எல்லா இசைப்பிரியாக்கள் பற்றிய உண்மையும் வெளிவரவேண்டும்! தண்டிப்பதற்காக அல்ல! உண்மையை அறிந்து அமைதிகொள்ள! : வாசுதேவன்

Isaipiriya_LTTE_Jounalistஅந்த அழகிய கண்கள் இன்னமும் என் மனதை உறுத்துகிறது! உன் மரணம் என்னை உறைய வைத்துவிட்டது! முன்பொருமுறை உன்னை நிதர்சனம் தொலக்காட்சியில் உன் அழகைப்பார்த்து பார்த்து என் நண்பனுக்கு மணிக்குட்டி என என் ஆண்மைக்கே உரிய வக்கிர புத்தியுடன் கூறியது இன்னமும் நினைவிருக்கிறது! ஆனால் நீ இன்று இல்லை! நீ ஏன் கொல்லப்பட்டாயோ தெரியவில்லை. ஆனால் நீ கொல்லப்பட்டு ஒன்றரை ஆண்டுகளை கடந்த நிலையில் உன் சடலத்தின் புகைப்படங்களை பார்க்கிறோம்! உன் சடலத்தை இணையங்களில் புலிவியாபாரிகள் ஏலம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்! உற்றுப் பார்க்கிறேன். ஆம் நீ சுடப்பட்டுதான் இறந்திருக்கிறாய்! ஆனால்.. ஆனால்… அப்போது என் மனம் சஞ்சலப்படுகிறது நீ எப்படி கொல்லப்பட்டாய் என்பது புலனாகிறது.

ஆனால் 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30திகதி புலிகளால் கைது செய்யப்பட்ட செல்வி எப்படி கொல்லப்பட்டிருப்பாள் என்ற கேள்வி என்னை இப்போ உறுத்தத் தொடங்கிறது! அகில உலக பென் விருது பெற்ற ஒரு பெண் கவி! இவளைக் கடத்திய புலிகள் இவளை சுட்டுக் கொன்றிருப்பாரகளா? அடித்துக் கொன்றிருப்பாரகளா? அல்லது உயிருடன் தான் புதைத்திருப்பார்களா? 1991இல் மோபைல் கமரா கிடையாததால் தான் அவளின் படங்களும் இணையத்தில் உலா வரவில்லையோ என்னவோ! யாரும் அதைப்பற்றி கதைப்பதும் கிடையாது! இன்று மனித உரிமைகள் பற்றி கூவுபவர்கள் தயவு செய்து சொல்லுங்கள் செல்வியை எப்படிக் கொன்றீர்கள்? ரவைகள் வீணாகிவிடும் என்று உயிருடன் தான் புதைத்திருந்தாலும் பரவாயில்லை! தயவு செய்து கூறுங்கள்! அவளின் சொந்தங்கள் உங்களை இன்னமும் மன்னிக்க தயாராவே உள்ளார்கள்!

நேற்று முன்தினம் மீளவும் இசைப்பிரியா வருகிறாள். இந்த முறை சனல் 4 தொலைக்காட்சியில் வருகிறாள். அவளின் தோழி, கொல்லப்பட்டது இசைப்பிரியா தான் என உறுதியளித்து விட்டு அவள் ஒரு போராளி அல்ல, ஒரு ஊடகவியலாளினி மற்றும் அவள் ஒரு சிறந்த கலைஞி என்று கூறுகிறாள். எனக்கு கோபம் மீளவும் வருகிறது! ஆயுதம் தரிக்காது ஒரு பெண்! என்னைப் போன்ற ஒரு கலைஞி அவளை எப்படி இப்படிக் குரூரமாக கொலை செய்யலாம்? ஆனால் மீளவும் என்மனம் எங்கோ போகிறது! இன்று தொலைக்காட்சியில் பார்த்த அந்தக் குரூரத்தை நேரில் பார்த்த அந்தக் கணங்களை நோக்கி என் மனம் மீளவும் போய்விடுகிறது! செப்டெம்பர் 21, 1989 அன்று மதியம் திருநெல்வேலியில் நண்பன் வீட்டில் இருந்து மானிப்பாய் செல்ல சைக்கிளில் போகையில் பட், பட் என்று துப்பாக்கி சத்தம். சனங்கள் அல்லோல கல்லோலப்பட்டு ஓடுகிறார்கள்! ஒரு பெட்டையை யாரோ மண்டையில் போட்டு விட்டார்கள்! நான் சைக்கிளில் அந்த இடத்தை கடந்து தான் போக வேண்டும்! ஒன்றரை ஆண்டுகள் யாழ் வைத்தியசாலையில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் அவதியுற்றதாலோ என்னவோ இரத்தம் என்றால் எனக்கு மயக்கம் வரும். இருந்தாலும் விரைவாக நான் அந்த இரத்தம் சொட்டும் உடலைக் கடந்து தான் போக வேண்டும்!

ஆமி வரமுன் போக வேண்டும். இதயம் வேகமாக துடிக்க எழுந்து நின்று சைக்கிளை மிதிக்கிறேன். சடலத்தை கடக்கும் போது திரும்பி பார்க்கிறேன்! இரத்த வெள்ளத்தில் ஒரு பெண்! அந்த சிவப்பு ரத்தம் என் தலையை கிறுகிறுக்க வைக்கிறது, மயக்கம் வருவது போல் உள்ளது, இருந்தும் வேகமாக சைக்கிளை மிதிக்கிறேன், சிறிது தூரம் போனதும் திரும்பி பார்க்கிறேன், எதுவும் தெரியவில்லை. ஆனால் அந்த பெண்ணில் இருந்த வடிந்த குருதிச் சிவப்பு மட்டும் மின்னல்போல் கண்களுக்கள் பளிச்சிடுகிறது. அவள் இறந்து விட்டாளா? இல்லையா கேள்விகள் வர கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் விடுப்பறிய சைக்கிளை நிறுத்தினேன்! ஆரோ காட்டிக் கொடுக்கிறவளாம் என்றார் ஒருவர்! இல்லை அவள் புலி என்றார் இன்னொருவர்! பின்னர்தான் தெரிந்து கொண்டேன் அது ஒரு பல்கலைக்கழக மருத்துவ விரிவுரையாளர் ராஜனி திரணகம என்று! அவளும் ஒரு எழுத்தாளி! கலைஞி எல்லாவற்றிற்கும் மேலாக உயிர் காக்கும் ஒரு மருத்துவ கலாமணி! தெருவேராத்தில் ஒரு தெரு நாயை கூட இப்படி சுட்டுக் கொன்றிருக்க மாட்டார்கள்! அவளை யார் கொன்றார்கள் என்ற விவாதமே இன்னும் தொடர்கிறது! தயவு செய்து யாராவது கூறுங்கள்! யார் கொன்றீர்கள் ஏன் கொன்றீர்கள்? விசாரணை தான் வேண்டாம்! ஒரு உண்மையை கூறும் கவுன்சிலாவது அமைத்து நடந்த உண்மைகளை கூறுங்கள்!

1984 என்று நினைக்கிறேன்! யாழ் நவாலி கல்லுண்டாய் வெளிக்கு அருகில் ஒரு புதை குழியிலிருந்த இரு சடலங்கள் அந்த பகுதி மக்களால் தோண்டி எடுக்கப்படுகிறது! ஒரு ஆண். ஒரு பெண்! அந்த பெண்ணும் கிட்டத்தட்ட இசைப்பிரியா போன்றே தோற்றம் கொண்டவள்! ஓழுங்காக புதைக்காமையல் துர்நாற்றம் வீச சந்தேகத்தில் மக்கள் தோண்டியபோது கண்டுபிடிக்கப்பட்ட அந்த சடலங்கள் அடையாளம் காணாமலே புதைக்கப்பட்டன. அந்த காலப் பகுதியில் இராணுவம் நிலை கொண்டிருக்கவில்லை. இயக்கங்களே அந்த பிரதேசங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இவைபோல் இன்னும் எத்தனை புதைகுழிகளில் எத்தனை இசைப்பிரியாக்கள் உறங்குகிறார்களோ தெரியாது! இந்த உண்மைகளை கூற யாராவது முன்வருவார்களா?

விடுதலைப் புலிகளின் புலேந்திரன் அம்மான் திருமலையில் இருந்த போது சிங்கள் குடியேற்றங்கள் அடிக்கடி தாக்கப்படும்! அங்கு பெண்கள் குழந்தைகள் என்று பாராது பல்வேறு கொலைகள் அன்று நடைபெற்றது! அந்த கொலைகளை நடாத்திய ஒரு நபர் யாழ் வந்திருந்தபோது தங்கள் வீர பிரதாபங்களை கதைகதையாக சொல்வார்கள். அதில் கேட்கவே மனம் பதைபதைக்கும் ஒரு விடயம். பெண்களை கொல்கையில் அவர்கள் கால்களுக்கிடையில் வாளை எப்படி சொருகினார்கள் என்று நேர்முக வர்ணனை செய்வது! அழகான அந்த பெண்களின் அழகினை அவர்கள் அன்று வர்ணித்தபோது அவர்களும் இந்த இசைப்பிரியா போல் அழகாக இருந்திருப்பார்கள் என்ற கற்பனையே என்முன் இன்று வருகிறது! ஆனால் இதைப்பற்றி இப்போது கதைத்தால், ‘அது பழைய கதை. செய்தவர்கள் எல்லாம் செத்து விட்டார்கள். அதைக் கிளறாது வன்னயில் நடந்த கொடுமைக்கு நியாயம் வேணும்’ என்று கூறுகிறார்கள்! ஆனால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறரர்கள். அவர்களிற்கும் அந்த பெண்கள், இசைப்பிரியாகள் தானே! செய்தவர்கள் பலர் இன்றும் உயிருடன் உள்ளார்கள்! செய்தவர்களிற்கு தண்டணைதான் வேண்டாம், குறைந்தபட்சம் நடந்த உண்மைகளாவது தெரிய வேண்டாமா? இனிவரும் காலங்களில் தமிழ் தரப்பு இப்படிச் செய்யாது என்பதற்கு இந்த உண்மைகள் உத்தரவாதம் தராதா?

வன்னி யுத்தத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டமை மறுக்க முடியதா உண்மைகள்! புலிகள் இராணுவம் இரண்டுமே மனித உரிமைகளை மீறியுள்ளனர். வெறுமனே இராணுவத்தின் மனித உரிமைகளை சுட்டிக்காட்டும் தமிழ் அமைப்புகள் புலிகளால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனித உரிமை மற்றும் போர்க்குற்றச் சாட்டுகளை மறுதலிப்பது தான் மிகவும் மோசமான அராஜகம்! இன்று இராணுவத்தில் உள்ள சில அதிகாரிகளே தமது தரப்பு பிழை விட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களே இந்த ஆதரங்களை கசியவும் விட்டுள்ளார்கள். ஆனால் இசைப்பிரியாக்களை வைத்து இன்னமும் புலிகளை புனிதர்களாக காட்டுவதில் முழுக்கவனம் செலுத்துவதுடன் தங்கள் சொந்த இலாபங்களிற்காகவே இன்று இசைப்பிரியா போன்ற பெண்களின் மரணத்தை காவித்திரிகிறார்கள்! இந்த இசைப்பிரியாவையும் இன்னும் நூற்றுக்கணக்கான இசைப்பிரியாக்களையும் இந்த புலம்பெயர் சமூகம் நினைத்திருந்தால் அன்று காப்பாற்றியிருக்க முடியம்! புலிகளை உசுப்பேத்துவதை நிறுத்தி மக்களை கேடயங்களை பாவிப்பதை நிறுத்தி புலிகளை ஆயுதங்களை கீழே போடவைத்திருந்தால் மனிதக் கேடயங்களாகப் பாவிக்கப்பட்ட மக்களை விடுவிக்கும்படி கோரியிருந்தால் இந்த இசைப்பிரியா காப்பற்றப்பட்டிருப்பாளோ என்னவோ?

எல்லாம் நடந்து முடிந்து ஒன்றரை ஆண்டுகள் போன பின்னர் பழிக்கு பழி ரத்தத்திற்கு ரத்தம் என்று புலிக்கொடியுடன் இன்னமும் ஒரு கூட்டம் ஓடித்திரிகிறது! கேட்டால் வன்னி மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டுமாம்! மகிந்தாவையும் அவர் கூட்டாளிகளையும் கூண்டில் ஏற்ற என்று புலம்பெயர் சமூகத்திடம் ஆயிரக்கணக்கில் பெற்ற காசை வங்கியில் வைப்பிலிட்டு விட்டு ஒரு 3000 பவுண்களுடன் இறுதி நேரத்தில் கிழக்கு லண்டன் இமிக்கிறேசன் லோயரை பிடித்த இந்த கூட்டமா வன்னியில் இறந்த மக்களிற்கு நீதி பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்? நீங்கள் அவர்களிற்கு நீதி வாங்கி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, அவர்களை நிம்மதியாக இனியாவது இருக்கவிடுங்கள்! இதுபற்றி அங்குள்ள மக்கள் மிகத்தெளிவாகவே இருக்கிறார்கள்! புலிகளால் நாம் பட்டதுபோதும்! புலம்பெயர் மக்கள் புலிப்பூச்சாண்டி காட்ட காட்ட இங்குதான் நாம் வேதனைப்படுகிறோம். ஏற்கனவே வெள்ளம் வந்து தகர குடியிருப்புகளை அள்ளிச்சென்ற நிலையிலும் இன்னமும் அதைப்பற்றி அக்கறை காட்டாத புலம்பெயர் தமிழ் சமூகம் மாவீர்தின வெற்றி, மகிந்தா வெற்றியென்று தம் ஈகோக்களை திருப்திப்படுத்தியபடி உள்ளனர். இவர்களா அந்த மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள். இவர்களின் ஒரே கவலை வன்னி மக்களை இன்னமும் இராணுவம் கொல்லவில்லையே என்பது தான்! இன்னமும் இசைப்பிரியாக்கள் இறக்கிறார்கள் இல்லை என்பதே இவர்களின் கவலை!

கடந்த சில வாரங்களாக தமிழ் இணையங்கள், தொலைக்காட்சிகளை ஆக்கிரமிக்கும் இறந்த பிணங்களின் உடலங்களில் வக்கிரமானவை பெண்கள் பற்றிய படங்கள்! எமது கலாச்சரம் பற்றி தம்பட்டம் அடிக்கும் தமிழர்கள் ஒரு வக்கிர புத்தியுடன் இணைக்கும் இந்த படங்கள் இறந்த அந்த பெண்களை இன்னமும் மானபங்கப்படுத்துகிறது! போர் குற்றம் என்று குற்றம் சுமத்துபவர்கள் இன்று மனித நேயத்தை தொலைத்து விட்டு பிணங்களை வைத்து வியாபாரமும் விபச்சாரமும் செய்கிறார்கள்! மேற்குலகில் பல பெண்கள் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்ட போதும் அவர்களின் புகைப்படங்களை ஊடகங்கள் வெளிவிடுவதே கிடையாது! விசாரணைக்கு அவை சம்பந்தபட்டவர்களிடம் கொடுக்கப்படுவதுடன் அந்தப் படங்கள் வெளிவருவதே கிடையாது! ஆனால் எம்மவர்கள் மிகவும் கேவலமாக இந்த பெண்களின் படங்களை தங்கள் சுயநல விளம்பரங்களிற்கும் பணத்திற்கும் இன்று விற்பதை நான் விபச்சாரம் என்று கூறாது என்னவென்று கூறுவது!

நடந்து முடிந்த யுத்தம் பல உண்மைகளை மறைத்து நிற்கிறது! இங்கே குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவது தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வாகாது! அனைவரும் ஏதோவகையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மாறாக மேலும் குரோதங்களை வளர்க்கும். உண்மைகள் வெளிவரவேண்டும்! குற்றம் இழைத்தவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும்! பொது மன்னிப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டு மீளவும் தவறுகள் நடைபெறாத வகையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்! திரும்ப திரும்ப இசைப்பிரியாக்களை தொலைக்காட்சியிலும் வானொலியிலும் கொல்வது அவர்களின் ஆத்மாக்களையும் கொன்று புதைப்பதற்கு ஒப்பானது!

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

68 Comments

  • bala
    bala

    மானிடம் தழைக்க உதவும் உங்கள் கட்டுரைக்கு நன்றி.எமது தவறுகளுக்கு பொறுப்பேற்க்கும் பக்குவம் எமக்கு எப்போது வரும்? நானும் மனிதன் தான் என்று ஏற்றுக்கொள்ள தையிரியமில்லாத கோழைகளுடன் பேசுவதில் என்ன பயன்?

    Reply
  • Jeyarajah
    Jeyarajah

    ரஜனி திரணகம என்றால் யாரென்று தெரியாத புலம்பெயர் புலி ஊடகங்களும் இணையங்களும் புதிதாக இறந்தவர்களின் போட்டோக்களைக் காட்டி நீதி கேட்கிறார்களா? அல்லது நிதி கேட்கிறார்களா?

    ரஜீவ் காந்தியின் இறந்தபடம், ரயர் போட்டுக் கொழுத்திய ரெலோ போராளிகளின் படம், கந்தன்கருணை சிறைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட போராளிகளை கொன்றபடம், அம்மைநோய் வந்தும் கெஞ்சக் கெஞ்ச கொன்று போட்ட படம் இது ஒன்றும் யாருமே காட்ட மாட்டார்கள்.

    இசைப்பிரியா போன்ற போராளியின் படம் எங்கள் மனதில் வலிக்கிறது. ஆனால் சிங்கள ராணுவம் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் தமக்குள் நடந்த இந்த வக்கிரங்களை வெளியில் கொண்டு வருவதற்கு பாராட்ட வேண்டும். இதையெல்லாம் மிஞ்சி கொலை கொலை என்று மட்டுமே இருந்த கூட்டத்திற்கு இதைப்பற்றிக் கதைப்பதற்கு எந்த அருகதையும் இல்லை.

    Reply
  • தேசம்நெற்
    தேசம்நெற்

    சில பின்னோட்டங்கள் தவறுதலாக அழிக்கப்பட்டுவிட்டது. தயவுசெய்து மீளப் பதிவிடவும். தவறுக்கு வருந்துகின்றோம்.- தேசம்நெற்

    Reply
  • விளங்காமுடி
    விளங்காமுடி

    கருத்தாளர், எதையும் ஆரம்பிக்கப்பட ஒரு திருப்புமுனை வேண்டும் என்பதையும், ‘..அருகதை,தீர்ப்பிடல் என்பன ஒரு குழுவினருக்குச் சொந்தமானது, மற்றவர்க்கில்லை’ என்கிற விறுமாண்டித்தனம் தன்னிடமும் உள்ளது என்பதையும், புரிந்து கொள்ளவேண்டும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    கட்டுரையின் ஆரம்பமே அபசகுனமாய் இருக்கே;

    //உன் சடலத்தை இணையங்களில் புலிவியாபாரிகள் ஏலம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்!//
    மிகவும் கண்டனத்துக்கு உரியது அதை பல்லி பலமாக கண்டிக்கிறேன்; தயவுசெய்து உங்கள் வியாபாரத்துக்காக எம் சகோதரிகளை நிர்வானபடுத்தாதீர்கள்.
    // உற்றுப் பார்க்கிறேன். ஆம் நீ சுடப்பட்டுதான் இறந்திருக்கிறாய்! ஆனால்.. ஆனால்… அப்போது என் மனம் சஞ்சலப்படுகிறது //
    இதில் சம்பந்தபட்டவர்களுக்கும் உங்களுக்கும் பல்லிக்கு வேறுபாடு தெரியவில்லை;
    //ஆனால் 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30திகதி புலிகளால் கைது செய்யப்பட்ட செல்வி எப்படி கொல்லப்பட்டிருப்பாள் என்ற கேள்வி என்னை இப்போ உறுத்தத் தொடங்கிறது!//
    காலம் கடந்து கற்பனை கற்பனை செல்வியின் உறவுகளை துன்புறுத்தும்; என்பதுகூடவா கட்டுரையாளருக்கு தெரியாது?

    தொடர்ந்தும் வரிக்குவரி பெண் இனத்தையே அசிங்கபடுத்திய புலி அல்லது அரசு இரண்டுக்கும் சமனாக எமது எழுத்தும் ஆகி விடுமோ என்னும் பயத்தால் இத்துடன் இந்த பின்னோட்டத்தை இடைநிறுத்துகிறேன்;

    தவறுகள் யார் செய்தாலும் சுட்டி காட்டுவோம் ஆனால் புலிகள் போல் எமது கருத்தை நியாயபடுத்த அல்லது எம்கருத்துக்கு ஒளி ஊட்டவோ வேண்டாம் என்பது பல்லியின் தாள்மையான வேண்டுகோள்; பிரியதர்சினி புலியோ அல்லது புழியோ அவளும் எம் தமிழ்சகோதரி என்பதை நாம் மறப்பது ஒரு சரியான நிலைபாடாக இருக்காது,

    // திரும்ப திரும்ப இசைப்பிரியாக்களை தொலைக்காட்சியிலும் வானொலியிலும் கொல்வது அவர்களின் ஆத்மாக்களையும் கொன்று புதைப்பதற்கு ஒப்பானது!:://
    கட்டுரையின் முடிவில் கட்டுரையாளனுக்கும் பல்லியின் மனவலி வந்ததால் கட்டுரையை இப்படி முடிக்கிறார், ஆனால் தொலைகாட்சி; வானொலியை சொன்னவர் பேனாவையும் சொல்லி இருக்கலாமோ என்பது பல்லியின் ஆதங்கம் மட்டுமே;

    Reply
  • நந்தா
    நந்தா

    இந்திய அமைதிப்படை சென்றபின் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தில் அடேல் பாலசிங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பெண்களுக்கான வதை முகாம்களில் மாற்று இயக்கங்களின் பெண் உறவுகள் சித்திரவதை செய்யப்பட்டு, கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்த வரலாறுகள் எப்படி மறக்கப்பட்டு விட்டன?

    Reply
  • hari
    hari

    // உன்னை நிதர்சனம் தொலக்காட்சியில் உன் அழகைப்பார்த்து பார்த்து என் நண்பனுக்கு மணிக்குட்டி என என் ஆண்மைக்கே உரிய வக்கிர புத்தியுடன் கூறியது இன்னமும் நினைவிருக்கிறது! ஆனால் நீ இன்று இல்லை! நீ ஏன் கொல்லப்பட்டாயோ தெரியவில்லை.//
    “நீ ஏன் கொல்லப்பட்டாயோ தெரியவில்லை” என்ற பசப்புத்தனம் இன்னமும் அதே வக்கிர புத்தியுடன்தான் கூறப்படுகின்றது என்பதையே சுட்டுகிறது.
    ” இங்கே குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவது தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வாகாது! ”
    அதையெப்படி இவ்வளவு உறுதிபட கூறுகிறீர்கள். இது திட்டமிட்ட இனஅழிப்பு இனஅவமதிப்பு. இனியும் தமிழர் சிறிலங்காவின் இறையான்மைக்குள் நிம்மதியாய் வாழமுடியாது என்ற முடிவிற்கு உலகம் வரும். ஈழத்தமிழர் சுயஇறையாண்மையுடன் சென்றால் உங்கள் “நம் சிறிலங்கா தாயே நமோ நமோ” கனவு வெறும் கனவாகிடும் என்ற பதகளிப்பு நல்லாய் தெரிகிறது.

    Reply
  • S. சுகுணகுமார்
    S. சுகுணகுமார்

    ஹரி நீங்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்! No Future Without Forgiveness – டெஸ்மன்ட் ரூட்டூ எழுதிய அந்த புத்தகத்தில் கறுப்பர்கள் அனுபவத்த கொடுமையில் 10வீதம் கூட நாம் அனுபவிக்கவில்லை! ஆனால் நாம் மீள மீள கடந்தகாலத்திற்கு பேசுவதை விடுத்து எதிர்காலத்திற்கு போகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்! தமிழர்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதை தவிர் வேற தெரிவுகள் இல்லை என்பதை இந்தியாவும் தெரிவுத்ததுடன் தாயக் தமிழ் பேசும் மக்களால் பெரும்பான்மையக தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பும் தெரிவித்துள்ளது! ஐக்கிய இலங்கைக்குள் வாழ இன்று இலங்கை மக்களும் தயாராகி விட்டார்கள்! நீங்கள் தயாரில்லை என்றால் அதற்கு அங்கு வாழும் மக்களை மீளவும் பலியாக்க வேண்டாம்!

    Reply
  • thurai
    thurai

    //இனியும் தமிழர் சிறிலங்காவின் இறையான்மைக்குள் நிம்மதியாய் வாழமுடியாது என்ற முடிவிற்கு உலகம் வரும்.//கரி

    தமிழர் நிம்மதியாக எங்கு வாழலாம் என்று சொல்லுங்கள் முதலில். ஐரோப்பாவினிலே பொலிசாரின் கட்டுப்பாடுகூடிய நாடு சுவிஸ். இங்கு 25 க்கு மேற்பட்ட இனத்தவர்கள் வாழ்கின்றார்கள். இங்குதான் புலிகளிற்கு பணம் சொரிந்த நாடு. ஊர்வலமென்றால் புகையிரதம் கூட வாடகைக்கு ஜெனீவா வரை அமர்த்துவார்கள். தலைவரின் கட்டவுட்(படம்) வானைத்தொடும். 30 வருடமாக இவர்கள் போட்ட கூச்சல் சிங்களவனுடன் வாழ முடியாது தனிநாடு வேண்டுமென்றுதான்.

    அண்மையில் வந்த செய்தியின் படி குற்ரச்செயல்புரிவதில் சுவிஸ்நாட்டில் 5ம் இடத்தில் ஈழத்தமிழர் உள்ளனர். சுவிஸ் நாட்டிற்கே உதவாத சமுதாயமாக இவர்கள் கணிக்கப்பட வேண்டிய காரணமென்ன?

    ஆனால் சிங்களவர் தமிழீழப்போராட்டம் தொடங்கு முன் தமிழரிடம் மதிப்புடனேயே நடந்தனர். கலவரங்கள் ஒட்டு மொத்த சிங்களவ்ரையும் தமிழர்களின் எதிரியாக்க முடியாது. அப்படியானால் சுவிஸ் நாட்டின் அறிக்கையின்படி உலகம் வாழ் தமிழர் அனைவரும் குற்ரசெயல் புரிபவர்கள்தான். எங்களிற்கு தனித்தமிழ்நாடு கிடைப்பதை ஒருவரும் அங்கீகரிக்க மாட்டார்கள். அந்தமான் தீவில் சிறைச்சாலைதான் பொருந்தும்- துரை

    -http://www.tagesanzeiger.ch/schweiz/standard/Neue-Statistik-Tamilen-sind-krimineller-als-ExJugoslawen/story/27784193
    above link shows about Tamils in Swiss

    Reply
  • நந்தா
    நந்தா

    புலிகளை ஆதரிக்கும் வெளினாட்டுக் கும்பல்களுக்கு “இன அழிப்பு” என்ற வார்த்தையை சொல்ல எந்த யோக்கியதையும் கிடையாது. ஏனென்றால் அதிகளவில் தமிழர்கள் கொல்லப்பட்டதும், கொள்ளையடிக்கப்பட்டதும் அதே புலிக் கேடிகளினால் என்பதை அறிந்து கொள்வதுநல்லது!

    இந்த லட்சணத்தில் “தமிழர்களின்” இறையாண்மை என்பது வெறும் புலுடாவே ஆகும்!

    Reply
  • தோஸ்து
    தோஸ்து

    //தமிழர்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதை தவிர் வேற தெரிவுகள் இல்லை என்பதை இந்தியாவும் தெரிவுத்ததுடன் தாயக் தமிழ் பேசும் மக்களால் பெரும்பான்மையக தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பும் தெரிவித்துள்ளது! ஐக்கிய இலங்கைக்குள் வாழ இன்று இலங்கை மக்களும் தயாராகி விட்டார்கள்!//
    தமிழர்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதை தவிர வேற தெரிவுகள் இல்லை என்பதை சொல்ல இந்தியா யார்!
    “ஐக்கிய இலங்கைக்குள் வாழ இன்று இலங்கை மக்களும் தயாராகி விட்டார்கள்” என்ற தனிமனித கருத்து சபையேறாது நண்பரே! வடகிழக்கு தமிழர்களிடம் ஒரு நேர்மையான கருத்துகணிப்பை நடத்தட்டும் தாயகமக்களின் உண்மை விருப்பை உலகே அறிந்திடும். புலம்பெயர் தமிழர்களும் தாயகமக்களின் உண்மை விருப்பிற்கு தலைவணங்கியே ஆகணும்.

    // யாழ்ப்பாணத்தில் அடேல் பாலசிங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பெண்களுக்கான வதை முகாம்களில் மாற்று இயக்கங்களின் பெண் உறவுகள் சித்திரவதை செய்யப்பட்டு கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்த வரலாறுகள் எப்படி மறக்கப்பட்டு விட்டன?//
    மாற்று இயக்கங்களின் பெண் உறவுகள் மீது உண்மையான அக்கறையிருந்தால் கடந்த ஆறு வருடங்களிற்கு மேல் பிரித்தானியாவில் வாழும் அடேல் பாலசிங்கத்தை ஏன் இன்னமும் மனிதவுரிமை குற்றச்சாட்டில் நீதிமன்று முன் நிறுத்தாது விட்டுவைத்துள்ளீகள்? உங்களிற்கு மாற்று இயக்கங்களின் பெண் உறவுகள் மீது உண்மையான அக்கறையில்லையா அல்லது பொய் குற்றச்சாட்டுடன் நீதி மன்றை அணுக பயமா!தமிழர் பிரச்சினை பேச்சு வார்த்தை மேசைக்கு வரும் கணங்களில் மாத்திரம் முஸ்லிம்களிற்கு தமது உரிமையும் தனிதரப்பு நிலைப்பாடும் ஞாபகத்திற்கு வருவது போல்.சிங்கள அரசுதரப்புமீது மனிதவுரிமை குற்றச்சாட்டு உலக சபைக்கு வரும் வேளையில் மட்டும் புலிகளின் மனிதவுரிமை மீறல் உங்களின் ஞாபகத்திற்கு வருகிறது.

    // இன்று ஒரு பெண்பிள்ளையின் அவமானத்தை காசாக்க முயற்சிக்கிறது புலி.//
    பாலியல் பலத்காரம் ஒரு கொடுரூரமே தவிர ஒரு பெண்பிள்ளையின் அவமானமல்ல. அந்த கொடுரூரத்தை செய்து வீடியோவாக்கியவர்கள். இவ்வளவு ஆதாரத்தையும் கையில் வைத்து கொண்டு நடவடிக்கையை துரிதமாக்க மனிதவுரிமை அமைப்புக்கள்.இவ்வளவிற்கு பிறகும் குற்றவாளிகளை காப்பாற்ற துடிப்பவர்களிற்குமே அவமானம்.
    எப்ப தொடக்கம் சனல் 4 தொலைக்காட்சி புலியானது.

    Reply
  • விளங்காமுடி
    விளங்காமுடி

    புலிகளால் கொல்லப்பட்டதாக சொல்லியே,”அகில உலக பென் விருது” செல்விக்கும், யூதப் பணத்தில் விவரணப்படம்(no more tears,sister) ராஜினிக்கும் வெளிவந்தது எழுத்தருக்கு எப்படி தெரியாமல் போனது?
    “அவள் ஒரு போராளி அல்ல, ஒரு ஊடகவியலாளினி மற்றும் அவள் ஒரு சிறந்த கலைஞி” என்ற கூற்றை முறியடிக்கும் விதத்தில், இராணுவ உடையில், திடீரென ‘இசைப்ப்ரியா’வின் படம் மாறிய மர்மமென்ன?
    இராணுவத்தால் கொல்லப்பட்டதை ஈடுகட்டவும், நியாயப்படுத்தவும், சிங்கள பேரினவாத இனவழிப்பை முண்டு கொடுக்குமளவிற்கு எழுதுகிற வக்கிரத்திற்கு ஒரு அளவே கிடையாதா? இருந்த போதும் வக்கிரப்பட்டு, இறந்தபின்னும் வக்கிரப்பட்டு எழுதியிருக்கிறார் எழுத்தர். இத்தகைய கருத்துகளால்தான் புலி அராஜகம் வளர்க்கபட்டதும், வரவேற்கப்பட்டதும், பின் அதே வரலாறாகப் போனதுமாயிற்று.

    Reply
  • aras
    aras

    பாலியல் பலாத்காரம் அவமானமல்ல. பாலியல் பலாத்காரம் பெண்களின் பலவீனமும் அல்ல. சாதாரண சமூகத்திலும் யுத்த களத்திலும் இதை துணிச்சலோடு எதிர் கொள்ள பெண்கள் கருத்தூட்டப்படடு இருக்க வேண்டும். புலியால் அதை செய்திருக்க முடியாது. சரியான அரசியல் இல்லாமல் போனதாலேயே இந்த நிலமை. எவ்வாறாயினும் போராட்டம் முழுதும் அந்தரித்து தோற்றுப் போவர்களை எண்ணி மனம் குமுறுகினறது.

    Reply
  • rohan
    rohan

    //டெஸ்மன்ட் ரூட்டூ எழுதிய அந்த புத்தகத்தில் கறுப்பர்கள் அனுபவத்த கொடுமையில் 10வீதம் கூட நாம் அனுபவிக்கவில்லை! ஆனால் நாம் மீள மீள கடந்தகாலத்திற்கு பேசுவதை விடுத்து எதிர்காலத்திற்கு போகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்! // சுகுணகுமார்
    புலி ‘மரத்தை’ விட்டு இறங்க மாற்றுக்கருத்தாளர்கள் இப்போதைக்குத் தயாராக மாட்டார்கள்.

    Reply
  • BC
    BC

    துரை, நீங்கள் குறிப்பிட்ட செய்தி நானும் அறிந்தேன். அதனால் தான் கொடூர புலியும் அவர்களிடம் ஆதரவு பெற முடிந்தது.
    //எப்ப தொடக்கம் சனல் 4 தொலைக்காட்சி புலியானது.//
    சனல் 4 தொலைக்காட்சி – புலி சம்பந்தம், தொடர்பு இல்லையா!

    Reply
  • aras
    aras

    ஆனால் நாம் மீள மீள கடந்தகாலத்திற்கு பேசுவதை விடுத்து எதிர்காலத்திற்கு போகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்! // சுகுணகுமார்
    புலி ‘மரத்தை’ விட்டு இறங்க மாற்றுக்கருத்தாளர்கள் இப்போதைக்குத் தயாராக மாட்டார்கள்”//rohan

    கடந்த காலத்தில் செய்த அட்டூழியங்களை ஒப்புக் கொண்டால் தானே அடுத்த கட்டத்திற்கு போக முடியும். அது முடியாதவர்கள் இப்படித்தான் பேச முடியும். போராட்டத்தின் தோல்வியையும் புலியையும் பிரித்துப் பார்க்க முடியாது. புலியும் போராட்டத்தின் தோல்வியும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது.

    Reply
  • maathavan
    maathavan

    இறந்த இசைப்ப்ரியாவின் உறவினருக்கு நான் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன்,வன்மையாக இந்த செயலை கண்டிக்கின்றேன். அதே நேரம் புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ், சிங்கள சகோதர சகோதரிகளுக்காக நீங்கள் (புலிஆதரவாளர்கள்) யாராவது? என்றாவது? வேதனை பட்டீர்களா? தயவு செய்து இறந்த அந்த போராளியை வைத்து வியாபாரம் செய்யாதீர்கள்.

    Reply
  • ப்பிரசன்னா
    ப்பிரசன்னா

    1971ம் ஆண்டு ஜேவிபிக்கு எதிரான போரில் இதே (சிங்கள) இராணுவம், பிரபல உள்நாட்டு அழகியும் ஜேவிபி உறுப்பினருமான பிரபாவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, நிர்வாணமாக (கதிர்காமம் வரை) தெருவில் இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றனர். இது இன்று போல் ‘வீடியோ’க் காட்சியாக இருந்திருக்கவில்லை!

    பல்லாயிரக்கணக்கான மக்கள் தம் கண்களால் கண்ட காட்சி! சாட்சி!!

    இந்தக் கொடுமைக்கு, யுத்தமீறலுக்கு, எந்த சர்வதேச நீதிமன்றம் – நீதிக்காக முன்வந்தது?!
    இந்தக் கொடுமையைப் புரிந்த (சிங்கள) இராணுவவீரனை, சிங்கள மக்கள் மறந்திருக்கவில்லை! 1987 ஆம் ஆண்டுவரை (இந்திய ஒப்பந்தம் வரை) இந்தக் கொடுமையைப் புரிந்தவனுக்கு எந்தத் தண்டனையும் இந்த அரசுகளால் வழங்கப்பட்டு இருக்கவுமில்லை. ஜே.வி.பியே இவனைச் இறுதியில் சுட்டுக் கொன்றது.
    1985ல் மணியந் தோட்டம் மற்றும் ஆனைவிழுந்தானில் புளட் அமைப்பினர் இவ்வாறான கொடுமைகளைச் செய்தனர். மணியந் தோட்டத்தில் இவ்வாறு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, அப்பெண்களைப்புதைத்த குற்றத்துக்காக இரு புளட் உறுப்பினரை புலிகள் வடமராற்சியில் (கம்பத்தில் கட்டிச் சுட்டுக் கொன்றனர்). அவ்வாறு கட்டப்பட்ட புளட் உறுப்பினரில் ஒருவர், கட்டிய புலி உறுப்பினருடன் அந்த மரணவேளையில் வாக்குவாதப் பட்டிருந்தார்! அவ்வாக்குவாதத்தை கேட்க பலர் சூழத்தொடங்கினர்!!

    அந்த வாக்குவாதத்தின் இறுதி வசனங்கள்…

    ”….சுடடா! உன்னால் கட்டிவைத்துத்தான் சுடமுடியும்!! சுடடா! சுடடா!!…”
    (இவன் யார்? இவன் ஏன் சுடப்பட்டான்?? என்பது இக்கட்டுரைக்குப் பொருத்தம் இல்லாதது என்பதால் தவிர்கிறேன். தேவைப்படும்போது, இது வெளிவரும், அவர்களின் பெயருடன்)

    இந்தச் சம்பவம், இன்று இராணுவத்துடன் சரணடைந்து, கொல்லப்பட்டவர்களின் ‘வீடியோ’ச் சப்பவங்களுடன், என்மனது ஒப்பிட்டுப் போராடுகிறது!
    …………………………………………………………..
    இன்று ‘இசைப்பிரியா’ கொல்லப்பட்டு விட்டாள். அவளின் படுகொலைக்கான ‘வீடியோ’ இன்று வெளியாகியுள்ளது. ”ஊடகவியலாளர்” – இசைப்பிரியா – கொல்லப்பட்டதற்காக பல ஊடகங்கள், பலத்த கண்டணங்களையும், சர்வதேச நீதிமன்ற, நீதிகளையும்? கோரியிருந்தன. ‘இசைப்பிரியா’வின் அரசியற் படுகொலைக்கு நீதிவேண்டும்! அது வேறு கதை.

    ஆனால், ‘இசைப்பிரியா’ என்ற – ஊடகவியலாளர் – யார்??

    ‘செல்வி’, ‘ராஜனி’, போன்ற பல பெண்கள் இம்மண்ணிலே, புலிகளால் கொல்லப்பட்டனர். செல்வி சர்வதேச – ‘பென்’ – விருதைப் பெற்றவள். ராஜனி தன் மரணத்துக்கு முன்னரே, ‘முறிந்த பனையில்’ தனது மரணத்தைச் சாட்சியமாக்கியவள்! இந்த, உறுதியான சாட்சியங்கங்களைக் கொண்ட, இந்த ‘இரத்த சாட்சியங்கள்’ ஆகிய இந்த மரணங்கள், எந்த சர்வதேச நீதிமன்றங்களின் கதவுகளைத் திறந்தன?! ‘புலிகளை’ எந்த சர்வதேச நீதி, இதற்காக கூண்டில் ஏற்றியது??

    நாம் யாரும் இவர்களுக்காக ‘சர்வதேச நீதி’ களிடம் நியாயம் கேட்கவில்லை! ஏனெனில், இவர்களை நாம்மறிவோம். இவர்கள் நம்மக்களுக்காக மடிந்தவர்கள்! இவர்களை இந்தச் சந்தையில் விற்க, புலிகளைப்போல, (மற்றவர்கள் -நாம் -) ‘சர்வதேச வியாபாரிகளல்ல’!

    இந்தப் பெண்களின் மரணம் உட்பட… பல பெண்களின் கண்ணீர் கதைகளை, இந்த ‘இசைப்பிரியா’வின் – ”ஊடகவியலாளரின்” – நா பேசியதே கிடையாது! (இதுதான் புலிகளின் பெண் ஊடகவியலாளர் என்ற ”புலி”ப் பம்மாத்து!)

    இதைவிடவும்…

    ‘சிவரமணி’ என்ற ஒரு இளம்பெண் தீயிட்டு இறந்திருந்தாள்! அவள் தான் மட்டும் எரியவில்லை, தன் கவிதைகளோடு எரிந்திருந்தாள். இந்த மரணம்: இன்று கூறப்படும் ‘இசைப்பிரியா’ என்ற ஊடகவியாளருடைய? நாவில் ஏன் எழுந்தருளியிருக்கவில்லை!?

    ‘சிவரமணி’ தன் கவிதைகளோடு எரிந்தாள்!, ஆனாலும் இது மதுரையை எரிக்கவேண்டாம், தமிழ் நாட்டில் ஒரு ‘தும்புமிட்டஸ்’ அதிர்வையாவது ஏற்படுத்தியதா? ஏன் இல்லை??

    முத்துக்குமாரன் தீக்குளித்திருந்தான், எகுறி எறிந்த துண்டுப்பிரசுரத்துடன்.(இத்துண்டுப் பிரசுரம் ‘பெண்ணே நீ’ காரியாலயத்தில் அதிகாலையில் உருவாக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது!?)

    ‘சிவரமணி’ யின் தீக்குளிப்புக்கும், முத்துக்குமாரனின் தீக்குளிப்புக்கும் பல வித்தியாசங்கள் உண்டு! சிவரமணி நான்கு சுவர்களுக்குள் தனது, நிகழ்கால கவிதைகளோடு எரிந்தாள்! முத்துக்குமாரன், புலிகளின் எதிர்காலக் கனவோடு, எரிந்தான்!

    சிவரமணியின் ‘நிகழ்காலக் கனவு’ செல்லாக் காசாகியது. அவளது மரணம் சொல்லவந்த செய்தி, ஒரு ”செல்லாக்காசு அசியல்”ஆகியது! முத்துக்குமாரனின் மரணம் அப்படியல்ல!?

    முத்துக்குமாரனின் மரணம் நிகழ்ந்தது. இது ‘யுத்த நாட்டுக்கு வெளியே’ பகிரங்கமாக நிகழ்த்தப்பட்டது! (ஆனால், ‘சிவரமணி’ நாட்டிலேயே ”தீக்குளித்திருந்தாள்!” இப்பொழுது இந்த ம.க.இ.க இதற்குள் மூக்கை நுளைத்ததாகத் தெரியவில்லையா?! ஏன்??)

    முத்துக்குமாரனின் மரணத்தில் ‘குத்தி முறிந்திருந்த’ ம.க.இ.க வின், ”அரசியல்” இலக்கு என்ன??

    இன்னும் புரியவில்லையா??

    முத்துக்குமாரனுக்காக ஒரு வருடத்துக்குப் பிறகு, உருவாக்கப்பட்ட ‘ஆவணத்தில்’ , முத்துக்குமரனின் பேத்தியின் அன்றைய நிகழ்கால கருத்தும்: ” என்ரை பேரன் இன்று இறந்திட்டான்”. நீங்கள் எல்லோரும் சோந்து, ‘இந்தப்போரை நிறுத்த வேண்டும்’!! என்று ‘கோரிய,இந்தப் பெண்மணி..’ மேலும் ”நான் கேட்பேன்” என்றும் அன்று கூறியிருந்தா!! (இதற்கு இதுவரை ம.க.இ.க பதில் -அரசியிற்தளத்தில் – (பதில்) தந்திருக்கவில்லை என்பது எனது கருத்து!)

    இன்று இப்போரின் பின் அவதானிக்கக் கூறிய இன்னொரு ஆதாரம்! ” முத்துக்குமாரன் இறந்துவிட்டதாகக் கூறுகிறீர்கள், இந்த ஓர் ஆண்டு காலத்துக்குள், ”முத்துக்குமாரன் இறந்துவிட்டான்!, (என்று கூறுகிறீர்கள்) அதனால், இந்தப் போர் நின்றதா? இன்று என்ன நடக்கிறது?” என்ற, முத்துக்குமாரனினின் சொந்தபந்தங்களின் (இந்தக்)கேள்விகளுக்கு, யார் பதில் தரும் வல்லமையை -இன்று – கொண்டிருக்கின்றனர்??

    (முத்துக்குமாரனின் சிலை 2010 ஆம் ஆண்டு, ‘ஒளி மரதன்’ ஓட்டியுடன், இந்தியாவில் ”மாற்றுக் கருத்தால்” நிறுவப்பட்டது!) இதன் பின்னர், குகநாதனின் பிரச்சனையும், இன்றைய ”சுதேசியவாத” கருத்துடன், இது புதிய பாச்சலில் இறங்கியுள்ளது!!..இது பற்றிய மேலதிக பதிவுகள் தொடரும்…!!..
    ப்பிரசன்னா
    12 12 10

    Reply
  • Mohamed Shareef Asees
    Mohamed Shareef Asees

    Mr, Mathavan
    I would like to add one more issue with your comments. I agree that the bloody war in Sri Lanka has killed many Sinhalese and Tamils. What about the Muslims? who killed by the LTTE and the Sri Lankan army. It is shame that no body talks about this people.

    Reply
  • நந்தா
    நந்தா

    //அக்கறையிருந்தால் கடந்த ஆறு வருடங்களிற்கு மேல் பிரித்தானியாவில் வாழும் அடேல் பாலசிங்கத்தை ஏன் இன்னமும் மனிதவுரிமை குற்றச்சாட்டில் நீதிமன்று முன் நிறுத்தாது விட்டுவைத்துள்ளீகள்? //
    நல்ல கேள்வி! எந்த நீதி மன்றத்தில் என்று சொன்னால் நல்லது!

    இந்த இசைப்பிரியாவின் படத்தை முன்னர் புலி ஊடகங்கள் பிரசுரித்து “பிரபாகரனின் மகள்” கொலை செய்யப்பட்டதாக அளந்தார்கள். அப்படியாயின் பிரபாகரனின் மகள் இன்னமும் உயிரோடு இருப்பது என்பதுதானே உண்மை. அப்படியாயின் பிரபாகரனின் மகள் எங்கே?

    இசைப்பிரியாவோ அல்லது தமிழினியோ கொல்லப்பட்டால் தமிழருக்கு என்னநஷ்டம்? கொலைக்கும், கொள்ளைக்கும் உதவியவர்கள் மறைந்து போனதில் சமூகத்துக்கு எதுவித நஷ்டமும் கிடையாது!

    Reply
  • BC
    BC

    //மாதவன்- புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ், சிங்கள சகோதர சகோதரிகளுக்காக நீங்கள் (புலிஆதரவாளர்கள்) யாராவது? என்றாவது? வேதனை பட்டீர்களா? //
    வேதனையா?வீரம் நிறைந்த விடுதலை போராட்டம் சிறப்பாக நடப்பதாக பெருமிதம் அடைந்தனர். இது எல்லாம் போராட்டத்தில் நடைபெறு நிகழ்வுகளே என்று தமிழீழ ஊடகவியலாளர் கட்டுரை வரைந்தனர்.
    அஸீஸ், புலிகளால் கொல்லப்பட்ட தமிழ் அப்பாவிகளுக்குள் தான் முஸ்லிம்களும் வருகிறார்கள்.

    Reply
  • aras
    aras

    இசைப்பிரியாவின் படங்களோடு துவாரகாவின் படத்தையும் கலந்து(முகத்தில் ரத்தக்காயங்களுடன் கிடப்பது) அதுவும் இசைப்பிரியாதான் என புலிகள் கெட்டித்தனமாக நிறுவி விட முயல்கின்றனர்.

    Reply
  • தேசியம்
    தேசியம்

    வாசுதேவன்,
    சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தமிழினப் படுகொலையை மறைப்பதற்கு நீங்கள் “மார்க் அண்டணி” பாணியில் எழுதியதாகத் தெரிகின்றது. இரண்டு பிழைகள் நியாயத்தை நிலை நிறுத்திவிவிடாது. ஆனால் அடிமையின் பிழைப்புக்கு வழிகோலும். நீங்கள் உங்கள் புதிய எஜமானுடன் விருந்துக்கு BMICHக்கு போகலாம், ஆனால் தமிழின அழிவுகளை எவரும் (அன்றைய ராகவனோ, பின்னைய ராஜேஷ்குமாறோ, இன்றைய வாசுதேவனோ) மறைத்துவிட முடியாது. உங்கள் எழுத்து துக்கி நிறுத்த முயல்வது அரச பயங்கரவாதத்தையே. புலிகளின் முட்டாள் தனமான கொடுமை எப்படி உண்மையோ, அதைவிட மிக மிக கொடுரமானது உங்கள் “மார்க் அண்டணி” பாணி எழுத்துக்கள். அதன் உள்நோக்கம் நஞ்சை விட கொடியது.

    Reply
  • தோஸ்து
    தோஸ்து

    //இறந்த இசைப்ப்ரியாவின் உறவினருக்கு நான் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் வன்மையாக இந்த செயலை கண்டிக்கின்றேன் //
    இறந்த இசைப்ப்ரியாவின் உறவினருக்கு தேவை நீதியும் நியாயமுமே தவிர அனுதாபமும் கண்டனமுமில்லை. குற்றவாளிகளை தண்டிப்பதுதான் எதிர்காலத்தில் இப்படியான குற்றங்களை கட்டுப்படுத்தும்.
    //அதே நேரம் புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் சிங்கள சகோதர சகோதரிகளுக்காக நீங்கள் (புலிஆதரவாளர்கள்) யாராவது? என்றாவது? வேதனை பட்டீர்களா? தயவு செய்து இறந்த அந்த போராளியை வைத்து வியாபாரம் செய்யாதீர்கள்.//
    இந்தப்படங்கள் வீடீயோக்ளிப்ஸ்கள் புலிஆதரவாளர்களால் வெளிகொணரபடவில்லை. மனிதவுரிமை காண்காணிப்பகம். மன்னிப்புசபை மற்றும் சனல் நாலு தொலைக்காட்சியே வெளிக்கொணர்ந்தன.
    மனிதவுரிமை காண்காணிப்பகம். மன்னிப்புசபை மற்றும் மனிதவுரிமைக்கான யாழ் பல்கலைகழக ஆசிரியர் சங்கம் யுனிசெப் போன்ற அமைப்புக்கள் போராளிகள் மீது ஆதாரமில்லாத அபாண்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி பயங்கரவாத முத்திரை குத்தியபோது உங்களிற்கு இனித்தது. இப்போ சிறிலங்கா மீது போட்டோ வீடீயோக்ளிப்ஸ் ஆதாரங்களுடன் மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டு வரும் போதா “இறந்த அந்த போராளியை வைத்து வியாபாரம் செய்யாதீர்கள்.” என்று மனிதம் பொங்கி வழியுது.

    Reply
  • kovai
    kovai

    இந்த அடையாளங்கள், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் சரத் பிரிவு அல்லது கொத்தபாயா எதிரணியால், அதாவது உண்மையான கொலை வெறியர்களால் வெளியிடப்பட்டவை. அவர்களைப் பாதுகாக்க என்னவா எழுதிக் குவிகிறார்கள்.

    Reply
  • நந்தா
    நந்தா

    புலிக் கொலைகாரர்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு கிரிமினல் கோஷ்டி ஒழிக்கப்பட்டுள்ளது. புலிகளுக்கு மரண தண்டனை என்பது தவறு என்று கூற புலி வால்கள் எப்படிக் கேட்கமுடியும்? மாடு திடுடியவனுக்கு மரண தண்டனை கொடுத்து தமிழர்களின் வாய்களை அடைத்தவர்கள் இன்று இசைபிரியா என்ற புலிக் கிரிமினலுக்காக அழுகிறார்கள்! அனுதாபம் தெரிவிக்கிறார்கள்!

    விசாரணைக்கு என்று கொண்டு சென்ற தகப்பன் அடுத்தநாள் வீதியோரத்தில் பிணமாக கண்டு புத்தி பேதலித்த பிள்ளைகளும் அவர்களின் தாய்மாரும் இன்றும் உள்ளனர். அவர்களிடம் இந்த இசைப்பிரியா பற்றிக் கேழுங்கள். செவிட்டில் நல்ல அறை விழும்!

    Reply
  • rohan
    rohan

    //விசாரணைக்கு என்று கொண்டு சென்ற தகப்பன் அடுத்தநாள் வீதியோரத்தில் பிணமாக கண்டு புத்தி பேதலித்த பிள்ளைகளும் அவர்களின் தாய்மாரும் இன்றும் உள்ளனர். அவர்களிடம் இந்த இசைப்பிரியா பற்றிக் கேழுங்கள். செவிட்டில் நல்ல அறை விழும்!//

    நடைப்பிணமாக உலவும் நம்மவர்களை மறந்து – பல்லாயிரவராய்க் கொல்லப்பட்ட எம் உறவுகளை மறந்து -நாம் இவ்வாறு செத்த புலி அடித்து மகிழ்வோமாக!

    Reply
  • மாயா
    மாயா

    // விசாரணைக்கு என்று கொண்டு சென்ற தகப்பன் அடுத்தநாள் வீதியோரத்தில் பிணமாக கண்டு புத்தி பேதலித்த பிள்ளைகளும் அவர்களின் தாய்மாரும் இன்றும் உள்ளனர். அவர்களிடம் இந்த இசைப்பிரியா பற்றிக் கேழுங்கள். செவிட்டில் நல்ல அறை விழும்! //

    நந்தா; இவற்றை புலிகள் மனித உரிமை மீறலாக சொல்ல மாட்டார்கள். அது பரிசுத்தர்களின் தண்டனை. புலிகளின் நீதிபதிகளின் பெயர்களை சொல்வீர்களா? எங்கே சட்டம் பயின்றார்கள்? எந்த அப்புக்காத்து உங்கள் கோட்டில் வாதாடியது? ரவுடிகள் தலைவர்களானது புலிகளில்தான் அதிகம்.

    Reply
  • kamal
    kamal

    ஒண்டரை வருஷத்துக்குப் பிறகு செத்த புலிகளின் நிர்வாணத்தை வைத்து உழைக்கிறவர்கள் செத்தபுலி அடிக்கிறதென்ற கதைக்கிறார்கள்.

    Reply
  • வாசுதேவன்
    வாசுதேவன்

    அஸீஸ் உங்கள் கருத்தை நான் முற்றுமுழுதாக ஏற்பதுடன் உங்களிடம் மன்னிப்பும் கோருகிறேன்! ஒரு இனத்தை ஆணிவேராடு புடிங்கியெறிந்து இருப்பிடங்களை விட்டு விரட்டிய பின்னரும் அது எம் இதயங்களில் உறைக்கவில்லை என்பதற்கு நானும் ஒரு உதாரணம்! ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு முஸ்லீம் நண்பரை சந்திக்கையில் நான் என் மனதினுள் வெட்கி தலை குனிந்தவாறே உள்ளேன்! இந்த கறை என்றுமோ அழியாது!

    தேசியம் – சும்மா நுனிப்புல் மேய்ந்து விட்டு ஜேம்ஸ் பொண்ட் பாணியில் பின்னோட்டம் விடும் நீங்கள் ஒரு வகையில் அதிஸ்டசாலிகள் தான்! இறுதி காலத்தில் புலிகளால் வலிந்து கதற கதற இழுத்துச்செல்லப்பட்டு சதைக் கும்பல்களாக 3 நாட்களில் கொண்டு வந்து கொடுக்கபட்ட இன்னுமொரு இசைப்பிரியாவின் பெற்றோரை நீங்கள் சந்திக்காதது ஒரு வகையில் அதிஸ்டமே! யுத்தத்தில் இருகால்களையும் இழந்து பார்க்க யாருமற்று இன்று சில சிங்கள நல் உள்ளங்களால் பாராமரிக்கப்படும் இரண்டு முன்னை நாள் இசைப்பிரியாக்களை நீங்கள் சந்திக்காதது உங்கள் அதிஸ்டமே! தமது எதிர்காலமே தெரியாது சிறைக்குள் வாடும் இசைப்பிரியாக்கள் பலரை பற்றி எந்த வித சிந்தனையுமின்றி உங்களால் தேசியம் பற்றி பேச உங்கள் மனதில் பலமிருக்கலாம்! அனால் எங்களிடம் அது கிடையாது!

    நாங்கள் உங்களைப்போல் வணங்கா மண் என்று பணம் சேர்த்து விட்டு தேம்ஸ் நதியில் போர்ட் பாட்டி வைப்பவர்கள் அல்ல! எங்களுக்கு நாங்களே எஜமானர்கள் அதனால்தான் மனதில் பட்டதை சொந்த பெயரிலேயே எழுதுகிறோம்! தேசியம் தேசிக்காய் என்று புனைபெயர் தேவையில்லை!

    Reply
  • Kusumpu
    Kusumpu

    வாசுதேவனின் கட்டுரை என்பதை விட சிறுகதை கதைசொல்லாக ஆரம்பித்து கட்டுரையா முடிய முயற்சித்திருக்கிறது. இது ஒரு புறமிருக்க கட்டுரையாளரின் வேதனையும் தாகமும் புரிகிறது. இதேவேளை புலிகளும் செய்தார்கள் இசைப்பிரியாவும் செய்யப்பட்டாள் அதற்காக இதுசரி சமப்படுகிறது என்றா யாராவது நினைத்தால் அது தவறானது. புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம் சுருக்கமாகச் சொன்னால் மாவியாத்தலைவனைக் காக்கக் கட்டியெழுப்பப்பட்ட ஒரு அமைப்பு என்பதைத் தவிர வேறு இல்லை. இவர்களிடன் இருந்து அதாவது பயங்கரவாதிகளிடம் இருந்த பயங்கரமான விளைவுகளைதான் எதிர்பார்க்கலாம். ஆனால் இராணுவம் அரசு ஒரு பயங்கரவாதிபோல் நடக்க இயலாது. சர்வதேசக்கட்டுப்பாடுகள் மனித உரிமைகள் தேசம் தேசியம் இனம் என எத்தனையோ கட்டுப்பாடுகளுக்குள் மன இறைமையைக் காக்கும் அரசின் இயந்திரமான இராணுவம் இசைப்பிரியாவை நடத்தியது சர்வதேசக்குற்றம் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதை அதாவது போரை பணமாக்கினார்கள் புலிகள் இப்போ பிணத்தைப் பணமாக்குகிறார்கள். இது மாவியாக்கள் செய்யும் ஒன்றுதான் என்று சும்மா விட இயலாது. புலிகள் செய்த கொலைகள் பெண்ணோ ஆணோ பிழை பிழைதான் யாரைத் தண்டிப்பது. ஆனால் இசைப்பிரயாவின் விடயத்தில் அரசு அதிகாரத்தில் இருக்கிறது. தொடர்ந்து வரும் அரசுகளாவது சரியான முறையில் நடந்து கொள்வதற்கு இந்தக் கொலைகளை ஒரு நல்லவழியை வகுக்கும் என்றால் அதைச் செய்வதே மேலானது. புலிகள் பயங்கரவாதிகள் என்றாலும் அவர்களின் சாவுக்களை தமிழ்மக்களின் தீர்வுக்காகப் பயன்படுத்தினால் அது கூட எந்த வகையிலும் தப்பாகாது. நோக்கம் ஈழத்தமிழர்களின் எதிர்காலமாக இருக்கட்டும். புலிகள் செய்தார்கள் என்பதற்காக அரசாங்கம் செய்யலாம் என்றாகாது.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    பிரசன்னாவின் ஆரம்ப எழுத்துக்களே சிங்கள இராணுவம் எப்படியானது என்ற படத்தைக் காட்டியவின் என்னால் தொடர்ந்த வாசிக்க முடியவில்லை நேரமும் இல்லை. நாம் மக்கள் என்ன நிலையில் இருந்தார்கள் புலிகள் மக்களை எப்படி நாடத்தினார்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். நாம் ஒருவரில் ஒருவர் சேறு அள்ளி இறைப்பதை விட்டுவிட்டு: பிணங்களைப் பணமாக்க நிலைக்கும் புலித்துச் சருகு புலிகளையும் புறம்தள்ளி இந்தப் புலிஅழிவை எமது மக்களுக்காக எம்மக்களின் எதிர்கால அரசியல் விடுதலைக்கு ஒரு துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தலாமா என்று பார்ப்பது அவசியம். இராஜதந்திரங்கள் பற்றி அறியாதவர்கள் மகாபாரதத்தில் பரமாத்மாவின் வித்தைகளைப் பயன்படுத்தலாம். ஒரு மோதிரத்தை நிலத்தில் போட்டே துரியோதனையும் பீட்ஸமரையும் கவழ்தவர் பரமாத்மா? புலத்தும் புலி பணவாடை கண்டது அதைத்தான் தேடும். கொடுத்து அழிந்ததுகள் கொடுக்கத்தான் போகிறோம் கெடுகிறன் பிடி பந்தயம் என்றால் என்ன செய்யமுடியும்.

    //மாதவன்- புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ், சிங்கள சகோதர சகோதரிகளுக்காக நீங்கள் (புலிஆதரவாளர்கள்) யாராவது? என்றாவது? வேதனை பட்டீர்களா? //
    என்ன என்று அனுதாபப்படுவது. விழுந்த பிணங்களை எண்ணித்தானே வெற்றி தோல்விலை அரசும் புலிகளும் நிர்ணயித்தார்கள். ஏ 9 பாதை திறப்பதற்காகத்தானே புலிகளின் வெளிநாட்டுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. சும்மா ஏன் விசரைக் கிளறுகிறீர்கள்? யார் மக்களையும் ஏன் தேசியத்தையும் நினைத்தார்கள். ஏன் இன்றும் சரி நினைக்கிறார்களா?

    Reply
  • நந்தா
    நந்தா

    செத்த புலிகளுக்கு இன்னமும் “உயிர்” கொடுக்க அலையும் உண்டியல் புலிகள் மக்கள் வாடுகிறார்கள் என்று வேறு முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

    புலிகள் யாரையும் கொல்ல அதிகாரம் உள்ளவர்கள் ஆனால் ஒருநாட்டின் அரசுக்கு அந்த பயங்கரவாதிகளை கொல்ல உரிமை கிடையாதாம். ஆயிரக்கணக்கில் சரணடைந்த புலிகள் ஏன் கொல்லப்படவில்லை என்பது பற்றி யாரும் பேசக் காணோம்.

    Reply
  • jeyarajah
    jeyarajah

    நடைப்பிணமாக உலவும் நம்மவர்களை மறந்து – பல்லாயிரவராய்க் கொல்லப்பட்ட எம் உறவுகளை மறந்து -நாம் இவ்வாறு செத்த புலி அடித்து மகிழ்வோமாக!//றோகன்
    இசைப்பிரியாவுக்காகவும் துவாரகாவுக்காகவும் போராட்டம் ஆரம்பிக்கவில்லை. இங்கு சிலபேர் கூட உணர்ச்சிவசப்படுகிறார்கள். செத்த வீட்டையே கண்டு பழகிப் போனவர்கள் எங்கள் தமிழினம். இப்படி எத்தனையோ பிரியாக்களின் பிணம் முகவரி இல்லாமல் நாதியற்று புதைக்கப்பட்டது. திருமதி யோகேஸ்வரன் முதல் மகேஸ்வரி வரை கொல்லப்பட்டது யாரால். இவர்கள் எல்லாம் பெண்களாகத் தெரியவில்லையா? இவர்களை அல்கைடாவா கொன்றவர்கள். முதலிலேயே சரியாக தட்டிக் கேட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. சரணடைந்ததையும் சொல்லவில்லை அதற்கு யார்யார் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் சொல்லாமல் அவர்கள் போராடி இறக்கிறார்கள் என்று மட்டும் சொன்னால் புலம்பெயர் புலிகள்தான் இதற்கு முழுப்பொறுப்பும்.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    நந்தா! புலிகளுக்குக் கொல்ல உரிமையுள்ளது என்று யாரும் சொல்லவில்லை. அநத பயங்கரவாதிகள் அதைத் தம்கையில் எடுத்துக் கொண்டார்கள். பலாற்காரத்துக்கும் பயங்கரவாதத்திற்கும் பயங்கரவாதம்தான் பதில் அல்ல. நாம் இந்துக்களாகவும் பெளத்தமதத்தின் ஆணிவேரை ஆதாரமாகக் கொண்டு வாழத்துடிக்கும் ஒரு சமூகத்தில் அரசு செய்ததை ஏற்க முடியாது. புலிகள் செய்த பயங்கரவாதத்துக்கு மரதண்டனை என்பது மிகச் சரியான தண்டனை என்று படவில்லை. இன்று மிருகத்தையே மனிதனாக்கும் நிகழ்ச்சி நடைபெறும்போது இந்த நாகரீக உலகின் இப்படி மனிதஉரிமைக்கேட்டை நந்தா எப்படி ஆதரிக்கிறீர்கள். மனந்திறந்து பதில் சொல்லுங்கள்.

    ஜெயராஜ்! /திருமதி யோகேஸ்வரன் முதல் மகேஸ்வரி வரை கொல்லப்பட்டது யாரால். இவர்கள் எல்லாம் பெண்களாகத் தெரியவில்லையா/ எமக்குக் கிடைத்த தடயங்களை வைத்து எமது மக்களுக்கு ஒரு விடிவைத் தேடக்கூடாதா. மீண்டும் செத்தபுலியை அடித்துக் கொண்டு இருக்க வேண்டுமா? பழமை பேசி வாழ்கையை ஓட்டும் பழந்தமிழனை கைவிடக்கூடாதா? இசைப்பிரியாவின் ஒளிப்பேழை புலிகளால் சமூகத்துக்குக் கொண்டவரப்படவில்லை என்பதை உணர்வீர்களா?

    Reply
  • நந்தா
    நந்தா

    மரண தண்டனை இன்னமும் நாகரீக உலகில் கடைப்பிடிக்கபடும் தன்டனை முறை என்பதை உணர வேண்டும். கொலைகாரர்களும், கொள்ளையர்களும் கொலைகள் செய்வதை தடுக்க மரண தண்டனை கட்டுக்கடங்காது சனத்தொகை பெருகும் இலங்கை, இந்தியநாடுகளில் அவசியமாகிப் போயுள்ளது.

    புலிகள் தமிழர்களைக் கொலை செய்த நோக்கத்துக்கும், புலிகளை அரசு கொல்வதற்கும் உள்ள வேறுபாட்டினைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    இலங்கை இந்து தமிழர்கள் கிறிஸ்தவர்களால் தப்பான மார்க்கத்தில் வழி நடத்தப்பட்டிருக்கிறார்கள். இன்றும் நடத்தப்படுகிறார்கள்.

    இந்துக்களுக்கும், பவுத்தர்களுக்கும் மதநம்பிக்கை ரீதியில் பிணக்கத்தை விட இணக்கங்கள்தான் அதிகம். கிறிஸ்தவ ஆட்சியில் அந்த இணக்கங்களை இந்துக்களும் பவுத்தர்களும் இழந்துள்ளனர். இரு பகுதியிலும் இருக்கும் கிறிஸ்தவர்கள் இந்துக்களும், பவுத்தர்களும் நம்பிக்கை அடிப்படையில் ஒன்று சேருவதைத் தடுக்க எப்பொளுதும் தங்களுடைய வெள்ளைக் கிறிஸ்தவ எசமான்கள் மூலம் பிரச்சனைகளைக் கிளப்புகிறார்கள். முஸ்லிம்கள் எப்பொளுதொ அந்த விளையாட்டை ஆரம்பித்து விட்டனர்.

    மதநம்பிக்கை அடிப்படையில் 99% ஒற்றுமையுள்ள இரண்டு பெரும்பானமை சமூகங்களும் ஒன்றாகிப் போனால் தங்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது என்பதனை இந்து, பவுத்த மத விரோதிகள் உணர்ந்துள்ளனர். இந்த மத அரசியலின் விளையாட்டுத்தான் இலங்கயில் நடக்கிறது. அதற்கு தமிழ், சிங்களம் கை கொடுக்கிறது.

    Reply
  • மாயா
    மாயா

    //விளங்காமுடி – “அவள் ஒரு போராளி அல்ல, ஒரு ஊடகவியலாளினி மற்றும் அவள் ஒரு சிறந்த கலைஞி” என்ற கூற்றை முறியடிக்கும் விதத்தில், இராணுவ உடையில், திடீரென ‘இசைப்ப்ரியா’வின் படம் மாறிய மர்மமென்ன? //

    விளங்காமுடி; படு பயந்தாங்கொள்ளியை கீரோவாக்கியது அந்த புலி யுனிபோம் கெட்டப்தான். புத்திசீவிகளை இவர்கள் நம்பியதில்லை. ஒரு கொலைகார சீரோவை கீரோவாக நம்பினார்கள். புலிகள், குழுவாக தற்கொலை செய்திருந்தாலோ அல்லது முக்கியமானவர்கள் சயநைட் அடித்திருந்தாலோ இவ்வளவு அவலம் நடந்திருக்காது. அந்தக் கொஞ்சம் பேரோடு எல்லாம் முடிந்திருக்கும்.
    ஒரு ஊடகவியளாளராக இசைப்பிரியாவை ஏற்க இவர்களால் முடியாது. அவர் ஒரு புலி என்றே ஏற்க வேணும் என்ற மனநிலை. இது அரசுக்கு சாதகமாகவே இருக்கும். அரசு ; புலிகள் சிவிலியன் உடைகளில் இருந்து கொண்டு தாக்குதல் நடத்தினார்கள் என்றும் , கொல்லப்பட்ட புலிகளுக்கு , சிவிலியன் போல உடைகளை மாற்றி புகைப்படம் எடுத்து வெளியிட்டார்கள் என்று சொன்னதை உறுதிப்படுத்துகிறார்கள்.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    /மரண தண்டனை இன்னமும் நாகரீக உலகில் கடைப்பிடிக்கபடும் தன்டனை முறை என்பதை உணர வேண்டும். / நந்தா உணர்கிறோம். ஆனால் வளக்கு விசாரணைகள் என்ற முடிந்து. ஒரு நிரபராதி கூடத் தண்டிக்கப்படக்கூடாது என்ற நிலையில் மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    புலிகள் நீதி மன்றங்களில் ஏற்றாமலே மரண தண்டனை என்ற கழுகு மரத்தில் ஏற்றினார்கள். துரோகி என்பதை எதை அளந்து சொன்னார்கள்.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    நண்பனே! இன்று தமிழனின் சரித்திரத்தை அளந்து பார்த்தால் தெரியும் யார் துரோகி என்று. புலிகள் துரோகி என்றது புலிகளுக்குத் துரோகி என்பதே பொருள். ஆம் நாம் புலிகளுக்குத் துரோகிகள் தான் அன்றும் இன்றும். ஆனால் தமிழினத்தின் உயிர்நாடிகள். அன்றும் இன்றும் புலிகளே துரோகிகள்

    Reply
  • விளங்காமுடி
    விளங்காமுடி

    மாயா! நானும் பிரேமாவதி மனம்பெரியின் காலத்தில் வாழ்ந்தவன். அவளின் கொலையைப் பெரிதுபடுத்தி சிறிமாவோ கூட்டத்தையே தோற்கடித்த காலத்தில், நானும் வாக்குப் போட்டவன். அவளைக் கொன்றவனுக்கு அரசாங்கம் தண்டனை கொடுத்தாலும், ஜேவிபி தான் இறுதித் தீர்ப்பளித்ததும், வரலாறுதான்.
    இங்கே கட்டுரை வெளியிட்ட போதிருந்த படமும், ஒரு இசைப்பிரியாவின் தோழி பேட்டி கொடுத்ததும், மாறிப் போன படமும் பற்றியதே என் கேள்வி. போரில் குண்டடிபட்டு இறந்ததாக அரசாங்கமே, இசைப்பிரியாவின் படத்தை வெளியிட்டது. அவள் எப்படி இறந்தாள் என அரசாங்க எதிரணியினர் மீதி உண்மையை வெளியிட்டுள்ளார்கள்.

    இதில் புலிக்காக அல்லது சிங்கத்திற்காக வாதிட்டுப் போகிறார்கள். பிரேமாவதியை முன்னிறுத்தி அரசாங்கத்தை சிங்களவர்களால் மாற்ற முடியுமானால், இசைப்பிரியாவை முன்னிறுத்தி தமிழர்களால் மாற்றத்தை கொண்டுவர முடியாதா என்பதுதான் என் அவா.

    இசைப்பிரியா என்பவள் நீங்கள் விபரிப்பது போல” மோசமான கூட்டத்தின்,கேவலமான பெண்ணாகவிருந்து,சயனைட் குடிக்க மறுத்ததவள்” என வைத்துக் கொள்வோம். ஆனால் அவள் ‘அகல்’ விளக்கை இழந்து,சரணடைந்தவள் என்பதுதான் உண்மையாகி நிற்கிறது. அவளைத் தீர்ப்பளிக்க, “மிருகத்திற்கு பிறந்து மகாவம்சமானவனுக்கு” உரிமை உண்டா என்பதே, சர்வதேசியம் தீர்மானிக்க வேண்டியது.

    Reply
  • BC
    BC

    //மிருகத்திற்கு பிறந்து மகாவம்சமானவனுக்கு உரிமை உண்டா//
    இவர் இங்கே மிருகம் என்று குரங்கை தானே குறிபிடுகிறார். பரிணாம வளர்ச்சி படி சர்வதேசங்களை சேர்ந்தோரும் குரங்கில்(மிருகத்தில்) இருந்து தானே தோன்றினார்கள்.

    Reply
  • மாயா
    மாயா

    //இசைப்பிரியா என்பவள் நீங்கள் விபரிப்பது போல” மோசமான கூட்டத்தின்,கேவலமான பெண்ணாகவிருந்து,சயனைட் குடிக்க மறுத்ததவள்” என வைத்துக் கொள்வோம். ஆனால் அவள் ‘அகல்’ விளக்கை இழந்து,சரணடைந்தவள் என்பதுதான் உண்மையாகி நிற்கிறது. அவளைத் தீர்ப்பளிக்க, “மிருகத்திற்கு பிறந்து மகாவம்சமானவனுக்கு” உரிமை உண்டா என்பதே, சர்வதேசியம் தீர்மானிக்க வேண்டியது.//

    ரஜனி திரணகம ; செல்வி போன்றோரைக் கொன்றோருக்கு தண்டனை கிடைத்து விட்டது. இதற்கும் தண்டனை கிடைக்கும். அதுவே எனது நம்பிக்கை.

    Reply
  • aras
    aras

    பிரேமாவதியை முன்னிறுத்தி அரசாங்கத்தை சிங்களவர்களால் மாற்ற முடியுமானால், இசைப்பிரியாவை முன்னிறுத்தி தமிழர்களால் மாற்றத்தை கொண்டுவர முடியாதா என்பதுதான் என் அவா”//
    இது முடியாத காரியம். இசைப்பிரியாவின் உயிர்தான் உயிரல்ல. லீலாவதி, வங்காலை மார்டின் குடும்பம், சுதந்திராதேவி என எண்ணுக்கணக்கற்றவர்களின் உயிர்கள் கால்தூசா?

    Reply
  • gopal
    gopal

    இந்த வீடியோக் காட்சிகளை புலிகள் வெட்டிச் சுருக்கி வெளியிடுவதன் மூலம், தம்மை பாதுகாக்க முனைகின்றனர். பல காட்சிகளை மறைக்க முனைகின்றனர். இதன் மூலம் காட்சியின் உண்மை சார்ந்த நம்பகத் தன்மைகளை, ஓட்டுமொத்தமாக தங்கள் சுயநலம் மூலம் சிதைத்து வருகின்றனர்.

    1. முதலில் ஒரு பகுதியை வெளியிட்டவர்கள், பின் இசைப்பிரியா உள்ளடங்கிய காட்சியை முழுமையாக நீக்கிவிடுகின்றனர். இதன் மூலம் புலிச் சரணடைவை மறுக்க முனைகின்றனர். அரசைப் பாதுகாக்க முனைகின்றனர்.

    2. பெண் சார்ந்த பாலியல் உறுப்புகள் தெரிவது, தங்கள் ஆணாதிக்கத்துக்கு இழுக்கு என்று கருதுகின்ற ஆணாதிக்க கலாச்சாரம் பேசும் வக்கிரம் இங்கு இதை நீக்குகின்றது. பெண் குழந்தைகளின் சட்டையைத் தூக்கி, ஏதாவது புதிதாக மாதவிடாய் வருகின்றதா என்று தேடிப் பார்த்து, சாமத்தியச் சடங்கு செய்யும் இந்தக் கலாச்;சாரக் கூட்டம் தான் இதையும் செய்கின்றது. இதைச் செய்யும் தமிழ் தேசிய பாசிச கூட்டம் பேசும் மொழி எது தெரியுமா? பெண் உறுப்பை மையப்படுத்தி, அதை இழிவுபடுத்திய தூசணம் தான். காட்சி முழுமையாக வெளியிடும் போதும், எம்மைத் திட்டும் போதும் சரி, போடும் பின்னூட்டங்கள் அதே பெண்ணின் பெண் உறுப்பைக் குறித்த வக்கிரமான இழிவான பச்சையான தூசணம் தான்.
    //ரயாகரன்- தமிழரங்கம்

    Reply
  • Jeyarajah
    Jeyarajah

    குசும்பு உங்களிள் கருத்துக்களுடன் எனக்கு ஒரு முரண்பாடுகளும் இல்லை ஆனால் இப்பவும் ஒரே இணையத்தளங்கள் படங்களையும் போடுகிறார்கள் அதே தொடர்புடைய இணையங்கள் பெண்களைப் கேவலப்படுத்தும் படங்களை போடுகிறார்கள் என்றும் எழுதுகிறார்கள் இவர்களை எப்படி இனம் காண்பது.

    புலிக்கொடி பிடித்து முக்கியமானவர்கள் இலங்கையில் தஞசம் இங்கு வந்ததும் வேறு கதை இவர்களை எப்படி பழசு கதைக்காமல் அடையாளப்படுத்துவது யாருக்கும் இசைப்பிரியா இறந்ததும் ரஜனி திராணகம இறந்ததும் சந்தோசப்பட வேண்டிய விடயமில்லை இதனை வியாபாரமாக மாற்றக் கூடாது.

    Reply
  • krishnapavan
    krishnapavan

    அகிலன் என்பவர் 1986ல் காரைநகர் பொறுப்பாளனாக இருந்த காலத்தில் ரெலோ தோழர் சங்கர்லால் உட்பட பல ரெலோ தோழர்களைச் சுட்டுக்கொன்று வலந்தலைச் சந்தியில் குவியலாகப் போட்டுக் கொழுத்தி அரைகுறையாக வீசி எறிந்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். நானும் சாட்சி. இதே ஆண்டில் அன்னமலர் பேக்கரியில் வேலை செய்த மிக மிக அப்பாவியான சிங்களச் சகோதரனையும் அவரது இளம் மனைவியையும் ஒரு வயதுக் குழந்தையையும் கொன்று காரைநகர் வெளிச்சவீட்டடியில் புதைத்தார். ஏனைய கொலையாளிகள் பிரதாப் யசீர் தேட் ஆகியோர் இப்பொழுது கனடாவில். இசைப்பிரியாவுக்கு என்ன நடந்ததோ அதனிலும் மிக மிக மோசமாக அந்தச் சிங்களபெண் கொன்று புதைக்கப்பட்டாள். இசைப்பிரியாக்களைக் கொன்றவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் புலிப்பொறுப்பாளர் அகிலன் உட்பட.

    Reply
  • Kathir
    Kathir

    Dear Krishpavan, Thanks for your information on the massacre of poor sinhalease bakery worker and his wife and child.I could not accept and bear your information on the massacre of poor bakery worker and his wife and one year old child by the mafia and narcissist LTTE or Tamil Tigers.
    It is a shock to hear the same people who are involed in the masscare are living in Canada is a great shame to the Canadian .These people must be send back to Srilanka and must be produced in the courts .They are the criminals named as Prathab,Yaseer and Thead.

    Reply
  • நந்தா
    நந்தா

    I know those killers from Karainagar and their cousin Kathirkamanathan too.

    Reply
  • BC
    BC

    கதிர் மிகவும் வருந்துகிறேன். தமிழீழ விடுதலை புலிகள்,அவர்களை ஆதரிப்போர் எப்போதும் அப்படிதான்.

    Reply
  • karuna
    karuna

    அகிலனைப்போல் கோபால் என்ற வல்வெட்டித்துறை நபர் இன்று லண்டனில் வசிக்கிறார்! இவர் புலிகளின் யாழ் தட்டாதெரு முகாம் பொறுப்பாளராக இருந்த காலத்தில் தான் ரெலோ தாக்குதல் நடைபெற்றது. திருநெல்வேலியில் இரு ரெலோ நண்பர்கள் திருமலையை சேர்ந்தவர்கள் உயிருடன் ரயர் கழுத்தில் போட்டு எரித்துக் கொல்லப்பட்டார்கள். இதற்கும் கோபலிற்கும் சம்பந்தமிருக்கலாம்! அல்லது கோபாலிற்கும் அகலன் போன்றவர்களிற்கும் இது தெரிந்திருக்கலாம்!

    Reply
  • krishnapavan
    krishnapavan

    அகிலன் யுபி ல் பயிற்சி பெற்றவர். திறமைசாலிதான். இப்படிக் கொலையாளியாக மாறியிருந்தாரே! பல ரகசியங்கள் அவரிடமுண்டு. அவர் பற்றிய ஊழல்கள் பல நண்பர்களுக்குத் தெரியும் தயவுசெய்து அவைகளை வெளிக்கொண்டு வாருங்கள்.

    Reply
  • suban
    suban

    இசைப்பிரியாக்கள் அரசஇயந்திரத்தால் வதைபடுவது சிலமணிநேரங்கள்தான். தொடர்ந்து உண்டியல்காரரும் பொழுதுபோகாதோரும் திரும்பத்திரும்ப இசைப்பிரியாக்களை குரூரமாக சித்திரைவதை செய்கிறார்கள். அரசஇயந்திரத்திரத்தை விட மோசமானவர்கள் நாங்களே! தயவுசெய்து அநியாயங்களை வெளிக்கொணர்வதற்கு வேறுவழிகளை கையாள முயற்சிப்போம்!
    இசைப்பிரியாவை உண்மையில் எங்கள் சகோதரியாக எங்கள் பிள்ளையாக வைத்து சிந்தித்துப் பார்ப்போம்!

    Reply
  • Kusumpu
    Kusumpu

    கிருஸ்ணபவன்!
    கராட்டியில் அடிபடப்பழக்குவதுபோல் இராணுவத்திலும் கெரில்லாக்களிலும் கொல்லத்தானே பயிற்சிவிக்கிறார்கள். அகிலன் பயின்றதை செய்தான். அரசு செய்தது பிழை என விமர்சிப்பவர்கள் புலிகள் செய்ததும் பிழை என்று விமர்சிப்பதில் பிழை எதுவும் கிடையாது. எமக்குக் கிடைத்த தடயங்களை வைத்து எமது மக்களின் சுதந்திரமான எதிர்காலத்துக்கு ஏதாவது செய்வதே இன்றைய கடமை. புலி செத்துவிட்டது. புலத்துப் புலிகள் உயிர்கொடுக்க முயற்சிக்கிறார்கள் என்பது தப்பு. பு.புலிகள் பிறத்தியான் பணத்தைப் பிடுங்கிக் கொழுக்க நிற்கிறார்களே தவிர இது புலியுமில்லை பூனையும் இல்லை. இந்திய நடிகர் நடிகைகளை ஐரொப்பாவுக்கு அழைத்து மேடைகளில் திறந்து காட்டத் தொடங்கிவிட்டார்கள். இப்படிப் பல நிகழ்ச்சிகள் நடந்து விட்டன. இங்கே உழைப்பாளிகள் பணங்களை உண்டியல் குலுக்கியும் நடிகைகளை அழைத்து சுகபோகங்கள் அனுபவித்துவிட்டு மேடையில் ஏற்றிக் எல்லாம் காட்டுகிறார்கள். இசைப்பிரியாவின் பிணமும் உழைக்கத் தொடங்கிவிட்டது. எந்த ஏழைத் தொழிலாளி பெற்ற பிள்ளையோ யார் அறிவார்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //இசைப்பிரியாவின் பிணமும் உழைக்கத் தொடங்கிவிட்டது. எந்த ஏழைத் தொழிலாளி பெற்ற பிள்ளையோ யார் அறிவார்//
    குசும்பு வலிக்கிறது மனசு; ஒருபெண்ணின் பிணத்தை புலிகள் பணமாக்கி அழகு பார்க்கின்றார்கள், அதுக்கு நாம் மட்டும் குறைந்தவர்களா? என்பது போல் புலி மீது உள்ள கோபத்தை இந்த அபலை மீது சிலர் செலுத்துகிறார்கள், அவள் சித்திரவதை செய்து கொல்லபட்டதை விட இந்த கட்டுரை மோசமானது, என்ன வேறுபாடெனில் ராணுவத்திடம் அவள் கிடைத்தாள் குதறினார்கள், வாசுவிடம் இந்த தகவல் கிடைத்தது அதை சிதைக்கிறார், உன்மையில் இந்த கட்டுரையை ஒரு புலி ஊடகத்தில் மறுபதிவு செய்தால் தமிழரின் பாதுகாவலர் புலிகளே என அனைத்து தமிழரும் ஏற்று கொள்வார்; இதில் பல்லி குசும்புவும்;;; அடங்கலாம்; காரணம் எமக்கும் சகோதரிகள்

    Reply
  • Kusumpu
    Kusumpu

    பல்லி!கட்டுரையாளர் மட்டுமல்ல பல பின்நோட்ட நண்பர்களும் இசைப்பிரயாவின் மேல் நடைபெற்ற மனித உரிமை மீறலையும்; பாலியல் வல்லுறவையும்; சர்வதேசச் சட்டமீறல்களையும் புலிகளைச் சாட்டிச் சரிசெய்ய முயல்கிறார்கள். புலிகள் செய்த போர் அத்துமீறலை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்காக இவள்மேல் நடந்த வன்முறையை புலிகள் மேலுள்ள வக்கிரக்குணங்களால் சரி செய்து விடமுடியாது. அன்றுமல்ல இன்றும் நாம் புலி எதிர்பாளர்கள்தான். அதற்காக எதிர்ப்பு அரசியல்தான் சரி என்று நிற்பது புலிகளுக்குச் சமமாகும். ஒரு கொலையை இன்னொரு கொலை சரிசெய்ய முடியாது. இந்தப்பிள்ளை எந்த நிற்பந்தத்தினுள் புலிகளினுள் சேர்ந்தாரோ? வயிற்றுப் பசிக்காக புலியில் சேர்ந்த எத்தனை ஏழை மக்கள் சேர்ந்தார்கள். வெளிநாட்டில் இருந்து கொண்ட நேரத்துக்கு நேரம் சாப்பிட்டல்ல திண்டு கொண்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட ஒரு தமிழிச்சியின் பிணத்தைப் பார்த்தும் வக்கிரகுணத்துடன் எழுதுவது இவர்களும் வரியில்லாப் புலிகள் என்பதை காட்டுகிறது. புலி பிணத்தை வைத்து உழைக்கிறது என்று கூறும் இவர்களின் எழுத்துகளை வாசியுங்கள். எந்தவிதத்தில் புலிகளை விடச் சிறந்தவர்கள்? அவர்கள் சரியோ பிழையோ உயிர்களைக் கொடுத்தார்கள் நேசித்த மண்ணிலே மடிந்தார்கள்.

    Reply
  • nelson
    nelson

    குசும்பு இசைப்பிரியாவுக்காக மனிதம் கதைப்பதை பார்க்க பரிதாபமாயிருக்கிறது. முஸ்லீம்கள் தமது பெண்களை கேவலப்படுத்துகிறார்கள் என்று குசும்பு அவர்களை விமர்சிக்க பாவித்த வசனங்களும் கதைகளும் இன்னமும் தேசத்தில் இருக்கிறது. அதோடை ஒப்பிடுகையில் வாசுதேவன் கட்டுரை தேவலை.

    Reply
  • rohan
    rohan

    gopal, இட வசதியும் context வசதியும் கருதி இதை நான் செய்வதுண்டு.

    Reply
  • பல்லி
    பல்லி

    /:/முஸ்லீம்கள் தமது பெண்களை கேவலப்படுத்துகிறார்கள் என்று குசும்பு அவர்களை விமர்சிக்க பாவித்த வசனங்களும் கதைகளும் இன்னமும் தேசத்தில் இருக்கிறது. //
    அங்கேயும் அவர்கள் பெண்கள் மீது மதத்தின் பெயரால் செய்யும் அவலங்களைதான் சொன்னார்; அவருக்கு எதிராய் அங்கே என் கருத்துக்கள் இருக்கும்; இருவரும் சமயம் மதம் என்பதை வைத்தே வாதிட்டோம்; அதில் வாசுபோல் பெண்களை இழிவுபடுத்துபவர்களை குசும்புசுட்டி காட்டினார், அதுகூட தவறு என நான் எழுதினேன்;

    //இசைப்பிரியாக்கள் அரசையந்திரத்தால் வதைபடுவது சிலமணிநேரங்கள்தான். தொடர்ந்து உண்டியல்காரரும் பொழுதுபோகாதோரும் திரும்பத்திரும்ப இசைப்பிரியாக்களை குரூரமாக சித்திரைவதை செய்கிறார்கள்//
    கட்டுரையாளர் மட்டும் என்ன அவரது காயங்களுக்கு மயிலிறகால் மருந்து தடவுகிறாரா??

    Reply
  • வாசுதேவன்
    வாசுதேவன்

    இசைப்பரியாவின் மரணம் நிச்சயம் மனித உரிமை மீறல்தான். அதை விசாரிக்க வேண்டும்! தண்டிக்க வேண்டும்! ஆனால் இசைப்பிரியாவின் மரணத்திற்கு இராணுவம் மட்டுமா பெறுப்பு? இறுதி யுத்தம் நடைபெறுகையில் புலிகளின் அரசில் பிரிவு முதல் ஊடகப்பிரிவுவரை ஆயுதம் ஏந்த நிரப்பந்திக்கப்பட்டார்கள் காரணம் ஆட்பற்றாக்குறை. இதையடுத்த பல போராளிகள் இயக்கத்தை விட்டு தப்பியோடி இன்று உயிருடன் உள்ளார்கள். பல பெண் போராளிககள் உட்பட. இயக்கத்தின் தலைமையே தன் குடும்பத்தை எப்படி பாதுகாக்கலாம் என்பதில் தான் கவனம் செலுத்தியது! சூசையின் மனைவி தப்பியோட முடிந்தது. இசைப்பிரியா போராட நிர்ப்ந்திக்கபடுகிறாள். இது இசைப்பிரியாவின் தவறல்ல! அப்பாவி இசைப்பிரியா அன்று தலைமைகளை காக்க பலியாக்கப்பட்டது போல் இன்று இங்குள்ள புலிகள் மீளவும் அவளை பலியாக்குவதை நான் கேள்விக்குள்ளாக்கினேன். இசைப்பிரியா போல் கொல்லப்பட்ட அனைத்து பெண்களிற்கும் நீதி கிடைக்க வேண்டும்! தயவு செய்து இதை திரிரபுபடுத்த வேண்டாம்! இவர்களை பாதுகாக்க வேண்டிய புலிகளே அவர்களை பலிகொடுத்த பின்னர் அதைப்பற்றி ஒன்றும் கூறாது அடுத்தவர்களை நொந்து என்ன பலன்? ஒரு இராணுவம் தன் இராணுவ குணாம்சங்களை காட்டியே தீரும்! அது அமெரிக்க ராணுவமாயிருந்தால் என்ன இலங்கை இராணுவமாயிருந்தால் என்ன? இன்றைய தேவை வெறும் தண்டணைகள் மட்டுமல்ல அனைவரும் தாம் விட்ட தவறுகளை மீண்டும் செய்யாதிருக்க ஒரு நடைமுறை! அங்க வாழும் மக்களின் நிரந்தர அமைதி! இதற்கு விட்டுக்கொடுப்புகளும் மன்னிப்புகளும் அவசியமாகிறது!

    நலிந்து போய் மிகவும் பலவீனமான ஒரு சமூகத்தை தாயகத்தில் மீள பலம் பெற வைப்பதை கட்டியெளுப்பதை விடுத்து எமது பழிவாங்கல்களுக்காக மீளவும் அவர்களை பயணக்கைதிகாளக வைப்பது எந்த விதத்தில் நியாயம்?

    பல்லி,
    நான் எங்கும் இசைப்பிரியாவை சித்திரவதை செய்ததாக நினைக்கவில்லை. தயவு செய்து எங்கு என்று சுட்டிக்காட்டவும். நான் ஊடகங்களில் இசைப்பிரியாவின் அரைகுறை படங்களை மீள மீள காட்டுவதை தான் விமர்சிக்கிறேன்!

    Reply
  • Kusumpu
    Kusumpu

    நில்சன் முஸ்லீம்கள் எமது பெண்களை அவமானப்படுத்தினார்கள் கேவலப்படுத்தினார்கள் என்பதை அன்றுமட்டுமல்ல இன்றும் சொல்கிறேன். இதற்கு தேசத்தின் சாட்சி தேவையில்லை. முஸ்லீம்கள் முஸ்லீம் பெண்களையே அவமானப்படுத்துபவர்கள். சரியாச்சட்டத்தினூடாக கற்பழிப்பு சட்டமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இசைப்பிரியாவின் கொலை வீடியோவை சற்று நோக்கினால் பின்னணியில் கேட்டும் வசனம் முஸ்லீம்கள் இதில் முக்கிய பங்கேற்றுள்ளனர் என்பதை புரியவைக்கும். இசைப்பிரியாவின் ஒளிநாடாவில் கேட்கும் வசனம். “ஐயோ” “தமிலனின் மானம் போவுது” இங்கே சிங்கள இராணுவத்தை மட்டும் சாட்டிவிட்டு முஸ்லீம்களோ புலிகளோ தப்பி விட முடியாது.
    உலகறிந்த உண்மை என்னவெனில் முஸ்லீம் ஆண் எந்த பெண்ணையம் பார்கலாம் கற்பும் அழிக்கலாம். ஆனால் ஒரு முஸ்லீம பெண் இன்னொரு முஸ்லீமையே விரும்பினால் கொலை அதற்குப் பெயர் கெளரவக்கொலையாம். இந்தக் கெளரவக்கொலைகளை நடத்துபவர்கள் தந்தை அல்லது குடும்பத்திலுள்ள ஆண். இதை ஐரோப்பாவிலும் பார்க்கலாம்.

    வாசுதேவன் கட்டுரையை மட்டுமல்ல முக்கியமாக வாசகர்களின் கருத்துக்களைகத்தான் நான் விமர்சித்தேன். வாசுதேவனின் கட்டுரையுடன் பலவிடயங்களில் ஒத்துப்போனாலும் பிணத்துக்குப் பிணம்தான் தீர்வு என்பது புலிப்பாணியிலான தீர்வே. அதற்காக அவர் எழுதிய அனைத்தையும் நான் குறைசொல்லவில்லையே.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    வாசுதேவன்!
    இறுதியாக எழுதியதைதான் உங்களிடம் இருந்து எதிர்பார்த்தேன். இதைதான் எனது பின்நோட்டத்திலும் தெழிவாகக் கூறியிருந்தேன்.
    /இறுதி யுத்தம் நடைபெறுகையில் புலிகளின் அரசில் பிரிவு முதல் ஊடகப்பிரிவுவரை ஆயுதம் ஏந்த நிரப்பந்திக்கப்பட்டார்கள் காரணம் ஆட்பற்றாக்குறை/ காரணங்கள் எதுவாக இருந்தாலும் இசைப்பிரியா போன்றோர் நிச்சயமாக நிர்ப்பந்தப் படுத்தப்பட்டிருபார்கள் என்பதில் ஐயமே இல்லை. இசைப்பிரியா போன்ற மற்றய புலிகளால் கொல்லப்பட்ட பெண்களுக்கும் நீதி வேண்டும் சிங்களப் பெண்மணிகள் உட்பட. ஆனால் இவர்கள் புலி என்பதற்காக அவமானப்படுத்தப்பட்டு செய்யப்பட்ட கொலைகள் மற்றக் கொலைகளைச் சமப்படுத்தும் என்றாகாது.
    /ஒரு இராணுவம் தன் இராணுவ குணாம்சங்களை காட்டியே தீரும்! அது அமெரிக்க ராணுவமாயிருந்தால் என்ன இலங்கை இராணுவமாயிருந்தால் என்ன? / இந்த இராணுவ உடைகளுக்குள்ளே இருப்பது மனிதன் என்பதையும் யாரும் மறந்து விடக்கூடாது.

    ஆரம்பகாலப் போராட்டங்களில் போராளிகள் தற்கொலைதாரிகளாக மாறியது எதிரியின் கைகளில் அம்பிட்டு சித்திரவதைப்படக்கூடாது என்பதனால். அதனால்தான் காங்கேசந்துறை சீமெந்துதொழிற்சாளை டைனமெட் கொள்ளையில் புலிகள் ஒரு சிங்களவரைப் பிடித்தும் சுடாமல் விட்டார்கள். இராணுவம் போல் கெறில்லாக்களும் நடந்து கொண்டால் இராணுவம் என்றும் சரணடையாது. இன்றைய இறுதிக்கட்டப்போர் என்னத்தைக் காட்டி நிற்கிறது? சரணடைந்தாலும் சூடு. அடையாவிட்டாலும் சூடு. உயிரோடும் நிர்வாணம் பிணமாயும் நிர்வாணம். இதில் சரணடைய என்ன இருக்கிறது. இதில் புலிகள் சரணடைந்தது தான் உலகமகா வேடிக்கை.

    Reply
  • பல்லி
    பல்லி

    :://இசைப்பரியாவின் மரணம் நிச்சயம் மனித உரிமை மீறல்தான். அதை விசாரிக்க வேண்டும்! தண்டிக்க வேண்டும்! ஆனால் இசைப்பிரியாவின் மரணத்திற்கு இராணுவம் மட்டுமா பெறுப்பு?//
    இதுவே நான் உங்களிடம் இருந்து எதிர்பார்த்தது; அதனால் நீங்கள் விட்ட தவறை மீண்டும் சுட்டிகாட்ட பல்லி விரும்ப இல்லை; ஆனால் எங்கோ உங்களுடன் நட்பாகி உள்ளேன்; சமயம் வரும்போது கண்டிப்பாக பண்பாக பணிவாக நம் தவறுகளை பகிர்ந்து கொள்வோம்; நம் கருத்துக்கள்
    இலங்கை அரசுக்கோ அல்லது புலி பினாமிகளுக்கோ சாட்சியமாக வரமால் பார்த்து கொள்வோம்;

    Reply
  • நந்தா
    நந்தா

    புலிப் பெண்கள் கொல்லப்பட்டால் அவர்கள் குண்டுகளைக் கட்டிக் கொண்டு வந்தார்களா இல்லையா என்பதை பார்க்க வேண்டுமா இல்லையா என்பதை யாராவது அறிவித்தால் நல்லது. இந்திய சமாதானப்படை காலத்தில் புலிப் பெண்கள் தங்களின் அந்தரங்க இடங்களில் குண்டுகளை ஒளித்து வைத்திருந்து பிடிபட்ட நிகழ்வுகளை புலி ஊடகங்கள் இந்திய இராணுவம் தமிழ் பெண்களை மானபங்கம் செய்கிறது என்றது நினைவுக்கு வந்தால் நல்லது.

    ஆயிரக்கணக்கான புலி ஆண்களும், பெண்களும், புலிக்கேடி தமிழினி, புதுவை ரத்தினதுரை ஆகியோர் எப்படி சூடு வாங்காமல் தப்பினார்கள்?
    இசைப்பிரியாவின் படத்தைக் காட்டி துவராகா கொல்லப்பட்டதாகச் செய்த பிரச்சாரம் என்னாகிற்று? புலி வால்கள் அல்லது விமர்சன நிபுணர்கள் துவாரகா பற்றி வாய் திறக்காமல் ஏன் இருக்கிறார்கள்?

    Reply
  • Kusumpu
    Kusumpu

    நந்தா! இங்கு புலிக்கூட்டத்துக்கு என்ன நடந்தது என்றே தெரியாது. இவர்கள் எல்லாம் பிரபாகரனின் தலையில் சிந்தித்தவர்கள். அதுதானே பிரபாகரனின் தலை கொத்தப்பட்டுவிட்டதே இதற்குப்பிறகு அவர்களால் எப்படிச் சிந்திக்க முடியும். இவர்கள் எப்பதான் சுயமாக சிந்தித்தார்கள்? புதுவை இரத்தினதுரை கட்டுரையாளரைத்தானே சொல்கிறீர்கள். இவர் என்றும் கவிதை எழுதவில்லையே.இவர்கள் எல்லாம் கடசியாகக் கூட வாழ எண்ணியிருக்கிறார்கள் பார்த்தீர்களா? மற்றவர்களுக்குக் கொடுத்தது சயனைட்டு இவர்கள் மட்டும் சரணடைவு. புலிகளின் விடுதலைப்போராட்டம் புலிகளுக்கே தவிர மக்களுக்கல்ல என்பதை அன்றும் சொன்னோம் இன்றும் சொல்கிறோம்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //எல்லா இசைப்பிரியாக்கள் பற்றிய உண்மையும் வெளிவரவேண்டும்! தண்டிப்பதற்காக அல்ல! உண்மையை அறிந்து அமைதிகொள்ள! : – வாசுதேவன் //

    கேபீயின் சொல் கேட்டு ஆயுதங்களை மெளனித்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது வாசுதேவன் மற்றும் கேபீ போன்றோருக்கு தெரியாமல் இருக்க முடியாது. இறுதி தினங்களில் என்ன நடந்தது என எழுதுங்கள். மகிந்த அரசு சும்மா தாம்பாளம் விரிக்காது. யுத்தத்தை நடத்திய சரத் பொண்சேகா போன்ற வீரர்கள் சிறைகளில் வாட , பயங்கரவாதிகள் என தேடப்பட்டவர்கள் அரசியல் நடத்துவது ……… எங்கோ கணக்கு பிழைக்கிறது? யாரையும் நம்ப முடியவில்லை?

    Reply
  • S. சுகுணகுமார்
    S. சுகுணகுமார்

    நண்பா ஆயுதங்களை மெளனித்தது தலையே ஒளிய கே.பி அல்ல! கே.பி ஒரு ஊடகம். இதை ஆங்கிலத்தல் Dont shoot the mesanger! என்று கூறுவார்கள். அது சரி யாழ் நகரில் 100க்கணக்கான அப்பாவி பொதுமக்களின் புதைகுழிக்கும் நீங்கள் வீரர் என்று கூறும் சரத்திற்கும் உள்ள சம்பந்தம் தெரியதா நண்பரே? சரத் தேர்தலில் நின்ற போது நடைபெற்றதே கே.பி அரசியலுக்கு வந்தாலும் நடைபெறும்!

    Reply
  • Kusumpu
    Kusumpu

    வாசுதேவன் நண்பனுக்குப் பதில் சொல்வார் என்று எண்ணுகிறேன். காரணம் அவர் உள்ளிருந்தவருக்கு உள்இரகசியங்கள் தெரியவேண்டும்.
    /யுத்தத்தை நடத்திய சரத் பொண்சேகா போன்ற வீரர்கள் சிறைகளில் வாட , பயங்கரவாதிகள் என தேடப்பட்டவர்கள் அரசியல் நடத்துவது ……… எங்கோ கணக்கு பிழைக்கிறது?-//நண்பனே. சரத்தல்ல வீரன் வயிற்றுப் பிழைப்புக்காக முன்னரனின் நின்று செத்த சிங்களவீரனும் புலிகளின் பொய்களில் எடுபட்டு வந்து இறந்த இசைப்பிரியா போன்ற ஏழைபெற்றோரின் பிள்ளைகளும்தான் வீரர்கள். சரத் செய்தபழிக்கு அனுபவிக்கிறார். மகிந்த கோத்தபாய வரிசையில் நிற்கிறார்கள். இலண்டனில் சிலர் எதிர்ப்பைக் காட்டினார்கள் என்பதற்காக ஒன்றுமறியாத அப்பாவித் தமிழர்களை அரசு படுத்திய பாட்டை அறிந்திருப்பீர்கள். வளர்ந்த நாகரீகமான மனிதர்கள் இதைச் செய்யமாட்டார்கள். ஒரு அரசதலைவர் காட்டான் மாதிரி நடந்து கொள்வதும் உலகம் பார்த்துக் கொண்டிருப்பதும் தான் வேடிக்கையானது: நண்பா! இலங்கை அரசியலில் கணக்கு எப்போ சரியாகப் போடப்பட்டது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்:

    Reply