ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ பதவிக்கு வரும் போது நாட்டின் இறைமைக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் புலிகள் இயக்கத்தினர் கொண்டிருந்த சகல நிர்வாகக் கட்டமைப்பும் குறுகிய காலத்திற்குள் துடைத்தெறியப்ப ட்டிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பாதுகாப்புப் படையினர் புலிகள் இயக்கத்தினரை முழுமையாகத் தோற்கடிப்பதற்காக மேற்கொண்டுவரும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் இருதயபூர்வமாக ஆதரவு நல்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முதலாவது பிரசார செய்தியாளர் மாநாடு கொழும்பு – 7லுள்ள மகாவலி நிலையத்தில் (01) நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டிற்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இச் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் :-
2005ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்கும் போது இலங்கையின் இறைமைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் புலிகள் இயக்கத்தினர் தனியான நீதி, நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தனர். அவர்கள் வங்கிகளை நடத்தினர். நீதி மன்றங்களையும், பொலிஸ் துறையையும் கொண்டிருந்தனர். அவர்களது அனைத்து நீதி, நிர்வாகக் கட்டமைப்புக்களும் ஜனாதிபதி பதவிக்கு வந்த குறுகிய காலத்திற்குள் முற்றாகத் துடைத்தெறியப்பட்டிருக்கின்றன. போட்டு பிரிக்கப்பட்டிருந்தது. அப்படியிருந்த நாட்டையும் எமது ஜனாதிபதி தான் குறுகிய காலத்தில் ஒன்றுபடுத்தினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அளித்துவரும் சிறந்த தலைமைத்துவத்தின் பயனாக பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்டக் கூடிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிறது. அதேநேரம் வரலாற்றுச் சிறப்புமிக்க பல வெற்றிகளையும் இக்காலப் பகுதியிலேயே இந்நாடு அடைந்தும் இருக்கிறது என்றார்.