Wednesday, December 8, 2021

குடாநாட்டிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் சுதந்திரமாக செயற்பட தடைகளில்லை என யாழ்.படைகளின் தளபதி தெரிவிப்பு.

Valampuri_Jafffna_Paperபோர் முடிவுற்ற பின் ஏற்பட்டுள்ள புதிய ஜனநாயக சூழலில் யாழ்ப்பாணத்து ஊடகங்கள் கருத்துச் சுதந்திரத்தை தாரளமாக பயன்படுத்த முடியும் என யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திரத்திற்கு எவ்வகையிலும் தடைகள் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகைகளின் பிரதிநிதிகளுடன் யாழ். சிவில் நிர்வாக அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். குடாநாட்டுப் பத்திரிகைகள் பல்வேறு பிரச்சினைளுக்கு முகம்கொடுத்து பணியாற்றி வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். குடாநாட்டில் போருக்குப் பின்பு ஏற்பட்டுள்ள இயல்பு நிலையை குழப்புவதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் இச்சந்திப்பின் போது தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

10 Comments

 • BC
  BC

  //யாழ்ப்பாணத்து ஊடகங்கள் கருத்துச் சுதந்திரத்தை தாரளமாக பயன்படுத்த முடியும்//
  வலம்புரி, தினக்குரல், உதயன், புலிகளின் பிரசாரத்தை செய்வதற்கு வாழ்த்துக்கள்.

  Reply
 • Ajith
  Ajith

  போர் முடிவுற்ற பின் ஏற்பட்டுள்ள புதிய ஜனநாயக சூழலில் யாழ்ப்பாணத்து ஊடகங்கள் கருத்துச் சுதந்திரத்தை தாரளமாக பயன்படுத்த முடியும் என யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

  Its true. What he didn’t mention is that it is up to you. “You are also free to free from the world”. Lasantha, Raviraj, Nirmalarajan all were freed for free speech.

  Reply
 • விளங்காமுடி
  விளங்காமுடி

  நீங்கள் நினைக்கிற அல்லது வரையறுத்து கொண்ட ‘கருத்து சுதந்திரம்’ என்ன என்று சொல்லுங்கள். அதன் பிறகே யாழ்ப்பாணத்து ஊடகங்கள் “கருத்துச் சுதந்திரத்தை” தாரளமாக பயன்படுத்த முடியும், ஆனால் உயிர் மட்டும் வாழ முடியாது. ஏனெனில் சொல்பவர் இராணுவப் பேர்வழி. சனனாயகத் தலைவர் அல்ல.

  Reply
 • நந்தா
  நந்தா

  இலங்கயிலேயே பத்திரிகைகளின் கழுத்தை முதலில் திருகியவர்கள் புலிகள். ஈழமுரசு என்ற பத்திரிகையின் குரல்வளையை திருகிய புலிகள் அதன் அலுவலக நிருபர் ஐ.சண்முகலிங்கத்தை 1989 ஆம் ஆண்டு கடத்திச் சென்று கொன்றனர். பின்னர் பத்திரிகையாளர் மயில் அமிர்தலிங்கத்தையும் கொன்றனர். அந்தப் பத்திரிகையையும் பிடுங்கினர். இன்று ஒரு நாடு கடந்த யாழ்ப்பாணத்தினர் “ஈழமுரசு” என்று பத்திரிகை நடத்துகிறார்கள்.

  யாழ்ப்பாணத்தில் மோசமானவர் செத்த பின்பு அவர் நல்லவர், வல்லவர்” என்று கல்வெட்டுப் பாடும் பரம்பரைகளுக்கு பத்திரிகைச் சுதந்திரமும், புண்ணாக்கு வியாபாரமும் ஒன்றுதான்.

  யாழ்ப்பாணிகளின் மோசமான குணங்களுக்கு இந்த “ஈழமுரசு” பத்திரிகை இன்றும் நிலை நிறுத்தப்படும் அத்தாட்சி. கொள்ளையடித்த சொத்தை “தன்னுடையது” என்று நாணமின்றி கூறும் தமிழ் பரம்பரைகள் முதலில் பொது விஷயங்களில்த் தன்னும் நேர்மையைக் கடைப்பிடிக்கட்டும்.

  வித்தியாதரன் போன்ற புலிகளின் எடுபிடி இன்னமும் வலம் வந்து கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தில் இந்த “பத்திரிகை சுதந்திரம்” பெரிதாக மக்களுக்கு எதையும் சாதிக்கும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை!

  Reply
 • rohan
  rohan

  //வித்தியாதரன் போன்ற புலிகளின் எடுபிடி இன்னமும் வலம் வந்து கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தில் இந்த “பத்திரிகை சுதந்திரம்” பெரிதாக மக்களுக்கு எதையும் சாதிக்கும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை!//

  ஆகவே வயிற்றுப் பிழைப்புக்காக இந்த்ப் பத்திரிகைகளில் வேலை செய்யும் அன்றாடங்காய்ச்சித் தமிழ் மக்கள் கொல்லப்படுக!

  கிரிசாந்தி குமாரசாமியைக் கொன்றவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதாக கதை விடுவோர் நிர்மலராஜன் போன்றோரைக் கொன்றோரை விட்டு வைத்திருக்கும் அரசு பற்றி வாய் திறக்கக் காணோம்.

  Reply
 • விளங்காமுடி
  விளங்காமுடி

  கிரிசாந்தி குமாரசாமியைக் கொன்றவர்களுக்கு, நீதிமன்றம் மரணதண்டனை வழங்கிய செய்தி தமிழ்நெட் வெளியிட்டது. அது நிறைவேற்றப் பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. அதில் முக்கிய நபர் சிறையிலிருந்து தப்பியதாக கொசுறு உண்டு.

  Reply
 • நந்தா
  நந்தா

  கிருஷாந்தியின் கதையை கிண்டினால் சில்லறை கிடைக்காது என்பதனால்த்தான் புலி ஆசாமிகள் அந்தக் கதையையே எடுப்பதில்லை. அதனால் ரோகனுக்கு முடிவத்தியாயம் எழுதப்பட்ட கிருஷாந்தி பிரச்சனை தெரிய நியாயமில்லை. பிரபாகரன் உயிருடன் உள்ளதாக கதை விடும் ரோகனுக்கு இந்த குமாரசாமி கதை பொருந்தாத கதைதான்.

  புலிகள் பத்திரிகையாளர்களைக் கொன்று அந்தக் குடும்பங்கள் அனாதையாகியது பற்றி மவுனம் காக்கிறார். புலிகள் கொலை செய்தால் “வயிற்றுப் பிழைப்பு” அந்தக் குடும்பங்களுக்குக் கிடைக்கும் என்கிறார்!

  Reply
 • ஜெயா
  ஜெயா

  குறளி வித்தை காட்டும் வித்தியாதரன் புலிகளின் விமானங்கள் கொழும்பில் குண்டு போட சென்றபோது புலிகளோடு கையடக்க தொலைபேசியில் தொடர்பில் இருந்ததாக கைதானார் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பெட்டியில் வித்தியாதரன் புலிகளுக்கு உதவியதாக கோத்பாய கடுமையாக வாதிட்டார் அவ்வாறு கடும் கோபம் கொண்ட கோதபாயாவிடமிருந்து வித்தியாதரன் எப்படி திடீரென விடுதலையானார் வித்தியாதரன் காட்டும் ஸ்ரண்டுக்கு அளவு கணக்கே இல்லை- இது புலி ஊடகங்கள் எழுதிய செய்தி

  சொல்லுபவர்கள் இராணுவப்பேர்வழி ஜனநாயக தலைவர்கள் அல்ல (விளங்காமுடி) இது ரொம்ப குழப்பமாக உள்ளது.
  இது இல்லை எல்லாமே குழப்பம் தான் யாழிலிருந்து வரும் பத்திரிகைகள் தேவைக்கு ஏற்ப ஸ்ரண்ட அடிப்பவர்கள் அப்படி ஒன்றுமில்லை என்றால் ஆறுமுகநாவலர் இராமநாதன் வரலாறு எழுதுவார்கள்.

  நந்தா குறிப்பிட்ட சிலர் செய்யும் தவறுக்காக எல்லா யாழ்ப்பாணத்தவர்களையும் குறை சொல்லாதீர்கள் யாழ்ப்பாணிகள் புங்குடுதீவார் இது போன்ற எழுத்துக்களை தவிருங்கள் அப்படிப் பார்த்தால் எல்லா பிரதேசங்களிலும் தவறானவர்களும் கொள்ளையடித்தவர்களும் இருக்கிறார்கள் அப்போ திரும்பவும் வன்னியான் மட்டக்களப்பான் சோனகன் இப்படியே நீண்டு கொண்டே போகும்.–ஜெயா பிரான்ஸ்

  Reply
 • karu
  karu

  ஈழமுரசு என்று பத்திரிகை நடத்துகிறார்களுக்கு வெட்கமா இல்லையா இந்த பெயரை எப்படி மனித உரிமைகளை கொன்று இந்த பத்திரிகையையின் பெயரை களவு எடுத்தார்கள் என்று. நந்தா தகவல்களுக்கு நன்றி. ஈழமுரசை பார்க்கும் போதேல்லாம் எழுத்தாளனை கொன்றது தான் ஞாபகம் வரும் இந்த ஈழமுரசு புலிகளின் மனித உரிமை ஜனாயக மீறல்களை வரலாற்றில் நிலைநிறுத்தும் பணியையே செய்கிறது. -karu jaffna

  Reply
 • நந்தா
  நந்தா

  சிங்களவர்களை ஏமாற்றிய கதைகளை புங்குடுதீவு சுருட்டு வியாபாரிகள் பெருமையாக இன்னமும் கதைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். காய்ந்து போன சுருட்டுக்கு கோடா தடவித் தரும்படி கேள்க்கும் சிங்களவனுக்கு வாயினால் எச்சில் தடவி சுர்ட்டைக் கொடுத்து சிங்களவனை ஏமாற்றியதைப் பற்றி இன்றும் பெருமைப்படும் தீவுப்பகுதியினர் வெளினாடு வந்து புலி என்று மற்றவர்களை மிரட்டியதிலும் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.

  யாழ் வாசிகள் லஞ்சம், மோசடி என்பனவற்றை வைத்தே சீதனம் நிர்ணயிக்கும் கலாச்சாரம் உள்ளவர்கள். பணத்துக்காக எந்த வேஷமும் அணியும் யாழ்ப்பாணத்தவர்களின் சுபாவங்களை மாற்றாத வரையில் விமர்சனம் இருக்கவே செய்யும்.

  ஜெயாவின் தார்மீக நியாயம் புரிகிறது. “உட் சுவர் தீற்றிப் புறச் சுவர் தீற்று” என்பது தமிழ் முதுமொழி. எங்களுடைய தவறுகளை அப்படியே வைத்துக் கொண்டு அடுத்தவனைப் பற்றி விமர்சனம் செய்யும் போக்கை யாழ்ப்பாணத்தவர்கள் கைவிட வேண்டும்!

  Reply