் புத்தான் இத் தந்திரம். இப் பிரச்சனை நீர்த்துப் போவதற்காக அரசாங்கம் கையாண்ட தந்திரமே இது. இந்த அறிவிப்பு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. ஆனால் எதுவும் நடைபெறவில்லை. எல்வோரும் அதை மறந்து விட்டனர். இப்போது அது நிரந்தரமாகிவிட்டது.

  தயவு செய்து கொழும்பில் தமிழர்கள் வாழ்வதையும் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் அரசாங்கத்தினால் மேற்கொள்ப்பட்ட – மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்களையும் சமமாகப் பார்த்து பின்னயதை நியாயப்படுத்தாதீர்கள்.

  அண்மையில் இங்கு நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் முன்னாள் நீதியரசர் திரு சி.வி விக்னேஸ்வரன் ஒரு கருத்தைக் கூறியிருந்தார். தமிழர்களின் தொகையை 10 சதவீதத்திற்குள் கொண்டுவந்தால் அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கமுடியுமென்று ஒரு சிங்கள சட்டத்தரணி அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளாராம். உண்மையில் எதிர்காலத்தில் இதுதான் நடைபெறப் போகின்றது.

  30 வருடங்களுக்குப் பின்னர் 2011ம் ஆண்டு வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்படவுள்ளது. அதில் பெறப்படும் தகவல்களும் தரவுகளும் எமது இருப்பைத் தீர்மானிக்கப் போகின்றது.

  துரை அவர்களே வன்னியில் நாங்கள் சென்று குடடியேறவில்லை என்று குறிப்பிட்டிருந்ததீர்கள் அது முற்றிலும் சரியானது. எல்லை களில் நாம் குடியேறாவிட்டால் எல்லைகள் எம்மை நோக்கி நகரும் என்ற ஜே.ஆரின் தந்திரத்திற்கு நாம் பலியாகிவிட்டோம்.

  Reply
 • thurai
  thurai

  அன்பின் தேசப்பிரியன்,
  திடமிட்ட குடியேற்ரம் சிங்களவர் தமிழர் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான ஒரு திட்டம் மிட்டநடவடிக்கை. இது எம்து போராட்டம் தொடங்கு முன்பே தெரிந்த விடயம். இங்கு பழைய தவறுகளையோ யாரையும் குற்ரம் சொல்வதையோ விரும்பவில்லை. ஆனால் இன்றைய நிலைமையில் தமிழர் என்ன செய்யலாம் என்பதே கேள்வியாக உள்ளது.

  குறிப்பாக ஈழத்தமிழர்கள் தாம் கண்ட அழிவிலிருந்து பாடங்களை கற்றுள்ளார்களா என்பதே என்முன்னுள்ள கேள்வி. வாழ்கை ஓர் போராட்டம் போல், ஈழத்தமிழர்கள் எதிர்நீச்சல் போடுவாகளா? அன்று வடபகுதியில் மேற்குலக வாழ்விலும் மேலான வாழ்வு வாழ்ந்தவ்ர்கள் தமிழர். இன்று மேற்குலக பணமின்றி வாழ்வே இல்லையென்ற நிலைமை இதற்கு யார் காரணம்?

  எனது ஆழமான கருத்து என்னவெனில் இலங்கையில் வாழும் யாவரும் சுபீட்சமான் வாழ்வு வாழ்வத்ற்கு இன மத வேறுபாடின்றி ஒன்றிணையும் போதுதான் இலங்கையும் விடுதலை பெறும் தமிழர்கழும் உருமையுடன் வாழ்வார்கள். இதனிலிருந்து தவறும் போது சிங்களவரும் அமைதியாக வாழமுடியாது, தமிழரும் வாழமுடியாது

  எனவே முதலில் மக்கள் யாவரும் ஒன்றே என்ற மனப்பக்குவம் தமிழரிடம் வேண்டும். இல்லையேல் முதலில் சிங்களவனைப் பகைப்பார்கள், பின்பு முஸ்லிமை, அடுத்து மதங்களை, அடுத்து சாதிகளை அடுத்து தமிழனே தமிழனை இதுவே இன்று நாம் கண்முன்னே காண்கின்றோம்.– துரை

  Reply
 • தோஸ்து
  தோஸ்து

  //யாழ்பபாணத்திலும் இராணுவம் அடித்தால் புங்குடுதீவிற்கே போகலாம்.//துரை
  புங்குடுதீவு எங்கிருக்கு? யாழ்பபாணத்தில் இல்லையா! 1990ல் புங்குடுதீவு வேலனை மற்றும் அதை அண்டியபகுதி மக்கள் சிங்களப்படையால் 100 கணக்கில் கொல்லப்பட்டு சடலங்கள் கிணறுகளில் போடப்பட்டு புல்டோசரினால் அக்கிணறுகள் தூர்த்து மூடப்பட்ட கூட்டு படுகொலைகள் பற்றி அறியவில்லையா!
  //முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் பிறந்த வளர்ந்த இடத்திலிருந்தே விரட்டப்பட்டவர்கள். பார்க்கப்போனால் இவர்களே தமிழரிலும் பார்க்க அகதிகள் அந்தஸ்துக்கு அருகதையானவர்கள்//
  யார் முஸ்லிம்களின் அகதி கோரும் உரிமையை மறுத்தது. தமிழர்கள் பிறந்த வளர்ந்த இடத்திலிருந்தே விரட்டப்படாது வாடகை இடத்திலிருந்தா விரட்டப்பட்டனர். வியாபாரம் செய்ய போன புங்குடுதீவு பெற்றோரின் பிள்ளைகளின் இரண்டு தலைமுறை பிறப்பிடம் அவர்கள் வியாபாரம் செய்த ஊர்கள்தான்.

  Reply
 • thuai
  thuai

  //சிங்களப்படையால் 100 கணக்கில் கொல்லப்பட்டு சடலங்கள் கிணறுகளில் போடப்பட்டு புல்டோசரினால் அக்கிணறுகள் தூர்த்து மூடப்பட்ட கூட்டு படுகொலைகள் பற்றி அறியவில்லையா!//தோஸ்து
  அப்போ கடந்த 30 வருடங்களில் தென்னிலங்கையில் வடக்கிலும் பார்க்க தமிழர்களிற்குப் பாதுகாப்புள்ளதென்பதை ஏற்கின்றீரா.
  //தமிழர்கள் பிறந்த வளர்ந்த இடத்திலிருந்தே விரட்டப்படாது வாடகை இடத்திலிருந்தா விரட்டப்பட்டனர். வியாபாரம் செய்ய போன//
  இலங்கையில் நடந்த இதே சம்பவம் தமிழர்களிற்கு உலகமெங்கும் வாழும் தமிழர்களிற்கும் நடக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை-துரை

  Reply
 • நந்தா
  நந்தா

  தேனுப்பிரியன் எந்தப் புத்தகத்திலிருந்து இந்த தகவல்களை அள்ளி விடுகிறார் என்பது தெரியவில்லை.
  தவிர குடியேற்றத் திட்டங்கள் தொடங்கினால் அவை முடிவுற 30 ஆண்டுகளுக்கும் அதிகமாகும். இவர் சொல்லும் திட்டங்கள் யு என் பி காலத்தில் தொடங்கப்பட்டவை என்பதும் அந்த திட்டங்கள் எந்த அரசு வரினும் தொடரும் என்ற விஷயம் தெரியாதா?

  சிறி பதி என்பதுதான் “பதவியா” என்று மாறியது.

  காடாகக் கிடந்த இடங்களில் குடியேற்றம் செய்ய அரசு முயற்சிப்பதை எந்த சட்டம் தடை செய்கிறது?

  புங்குடுதீவார் குடியேற்றத் திட்டங்களுக்குப் போவதை விட சுருட்டுப் பெட்டியுடன் சிங்களவனுக்கு கடுக்காய் கொடுத்து காசு சம்பாதிக்கலாம் என்று போனவர்கள். அது மாத்திரமல்ல தமிழன் என்பவன் ஏமாற்றுப் பேர்வழி என்ற அபிப்பிராயத்தை சிங்கள மக்களிடையே தோற்றுவித்தவர்களும் இவர்களே ஆவர்.

  தேனுப்பிரியனும் புலி வால்களும் தமிழ் அரசியல்வாதிகளும் “தமிழ்” பகுதிகள் என்று அடையாளப்படுத்தும் விஷயங்கள் இலங்கைச் சட்டப் புத்தகதில் எங்கும் கிடையாதவை.

  தீவுப் பகுதிகளில் காய்ந்து கொண்டிருந்த மக்களை கிளினொச்சிக்கு குடியேற்றம் செய்த சாவகச்சேரி குமாரசாமி செல்வனாயகம் கூட்டங்களினால் “வாலறுந்தநரி” என்று நையாண்டி செய்யப்பட்டார். தேர்தலிலும் தோற்கடிக்கப்பட்டார்கள்.

  நிலம் இல்லாதவர்கள் நிலம் கிடைத்துப் போவதை தடைசெய்ய வேண்டும் என்பது நியாயமாகத் தெரியவில்லை.

  எனது பெறோரும் 1947 ஆம் ஆண்டு வவுனியாவில் குடியேற்ற வாசிகளாக அரச உதவிகளுடன் குடியேறியவர்கள் என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

  தினமும் ஜனத்தொகை பெருகுவதால் நிலவளம்நோக்கி மக்கள் குடியேறுவார்கள் அல்லது அரசு குடியேற்றம் செய்வார்கள்.

  யாழ்ப்பாணிகள் வவுனியாவில் குடியேற விரும்பியதில்லை. அவர்கள் 10ஆம் வகுப்பு படித்தவுடன் கொழும்பில் “உத்தியோகம்” தேடி யாழ்தேவி தேடிப் போனவர்கள்.கொழும்பில் குடியேற்றத் திட்டங்கள் எதுவும் கிடையாதே. அப்படியிருக்க யாழ்ப்பாணியை “அரச செலவில்” எப்படிக் குடியேற்றுவது?

  வவுனியா பிரபலம் பெற்றது யாழ்ப்பாணத்திலிருந்து புலிகள் தமிழர்களை விரட்டிய பொளுதுதான் என்பதை தெரிந்து கொள்வது நல்லது. வவுனியா நகரசபை வரை யாழ்ப்பாணிகள் தங்கள் “லக்கேஜுகளுடன்” வந்து சாதிகள் பற்றி பகிரங்கமாகவே கத்துகிறார்கள்.

  1990 ஆம் ஆண்டுக்கு முன்னரே அதாவது தீவுப்பகுதிகளில் எந்தப் பிரச்சனிகளும் இல்லாத பொளுது ஜேர்மனிக்கு வந்த தீவார் கட்டிய கதைகள் எந்த அடிப்படையில்? சுவிற்சர்லாந்தில் புங்குடுதீவார் ஆடு திருடி ஆட்டுக்காரனுக்கே இறைச்சி விற்ற கதைநடந்தது 1990 க்கு முன்னர் என்பது இன்னொரு வேடிக்கை!

  இலங்கைக்கும் மகாராணிக்கும் என்ன சம்பந்தம்? சில வேளைகளில் யாழ்ப்பாணிகள் பிரிட்டிஷ் வாரிசுகள் என்று எண்ணிக் கொண்டிருகிறார்களோ தெரியவில்லை.பிரிட்டனைப் பற்றி பிரிட்டிஷ் வம்சா வழியினரே கனடாவில் அதிகமாக விமர்சனம் செய்பவர்கள் என்பது பலருக்கு தெரியவில்லை.

  முஸ்லிம்கள் தேசிய இனமாக இருந்து விட்டுப் போகட்டும். அவர்கள் “தமிழ்” பிரச்சனைகளில் தலையிடாமல் இருக்கட்டும்.

  குடியேற்றங்கள் செய்யாதே என்று கூறிய யாழ்ப்பாணிகள் தமிழர்களையும் குடியேற்றுங்கள் என்று கேட்டது கிடையாது. இன்றும் நிலமில்லாமல் அவதியுறும் ஆயிரக்கணக்கான சிறுபான்மைத் தமிழர்களுக்கு காணிகள் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று செல்வனாயகங்கள் முயற்சி செய்தது கிடையாது. ஏனென்றால் காணியில்லதவர்கள் என்ற தகுதிக்கு 99% சிறுபான்மையினரும் தகுதி பெற்று காணி பெற்று யாழ்ப்பாணத்தை விட்டுப் போய்விட்டால் தங்களின் நயினார் பதவிகள் செல்லாக் காசாகிவிடும் என்று பயந்தார்கள்.

  3 அடி ஒழுங்கைக்கு 30 வருடம் வழக்கு பேசும் யாப்பாணிகள் வெளி மாவட்டங்களுக்குப் போய் குடியேற என்ன தடை இருந்தது?

  10 ஏக்கர் திட்டம், 50 ஏக்கர் திட்டம் என்று யு என் பி காலத்தில் காணிகள்பெற்ற யாழ்ப்பாணிகள் “பிரஜா உரிமை” இல்லாத “தோட்டக்காட்டானை” தங்களின் காணிகளில் குடியிருத்தினார்கள். பிரஜா உரிமை உள்ள யாழ்ப்பாணத்து சிறுபானமையினத்தவனைக் காவலுக்குக் குடியிருத்தினால் தாங்கள் விரும்பியபடி துரத்த முடியாது என்ற காரணத்தினால் என்பதையும் அறிவோம்.

  Reply
 • thenupiriyan
  thenupiriyan

  //தேனுப்பிரியன் எந்தப் புத்தகத்திலிருந்து இந்த தகவல்களை அள்ளி விடுகிறார் என்பது தெரியவில்லை.//நந்தா
  நான் எனது பட்டமேற்படிப்பிற்கு ஆய்விற்காகத் தெரிந்தெடுத்த தலைப்பு வடக்குக் கிழக்குப் பிரதேசங்களின் குடியேற்றத் திட்டங்களும் அவற்றின் சமூக பொருளாதாரத் தாக்கங்களும் என்பதாகும். இங்கு நான் கூறிய தகவல்களும் தரவுகளும் இலங்கை அரசாங்கத்தின் அறிக்கைகளிலிருந்து பெறப்பட்டதாகும். இவை தவறானவை என நீங்கள் நிரூபித்தால் இலங்கை அரசாங்கத்தின் அறிக்கைகள் தவறானவை என்ற முடிவிற்குத்தான் வரவேண்டியிருக்கும்.
  பதவியாவில் தமிழர்கள்தான் முதலில் குடியமர்த்தப்பட்டார்கள் என்று கூறியது நீங்கள்தான். சுதந்திரக் கட்சி ஆட்சிக்காலத்தில் குடியேற்றத் திட்டங்கள் அமைக்கப்படவில்லை என்று கூறியதும் நீங்கள் தான். எனவே ஆதாரங்களுடன் அவற்றை எழுதுங்கள் என்று உங்களிடம் கேட்டேன். நீங்கள் என்னை ஆதாரத்துடன் எழுதும்படி கேட்டீர்கள். அப்போது எனக்கு விளங்கிவிட்டது உங்களிடம் ஒன்றுமே இல்லையென்று.

  //குடியேற்றத் திட்டங்கள் தொடங்கினால் அவை முடிவுற 30 ஆண்டுகளுக்கும் அதிகமாகும். // நந்தா
  குடியேற்றத்திட்டங்கள் முடிவுற 30 வருடங்கள் முடியுமென்று யார் கூறியது? நீங்கள் அறிந்த ஒரேயொரு அபிவிருத்தித்திட்டம் மகாவலி அபிவிருத்தித் திட்டம் தான. அதுதான் 30 ஆண்டுத் திட்டமாக 1970ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதை வைத்துக் கொண்டு எல்லாக் குடியேற்றத் திட்டங்களும் முடிவுற 30 வருடங்களுக்கு மேல் செல்லும் என்ற முடிவிற்கு வரலாமா? மேலும் மகாவலி அபிவிருத்தி திட்டம் 1977ம் ஆண்டு ஜே.ஆரின் ஆட்சிக்காலத்தில் ஆறாண்டுத் திட்டமாக துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது கூடத் தெரியாது போலும்.

  இலங்கையின் முதலாவது பாரிய குடியேற்றத் திட்டமான கல்லோயாக் குடியேற்றத்திட்டம் 1950ம் ஆரம்பிக்கப்பட்டு 1958ம் ஆண்டுவரை 43 கிராமங்கள் உருவாக்கப்பட்டதோடு திட்ட வேலைகள் முடிவிற்கு வந்தது. எத்தனை வருடங்கள் என்பதைக் கணக்குப் பார்த்துக்கொள்ளுங்கள்.

  //இவர் சொல்லும் திட்டங்கள் யு என் பி காலத்தில் தொடங்கப்பட்டவை//நந்தா
  குடியேற்றத்திட்டங்கள் ஆரம்பித்த ஆண்டுகளைக் கூடத் தந்திருக்கின்றேன். ஆனால் மீண்டும் இவை யு என் பி காலத்தில் தொடங்கப்பட்டவை என்று கூறுகின்றீர்கள்.

  //காடாகக் கிடந்த இடங்களில் குடியேற்றம் செய்ய அரசு முயற்சிப்பதை எந்த சட்டம் தடை செய்கிறது//
  வடக்குக் கிழக்கில் மட்டும்தான் காடுகள் இருக்கின்றதா? தெற்கிலும் உண்டு. அங்கும் குடியேற்றம் செய்லாம். இது பிரச்சனை அல்ல. யாரைக் குடியமர்த்துகின்றார்கள் என்பதுதான் பிரச்சனை.

  //நிலம் இல்லாதவர்கள் நிலம் கிடைத்துப் போவதை தடைசெய்ய வேண்டும் என்பது நியாயமாகத் தெரியவில்லை.// நந்தா
  ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் சிங்களமக்கள் மட்டுமன்றி தமிழ் மக்களும் நிலம் இல்லாமல் இருக்கின்றார்கள். வடக்கு கிழக்கில் மட்டும்தான் நிலங்கள் உள்ளன என்றில்லை. அனுராதபுரத்திலும் இருக்கின்றது அம்பாந்தோட்டையிலும் இருக்கின்றது. அங்பகும் நிலம் கிடைத்துப் போகலாம்.

  //எனது பெறோரும் 1947 ஆம் ஆண்டு வவுனியாவில் குடியேற்ற வாசிகளாக அரச உதவிகளுடன் குடியேறியவர்கள் என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.//
  ஏதோ அம்பாந்தோட்டையில் அரச உதவியுடன் குடியேறியது போலக் கூறுகின்றீர்கள். அரசாங்கம் தமிழர்களுக்கு காணி வழங்கவில்லை என்று நான் ஒருபோதும் கூறவில்லை. அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு உள்ளேயே காணி வழங்கிக் குடியேற்றியுள்ளது. ஒருபோதும் வடக்குக் கிழக்கிற்கு வெளியே காணி வழங்கிக குடியேற்றியது கிடையாது.

  //3 அடி ஒழுங்கைக்கு 30 வருடம் வழக்கு பேசும் யாப்பாணிகள் வெளி மாவட்டங்களுக்குப் போய் குடியேற என்ன தடை இருந்தது//
  ஒன்றை விளங்கிக் கொள்ளுங்கள் மக்கள் தாமாகச் சென்று குடியேறுகின்ற விடயத்தை நான் இங்கு பேச வரவில்லை. ஏனெனில் அது பிரச்சனையுமல்லல. அதற்குத் தடைகளும் இல்லை. அரச ஆதரவுடன் மக்கள் குடியேற்றப்படுவததான் இங்கு பேசப்படும் பொருள்.

  Reply
 • நந்தா
  நந்தா

  சிங்களவர்களைக் கொழும்பிலோ அல்லது அனுராதபுரத்திலோ குடியேற்ற வேண்டும் என்று எந்த சட்டமும் கிடையாது. வடக்கு கிழக்குத்தான் இன்றும் சனச் செறிவு இல்லாத பிரதேசங்கள். அதனையும் பொய் என்று கூறத் தேவையில்லை.

  ஆதாரங்களை இன்னமும் காட்டாது ஆய்வுக் கட்டுரை என்ற கதை யாருக்கு வேண்டும்?

  வடக்குக் கிழக்கை யாரும் தமிழர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கவில்லை என்பதை முதலில் தெரிந்து கொண்டு குடியேற்றங்கள் பற்றி கூறலாம்.

  கல்லோயா திட்டம் யு என் பி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இல்லையென்று சொல்லுகிறீர்களா?

  இலங்கயில் குடியேற்றத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் பொழுது காணிகள் இல்லாதவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள் “கசட்” மூலமாகக் கோரப்பட்டே காணிகள் வழங்கப்பட்டுள்ளன. காலி, மாத்தறைப் பகுதிகளில் காணியில்லாப் பிரச்சனை யாழ்ப்பானத்தை விட அதிகம். வவுனியாவுக்கு மாத்தறையிலிருந்து சிங்களவர்கள் காணிக்கு விண்ணப்பித்து வந்து குடியேறுவதை தடுக்க யாரும் கிடையாது. அதற்கு செல்வனாயகத்திடம் அனுமதி கோர வேண்டும் என்பது தமாஷான கற்பனை.

  இதுவரையில் இலங்கை அரசு “கள்ள” உறுதிகள் மூலம் சிங்களவர்களுக்குக் காணி கொடுத்ததாகத் தகவல்கள் கிடையாது.

  முடிக்குரிய நிலங்களில் குடியேற்றம் செய்வதை அரசே தீர்மானிக்கும். செல்வனாயகம் ஆட்கள் அல்ல!

  90 மைல்களுக்கப்பால் இருந்து யாழ்ப்பாணிகள் வவுனியாவுக்கு வருவதற்கே “நுளம்புக் கடி”, பாம்புக்கடி என்று காரணங்கள் காட்டி வந்து குடியேற தயக்கம் காட்டியவர்கள்.

  யாள்ப்பாணத்தில் காணியில்லாத மக்களுக்குக் காணிகள் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று எந்த செல்வனாயகமும் முயற்சித்தது கிடையாது. குடியேற்றங்களுக்கு சிங்களவர்கள் வருகிறார்கள் என்று “துவேஷம்” கிளப்பி யாழ்ப்பாணிகளின் வாக்குக்களைப் பெற்று கொழும்பு போய் அல்பிரட் கார்டின்ஸ்ஸில் வசதியாக வாழத்தான் செல்வனாயகங்கள் முயற்சித்தார்கள்.

  அந்த துவேஷ அரசியலினால் கல்லோயா திட்டத்தில் காணி பெற்றுக் குடியேறிய கிழக்கு மாகாணத் தமிழர்கள் கொல்லப்பட்டும் துரத்தப்பட்டும் இருக்கிறார்கள். அந்தக் குடியேற்ற வாசிகள் பற்றி யாழ்ப்பாணிகள் எந்தக் காலத்திலும் கவலைப் பட்டது கிடையாது.

  கிழக்கு மாகாணத் தமிழர்களை ஏறெடுத்தும் பாராத யாழ்ப்பாணிகள் விடுதலை என்று புறப்பட்ட பின்னரும் அந்த மனப்பானமையைக் கை விடவில்லை. கருணாவும் பிள்ளயானும் பிச்சுக்கிட்டது புரிந்திருக்கும். வடக்கு – கிழக்கு இணைப்பையே எதிர்த்ததும் இந்த யாழ்ப்பாணிகள் என்பது பட்ட வர்த்தனமான உண்மை.

  இலங்கயில் வகுப்பு வாதம், துவேஷம் கிளப்ப “ஆயுதங்கள்”, “காரணங்கள்” தேடுகிறீர்களெ ஒழிய சாதாரண மக்களின்நடை முறைப் பிரச்சனைகளை புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை.

  Reply
 • தோஸ்து
  தோஸ்து

  //கொழும்பில் அடி விழுந்தால் யாழ்ப்பாணம் போய் வியாபாரம் செய்யலாம். //-துரை
  //அப்போ கடந்த 30 வருடங்களில் தென்னிலங்கையில் வடக்கிலும் பார்க்க தமிழர்களிற்குப் பாதுகாப்புள்ளதென்பதை ஏற்கின்றீரா.//துரை
  கொழும்பு தென்னிலங்கையில் இல்லை. 1983 ம் ஆண்டு கடந்த 30 வருடங்களில் அடங்காது என்கிறீர்கள். 1)தமிழின படுகொலை நடந்தாலும் அங்கேயே நின்று பரலோகம் போகவேணுமே தவிர தமிழன் அகதியாய் புலம்பெயர்ந்து உயிர் தப்ப கூடாது.2)ஈழத்தமிழனுக்கு உரிமை கேட்கும் அருகதை கிடையாது.3) வியாபாரம் பணம் அரசியல் உரிமைபோராட்டம் போன்றவை கெட்டவிடயங்கள்.
  இந்த அரும்பெரும் அடிப்படை உண்மைகளை விளங்காது நான் பின்னோட்டமிட்டது சாதரணதப்பில்லை மகா தப்பு. மன்னித்துகொள்ளுங்கள்.வெற்றி உங்களிற்குதான். வணக்கம்.

  Reply
 • thenupiriyan
  thenupiriyan

  அன்புள்ள நந்தா நித்திரை செய்பவர்களை எழுப்பலாம். நித்திரை செய்வது போல் நடிப்பவர்களை எழுப்பமுடியாது. அனைத்துக் குடியேற்றத் திட்டங்களும் யு என் பி காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. சுதந்திரக் கட்சி ஆட்சிக் காலங்கள் தமிழர் வாழ்வில் பொற்காலங்கள்.. சிங்கள அரசியல்வாதிகள் மிகவும் நல்லவர்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உடையவர்கள். தங்களுடைய நாட்டின் ஒரு பகுதியில் வாழ்வதற்கு எங்களை அனுமதித்திருக்கின்றார்களே. அதற்கு நன்றியுடையவர்களாக இருப்போம். அனைத்துப் பிரச்சனைகளும் தமிழர்களாலேயே குறிப்பாக யாப்பாணிகளாலும் கிறிஸ்தவ செல்வநாயகத்தாலும்தான் உருவாக்கப்பட்டன. நந்தா அவர்களே வெற்றி உங்களுக்கே. இதுதான் நான் எழுதுகின்ற கடைசிப் பின்னூட்டல். இந்த விடயத்தில் மட்டுமல்ல நீங்கள் எழுதுகின்ற எந்தவொரு கருத்திற்கும் பின்னூட்டல் எழுத மாட்டேன்.

  Reply
 • rohan
  rohan

  தேனுப்பிரியன் // இந்த விடயத்தில் மட்டுமல்ல நீங்கள் எழுதுகின்ற எந்தவொரு கருத்திற்கும் பின்னூட்டல் எழுத மாட்டேன்.//
  வேறொரு தலைப்பில் வன்னியில் சுதந்திரக் கட்சி காலத்தில் கட்டப்பட்ட பாடசாலைகளின் விபரத்தைநான் புள்ளிவிபரங்களுடன் சொன்னேன். இன்னொரு தலைப்பில் கியுபெக் பற்றிய திரிபுகளை சுட்டிக் காடியிருந்தேன். ஆனால், ‘எங்கள் அருமையான புதினம் படைத்தலில் உண்மையின் பாதிப்பு கொஞ்சமும் வராமல் பார்த்துக் கொள்வோம்’ என்று முனைப்பாக இருப்போரிடம் இப்படித் தான் தோற்றுப் போக வேண்டியிருக்கிறது.

  தோஸ்து // இந்த அரும்பெரும் அடிப்படை உண்மைகளை விளங்காது நான் பின்னோட்டமிட்டது சாதரணதப்பில்லை மகா தப்பு. மன்னித்துகொள்ளுங்கள்.வெற்றி உங்களிற்குதான். வணக்கம்.//
  தர்க்கித்தல் ரீதியில் தமது கருத்துக்களைச் சொல்லி இத் தளத்தைச் செழுமையாக வைத்திருக்க முயலும் பங்காற்றுவோர் இவ்வாறு சரணாகதி அடையவேண்டி இருப்பது இத்தளத்தில் கருத்து எழுதும் மற்றவர்கள் ‘சைட் எடுத்து’வேண்டுமென்றே மெளனமாக இருப்பதினால் தான்.

  Reply
 • தோஸ்து
  தோஸ்து

  //இத்தளத்தில் கருத்து எழுதும் மற்றவர்கள் ‘சைட் எடுத்து’வேண்டுமென்றே மெளனமாக இருப்பதினால் தான்.//
  இங்கு பலவிதமான கருத்துகளுடன் வாசகர்கள் இருந்தாலும் அவர்கள் முன்னெடுக்கும் முயற்சி என்பது பெரும்பாலும் இரண்டு வேலைத்திட்டத்திற்குட்பட்டது.
  1)தமிழரிடைய காணப்படும் சின்ன சின்ன முரண்பாடுகள் பிற்போக்குதனங்களை பெரிதாக்கி ஈழத்தமிழினத்தை சிறு சிறு கூறுகளாக்கி சிங்கள தேசியத்திற்குள் கரைத்து ஈழத்தமிழ்தேசியத்தை அழிப்பது.இவர்களில் புலியெதிர்ப்பு மனநிலை சமூகக்கோபங்கள் சிறிலங்கா இந்திய புலானாய்வு முகவர்கள் மற்றும் சுயநலக்காரர்கள் அடங்குகிறார்கள்.
  2)ஈழத்தமிழ்தேசியத்தை அழிவிலிருந்து தடுக்க முயற்சிப்பவர்கள்.இவர்களில் இனவுணவாளர்கள்.முன்னாள் போராளிகள் மற்றும் புலி ஆதரவாளர்கள் அடக்கம்.
  ஈழத்தமிழ்தேசியத்தை அழிக்க முனைபவர்களை பார்த்து சொல்ல கூடியது.இன்றைய நவீன உலகில் அழிவின் விளிம்பிலிருக்கும் பறவையினங்களை மிருகங்களை கடல்வாழ் உயிரினங்களை அழிவிலிருந்து தடுப்பதற்கு இயற்கை ஆர்வலர்கள். பொறுப்பு வாய்ந்த நாடுகள் என எவ்வளவு பெருமுயற்சி எடுக்கின்றன. ஆனால் தொன்மை வாய்ந்த ஈழத்தமிழ்தேசிய இனத்தை சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்து அழிப்பதற்கு பெரு முயற்சி எடுக்கின்றீர்கள் அதாவது மானிடபண்பை தொலைக்கிறீர்கள்.
  //இவ்வாறு சரணாகதி அடையவேண்டி இருப்பது …..//
  விதாண்டவாதம் குதர்க்கத்தில் ஈடுபடும் ஆர்வமின்மையே.

  Reply