தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு கிடைத்த நிதியுதவிகளை நிதி சட்ட மூலங்களுக்கு மாறாக விடுதலைப் புலிகளுக்கு வழங்கியமை தொடர்பான வழக்கில் தமிழர் புனர்வாழ்வக் கழகத்தின் முக்கியஸ்தர்களை கண்ட இடத்தில் கைது செய்வதற்கான பிடிவிறாந்து வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இப்பிடிவிறாந்தை நேற்று வியாழக்கிழமை வழங்கியது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கியஸதர்களைக் கைது செய்து நீதிமன்றின் முன் முற்படுத்துவதற்கான அனைத்து வழிகளையும் கையாளுமாறும் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக்கழகம் அதற்கு கிடைக்கப்பெற்ற நிதியை சட்டவிரோதமான முறையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் வகையில் விடுதலைப் புலிகளுக்கு வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கியஸ்தர்கள் தொடர்ச்சியாக நீதிமன்றிற்கு சமூகமளிக்கமாலுள்ளதாகவும் இதன் காரணமாகவே அவர்களுக்கெதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.