வடபகுதி விவசாயிகளுக்கு இந்திய அரசால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் இன்னமும் பயனாளிகளிடம் சேரவில்லை.

வடபகுதி விவசாயிகளுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் இது வரையும் பயனாளிகளுக்கு கைளிக்கப்படாமலுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதி விவசாயிகளுக்கென 500 உழவு இயந்திரங்கைளை இந்திய அரசு வழங்கியிருந்தது.

கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா யாழ்.பொது நூலக முன்றலில் வைத்து இவற்றை வட மாகாண ஆளுநரிடம் கையளித்திருந்தார். இதனை கைளித்து 15 நாட்களாகியும் பயனாளிகளிடம் இவற்றைக் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

1 Comment

  • rohan
    rohan

    ஒக்ஸ்போர்ட் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்வதில் அங்கஜன் பிஸி – பீரிஸை மேய்ப்பதில் நாமல் பிஸி – விக்கிலீக்ஸ் என்ன சொல்லி மானத்தை வாங்குமோ என்று இந்திய பிஸி – பீப்பைள் கான் வெய்ற்.

    Reply