சிறுவர் களை வேலைக்கு அமர்த்துவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ்.மாவட்ட உதவித்தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது யாழ். மாவட்ட உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் ரீதியாக திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்தைகள், கடைகள் போன்ற பல இடங்களில் சிறுவர்களை வேலைக்கமர்த்துவோர் கண்டுபிடிக்கப்ட்டு கடும் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் இச்செயற்பாடுகள் தொடருமானால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், சிறுவர்களை வேலைக்கமர்த்துவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போது அவர்களுக்கு 12 மாத சிறைத் தண்டனை அல்லது. 10ஆயிரம் ரூபா தண்டம் நீதிமன்றினால் வழங்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.