இலங் கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பி வைப்பதற்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.சபையின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
வன்னியில் அரசபடைகளால் மேற்கொள்ளப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களை ஐ.நா.நிபுணர்குழு பல தரப்பினரிடமிருந்தும் பெற்று வருகின்றது. இந்த சாட்சியங்களைப் பெற்றுக் கொள்வதற்கான காலஅவகாசமாக இம்மாதம் 17ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இக்கால எல்லை இம்மாத இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.