ஊடகவியலாளர் வித்தியாதரன் புலனாய்வுப்பிரிவினரால் விசாரணக்குட்படுத்தப்பட்டார்.

vithyatharan.jpgஉதயன், சுடரொளி பத்தரிகைகளின் முன்னாள் பிரதம ஆசிரியரான என். வித்தியாதரன் நேற்று முன்தினம் புதன்கிழமை தேசியப் புலனாய்வுப்பிரிவினரால் மூன்று மணி நேரம் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு தனிப்பட்ட முறையில் பயணம் செய்து விட்டு நேற்று முன்தினம் நாடு திரும்பிய போது கொழும்பு பண்டாரநாயக்கா சாவதேச விமான நிலையத்தில் வைத்து அவர் விசாரணகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

சிங்கப்பூர் மலேசியா நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டமை எதற்காக என்பது பற்றியும், அரசியலில் ஈடுபடப் போவதாக கூறப்படுவது குறித்தும், தற்போது செய்யும் தொழில் குறித்தும் பல கேள்விகள் வித்தியாதரனிடம் கேட்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். புதன் இரவு 10.30 மணிக்கு ஆரம்பமான விசாரணைகள் நேற்று வியாழன் அதிகாலை 1.30 வரை நடைபெற்றதாகவும், புலனாய்வுப்பிரிவினர் தன்னை நாகரீகமான முறையிலேயே விசாரணை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகைத் துறையிலிருந்து ஒதுங்கியுள்ளதாக தெரிவித்திருக்கும் வித்தியாதரன் அரசியலில் ஈடுபடப்போவதாகவும், எதிர்வரும் மாகாண சபைக்கான தேர்தலில் கூட்டமைப்பில் இணைந்து முதலமைச்சராக போட்டியிடுவதற்கு முயற்சி செய்து வருவதாகவும் முன்னர் செய்திகள் அடிபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

1 Comment

  • rohan
    rohan

    வாழ்க மகிந்த சிந்தனை – வாழ்க ஜனநாயகம்

    Reply