வெள்ளை மாளிகை பகுதி அருகே ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர் நடமாடியுள்ளார். எனினும் பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர். காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.வெள்ளை மாளிகை அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதால் வெள்ளை மாளிகையில் கொரோனா வைரஸ் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பாதுகாப்பாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
நிலமை சீரானதும் மீண்டும் வந்த ட்ரம்ப் துப்பாக்கிச்சூடு தொடர்பாகக் கூறியதாவது:
துரதிர்ஷ்டவசமாக இதுதான் உலகமாக இருக்கிறது, ஆனால் உலகம் எப்போதும் ஆபத்தான ஓர் இடமாகவே உள்ளது. உலகம் ஏதோ தனிச்சிறப்பான இடமாக இல்லை.
நூற்றாண்டுகளைத் திரும்பிப் பார்த்தோமானால் உலகம் வாழ்வதற்கு எவ்வளவு அபாயகரமான பகுதியாக உள்ளது, மிகவும் ஆபத்தான ஒன்றாக உலகம் உள்ளது, தொடர்ந்து ஒரு காலக்கட்டம் வரை இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.
என் பாதுகாவலர்கள் மிகச்சிறப்பானவர்கள். இவர்களுக்கு உயர்மட்ட பயிற்சி உள்ளது. இவர்கள் என்னைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
மீண்டும் செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர், ஒரேயொரு நபர்தான் ஆயுதத்துடன் வந்தார்.
இவ்வாறு கூறினார் ட்ரம்ப்.