கண்டியில் நேற்றைய தினம் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது பறக்கவிடப்பட்டிருந்த தேசியக்கொடியில் சிறுபான்மையினரை பிரதிபதிபலிக்கும் நிறங்கள் அகற்றப்பட்டிருந்தது.
அத்துடன் நிகழ்வில் தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரம் இசைக்கப்பட்டது. அழைக்கப்பட்டிருந்த மதத்தலைவர்களுள் தமிழ், முஸ்லிம் மதத் தலைவர்களும் காணப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில் இந்து மற்றும் முஸ்லிம் கலாசாரங்களுக்கான அமைச்சு நீக்கப்பட்டுள்ளதுடன், இன நல்லிணக்க அமைச்சும் நீக்கப்பட்டுள்ளது.
அரச கரும மொழிகள் அமைச்சு நீக்கப்பட்டுள்ளது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த நிலையில் பல்வேறுபட்ட தரப்பினரும் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்திய வண்ணமுள்ளனர். இதே நிலையில் பதவி ஏற்பிற்காக அங்கு சென்றிருந்த தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இது பற்றி எந்த ஒரு எதிர்ப்பான கருத்துக்களையும் முன்வைத்திருக்காமையையும் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.