ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் 40 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானின் மத்திய லோகார் மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை மர்ம நபர்கள் வெடிக்க செய்துள்ளனர்.
இத்தாக்குதலில் 40 இற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.