திருகோணமலை – மட்டக்களப்பு நகரங்களுக்கு இடையிலான புகையிரத சேவை விரைவில் சீரமைக்கப்படும். தினமும் மேலதிகமாக மூன்று சேவைகளை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து கிழக்கு மாகாண போக்குவரத்துக்காக வழங்கப்பட்ட ரயில் வண்டிகள் இதற்கு பயன்படுத்தப்பட உள்ளன.
திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு செல்வோர் கல்ஓயா புகையிரத நிலையத்தில் நான்கு மணி நேரத்திற்கும் அதிகமாக காத்திருக்க வேண்டும். இதனால் பத்து மணி நேர பயணத்தை மேற்கொள்ள வேண்டியவர்களாகின்றனர். புதிய சேவை ஆரம்பிக்கப் பட்டால் நான்கு மணி நேரத்தில் எதிர்காலத்தில் பயணம் செய்யக் கூடியதாக இருக்கும். இச் சேவை அடுத்த வருடம் முதல் மாதத்தில் இருந்து மேற்கொள்ள தாங்கள் நடவடிக்கை எடுத்து இருப்பதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.