சங்கானை குருக்களும் அவரது மகன்களும் சுடப்பட்டமை தொடர்பாக கைதாகியுள்ள நால்வருக்கும் 14 நாட்கள் விளக்க மறியல் உத்தரவு.

chankanai-kurukkal.jpg
சங்கானையில் குருக்களும் அவரது இரு மகன்மாரும் துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கில் கைதான இரு படையினரையும் இரு தமிழ் இளைஞர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி சங்கானையில் குருக்கள் மீதும் அவர் இரு மகன்கள் மீதும் இரு இளைஞர்கள் துப்பாக்கிப்பிரயோகம் செய்ததில் காயமடைந்த 55 வயதான குருக்கள் கடந்த புதன் இரவு உயிரிழந்தார். கொள்ளையடிக்கச் சென்ற வேளையில் இவர்கள் மீது துப்பாக்கியினால் சுடப்பட்டது. இவர்களை துப்பாக்கியால் சுட்ட இரு இளைஞர்களும், அவர்களுக்கு துப்பாக்கியைக் கொடுத்து அதற்கு உடந்தையாக இருந்த இரு படையினரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நால்வரும் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது மல்லாகம் நீதிமன்றம் இவர்களை 14 நாட்கள் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

சங்கானை குருக்களின் கொலைக்கு இந்து மத அமைப்புக்கள் கண்டனம்.
17 12 2010

கடந்த சனிக்கிழமை சங்கானையில் கொள்ளையர்களின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி, கடந்த புதன்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் மரணமான நித்தியானந்த குருக்களின் கொலையைக் கண்டித்து பல இந்து மத அமைப்புக்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

குருக்களது மரணச்சடங்குகள் நேற்று வியாழன் பிற்பகல் அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இதில் சமய, சமூகப் பிரதிநிதிகள்- பொதுமக்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். மானிப்பாய் பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

சங்கானையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த குருக்கள் வைத்தியசாலையில் மரணம். படையினர் இருவர் கைது.
16 12 2010

கடந்த சனிக்கிழமை இரவு சங்கானையில் குருக்கள் ஒருவரும் அவரது மகன்மார் இருவரும் சுடப்பட்டு அவர்களது மோட்டார் சைக்கிளையும் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்ற இருவரும் அவர்களுக்கு துப்பாக்கியை வழங்கிய இரு படைச் சிப்பாய்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பின்னர் படையினரிடம் சரணடடைந்து புனர்வாழ்வு பெற்றவர்கள் என்றும், இவர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கியவர் கஞ்சா போன்ற போதைப் பொருள்களுக்கு அடிமையான இராணுச் சிப்பாய் எனவும் மற்றொரு சிப்பாயும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார் எனவும் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

படையினரின் துப்பாக்கியைக் கொண்டு கொள்ளைச் சம்வத்திலீடுபட்டதுடன், குருக்கள் மீதும் அவரின் மகன்மார் மீதும் துப்பாக்கியால் சுட்டவர்களான புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒருவர் சக்தி என அழைக்கப்படும் காசிநாதன் முகுந்தன், மற்றவர் ரமணன் என்றழைக்கப்படும் பாலசுப்பிரமணியம் சிவரூபன் எனவும், இவர்களுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டுள்ள படையினரில் ஒருவர் இராணுவ கோப்ரல் குணசேன, மற்றவர் சிப்பாயான ரட்ணாயக்க எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கபட்டு விசாணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.

படையினரின் இது போன்ற நடவடிக்கைகள் இடம்பெற அனுமதிக்கப்பட மாட்டாது எனவும், போர் முடிவுற்ற பின்னர் படையினரால் கட்டியெழுப்பப்பட்டு வந்த நல்ல விடயங்கள் சிலரால் நாசமாக்கப்பட்டு வருவதாகவும, இவர்களைப் போன்றவர்களுக்கு இராணுவத்தில் மன்னிப்பு வழங்கப்படமாட்டாது எனவும் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பிரதிப் பொலிஸ் மாஅதிபரிடம் தான் நேரடியாக கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளர். யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற வேறு சில இது போன்ற சம்பவங்களுடன் இவர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை. கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்த சங்கானை இழுப்பைத்தாழ்வு முருகமூர்த்தி ஆலயதத்தின் குருக்களான நித்தியானந்த குருக்கள் (வயது 55) யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிக்கிச்சை பலனளிக்காது நேற்று புதன் கிழமை இரவு மரணமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகன்மாரான சிவானந்த சர்மா, ஜெகானந்த சர்மா இருவரும் தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

33 Comments

  • rohan
    rohan

    இப்படியே ‘படையினர்’ கைது செய்யப்படுவதும் பின்னர் நடவடிக்கை ஏது இன்றி அவர்கள் விடப்படுவதும் தானே தொடர்ந்து நடக்கிறது.

    அது சரி – ஒரு மருத்துவத் தாதியின் மரணம் தொடர்பாக ஒரு சிங்கள மொழி பேசும் வைத்திய கைது செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டதே. அந்த விசாரணை என்னவாயிற்று? டக்ளஸ் தோழர் கூட குரல் கொடுத்திருந்தாரே. கேஸ் கிடப்பில் போடப்பட்டு விட்டதா?

    அது போக, சாவகச்சேரி கபிலநாத் மரணம் பற்றிய வழக்கு என்னவாயிற்று?

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    மனித பெறுமதி புரியாதவர்களாலே தான் தமிழ் மக்களின் போராட்டம் தலைமை தாங்கப்பட்டுள்ளது.

    Reply
  • Jeyarajah
    Jeyarajah

    ஜெயா பிரான்ஸ்
    இந்த பின்னோட்டக்காரர்கள் பொப்புலரான விடங்களுக்கு மட்டும்தான் எழுதுவார்களா? புலியை உள்ளே வைத்திருந்தாலும் குற்றம், மனிம உரிமை மன்னிப்பு சபை ஆனப்பட்ட சபை என்பார்கள். ஆனால் வெளியே வந்தால் பழைய பாணியில் கொலை கொள்ளை தான் கொள்ளை செய்தாலும் கொலையாவது செய்யாமல் விடலாமே இத குருக்களின் கொலை சம்பந்தமாக எந்த காணொளியிலும் காட்டமாட்டார்கள் சனல்4, பிபிசி எதிலுமே பார்க்க முடியாது. தான் எழுதுகிற கருத்து தோற்க கூடாது என்பதிலும் பார்க்க சமூக நலன் கருதி எழுதலாம்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //தான் எழுதுகிற கருத்து தோற்க கூடாது என்பதிலும் பார்க்க சமூக நலன் கருதி எழுதலாம்.//
    கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம்; பல்லி முடிந்த வரை என் எழுத்தில் இதை கவனத்தில் எடுத்து கொள்கிறேன்;

    Reply
  • rohan
    rohan

    //தான் எழுதுகிற கருத்து தோற்க கூடாது என்பதிலும் பார்க்க சமூக நலன் கருதி எழுதலாம்.//

    எப்போதுமே கட்சி – குழு சாராது கருத்துச் சொல்வேரே அதிகம் பாதிக்கப்படுகிறோம். ஒருவரோ ஒரு குழுவோ சரியான விடயங்களைச் செய்கிற போது நாம் ஆதரிப்பதற்காக அவர்களுக்கு ஏற்படும் திருப்தியை விட பிழையான விடயங்களை நாம் கண்டிக்கும் போது எற்படும் எரிச்சல் அதிகமாக் இருக்கிறது.

    புலி செய்த இரண்டடொரு நல்ல விடயங்களை ஆதரிக்கும் போது அல்லது புலி வசை பாடுவோரை இனியாவது நிறுத்துமாறு கேட்கும் போது எமக்குப் புலி முத்திரை குத்துவோர், புலிப் பரணியுடன் நடக்கும் முறையற்ற விடயங்கள் பற்றி நாம் கருத்துக் கூறும் போது எம்மை நையாண்டி செய்கின்றனர்.

    புலி நண்பர்களிடம் புலி பற்றிய சில விமர்சனங்களை வைத்த போது இவன் புளொட், இவன் ஈபீ என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டிருக்கிறோம்.

    Reply
  • நந்தா
    நந்தா

    புலிகளால் கொல்லப்படவர்களின் கண்ணொளி, காணாத ஒளிகள் எதனையும் கானமுடியாது. அதன் அர்த்தம் புலிகள் கொலகளில் ஈடுபடவில்லை என்றுதான் புலிகளின் வால்கள் கூறுவார்கள். அதனை உண்மை என்று யாராவது நம்புகிறீர்களா?

    கிருஷாந்தி கொலையில் ஈடுபட்ட இராணுவத்தினர் அனைவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது பற்றி புலி வால் ஊடகங்கள் இதுவரயில் வாய் திறந்ததாகத் தெரியவில்லை.

    புலிகளைப் போல 24 மணிநேரத்தில் மரண தண்டனை வழங்கும் முறைகள் உலகத்தில் எங்கும் கிடையாது. இந்துக் குருக்களின் கொலை என்பதால் பி பி சீ மவுனம் காட்டும்.

    Reply
  • வாசுதேவன்
    வாசுதேவன்

    நாம் தொடர்ந்து வலியுறுத்திவரும் ஒரு விடயம் இந்த முன்னை நாள் போராளிகளின் மறுவாழ்வு பற்றியது! பணிஸ் கொடுத்ததிற்கு நக்கலடித்த கூட்டம் இதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்? இன்றைய தேவை என்ன என்பதை புரியாது புலம்பெயர் மண்ணில் அரசியல் கதைப்பவர்கள் ஒரு காலத்தில் அங்கு செல்ல முடியாத நிலையே ஏற்படும்! முன்னை நாள் போராளிகள் என்று நான் கூறுவது அனைத்து இயக்க போராளிகளையுமே!

    Reply
  • நந்தா
    நந்தா

    //புலி செய்த இரண்டடொரு நல்ல விடயங்களை //
    அப்போ மிச்சம் 98% தப்பு எங்கிறீர்கள்.

    அந்த நல்ல விஷயங்கள் என்னவோ?

    Reply
  • BC
    BC

    தமிழ் போராளிகளை கைது செய்த இலங்கை பொலிஸ், இராணுவத்தின் செயல்களை நாம் கண்டிக்க வேண்டும்.

    Reply
  • தோஸ்து
    தோஸ்து

    // இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பிரதிப் பொலிஸ் மாஅதிபரிடம் தான் நேரடியாக கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளர்//
    இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுகருத்தில்லை. ஆனால் பிரதிப் பொலிஸ் மாஅதிபரா தண்டணை வழங்கப்போகிறர். அப்ப நீதிமன்றம் வெறும் சும்மாவா!
    இராணுவ சிப்பாய்கள் மீது யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க கடுமையான நடவடிக்கை எடுக்க மாட்டார். பிரதிப் பொலிஸ் மாஅதிபர்தான் கடுமையான நடவடிக்கை எடுப்பார். நல்ல தளபதி.

    Reply
  • மகுடி
    மகுடி

    //முன்னை நாள் போராளிகள் என்று நான் கூறுவது அனைத்து இயக்க போராளிகளையுமே!//

    உங்களோடு இணையாவிட்டால் எல்லோருக்கும் ஆப்பு என்பது போல மிரட்டுறீங்க வாசுதேவன். இதுவும் புலி மிரட்டல் டைப்தான். இது கொஞ்சம் அதிகமா தெரியவில்லை?

    Reply
  • BC
    BC

    //Rohan – புலி வசை பாடுவோரை இனியாவது நிறுத்துமாறு கேட்கும் போது //
    அதாவது முன்பும் நிறுத்துமாறும் கேட்டீர்கள். இப்போ இனியாவது நிறுத்துமாறு கேட்கிறீர்கள். புலியை குறை சொன்னால் உங்களுக்கு பிடிக்காது.

    Reply
  • thurai
    thurai

    இதெல்லாவற்றிற்கும் புலத்துப்புலிகளே பதில் சொல்ல வேண்டும். சட்டத்திற்கு பயந்து வாழும் புலம் பெயர்நாடுகளில் சட்டத்தை மதியாமல் மிரட்டி கொள்ளையடித்த கூட்டம் வளர்த்துவிட்ட பயிர்களே இவர்கள். கேட்டால் மற்றவர்கள் எல்லாம் ஆயுதக்குழு, ஒட்டுப்படைகள், திருடர்கள் என்பார்கள் ஜிரிவி ஊடக வல்லுனர்கள். புலிகளின் தமிழீழ விடுதலை இலங்கையில் விட்டுச் சென்றுள்ளது பட்டினிப்புலிகளை, புலத்தில் பணக்காரப்புலிகளை. –துரை

    Reply
  • rohan
    rohan

    Nantha, ‘இரண்டொரு’ என்று சொன்னேன் – 2% என்றல்ல.
    வேள்வி என்ற பெயரில் கோயில்களில் மிருகவதை செய்வதைப் புலிகள் தான் நிறுத்தினார்கள். சீதனம், கசிப்பு, களவு, சில்மிஷம் போன்றவை தமிழர் பகுதியில் கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டதும் அவர்களால் தானே.

    //கிருஷாந்தி கொலையில் ஈடுபட்ட இராணுவத்தினர் அனைவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது பற்றி புலி வால் ஊடகங்கள் இதுவரயில் வாய் திறந்ததாகத் தெரியவில்லை.//
    இந்தத் தண்டனை எப்போது நிறைவேற்றப்பட்டது என்றும் இந்தப் புலி ஊடகங்களை மட்டுமே நம்பி வாழும் என்னைப் போன்றவர்களுக்குச் சொல்லி அறிவூட்டினால் நன்றியுடையவர்களாக இருபோம்.

    //புலி வசை பாடுவோரை இனியாவது நிறுத்துமாறு கேட்கும் போது //
    /அதாவது முன்பும் நிறுத்துமாறும் கேட்டீர்கள். இப்போ இனியாவது நிறுத்துமாறு கேட்கிறீர்கள். புலியை குறை சொன்னால் உங்களுக்கு பிடிக்காது./
    முன்பு நிறுத்துமாறு நான் என்று கேட்டேன்? செத்த புலி அடிப்பதை விட்டு நாலு நல்ல விடயங்கள் செய்வது நல்லது என்று தான் இனியாவது நிறுத்துமாறு அவ்வப்போது கேட்டுப் பார்க்கிறேண். புலியை குறை சொன்னால் எனக்குப் பிடிக்காது என்று உங்கள் கருத்தைச் சொல்லி உங்கள் பொருள் விளங்கும் ஆற்றலை நிறுவித்தான் ஆவேன் என்று நீங்கள் முரண்டு பிடிக்கிறீர்கள். நான் சொல்ல என்ன இருக்கிறது?

    Reply
  • aras
    aras

    /சீதனம், கசிப்பு, களவு, சில்மிஷம் போன்றவை தமிழர் பகுதியில் கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டதும் அவர்களால் தானே”//
    ஐயோ ஐயோ தாங்கமுடீயவில்லை.

    Reply
  • Loven
    Loven

    மனித பெறுமதி புரியாதவர்களாலே தான் தமிழ் மக்களின் போராட்டம் தலைமை தாங்கப்பட்டுள்ளது.
    Hello Sothi what about your TELO and also your comments which are whiter than white. Also you are happy to deal with India and Srilanka. If asked say for the people we will do anything? People rejected all of you.- Loven

    Reply
  • மகுடி
    மகுடி

    ///வேள்வி என்ற பெயரில் கோயில்களில் மிருகவதை செய்வதைப் புலிகள் தான் நிறுத்தினார்கள்.//

    மனிதனை மிருகமாகவும் , மிருகத்தை மனிதனாகவும் மாற்றிய பெருமை புலிகளையே சாரும்.

    Reply
  • நந்தா
    நந்தா

    //சீதனம், கசிப்பு, களவு, சில்மிஷம் //
    இதனைப் புலிகள் நிறுத்தினார்களா? தமாஷாக இருக்கிறதே! சீதனம் என்பது இலங்கயில் இன்றும் சட்டபூர்வமான விஷயம். புலிகள் சீதனதில் தங்களுக்கும் பங்கு தா என்று மிரட்டினார்களே ஒழிய வேறெதையும் செய்யவில்லை.

    கசிப்பு புலிகள் கைதடி சாராயத் தொழிற்சாலயில் உற்பத்தி செய்தே விற்பனைக்கு விட்டார்கள். சாதாரணமானவன் வடித்து விற்றல் குற்றம் என்றும் தாங்கள் செய்து விற்கும் கசிப்பையே குடிக்க வேண்டும் என்று புலிகள் கட்டளையிட்டனர்.

    கிட்டுவும் சகாக்களும் செய்யாத சில் மிஷமா?
    -http://en.wikipedia.org/wiki/Krishanti_Kumaraswamy
    Amnesty International and other human rights organizations like Women for Peace[4] launched a sustained campaign to pressure the Sri Lankan government to arrest and prosecute the soldiers. Six soldiers who were directly involved in the raping were sentenced to death by the court of the government of Sri Lanka.[5]

    In the court case about her rape and murder one of the accused informed the state about an alleged mass grave

    Reply
  • நந்தா
    நந்தா

    புலிகள் இந்துக் குருமார்களைக் கொலை செய்ததை யாரும் கண்டிக்கவில்லை. “உலக” மகா மனித உரிமைக் கும்பல்கள் இன்றும் மவுனம் காக்கிறார்கள். புலிக் கிரிமினல்கள் கொல்லப்பட்டதை இந்த மனித உரிமைக் கும்பலகள் சரியா தப்பா என்று ஆராய்ச்சி செய்கிறார்கள்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //புலிகள் இந்துக் குருமார்களைக் கொலை செய்ததை யாரும் கண்டிக்கவில்லை. – நந்தா//

    இதுவே போராட்டத்தின் மறு பக்கம். புணர்வாழ்வு கொடுத்தாலும் இவர்களுக்கு தெரிந்தது பலி எடுப்பதுதான். வெளியே விடுங்கள் என்று இன்று கத்துவோர், விரைவில் உள்ளே போடுங்கள் எனக் கத்துவார்கள். ஏனைய மதத் தலைவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு இந்து மத குருக்களுக்கு இல்லை. எதற்காக நடந்த கொலை எனத் தெரியவில்லை. திருட்டுக்காகவா? பழைய பகையா?

    Reply
  • விளங்காமுடி
    விளங்காமுடி

    //கிருஷாந்தி கொலையில் ஈடுபட்ட இராணுவத்தினர் அனைவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது பற்றி புலி வால் ஊடகங்கள் இதுவரயில் வாய் திறந்ததாகத் தெரியவில்லை.//nantha
    இந்தத் தண்டனை எப்போது நிறைவேற்றப்பட்டது என்றும் இந்தப் புலி ஊடகங்களை மட்டுமே நம்பி வாழும் என்னைப் போன்றவர்களுக்குச் சொல்லி அறிவூட்டினால் நன்றியுடையவர்களாக இருபோம்.//rohan

    -http://www.tamilnet.com/art.html?catid=13&artid=1709

    Reply
  • Ajith
    Ajith

    “கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பின்னர் படையினரிடம் சரணடடைந்து புனர்வாழ்வு பெற்றவர்கள் என்றும், இவர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கியவர் கஞ்சா போன்ற போதைப் பொருள்களுக்கு அடிமையான இராணுச் சிப்பாய் எனவும் மற்றொரு சிப்பாயும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார் எனவும் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்”

    மேலே உள்ளதை தெரிவித்தவர் சிங்கள ஈரணுவ தளபதி. இங்கு நாம் கவனிக்க வேண்டியவை சில உண்டு. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலைப்புலிகள். இது உங்களுக்கு கிடைத்த ஒரு பிரசாதம். ஆனால் உங்களுக்கு புரியாத சில விடயங்கள்.
    1 இலங்கை இராணுவதால் வழங்கபட்ட புனர்வாழ்வு என்ன? தமிழ் மக்களை கொள்ளை கொலை செய்வதற்கான பயிற்சி தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை இராணுவத தளபத்தி தெளிவகியுளர்.
    2 இலங்கை இராணுவத்திற்கும் புனர்வாழ்வு அளிக்கபட்ட புலிகளுக்கும் எப்படி தொடர்பு ஏற்படது.
    3 இவர்களுக்கு இராணுவம் ஆயுதம் வழங்கியது போதையால அல்லது அவர்களை வைத்து தமிழ் மக்களை அழித்து கொள்ளையிட்டு அதன் பழியை புலிகளின் மேல் போடவா?

    இந்த இராணுவ தளபதியின் வாக்குமூலத்தை வைத்து தமிழ் மக்களை அழிபதற்கான ராஜபக்சே யின் முயற்சிக்கு முட்டு கொடுகிறார்கள். புலிகளுக்கு புனர் வாழ்வு என்று இங்கு பணம் சேர்த்து ராஜபக்சே இகு கொடுத்து படம் போடுகிறர்கள்.

    Reply
  • thurai
    thurai

    //கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலைப்புலிகள். இது உங்களுக்கு கிடைத்த ஒரு பிரசாதம். //அஜீத்

    இல்லை சாதாரண குடிதண்ணீர்போல்தான். உலகமுழுவதும் புலிகள் கொள்ளை அடிப்பது மட்டுமல்ல, உலகத்தையே ஏமாற்ரி சர்வதேச புகழ்பெற்ர வர்த்தகர்களாக வலம்வருகிறார்கள். இவர்கழுடன் யாரை ஒப்பிடலாம். தமிழரின் விடுதலைக்கு உயிர்கள் கொடுப்பது அவசியம்போல் கொள்ளை பணத்தில் கோடீஸ்வரராக வாழ்வதும் விடுதலைப்பயணத்தின் ஓர் அங்கமா? –துரை

    Reply
  • மகுடி
    மகுடி

    புலிகளாக உருவாக்கியவர்கள் இளையோரை ஆயுதம் தூக்கும் மனோ நிலையில் வளர்த்தனர். வேறு எதையும் கற்றுக் கொடுக்கவில்லை. கையில் பணம் இல்லாவிட்டால், அவர்களால் கொள்ளைதான் அடிக்க முடியும். அதைத் தடுக்க முனையும் போது கொலை செய்வது அவர்களுக்கு கடினமாக இல்லை. அவர்களால் தொழில் செய்வதற்கு எந்த தகுதியும் இல்லை. பயிற்சியும் இல்லை. எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை கொண்டு வரும்

    Reply
  • rohan
    rohan

    இது மட்டுமல்ல – இந்தக் கொலைகளில் சம்பந்தப் பட்டிருந்த இராணுவ வீரர்களில் ஒருவர் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் செம்மணியில் மேலும் பல பெரும் புதை குழிகள் இருப்பதாகவும் தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்ட அக் குழிகளைத் தம்மால் இடம் காட்ட முடியும் என்று சொன்னதும் எனக்குத் தெரியும்.

    “இந்தத் தண்டனை எப்போது நிறைவேற்றப்பட்டது என்றும் இந்தப் புலி ஊடகங்களை மட்டுமே நம்பி வாழும் என்னைப் போன்றவர்களுக்குச் சொல்லி அறிவூட்டினால் நன்றியுடையவர்களாக இருபோம்.” என்று தான்நான் கேட்டிருந்தேன். தீர்ப்பு வழங்கப்பட்டது சரி – நிறைவேற்றப்பட்டதா என்பது தான் எனது பிரச்சனை.

    Reply
  • vanavil
    vanavil

    புலிகளில் இருந்து வெளியேறியோர் இராணுவ சொற் கேட்டு கொலை பாதகங்களில் ஈடுபடுகிறார்கள் என்றால் , இவர்களது அடிப்படை அமைப்பின் வளர்ப்பில் ஏதோ பிரச்சனை உள்ளது?

    Reply
  • thenupiriyan
    thenupiriyan

    நீங்கள் அனைவரும் செய்திகளை வைத்துக்கொண்டு – இராணுவம் கூறிய தகவலை வைத்துக்கொண்டு அபிப்பிராயங்களைக் கூறுகின்றீர்கள். அது உண்மையல்ல. இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இருவரும் கடந்த பொதுத் தோதலில் குறிப்பிட்ட கட்சியொன்றின் ஆதரவாளர்களாகச் செயற்பட்டவர்கள். இப் பகுதியில் வாழும் மக்களோடு தொடர்பு கொண்டு விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.

    Reply
  • நந்தா
    நந்தா

    கோவில் ஐயர்களையே புலிகள் கொல்லுவார்கள். அதுவும் ஒரு சாதனைதான். பொட்டு வைத்த ஐயருக்கு பொட்டில் சூடு. அரசிடம் பணம் பெற்று கோவில்களுக்குப் பெயின்ட் அடிப்பது கூட மரண தண்டனை குற்றம்.

    பாதிரிகள் அரசிடம் பணம் வாங்கினால் அது குற்றம் கிடையாது. இந்த கேனைத்தனமான நியாயங்கள் யாருக்கு வேண்டும்?

    அரசிடம் அரிசி பருப்பு பெற்று தின்று கொழுத்தது புலிகளின் பெரிய தியாகம்.

    Reply
  • மகுடி
    மகுடி

    //இப் பகுதியில் வாழும் மக்களோடு தொடர்பு கொண்டு விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.//

    என்ன கட்சி என்று உங்களால் எழுத முடியாதா?

    Reply
  • நந்தா
    நந்தா

    வானவில்:
    புலிகள் கொள்ளையடிக்கவும் கொலை செய்யவுமே பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உழைப்பின் மரியாதை பற்றித் தெரிந்திருக்க முடியாது.

    Reply
  • thurai
    thurai

    //இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இருவரும் கடந்த பொதுத் தோதலில் குறிப்பிட்ட கட்சியொன்றின் ஆதரவாளர்களாகச் செயற்பட்டவர்கள். இப் பகுதியில் வாழும் மக்களோடு தொடர்பு கொண்டு விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.//தேனுப்பிரியன்

    அவர்கள் கட்சிக்கு ஆதரவு செலுத்தினார்கள் என்பதற்காக அந்தக்கட்சியை கொலைகாரர்களின் கட்சியென்று தீர்மானிப்பது சரியான செயலல்ல. அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் அக்கட்சியுலுள்லவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் அதிலிருந்து அந்தக்கட்சியினர் தவறும் பட்சத்தில் மட்டும் அக்கட்சியின் மீது குற்ரம் காணவேண்டும்.- துரை

    Reply
  • rohan
    rohan

    //அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் அக்கட்சியுலுள்லவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் //
    கபிலநாத் மரணம் பற்றிப் பேசுகிறீர்களா? அல்லது அம்மரணம் பற்றி விசாரிக்க இருந்த நீதிபதிக்கு வந்த அச்சுறுத்தல்கள் குறித்துப் பேசுகிறீர்களா?

    //அதிலிருந்து அந்தக்கட்சியினர் தவறும் பட்சத்தில் மட்டும் அக்கட்சியின் மீது குற்ரம் காணவேண்டும்//
    யார் மீது குற்றம் காண்போம்? ஆளுக்கொரு நீதி!

    Reply
  • thenupiriyan
    thenupiriyan

    //என்ன கட்சி என்று உங்களால் எழுத முடியாதா//மகுடி
    வெளிநாட்டுக்கு வந்து குடியேறிய பின்னர் எழுதுகின்றேன்.

    Reply