குடாநாட்டில் மீதமுள்ள கண்ணிவெடிகளை அகற்றி முடிக்க பத்து ஆண்டுகள் தேவை என யாழ்.அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

Imelda_Sugumar_GAயாழ். குடாநாட்டில் மீதமுள்ள கண்ணிவெடிகளை முற்றாக அகற்றி முடிப்பதற்கு இன்னமும் பத்து ஆண்டுகள் தேவை என யாழ். அரச அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள், மீள்குடியேற்றம், யாழ்.மாவட்டம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்றவை குறித்து நேற்று மாலை மாவட்டச் செயலகத்தில் செய்தியாளர் மாநாடு ஒன்றை யாழ். அரச அதிபர் நடத்திய போது இவ்வாறு தெரிவித்தார்.

குடாநாட்டில் 19அயிரம் குடும்பங்களை மீள்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளது. 60 ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட வேண்டியுள்ளது. 27ஆயிரம் விதவைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது. 246 சிறுவர்கள் கடுமையான நோயுற்ற நிலையில் சிகிச்சைக்கு பணமின்றியுள்ளனர் அவர்களது பிரச்சினையை தீர்க்க வேண்டியுள்ளது என தெரிவித்த அவர் அடுத்த 2011ஆம் ஆண்டு 1648 திட்டங்கள் 18 ஆயித்து 698 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், இந்திய அரசாங்கத்தின் நிதியுதிவியுடன் 5ஆயிரத்து 150 வீடுகள் அமைக்கப்படவுள்ளதாகவும், 2அயிரம் வீடுகள் புனரமைக்கப்பட உள்ளதாகவும், உலக வங்கியின் நிதியுதவியுடன் 2ஆயித்து 700 வீடுகள் இதுவரை புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியமர்த்துவதற்கான நிகழ்ச்சி நிரல் தம்மிடம் இல்லை எனவும், அது இராணுவத்திடம் இருக்கக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • rohan
    rohan

    //இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியமர்த்துவதற்கான நிகழ்ச்சி நிரல் தம்மிடம் இல்லை எனவும், அது இராணுவத்திடம் இருக்கக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.//

    திருமதி. இமெல்டா சுகுமார் இப்படி ஒரு நிலைமையின் கீழ் வேலை செய்யவேண்டி இருப்பதை திருப்தியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா?

    Reply
  • linga
    linga

    Many temples and Churches in the western world can take some resposibility to improve the situation in N & E of Sri Lanka. This is an urgent and utmost need at present time.

    Reply
  • BC
    BC

    கண்ணிவெடிகளை முற்றாக அகற்ற தான் பத்து ஆண்டுகள் தேவை.நல்ல காலமாக யாழ் குடாநாட்டு மக்கள் தங்களிடம் புதைக்கபட்ட புலி விஷ சிந்தனைகளை தாங்களாகவே அகற்றி வருகின்றனர்.

    Reply
  • rohan
    rohan

    //கண்ணிவெடிகளை முற்றாக அகற்ற தான் பத்து ஆண்டுகள் தேவை.//

    அதற்கிடையில் குடத்தனை மண் எல்லாம் ‘மகேஸ்வரி ஃபவுண்டேஷன்’ எனும் பெயரில் இயங்கும் தோழரின் பினாமிகளால் அள்ளி முடிக்கப்பட்டு விடும்.

    அபிவிருத்திக்காக இருக்கும் கொஞ்ச நஞ்சப் பணமும் ‘யூரோவில்’எனும் பெயரிலான மார்க்கணடு இராமதாசனின் (இவர் புளொட் மாறன் எனப்படும் தேவதாசனின் அண்ணன்) நிறுவனத்தால் வாரிப் போகப்படும்.

    புலியின் இங்கிலாந்துத் தோல்விகளுக்குக் கால்கோள் இட்ட நடராஜா ஜெயதேவன் இமெல்டா சுகுமாரைத் தமது திறந்த மடல் மூலம் கிழித்திருப்பதைப் பாருங்கள்.

    தேசம் மொழிபெயர்ப்புச் செய்து போட வேண்டிய விடயம் இது.

    -http://www.srilankaguardian.org/2010/12/brief-open-letter-to-government-agent.html
    “Will you tell us how much is collected by taxing building sand from the designated Kudathanai, Mankumpan and other places by the said paramilitary group?”

    -http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33257

    //இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியமர்த்துவதற்கான நிகழ்ச்சி நிரல் தம்மிடம் இல்லை எனவும், அது இராணுவத்திடம் இருக்கக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.//

    As a Government Agent, will you be able to tell us what the official policy of the government to find a peaceful and durable resolution to conflict in Sri Lanka? Presiding over the rule with the army and the nefarious paramilitary group in the north, you cannot sit in moral high grounds to pontificate to the Diaspora Tamils to shut up and put up with your narrow minded agenda to extend the game of the vested interests.

    Well _ I did not say this. Mr. Nadarajah Jeyadevan did! Yeah – we can call him now ‘a former Tiger’!

    Reply
  • நந்தா
    நந்தா

    புலிகளின் ஆதிக்கத்தில் இமெல்டா வேலை செய்த பொழுது அரச அதிபர் என்று இருந்தால் இன்று அவருடைய சமாதியில் புல் முளைத்திருக்கும்.

    திறமை சாலிதான். உயிர் தப்பி வந்த பெண் அதிகாரி மாத்திரமல்ல புலிகளின் அடாவடித்தனங்களையும் அரச சொத்துக்களை அவர்கள் எப்படிக் கொள்ளையடித்தார்கள் என்பதையும் விலாவாரியாக தெரிந்தவர் என்பதும் இன்னொரு தகைமையும் அவருக்கு உண்டு.

    புலிகள் பாடசாலை மாணவர்களை இராணுவப் பயிற்சிக்குக் கொண்டு சென்றதை கண்டிக்காதவர்கள் இப்பொளுது இமெல்டா மீது பாய்ந்து யாருக்காக அழுது வடிகிறார்கள்?

    Reply