புறக்கோட்டை விமானப்படைத் தலைமைச் செயலகத்திற்கு முன்பு குண்டு வெடிப்பு

blast.jpgபிற்பகல் 5.20 மணியளவில் கொம்பனித் தெருவிலுள்ள விமானப்படைத் தலைமையகம் முன்பாக தற்கொலைக் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலை குண்டுதாரி விமானப்படை தலைமையகத்தினுள் நுழைய முற்பட்ட வேளை குண்டுதாரி குண்டினை வெடிக்க வைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இதில் காயமடைந்த 36பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் மூவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக விபத்து சேவைப்பிரிவின் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி 03 இறந்துள்ளனர். இத்தற்கொலை குண்டு தாக்குதலையடுத்து கோட்டையிலிருந்து கொம்பனித்தெரு வரையான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சம்பவ இடத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

1 Comment

  • chandran.raja
    chandran.raja

    இதுவும் சலிச்சுப்போன ஒரு புத்தாண்டுச்செய்தி தான். அரசியல் இல்லாதவன் அன்பில்லாதவன்…. பயங்கரவாதத்தைவிட வேறுபோக்கிடம் தான் வேறு ஏது?

    Reply