முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, ஊடகத்துறை அமைச்சராகவும் தொடர்ந்தும் கடமையாற்றுவார் என தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது. தகவல் திணைக்களத்தின் தலைவர் அனுஷ பெல்பிட்ட வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, 5ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பு கோட்டையில மைந்துள்ள உலக வர்த்தக நிலையத்தின் 25ஆவது மாடியிலமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் தனது கடமையை பொறுப்பேற்பார். இந்நிகழ்வுக்கு அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜயந்த, மைத்திரிபால சிறிசேன, ஜோன் செனவிரட்ன, டளஸ் அழகப்பெரும, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, கலாநிதி சரத் அமுனுகம, மனோ விஜேரட்ன உட்பட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
முதலீடு ஊக்குவிப்பு அமைச்சராகவிருந்த கலாநிதி சரத் அமுனுகம பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.