நேற்று திங்கள் கிழமை கிளிநொச்சிக்கு வருகை தந்த மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோன் மற்றும், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் ஆகியோர் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிப்பொருட்களை வழங்கி வைத்தனர்
இதேவேளை, நேற்று கிளிநொச்சிக்கு வருகை தந்திருந்த வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச கிளிநொச்சி மாவட்டத்தின் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அலுவலகத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி, ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரி, கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்புப் படைஅதிகாரி சந்தன ராஜகுரு, மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்க வந்த மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோன் தலைமையிலான குழுவினரும். தேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்தைத் திற்நது வைக்க வந்த விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினரும் தனித்தனிக் குழுவினராக இரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பல்லி
கருனா உங்களுக்கு தெரியாதல்ல; இருப்பினும் பல்லி சொல்லவேண்டியதை சொல்லுகிறேன்; அப்படியே கிளிநொச்சியில் இருந்து கிழக்கை பார்த்து ஒரு கூப்பிடு தூரம் காலார நடந்து போங்கள் (பழயநினைவுகள் வரதான் செய்யும் கட்டுபடுத்துங்க) இரனைமடு வரும்; அதில் நீங்களும் வீரக்கோனும் குளியுங்க மனதில் உள்ள அழுக்கு போக குளியுங்க அப்புறமாய் பத்துக்குள் ஒரு நம்பரை நினைவு கொள்ளுங்கள், கொழும்பு வந்து சேர்ந்து விடுவீர்கள், அதன்பின் நீங்க பார்த்தது பாராதது பேசியது பேசாதது அது இது என உங்க எண்ணத்துக்கு பல ஊடகத்தை கூட்டி வைத்து பேட்டி குடுங்கோ; அன்று பிரபாவின் சிறப்பு கட்டளை தளபதி; இன்று யாருக்கோ அடங்கிய உதவி அமைச்சு என்னதை சொல்ல பல்லி;