தடுப்பு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் இம்முறை 360 பேர் தோற்றியதாகவும் அவர்களில் 211பேர் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதியைப் பெற்றுள்ளனர் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சசந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இவர்களில் 40பேர் பல்கலைக்கழத்திற்குத் தெரிவாகும் வாய்புக் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் 1இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுளளனர். ஆனால் புள்ளிகளின் அடிப்படையில் 22ஆயிரம் பேர் மட்டுமே பல்கலைக்கழகத்தில் உள்வாங்கப்படுவர் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மாயா
கிடைத்ததை பயன்படுத்துங்கள். நிசங்களையும் ; உண்மைகளையும் கண்டவர்கள் நீங்கள். பசப்பு அரசியல்வாதிகளிடம் ஏமாறாதீர்கள். வாழ்த்துகள்.