யாருமே வசிக்காத நகரமான கிளிநொச்சியைப் பிடித்து விட்டதாக ராணுவம் கூறுகிறது. அங்கிருந்த மக்கள் ஏற்கனவே இடம் பெயர்ந்து விட்டனர். எங்களது தலைமையகத்தையும் நாங்கள் ஏற்கனவே மாற்றி விட்டோம் என விடுதலைப் புலிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி வீழ்ந்தது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. இருப்பினும் ஆட்களே வசிக்காத கிளிநொச்சியைத்தான் ராணுவம் பிடித்துள்ளதாக அவர்கள் சார்பு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், கிளிநொச்சியில், இருந்த மக்கள் அனைவரும், கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் ஏற்கனவே வட கிழக்குக்கு இடம் பெயர்ந்து விட்டனர். எங்களது தலைமை அலுவலகமும் வட கிழக்குப் பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது. மொத்தத்தில் யாருமே இல்லாத கிளிநொச்சியைத்தான் ராணுவம் பிடித்துள்ளது.
கிளிநொச்சியைக் கைப்பற்றியபோது பொதுமக்களுக்கு இழப்பு எதுவுமில்லை * ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியதாக “இந்து’ ஆசிரியர் ராம் தெரிவிப்பு
கிளிநொச்சியைக் கைப்பற்றியதையடுத்து ஆனையிறவையும் ஏனைய முக்கிய இலக்குகளையும் கைப்பற்றுவதற்காக இலங்கையின் ஆயுதப்படைகள் துரிதமாக முன்னேறும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்பார்க்கிறார். அண்மித்த எதிர்காலத்தில் வட இலங்கையில் முல்லைத்தீவுக் காடுகளுக்கு வெளிப்புறமாக விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் எங்கும் செல்லமுடியாது என்ற நம்பிக்கையுடன் ஜனாதிபதி ராஜபக்ஷ இருக்கிறார் என்று சென்னையிலிருந்து வெளியாகும் “இந்து’ பத்திரிகையின் ஆசிரியர் என்.ராம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் “இந்து’ பத்திரிகையின் முதல் பக்கத்தில் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராகவிருந்த கிளிநொச்சியை விடுவிப்பதற்காக ஆயுதப்படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது “பொதுமக்களுக்கு இழப்புகள் எதுவும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கொள்கையை’ படையினர் மேற்கொண்டமை குறித்து ஞாயிறு மாலை கொழும்பிலிருந்து தொலைபேசி மூலம் என்னுடன் உரையாடிய போது ஜனாதிபதி ராஜபக்ஷ திருப்தி தெரிவித்தார். தமது சகல நடவடிக்கைகளின் போதும் அவர்கள் இக்கொள்கையை தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாலஸ்தீனத்தில் என்ன நடக்கின்றது என்று பாருங்கள்!மோசம் அங்குள்ள உண்மையான நிலைவரத்தை அறிந்து கொள்வதற்காக பாலஸ்தீன ஜனாதிபதியுடன் (மஃமூட் அப்பாஸ்) நான் கதைத்தேன் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ கூறினார். கைதிகள் போன்று வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்கவில்லையென கவலை தெரிவித்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் சுதந்திரம், மனித உரிமைகளை புலிகள் தொடர்ந்தும் நிராகரித்தால் அந்த அமைப்பு தடையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ராஜபக்ஷ எச்சரித்தார். ஒருவார காலப்பகுதிக்குள் தடை அமுலுக்கு வரக்கூடும் என்பது விளங்கிக் கொள்ளக்கூடியது. இந்தியா உட்பட சுமார் 30 நாடுகளில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பொதுமக்களை பராமரிப்பது தொடர்பாக நாம் அதிகளவு முன்னுரிமை கொடுக்கவுள்ளோம் என்று தொலைபேசி மூலமான உரையாடலின் போது ராஜபக்ஷ என்னிடம் தெரிவித்தார். “அவர்களின் பாதுகாப்பை நாம் விரும்புகிறோம் அதனாலேயே அவர்களின் விடுதலையை நான் கடுமையாக வலியுறுத்துகிறேன். நாம் அவர்களுக்கு உணவு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். நாம் புலிகளுக்கும் உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். பொதுமக்கள் வந்த பின்னரும் கூட நாம் அவர்களை பட்டினியுடன் இருக்க விடமாட்டோம்’ என்று ராஜபக்ஷ கூறினார்.
விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் படையினரிடம் சரணடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். அகதிகளாக சில தற்கொலைக் குண்டுதாரிகள் வருவதற்கு முயற்சி செய்யும் சாத்தியம் குறித்தும் தனது அரசாங்கத்துக்கு தெரியும் என்றும் ராஜபக்ஷ கூறினார். கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில் சுமார் 15 தொடக்கம் 20 வரையிலான தற்கொலைக் குண்டுதாரிகள் ஊடுருவியிருக்கலாமென நம்பப்படுகின்றது. அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் முடிந்தளவுக்கு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் ராஜபக்ஷ கூறினார்.
“கிளிநொச்சியில் புலிகளின் தலைமையகத்தில் ஒரு சிறுதுண்டு கடதாசியைக் கூட காணவில்லை’
கிளிநொச்சியைக் கைப்பற்றிய இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்குள் நுழைந்த போது அங்கு சிறு காகிதத் துண்டைக் கூட விடுதலைப் புலிகள் விட்டுச் சென்றிருக்கவில்லையென இந்துஸ்தான் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. இத் தகவலை விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்குள் முதலாவதாக நுழைந்தவர்களில் ஒருவரான இராணுவ அதிகாரி மேஜர் அமுனுபுர தெரிவித்ததாக இச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சியை பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட செய்தியாளர்களில் இந்துஸ்தான் ரைம்ஸ் செய்தியாளரும் ஒருவராவார். நான்கு தளங்களைக் கொண்ட இக் கட்டிடத்திற்குள் நாம் நுழைந்தபோது சிறு காகிதத் துண்டைக் கூட விடுதலைப் புலிகள் விட்டுச் சென்றிருக்கவில்லை. இலேசாக மூடியிருந்த பிரதான கதவில் திறப்பு தொங்கவிடப்பட்டிருந்தது. கணினிகள், தொடர்பாடல் உபகரணங்கள், காகிதங்கள் என அங்கிருந்த ஒவ்வொன்றையும் அவர்கள் எடுத்துச் சென்றிருந்தனரென அமுனுபுர கூறியதாக இச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இந்துஸ்தான் செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது; விடுதலைப் புலிகளின் சமாதான செயலகமாகவும் போர் நிறுத்தகாலத்தில் பல முக்கிய சந்திப்புகள் நடைபெற்ற இடமாகவும் விளங்கிய இவ் தலைமையகம் புதிதாக குடியேறப் போகிறவர்கள் வசிக்கப் போகும் ஒரு வெறுமையான கட்டிடமாக காட்சியளித்தது. தமிழர் புனர்வாழ்வு அமைப்பின் அலுவலகமும் இதேபோன்று காணப்படும் அதேவேளை, ஏறத்தாழ கிளிநொச்சி நகரம் முழுவதிலும் இவ்வாறானதொரு வெறுமையே பரவியுள்ளது.
இங்கு ஒரு பொதுமகனைக் கூட காண முடியவில்லை. குண்டுகளால் துளையிடப்பட்ட வீடுகள், கூரைகள், கதவுகள், யன்னல்களின்றி காணப்படுகின்றன. பெரிய நீர்த்தாங்கியொன்று சின்னாபின்னமாகியுள்ளது. விடுதலைப் புலிகளின் படையணிகள் இங்கிருந்து நகர்வதற்கு முன்னர் பொதுமக்களின் உதவியுடன் இங்கிருந்த ஒவ்வொன்றையும் தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர். மின் குமிழ்கள், வீதி விளக்குகள், மின் இணைப்பிற்கான வயர்கள், விளம்பரப் பலகைகள், கூரைத் தகடுகள், ஜெனரேட்டர்கள், உடைகள், புத்தகங்கள், தளபாடம் மற்றும் வாகனங்களென ஒவ்வொன்றும் இங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. தேவாலயங்கள், கோயில்கள் என்பன பக்தர்களின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன. கொண்டு செல்ல முடியாத கூரைகள் மட்டுமே இங்குள்ள கட்டிடங்களில் எஞ்சியுள்ளது.
கிளிநொச்சி தேசிய மருத்துவமனையில் காயங்களுக்குப் பயன்படுத்தப்படும் சிறு பண்டேச் துணி கூட காணப்படவில்லை. அனைத்துவகை உபகரணங்களும் மருந்துப் பொருட்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இங்குள்ள சில அரசாங்க கட்டிடங்களும் இதேபோன்று வெறுமையாகவே காணப்படுகின்றது. கடும் போர் நடந்தமைக்கான அறிகுறிகள் நகரெங்கிலும் தென்படுகின்றன. வெடிக்காத கிரைனேட்டுகள், வெடி பொருட்களின் வெற்றுப் பெட்டிகள், குண்டு துளைத்த வீடுகள் என்பன நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு நகரம் யுத்தத்தால் எவ்வாறு அழிவடைந்துள்ளதென்பதை ஒவ்வொருவருக்கும் நினைவு படுத்துவதாக உள்ளது. படையினர் கண்ணிவெடி எதிர்ப்புச் சப்பாத்துகளை அணிந்துள்ளதுடன், ஒவ்வொரு அடியையும் மிகவும் ஜாக்கிரதையாக எடுத்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆட்லெறி ஷெல்களின் சத்தங்களும் ஹெலிகொப்டர்களிலிருந்து மேற்கொள்ளப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கிழக்குப் பகுதியிலிருந்து எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இங்குள்ள இராணுவத்தினரைப் பார்க்கும் போது தற்போது அவர்கள் சற்று ஆறுதவடைந்திருப்பதைப் போல் தோன்றுகின்றது எனத் தெரிவித்துள்ளார
BC
சில வாரங்களுக்கு முன்பு கூட நடேசன்“என்ன விலை கொடுத்தேனும் கிளிநொச்சியை பாதுகாப்பது என திடமான சபதம் ஏற்று விடுதலைப்புலிகள் போராடி வருவதாக” தெரிவித்தார்.
ஏனாம் கிளிநொச்சி பிடிக்காமல் போனது?இந்த பழம் புளிக்கும் கதை தான்.
nathan
the tigers are waitting for big attack – waitting the army go deep into the forest of killinochchi then then only tigers will start to fight back – wait abd see the A9 open the army will run away from tamil eelam.
suman
கிளிநொச்சியை சிங்கள ராணுவம் பிடிப்பது பகல் கனவு என சில வாரங்களுக்கு முன்னர் பிரபாகரன் நக்கீரன் இதழுக்கு பேட்டி கொடுத்திருந்தார். இப்போது கிளிநொச்சியை சிங்கள ராணுவம் பிடித்துவிட்ட நிலையில் பகல்கனவு காணும் நிலையில் பிரபாகரன்தான் இருந்துள்ளார் என்றாகிறது.எந்த நம்பிக்கையில் அப்படி ஒரு பேட்டி கொடுக்கப்பட்டது என்பதையும் தற்போது ஏன் பின்வாங்கப்பட்டது என்பதையும் பிரபாகரன் கூறாவிட்டாலும் புலிகளுக்காக வக்காலத்து வாங்கும் யுத்த ஆய்வாளர்கள் யாராவது விளக்குவார்களா?
“மக்களுக்கு எப்போதும் உண்மையை கூறியதால் மக்கள் என்னை நம்பினார்கள். அதனால் மிகப்பெரிய வெற்றியை அடைய முடிந்தது” என்று வியட்னாம் தந்தை கோசிமின் கூறினார். இப்போது அடிக்கடி வியட்னாம் பேராட்டம் பற்றி கூறும் சிவாஜிலிங்கம் போன்ற புலி ஆதரவாளர்கள் முதலில் மக்களிடம் உண்மையை கூறும்படி பிரபாகரனிடம் கூறுவார்களா?அல்லது கடைசிப்புலி அழியும்வரை தமிழீழம் என்று வாயச்சவடால் விட்டுக்கொண்டிருக்கப் போகிறார்களா?
karuna
யாழ்ப்பாணத்தை சிங்கள ராணுவம் பிடித்த போதும் மக்கள் இல்லாத இடத்தையே பிடித்ததாக புலிகள் கூறினார்கள். இப்போது அங்கு எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள் என்பதை புலிகள் பேசுவதில்லை. அதுபோல் இனிவருங்காலங்களில் எத்தனை மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டை மீறி கிளிநொச்சியில் சென்று குடியேறுவார்கள் என்பதும் புலிகள் பேசப்போவதில்லை. ஆனால் இந்தமுறை மக்களுக்கு இந்த கஸ்டத்தை ராணுவம் வழங்காது. ஏனெனில் முழு இடத்தையுமே ராணுவம் பிடித்துவிட்டால் புலிகளின் பிரதேசம் என ஒன்று இல்லாவிட்டால் மக்களுக்கு வெளியேறுவது என்ற பிரச்சனை இருக்காது அல்லவா?
tharumu
என்ன விலை கொடுத்தாவது கிளிநொச்சியை காப்பாற்றுவோம் என நடேசன் கூறினார். மற்ற இடங்கள் எல்லாம் பறிபோனபோது இப்படி கூறாத நடேசன் கிளிநொச்சிக்கு மட்டும் ஏன் இந்த முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று புரியாத நிலையில் யுத்தம் ஆரம்பித்த நாளில் இருந்து கருத்து எதுவும் கூறாமல் இருந்த பிரபாகரனும் கிளிநொச்சியை சிங்கள ராணுவம் பிடிப்பது பகல்கனவு என்று கூறியதால் கிளிநொச்சியில் பாரிய யுத்தத்தை புலிகள் செய்யப்போகின்றனர் என எல்லோரும் எதிர்பார்த்தனர். அதேபோல் ராணுவமும் உண்மையாகவே பாரிய இழப்புகளை சந்தித்தது. இந் நிலையில் பாரிய இழப்புகளை சந்திக்காத நிலையில் புலிகள் எதற்காக பின்வாங்கினர் என்பது புரியவில்லை? புலிகளும் இது பற்றி எதுவும் மக்களுக்கு தெரிவிக்காதது மர்மமாகவே உள்ளது.
kannan
புலிகளிடம் இன்னமும் எட்டாயிரம் போராளிகள் உள்ளனர். புலிகள் இரசாயண ஆயுதம் இன்னும் பாவிக்கவில்லை. புலிகளின் விமானங்கள் கப்பல்கள் இன்னும் அழியவில்லை. குறிப்பாக புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் எவரும் இறக்கவில்லை. எனவே இறுதி யுத்தம் இன்னும் நடக்கவில்லை என்பதையே இவை காட்டுகின்றன. புலிகள் ஏன் கிளிநொச்சியை முக்கியமாக குறிப்பிட்டு பின்னர் ஏன் திடீரென விலகினார்கள் என்பதற்கான விடை இனிவரும் நாட்களில்தான் தெரியவரும்.
thurai
புலிகளின் ஈழப்போர் ஓர் உதைபந்தாட்டம்.
புலிகளாலும் சிங்களவராலும் உதைபடுபவர் ஈழத்தமிழர்.
பணம் கொடுத்து ரசிப்பவர் புலியின் ஆதரவாளர்கள்.
துரை
மாற்றுகருத்துதோழர்
களமுனையில் நின்ற போராளிகள் தலைமையின் கட்டளையை ஏற்று நிதானமாக மேற்கொண்ட பின்னர்கவே புலிகள் பலவீனபடவுமில்லை கட்டுகுலையவுமில்லை என்பதை எடுத்து காட்டுகிறது. ஆயிரகணக்கான படைகளையும் படை கலங்களையும் பறிகொடுத்த சிங்களபடை கிளிநொச்சி முல்லைதீவு களங்களை நோக்கி திரும்பி வரமுடியுமானால். நிதானமாக பின்வாங்கும் இடங்களை புலிகள் மீட்பார்கள் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.
1991ல் ஆனையிறவை மீட்க போன புலிகள் முயற்சி கைகூடாதநிலையில் வடமாரட்சி கிழக்கைபறிகொடுத்து பின்வாங்கியபோது இலண்டனிலிருந்த கிட்டுமாமா சொன்னார். இறங்கிய படைக்கு அதுவே சவக்குழியென்று. அந்நேரம் கிட்டுமாமா காலநேரம் தெரியாமல் பகிடிவிடுவதாகதான் நானும் நினைத்தேன். ஆனால் 1999ல் அது மெய்பிக்கப்பட்டபோதுதான் அவரின் கூற்றிலிருந்த தீர்க்கதரிசனத்தை உணர்ந்தேன்.இன்று வன்னிக்குள்வந்தபடை வீடு திரும்பாது என்ற கூற்றும் மெய்பிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. மாகணசபை தேர்தலில் கூட மகிந்தா வெல்வதைதான் புலிகள் விரும்புகிறார்கள். மகிந்தாவிற்கான ஐனாதிபதி பதவியை ஒரு அரசியல்தந்திர ரீதியில்தான் கொடுத்தார்கள். அந்த இலக்கு எட்டபடும் வரை மகிந்தா எல்லாகளத்திலும் பொம்மை வீரராக/கதாநாயகனாக இருப்பதைதான் புலிகள்விரும்புகிறார். அதற்கேற்பவே காய்கள் நகர்த்தபடுகிறது. மாவிலாற்று அணையில் ஆரம்பித்த வெற்றி மாயையெனும் குழைகாட்டல் எதுவரை என்பதுதான் புரியவில்லை.
Anonymous
இலண்டனிலிருந்த கிட்டுமாமா சொன்னார். இறங்கிய படைக்கு அதுவே சவக்குழியென்று. அந்நேரம் கிட்டுமாமா காலநேரம் தெரியாமல் பகிடிவிடுவதாகதான் நானும் நினைத்தேன். ஆனால் 1999ல் அது மெய்பிக்கப்பட்டபோதுதான் அவரின் கூற்றிலிருந்த தீர்க்கதரிசனத்தை உணர்ந்தேன்.இன்று வன்னிக்குள்வந்தபடை வீடு திரும்பாது என்ற கூற்றும் மெய்பிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. மாகணசபை தேர்தலில் கூட மகிந்தா வெல்வதைதான் புலிகள் விரும்புகிறார்கள்
பிச்ச வேன்டாம் நாயப்பீடிங்க இப்ப……!
ninja
இன்று வன்னிக்குள்வந்தபடை வீடு திரும்பாது என்ற கூற்றும் மெய்பிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை……….
”புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்றும்” நிலையில் இருக்கிறீர்கள்.
tharumu
மாற்றுக்கருத்து தோழரே !
புலிகள் மீண்டும் விட்ட இடங்களைப் பிடிப்பார்கள் என்பதல்ல இப்ப பிரச்சனை. இங்கு இப்போது எமக்கு தெரியவேண்டியது என்னவெனில் கிளிநொச்சியை விடமாட்டோம் என்று ஏன் பிரபாகரனும் நடேசனும் கூறினார்கள்? கிளிநொச்சிக்கு ஏன் முக்கியத்துவம் கொடுத்தார்கள்? அப்புறம் எதற்காக பின்வாங்கினார்கள்? இதற்கு உமக்கு பதில் தெரியுமாயின் கூறவும்.
vanan
இனி ஒரு யுத்தம் ஆரம்பித்தால் அது தமிழீழத்தை கொடுக்கும் என புலிகள் கொக்கரித்தனர்.ஆனால் இப்ப நடப்பதோ இருந்ததும் பறி போன நிலை.ஏன் இப்படி நடக்கிறது? எதிரியின் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டார்களா?அல்லது தங்கள் பலத்தை அதிகமாக மதிப்பிட்டுவிட்டார்களா?யாராவது புலி ஆட்கள் இதற்கு பதில் தருவார்களா?
truth
புலிகளின் தளபதிகள் குறுநில மன்னர்கள் போல் நடந்து கொள்கின்றனர். வன்னியில் சில மருத்துவமனைகளுக்கு இரவில்கூட மின்சாரம் இல்லை. ஆனால் தளபதிகளின் குடும்பங்களுக்கு 24மணிநேர மின்சாரவசதி உண்டு. தளபதிகளின் பிள்ளைகள் பஜிரோவண்டியில் சென்று ஆங்கிலம் ரியூசன் படிக்கிறார்கள். ஆனால் வன்னி மாணவர்கள் கட்டாய ஆயுத பயிற்சிக்கு நிர்ப்பந்தப்படுத்துகிறார்கள். இதைவிடக் கேவலம் என்னவெனில் தளபதி மலசலகூடம் போகும்போது சாதாரணபோராளி வாளியில் தண்ணீர் எடுத்துச்சென்று கொடுக்கவேண்டும். சிங்கள அரச இரானுவத்தில்கூட இப்படியான அடிமை நிலை இல்லை. இப்பொழுது புரிகிறதா ஏன் புலிகள் தோல்வியை தழுவுகின்றனர்?
ashroffali
மாற்றுக் கருத்துத் தோழர் உள்ளிட்ட புலி ஆதரவாளர்கள் அபிமானிகள் அனைவருக்கும் எனது அனுதாபங்கள்.
பாவம் பிரபாகரன் கண்ட பகல் கனவு கலைந்தது தெரிந்தவுடன் பங்கர் தலைவர் ஓரளவுக்கு புத்தி தெளிந்து விட்டார். கிளிநொச்சி வீழ்ந்த தினத்தை அண்டிய தினமொன்றில் பிரபா சார்ள்சையும் அழைத்துக் கொண்டு நாட்டை விட்டே தப்பியோடி விட்டார். இப்போதைக்கு கதைத்துக் கொண்டிருக்கும் நடேசன் மற்றும் சொர்ணம் போன்றவர்கள் விரைவில் தப்பியோடப் போகின்றார்கள். பாவம் சூசை என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பதாக கேள்வி….
அதைவிடப் பாவம் புலிப் போராளிகள். தலைவரும் இல்லாமல் தனி நாடும் இல்லாமல் தங்கள் இன்னுயிரை இழந்து நஷ்டப்படப் போகின்றவர்கள் அவர்கள் தான். தலைவர் தப்பியோடியது தெரியாமல் அவர்கள் தொடர்ந்தும் போரிட்டு மடியப் போகின்றார்கள். அல்லது மக்களிடம் அகப்பட்டு தர்ம அடி வாங்கிச் சாகப் போகின்றார்கள். புலித் தலைவர் சுருட்டிய சொத்துக்களையும் எடுத்துக் கொண்டே தப்பியோடியதாக கேள்வி. அவர் வெளிநாடொன்றில் பணத்தை வீசியெறிந்து அரசியல் தஞ்சம் பெற்றுக் கொள்வார். மற்றவர்கள் தான் பாவம்.
அதே போல மாற்றுத்தோழர் உள்ளிட்ட புலி அபிமானிகள் அனைவரும் தமது பகல் கனவை கலைத்துவிட்டு இனியாவது யதார்த்தத்தை உணர வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்தும் பகல் கனவில் நிலைத்திருந்தால் அப்படியே பாழுங் கிணற்றில் வீழ்ந்து மடிய வேண்டியதுதான். அதற்கு முன் சுதாகரித்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் பொதுமக்களாகப் பிடித்து உங்களுக்கும் தர்ம அடி கொடுக்கத் தவற மாட்டார்கள். …………………
palli
தயவு செய்து நண்பர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். புலி எமக்கு பகைமைதான் (பல்லி உட்பட) காரனம் அவர்களது தாம் தான் என்ற தனி போக்கு. அதை யாராலும் மறுக்கமுடியாது. மற்றய அமைப்புகளையல்ல தமது(புலி) அமைப்பை சேர்ந்த பலரை காவு கொடுத்ததால்தான் (குமரப்பா; புலேந்திரனிலிருந்து மாத்தையா கிட்டுவரை.)இன்று எதுவும் செய்வது அறியாமல் எதோ தீபாவளிக்கு வெடி கொளுத்துவது போல் தடுமாறுகிறார்கள். இருப்பினும் புலியில் இருக்கும் சிறுவர்கள் சொன்னதை செய்யும் கிளி பிள்ளைகள். இருட்டு வீட்டில் இருந்துகொண்டு தலமையும் ;அரசியல்வித்தகரும், உருப்படாத உளவும் ;தான் தோன்றிதனமான (ராஜீவ் கொலைபோல்) முடிவுகளை எடுப்பார்கள். அது அரசுக்கு கண்டிப்பாக விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. அதனால் அந்த சிறுவர்களை புலியிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ காப்பாற்றும் பொறுப்பு இன்று தமிழர்க்கு வந்திருக்கிறது. தமிழகத்து உனர்வுகளைவிட; புலியின் வீரத்தை விட தமிழரது விவேகம் இங்கு செயல்பட வேண்டும். இதுக்கு ஊடகங்கள் மட்டுமல்ல அனைத்து அமைப்புகளும் விட்டு கொடுப்புடன் செயல்படுவது தமிழர் அழிவை தடுக்க உதவும் என்பது பல்லியின் கருத்து. எமது ஆடம்பரமான விவாதமானாலும் சரி; அராஜக பின்னோட்டமானாலும் சரி அது எமது இனத்துக்கு பாதகமாக அமையாது இருப்பது அவசியம். துரை சொன்னது போல் இன்றய போராட்டம் ஒரு கால் பந்து விளையாட்டாகவே இருக்கிறது. புலியும் சரி அரசும் சரி தமது வெற்றியை நோக்கிய பயணம்தான் செய்கிறார்களேயொழிய மக்கள் பற்றி கவலை இல்லை. புலி தாக்கி விட்டு மக்களிடம் ஒழிவதும். ராணுவம் புலியென மக்களை அழிப்பதும். கேனைதனமான போராட்டமாக தெரிகிறது. அரசு புலியை அழிக்க வேண்டும் என செயல்படும் அளவுக்கு தமிழர்க்கு ஒரு சரியான தீர்வை கொடுக்க வேண்டும் என்பதில் காட்டவில்லை என்பது யாரும் மறுக்கமுடியாத உன்மை..
பல்லி
palli
// எதிரியின் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டார்களா?அல்லது தங்கள் பலத்தை அதிகமாக மதிப்பிட்டுவிட்டார்களா//
இரண்டுமே இல்லை. மக்களை மறந்து விட்டார்கள்.
sanath
புலிகள் எப்போதும் சொல்ல முன் செயல் என்று இருப்பவர்கள் அவர்களக்கு தெரியும் எப்படி, எங்கே அடீப்பது என்றூ தெரியும்.புலிகள் எதெயும் காரணத்தோடு தான் செய்வார்கள்.திரு பிரபாகரன் அவரகள் நக்கரன் இதழக்கு பேட்டி எதனையும் வழங்கவில்ல திரு நடெசன் தான் பேட்டி வழங்குனர்.புலம் பெயர் மக்கள் சந்தோஸபடுத இப்படி பேட்டி வழங்கி இருக்க கூடும்.பரந்தன்தனை தான் இராணூவம் சண்டை பிடிதது கைப்பரிய்யது ஆனால் புலிகள் தானகவே கிளிநொச்சி இருந்து பின் வாங்கியது.
மாற்றுகருத்துதோழர்
என்னுடைய கருத்துடன் உடன்படமுடியாதென நினைக்கும் நண்பர்கள் ஒரு புரட்சியை வெற்றிகரமாக நடத்தி காட்டிய யதார்த்தவாதியான மாவோ சேதுங்குடன் உடன் படுவீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த பந்தியை இணைக்கிறேன்.இதே தந்திரத்தை பாவித்துதான் எரித்திரியா எதியோப்பியாவிடமிருந்து 1991ல் சுதந்திரம் பெற்றது.
பின்வாங்கும் போர்த்தந்திரோபாயம்-எரிமலை
தன்னால் விரைவில் தகர்க்க முடியாத பலம் கூடிய படையின் முன்னேற்றத்தினை எதிர்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட போரிடும் தரப்பானது தனது பலத்தைப் பேணிக்கொள்வதும் எதிரியைத் தோற்கடிக்கத் தருணம் பார்த்துக் காலத்தைக் கடத்துவதுமான நோக்கத்திற்காக எடுக்கும் ஒரு திட்டமிட்ட போர்த்தந்திரோபாய ரீதியான நடவடிக்கையே பின்வாங்கும் தந்திரோபாயமாகும்.
விடுதலைப் போராட்டம் தொடர்பான சரியான புரிதல்கள் இல்லாதவர்களும் இராணுவ மூலோபாயங்களில் நல்ல பட்டறிவுகளைக் கொண்டிராதவர்களும் எதிரியை உள்ளே நீண்ட தூரத்திற்கு இழுப்பதனால் நாம் பல பிரதேசங்களைக் கைவிடவேண்டியுள்ளது என்பதனால் இதனை தவறு என்று வாதிட்டார்கள் என்று மாவோ தெரிவிக்கின்றார்.
அத்துடன் எல்லா முனைகளிலும் தாக்குவது கேந்திர நகரங்களைக் கைப்பற்றுவது இரண்டு கைமுட்டிகளாலும் இரண்டு திசைகளில் ஒரே நேரத்தில் தாக்குவது எமது பானை சட்டிகள் உடைக்கப்படாமல் பாதுகாப்பது- அதாவது குறிப்பிட்ட கிராமங்களையும் வீடுகளையும் எதிரிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்பது போன்ற கள யதார்த்தங்களுக்கு சற்றும் ஒத்துப்போகாத ஆலோசனைகளையும் இவர்கள் மாவோவிடம் முன்வைத்தனர்.
இவற்றிற்கு பதிலளித்துப் பேசிய மாவோ பின்வரும் விடயங்களை முதலில் ஒழுங்குபடுத்திய பின்னரே வலிந்த தாக்குதலுக்கு செஞ்சேனை தயாராக முடியும் என்று தெரிவித்தார்.
1. செஞ்சேனையை மக்கள் தீவிரமாக ஆதரிப்பது
2. தரையமைப்பு போர் நடவடிக்கைகளுக்குச் சாதகமாக இருப்பது
3. செஞ்சேனையின் பிரதான படைகளெல்லாம் ஒருங்கு குவிப்பது
4. எதிரியின் பலவீனமான நிலைகளைக் கண்டுபிடிப்பது
5. எதிரி களைப்பும் மனச் சலிப்புமுற்ற நிலைக்கு வந்திருப்பது
6. எதிரி தவறுகள் செய்யத் தூண்டப்பட்டிருப்பது
அதாவது தாக்கும் எதிரி எம்மைவிட மிக அதிகம் எண்ணிக்கையும் பலமும் கொண்டிருந்தால் எதிரி எமது தளப்பிரதேசத்திற்குள் நெடுந்தூரம் ஊடுருவி அது அவனுக்கு வைத்திருக்கும் கசப்பு முழுவதையும் அனுபவித்த பின் மட்டுமே எம்மால் சக்திகளின் சமன்பாட்டில் ஒரு மாற்றத்தை ஈட்ட முடியும்.
அதாவது தடித்த வீரர்கள் களைத்து மெலியும் வரைக்கும் மெலிந்த வீரர்கள் களைத்து சாவடையும் வரைக்கும் அவர்களை உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டும்.
அதாவது நாம் ஒவ்வொரு தடவையும் ஒரு அடி பின்வாங்க எதிரி தனது கோட்டைகளை ஒரு அடி முன்னே தள்ளுவான். இவ்வாறு அவனை நன்றாக பலவீனப்படுத்திய பின்னர் மேற்கொள்ளும் சாpயான வலிந்த தாக்குதலானது முழுப் போரின் போக்கினையுமே மாற்றவல்லது என்று மாவோ தெரிவித்தார்.
சில கிராமங்களின் அல்லது சில பிரதேசங்களின் சட்டி பானைகள் குறுகிய காலத்திற்கு உடைக்கப்படுவதை அனுமதிக்க நீங்கள் மறுத்தீர்களானால் நீங்கள் எல்லா மக்களினதும் சட்டி பானைகள் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து உடைக்கப்படுவதை விளைவிப்பீர்கள். நீங்கள் பாதகமான குறுகிய கால அரசியல் பின்னடைவுகளுக்கு அஞ்சுவீர்களானால் அதற்குப் பதிலாக நீங்கள் பாதகமான நீண்டகாலப் பின்னடைவுகள் ஏற்படுவதை விலையாகக் கொடுக்கவேண்டியிருக்கும் என்று மாவோ பின்வாங்கும் தந்திரோபாயக் கோட்பாடுகளுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தவர்களுக்கு எச்சரித்தார்.
அதாவது சுருங்கக் கூறினால் பின்வாங்கலின் கட்டத்திலேயே நாம் எதிர்த்தாக்குதல் கட்டத்தைக் காணவேண்டும். எதிர்த்தாக்குதல் கட்டத்திலேயே நாம் தாக்குதற் கட்டத்தைக் காணவேண்டும்.
அத்துடன் முதற்சண்டை வெல்லப்பட வேண்டும். முழுப் போரியக்கத்திற்குமான திட்டம் கணக்கில் எடுக்கப்பட வேண்டும். அடுத்து வரும் போர்த்தந்திர ரீதியான கட்டமும் கணக்கில் எடுக்கப்படவேண்டும். இவையே நாம் ஒரு எதிர்த்தாக்குதலைத் தொடங்கும் போது அதாவது முதற்சண்டையை செய்யும் போது ஒருபோதும் மறக்கக்கூடாத மூன்று கோட்பாடுகளாகும்.
நன்றி: வெள்ளிநாதம் (29.08.08)
sanath
தமிழ் மக்களை காக்க என்று புறப்பட்டு விட்டு நாட்டை விடு ஒடி புகல் இடங்களீல் புலிகளை காரணம் காட்டி அரசியல் தஞ்சம் கோரி இருப்போர் மக்களை பற்றி கதப்பது வேடீக்கையாக உள்ளது. ashroffali கருணா அம்மானின் இறுதி பேட்டி படீக்கவீல்லயா? அதில் அவர் திரு பிரபகாரன் இறுதி வரைக்கும் நாட்டில் இருந்து தப்பி ஓட மாட்டார் என்ரு கூறி உள்ளார். புலி கிளிநொச்சியை கை விட்டதனால் அதிக பாதிப்பு அங்கு உள்ள மக்களய் விட புலிகளை ஆதரிப்போரை விட புலிகளை வைத்து அரசியல் செய்போருக்கு தான். பாவம் அவர்கள். புலிகள் நீண்ட கால அரசியல் காரணங்களை முன் வைத்தே பின் வாங்கி இருப்பார்கள்.
tharumu
மாற்றுக்கருத்து தோழருக்கு!
நான் உங்களிடம் கேட்ட கேள்விக்குரிய பதிலை இன்னும் தரவில்லை. எனது கேள்வி என்னவெனில் மாவிலாறு தொடக்கம் கிளிநொச்சிவரை பல இடங்களை புலிகள் இழந்தபோது மெளனமாக இருந்த பிரபாகரன் நடேசன் போன்றோர் கிளிநொச்சிக்கு மட்டும் எதற்காக முக்கியத்துவம் கொடுத்தனர்?வழக்கம்போல் மெளனமாக இருந்திருக்கலாம்தானே? அதைவிடுத்து என்ன விலை கொடுத்தேனும் கிளிநொச்சியை காப்பாற்றுவோம் என்றும் கிளிநொச்சியை பிடிக்க நினைப்பது பகல் கனவு என்றும் எதற்காக கூறவேண்டும்? சரி இப்படி கூறியவர்கள் பின் எதற்காக பாரிய இழப்புகள் எதுவும் நிகழாத நிலையில் திடீரென வாபஸ் பெற்றார்கள்? எனது இந்த வினாவுக்கு மாசேதுங் வரிகளை சொல்லி சமாளிக்காமல் தயவு செய்து முடியுமாயின் பதில் தரவும்.
பாவம் புலிகள். தங்கள் தோல்வியை நியாயப்படுத்த இறுதியாக மாசேதுங்கிடம் செல்லவேண்டியுள்ளது. ஆனால் அவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். பிரபாகரன் மாசேதுங்கும் அல்ல. புலிப்படை செஞ்சேனையும் அல்ல. முன்னர் மாசேதுங் தத்துவங்களை சொன்ன மனோமாஸ்டர் விசுவானந்ததேவன் போன்றோரை சுட்டுக்கொன்ற புலிகள் இப்போது தங்களை நியாயப்படுத்த மாவோ அழைக்கிறார்கள். பரலோகத்தில் இருக்கும் பரமபிதா மன்னிப்பாராக?
மாசேதுங் மக்களே மகத்தான சக்திகள் என்றார். அதேபோல் மக்களும் மாவோவை தோழர் என்று அழைத்தனர். ஆனால் பிரபாகரன் தன்னை சூரியதேவன் என்றும் மக்களை மந்தைகளாகவும் கருதுகிறார். மாவோ யுத்தம் செய்யும்போது தன்னுடைய பிறந்த நாளுக்கு வற்றாபளையில் பொங்கல் வைக்கவில்லை. ஆயுதம் இறக்கியவுடன் பழனியில் மொட்டை போடவில்லை. மாவோவின் இராணுவப்படைப்புகளை படிக்கு முன்னர் அவருடைய மேற்கோள்களை படியுங்கள்.
மாற்றுகருத்துதோழர்
“மாற்றுக் கருத்துத் தோழர் உள்ளிட்ட புலி ஆதரவாளர்கள் அபிமானிகள் அனைவருக்கும் எனது அனுதாபங்கள்.”
எங்கள் மீது அனுதாபபடமுதல் உங்களை பாதுகாக்க ஏதாவது வழியிருக்கா என்று சிந்தியுங்கள். உங்கள் வெற்றி கதாநாயகன்கள்(?) ஆன சரத்பொன்சேகவும் கோத்தபாய ராஐபக்சாவும் வருடம் தவறாமல் தமது அமெரிக்காவதிவிட உரிமையை புதுபிக்கும் மர்மம்/பின்புலமெதுவென ஒரு தடவை சிந்தியுங்கள். அவர்களே தப்பியோடுவதற்கான இடத்தை உறுதி செய்யும் போது அவர்களை நம்பி கதையளக்கும் உம்மை பார்க்கதான் பரிதாபமாயிருக்கு.
msri
மாற்றுக்கருத்துத் தோழர் மாறாக எதாவதொன்று சொல்ல வேண்டுமென்ற பாங்கில் வெள்ளிநாதம் கட்டுரையை சாட்சிக்கு கொண்டு வந்திருக்கின்றார்! அதுசரி உந்தக் கடடுரைக்கும் புலிகளுக்கும் என்ன சம்பந்தம்? சாத்தான் வேதம் ஓதுவது போலல்லவோ இருக்கு!
ninja
/கருணா அம்மானின் இறுதி பேட்டி படீக்கவீல்லயா? அதில் அவர் திரு பிரபகாரன் இறுதி வரைக்கும் நாட்டில் இருந்து தப்பி ஓட மாட்டார் என்ரு கூறி உள்ளார்./
சனத் நல்லாய் பல்டி அடிக்கிறீங்கள். இவ்வளவு நாளும் கருணா பெயர் அம்மான் பெயர் மாத்தவேணும் என்று எல்லாம் எழுதினீங்கள். திட்டித் தீர்த்தீங்கள். இப்ப கருணா அம்மானின் இறுதி பேட்டி படீக்கவீல்லயா? எண்டுகுழையடீக்கறீங்கள். என்ன இருந்தாலும் பழைய புலிதானே.என்ன.
ninja
மாசேதுங் மக்களே மகத்தான சக்திகள் என்றார். அதேபோல் மக்களும் மாவோவை தோழர் என்று அழைத்தனர். ஆனால் பிரபாகரன் தன்னை சூரியதேவன் என்றும் மக்களை மந்தைகளாகவும் கருதுகிறார்……../
சரியாகச் சொன்னீங்கள் தர்மு. போராட்டம் எப்ப மக்களுக்காக நடத்தப்பட்டது. தங்கட சுகபோகங்களுக்காக சனங்களை நசுக்கிப்போட்டு மகத்தான சக்திகளோ?? புலிகள் வினை விதைத்தார்கள். இப்ப வினை அனுபவிக்கினம்.
kamal
தர்மு அவர்களே! தயவுசெய்து மாவோ பற்றியும் மாவோ மக்களின் தொடர்புகள் பற்றியும் விரிவாக இங்கே பதிவிடுங்கள் – மகத்தான சிந்தனையாளன் மாவோவை பிரபாகரன் போன்றோரிடம் ஒத்துப்பார்த்து எப்படி எல்லாம் தவறாக பயன்படுத்துவதும் அல்லாமல் தமது பயங்கரவாத செயலுக்கு துணைக்கு இழுக்கிறாங்கள் உங்களைப்போன்ற மாவோ பற்றிய அறிவுள்ளவர்கள் இன்று இப்படியான வரலாற்று விடயங்களை இங்கே சுட்டிக்காட்டாவிட்டால் எப்போது இவர்களுக்கு புரியவைப்பது.
punji banda
/தமிழ் மக்களை காக்க என்று புறப்பட்டு விட்டு நாட்டை விடு ஒடி புகல் இடங்களீல் புலிகளை காரணம் காட்டி அரசியல் தஞ்சம் கோரி இருப்போர் மக்களை பற்றி கதப்பது வேடீக்கையாக உள்ளது/.
சனத் அவர்களே இதில் என்ன வேடிக்கை இருக்கிறது? நாட்டில் இருந்து கதைக்க புலிகள் அனுமதித்திருந்தால் ஏன் இந்த நிலை ஏற்படுகிறது? நாட்டில் இருந்து கதைத்தவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியும்தானே? அதுசரி புலிகளால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது எங்கிருந்து மக்களைப்பற்றி பேசுகின்றனர் என்பதை கொஞ்சம் கூறுவீர்களா?
nayaka
பிரபாகரன் என்ன முடிவு எடுப்பார்? ஏன் எடுப்பார்? போன்ற விபரங்கள் கூட இருக்கும் பொட்டருக்கே தெரிவதில்லை. இந்த லட்சனத்தில் புலம்பெயர் நாடுகளில் இருக்கும் புலி ஆய்வாளர்கள் ஏதோ பிரபாகரன் தங்களுக்கு சொல்லிப் போட்டுத்தான் செய்தவர் என்ற ரேஞ்சுக்கு கதைவிடுவதைப் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருக்கிறது. ஒருவர் எழுதுகிறார் “இது மாவோவின் யுத்த தந்திரோபாய பின்வாங்கல்” என்று. அதேவேளை இன்னொருவர் எழுதுகிறார்” இது முல்லைத்தீவை காப்பாற்றுவதற்கான முயற்சி” என்று. அடுத்தவர் தருகிறார் “இது இந்தியா போன்ற நாடுகளை அம்பலப்படுத்த” என்று. இப்பொழுது உண்மையாகவே பாலசிங்கத்தின் இழப்பு குறித்து பிரபாகரன் கவலைப்படுவார். ஏனெனில் அவர் இருந்திருந்தால் உள்ளக சுயநிர்ணயம் வெளி சுயநிர்ணயம் அதுஇது என்று ஏதாவது விளங்காமல் சொல்லி எமது புலம்பெயர் உறவுகளை ஏமாற்றியிருப்பார் அல்லவா?
jail person
என் இனிய புலம்பெயர் உறவுகளே!
நீங்கள் எல்லோரும் கிளிநொச்சி பறிபோனது பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் புலிகளின் சிறையில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களின் நிலை குறித்து கொஞ்சம் சிந்திப்பீர்களா?இராணுவம் முல்லைத்தீவை நெருங்கும்பொது இச்சிறை வைக்கப்பட்டவர்கள் அனைவரும் புலிகளால் கொல்லப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் விடுதலைக்கு உங்களால் ஆன முயற்சி செய்யுங்கள்.
anna
அஸரப்அலி அவர்களே தேசம் வாசகர்கள் ஒன்றும் ரூபவாகினி வாசகர்கள் அல்ல என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள்.இலங்கை அரசு எத்தனை தடவை பிரபாகரனை கொன்றது என்பதை நாங்கள் அறிவோம்.பிரபாகரன் தன் மகனுடன் பணத்துடன் போவதை அறிந்த அரசுக்கு அவர் எந்த நாட்டுக்கு போனார் என்பதை அறிய முடியவில்லையா? அல்லது எப்போது சென்றார் என்பதை அறிந்த அவர்களால் ஏன் பிடிக்க முடியவில்லை?தயவுசெய்து இந்த அம்புலிமாமா கதைகளை இலங்கை அரச ஊடகங்களில் மட்டும் வைத்துக்கொள்ளவும்.அதுசரி இதெல்லாம் தெரிந்த உங்களுக்கு மகிந்த மாத்தையா எப்போது? என்ன? தீர்வை வைக்கப்போகிறார் என்பது தெரியுமா?
மாற்றுகருத்துதோழர்
தருமு! நான் இங்கு சொல்வந்த விடயம் “பின்வாங்கும் போர்த்தந்திரோபாயம்” என்பது மட்டுமே தவிர மாவோவையும்-பிரபாகரனையும் செஞ்சேனையையும்- புலிகளையும் சீனபுரட்சியையும்- தமிழீழவிடுதலையையும் ஒப்பிடவில்லை . அதற்கான நேரமும் இதுவல்ல. மாவோ சாதிச்சு முடித்தவர். பிரபாகரன் சாதிக்க துடிப்பவர். பிரபாகரன் தமிழீழதேசத்தை முழுமையாக நிர்மாணித்து அமைதியான நிலைக்கு வந்தபின் ஒப்பிடுவதுதான் பொருத்தமான தருணம்.இந்நிலையில் ஒப்பீட்டிற்கு நீங்கள் அவசரபடுவது உங்கள் சொந்த உளவியல்.
“மாவிலாறு தொடக்கம் கிளிநொச்சிவரை பல இடங்களை புலிகள் இழந்தபோது மெளனமாக இருந்த பிரபாகரன் நடேசன் போன்றோர் கிளிநொச்சிக்கு மட்டும் எதற்காக முக்கியத்துவம் கொடுத்தனர்?வழக்கம்போல் மெளனமாக இருந்திருக்கலாம்தானே? அதைவிடுத்து என்ன விலை கொடுத்தேனும் கிளிநொச்சியை காப்பாற்றுவோம் என்றும் கிளிநொச்சியை பிடிக்க நினைப்பது பகல் கனவு என்றும் எதற்காக கூறவேண்டும்?”
நக்கீரன் வாரஇதழுக்கோ லக்பிமவிற்கோ தலைவர் பிரபாகரன் பேட்டி கொடுக்கவில்லை தான்தான் பேட்டி கொடுத்ததாக அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார்.
2002ல் புலிகள் சமாதான ஒப்பந்தத்திற்கு வந்தபின் சிலவிடயங்களை தெளிவாகவும் திடமாகவும் சொல்லியிருந்தனர். அதை அதிகசிரத்தையெடுத்து கவனிக்காதுவிட்டது நீங்கள். அதனால் புலிகளின் நடத்தைபற்றி எதுவும் விளங்கிகொள்ள ஊகித்து உணர்ந்து கொள்ள முடியா குழப்பநிலையில் விமர்சிக்கிறீர்கள்.
முதலில் மாவீரர் தமிழ்செல்வனின் யுத்த நிறுத்தகால ஒரு அறிக்கையை ஞாபகபடுத்துகிறேன். இந்த சமாதானகாலம் மக்களிற்கு சந்தோசமானது ஆனால் புலிகளிற்கோ சொல்ல முடியா பல இடர்நிறைந்தது. அதிலொன்று என்ன சோதனைகள் வேதனைகள் வந்தாலும் குறைந்தது 5 வருடங்களிற்கு யுத்த நிறுத்தம் இருக்கும் எக்காரணம் கொண்டும் புலிகள் யுத்தநிறுத்தத்தை முறிக்க மாட்டார்கள்.
தங்களின் முடிவு தமிழரின் இன்னல் தீர தமிழீழம்தான் முடிந்தமுடிபு. ஆனால் சர்வதேசத்திற்கு சிங்களத்தின் உண்மை முகத்தை அப்பட்டமாக்கவும் அரசியல் ரீதியில் சில மாற்றங்களையும் ஏற்படுத்த இந்த யுத்தநிறுத்தம் தேவைபடுகிறது. தங்களிடம் நீண்டதும் திடமானதுமான யுத்ததிட்டமிடல் உள்ளது. அது எக் காரணம் கொண்டு கைவிடபடவோ மாற்றம் செய்யவோ மாட்டோம் எந்த மோசமான எதிர்பார்க்காத உயிரிழப்போ பின்னடைவோ ஏற்பட்டால் கூட ஏன் கிளிநொச்சிக்கு சிங்களஇராணுவம் வந்தால் கூட தங்கள் யுத்த அஜென்டா மாற்றபடமாட்டாது.
அவரின் முதல் கூற்றிற்கு தகுந்தசாட்சி தென்தமிழீழத்தில் ஏற்பட்ட இயக்கபிளவு அதன் நேரடி பாதிப்பாக கெளசல்யன் சேனாதி பாவா… என்ற வரிசையில் 50 மேற்பட்ட உன்னத போராளிகளின் இழப்பும். அதை சகித்து யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை 5வருடமும் 10 மாதங்களாகவும் காட்டிகாத்தமை மற்றும் யுத்தநிறுத்தத்தை புலிகள் முறிக்காது காட்டிய அசாத்திய பொறுமை.
இராண்டவது கூற்றைதான் கடந்த 3 வருடங்களாக புலிகள் நிரூபித்து வருகிறார்கள். தமிழ்செல்வன் உட்பட 4500 மேற்பட்ட போராளிகளையும் 6000 மேற்பட்ட தமிழ்பொதுமக்களையும் இழந்து தென்தமிழீழத்தையும் வன்னி பெருநிலத்தின் பெரும்பாகத்தையும் இழந்தும் தமது நீண்டகால யுத்த தந்திரோபாய பின்வாங்கல்களை மேற்கொள்கின்றனர் புலிகள்.
அடுத்தது யுத்தநிறுத்த காலத்தில் கேணல் ஜெயம் சொன்ன ஒரு சம்பவம். ஒயாதஅலைகள் 3 நடவடிக்கை காலத்தில் தான் பீரங்கிபடைபிரிவுக்கு கட்டளை தளபதியாக இருந்து பீரங்கிசூட்டை நெறிபடுத்தி மாங்குளத்திலிருந்த சிங்களபடையை விரட்டியடித்தபின் கனகராஜன்குள இராணுவதலைமைமுகாமை குறிவைத்து தாக்கி கொண்டிருந்த போது தலைவரிமிருந்து தொலைதொடர்பு வாயிலாக கட்டளை வருகுது தான் மறுஅறிவித்தல் தரும்வரை தாக்குதல்களை முழுமையாக நிறுத்தும்படி தானும் நிறுத்திவிட்டு தாக்குதல் கட்டளைக்கு காத்திருந்த போதும் எந்த கட்டளையும் வந்தபாடில்லை. பொறுமையிழந்து அண்ணை உங்கள் தகவலுக்கு நாங்கள் காத்திருக்கிறோம் நீங்கள் பேசாமல் இருக்கிறீர்கள் என்றேன் “அவசரபடாதே பொறுமையாய் இரு தகுந்தநேரத்தில் தாக்குதல் கட்டளைவரும்” என்றார் . மூன்று முழு நாள் புறுபுறுத்து கொண்டு காத்திருந்தேன். கனகராஜன்குள இராணுவதலைமைமுகாம் பக்கமாக பெரும் வெடிப்புகளும் கரும்புகையூடாக தீச்சுவாலைகளும் தெரிந்தது. என்ன நடந்தடா! என சகபோராளிகளுடன் கதைக்க தொடங்க தலைவரிடமிருந்து தாக்குதல் கட்டளை பிறப்பிக்கப்பட்டது முகாம் சுலபமாக உயிரிழப்பின்றி எங்கள் கையில் விழுந்தது. களஞ்சியம் நிறைய ஆயுதங்கள் பாரவாகனங்கள் கிடைத்தது. தலைவருக்கு மட்டுமே முழுமையான தாக்குதல் திட்டம் தெரியும் தளபதிகளுக்கு அவர் அவர்களுக்குரிய களதாக்குதல் திட்டம்தான் தெரிவிக்கப்படும். அந்த மூன்றுநாளும் கரும்புலி அணியின் ஊடுருவல் நடந்திருக்கு ஆனால் அது தனக்கு சொல்லபடவில்லை. காரணம் மிகமிக யுத்தரகசியகாப்பு. தங்களின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமென்று சொன்னார். கேணல்தர தளபதிக்கே சொல்லப்படாத இராணுவதந்திர இரகசியங்கள் சாதரண எனக்க தெரியபோகிறது. இருந்தாலும் என்னால் ஊகிக்ககூடியதை சொல்கிறேன்.
புலிகள் தாம் தாக்குதலை தொடங்கும் இடம் காலம் … போன்றவிடயங்களை ஏற்கனவே திடமாக தீர்மானித்துவிட்டார்கள் அதற்கேற்பவே மாவிலாற்றில் தொடங்கி இன்று கிளிநொச்சிவரை எதிரியை இழுத்து அகலகால் பரப்ப வைத்தது மட்டுமல்ல கிடைத்த அனைத்து சந்தர்பங்களிலும் எதிரிக்கு உயிர் அவயவ ஆத்மபல இழப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆதாரம் சிறிலங்கா படைதளபதிகளே சொல்கிறார்கள்12000 படைவீரர்கள் மீண்டும் யுத்தமுனைக்கு வரமுடியா படுகாயம் 30 000 படைவீரர் தப்பியோட்டம் பலபேர் மனநலம் பாதிக்கப்பட்டமை.
மாவிலாற்றுஅணையை கைபற்பற்ற சிங்களபடை துடித்த போது புலிகள் அதிரடியாய் மூதூர்நகரை கைபற்றி சிங்களபடையை திட்டமிட்டு உசுப்பி அவர்களுக்கு அழிவை ஏற்படத்தியபின் திடீரென வாபஸ் பெற்றார்கள். வெற்றி களிப்பில் மயங்கிய சிங்களபடை புலிகள் இழுக்கும் திசைக்கெல்லாம் இழுக்கபட்டனர்.
தென்தமிழீழ யாத்திரை இனிய வெற்றிகளிப்புடன் முடித்து வன்னிக்கு வரவழைக்கபட்டனர்.சிங்களபடைக்கு மடுமாதா முதல்குறியானது அதைவைத்து அவர்களுக்கு ஆட்டம்காட்டிய புலிகள் சிங்களபடைஅலுத்து சலிச்சு மடுமாதா ஆலய ஆசையை கைவிடும்நிலையில் புலிகள் வலிந்துவிட்டு கொடுத்து சிங்களபடைக்கு வெற்றி களிப்பு கொடுத்து விடத்தல்தீவு முழங்காவில் வழியாக பூநகரி ஆசை ஊட்டப்பட்டது அதைவைத்து ஆட்டம்காட்டிய புலிகள் சிங்களபடைஅலுத்து பூநகரியை விட்டு கிளிநொச்சி மாங்குளபக்கம் ஆசைபட்டனர்.பூநகரியிலிருந்து திடீரென வாபஸ் பெற்று சிங்களபடைக்கு போர்வெற்றி ஆசையைதூண்டி பெருமெடுப்பில் கிளிநொச்சிபக்கம்வரவைத்து அவர்களை சிதைக்க தொடங்கினர் .ஆபத்து நிலையை காலம்கடந்தாவது விளங்கிய சரத்பொன்சேகா கிளிநொச்சியை மறக்க தலைபட்டார். முல்லைதீவில் ஆசைகொண்டார். புலிகளின் திட்டபடி கிளிநொச்சி சிங்கள இராணுவத்திற்கே என்பது ஏற்கனவே முடிவானது அதன்படி திடீரென வாபஸ்பெற்று கிளிநொச்சி இலவச வெற்றியாக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்தான் சிங்களபடைக்கான தற்போதைய மூல்லைதீவு ஆனையிறவு ஆசையூட்டல்கள். இதற்காகதான் உனக்கு கிடைக்காது! ஏலுமெண்டால் எடுத்துபார்! இவையெல்லாம் ஒருவரை சினம்கொள்ளவைக்கும் தூண்டல்கள் !திட்டமிட்டு போலிசபதங்கள் சவால்கள் என உளவியல் ரீதியிலான தூண்டல்கள் ஏற்படுத்தி தமது வெற்றிக்கென நிர்ணயிக்கபட்ட களம் நோக்கி வலிந்து இழுக்கப்படுகிறார்கள். அது எதுவரையும்தான் என்பதுதான் என் கேள்வியும்!
ஆனால் நிட்சயம் மகிந்தா மாத்தாயதான் தமிழீழ-சிறிலங்கா எல்லை பகிர்வில் கையெழுத்திடுவார். அதிலும் தமிழீழத்தை அங்கீகரிக்கும் முதல்நாடாக சிறிலங்காவாய் கூட இருக்கலாம். மகிந்தாவிற்கு ஐனாதிபதி பதவியை புலிகள் சும்மா கொடுக்கவில்லை. அவர்தான் தமது யுத்த அரசியல் திட்டத்தை நிறைவேற்ற சின்சியரா செயற்படுவார் என்ற நம்பிக்கையில் கொடுத்தார்கள். அவர் கொடுத்த பணியை இதுவரை திறம்பட செய்த முடித்துள்ளார். புலிகளை தடைசெய்து எனி எப்பவுமே யுத்தநிறுத்தம் கிடையாதென்பதை எழுத்துமூலம் உறுதிபடுத்துவதுதான் பாக்கி.அதன்பின் மங்களம் சுபமங்களம் பாடவேண்டியதுதான்.
BC
Nayaka,நீங்கள் கூறியது போல் இப்பொழுது தான் உண்மையாகவே பாலசிங்கத்தின் இழப்பு குறித்து பிரபாகரன் கவலைப்படுவார்.
ashroffali
//அஸரப்அலி அவர்களே தேசம் வாசகர்கள் ஒன்றும் ரூபவாகினி வாசகர்கள் அல்ல என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள்//
அண்ணா அப்போ உங்கள் தேசியத் தலைவி தாய்லாந்தில் இருந்தபடி கனடாவில் அரசியல் தஞ்சம் கோரியிருப்பதும் பொய்யா? என்ன இப்படியொரு கண்மூடித்தனமான முட்டாள்தனம்? சூரியதேவன் என்று வணங்கப்பட்ட ஜப்பானிய சக்கரவர்த்தி இரண்டாம் உலக மகா யுத்தத்தில் அடிபணிந்தார். அடுத்த சூரியதேவன் பிரபாகரன் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் போராட்டத்தையே கைவிட்டு விடுவார். பொறுத்திருந்து பாருங்கள்.
sanath
நான் இப்பவும் சொல்கிறேன் கருனா அம்மான் என்ற பெயரெய் மாற்ற வேண்டும் என்று ஆனால் நான் சொல்ல வந்தது என்னவென்றால் இவர் தலவரொடு கூட இருந்தபடியால் தலவர் பற்றி கூட தெரீந்து இருக்குமென்றூ தான்.
இயக்கங்களூக்கு இடையிலான போட்டீயில் புலிகள் மக்களோடூ மக்களாகா நின்றூ வெல்ல தங்கள் இயக்கங்களை பாதுகாக்கா முடியாமல் நாட்டீலிருந்து வெளியோரியோர் மக்களை பற்றி எவ்வாறூ கதக்கலாம்.
thurai
யாருமே இல்லாத கிளிநொச்சியை ராணுவம் பிடித்தது சரி.
திரும்பவும் யாருமே இல்லாத கிளிநொச்சியை பிடிப்போம்
என் புலிகள் கூறுவதன் அர்த்தமென்னவோ?
துரை
danu
/இயக்கங்களூக்கு இடையிலான போட்டீயில் புலிகள் மக்களோடூ மக்களாகா நின்றூ வெல்ல தங்கள் இயக்கங்களை பாதுகாக்கா முடியாமல் நாட்டீலிருந்து வெளியோரியோர் மக்களை பற்றி எவ்வாறூ கதக்கலாம்./இதைவிட சனத் புளியெண்ணை வைத்து முழுகலாம்
palli
மாற்று கருத்து தோழர் மிக பெரிய திரைகதை வசன கர்த்தா போல் இருக்கிறார். உமது கதையை மணிரத்தினத்திடம் கொடுத்தால்
லையிற் இல்லாமல் மிக புரியாத ஒரு படம் எடுக்க வாய்ப்பு உண்டு .ஆனால் நீர் சொல்லும் கதை கேக்க நாம் ஒன்றும் சுன்னாக சந்தையில் சுண்டல் வித்துபோட்டு நஸ்ட்டபட்டு இங்கு வரவில்லை.
//அவசரபடாதே பொறுமையாய் இரு தகுந்தநேரத்தில் தாக்குதல் கட்டளைவரும்” என்றார் . மூன்று முழு நாள் புறுபுறுத்து கொண்டு காத்திருந்தேன். கனகராஜன்குள இராணுவதலைமைமுகாம் பக்கமாக பெரும் வெடிப்புகளும் கரும்புகையூடாக தீச்சுவாலைகளும் தெரிந்தது. என்ன நடந்தடா! என சகபோராளிகளுடன் கதைக்க தொடங்க தலைவரிடமிருந்து தாக்குதல் கட்டளை பிறப்பிக்கப்பட்டது முகாம் சுலபமாக உயிரிழப்பின்றி எங்கள் கையில் விழுந்தது. //
அப்படியானால் பீரங்கி கட்டளை தளபதிக்குகூட தெரியாமல் ஒரு கேனைதனமான தற்கொலை தாக்குதலை தலைவர் மேற்கொண்டுள்ளார் என ஒப்புதல் வாக்குமூலம் தளபதி ஜெயம் கொடுத்துள்ளார்.
எந்த ஒரு தாக்குதலுக்கும் முதல் தயார் நிலையில் இருக்க வேண்டியவர்கள் பீரங்கி படையும் தொலைதொடர்பும்தான் என்பது இன்று இலங்கயில் விவசாயியுக்குகூட தெரியும்.ஆனால் உமது அதல்வருக்கும் அது தெரியும். ஆனால் அவர் ஒரு பீரங்கி வாங்குவதைவிட கரும்புலியை சேர்ப்பது இலகுவென நினைத்தார் அதுதான் ஆயுதத்த பாவிக்காமல் சில அப்பாவி உயிர்களை கரும்புலி என்னும்
போர்வையில் தொலைத்து விட்டார். அது சரி அனைத்து திட்டமிடலும் தலைவரே.நான் கேள்விபட்டதில் பிரபாகரன் எங்கும் பயிற்ச்சி எடுத்ததாக அறியவில்லை. அவரது திறமை யாராக இருந்தாலும் கொலை செய்வதுதான். அதனால் ஆள் இல்லாத வீட்டுக்கு ஆட்டுகுட்டிதான் அம்பலவானர் என்பது போல் தானே தனக்கு ஒரு மொக்குதனமான பட்டத்தையும் வைத்து கொண்டு கரகாட்டம் ஆடுகிறார். அமெரிக்கா இராக்கை தாக்கிய போது புஸ்சின் நேரடி பார்வையின் கீழ்தான் போர் நடப்பதாக யாரும் சொல்லவில்லை. இவரது பயிற்ச்சி, அனுபவம்; ரகசியம், ஆயுதம், முன்னேறுதல் ,சூழ்ச்சி இப்படி எல்லாமே கீறுபட்ட இசைதட்டு மாதிரி ததந்திரோபயமான பின்வாங்கல்; எதாவது தமக்கு சாதகமான நடந்து விட்டால் தலையின் நேரடி பார்வையின் கீழ் மூத்த தழபதிகள் புடைசூழ நடந்த போர் என முழங்குவது. ஈழநாசம்.காமில் தலைவரின் வீடு போட்டிருக்கு பாருங்கள். ஒரு விடுதலை தல்வரின் வீடுபோலா இருக்குதென. வல்லரசு தலைவர்கள் வீட்டை விட சொல்ல வாய் வர மாட்டெங்குது. தோழர் தலைவரின் கடந்த கால கதைகள் சொன்னால் பல படங்கழுக்கு நகைசுவை காட்ச்சிகள் அமைக்கலாம். எது எப்படியோ உமது தலைவர் 23ம் புலிகேசி என்பதில் சந்தேகம் வேண்டாம். அதுக்காக போராடும் சிறுவர்களை நான் மதிக்காமல் இல்லை. தலமை தவறு செய்வதால் அவர்களது போராட்டம் வீனாகிறது அம்முட்டுதான்.
பல்லி..
bandaravanniyan
ஆளாளுக்கு வாயில் வந்தபடி கதைக்காதேங்கோ,
/ நான் கேள்விபட்டதில் பிரபாகரன் எங்கும் பயிற்ச்சி எடுத்ததாக அறியவில்லை. அவரது திறமை யாராக இருந்தாலும் கொலை செய்வதுதான். /பல்லி, புலிதானே முடியப்போகுது ……. ……. பிரபாகரன் பயிற்சி எடுக்காமல் தான் 36 வருசமாய் ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கிறார். ………………………………………இப்ப குத்துற டப்பாங் குத்தெல்லாம் 1996- 2000 வரைக்கும் எல்லாரும் குத்தினவை தான். பேந்து வாய்மூடி பேசாமல் இருந்தவை. இப்ப திருப்ப வெளிக்கிட்டினம். புலியிட்ட 2 கிபிரையும், 10 டாங்கியையும், 5 மல்ரிபரலையும் கொடுத்து போட்டு பார்த்தால் தெரியும் புலியின் வீரத்தை. 4 ஸ்லின் விமானத்துக்கே இவ்வளவு துணிச்சலும் அக்கம் பக்கத்தில் இருக்கிறவைக்கும் கெதிக்கலக்கம் வந்ததை மறந்து போட்டியளோ.
புலிப்படை பலவீனமாக உள்ளது என்பது நானும் ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு காரணம் சமாதானமும் ஒன்று. சமாதான காலத்தில் புலிகள் அதிகமாக ஆயுத கப்பல்களை வன்னிக்கு தருவித்து கொள்ள சமாதானம் ஒரு தடையாக இருந்திருக்கு. அது தான் போன வருசம் ஒரேயடியாக நிரப்பியபடி நீண்ட காலமாக நின்ற கப்பல்களை வன்னிக்கு கொண்டு போய் சேர்க்க முடியாது போனது.
கடந்த வருசம் புலிகளின் நவீன ஆயுதங்களுடனான இந்த தமிழீழத்தின் இறுதி போருக்கான 6 கப்பல்கள் இந்திய அரசாங்கத்தின் நீண்ட கண்காணிப்புக்கு உட்பட்டு சிறிலங்காவுக்கு காட்டிகொடுக்கப்பட்டு அழிக்கப்பட்டது. இதற்கு இந்தியாவே காரணம் இது புலிக்கும் தெரியும். சமாதானம் இழுபட்டதால் நீண்டநாளாக முல்லைத்தீவு கடற்பரப்புக்கு போக முடியாத காரணத்தால் வருடக்கணக்கில் கப்பல் சர்வதேச கண்காணிப்புகளில் சிக்குண்டிருந்தது. இதுவும் ஒரு காரணம். 6 கப்பல் ஆயுதங்களும் தரையிறக்கப்பட்டிருந்தால் இந்த தியாகங்களையும், வீரத்தினையும் கொச்சைப்படுத்துபவர்களுக்கு பல்லு கழன்றிருக்கும்.
புலிக்கு கொலை செய்யதான் தெரியுமென்றால் ஒரு புலிக்கு பயந்து ஓடி ஒதுங்கிகொண்டு இருக்கும் வீராதி சூரர்களே கொல்லப்பட்ட எவரும் எந்த தண்டனைக்கும் உட்படுத்த முடியாதளவுக்கு சுத்தவாளிகளா? அல்லது இந்த சுத்தவாளிகளுக்குள் ஏதாவது ஒரு விடயத்தில் ஒற்றுமை ஏற்பட்டு புலிக்கு எதிராக அரசியல் ரீதியாக சரி செயற்பட்டுள்ளீர்களா? புலம்பெயர்நாட்டில் புலிகளால் அச்சுறுத்தல் எனச்சொல்லிக்கொண்டு சபாலிங்கத்தை சாட்சியாக வைத்துக்கொண்டு எவ்வளவு காலத்துக்கு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டப்போகிறீர்கள். 19வருடங்களுக்கு மேலாக பெயர் சொல்லக்கூடியபடி எத்தனையோ பேர் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறீர்கள். ………….. ……………
damilan
புலிகளுக்கும் இராணுவத்திற்கும் சண்டை நடக்கும் போர் முனைகளில் ராணும் குறித்த பிரதேசத்தைக் கைப்பற்றும் போது மக்களோ புலிகளோ ஒரு காலத்திலும் இருந்ததில்லை. போர் நடைபெறும் கள முனைகளில் மக்கள் தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள இடம்பெயர்வது இயல்பு. புலிகள் இராணுவத்திடம் உயிருடன் பிடிபடுவதில்லை என்பது அவர்களின் கொள்கை. இவ்வாறு இருக்க இராணுவம் ஒரு பகுதியை கைப்பற்றிவிட்டால் அங்கு யாரும் இருக்கமாட்டார்கள் என்பது வழமை. யாருமே இல்லாத இடத்தை பிடித்தார்கள் என்பதற்காக அந்த இடத்தின் முக்கியத்துவமோ தேவையோ இல்லை என்று கூற முடியாது. அந்த இடம் முன்பு புலிகளிடம் எவ்வளவு சிறப்பு பெற்றிருந்தது மற்றும் அந்த இடத்தைக் கைப்பற்ற எவ்வளவு முயற்சி எடுக்கப்பட்டது. அதைத் தடுக்க எவ்வளவு பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும். அந்த வகையில் கிளிநொச்சியின் முக்கியத்துவத்தையும் அது இழக்கப்படுவதைத் தடுக்க புலிகள் மேற்கொண்ட இராஜதந்திர முயற்சியில் இருந்து ராணுவ நடவடிக்கை மட்டுமல்லாமல் கிளிநொச்சி பற்றி தமது வாயாலே கூறிய வார்த்தைகளும் எடுத்துக்காட்டுகின்றது.
கிளிநொச்சியை புலிகள் சும்மா விட்டுச் செல்லவில்லை இராணுவத்தால் அரைவட்ட வடிவிலே சுற்றி வளைக்கப்பட்டதன் பின்னரே தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியேறினர். முன்பு புலிகள் ராணுவத்தை பெட்டி கட்டி அடிப்பார்கள். இப்போது ராணுவம் புலிகளை பெட்டி வட்டம் முக்கோணம் எல்லாம் கட்டி அடிக்கின்றது. வீராப்பு எல்லாம் குறிப்பிட்ட இடங்கள் பிடிபடுவதற்கு முன்தானே பேச முடியும் இனி என்ன எந்த விலை கொடுத்தாவது முல்லைத்தீவைப் பிடிப்போம் என்று சொல்வார்கள். அதை நினைக்கும் போது பயமாக உள்ளது. மக்களும் உள்ளார்கள். இப்போது பிரபாகரன் நாட்டை விட்டு நிச்சயம் ஓட மாட்டார். தேவைப்பட்டால் தந்திரமாக பின் வாங்குவார். அதற்கான காரணம் மாவோவின் ‘யுத்த தந்திரம்’. இது களத்திலுள்ள புலி தளபதிகளுக்குக் கூட தெரியாது இருக்கலாம் அதற்குக் காரணம் ‘யுத்தரகசியகாப்பு’.
lavan
தடுக்கி கிளியில் விழுந்தும் மிசையில் மண்படவில்லை என்கின்றர்கள் இனி முல்லை அப்புறம் கடல்
Indian Expat
மார்க்சியவாதிகளைத் தவிர இந்த அரசியல் நிலையை யாரும் எதிர்வுகூறவில்லை. இதற்கு வெளியில் யாரும் இப்படி நடக்கும் என்று, கற்பனை பண்ணியது கூட கிடையாது. புலியின் சொந்த அழிவில் பிற்போக்கு புலியெதிர்ப்புக் கும்பல்கள் , புலிக்கு நிகராகவே அதே அரசியலுடன் பவனிவருகின்றனர். இந்த புலியெதிர்ப்பு பிற்போக்கு கும்பல்கள், ஏகாதிபத்திய கால் தூசுகளை நக்குவதாலே வயிறுமுட்டி வீங்கிநிற்கின்றன. இந்தக் கும்பலுக்கு துணையான பேரினவாத சக்திகள், ஏதோ தம்மால் தான், தமது அரசியல் போராட்டத்தால் தான் புலியின் அழிவு நடப்பதாக காட்டமுனைகின்றனர். மொத்தத்தில் புலியின் அழிவு, புலியல்லாத தரப்பின் பிற்போக்கு அரசியலால் தான் நிகழ்வதாகவே காட்டுகின்ற போக்கு எங்கும் எதிலும் தலைகாட்டுகின்றது. ஆனால் புலியின் அழிவு புலியின் சொந்த பிற்போக்கு அரசியலால் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதுவே உண்மை.
indiani
இலங்கையில் வட-கிழக்குப்பிரதேசம் தமிழர் தாயகமாகவும் அம்பாறை முஸ்லிம்களின் பிரதேசமாகவும் மலையகம் மலைகத் தமிழர்களின் பிரதேசமாகவும் ஏற்றுக் கொள்ளாமல் இனிமேல் இலங்கையில் சமாதானம் ஏற்பட முடியாது. இதற்கான அறிகுறிகளை தற்போது உருவான கிளிநொச்சி மீட்பும் அதன் பின்னர் நடைபெற்ற சிங்கள பெளத்த வெற்றிக்களிப்பும் எடுத்துக்காட்டுகிறது.
இலங்கையின் அடுத்த மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய ரவுனை கைப்பற்றிய களிப்பு என்னவோ இலங்கைத்தீவில் தமிழர்கள் மீதான வெற்றியாகவே இலங்கை அரசும் இராணுவமும் கருதுகிறது. அதைவிட கடந்தமாதம் இராணுவ அதிகாரியின் ‘சிங்கள நாடு தமிழர்கள் அடங்கி வாழவேண்டும்’ என்ற கருத்துக்கள் இவற்றையே எடுத்துக் காட்டுகிறது. இப்படியான வெற்றிக்கான – தோல்விக்கான நிலைமைகளை உருவாக்குவதில் அல்லது மட்டமான அரசியலற்ற செயல்களைத் தூண்ட விடுதலைப்புலிகளே காரணமாக இருந்துள்ளனர். விடுதலைப்புலிகள் அடுத்த இயக்கத்தவர்களை கொலை செய்வதிலும் மக்கட்காக எழுதியவர்களை கொலை செய்வதிலும் தொடங்கிய நாட்டாண்மை தனிமனித எதேச்சாதிகாரப் போக்கை தற்போது இலங்கை இனவாதிகள் புலிகளிடமிருந்து தான் படித்துள்ளனர். அதையே அவர்கள் தமிழர்க்கும் இது பின்னர் முஸ்லீம்களுக்கும பிரயோகிக்கின்றனர்
தமிழர்க்காக போராட வந்த புலிகள் தமது தவறுகளில் இருந்தாவது தம்மை திருத்தி சரியான பாதையில் சிங்கள இனவாதிகளும் யோசித்து நடக்கும்படியான செயற்ப்பட்டடிருந்தால் இந்த நிலை வந்திருக்காது.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை புலிகளின் இந்த தோல்வியில் இலங்கை அரசுக்கு எதிராக போராட இன்னுமோர் அமைப்பு தயாராகும் நிலையை எம்மால் அவதானிக்க்க கூடியதாக உள்ளது. இந்த புதிய நிலையை இவ்வளவு காலமும் புலிகளே தமது கொலை வெறியினால் அடக்கி வைத்திருந்தனர்.
இந்த அரசும் சிங்கள இராணுவமும் தமிழர்க்கு இனப்பிரச்சினை இல்லை, இனப்பிரச்சினைக்கு தீர்வு தேவையில்லை, இது புலிகளின் பயங்கரவாதம் என்று முடித்து விடலாம் என்ற கனவு காண்பதாகவே நான் கருதுகிறேன். புலிகள் செய்தது பயங்கரவாதமே. காரணம் புலிகள் தமக்கும் தமிழர்க்கும் கிடைத்த பல சந்தர்ப்பங்களை கைநழுவ விட்டதும் இந்திய அரசுடன் மோதியதும் தமது சுய நலங்களுக்காவே அன்றி தமிழர்க்காக அல்ல. இது வெளிப்படையான உண்மை. ஆனால் தமிழர்க்காக தமிழர் தாயகத்திற்காக போராட ஆரம்பித்த பலர் புலிகளின் அழிவில் இதை தொடர முனைந்து விட்டனர்.
palli
தம்பி (டமிலன்) தமிழனுக்கு எழுத்து தெரியாத பல புத்திகெட்டதுகள் புலிக்கு புண்ணாக்கு கொடுத்துதான் தமிழர்க்கு இந்த நிலை. ஆகவே தம்பி இந்த விளையாட்டு பல்லியுடன் வேண்டாமே.கிளிநொச்சியை காப்பத்த புலிகள் தவறியதுக்கு காரனம். தமிழகத்து அரசியல் தம்மை பாதுகாக்கும் என எண்ணியதுதான். இல்லாவிட்டால்.கிளிநொச்சியை காப்பாற்ற போரட வேண்டிய இடம். முழங்காவில், முறுகண்டி; துனுக்காய்,கடைசி அக்கிராயன். அதை விட்டுவிட்டு முட்டாள்தனமாக 55ம் கட்டைவரை ரராணுவத்தை விட்டுவிட்டு வயித்துக்கை வலிக்குது என சொன்னால் அதுக்கு மக்களா பொறுப்பு?? இப்போது கூட காலம் கடக்கவில்லை. அரசை எதிர்க்க அதுக்கு தேவை நான் என்ற ஆணவ போக்கைவிட்டு அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
பல்லி.
Logan
தொpந்தோ தொpயாமலோ மாஓ வைத் துணைக்கழைத்து மாட்டித் தவிக்கும் மாற்றுக்கருத்துக்கு அனுதாபங்கள்.
1)ஜெனானில் ஒரு தடவை செஞ்சேனைப் போராளிகள் சியாங்கை சேக்கின் படையால் சுத்தி வளைக்கப்பட்டார்கள் அப்போ முகாமிட்டிருந்த 3000 வீரர்களையும் உடனே வெளியேறுங்கள் பாதுகாப்பான இடத்துக்கு என கட்டளையிட்டார் மாஓ அவரும் உயர்மட்டத்திலுள்ள ஒன்பது போராளிகளும் அஙகிருந்து தாமதித்துப் புறப்பட்டனர் காரணம். சமயல் பாத்திரங்கள் தளபாடங்கள் கழுவிச் சுத்தப்படுத்தி மிகப் புனிகமாக அந்த சூழலை வைத்துவிட்டு கடைசியாக வந்தனர்.
“நாங்கள் விட்டுவிட்டு வரும் காம்பில் முட்டாள் தனமான நேரவிரயத்தோடு உங்கள் உயிராபத்துமல்லவா அதிலிருந்தது” எனத் தோழமையோடு மற்றவர்கள் கண்டித்தனர்.
இதற்கு அவர் கூறிய காரணம் :- “சியாங்கை சேக்கின் படையிலுள்ள போராளிகள் ஒன்றும் வெளியிலிருந்தோ வானத்திலிருந்தோ வந்தவர்களல்ல இந்த நாட்டின் மைந்தர்கள். விட்டுப் போகும் அவசரத்தில் கூட இப்படி புனிதமாக விட்டுச் சென்றிருக்கிறார்களே! இவர்களிடம் நாட்டை ஒப்படைத்தால் எப்படியிருக்கும் என்ற சிந்தனை அவர்களில் ஒருவனிடம் வந்தாலும் அங்கிருந்து ஒரு போராளியை வெல்வதால் எது போராளிகளில் இருவாpன் இழப்பைத் தவிர்க்கிறோம் என்றார்.
2)இன்னொரு சந்தர்ப்பம் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருந்த நீண்ட படை நடப்பில் ஒரு கிராமத்துக்குள் செஞ்செனை நுளைகிறது. மக்கள் மாற்றுப் படையெனக் கருதி மக்கள் அனைவரும் கிராமத்தைவிட்டு காட்டுக்குள் ஓடிவிடுகிறார்கள். தொடர்ந்து ஆறு நாட்களாக ஆகாரமற்று நடந்து தொய்ந்து போன நிலையிலும் அந்தக் கிராமத்தை கூட்டி/ வீடுகளை/ கால்நடைகளைப் பாதுகாத்தும் “நாம் செஞ்சேனை சென்றுவருகிறோம்” என்று எழுதிவைத்துவிட்டு செல்லும் போது இவர்களது கிராமத்துக்கான மீன்வளர்ப்புக் குளத்தில் அறுவடைக்குத் தயார் நிலையில் ஏராளமான மீன்களைக் கண்ணுற்ற ஒரு போராளி “இவற்றில் சிலவற்றைப் பிடித்து உணவாக்கலாமே” என்று கேட்டதற்கு
மஓ வின் மறுப்பு:- “தோழர்களே நாம் இன்னும் சில தினங்கள் உணவில்லையெனிலும் இறந்துவிடப் போவதில்லை. அதேவேளை அந்த மக்களின் அனுமதியற்று அதை நாம் பெறுவது களவுக்கு ஒப்பானது என்பது மட்டுமல்ல/ முதல்மீனைப் பிடித்து தேவதைக்குப் படைத்துவிட்டுத்தான் அறுவடை தொடங்குவது போன்ற நம்பிக்கைகள் கூட இருக்கலாம் அது மூடத்தனமாக இருந்தாலும் அவர்களது நம்பிக்கைகளை நாம் மதிக்கும் போது மட்டுமே அவர்களின் இதயத்தில் இருக்க முடியும்” என்றார் இவர்
3) படையில் 6000 பேர் வரை இணைந்து கொண்டபோது “சிங்சாங்பெங்” என்ற ஒரு இளைஞன் ஓடிவந்து இணைந்துகொண்டான். அவனது வயது அப்போது 17. எவ்வளவு சொல்லியும் அவன் திருப்பிப் போக மறுக்கிறான். அவனை 18 வயது முடியும் வரை தாமதித்து 13000 பேர்வரை இணைந்துகொண்ட பின்னரே அவனும் சேர்க்கப் படுகிறான்.
இப்படிப் பலவிடயங்கள் பட்டியலிடலாம். இவையனைத்துமே மக்களின் உணர்வை மதித்து மக்களே தெய்வங்கள் என உண்மையில் வாழ்ந்து போரையும் ஒரு போரால் பல போர்களின் இல்லாமையையும் பெற்றுத் தந்த அந்த மாமனிதனின் பெயரை உச்சாpக்கும் தகுதியே இல்லாத பிரபாகரன்!!!!! இதில் ஒப்பீடு ஒரு கேடு???
palli
பல்லியை பொறுத்த மட்டில் வீடு எரியும் போது பீடிக்கு நெருப்பு கேட்டது போல்தான் மா ஓ பற்றி இப்போது பேசுவது. தயவு செய்து யாதார்த்தத்துக்கு வர முயற்ச்சி செய்யுங்கோ. நாம் இப்ப்து இருப்பது இரு மிருகங்களுக்கிடயில் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.
பல்லி.
damilan
அண்ணன் பல்லிக்கு நான் உங்கள் கருத்து எதிலும் முரண்படவில்லை.ஆதரிக்கிறேன். மேலுள்ள கட்டுரையின் தலைப்புக்கு பதிலடியாகவே பின்னூட்டல் எழுதினேன். மீண்டும் கவனமாக வாசியுங்கள் அர்த்தம் புரியும். டமிலன் என்பது ஒரு நிக் நேம்தான் அது தமிழரைக் குறிக்கவில்லை.
palli
டமிலன் உங்கள் பெயர் அப்படி இருப்பின் பல்லியை மன்னிக்கவும். நான் எந்த பின்னோட்டத்தையும் படியாமல் பின்னோட்டம் விடுவதில்லை. அதேபோல் உங்கள் பின்னோட்டமும் ஆரம்பத்தில் புலிவிட்ட தவறை சுட்டி காட்டி (நிதானமாக) இறுதியில் போர் தந்தரம் ,ரகசியம் என்பதை
சொல்லியது ஏதோ வாழபழத்தில் எதோ ஏறுவது போல் உள்ளது. சரி எதுவாயினும் மறப்போம் மன்னிப்போம். நாம் மக்களுக்காக எவரையும் விமர்சிக்க தயங்க வேண்டாமே. புலியையும், சிங்கத்தையும் மக்கழுக்கு சுட்டிகாட்ட வேண்டியது எம்மை போல் கையால் ஆகாதவர்கள் கடமைதானே. தவறுக்கு மீண்டும் மன்னிக்கவும்
பல்லி.
Logan
மன்னிக்கவும் பல்லி அவர்களே! மக்களின் விடுதலைப் போர்களை வழி நடத்தும் தலமைகள் எந்த அளவு கச்சிதமாக மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்ட எடுக்கப்பட்ட ஒரு உதாரணமும் சந்தர்ப்பமுமே தவிர விடயத்தின் சாரம் மாஓ பற்றியதல்ல.
anathi
“தமிழ்செல்வனின் யுத்த நிறுத்தகால ஒரு அறிக்கையை ஞாபகபடுத்துகிறேன். இந்த சமாதானகாலம் மக்களிற்கு சந்தோசமானது ஆனால் புலிகளிற்கோ சொல்ல முடியா பல இடர்நிறைந்தது”
உண்மைதான்.அரசியல் சூக்குமங்களை புரிந்து எதிர்கொள்ள முடியாத மோட்டுப் புலிக்கு வேறெப்படி இருக்கும்.
மாற்றுக்கருத்து தோழரே மாவோவை கூப்பிட்டிருக்கிறீகள்.மக்களிடம் இருந்து ஒரு ஊசியை எடுத்தாலும் அதை திருப்பிக கொடுத்து விடு என அவர் சொல்லியிருக்கிறாராமே.புலி எங்கையாவது எதையாவது திருப்பிக் கொடுத்திருக்கா.
BC
புலி எங்கையாவது எதையாவது திருப்பிக் கொடுத்திருக்கா.
என்ன anathi கேட்டால் அதற்கு வட்டியும் போட்டு திருப்பி கொடுத்ததாக சொல்வார்கள்?